இந்த பண்பாடுகள் முஸ்லிம் உடையது அல்ல!
இன்றைய
காலச்சூழ்நிலையில் மனிதன் இயல்பான வாழ்வியலைத் தொலைத்துவிட்டு, இயந்திர கதியில் இயங்கிக் கொண்டிருக்கின்றான். இந்த வேக வாழ்வின் விளைவாக
மனிதனுக்கு கிடைத்தவை:- டென்ஷன்’, ‘டிப்ரஷன்’, ‘mental
strain/stress’ எரிச்சல், கோபம். என்று
வகைப்படுத்தும் அளவுக்கு உளவியல் பிரச்சினைகள்.
இதனால் அட்ரினலின்
என்ற சுரப்பி உடலின் இயக்கத்தில் அதிகமாக சுரக்கும். சரியாய் இயங்கிக் கொண்டிருந்த
மூளை இதனால் தடுமாறத் தொடங்கும். மூளையின் மாறுபட்ட செயலால் நரம்பு மண்டலங்களிடையே
கட்டளைகள் சரிவர கிடைக்கப் பெறாமல் எண்ணங்கள் மற்றும் செயல்பாடுகளில் எதிர்மறை
விளைவுகள் ஏற்படும். இதன் காரணமாக இயல்பு வாழ்க்கையில் இருந்து தடம் புரளும்
அபாயம் ஏற்படுகிறது.
எதிர் படுகிற எதன்
மீதும், எவரின் மீதும் வார்த்தைகளால் பாய்வது, திட்டுவது, சபிப்பது,
ஏசுவது, கெட்ட அருவெறுப்பான
வார்த்தைகளில் பேசுவது என்று நம் சுபாவங்கள் நமக்கே தெரியாமல் நம்மிடம் இருந்து
நழுவத் தொடங்கி இங்கிதம் தெரியாதவன், சரியான கோபக்காரன், ஆத்திரக்காரன் என பல்வேறு சான்றிதழ்களோடு மனைவி மக்களிடமும், குடும்ப உறவுகளுடனும் நண்பர்களுடனும் கலந்தும் கலந்திடாத தூரமான உணர்வுகளுடன்
என்னடா இப்படி ஒரு வாழ்க்கை என்று நம்மை நாமே நொந்து கொள்ளும் ஒரு நிலையில் சமூகத்தில் இன்று பலர் வாழ்ந்து வருகின்றார்கள்.
எனவே, துவக்கமாக நாம் இயல்பான வாழ்க்கையில் இருந்து விலகாமல் வாழக் கற்றுக் கொள்ள
வேண்டும்.
அதன் வெளிப்பாடாக சந்தோஷமான
நிலையிலும் சரி,
பதட்டமான சூழ்நிலையிலும் சரி நிதானமாக பொறுமையாக இருக்க
முயற்சி செய்ய வேண்டும்.
நிதானம்
கடைபிடிப்போம்..
وقال الإمام أحمد: حدثنا أبو سعيد مولى بني هاشم، حدثنا مطر
بن عبد الرحمن سمعت هند بنت الوزاع أنها سمعت الوزاع يقول: أتيت رسول الله صلَّى
الله عليه وسلَّم والأشج المنذر بن عامر - أو عامر بن المنذر - ومعهم رجل مصاب،
فانتهوا إلى رسول الله صلَّى الله عليه وسلَّم فلما رأوا رسول الله صلَّى الله
عليه وسلَّم وثبوا من رواحلهم، فأتوا رسول الله صلَّى الله عليه وسلَّم فقبَّلوا
يده، ثم نزل الأشج فعقل راحلته، وأخرج عيبته ففتحها، فأخرج ثوبين أبيضين من ثيابه
فلبسهما، ثم أتى رواحلهم فعقلها، فأتى رسول الله صلَّى الله عليه وسلَّم فقال:
((يا أشج إن فيك خصلتين يحبهما الله عز وجل ورسوله: الحلم والأناة)).
ஒருமுறை பஹ்ரைனில்
இருந்து இருபது,
முப்பது ஒட்டகங்களில் பயணம் செய்து, மிகப் பெரிய குழு ஒன்று மதீனாவுக்கு வந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்துப் பேச வேண்டும் என்பதே அந்தக் குழுவின் நோக்கம்.
மதீனாவின் எல்லையை
அடைந்ததுமே ,
ஒட்டகங்களை வேகமாகச் செல்லும்படி முடுக்கி விட்டார்கள்.
புழுதியை கிளப்பிக் கொண்டு அவை விரைந்தோடின .
அண்ணல் நபிகளார்
தங்கியிருக்கும் இடம் வந்ததும் திபுதிபுவென்று ஒட்டகங்களில் இருந்து
குதித்து மாநபி ஸல் அவர்களைக் காணும் ஆர்வத்தில் நெருக்கியடித்துக் கொண்டு
மஸ்ஜிதுன் நபவீ வளாகமெங்கும் ஓடினர்.
அவர்கள் நீண்ட
தொலைவு பயணம் செய்து வந்திருந்ததால், ஆடைகள் புழுதிபடிந்து கசங்கி
இருந்தன . தலைமுடி பரட்டையாகக் காட்சியளித்தது . அவற்றைப் பற்றியெல்லாம் அவர்கள்
கொஞ்சம் கூட கவலைப்படாமல் அண்ணலாரின் திருமுகத்தைக் கண்டு மகிழ்ந்தனர்.
அதே நேரத்தில்,அந்தக்
குழுவின் தலைவராக வந்த முன்திர் இப்னு ஆமிர் என்பவர் கொஞ்சமும் அவசரப்படவில்லை.
ஆரவாரம் செய்யவில்லை . மாறாக,
அமைதியாக ஒட்டகங்களை கட்டிப் போட்டார். களைப்புடன் இருந்த
அந்த வாயில்லாப் பிராணிகளுக்கு நீர் புகட்டினார் . அவற்றுக்குத் தேவையான தீவனங்களை
இட்டார்.
பிறகு தாம் கொண்டு
வந்த பொருள்களை எல்லாம் ஓரிடத்தில் ஒழுங்காக அடுக்கி வைத்தார். குளித்து
முடித்தார் .இருப்பதில் நல்ல ஆடை ஒன்றை எடுத்து அணிந்துக் கொண்டார்,, நறுமணம் பூசினார்,,
தலையை ஒழுங்காக வாரிக் கொண்டார்.
பிறகு நிதானமாகவும், கண்ணியமாகவும் அண்ணல்
நபிகளாரைச் சந்திக்க வந்தார்.
அண்ணல் நபிகளாருக்கு
முன்திரின் இந்த நிதானமும்,
மிடுக்கும் மிகவும் பிடித்துப் போகவே, அவரிடம் அண்ணலார்
கூறினார்கள்:- “உங்களிடம் இரண்டு பண்பு நலன்கள் இருக்கின்றன. அவற்றை இறைவனும்,
இறைத்தூதரும் விரும்புகின்றனர். முதலாவது பொறுமை, இரண்டாவது நிதானம்”.
நிதானத்தை
இழக்கின்ற ஒரு முஸ்லிம் தான் தடித்த வார்த்தைகளை, கெட்ட பேச்சுக்களை, அருவெறுப்பான
வார்த்தைகளை, சாபமிடுவதை, ஆபாசமாக திட்டுவதை கையாள்கின்றான். எனவே, கோபமான
நிலையிலோ, நெருக்கடியான, கஷ்டமான சூழ்நிலையிலோ பொறுமையையும், நிதானத்தையும் ஒரு
முஸ்லிம் பயன் படுத்த வேண்டும்.
மேற்கூறிய
திட்டுவது, சாபமிடுவது, கெட்டவார்த்தைகளில் பேசுவதை இன்று நம்மில் பலர் மிகச்
சாதாரணமாக கருதுகின்றோம். ஆனால், அவைகள் எவ்வளவு பாரதூரமான பாவங்கள், எவ்வளவு
பெரிய நன்மைகளை எல்லாம் தடுக்கின்றது என்பதை நாம் ஷரீஆவின் வழியாக பார்க்க கடமைப்
பட்டிருக்கின்றோம்.
பேச்சு என்பது மகத்தான அருட்கொடை..
அல்லாஹு ரப்புல்
ஆலமீன் மனித சமுதாயத்திற்கு வழங்கியிருக்கக்கூடிய அருட்கொடைகள் அனைத்துமே ஒன்றைவிட
ஒன்று சிறப்பிற்குரியதாக இருப்பதைக் காண முடியும். ஆனால் அவை அனைத்துமே மனிதனுக்கு
மிக மிக முக்கியமானவையாகும்.
அந்த வகையில் மனித சமுதாயத்திற்கு வல்ல இறைவனால் வழங்கப்பட்டிருக்கின்ற மிகச்சிறந்த
நிஃமத்களில் ஒன்று
பேச்சுத்திறன் (பேசும் ஆற்றல்) ஆகும். அதை அல்லாஹ் தனது வேதத்திலே இவ்வாறு தெளிவு படுத்துகிறான்:
خَلَقَ
الْإِنْسَانَ عَلَّمَهُ الْبَيَانَ
அல்லாஹ் அவனே
மனிதனிப் படைத்தான். அவனுக்கு (பேச்சையும்) விளக்கத்தையும் கற்றுக் கொடுத்தான். ( அல்குர்ஆன்: 55: 4 )
மனிதனுக்கு பேசும்
ஆற்றலைக் கொடுத்த ரப்புல் ஆலமீன் அவன் எவ்வாறு பேச வேண்டும் என்ற இங்கிதங்களையும்
(ஒழுக்கங்களையும்) கற்றுக்கொடுத்திருகின்றான். பொதுவாகவே மனிதனின் பேச்சு என்பது
மற்றவர்களை பண்படுத்தாவிட்டாலும் கூட புண்படுத்தாத வகையில் அமைந்திருக்க வேண்டும்.
அதிலும் குறிப்பாக
முஸ்லிம்களின் பேச்சுக்கள் எவ்வாறு அமைய வேண்டும்?, அவர்கள் பேசும்போது எவ்வாறு பண்பாட்டுடன் பேசவேண்டும்?, பேசும்போது எவ்வாறு ஒழுக்கத்தை கடைப்பிடிக்கவேண்டும் என்ற பேச்சின்
ஒழுக்கங்களை திருக்குர்ஆனும், அண்ணல் நபியின் அமுத
மொழிகளும் கவனமாக கற்றுத் தருகின்றன.
வார்த்தை நேரானால் வாழ்க்கை சீராகும்...
يَا
أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلاً سَدِيدًا يُصْلِحْ
لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ
وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
இறை
நம்பிக்கையாளர்களே! நீங்கள் இறைவனை அஞ்சுங்கள். (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே
கூறுங்கள். (இவ்வாறு நடந்தால்) அவன் உங்களுடைய காரியங்களை சீராக்கி வைப்பான்.
உங்களுடைய பாவங்களை மன்னிப்பான்’ ( அல்குர்ஆன்: 33: 70,71 )
மேற்கூறப்பட்ட இரு
வசனங்களும்,
இரு செயல்களை கடைப்பிடித்தால் இருபலன்கள் கிடைப்பதாக
வாக்களிக்கின்றன.
இன்றைய முஸ்லிம்களிடம்
இருக்க வேண்டிய அவசியமான இரண்டு பண்புகளில் 1. இறையச்சம், 2. நேர்மையான சொல்.
1.இறையச்சம் இதன்
பலனாக இறை மன்னிப்பு. 2. நேர்மையான சொல் – இதன் பலனாக சீரான வாழ்க்கை.
ஒருவனுடைய பண்புகளை
அவனுடைய நடை,
உடை,
பாவனைகள் எப்படி படம் பிடித்துக் காட்டுகின்றதோ அதைப் போல
பல நேரங்களில் அவனது பேச்சுக்களும் படம் பிடித்துக் காட்டுகின்றன. அவனை
நல்லவனாகவும் – கெட்டவனாகவும், கொடியவனாகவும் மென்மையானவனாகவும் கடுமை
காட்டுபவனாகவும் பிரதிபலிக்கச் செய்யும் சக்தி அவன் பேசும் பேச்சுக்கு உண்டு
என்பதை நாம் கவனத்தில் கொண்டு நம்முடைய பேச்சை அமைத்துக் கொள்ள வேண்டும்.
திட்டுவதும்.. சாபமிடுவதும்..
عن ابن
مسعود - رضي الله عنه - قال: قال رسول الله - صلى الله عليه وسلم -: «سباب المسلم
فسوق، وقتاله كفر» . متفق عليه.
அப்துல்லாஹ் இப்னு
மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:- "ஒரு முஸ்லிமைத் திட்டுவது
பெரும்பாவமாகும். ஒரு முஸ்லிமைக் கொலை செய்வது அதை விடக் கொடிய இறை
நிராகரிப்பாகும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்: புகாரி, முஸ்லிம் )
فقد
أخرج الترمذي من حديث عبدالله بن مسعود رضي الله عنه: أن النبي صلى الله عليه وسلم
قال: ((ليس المؤمن بالطعان، ولا اللعان، ولا الفاحش، ولا البذيء)).
‘ஒரு முஃமின்
திட்டுபவனாகவோ: சபிப்பவனாகவோ: கெட்ட செயல் புரிபவனாகவோ, கெட்ட வார்த்தை பேசுபவனாகவோ இருக்க மாட்டான்” என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி) திர்மிதீ
عن سلمة
بن الأكوع رضي الله عنه قال: "كنا إذا رأينا الرجل يلعن أخاه، رأينا أنه قد
أتى بابًا من الكبائر
சலமா இப்னு
அல்-அக்வஃ (ரலி) அவர்கள் கூறியதாக அத்-தபரானி (ரஹ்) அவர்கள்:-
"ஒரு மனிதன் தன் சகோதரனைச் சபிப்பதைக் கண்டால், அதை ஒரு வகையான பெரிய பாவமாக நாங்கள் நினைத்தோம்." என்று தபரானியில்
பதிவு செய்துள்ளார்கள்.
وعن
ثابت بن الضحاك رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال ( لعن المؤمن كقتله
ஸாபித் இப்னு
ளஹ்ஹாக் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:- "ஒரு இறைநம்பிக்கையாளரை சபிப்பது
அவரை கொலை செய்வதற்கு இணையான செயலாகும்" என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். ( நூல்: புகாரி
)
عَنْ
ابْنِ عُمَرَ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا
يَكُونُ المُؤْمِنُ لَعَّانًا»سنن الترمذي
“ஒரு இறைநம்பிக்கையாளன் சபிப்பவனாக இருக்க மாட்டான்!” என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்
அளவு கடந்து திட்டுவது ஆபத்து!
عن أبي
ذر - رضي الله عنه - أنه سمع رسول الله - صلى الله عليه وسلم - يقول: «لا يرمي رجل
رجلا بالفسق أو الكفر، إلا ارتدت عليه، إن لم يكن صاحبه كذلك» . رواه البخاري.
அபூதர் (ரலி)
அவர்கள் அறிவிக்கின்றார்கள்:- "உங்களில் ஒருவர் இன்னொருவரை நோக்கி
இறைநிராகரிப்பை உணர்த்துகிற வார்த்தையையோ அல்லது பெரும்பாவத்தை உணர்த்தும்
வார்த்தையையோ உபயோகிக்க வேண்டாம்! அவர் உங்களை நோக்கி அது போன்ற வார்த்தைகளை
உபயோகித்து இருந்தாலே தவிர! ஏனெனில், நீங்கள் அவர் மீது அந்த
வார்த்தைகளை அநியாயமாக உபயோகித்து இருந்து அதற்கான தகுதி இல்லாத நபராக அவர்
இருந்தால் அந்த வார்த்தைகள் எவர் உபயோகித்தாரோ அவரை நோக்கி திரும்பி விடும்!"
என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். ( நூல்: புகாரி )
في هذا
الحديث: تفسيق من رمى غير الفاسق بالفسق، وتكفير من رمى المؤمن بالكفر، كما في
الحديث الآخر: «من رمى رجلا بالكفر أو قال عدو الله وليس كذلك، إلا حار عليه» .
இன்னொரு
அறிவிப்பில்... "உங்களில் ஒருவர் பிறரை இறைநிராகரிப்புடைய வார்த்தையையோ
அல்லது அல்லாஹ்வின் விரோதியே என்றோ கூறிட வேண்டாம்! ஏனெனில், நீங்கள் அவர் மீது அந்த வார்த்தைகளை அநியாயமாக உபயோகித்து இருந்து அதற்கான
தகுதி இல்லாத நபராக அவர் இருந்தால் அந்த வார்த்தைகள் எவர் உபயோகித்தாரோ அவரை
நோக்கி திரும்பி விடும்!" என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
சபிப்பதால் ஏற்படும் விளைவுகள்...
عَنْ
أُمِّ الدَّرْدَاءِ، قَالَتْ: سَمِعْتُ أَبَا الدَّرْدَاءِ، يَقُولُ: قَالَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الْعَبْدَ إِذَا لَعَنَ
شَيْئًا صَعِدَتِ اللَّعْنَةُ إِلَى السَّمَاءِ فَتُغْلَقُ أَبْوَابُ السَّمَاءِ
دُونَهَا، ثُمَّ تَهْبِطُ إِلَى الْأَرْضِ فَتُغْلَقُ أَبْوَابُهَا دُونَهَا،
ثُمَّ تَأْخُذُ يَمِينًا وَشِمَالًا، فَإِذَا لَمْ تَجِدْ مَسَاغًا رَجَعَتْ إِلَى
الَّذِي لُعِنَ، فَإِنْ كَانَ لِذَلِكَ أَهْلًا وَإِلَّا رَجَعَتْ إِلَى
قَائِلِهَا»-سنن أبي داود
ஒரு அடியான், ஏதாவது பொருளை சபித்தால், அந்த சாபம் வானத்தை நோக்கி உயரும், அப்போது வானத்தின்
வாசல்கள் அடைக்கப்படும். பிறகு அந்த சாபம் பூமியை நோக்கி இறங்கும். அப்போது
பூமியின் வாசல்களும் அடைக்கப்படும். பிறகு அது வலது இடது புறங்களின் பக்கம் திரும்பும்.
அங்கும் வழி கிடைக்காததால்,
யார் மீது சபிக்கப்பட்டதோ அவரின் பக்கம் திரும்பிச்
செல்லும். அவர் அதற்கு தகுதியற்றவராக இருந்தால், சொன்னவரிடமே திரும்பிச் சென்று விடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதர்தா (ரலி) அபூதாவூத்
‘அல்லாஹ் சபிப்பானாக! அவனின் கோபம் உண்டாகட்டும்! என்றோ, நெருப்பைக் கொண்டோ: ஒருவருக்கொருவர் சபிக்க வேண்டாம்!” என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸமூரா (ரலி) ( நூல்கள்: திர்மிதீ, அபூதாவூத் )
عَنْ أَبِي الدَّرْدَاءِ، سَمِعْتُ رَسُولَ اللهِ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «إِنَّ اللَّعَّانِينَ لَا يَكُونُونَ
شُهَدَاءَ، وَلَا شُفَعَاءَ يَوْمَ الْقِيَامَةِ»-صحيح مسلم
அதிகம் சபிப்பவர்கள் ‘மறுமை நாளில்” பரிந்துரை செய்பவர்களாகவோ ஷஹீத்களாகவோ இருக்கமாட்டார்கள்” என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) ( நூல்கள்: முஸ்லிம், திர்மிதீ )
சபிப்பதற்கு அனுமதி உண்டா?
நபி (ஸல்) அவர்கள்
தேளைச் சபித்தார்கள்; ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள், " நபி (ஸல்)அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது தேள் கொட்டியது., அப்போது நபி (ஸல்) அல்லாஹ் தேளை சபிப்பானாக! அது. தொழுது கொண்டிருப்பவனையும்
தொழாதவனையும் அது விட்டுவைக்காது, நீங்கள் மக்காவின் புனித
வளாகத்திற்கு வெளியே இருந்தாலும் உள்ளே இருந்தாலும் அதைக் கொல்லுங்கள்." என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். ( நூல்: இப்னுமாஜா]
அல்லாமா அஸ் -ஸுயூத்தி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:- " தீங்கு விளைவிக்கும் விஷயங்களை சபிப்பது
அனுமதிக்கப்படுகிறது என்று (இந்த ஹதீஸிலிருந்து) அனுமானிக்கப்படுகிறது... " [ ஷர்ஹ் சுனன் இப்னு மாஜா ]
"ஷரீஆவின்படி
சபிக்கத் தகுதியற்ற ஒன்றை சபித்தால், சபிக்கப்பட்ட பொருள்
விலங்காக இருந்தாலும்,
உயிரற்ற பொருளாக இருந்தாலும் அதைச் சபிப்பது
இழிவாகும்" என்று இமாம் அந்-நவவி (ரஹ்) கூறினார்
சபிப்பதற்குத்
தகுதியற்றதைச் சபிப்பதால் ஒருவன் பாவத்தைச் சுமக்கிறான் என்றும் அப்படிச் சபிப்பது
தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் அறிஞர்கள் வெளிப்படையாகக் கூறினர்.
இமாம் இப்னு அப்துல் பர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:-" சபிக்கத்
தகுதியில்லாததைச் சபிப்பவன் அதற்கான பாவத்தைச் சுமக்கிறான்... " [ அத்-தம்ஹீத் ]
عن أبي
هريرة - رضي الله عنه قال: أتي النبي - صلى الله عليه وسلم - برجل قد شرب قال:
«اضربوه» قال أبو هريرة: فمنا الضارب بيده، والضارب بنعله، والضارب بثوبه. فلما
انصرف، قال بعض القوم: أخزاك الله! قال: «لا تقولوا هذا، لا تعينوا عليه الشيطان»
. رواه البخاري.
அபூஹுரைரா (ரலி)
அவர்கள் அறிவிக்கின்றார்கள்:- நபி (ஸல்) அவர்கள் வாழும் காலத்தில் மது அருந்திய
காரணத்திற்காக ஒருவர் தண்டனை வழங்கப்பட்டார். எங்களில் சிலர் எங்கள் கைகளாலும்
சிலர் செருப்பாலும்,
சிலர் பழைய கிழிந்த துணிகளை கொண்டும் அடித்தோம். தண்டனை
நிறைவேற்றி முடிக்கப்பட்ட போது மக்களில் சிலர் "அல்லாஹ் உம்மை
கேவலப்படுத்துவானாக!" என்று திட்டி சபித்தனர். அப்போது, நபி (ஸல்) அவர்கள் "இப்படியெல்லாம் சபித்து திட்டாதீர்கள்! மேலும், இது போன்ற தருணங்களில் நீங்கள் அவருக்கு பாதகமாக ஏதேனும் ஒன்றைக் கூறி
ஷைத்தானுக்கு உதவி செய்ய வேண்டாம்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (
நூல்: புகாரி )
موقف
أبي بكر رضي الله عنه عندما قال عروة بن مسعود: (والله ما أرى حولك إلا أوباشاً من
الناس -يحقر من شأنهم- أو قال: ما أرى حولك إلا أشواباً من الناس -يعني: أخلاطاً
سيفرون منك عما قريب- فقال أبو بكر: نحن نفر عن رسول الله صلى الله عليه وسلم،
امصص بظر اللات) وهذه مسبة فاحشة كانت في العرب، انظروا قالها بكل جرأة، وسمعها
النبي صلى الله عليه وسلم وسكت عنها، ولذلك أنزل الله جل في علاه موافقاً لما فعل
أبو بكر هذه الآية: {لا يُحِبُّ اللَّهُ الْجَهْرَ بِالسُّوءِ مِنَ الْقَوْلِ
إِلَّا مَنْ ظُلِمَ} [النساء:١٤٨]
மிஸ்வர் பின்
மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின்
மீதாணையாக பல முகங்களை (உங்கள் தோழர்களிடம்) பார்க்கிறேன். மக்களில்
பலதரப்பட்டவர்களைப் பார்க்கிறேன். உங்களை விட்டு விட்டு விரண்டோடக் கூடிய
(கோழைத்தனமுடைய)வர்களாகவே (இவர்களை) நான் பார்க்கிறேன் என்று உர்வா (நபி (ஸல்)
அவர்களிடம்) கூறினார்.
(இதைக் கேட்ட) அபூபக்ர்
(ரலி) அவர்கள் அவரை அக்கால வழக்கப்படி (கடவுளாக வணங்கப்பட்ட லாத் என்னும் சிலையின்
மர்ம உறுப்பை சுவைத்துப் பார் என்று) கடுமையாக ஏசிவிட்டு நாங்கள் இறைத் தூதரை
விட்டு விட்டு ஓடி விடுவோமா? என்று (கோபத்துடன்)
கேட்டார்கள். அதற்கு உர்வா இவர் யார்? என்று கேட்டார்.
மக்கள் அபூபக்ர்
என்று பதிலளித்தார்கள். அதற்கு உர்வா நீங்கள் எனக்கு முன்பு உதவி
செய்திருக்கிறீர்கள். அதற்கான நன்றிக் கடனை நான் உங்களுக்கு இன்னும்
தீர்க்கவில்லை. அந்த நன்றிக் கடன் மட்டும் இல்லாவிட்டால் நான் உங்களுக்கு (தகுந்த)
பதில் கொடுத்திருப்பேன் என்று கூறினார். ( நூல் : புகாரி )
இந்த
சந்தர்ப்பத்தில் தான் அந் நிஸா
அத்தியாயத்தின் 148 -வது வசனம்
இறங்கியது.
சபிக்கவும், திட்டவும் இஸ்லாம் அனுமதிக்காத, தடை செய்த காரியங்கள் எவை:-
காற்றைச் சபிக்காதீர்!
عَنِ ابْنِ
عَبَّاسٍ، أَنَّ رَجُلًا لَعَنَ الرِّيحَ - وَقَالَ مُسْلِمٌ إِنَّ رَجُلًا
نَازَعَتْهُ الرِّيحُ رِدَاءَهُ عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ، فَلَعَنَهَا -، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«لَا تَلْعَنْهَا، فَإِنَّهَا مَأْمُورَةٌ، وَإِنَّهُ مَنْ لَعَنَ شَيْئًا لَيْسَ
لَهُ بِأَهْلٍ رَجَعَتِ اللَّعْنَةُ عَلَيْهِ»-سنن أبي داود
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:- "நபி (ஸல்)
அவர்களின் முன்னிலையில் ஒரு மனிதர் இருக்கும் போது தனது ஆடை விலகியதற்காக காற்றை
சபித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'காற்றை சபிக்காதீர்கள், ஏனென்றால் அது கட்டளையிடப்பட்டதைச் செய்கிறது, மேலும் எவன் எதையாவது தகுதியில்லாமல் சபிக்கிறானோ, அவன் மீது அந்த சாபம் திரும்பும்' என்று நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள். ( நூல்: அபூ தாவூத் )
காய்ச்சலை சபிக்காதீர்…
عن
جَابِرِ بْنِ عَبْدِاللهِ رضي الله تعالى عنهما أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ، دَخَلَ عَلَى أُمِّ السَّائِبِ أَوْ أُمِّ الْمُسَيِّبِ
فَقَالَ: " «مَا لَكِ» ؟ «يَا أُمَّ السَّائِبِ [أَوْ يَا أُمَّ
الْمُسَيِّبِ] تُزَفْزِفِينَ»؟؛ أي: ترتجفين، قَالَتْ: (الْحُمَّى، لَا بَارَكَ
اللهُ فِيهَا)، فَقَالَ صلى الله عليه وسلم: «لَا تَسُبِّي الْحُمَّى، فَإِنَّهَا
تُذْهِبُ خَطَايَا بَنِي آدَمَ، كَمَا يُذْهِبُ الْكِيرُ خَبَثَ الْحَدِيدِ»، (م)
53- (2575).
ஜாபிர் பின்
அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:-"(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள்,
(உடல் நலிவுற்றிருந்த) உம்முஸ் ஸாயிப் அல்லது உம்முல்
முசய்யப் எனும் பெண்மணியிடம் (உடல்நலம் விசாரிக்கச்) சென்றார்கள். அப்போது “உம்முஸ் ஸாயிபே! அல்லது உம்முல் முசய்யபே! உமக்கு என்ன நேர்ந்தது? ஏன் நடுங்கிக்கொண்டிருக்கிறாய்?” என்று
கேட்டார்கள்.
அதற்கு அப்பெண், “காய்ச்சல். அதில் அல்லாஹ் வளம் சேர்க்காமல் இருக்கட்டும்!” என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “காய்ச்சலை ஏசாதே! ஏனெனில் அது, கொல்லனின் உலை இரும்பின்
துருவை அகற்றிவிடுவதைப் போன்று, ஆதமின் மக்களின்
(மனிதர்களின்) தவறுகளை அகற்றி விடுகிறது” என்று கூறினார்கள். ( நூல்: முஸ்லிம் 5031
)
பணியாளரை சபிக்காதீர்...
وعن زيد
بن أسلم أن عبد الملك بن مروان بعث إلى أم الدرداء بأنجاد [ جمع نجد وهو متاع
البيت الذي يزينه من فرش ونمارق وستور ] من عنده فلما أن كان ذات ليلة قام عبد
الملك من الليل فدعا خادمه فكأنه أبطأ عليه فلعنه فلما أصبح قالت له أم الدرداء
سمعتك الليلة لعنت خادمك حين دعوته ، سمعت أبا الدرداء رضي الله عنه يقول قال رسول
الله صلى الله عليه وسلم ( لا يكون اللعانون شفعاء ولا شهداء يوم القيامة
) ( شفعاء ) أي لا يشفعون يوم القيامة حين يشفع المؤمنون في إخوانهم
الذين استوجبوا النار ( ولا شهداء ) أي لا يكونون شهداء يوم القيامة على الأمم بتبليغ
رسلهم إليهم الرسالات ، وقيل لا يرزقون الشهادة في سبيل الله
ஸைத் இப்னு அஸ்லம் (ரலி) அவர்கள் கூறினார்கள்:- ஆட்சியாளர் அப்துல் மலிக் இப்னு மர்வான் (ரஹ்) அவர்கள் வீட்டின்
அலங்காரத்திற்கு பயன் படும் நஜ்த் தேசத்தின் சில பொருட்களை நபித்தோழி உம்முத்
தர்தா (ரலி) அவர்களின் வீட்டிற்கு ஒரு பணியாளர் மூலம் அன்பளிப்பாக கொடுத்தனுப்பினார்கள். அதை உம்முத்தர்தா (ரலி) அவர்களும் பெற்றுக் கொண்டார்கள். அந்த பொருட்கள்
கொண்டு வரப்பட்ட அந்த இரவில் அப்துல் மலிக் இப்னு மர்வான் தமது பணியாளரிடம் ஏதோ
வேலை சொல்ல அதை செய்ய அவர் தாமதப்படுத்திய போது தமது பணியாளரை அப்துல் மலிக் இப்னு
மர்வான் சபித்தார்கள். பின்பு அங்கிருந்து சென்று விட்டார்கள். இதைக் கவனித்துக்
கேட்டுக் கொண்டிருந்த உம்முத்தர்தா (ரலி) அவர்கள் மறுநாள் காலையில் அப்துல் மலிக்
இப்னு மர்வானிடம் நபி ஸல் அவர்கள் கூறியதாக, அபுத்தர்தா (ரலி) (எனது
கணவர்) கூற நான் கேட்டிருக்கிறேன்:- "சபிப்பவர்கள் நாளை மறுமையில்
சாட்சியாளர்களாகவோ,
பரிந்துரை செய்பவர்களாகவோ வர மாட்டார்கள் " என்று நபி
ஸல் அவர்கள் கூறினார்கள்.
இந்த நபிமொழிக்கு
விளக்கம் தரும் அறிஞர்கள்:-
" ولا شهداء يوم القيامةஎன்பதற்கு அவருக்கு அல்லாஹ்வின் பாதையில் உயிர்
நீக்கும் ஷஹீத் உடைய அந்தஸ்து கிடைக்காது" என்று விளக்கமளித்துள்ளார்கள். (
நூல்: முஸ்லிம் )
حَدَّثَنَا
سُلَيْمَانُ بْنُ حَرْبٍ قَالَ : حَدَّثَنَا شُعْبَةُ ، عَنْ وَاصِلٍ الأَحْدَبِ ،
عَنِ الْمَعْرُورِ قَالَ:-"لَقِيتُ أَبَا ذَرٍّ بِالرَّبَذَةِ ، وَعَلَيْهِ
حُلَّةٌ ، وَعَلَى غُلاَمِهِ حُلَّةٌ فَسَأَلْتُهُ عَنْ ذَلِكَ ، فَقَالَ : إِنِّي
سَابَبْتُ رَجُلاً فَعَيَّرْتُهُ بِأُمِّهِ ، فَقَالَ : لِيَ النَّبِيُّ صلى الله
عليه وسلم يَا أَبَا ذَرٍّ أَعَيَّرْتَهُ بِأُمِّهِ إِنَّكَ امْرُؤٌ فِيكَ
جَاهِلِيَّةٌ إِخْوَانُكُمْ خَوَلُكُمْ جَعَلَهُمُ اللَّهُ تَحْتَ أَيْدِيكُمْ
فَمَنْ كَانَ أَخُوهُ تَحْتَ يَدِهِ فَلْيُطْعِمْهُ مِمَّا يَأْكُلُ
وَلْيُلْبِسْهُ مِمَّا يَلْبَسُ ، وَلاَ تُكَلِّفُوهُمْ مَا يَغْلِبُهُمْ فَإِنْ
كَلَّفْتُمُوهُمْ فَأَعِينُوهُمْ.
நான் அபூதர்
(ரலி)யை ரபதா என்ற இடத்தில் சந்தித்தேன். அப்போது அவர் மேல் ஒரு ஜோடி ஆடையும்
அவருடைய அடிமையும் மேல் (அதைப் போன்ற) ஒரு ஜோடி ஆடையும் கிடப்பதைப் பார்த்தேன்.
நான் (ஆச்சரியத்துடன்) அதைப் பற்றி அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் பின்வருமாறு
கூறினார்.
நான் ஒரு மனிதரை ஏசி விட்டு, அவரது தாயையும் குறை கூறி விட்டேன். அப்போது நபியவர்கள், “அபூதரே,
அவரையும் அவரது தாயையும் சேர்த்துக் குறை கூறிவிட்டீரே.
நீர் அறியாமைக் காலத்துப் பழக்கம் குடிகொண்டிருக்கும் மனிதராகவே இருக்கின்றீர்.
உங்கள் அடிமைகள் உங்களின் சகோதரர்களாவர். அல்லாஹ் தான் அவர்களை உங்கள்
அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கின்றான். எனவே ஒருவருடைய சகோதரர் அவரது அதிகாரத்தின்
கீழ் இருப்பாரேயானால் அவர்,
தாம் உண்பதிலிருந்து அவருக்கும் உண்ணக் கொடுக்கட்டும். தாம்
உடுப்பதிலிருந்து அவருக்கும் உடுத்தக் கொடுக்கட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய
பணிகளைக் கொடுத்து அவர்களைச் சிரம்படுத்த வேண்டாம். அவ்வாறு அவர்களை நீங்கள்
சிரமமான பணியில் ஈடுபடுத்தினால் நீங்கள் அவர்களுக்கு உதவியாயிருங்கள்” என்று கூறினார்கள். இதனால் நான் அணிவது போல் என் அடிமைக்கும் உடையளித்தேன். அறிவிப்பவர் –
மஃரூர், ( நூல்: புகாரி 30
)
சேவலை சபிக்காதீர்..
وعن زيد
بن خالد الجهني قال : لعن رجل ديكا صاح عند النبي صلى الله عليه وسلم فقال النبي
صلى الله عليه وسلم ( لا تلعنه فإنه يدعو إلى الصلاة )
ஸைத் இப்னு காலித் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:-
"நபி ஸல் அவர்களின் சபையில் அமர்ந்திருக்கும் போது ஒரு சேவல் கூவியது. அதைக்
கேட்ட அங்கிருந்த மனிதர் ஒருவர் அந்த சேவலை சபித்தார். அப்போது நபி ஸல் அவர்கள்
"சேவலை சபிக்காதீர்கள்! ஏனெனில், அது (இரவுத்) தொழுகைக்காக
அழைப்பு விடுக்கிறது" என்று கூறினார்கள். ( நூல்: முஸ்னத் அஹமத் )
பிராணிகளைச் சபிக்காதீர்..
وعن عمران بن حصين رضي الله عنه قال بينما رسول الله
صلى الله عليه وسلم في بعض أسفاره وامرأة من الأنصار على ناقة فضجرت فلعنتها فسمع
ذلك رسول الله صلى الله عليه وسلم فقال ( خذوا ما عليها ودعوها فإنها ملعونة قال
عمران فكأني أراها الآن تمشي في الناس ما يعرض لها أحد )
பிராணிகளை சபிப்பது தடை செய்யப்பட்டுள்ளது;-
“நபி (ஸல்) அவர்கள் ஒரு முறை பயணம் செய்து கொண்டிருந்த போது
ஒரு பெண் ஒட்டகத்தை ஒருவர் சபித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் "அந்த ஒட்டகத்தில் இருந்து அவரை இறங்கி விடுமாறு கூறி விட்டு, நபி ஸல் அவர்கள் மேலும் 'அதை பயன்படுத்தக் கூடாது' என்று அறிவுறுத்தினார்கள். காரணம் கேட்ட போது "ஏனெனில் அது
சபிக்கப்பட்டுவிட்டது''
என்றார்கள்.
இம்ரான் இப்னு
ஹஸீன் (ரலி - அறிவிப்பாளர்) கூறினார்கள்:- , 'அது (ஒட்டகம்)
மக்கள் மத்தியில் நடமாடுவதை நான் இன்னும் பார்க்கிறேன், அதன் வழியில் யாரும் வரவில்லை. [ நூல்: அஹ்மத், முஸ்லீம்,
மதாலிப் உலின் நுஹா ]
பக்ர் அபு ஜைத் (ரஹ்) கூறினார்கள்:-
இஸ்லாத்தில், சபிப்பதற்கான நிதித்
தண்டனைகளில் ஒன்று,
ஒருவர் சவாரி செய்யும் பிராணியை சபித்தால், அதை விடுவிக்க வேண்டும். அதைப் பயன்படுத்தக் கூடாது" என்று மேற்கூறிய நபி
மொழியை ஆதாரமாகக் கொண்டு
கூறினார்கள்.
குழந்தைகளை சபிக்காதீர்...
حَدَّثَنَا
هِشَامُ بْنُ عَمَّارٍ ، وَيَحْيَى بْنُ الْفَضْلِ ، وَسُلَيْمَانُ بْنُ عَبْدِ
الرَّحْمَنِ ، قَالُوا : حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ ، حَدَّثَنَا
يَعْقُوبُ بْنُ مُجَاهِدٍ أَبُو حَزْرَةَ ، عَنْ عُبَادَةَ بْنِ الْوَلِيدِ بْنِ
عُبَادَةَ بْنِ الصَّامِتِ ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ ، قَالَ : قَالَ
رَسُولُ اللهِ صلى الله عليه وسلم :-" لاَ تَدْعُوا عَلَى أَنْفُسِكُمْ ،
وَلاَ تَدْعُوا عَلَى أَوْلاَدِكُمْ ، وَلاَ تَدْعُوا عَلَى خَدَمِكُمْ ، وَلاَ
تَدْعُوا عَلَى أَمْوَالِكُمْ ، لاَ تُوَافِقُوا مِنَ اللهِ تَبَارَكَ وَتَعَالَى
سَاعَةَ نَيْلٍ فِيهَا عَطَاءٌ ، فَيَسْتَجِيبَ لَكُمْ.
قَالَ
أَبُو دَاوُدَ : هَذَا الْحَدِيثُ مُتَّصِلٌ ، عُبَادَةُ بْنُ الْوَلِيدِ بْنِ
عُبَادَةَ ، لَقِيَ جَابِراً.
”நீங்கள் உங்களுக்கு
எதிராகப் பிரார்த்திக்காதீர்கள். உங்களுடைய குழந்தைகளுக்கு எதிராகப்
பிரார்த்திக்காதீர்கள். உங்களுடைய பணியாளர்களுக்கு எதிராகப்
பிரார்த்திக்காதீர்கள். உங்களுடைய பொருளாதாரங்களுக்கு எதிராகப்
பிரார்த்திக்காதீர்கள். அல்லாஹ்விடம் (பிரார்த்தனை) ஒப்புக் கொள்ளப்படும் நேரம்
ஒன்று உள்ளது. அவ்வாறு ஒப்புக் கொள்ளப்படும் நேரத்தில் நீங்கள் ஏதுவாகப்
பிரார்த்தித்து,
அதை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளக் காரணமாகி விடாதீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் –
ஜாபிர் (ரலி), நூல் – அபூதாவூத் 1309
காலத்தை சபிக்காதீர்….
عَنْ
أَبِي، هُرَيْرَةَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "
قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ يَسُبُّ ابْنُ آدَمَ الدَّهْرَ وَأَنَا الدَّهْرُ
بِيَدِيَ اللَّيْلُ وَالنَّهَارُ " .
அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் கூறினார்கள்:-" வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ் கூறினான்:
ஆதமின் மகன் (மனிதன்) காலத்தை ஏசுகிறான். நானே காலம் (படைத்தவன்). என் கையில்தான்
இரவும் பகலும் உள்ளன.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.( முஸ்லிம் 4519 )
عَنْ
أَبِي، هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "
قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ يُؤْذِينِي ابْنُ آدَمَ يَسُبُّ الدَّهْرَ وَأَنَا
الدَّهْرُ أُقَلِّبُ اللَّيْلَ وَالنَّهَارَ " .
அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் கூறினார்கள்:-" வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ் கூறினான்:
ஆதமின் மகன் (மனிதன்) என்னைப் புண்படுத்துகிறான்; காலத்தை ஏசுகிறான். நானே காலம் (படைத்தவன்). நானே இரவு பகலை மாறி மாறி
வரச்செய்கிறேன். ( நூல்: முஸ்லிம் )
இறைவன்
காலச்சக்கரத்தை தன் கையில் வைத்துக்கொண்டு, தான் நாடியவாறு
சுழற்றுகிறான்;.
وَتِلْكَ الْأَيَّامُ نُدَاوِلُهَا بَيْنَ النَّاسِ
(இன்பம், துன்பம்,
சோதனை போன்ற) இத்தகைய காலங்களை மனிதர்களுக்கு மத்தியில்
நாமே மாறி மாறி வரச் செய்கிறோம் அல்குர்ஆன்: (3:140)
யாரை உயர்த்துவது, யாரைத் தாழ்த்துவது,
யாருக்குக் கொடுப்பது, யாரை எடுப்பது என்று
எல்லா விஷயங்களையும் தீர்மானிக்க,
كُلَّ يَوْمٍ هُوَ فِي شَأْنٍ
ஒவ்வொரு நாளும்
அவன் காரியத்திலே இருக்கிறான் !! - அல்குர்ஆன்: (55:29)
இத்தகைய கருத்தை
வலியுறுத்தும் ஏராளமான வசனங்கள் குர்ஆனில் உள்ளன. இதையெல்லாம் நாம் உணர்ந்தால்
காலத்தையோ,
நேரத்தையோ குறைகூறி இறைவனின் கோபத்திற்குள்ளாக மாட்டோம்.
நாம் விரும்பாத, நமக்கு துன்பம் தரக்கூடிய செயல்கள் வாழ்க்கையில் ஏற்படத்தான் செய்யும்.
அப்போது அதற்கான காரணங்களை அலச வேண்டும். காரணம் நம் கட்டுப்பாட்டை மீறியதாக
இருந்தால்,
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ
الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ (155)
الَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا
إِلَيْهِ رَاجِعُونَ (156)
நிச்சயமாக நாம்
உங்களை ஓரளவு அச்சத்தாலும்,
பசியாலும், பொருள்கள், விளைச்சல்கள்,
உயிர்கள் ஆகியவற்றின் இழப்புகளால் சோதிப்போம். (காலத்தை
சபிக்காமல்) பொறுமையை கைக்கொள்ளுவோருக்கு நன்மாராயம் உண்டு, (பொறுமையுடைய) வர்களுக்கு எந்த துன்பம் ஏற்பட்டாலும், நாங்கள் அல்லாஹ்விற்குரியவர்கள், நிச்சயமாக அவனிடமே
திரும்பிச் செல்வோம் என்று கூறுவார்கள்!!. !! நேர்வழி பெற்ற இவர்களுக்குத்தான்
இறைவனின் நல்லாசியுண்டு !! - அல்குர்ஆன்: (2:155,156)
காலத்தைக்
குறைகூறி,
ஷைத்தானுக்கு துணைபோய், தனக்குத் தானே இழிவை
ஏற்படுத்திக் கொள்ளாமல் தம்மைப் பாதுகாத்துக் கொள்வது ஒவ்வொரு முஸ்லிம் மீதும்
கடமையாகும். ஏனெனில், நம் கண்களுக்கு புலப்படாத, நம் அறிவுக்கு எட்டாத எத்தனையோ
வகைகளில் நாம் இறைவனுக்கு மாறு செய்யும் வாய்ப்பு இருக்கிறது. இதோ!.. நபி {ஸல்}
அவர்களின் எச்சரிக்கை:-
عن أبي
علي رجل من بني كاهل قال
خطبنا
أبو موسى الأشعري فقال:-"يا أيها الناس اتقوا هذا الشرك فإنه أخفى من دبيب
النمل فقام إليه عبد الله بن حزن وقيس بن المضارب فقال: والله لتخرجن مما قلت أو
لنأتين عمر مأذونا لنا أو غير مأذون فقال: بل أخرج مما قلت خطبنا رسول الله صلى
الله عليه وسلم ذات يوم فقال:-يا أيها الناس اتقوا هذا الشرك فإنه أخفى من دبيب
النمل
فقال له
من شاء الله أن يقول وكيف نتقيه وهو أخفى من دبيب النمل يا رسول الله قال قولوا
اللهم إنا نعوذ بك من أن نشرك بك شيئا نعلمه ونستغفرك لما لا نعلمه
رواه
أحمد والطبراني ورواته إلى أبي علي محتج بهم في الصحيح. وأبو علي وثقه ابن حبان
ولم أر أحدا جرحه
மனிதர்களே எறும்பு
ஊர்வதைவிடவும் இரகசியமான இணைவைத்தலை பயந்து கொள்ளுங்கள் என்று அபூ மூஸா அல் அஷ்
அரீ ( ரலி ) அவர்கள் எங்களுக்கு உரை நிகழ்த்தும் போது கூறினார்கள்.அவர்களிடம்
அப்துல்லாஹ் இப்னு ஹஸ்ன் ,கைஸ் இப்னுல் முழாரிப் ஆகியோர் எழுந்து “ அல்லாஹ்வின் மீது
சத்தியமாக ! நீங்கள் கூறியதை நிரூபிக்க வேண்டும் அல்லது உமர் ( ரலி ) யிடம்
விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நீங்கள் வந்தாக வேண்டும் என்றனர்.அதற்கவர் நான்
கூறியதை நிரூபிக்கிறேன் எனக்கூறிவிட்டு ; எங்களிடம் ஒரு நாள்
உரையாற்றும்போது நபி ஸல் அவர்கள் “ மனிதர்களே ! எறும்பு
ஊர்வதை விட இரகசியமான இணைவைத்தலை அஞ்சுங்கள் என்று கூறினார்கள். இறைத்தூதர்
அவர்களே ! எறும்பு ஊர்வதைவிட இரகசியமான ஒன்றை எப்படி அஞ்சமுடியும் ? என்று ஒருவர் கேட்டார்.” இறைவா ! எதையும் நாங்கள்
அறிந்து உனக்கு இணைவைப்பதை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறோம் “ நாங்கள் அறியாது உள்ளதை செய்வது பற்றி உன்னிடம் மன்னிப்புக் கோருகிறோம் என்று
பிரார்த்தனை செய்யுங்கள் என்று நபி ஸல் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ அலி , நூல்கள் : அஹ்மத் (19108)
தப்ரானீ )
ஷைத்தானைத் திட்டாதீர்...
عَنْ
أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه
وسلم: «لَا تَسُبُّوا الشَّيْطَانَ، وَتَعَوَّذُوا بِاللهِ مِنْ
شَرِّهِ» رواه أبو طاهر المخلص (9/ 196 / 2)، انظر صَحِيح الْجَامِع: (7318)،
الصَّحِيحَة: (2422).
"ஷைத்தானை
திட்டாதீர்கள். மாறாக,
ஷைத்தானின் கேடுகள் மற்றும் தீங்குகளில் இருந்து
அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுங்கள்" என்று நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
قال أبو
داود ثنا وهب بن بقية عن خالد يعني ابن عبد الله عن خالد يعني الحذاء عن أبي تميمة
عن أبي المليح قال : { كنت رديف النبي صلى الله عليه وسلم فعثرت دابته فقلت : تعس
الشيطان فقال : لا تقل تعس الشيطان فإنك إذا قلت ذلك تعاظم حتى يكون مثل البيت
ويقول : بقوتي ، ولكن قل بسم الله فإنك إذا قلت ذلك تصاغر حتى يكون مثل الذباب }
அபுல் மலீஹ் (ரலி)
அவர்கள் அறிவிக்கின்றார்கள்:-" நான் நபி (ஸல்) அவர்களின் பின்னால்
(வாகனத்தில்) ஒட்டகத்தில் அமர்ந்திருந்தேன். அப்போது அந்த ஒட்டகம் மிரண்டது.
அதற்கு, நான் "ஷைத்தான் நாசமாகட்டும்!" என்று கூறினேன். அப்போது, நபி (ஸல்) அவர்கள் "ஷைத்தானை நாசமாகட்டும் என்று சொல்லி திட்ட வேண்டாம்.
ஏனெனில்,
அப்படி நீர் சொல்லும் போது அவன் தன்னை உயர்வாக எண்ணிக்
கொள்கின்றான். என் ஆற்றலை பார்த்தாயா? என்று பெருமிதம்
அடைகிறான். மாறாக,
நீர் "பிஸ்மில்லாஹி" என்று கூறுவீராக!" இந்த
வார்த்தை அவனை சிறுமை அடையச் செய்கிறது. மேலும், தன்னை அவன் அற்ப கொசு போல உணர்கிறான்" என்று நபி ஸல் அவர்கள்
கூறினார்கள். ( நூல்: நஸாயீ )
மரணித்தவர்களை திட்டாதீர்...
عَنْ
عَائِشَةَ رَضِيَ اللَّهُ تعالى عَنْهَا، قَالَتْ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ تَسُبُّوا الأَمْوَاتَ، فَإِنَّهُمْ قَدْ أَفْضَوْا إِلَى
مَا قَدَّمُوا» (خ) (1393)
ஆயிஷா (ரலி)
அவர்கள் அறிவிக்ஙின்றார்கள்:-"மரணித்தவர்களை திட்டாதீர்கள். ஏனெனில், நிச்சயமாக அவர்கள் தாங்கள் முற்படுத்தியதை அடைந்து கொண்டார்கள்.” நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்: புகாரி)
عن
جابرِ بن سُليمٍ رضي الله عنه، أنه قال لرسولِ الله صلى الله عليه وسلم: اعهَد
إليَّ، قال: لا تسُبَّنَّ أحدًا
قال: فما سبَبتُ بعدَه
حُرًّا ولا عبدًا، ولا بعيرًا ولا شاةً. وقال له رسولُ الله صلى الله عليه وسلم: ”
وإن امرُؤٌ شتَمَك وعيَّرَك بما يعلَمُ فيك، فلا تُعيِّره بما تعلَمُ فيه، فإنما
وَبالُ ذلك عليه .
ஜாபிர் இப்னு
ஸுலைம் (ரலி) அறிவிக்கின்றார்கள்:- நபி ஸல் அவர்கள் என்னிடம் "எவரையும் திட்ட
மாட்டேன்" என்று என்னிடம் ஒப்பந்தம் (பைஅத்) செய்து தாருங்கள்" என்று
கேட்டார்கள். நான் அது போன்றே ஒப்பந்தம் செய்தேன். அதன் பின்னர் சுதந்திரமான, அடிமையான எந்த மனிதனையும் நான் திட்டியதில்லை. ஆட்டையோ, ஒட்டகத்தையோ கூட நான் திட்டியதில்லை. மேலும், பெருமானார் ஸல் அவர்கள் "ஒரு மனிதர் உன்னிடம் உள்ள ஒரு குறையை சுட்டிக்
காட்டி உன்னை திட்டினால்
அவரிடம் உள்ள குறையை சொல்லி பதிலுக்கு நீரும் திட்டிவிட
வேண்டாம். ஏனெனில்,
அதன் பிரதிபலன் அவருக்கே சென்று சேரட்டும்!" என்று
கூறினார்கள். ( நூல்: ஜாமிஉஸ் ஸஹீஹ் )
நபி (ஸல்) அவர்கள்
”நாவால் ஈமான் கொண்டு இதயத்தில் ஈமான் நுழையாதவர்களே! இறைவிசுவாசிகளை நோவினை
செய்யாதீர்கள்,
அவர்களது குறைகளைத் துருவித் துருவி ஆராயாதீர்கள். எவன்
தனது சகோதர முஸ்லிமின் குறைகளை துருவித் துருவி ஆராய்கிறானோ அவனது கௌரவத்தை அல்லாஹ் அழித்துவிடுவான். எவன் தனது சகோதரனின்
குற்றம் குறைகளை ஆராய்கிறானோ அவன் தனது வீட்டுக்கு மத்தியில் இருந்தபோதும்
அல்லாஹ் அவனை கேவலப்படுத்தி விடுவான்.” என்று கூறினார்கள்.
(முஃஜமுத் தப்ரானி)
நபி (ஸல்) அவர்கள்
தங்களது இதயத்தில் ஈமான் நுழையாமல் நாவினால் மட்டும் ஈமான் கொண்டவர்களே! என்று
கூறியது எவ்வளவு கடுமையான வார்த்தை? இது பிறரை வார்த்தையால்
நோவினை செய்பவர்கள் உண்மையில் நாவினால் மட்டுமே ஈமான் கொண்டிருக்கிறார்கள்; அவர்களது இதயத்தில் ஈமான் நுழைந்திருந்தால் இத்தகைய காரியத்தில் ஈடுபட்டிருக்க
மாட்டார்கள் என்ற பொருளைத் தருகிறது.
நற்பண்புகளைக்
கொண்ட இஸ்லாமிய சமூகத்தில் வாழும் முஸ்லிம்களின் வாழ்வில் இதுபோன்ற அர்த்தமற்ற, வீணான காரியங்கள் இருக்க முடியாது. அதுபோல அசிங்கமான, தவறான வார்த்தைகளை பயன்படுத்தக் காரணமாக அமையும் சண்டை, சச்சரவுகளும் இருக்க முடியாது.
உண்மையான இஸ்லாமிய
சமூகத்தில் வாழும் ஒவ்வொரு முஸ்லிமும் தனது வாயிலிருந்து வெளிப்படும் ஒவ்வொரு
வார்த்தையும் இறைசமூகத்தில் விசாரிக்கப்படும் என்பதை ஆழமாக உணர்ந்திருப்பார். வீண்
விவாதம்,
சண்டை சச்சரவுகளில் ஈடுபடுவதிலிருந்து தன்னை தற்காத்து
கொள்வார்.
இவ்விஷயத்தில்
அல்குர்ஆன் கூறுவதையும், நபி (ஸல்) அவர்கள் கூறியதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
وَالَّذِيْنَ يُؤْذُوْنَ
الْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنٰتِ بِغَيْرِ مَا اكْتَسَبُوْا فَقَدِ احْتَمَلُوْا
بُهْتَانًا وَّاِثْمًا مُّبِيْنًا
ஈமான் கொண்ட
ஆண்களையும்,
ஈமான் கொண்ட பெண்களையும் செய்யாத (எதையும் செய்ததாகக்) கூறி
எவர் நோவினை செய்கிறார்களோ,
அவர்கள் நிச்சயமாக அவதூறையும், வெளிப்படையான பாவத்தையுமே சுமந்து கொள்கிறார்கள். ( அல்குர்ஆன்: 33: 58 )
நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்: ”ஒருவரையொருவர் திட்டிக் கொண்டால் மற்றவர் வரம்பு மீறாதிருக்கும் வரை அதன்
பாவங்கள் அனைத்தும் அதை ஆரம்பித்தவருக்கே உரியதாகும்.” (ஸஹீஹ் முஸ்லிம்)
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் நம் அனைவரையும் அழகிய பண்பாடுகளும், நேரிய சொல்லாடல்களும் கொண்ட
மேன்மக்களாக ஆக்கி, நம் வாழ்க்கையை சீராக்குவானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல்
ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!
Masha allah arumai haj
ReplyDeleteமாஷா அல்லாஹ் அருமையான பதிவு அல்லாஹுத்தஆலா தங்களுக்கு ஈருலகிலும் வெற்றியை தருவானாக
ReplyDeleteஅருமையான பயான் கருத்துகள்
ReplyDelete