ஹஜ்:- அமல்களின் குவியல்! நன்மைகளின் பொக்கிஷம்!!!
அல்லாஹ் சங்கையாக்கி இருக்கின்ற நான்கு மாதங்களில்
ஒன்றான துல்கஅதா மாதத்தில் நாம் வீற்றிருக்கின்றோம். ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக
உலகெங்கும் இருந்து இஹ்ராம் ஆடையுடன் ஹாஜிகள் மக்காவை நோக்கி பயணப்படத் துவங்கி இருக்கும்
காலமும் கூட.
இந்த நேரத்தில் புனிதமான ஹஜ் குறித்து ஹஜ்ஜில் இடம்
பெற்றுள்ள சில அமல்களின் தனித்துவம் குறித்து நாம் பேசவும் கேட்கவும் செய்வது ஹஜ் செய்வதன்
மீதான நம்முடைய ஆசையை அதிகரிக்கும். விரைவில் ஹஜ் செய்ய வேண்டும் என்ற ஆர்வமும் ஏற்படும்.
இஸ்லாத்தில் வழிபாடுகள் எதற்காக?..
இஸ்லாம்
வழிபாடுகளாக அடையாளப் படுத்தி இருக்கும் எந்தவொரு வழிபாடும் சடங்காகவோ
சம்பிரதாயமாகவோ செய்யப் படக்கூடிய வகையில் அமைந்ததல்ல.
ஒவ்வொரு வழிபாட்டுக்குப் பின்னாலும் மகத்தான தத்துவங்களும்
உயர்தரமான காரணங்களும் இடம் பெற்றுள்ளன.
இந்த உலகில் இறைவனின் பிரதிநிதியாகப் படைக்கப்பட்டிருக்கும்
மனிதன் வீணாண நோக்கத்திற்காக படைக்கப்பட வில்லை என்று அருள் மறை குர்ஆன் சுட்டிக்
காட்டுகின்றதோ அதே போன்றே அவன் படைக்கப்பட்டதன் நோக்கம் இறைவனை வணங்கி வழிபட்டு
வாழவே எனும் அடிப்படையையும் அருள் மறை குர்ஆன் அழகுபட இயம்பாமல் இல்லை.
எப்போது ஒரு மனிதன் தன்னை அறிந்து தன்னைப் படைத்த இறைவனின்
வல்லமைகளைப் புரிந்து கொள்வானோ அப்போதே அவன் இறைவனை வணங்குவதன், வழிபடுவதன் அவசியத்தை உணர்ந்து கொள்கின்றான்.
இறைத்தூதர் ஸுலைமான் (அலை) அவர்களின் வாழ்க்கையில் இடம்
பெறும் ஒரு நிகழ்வின் மூலம் அல்லாஹ் இதை தெளிவு படுத்துகின்றான்.
وَحُشِرَ لِسُلَيْمٰنَ جُنُوْدُهٗ مِنَ الْجِنِّ
وَالْاِنْسِ وَالطَّيْرِ فَهُمْ يُوْزَعُوْنَ
மேலும் ஸுலைமானுக்கு ஜின்கள் மனிதர்கள் பறவைகள்
ஆகியவற்றிலிருந்து அவரது படைகள் திரட்டப்பட்டு, அவை (தனித் தனியாகப்)
பிரிக்கப்பட்டுள்ளன.
حَتّٰٓى
اِذَاۤ اَتَوْا عَلٰى وَادِ النَّمْلِۙ قَالَتْ نَمْلَةٌ يّٰۤاَيُّهَا النَّمْلُ
ادْخُلُوْا مَسٰكِنَكُمْۚ لَا يَحْطِمَنَّكُمْ سُلَيْمٰنُ وَجُنُوْدُهٗۙ وَهُمْ
لَا يَشْعُرُوْنَ
இறுதியாக, எறும்புகள் நிறைந்த
இடத்திற்கு அவர்கள் வந்த போது ஓர் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி:) “எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; ஸுலைமானும் அவருடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும்
நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)“ என்று கூறிற்று.
فَتَبَسَّمَ ضَاحِكًا مِّنْ قَوْلِهَا وَقَالَ رَبِّ
اَوْزِعْنِىْۤ اَنْ اَشْكُرَ نِعْمَتَكَ الَّتِىْۤ اَنْعَمْتَ عَلَىَّ وَعَلٰى
وَالِدَىَّ وَاَنْ اَعْمَلَ صَالِحًـا تَرْضٰٮهُ وَاَدْخِلْنِىْ بِرَحْمَتِكَ فِىْ
عِبَادِكَ الصّٰلِحِيْنَ
அப்போது அதன் சொல்லைக் கேட்டு, அவர் புன்னகை கொண்டு சிரித்தார். இன்னும், “என் இறைவா! நீ என்
மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும்
விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக!
இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக!” என்று பிரார்த்தித்தார். ( அல்குர்ஆன்: 27: 17 - 19 )
அந்த வகையில் ஒரு முஸ்லிம் எப்போதும் தான் இறைவனை
நினைத்துக் கொண்டே வாழ வேண்டும் என்று விரும்பினார் என்றால், அல்லது தான் எப்போதும் இறைவனைப் பற்றிய சிந்தனையிலேயே இருப்பதாக கூறுகிறார்
என்றால் அவர் "தொழுகை" எனும் வழிபாட்டில் பேணுதல் உள்ளவராக இருப்பது
அவசியம் ஆகும்.
اِنَّنِىْۤ اَنَا اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّاۤ اَنَا
فَاعْبُدْنِىْ وَاَقِمِ الصَّلٰوةَ لِذِكْرِىْ
"நிச்சயமாக நான் தான் அல்லாஹ்! என்னைத் தவிர வேறு நாயன் இல்லை; ஆகவே,
என்னையே நீர் வணங்கும், என்னை தியானிக்கும்
பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக. ( அல்குர்ஆன்: 20: 14 )
ஒரு முஸ்லிம் இந்த வழிபாட்டில் பேணுதல் உள்ளவராகஇருக்கும்
காலமெல்லாம் மகத்தான இரண்டு பேறுகளை அவர் பெறுகிறார்.
1.
இறைவனின் நேரடி பொறுப்பில் அவர் வந்து விடுகிறார்.
فَاذْكُرُوْنِىْٓ اَذْكُرْكُمْ وَاشْکُرُوْا لِىْ
وَلَا تَكْفُرُوْنِ
ஆகவே, நீங்கள் என்னை நினைவு
கூறுங்கள்;
நானும் உங்களை நினைவு கூறுவேன். இன்னும், நீங்கள் எனக்கு நன்றி செலுத்துங்கள்; எனக்கு மாறு
செய்யாதீர்கள்.
( அல்குர்ஆன்: 2:
152 )
2.
மன நிம்மதியை பெறுகிறார்...
اَلَّذِيْنَ اٰمَنُوْا وَتَطْمَٮِٕنُّ قُلُوْبُهُمْ
بِذِكْرِ اللّٰهِ اَلَا بِذِكْرِ اللّٰهِ
تَطْمَٮِٕنُّ الْقُلُوْبُ
(நேர் வழி பெறும்) அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் தாம் (முற்றிலும்) ஈமான் கொண்டவர்கள்; மேலும்,
அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி
பெறுகின்றன;
அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி
பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க! ( அல்குர்ஆன்: 13: 28 )
நோன்பு என்கிற
வழிபாடு குறித்து அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கூறும் போது...
நோன்பு எனக்கானது. அதற்கு கூலி நானே (யாவேன்) வழங்குவேன் என
அல்லாஹ் கூறியதாக நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ்விற்காக
ஒரு முஸ்லிம் நோன்பு நோற்கும் போது அதன் விளைவாக 1, இறையச்சம்,
2. நன்றியுணர்வு, 3. அல்லாஹ்வை மேன்மை
படுத்தும் பண்புகள் 4.
நேர்வழியில் நடப்பது போன்ற சிறப்புகளை பெறுவதாக பின்வரும்
இரண்டு வசனங்களும் உறுதி படுத்துகின்றன.
يٰٓـاَيُّهَا
الَّذِيْنَ اٰمَنُوْا كُتِبَ عَلَيْکُمُ الصِّيَامُ کَمَا كُتِبَ عَلَى الَّذِيْنَ
مِنْ قَبْلِکُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْنَۙ
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது
நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம். ( அல்குர்ஆன்: 2: 183 )
ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு
(முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக்
கொண்டதாகவும்;
(நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன்
இறக்கியருளப் பெற்றது;
ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை
அடைகிறாரோ,
அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்; எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட
நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்; அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை; குறிப்பிட்ட நாட்கள்
(நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி
நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்). ( அல்குர்ஆன்: 2: 183 )
ஜகாத் எனும் பொருளாதார கடமையை நிறைவேற்றுபவர்களின் எண்ணமும்
நம்பிக்கையும் அல்லாஹ் தந்ததில் இருந்து கொடுப்பதாக இருக்க வேண்டும். அதாவது அந்த
பொருளாதாரம் அல்லாஹ்விற்கே உரியது என்று அவர் கருத வேண்டும்.
الَّذِيْنَ
يُؤْمِنُوْنَ بِالْغَيْبِ وَ يُقِيْمُوْنَ الصَّلٰوةَ وَمِمَّا رَزَقْنٰهُمْ
يُنْفِقُوْنَۙ
(பயபக்தியுடைய) அவர்கள்,
(புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை
கொள்வார்கள்;
தொழுகையையும் கடைப்பிடிப்பார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும்
செய்வார்கள். (
அல்குர்ஆன்: 2: 2 )
தூய்மையான அந்த எண்ணத்தின் விளைவாக 1. பொருளாதார பாதுகாப்பு 2.
பாவமன்னிப்பு 3. நபி ஸல் அவர்களின்
பாக்கியமான துஆ கிடைக்கப் பெறுகிறது.
خُذْ
مِنْ اَمْوَالِهِمْ صَدَقَةً تُطَهِّرُهُمْ وَتُزَكِّيْهِمْ بِهَا وَصَلِّ
عَلَيْهِمْؕ اِنَّ صَلٰوتَكَ سَكَنٌ لَّهُمْؕ وَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌ
(நபியே!) அவர்களுடைய செல்வத்திலிருந்து தர்மத்திற்கானதை எடுத்துக் கொண்டு, அதனால் அவர்களை உள்ளும் புறமும் தூய்மையாக்குவீராக, இன்னும் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக; நிச்சயமாக உம்முடைய பிரார்த்தனை அவர்களுக்கு (சாந்தியும்), ஆறுதலும் அளிக்கும்;
அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான். ( அல்குர்ஆன்: 9: 103 )
அதே போன்று தான் ஹஜ் எனும் வணக்க வழிபாடும். அல்லாஹ்வுக்காக
மட்டுமே அந்த ஹஜ்ஜை செய்ய வேண்டும். வேறு எந்த சிறு குறைபாடுகள் நிகழ்ந்தாலும் அது
ஹஜ்ஜாகவே கருதப்படாது.
وَاَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلّٰهِؕ
ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள்.
( அல்குர்ஆன்: 2: 196 )
அல்லாஹ்வுக்காக
மட்டுமே ஒருவர் ஹஜ் செய்வாரானால் அதன் விளைவாக அவருக்கு கிடைக்கும் சிறப்பும்
அந்தஸ்தும் நாம் அறிந்ததே!
ஏனெனில், ஹஜ் என்பது குறிப்பிட்ட சில
மாதங்களின்,
குறிப்பிட்ட சில நாட்களின், குறிப்பிட்ட சில
அமல்களின் அணிவகுப்பு ஆகும். நன்மைகளின் குவியல்
ஆகும்.
اَلْحَجُّ اَشْهُرٌ مَّعْلُوْمٰتٌ فَمَنْ فَرَضَ فِيْهِنَّ الْحَجَّ
فَلَا رَفَثَ وَلَا فُسُوْقَۙ وَلَا جِدَالَ فِى الْحَجِّ وَمَا تَفْعَلُوْا
مِنْ خَيْرٍ يَّعْلَمْهُ اللّٰهُ وَتَزَوَّدُوْا فَاِنَّ خَيْرَ الزَّادِ
التَّقْوٰى وَاتَّقُوْنِ يٰٓاُولِى الْاَلْبَابِ
ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாகும்; எனவே,
அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தம் மீது
கடமையாக்கிக் கொண்டால்,
ஹஜ்ஜின் காலத்தில் சம்போகம், கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு - ஆகியவை செய்தல்
கூடாது; நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையையும் அல்லாஹ் அறிந்தவனாகவே இருக்கிறான்; மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்; நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் ஹைரானது(நன்மையானது), தக்வா(என்னும் பயபக்தியே) ஆகும்; எனவே நல்லறிவுடையோரே!
எனக்கே பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள். ( அல்குர்ஆன்: 2: 187 )
சுமார் 20 க்கும் மேற்பட்ட அமல்கள் பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் கொண்ட அமல்கள் என
ஹஜ் என்பது ஒரு முஸ்லிமின் வாழ்வில் பரக்கத்தை மட்டுமே கொண்டு வந்து சேர்க்கும்
மகத்துவமான அமலாகும்.
ஹஜ்ஜில் இடம்
பெற்றுள்ள ஒரு சில அமல்களின் சிறப்புகளை நாம் பார்ப்போம்.
1. தல்பியா (எனும் ஏகத்துவம் மிளிரும் தனித்துவம் மிக்க) வழிபாடு வார்த்தை.
تفسير البغوي "معالم التنزيل"
وَأَذِّنْ فِي النَّاسِ
أي:
أعلمْ ونادِ في الناس،
بِالْحَجِّ ، فقال إبراهيم:
وما يبلغ صوتي؟ فقال: عليك الأذانُ وعلينا البلاغ، فقام إبراهيم على المقام فارتفع
به المقامُ حتى صار كأطول الجبال، فأدخل أصبعيه في أذنيه وأقبل بوجهه يمينًا
وشمالًا وشرقًا وغربًا، وقال: يا أيها الناس، ألا إن ربكم قد بنى لكم بيتًا، وكتب
عليكم الحج إلى البيت، فأجيبوا ربكم، فأجابه كل من كان يحج من أصلاب الآباء وأرحام
الأمهات: لبيك اللهم لبيك، قال ابن عباس: فأول من أجابه أهل اليمن، فهم أكثر الناس
حجًّا.
(அவரை நோக்கி) ஹஜ்ஜுக்கு வருமாறு நீங்கள் மனிதர்களுக்கு
அறிவிப்பு செய்யுங்கள்.(அவர்கள்) கால்நடையாகவும் உங்களிடம்
வருவார்கள்.இளைத்த ஒட்டகங்களின் மீது வெகு தொலை தூரத்திலிருந்தும் (உங்களிடம்)
வருவார்கள். ( அல்குர்ஆன்: 22: 27 )
அல்லாஹ்
ரப்புல் ஆலமீன் இந்த கட்டளையை இப்ராஹீம் (அலை) அவர்களிடம் கூறிய போது இப்ராஹீம்
(அலை) அவர்கள் இறைவா! என்னுடைய சப்தம் எப்படி எல்லோரின் காதுகளிலும் சென்று சேரும்? என்று வினவினார்கள். அதற்கு அல்லாஹ் நீங்கள் உங்களுக்கு
இடப்பட்ட கட்டளையை எத்தி வையுங்கள்! கொண்டு போய் சேர்ப்பது நம் வேலை"
என்றான். பின்னர் இப்ராஹீம் (அலை) அவர்கள் அபூகுபைஸ் மலை மீது ஏறி நின்று நான்கு
திசைகளிலும் திரும்பி திரும்பி ஹஜ்ஜுக்கான அழைப்பை விடுத்தார்கள்.
இது ஆத்ம உலகில்
இருந்த, இருக்கிற ஆன்மாக்களை நோக்கி விடுக்கப்பட்ட அழைப்பாகும். இந்த ஆன்மாக்கள்
எல்லாம் இதைக் கேட்டன. எந்த ஆன்மா இதை கேட்டதோ அவர்களுக்கு மட்டும் தான் ஹஜ்ஜுடைய
பாக்கியம் கிடைக்கிறது. ஆண்களின் முதுகந்தண்டில், பெண்களின் கற்பப்பையில் இருந்தவர்களிலும் இதைக் கேட்டவர்கள் பதில்
சொன்னார்கள். யார் எத்தனை முறை பதில் சொன்னார்களோ அத்தனை முறை அவர்களுக்கு
ஹஜ்ஜுடைய பாக்கியம் கிடைக்கிறது. ஒருமுறை சொன்னவருக்கு ஒரு முறை.இரு முறை அல்லது
அதிகமாக சொன்னவர்களுக்கு அதிகமாக ஹஜ்ஜு செய்ய முடிகிறது என்று கூறும் இப்னு
அப்பாஸ் (ரலி) அவர்கள : இதிலிருந்து தான் தல்பியா (லப்பைக்க அல்லாஹும்ம லப்பைக்க)
முழக்கம் பிறந்தது. அன்று அவர்கள் பதில் சொன்னதின் வார்த்தை வடிவம் தான் இந்த
தல்பியா என்று தொடர்ந்து விவரிக்கிறார்கள். மேலும், யமன் வாசிகளே முதன்
முதலாக இந்த அழைப்பிற்கு பதிலளித்தார்கள். ஆகவே தான் ஹஜ் செய்பவர்களில் அதிக
எண்ணிக்கையில் யமன் வாசிகள் இருக்கின்றார்கள். ( தஃப்ஸீர் தப்ரி, பக்வீ,
மஆலிமுத் தன்ஜீல், இப்னு கஸீர், குர்துபி )
ஹாஜிகளின் இன்றைய,அன்றைய தல்பியா முழக்கதின் மூலாதாரம் இந்த மூல முதல் பதில் வாசகம்
தான்.முதலில் லப்பைக்க என்று தல்பியா முழங்கி பதில் சொன்னவர்கள் யமன் வாசிகள்
என்றும் எனவே தான் அவர்கள் உலக மக்களில் அதிக ஹாஜிகளாக இருக்கிறார்கள் என்றும்
ரிவாயத்தில் [அறிவிப்பில்] வந்துள்ளது.
தல்பியாவை உரத்த குரலில் சொல்லுமாறு ஹதீஸ்கள்
வலியுறுத்துகின்றன.
என்னிடத்தில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து “இஹ்ராமின் போதும், தல்பியாவின் போதும் என் தோழர்கள் சப்தத்தை உயர்த்த வேண்டும்” என்று கட்டளையிட்டார்கள் என்று நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள். அறிவிப்பவர் : ஸாயிப் பின் கல்லாத் (ரலி)
நூல்கள் : ஹாகிம், பைஹகீ.
தல்பியாவை நிறுத்தவேண்டிய நேரம்:-
இஹ்ராம்
கட்டிய நபர்கள் அதிகமதிகம் தல்பியாவைக் கூறவேண்டும். ஜம்ரதுல் அகபாவில் கடைசிக்
கல்லை எறியும்வரை தல்பியாவைக் கூறிக் கொண்டே இருக்க வேண்டும். ஜம்ரதுல் அகபாவில்
கடைசிக் கல்லை எறிந்து முடித்தவுடன் தல்பியாவை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
நான்
நபி (ஸல்) அவர்களின் ஒட்டகத்தில் அவர்களுக்குப் பின்னால் அமர்ந்து அரஃபாவிலிருந்து
மினாவரை சென்றேன். ஜம்ரதுல் அகபாவில் கல்லெறியும் வரை அவர்கள் தல்பியா கூறிக்
கொண்டே இருந்தார்கள்.
அறிவிப்பவர் : ஃபழ்லு பின் அப்பாஸ் (ரலி)
நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபுதாவுத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா.
நான்
அரஃபாவிலிருந்து நபி (ஸல்) அவர்களுடன் புறப்பட்டேன். அவர்கள் ஜம்ரதுல் அகபாவில்
கல்லெறியும் வரை தல்பியா கூறிக்கொண்டே இருந்தார்கள். ஒவ்வொரு கல்லை எறியும்போதும்
தல்பியா கூறினார்கள். கடைசிக் கல்லுடன் தல்பியாவை நிறுத்திக் கொண்டார்கள்.
அறிவிப்பவர் : ஃபழ்லு பின் அப்பாஸ் (ரலி)
நூல் : இப்னுகுஸைமா
எந்தெந்த
இடங்களில் குறிப்பிட்ட துஆக்கள் ஓதவேண்டும் என்று கட்டளையிடப் பட்டுள்ளதோ அந்த
நேரங்கள் தவிர எல்லா நேரமும் தல்பியாவை அதிகமதிகம் கூறவேண்டும்.
தல்பியாவின் சிறப்பு...
لَبَّيْكَ
اللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ
وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ، لَا شَرِيكَ لَكَ
லப்பைக்க
அல்லாஹும்ம லப்பைக் லப்பைக்க லா ஷரீக்க லக்க லப்பைக் இன்னல் ஹம்த வந்நிஃமத்த லக்க
வல் முல்க் லா ஷரீக லக்.
அல்லாஹுவே ! இதோ
உன் அழைப்பை ஏற்று வந்துவிட்டேன், இதோ வந்துவிட்டேன், இதோ நான் வந்துவிட்டேன். உனக்கு இணையேதுமில்லை, இதோ வந்துவிட்டேன். நிச்சயமாக புகழும், அருளும்,ஆட்சியும் உனக்கே உரியன, உனக்கு இணையேதுமில்லை.
و
حَدَّثَنِي عَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ الْعَنْبَرِيُّ حَدَّثَنَا
النَّضْرُ بْنُ مُحَمَّدٍ الْيَمَامِيُّ حَدَّثَنَا عِكْرِمَةُ يَعْنِي
ابْنَ عَمَّارٍ حَدَّثَنَا أَبُو زُمَيْلٍ عَنْ ابْنِ عَبَّاسٍ
رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ
كَانَ الْمُشْرِكُونَ يَقُولُونَ لَبَّيْكَ لَا
شَرِيكَ لَكَ قَالَ فَيَقُولُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ وَيْلَكُمْ قَدْ قَدْ فَيَقُولُونَ إِلَّا شَرِيكًا هُوَ لَكَ
تَمْلِكُهُ وَمَا مَلَكَ يَقُولُونَ هَذَا وَهُمْ يَطُوفُونَ بِالْبَيْتِ
இணைவைப்பாளர்கள்
இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வரும்போது, “லப்பைக்,
லா ஷரீக்க லக்” (உன் அழைப்பை
ஏற்றோம். உனக்கு இணை ஏதுமில்லை) என்று கூறுவார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர்
(ஸல்), “உங்களுக்குக் கேடுதான். போதும்! போதும்! (இத்துடன் நிறுத்திக்கொள்ளுங்கள்)” என்பார்கள். (ஏனெனில்,)
இணைவைப்பாளர்கள் தொடர்ந்து, “இல்லா ஷரீக்கன் ஹுவ லக்க. தம்லிகுஹு வ மா மலக் (ஆனால், உனக்கு ஓர் இணையாளன் இருக்கின்றான்; அவனுக்கு நீ எசமானன்.
அவன் எவருக்கும் எசமான் அல்லன்; அல்லது அவனுக்கும்
அவனுடைய உடமைகளுக்கும் நீயே அதிபதி) என்றும் கூறுவார்கள். அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)
و
حَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ
أَخْبَرَنِي يُونُسُ عَنْ ابْنِ شِهَابٍ قَالَ فَإِنَّ سَالِمَ
بْنَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَخْبَرَنِي عَنْ أَبِيهِ رَضِيَ
اللَّهُ عَنْهُ قَالَ
سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ يُهِلُّ مُلَبِّدًا يَقُولُ لَبَّيْكَ اللَّهُمَّ
لَبَّيْكَ لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ
لَكَ وَالْمُلْكَ لَا شَرِيكَ لَكَ لَا يَزِيدُ عَلَى هَؤُلَاءِ الْكَلِمَاتِ
وَإِنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا كَانَ
يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَرْكَعُ
بِذِي الْحُلَيْفَةِ رَكْعَتَيْنِ ثُمَّ إِذَا اسْتَوَتْ بِهِ النَّاقَةُ
قَائِمَةً عِنْدَ مَسْجِدِ ذِي الْحُلَيْفَةِ أَهَلَّ بِهَؤُلَاءِ
الْكَلِمَاتِ وَكَانَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا
يَقُولُ كَانَ عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ يُهِلُّ
بِإِهْلَالِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ
هَؤُلَاءِ الْكَلِمَاتِ وَيَقُولُ لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ لَبَّيْكَ
وَسَعْدَيْكَ وَالْخَيْرُ فِي يَدَيْكَ لَبَّيْكَ وَالرَّغْبَاءُ إِلَيْكَ
وَالْعَمَلُ
அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) தமது தலைமுடியைக் களிம்பு தடவிப் படியவைத் திருந்த நிலையில் “லப்பைக்,
அல்லாஹும்ம லப்பைக்; லப்பைக், லா ஷரீக்க லக்க லப்பைக்; இன்னல் ஹம்த வந்நிஅமத்த
லக்க வல் முல்க்;
லா ஷரீக்க லக்” என்று கூறியதை நான்
கேட்டேன். அவர்கள் (தமது தல்பியாவில்) இதைவிடக் கூடுதலாக வேறெதையும் கூற
மாட்டார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
குறிப்பு : “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) துல்ஹுலைஃபாவில் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.
பின்னர் துல்ஹுலைஃபா பள்ளியின் அருகில் தமது ஒட்டகம் சரியாக நிலைக்கு வந்ததும்
தல்பியா கூறி இஹ்ராம் பூணுவார்கள்” என்று (என் தந்தை)
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) கூறுவார்கள் என்றும்
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
கூறியவாறே (என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) தல்பியா கூறி இஹ்ராம்
பூணுவார்கள். லப்பைக்,
அல்லாஹும்ம லப்பைக்; லப்பைக் வ ஸஅதைக்.
வல்கைரு ஃபீ யதைக்;
லப்பைக், வர்ரஃக்பாஉ இலைக்க
வல்அமல் எனக் கூறுவார்கள்”
என்று (என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
குறிப்பிடுவார்கள் என்றும் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களுள் ஒருவரான ஸாலிம் இப்னு
அப்தில்லாஹ் (ரலி) கூறுகிறார்கள்.
حَدَّثَنَا
هَنَّادٌ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ عَنْ عُمَارَةَ بْنِ غَزِيَّةَ
عَنْ أَبِى حَازِمٍ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى
الله عليه وسلم- « مَا مِنْ مُسْلِمٍ يُلَبِّى إِلاَّ لَبَّى مَنْ عَنْ يَمِينِهِ
أَوْ عَنْ شِمَالِهِ مِنْ حَجَرٍ أَوْ شَجَرٍ أَوْ مَدَرٍ حَتَّى تَنْقَطِعَ
الأَرْضُ مِنْ هَا هُنَا وَهَا هُنَا
».
எந்த முஸ்லிமாவது
தல்பியா கூறினால் அவரது வலப்புறம் மற்றும் இடப்புறம் உள்ள கற்கள், மரங்கள்,
களிமண் கட்டிகள் யாவும் தல்பியா கூறுகின்றன. இந்தக்
கோடியிலிருந்து அந்தக் கோடி வரை பூமி முழுவதும் உள்ளவைகளும் இவ்வாறு தல்பியா
கூறுகின்றன என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃது (ரலி), நூல்: திர்மிதீ 758
2. தவாஃப் எனும்
ஒப்பற்ற அமல்..
தவாஃப் நிறைவேறுவதற்கு பெருந்தொடக்கு மற்றும் சிறுதொடக்கிலிருந்து சுத்தமாகியிருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும்.
ஏனெனில் தவாஃபு என்பது தொழுகையைப் போன்றதாகும், ஆயினும் தவாஃபில் பேசுவதற்கு அனுமதியுள்ளது.
கஃபா, இடது புறமாக இருக்குமாறு அதை ஏழு முறை வலம் வர வேண்டும். ருக்னுல் யமானிக்கு நேராக
வந்ததும் இயன்றால் பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் எனக் கூறி வலக்கையால் அதைத் தொட்டுக்கொள்ள வேண்டும்; முத்தமிட வேண்டியதில்லை.
அது சிரமமாகத் தெரிந்தால் அதை
விட்டுவிட்டு தவாஃபைத் தொடர வேண்டும். அதை நோக்கி சைகை செய்யவோ தக்பீர் கூறவோ கூடாது. ஆனால் ஹஜருல் அஸ்வதைப் பொருத்தவரை நாம் ஏற்கனவே கூறியிருப்பதைப் போல அதைக் கடக்கும்போதெல்லாம் தொட்டு முத்தமிட்டு தக்பீர் கூற வேண்டும். அல்லது சைகை செய்து தக்பீர் கூற வேண்டும்.
ஆண்கள் தவாஃபுல் குதூமில் முதல் மூன்று சுற்றுக்களில் நெருக்கமாக அடிகளை எடுத்துவைத்து சற்று வேகமாக விரைவது விரும்பத்தக்கது. அதுபோல ஆண்கள் தவாஃபுல் குதூமின் எல்லா சுற்றுக்களிலும் மேலாடையின் வலது பாகத்தை இடது கையின் அக்குள் வழியாக எடுத்து அதை இடது தோளின் மீது போட்டு வலது புறத்தைத் திறந்து வைத்திருப்பதும் விரும்பத்தக்கதாகும்.
இந்தச் சுற்றுக்களில் இயன்றவரை திக்ரு மற்றும் துஆக்களை அதிகமதிகம் ஓதிக்கொள்வதும் நல்லது. தவாஃபின் போது விரும்பிய துஆக்களை, திக்ருகளை அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும். அத்துடன் அனைத்து சுற்றுகளிலும் ருக்னுல் யமானிக்கும் ஹஜருல் அஸ்வதுக்குமிடையே
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً
وَّفِي الْآخِرَةِ حَسَنَةً وَّقِنَا عَذَابَ النَّار
'ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனத்தன் வ ஃபில் ஆகிரத்தி ஹஸனத்தன்
வகினா அதாபன்னார்'| என்ற துஆவை ஓதிக்கொள்ள வேண்டும்.
ஏழாவது சுற்றின் முடிவில் ஹஜருல் அஸ்வதைத் தொட்டோ முத்தமிட்டோ சைகை செய்தோ தக்பீர் கூறி தவாஃபை முடித்ததும் மேலாடையைச் சரிசெய்து வலது தோளையும் மறைத்து அணிந்துகொள்ள வேண்டும்.
وعن ابن عباس رضي الله عنهما قال: قال رسول الله صلى
الله عليه وسلم: "ينزل كل يوم على حجاج بيته الحرام عشرين ومائة رحمة ستين للطائفين
وأربعين للمصلين وعشرين للناظرين". قال المنذري في الترغيب والترهيب رواه
البيهقي بإسناد حسن
நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “பைத்துல்லாஹ்வை ஹஜ்ஜு செய்ய வருகை தந்திருக்கும் ஹாஜிகள் மீது அல்லாஹ் ஒவ்வொரு
நாளும் 120 வகையான அருளை இறக்குகின்றான். கஅபாவை தவாஃப்
செய்பவர்கள் மீது 60 ரஹ்மத்தும், கஅபாவில் தொழுபவர் மீது 40 வகை ரஹ்மத்தும், கஅபாவை பார்த்துக் கொண்டிருப்பவர் மீது 20 வகை ரஹ்மத்தையும்
இறக்குகின்றான்.”
( நூல்: பைஹகீ )
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ ، حَدَّثَنَا
مُحَمَّدُ بْنُ الْفُضَيْلِ ، عَنِ الْعَلاَءِ بْنِ الْمُسَيَّبِ ، عَنْ عَطَاءٍ ،
عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ ، قَالَ : سَمِعْتُ رَسُول اللهِ صَلَّى الله
عَليْهِ وسَلَّمَ يَقُولُ : مَنْ طَافَ بِالْبَيْتِ ، وَصَلَّى رَكْعَتَيْنِ ،
كَانَ كَعِتْقِ رَقَبَةٍ.
யார் கஅபாவை வலம் வந்து இரு ரக்அத்துகள் தொழுகின்றாரோ அவர்
ஓர் அடிமையை உரிமை விட்டவர் போலாவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி),
1)மக்காவுக்குச் சென்றவுடன் செய்யும் தவாஃபுல் குதூம்
2)
பத்தாம் நாளன்று செய்ய வேண்டிய தவாஃபுல் இஃபாளா அல்லது தவாஃபுஸ்
ஸியாரா
3)
மக்காவை விட்டும் ஊர் திரும்பும் போது கடைசியாகச் செய்ய
வேண்டிய தவாஃபுல் விதாஃ
இவை தவிர விரும்பிய நேரமெல்லாம் நபிலான- உபரியான- தவாஃப்கள்
செய்யலாம்.
فقد أخرج أهل السنن وابن خزيمة وابن حبان عن جبير بن
مطعم رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: "يا بني عبد مناف، لا
تمنعُنَّ أحدًا طاف بهذا البيت، وصلى أيَّ ساعة شاء من ليل أو نهار"؛ (صحيح
الجامع:7900)
”அப்து முனாஃபின் சந்ததிகளே! இந்த ஆலயத்தில் இரவு பகல் எந்நேரமும் தவாஃப்
செய்பவரையும்,
தொழுபவரையும் நீங்கள் தடுக்காதீர்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி), நூல்கள்: திர்மிதீ 795, அபூதாவூத் 1618,
நஸயீ 2875
இந்த நபி
மொழியிலிருந்து எந்த நேரமும் தவாஃப் செய்யலாம் என்பதை நாம் அறியலாம்.
மேலும், தவாஃப் என்றாலே 7 முறை கஅபாவை வலம் வருவது தான். நபியவர்கள் அப்படித்தான்
செய்துள்ளார்கள். எனவே,
எப்போது, தவாஃப் செய்தாலும் இந்த
வகையில் செய்வது தான் சரியானது.
முதன் முதலாக தவாஃப் செய்தவர்கள்?
فقد ذكر الإمام القرطبي قولين في هذه المسألة: القول
الأول: أن أول من أسس البيت الحرام هم الملائكة ثم طافوا به. القول الثاني: أن أول
من أسسه آدم عليه الصلاة والسلام ثم طاف به أيضاً، وذكر الإمام ابن كثير في تفسيره
ما معناه: أن الله تعالى أرسل جبريل إلى آدم يأمره ببناء الكعبة فبناها، ثم أُمِرَ
بالطواف بها وقيل له أنت أول الناس وهذا أول بيت وضع للناس
இமாம் குர்துபி (ரஹ்) அவர்கள் முதன் முதலாக தவாஃப் செய்தது
யார் என்பது குறித்து இரு கருத்துக்களை தங்களுடைய தஃப்ஸீரிலே
குறிப்பிடுகின்றார்கள்.
1)முதன் முதலாக வானவர்களை கொண்டு அல்லாஹ் கஅபாவிற்கு அஸ்திவாரம் அமைத்து பின்னர்
அதை தவாஃப் செய்யுமாறு ஆணையிட்டான். அவர்கள் கஅபாவை தவாஃப் செய்தார்கள்.
2) அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் ஜிப்ரயீல் (அலை) அவர்களை ஆதம் (அலை) அவர்களிடம் அனுப்பி கஅபாவிற்கு
அஸ்திவாரம் அமைக்கச் சொன்னான். ஆதம் (அலை) அவர்கள் அஸ்திவாரம் அமைத்ததும்
ஜிப்ரயீல் (அலை) அவர்கள் ஆதம் (அலை) அவர்களிடம் "நீங்களே இந்த பூமியின் முதல்
மனிதர், இந்த கஅபாவே மனிதர்கள் இறைவனை வணங்கி வழிபட அமைக்கப்பட்ட முதல் ஆலயம் . எனவே, முதல் மனிதரான நீங்கள் கஅபாவைச் சுற்றி முதலில் வலம் வாருங்கள்! இது
அல்லாஹ்வின் கட்டளை" என்று கூறினார்கள். அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று ஆதம்
(அலை) அவர்கள் தவாஃப் செய்தார்கள்.
وفي
رواية عند الطبراني في الكبير والحاكم والبيهقي بلفظ: "الطواف بالبيت صلاة،
ولكن الله أحل فيه المنطق، فمن نطق فلا ينطق إلا بخير"؛ (صحيح الجامع: 3954)
தவாஃப் என்பது
தொழுகையைப் போன்றதாகும். என்றாலும் அல்லாஹ் தவாஃபிலே பேசுவதை அனுமதித்துள்ளான். எனவே, தவாஃபின் போது ஒருவர் பேசினால் நல்லதை மட்டுமே பேசட்டும்!" என்று நபி
(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
وروى
النسائي (2922) ، وأحمد (15423) عَنْ طَاوُسٍ ، عَنْ رَجُلٍ قَدْ أَدْرَكَ
النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ قَالَ: ( إِنَّمَا الطَّوَافُ صَلَاةٌ ، فَإِذَا طُفْتُمْ ، فَأَقِلُّوا
الْكَلَام)
தவாஃப் என்பது
தொழுகையைப் போன்றதாகும். எனவே தவாஃப் செய்யும் போது பேச்சைக் குறைத்துக்
கொள்ளுங்கள்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ورواه
الترمذي (960) عَنْ ابْنِ عَبَّاسٍ ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ قَالَ : ( الطَّوَافُ حَوْلَ البَيْتِ مِثْلُ الصَّلَاةِ ، إِلَّا
أَنَّكُمْ تَتَكَلَّمُونَ فِيهِ ، فَمَنْ تَكَلَّمَ فِيهِ فَلَا يَتَكَلَّمَنَّ
إِلَّا بِخَيْرٍ) .
وصححه
الألباني في " صحيح الترمذي"
கஅபாவைச் சுற்றி
வலம் வருவது தொழுகைக்கு நிகராகும். நீங்கள் அந்த நேரத்தில் பேசிக் கொண்டு
இருக்கின்றீர்கள். தவாஃபின் போது ஒருவர் பேசினால் நல்லதை மட்டுமே பேசட்டும்!"
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
وروى
أبو داود (1888) ، والترمذي (902) عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ( إِنَّمَا جُعِلَ الطَّوَافُ بِالْبَيْتِ
وَبَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ وَرَمْيُ الْجِمَارِ لِإِقَامَةِ ذِكْرِ اللَّهِ ) .
நிச்சயமாக
கஅபாவைச் சுற்றி வலம் வருவதும் ஸஃபா மர்வா இடையே தொங்கோட்டம் ஓடுவதும்
ஷைத்தானுக்கு கல் எறிவதும் அல்லாஹ்வின் நினைவை நிலை நிறுத்துவதற்காக!" என்று
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
رواه
الإمام أحمد (4462) -واللفظ له- ، والترمذي (959) ، والنسائي (866) عن ابن عمر رضي
الله عنهما ، قال عن استلام الحجر الأسود والركن اليماني في الطواف : سَمِعْتُ
رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : ( إِنَّ
اسْتِلَامَهُمَا يَحُطُّ الْخَطَايَا
) .
قَالَ :
وَسَمِعْتُهُ يَقُولُ : (مَنْ طَافَ أُسْبُوعًا ، يُحْصِيهِ ، وَصَلَّى
رَكْعَتَيْنِ : كَانَ لَهُ كَعِدْلِ رَقَبَةٍ)
.
قَالَ :
وَسَمِعْتُهُ يَقُولُ : (مَا رَفَعَ رَجُلٌ قَدَمًا وَلَا وَضَعَهَا : إِلَّا
كُتِبَتْ لَهُ عَشْرُ حَسَنَاتٍ ، وَحُطَّ عَنْهُ عَشْرُ سَيِّئَاتٍ ، وَرُفِعَ
لَهُ عَشْرُ دَرَجَاتٍ) . حسنه أحمد شاكر والأرناؤؤط في تحقيق المسند .
ولفظ
الترمذي : (لَا يَضَعُ قَدَمًا وَلَا يَرْفَعُ أُخْرَى : إِلَّا حَطَّ اللَّهُ
عَنْهُ خَطِيئَةً ، وَكَتَبَ لَهُ بِهَا حَسَنَةً). وصححه الألباني في "صحيح
الترمذي" .
இப்னு உமர் (ரலி)
அவர்கள் அறிவிக்கின்றார்கள்:-
தவாஃபின் போது ருக்னுல் யமானியில் ஹஜ்ருல் அஸ்வதை
முத்தமிடுவது தொடர்பாக நபி ஸல் அவர்களிடம் கேட்ட போது "ஹஜ்ருல் அஸ்வதை
முத்தமிடுவதால் பாவங்கள் அழிக்கப்படுகிறது" என்று நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
எவர் கணக்கிட்டு
ஏழு முறை தவாஃப் செய்து விட்டு இரண்டு ரக்அத்துகள் தொழுகின்றாரோ அவருக்கு ஒரு
அடிமையை உரிமை விட்ட நன்மை கிடைக்கும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
"தவாஃப்
செய்வதற்காக ஒரு காலை உயர்த்தி இன்னொரு காலை பூமியில் ஒருவர் வைக்கும் முன்பாக
பத்து நன்மைகள் அவருக்கு எழுதப்படுகிறது. பத்து பாவங்கள் மன்னிக்கப்படுகிறது.
பத்து அந்தஸ்துகள் உயர்த்தப்படுகிறது" என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான்
கேட்டேன் என்றும்,
தவாஃப் செய்வதற்காக
ஒரு காலை உயர்த்தி இன்னொரு காலை பூமியில் ஒருவர் வைக்கும் முன்பாக அவரின் ஏட்டில்
இருந்து ஒரு பாவத்தை அல்லாஹ் அழிக்கிறான். ஒரு நன்மையை அல்லாஹ் எழுதுகிறான்"
என்று
நபி (ஸல்) அவர்கள்
கூற நான் கேட்டேன் என்றும் இப்னு உமர் (ரலி) அவர்கள் மூலமாக திர்மிதீ, நஸாயீ,
அஹ்மத் போன்ற கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்ஷா அல்லாஹ்… இதன் தொடர்ச்சி
அடுத்த வாரமும் வரும்…
No comments:
Post a Comment