ஹஜ்:- அமல்களின் குவியல்! நன்மைகளின் பொக்கிஷம்!! தொடர்:-2.
புனித ஹஜ் பயணம்
தொடங்கிவிட்டது. இந்த ஆண்டின் புனித ஹஜ் பயணம் தொடங்கி
விட்டது. உலகின் எட்டுத்திக்கிலிருந்தும் இறையோனின் முதல் இல்லமாம் கஅபாவில் ஹாஜிகள்
குவியத்தொடங்கியுள்ளனர். ஆதம் (அலை) ஆரம்பித்து வைத்த
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் பரிசுத்தமான, கலப்படமற்ற ஹஜ்ஜாக ஆக்கப்பட்டு வரலாற்றில் இது 1435 -ம் ஆண்டாகும்.
சென்ற வாரத்தின் தொடர்ச்சி...
3) ஹரம் ஷரீஃபின் சிறப்பு:-
مسند
البزار = البحر الزخار (10/ 77)
4142- حَدَّثنا إبراهيم بن حُمَيد، قَال: حَدَّثنا
مُحَمد بن يزيد بن شداد، قَال: حَدَّثنا سَعِيد بن سالم القداح، قَال: حَدَّثنا
سَعِيد بْنُ بَشِيرٍ عَنْ إِسْمَاعِيلَ بْنِ عُبَيد اللَّهِ، عَن أُمِّ
الدَّرْدَاءِ، عَن أَبِي الدَّرْدَاءِ، رَضِي اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُول
اللهِ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم: فَضْلُ الصَّلاةِ فِي المسجد الحرام على
غيره مِئَة أَلْفِ صَلاةٍ وَفِي مَسْجِدِي أَلْفُ صَلاةٍ وَفِي مسجد بيت المقدس
خمسمِئَة صَلاةٍ.
السنن
الصغير للبيهقي {ط العلمية} (1/ 456)
1821- وَرُوِّينَا فِي حَدِيثِ أَبِي الدَّرْدَاءِ
وَجَابِرٍ مَرْفُوعًا : فَضْلُ الصَّلاَةِ فِي الْمَسْجِدِ الْحَرَامِ عَلَى
غَيْرِهِ مِئَةُ أَلْفِ صَلاَةٍ ، وَفِي مَسْجِدِي هَذَا أَلْفُ صَلاَةٍ وَفِي
مَسْجِدِ بَيْتِ الْمَقْدِسِ خَمْسُمِئَةِ صَلاَةٍ
அபுத்தர்தா (ரலி)
அவர்கள் கூறியதாக,
அன்னை உம்முத்தர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:-
"மற்ற பள்ளிகளிலும் தொழும் நன்மையை விட) மஸ்ஜிதுல் ஹராமில் தொழுவது ஒரு
இலட்சம் மடங்கு சிறந்தது. எனது பள்ளியில் (மஸ்ஜிதுன்நபவியில்) தொழுவது 1000 மடங்காகும். பைதுல் மக்திஸில் தொழுவது 500 மடங்கு சிறந்தது”
என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்: முஸ்னத் அல்
பஸ்ஸார் )
நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்: என்னுடைய பள்ளி (மஸ்ஜிதுன் நபவி)யில் தொழுவது மற்ற பள்ளிகளில் தொழுகின்ற
ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும். அல் மஸ்ஜிதுல் ஹராம் (கஅபா)வைத் தவிர!
(ஏனென்றால் அதற்கு அதை விட அதிகமான நன்மைகள் உள்ளது.) அறிவிப்பவர்: அபூஹுரைரா
(ரலி) ( நூல்: புகாரி 1190
)
1) முதல் இறையில்லம்..
அகிலத்தின்
நேர்வழிக்கு உரியதாகவும்,
பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட
முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும். (அல்குர்ஆன் 3:96)
அபூதர் (ரலி)
அவர்கள் கூறுகின்றார்கள். “அல்லாஹ்வின் தூதரே! முதலாவது அமைக்கப்; பட்ட மஸ்ஜித் எது? என்று கேட்டேன். (மக்காவில் அமைந்துள்ள) மஸ்ஜிதுல் ஹராம் என்று நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள். அடுத்து எது? எனக் கேட்ட போது
(ஜெரூஸலத்தில் உள்ள) மஸ்ஜிதுல் அக்ஸா எனப் பதிலளித்தார்கள்.” (புஹாரி: 3425)
இந்த இறை வசனம்
மற்றும் ஹதீஸின் அடிப்படையில் உலகில் அமைக்கப்பட்ட முதல் மஸ்ஜித் எனும் சிறப்பு புனித
பைத்துல்லாஹில் ஹரமுக்கு இருக்கின்றது.
2) இறைத் தூதர்களால் கட்டப்பட்ட மஸ்ஜித்
இன்று பூமியில்
இருக்கும் மஸ்ஜித்களில் இறைத்தூதர்களால் கட்டப்பட்ட நான்கே நான்கு மஸ்ஜித்கள்
மட்டுமே உள்ளன.
1)மஸ்ஜிதுல் ஹராம்.
2)மஸ்ஜிதுன் நபவி.
3)பைதுல் முகத்தஸ்.
4)மஸ்ஜிதுல் குபா, இவற்றில் மஸ்ஜிதுன் நபவி, குபா மஸ்ஜித் என்பன நபி (ஸல்) அவர்களால் கட்டப்பட்டன.
3) நன்மை நாடி பயணம் செய்ய அனுமதிக்கப்பட்ட மஸ்ஜித்:
“மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுன் நபவி,
மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று மஸ்ஜித்களைத் தவிர (அதிக நன்மை
நாடி) பயணம் மேற்கொள்ளக் கூடாது என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.” அறிவிப்பவர்: அபூஹுரரா(ரழி) ( நூல்: புகாரி )
4) தஜ்ஜாலிடமிருந்து
பாதுகாக்கப்பட்ட பகுதி:
தஜ்ஜாலின் பித்னா
குறித்து நபியவர்கள் அதிகமதிகம் எச்சரிக்கை செய்துள்ளார்கள். அவ்வாறு
எச்சரிக்கப்படும் போது பல செய்திகளையும் கூறிவிட்டு,
“நான்கு மஸ்ஜித்கள் (இருக்கும் பகுதி) தவிர மற்றைய பகுதியெல்லாம் அவனது
அதிகாரம் வியாபித்திருக்கும். அந்த நான்கு மஸ்ஜித்களாவன, மஸ்ஜிதுல் ஹராம்,
மஸ்ஜிதுர் ரஸுல், மஸ்ஜிதுல் அக்ஸா, தூர் என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.”
அறிவிப்பவர்: ஜுனாதா இப்னு அபூ உமையா(ரஹ்) நூல்: அஹ்மத்: 24083--23683
(ஷுஅய்ப் அல் அர்னாஊத் இந்த அறிவிப்பை ஸஹீஹானது எனக் கூறியுள்ளார்கள்.)
எனவே, தஜ்ஜாலின் பித்னாவிலிருந்து பாதுகாப்புப் பெற விரும்புபவர்கள் தேர்ந்தெடுக்க
வேண்டிய ஒரு இடமாகவும் இது திகழ்கின்றது.
5) அருள்வளம் மிக்க
பகுதி:-
மேலும், உலகிலுள்ள அனைத்துப் பள்ளிகளையும் விட மஸ்ஜிதுல் ஹராம் ''அருள்வளமிக்கது'' (அல்குர்ஆன் 3:96) என்று இறைவன் கூறியிருப்பது, எல்லாப் பள்ளிகளிலும்
தொழுவதைவிட மஸ்ஜிதுல் ஹாராமில் தொழுவது நன்மையை அதிகரிக்கும் என்றே நாம்
விளங்கியுள்ளோம்!
6) பாவம் செய்ய
தடையும்,
மீறினால் தண்டனை என எச்சரிக்கையும்...
புனிதமிக்க மக்கா நகரில் பாவமான காரியங்களைச்
செய்வோருக்குக் கடுமையான வேதனை உள்ளது என அல்லாஹ் எச்சரித்துள்ளான்.
(ஏக இறைவனை) மறுத்தோருக்கும், அல்லாஹ்வின்
பாதையை விட்டும், மஸ்ஜிதுல் ஹராமை விட்டும் தடுத்தோருக்கும், மற்றும் அங்கே அநீதியின் மூலம் குற்றம் புரிய
நாடுவோருக்கும் துன்புறுத்தும் வேதனையைச் சுவைக்கச் செய்வோம். (அல்குர்ஆன் 22:25)
மேலும் நபி (ஸல்)
அவர்கள் கூறுகிறார்கள்:
''அல்லாஹ்விடத்தில் மூன்று நபர்கள் மிகவும்
வெறுப்புக்குரியவர்கள். 1.
ஹரம் ஷரீஃபில் அநீதியின் மூலம் குற்றம் புரிபவன், 2. இஸ்லாத்தில் அறியாமைக் கால நடைமுறையை நாடக்கூடியவன், 3. தகுந்த காரணமின்றி ஒரு உயிரைப் பறிக்க நாடுபவன். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்
(ரலி) நூல்: புகாரி 6882
)
துஆ ஏற்றுக் கொள்ளப்படும் (9) இடங்கள் நிறைந்த ஹரம் ஷரீஃப்...
1. தவாபு
செய்யுமிடத்தில். 2.
முல்தஜிம் என்ற இடத்தில் (ஹஜருல் அஸ்வத்திற்கும் கஃபாவின்
வாசலுக்கும் இடையில் உள்ள இடம்) 3. மீஜாபிற்கு கீழுள்ள இடம்
(மீஜாப் என்பது கஃபாவின் மீதிருந்து தண்ணீர் கீழே விழுவதற்குரிய குழாய்) 4. கஃபாவின் உட்பகுதியில். 5. ஜம்ஜம் கிணற்றின்
அருகில். 6,7.
ஸபா,
மர்வா என்னும் இரு மலைகளின் மீது. 8. ஸபாவிற்கும் மர்வாவிற்கும் இடையே ஸயீ செய்கின்ற இடத்தில். 9. மகாமே இப்றாஹீமுக்குப் பின்னால். 10. அரபா மைதானத்தில்.
11. முஜ்தலிபாவில். 12.
மினாவில். 13, 14, 15 மினாவிலுள்ள ஜம்ராத் எனப்படும் கற்கள் எறியப்படும் மூன்று இடங்களில்.
4) ஹஜருல் அஸ்வத் கல்...
ஹஜருல் அஸ்வத் இதன்
பொருள் ‘கருப்புக்கல்’
என்பதாகும். இது கருஞ்சிவப்பு நிறமாக இருந்தது. அரைவட்ட
வடிவில் உள்ள இது ஆறு அங்குல உயரமும், எட்டு அங்குல அகலமும்
உள்ளதாகும். இது தண்ணீரில் மிதக்கும் தன்மை உடையதாகும்.
ஹஜருல் அஸ்வத்
என்னும் கல்லுக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்றால் கஅபாவை தவாப்
செய்ய (சுற்றி வருவதற்காக) ஒரு துவக்க அடையாளமாகவே ஹஜ்ருல் அஸ்வத் கல் உள்ளது.
ஏனெனில், கஅபாவை தவாப் செய்யும் ஹாஜிகள் முதலில் ஹஜருல் அஸ்வத் கல் இருக்கும்
இடத்திலிருந்து தவாப் (வலம் வருதல்) செய்ய ஆரம்பம் செய்வார்கள்!
இயன்றால் ஹஜருல்
அஸ்வதைத் தொட்டு முத்தமிடட்டும், இயலாவிட்டால்
தூரத்திலிருந்தே ஹஜருல் அஸ்வத் கல்லை நோக்கி கைகளால் சைகை செய்தும் தவாபைத் தொடங்குவார்கள்!
(நூல் : புகாரி : 1603
| திர்மிதி : 793)
நபி (ஸல்) அவர்கள்
இதனை முத்தமிட்டுள்ளார்கள். மேலும் ஒட்டகத்தின் மேல் இருந்தவாறு தம் கைத்தடியால்
தொட்டு கைத்தடியின் நுனியை முத்தமிட்டுள்ளார்கள்.
ஒரு முஸ்லீமைப்
பொறுத்த வரை அது ஒரு கல் நபி (ஸல்) அவர்கள் கூறிய சிறப்பு தவிர்த்து அதனால்
எங்களுக்கு எந்த வித நலவும் அல்லது தீங்கும் அந்த கல்லால் செய்து விட முடியாது!
அதனால் தான் உமர் (ரழி) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்:- "உமர் (ரலி) ஹஜருல்
அஸ்வத் அருகில் வந்து அதை முத்தமிட்டு விட்டு, நீ தீங்கோ, நன்மையோ அளிக்கமுடியாத ஒரு கல் தான் என்பதை நான் நன்கறிவேன்! நபி (ஸல்)
அவர்கள் உன்னை முத்தமிடுவதைக் காணவில்லையென்றால் உன்னை நான் முத்தமிட்டிருக்க
மாட்டேன் என்றார்கள். ( நூல் : புகாரி : 1597 )
நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்:- " மறுமை
நாளில் பார்க்கும் இரு கண்கள் கொண்டதாகவும், பேசும் நாவு கொண்டதாகவும் ஹஜருல் அஸ்வதை (அல்லாஹ்) எழுப்புவான்! யார் இதை
முத்தமிட்டரோ அவருக்காக அது சாட்சி கூறும்!
(நூல் : இப்னு மாஜா : 2944
| திர்மிதி : 961)
ஹஜருல் அஸ்வத் வரலாறு...
நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்:- "ஹஜருல் அஸ்வத் கல் சொர்க்கத்திலிருந்து இறங்கியதாகும்! இது
பாலை விட வெண்மையானதாகும். ஆதமுடைய மக்களின் பாவங்கள் அதைக் கருப்பாக்கி விட்டன. (
நூல் : திர்மிதி :
877 ) (தரம் : ஸஹீஹ் : இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) : ஃபத்ஹுல்-பாரி : 3 / 462)
இன்னொரு அறிவிப்பில்…
“வானத்திலிருந்து ஆதம் நபி (அலை) அவர்கள் இதைக்கொண்டுவந்தனர். அப்பொழுது அது
பாலை விட வெண்மையாக இருந்தது. ஆதமுடைய மக்களின் பாவங்களால் அது கருப்பாகி விட்டது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறி உள்ளார்கள் (ஆதாரம் திர்மிதி).
இந்தக்கல் ஒளி
வீசக்கூடியதாக இருந்தது என்று அது ஒளி பாய்ந்த இடங்கள் வரை புனிதபூமி (ஹரம்) என்று
நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் நிர்ணயித்தார்கள்.
நபி நூஹ் (அலை)
அவர்கள் காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பிரளயத்தின் போது இது அபுகுபைஸ் மலையில் வைத்து
பாதுகாக்கப்பட்டது.
நபி இப்ராஹீம்
(அலை) அவர்கள் கஃபாவை கட்டிய பொழுது ஜிப்ரீல் (அலை) அவர்கள் அதனை கஃபாவின் தென்
கிழக்கு மூலையில் பதித்தார்கள். அது கஃபாவை தவாஃப் செய்வதற்கு துவக்க இடமாக
ஆக்கப்பட்டுள்ளது.
பிறகு பனூ
ஜுர்ஹும் கூட்டத்தார் மக்காவை காலி செய்த பொழுது இதை ஜம்ஜம் கிணற்றுக்குள்
போட்டு புதைத்து விட்டு சென்றனர். பின்னர் நபி (ஸல்) அவர்களின் பாட்டனார் அப்துல்
முத்தலிப் அவர்கள் ஜம்ஜம் கிணற்றைத் தோண்டும் பொழுது இதனை கண்டு பிடித்து
எடுத்து கஃபாவில் இதற்குறிய மூலையில் பதித்தார்கள்.
அண்ணல் நபி (ஸல்)
அவர்களுக்கு 35
வயதானபொழுது கஃபா புனர் நிர்மானம் செய்யப்பட்ட சமயம்
இந்தக்கல்லை அதற்குறிய இடத்தில் எடுத்து வைக்கும் சிறப்பு நபி (ஸல்) அவர்களுக்கே
கிடைத்தது.
ஹஜருல் அஸ்வத் கல்லுக்கு ஏற்பட்ட இரண்டு விபத்துகள்...
ولم يعتر الحجر الأسود نقل أو تغييب من عهد قصي إلى بناء عبد الله بن الزبير وهو أول من ربط الحجر الأسود بالفضة عندما تصدع من الأحداث التي جرت عام (64 هـ) حيث احترقت الكعبة بسبب الحرب بين ابن الزبير الذي تحصَّن داخلها ، وقائد يزيد - الحصين بن النمير- الذي رمى الكعبة بالمنجنيق ، وتطايرت النار وأحرقتها، وتكررت الفعلة سنة (73 هـ) على يد الحَجّاج ، ثم أضاف إليه الخليفة العباسي هارون الرشيد تنقيبه بالماس وأفرغ عليه الفضة
ولعل أفظع
ما مرّ على الحجر الأسود حادثة القرامطة الذين أخذوا الحجر وغيبوه 22 سنة ، وردّ
إلى موضعه سنة 339 هـ ، فلقد غزى أبو طاهر القرمطي القطيف واحتلها واحتل مكة
المكرمة وانتهب الحجر الأسود 317هـ وفي 318هـ تقريبا سن الحج إلى الجش بالأحساء
بوضع الحجر الأسود في بيت كبير في قرية الجش وأمر القرامطة سكان منطقة القطيف
بالحج إلى ذلك المكان ، ولكن الأهالي رفظوا تلك الأوامر ، فقتل القرامطة أناساً
كثيرين من أهل القطيف ولا زالت بعض آثار ذلك البناء باقية وهي عين الجعبة (
الكعبة) وفي ذلك يقول شاعرها المعاصر
ولو لم
تكن من رياض الخلود *** لما زارها الحجر الأسود
ويقال
أن أبا طاهر نقل الحجر الأسود إلى الكوفة خلال عام 330 هـ ولكنه أعيد ثانية إلى
الأحساء
قال ابن
كثير : وفي سنة تسع وثلاثين وثلثمائة في هذه السنة المباركة في ذي القعدة منها رد
الحجر الأسود المكي إلى مكانه في البيت ، وقد بذل لهم ( أي القرامطة ) الأمير بجكم
التركي خمسين ألف دينار على أن يردوه إلى موضعه فلم يفعلوا ، ثم أرسلوه إلى مكة
بغير شيء على قعود فوصل في ذي القعدة من هذه السنة ولله الحمد والمنة وكان مدة
مغايبته عندهم ثنتين وعشرين سنة ففرح المسلمون لذلك فرحا شديدا )
ஹிஜ்ரி 64 இல் ஏற்பட்ட ஒரு விபத்தில் நெருப்பால் இந்தக் கல் மூன்று துண்டுகளாக உடைந்தது.
அதை அப்துல்லாஹ் இபுனு ஜுபைர் (ரலி) அவர்கள் வெள்ளிக்கம்பியால் பிணைத்து இதற்குரிய
இடத்தில் பிணைத்தனர்.
ஹிஜ்ரி 319 -ல் இருந்து ஹஜ்ரி 339
வரை சுமார் 20 ஆண்டுகள்
கராமித்தாக்கள் தான் ஹஜ்ருல் அஸ்வத் கல்லை வைத்து இருந்தார்கள்! 20 ஆண்டுகளாக மக்காவில் ஹஜ்ருல் அஸ்வத் கல் இருக்க வில்லை.
அக்ஸா என்ற
பகுதியை ஷியாக்களின் ஒரு பிரிவிரான கராமித்தாக்கள் சில காலம் ஆட்சி செய்து
வந்தனர்! இவர்கள் தான் மக்காவில் மஸ்ஜித் ஹராமுக்கு உள்ளே நுழைத்து யுத்தம் செய்து
மக்களிடையே கலவரத்தை ஏற்படுத்தி ஹஜ்ருல் அஸ்வத் கல் இருந்து இடத்தில் இருந்து அதை
பெயர்த்து எடுத்து விட்டார்கள்! பின்பு தங்களின் ஆட்சி செய்யும் பகுதிக்கு எடுத்து
சென்று விட்டார்கள்.
அதன் பின்பு
ஷியாக்கள் எடுத்து ஹஜ்ருல் அஸ்வத் கல்லை உடைத்து விட்டார்கள்! பின்பு முஸ்லீம்
சமூகம் கராமித்தாக்கள் உடன் போரிட்டு ஹஜ்ருல் அஸ்வத் கல்லை திரும்ப எடுத்தார்கள்!
அப்போது அது 8
துண்டுகளாக உடைந்து இருந்தது.
உடைந்து போன
ஹஜ்ருல் அஸ்வத் கல்லின் 8
பகுதிகளில் பெரியது பேரீத்தம் பழம் அளவு பெரியதாக
இருக்கும்! மற்றவைகள் பேரீத்தம் பழ கொட்டை அளவுக்கு சிறியதாக
இருக்கும்.
( நூல்: அல் பிதாயா வன் நிஹாயா, 11 /72 & 73 )
5) ஜம் ஜம் நீரின் சிறப்பு:-
நபிகளார் (ஸல்)
கூறினார்கள்: இந்தத் தண்ணீர் அருள் வளம் (பரக்கத்) நிரம்பியதாகவும் உணவாகவும்
நோய்களுக்கு நிவாரணமாகவும் இருக்கின்றது.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி), நூல்:
ஸஹீஹ் முஸ்லிம் 6513,
மற்றோர்
அறிவிப்பில்,
‘பூமியில் உள்ள எல்லா நீரை விடவும் இந்த நீர் சிறந்தது’ என்றும் கூறப்பட்டுள்ளது. அறிவிப்பவர்: இப்னு
அப்பாஸ் (ரலி),
தப்ரானீ 11167, அஸ்ஸஹீஹா 1056)
அல்லாஹ்வின்
தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஜம் ஜம் நீர் எதற்காக
குடிக்கப்படுகிறதோ அதற்கே உரியது." ( நூல்: அஹ்மத்:357,
இப்னு மாஜா:3062)
இதன் பொருள் ஜம்
ஜம் நீர் குடிக்கும் போது ஒருவர் மனதில் என்ன எண்ணத்தோடு அதனை குடிக்கின்றாரோ அதனை
அல்லாஹ்விடமிருந்து பெற்றுக் கொள்வார் என்பதாகும்.
قال أبو
عبد الله محمد بن علي الترمذي وحدثني ابي رحمه الله دخلت الطواف في ليلة ظلماء
فاخذني من البول ماشغلني فجعلت اعتصر حتي اذاني وخفت ان خرجت من المسجد ان اطأ بعض
تلك الاقدام وذلك ايام الحج فذكرت هذا الحديث فدخلت زمزم فتضلعت منه فذهب عني الي
الصباح( تفسير قرطبي)
இமாம் திர்மிதி (ரஹ்)
அவர்கள் தமது தந்தையின் மூலம் அறிவிக்கிறார்கள்:- ஒரு நாள் இருளான இரவில் தவாப்
செய்ய ஹரம் ஷரீபுக்கு சென்றேன் அந்த சமயத்தில் எனக்கு சிறுநீர் கழிக்கும் தேவை
ஏற்பட்டது நான் சிறுநீர் கழிக்காமல் அதை அடக்கிக் கொண்டிருந்தேன் வெளியில்
சென்றால் மக்களின் பாதங்களை மிதித்துக் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படும்
என்பதாலும் அது ஹஜ்ஜூடைய காலம் என்பதாலும் அவ்வாறு செய்தேன் அப்போது இந்த ஹதீஸ்
எனக்கு நினைவிற்கு வந்தது உடனே ஜம் ஜம் கிணற்றுக்குச் சென்று அதன் நீரை வயிறு
நிரம்ப குடித்தேன் அதன் பரக்கத்தால் அடுத்தநாள் காலை வரை எனக்கு சிறுநீர்
கழிக்கும் தேவை ஏற்படவில்லை என்றார்கள். ( நூல்: தப்ஸீர் குர்துபி பாகம் 9 )
காழி அபூபக்ர்
இப்னுல் அரபி அல் மாலிக்கி (ரஹ்) கூறினார்கள்:- “ஹிஜ்ரீ 489- ம் ஆண்டு நான் மக்காவில் இருந்தேன். ஜம்ஜம் தண்ணீரை அதிகளவில் அப்போது
குடித்தேன். குடிக்கும் போதெல்லாம், இறைநம்பிக்கையும், கல்வியும் அதிகரிக்க வேண்டுமென நிய்யத்- எண்ணம் கொண்டேன். அதன் விளைவாக,
அல்லாஹு தஆலா கல்வியை எனக்கு இலகுவாக்கி தன் பரக்கத் -
அருள்வளத்தை திறந்து விட்டான்.
கற்றபடி செயலாற்ற
இறையருளை வேண்ட மறந்து விட்டேன். நான் அவ்விரண்டையும் வேண்டியிருக்க வேண்டுமே!
இரண்டையும் குறையின்றி அல்லாஹ் எனக்கு திறந்து விட்டிருப்பான். இப்போது, செயலை விட அதிகமாக கல்வியில் எனது தேர்ச்சி அமைந்து விட்டது.” ( நூல்:
ரஹ்லத்துல் ஹிஜாஸிய்யா, ஹுழைகீ)
ஜம்ஜம்
நீரை அமர்ந்து கொண்டும்.. நின்று
கொண்டும் குடிக்கலாம்…
أخرج بن
ماجة عَنْ مُحَمَّدِ ابْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ قَالَ كُنْتُ
عِنْدَ ابْنِ عَبَّاسٍ جَالِسًا فَجَاءَهُ رَجُلٌ فَقَالَ مِنْ أَيْنَ جِئْتَ
قَالَ مِنْ زَمْزَمَ قَالَ فَشَرِبْتَ مِنْهَا كَمَا يَنْبَغِي قَالَ وَكَيْفَ :
قَالَ : إِذَا شَرِبْتَ مِنْهَا فَاسْتَقْبِلِ الْقِبْلَةَ وَاذْكُرِ اسْمَ
اللَّهِ وَتَنَفَّسْ ثَلَاثًا وَتَضَلَّعْ مِنْهَا فَإِذَا فَرَغْتَ فَاحْمَدِ
اللَّهَ عَزَّ وَجَلَّ فَإِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ :
"إِنَّ آيَةَ مَا بَيْنَنَا وَبَيْنَ الْمُنَافِقِينَ إِنَّهُمْ لَا
يَتَضَلَّعُونَ مِنْ زَمْزَمَ " .
அப்துல்லாஹ் இப்னு
அப்பாஸ் (ரலி) அவர்களுடன்
அமர்ந்திருந்த ஒரு சபையில்
ஒரு மனிதர் வந்தார்.
வந்தவரிடம் “நீங்கள் எங்கிருந்து
வருகின்றீர்? என்று இப்னு
அப்பாஸ் (ரலி) அவர்கள்
கேட்டார்கள். அதற்கவர், “நான்
ஜம்ஜம் தடாகத்தில் இருந்து
வருகின்றேன்” என்றார். அப்போது,
இப்னு அப்பாஸ் (ரலி)
அவர்கள் “அதைக் குடிக்கும்
முறைப்படி குடித்தீரா?” என்று
கேட்டார்கள். அதற்கவர், “எந்த
முறைப்படி குடிக்க வேண்டும்?”
என்று கேட்டார். அப்போது
இப்னு அப்பாஸ் (ரலி)
அவர்கள் “ஜம்ஜம் தண்ணீரை
நீர் பருகினால் கிப்லாவை
முன்னோக்குவீராக! பிஸ்மில்லாஹ் சொல்வீராக!
மூன்று முறை சுவாசித்து
குடிப்பீராக! வயிறு நிரம்ப
குடிப்பீராக! பின்பு நீர்
அல்லாஹ்வைப் புகழ்வீராக!” என்று
கூறிவிட்டு, நபி {ஸல்}
அவர்கள் நயவஞ்சர்களுக்கும் நமக்கும்
இடையே உள்ள வித்தியாசம்
என்னவென்றால் அவர்கள் ஜம்ஜம்
தண்ணீரை வயிறு நிரம்ப
குடிக்க மாட்டார்கள்” என்று
கூறியதாக கூறினார்கள் என
முஹம்மத் இப்னு அப்துர்ரஹ்மான் இப்னு அபூபக்ர்
(ரலி)
அவர்கள் அறிவிக்கின்றார்கள். ( நூல்:
இப்னு மாஜா )
ஜம் ஜம் நீரை
பிஸ்மில்லாஹ் சொல்லி குடிக்க வேண்டும். கிப்லாவை முன்னோக்கி நின்று கொண்டும்
உட்கார்ந்து கொண்டும் குடிப்பது முஸ்தஹப்பாகும். நின்று கொண்டுதான் குடிக்க
வேண்டும் என்கின்ற கட்டாயம் ஏதுமில்லை. குடிக்கும் போது பின் வரும் துஆவை ஓதுவது சிறப்பாகும்.
اللهم
اني اسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء
அல்லாஹ்வே! நிச்சயமாக!
நான் உன்னிடம் பலன் தரும் கல்வியையும், விசாலமான உணவையு(வாழ்வாதாரத்தையு)ம் எல்லா
நோய்களிலிருந்து சுகத்தையும் வேண்டுகிறேன்!
நான் நபி(ஸல்)
அவர்களிடம் ஜம்ஜம் தண்ணீரில் ஒரு வாளி கொண்டு வந்தேன். அப்போது அவர்கள் அதை நின்று
கொண்டு குடித் தார்கள். ( அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்:
புகாரீ, முஸ்லிம் )
ஜம்ஜம் நீரை
நின்று கொண்டுதான் குடிக்க வேண்டும் என்பதில்லை. நபி(ஸல்) அவர்களைப் போல் நின்று
கொண்டும் குடிக்கலாம் என்பதை அறிகிறோம்.
6) மஸ்ஜிதுந்நபவீயில் தொழுவதன் சிறப்பு
حَدَّثَنَا
عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ قَالَ : أَخْبَرَنَا مَالِكٌ ، عَنْ زَيْدِ بْنِ
رَبَاحٍ وَعُبَيْدِ اللهِ بْنِ أَبِي عَبْدِ اللهِ الأَغَرِّ ، عَنْ أَبِي عَبْدِ
اللهِ الأَغَرِّ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، أَنَّ
النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ : صَلاَةٌ فِي مَسْجِدِي هَذَا خَيْرٌ مِنْ
أَلْفِ صَلاَةٍ فِيمَا سِوَاهُ إِلاَّ الْمَسْجِدَ الْحَرَامَ.
மஸ்ஜிதுல் ஹராமைத்
தவிர ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட எனது பள்ளியில் தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச்
சிறந்ததாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி-1190
ஹஜ் என்பது
ஹஜ்ஜினுடைய காலங்களான ஷவ்வால், துல்கஅதா, துல்ஹஜ் பிறை 10
க்குள் இஹ்ராம் கட்டி துல்ஹஜ் மாதம் பிறை எட்டாம்
நாளிலிருந்து பிறை பதிமூன்று வரை செய்யக் கூடிய வணக்கங்களாகும்.
பிறை 8 - ல் மினாவில் தங்குவது,
பிறை 9 - ல் அரஃபாவில் தங்குவது, பிறை - 9
அரஃபாவுடைய இரவிலிருந்து பிறை - 10 சூரிய உதயத்திற்கு முன்பு வரை முஜ்தலிஃபாவில் தங்குவது, மினாவில் கல்லெறிவது,
குர்பானி கொடுப்பது, தலை முடியை எடுப்பது கஃபாவில் கடமையான தவாஃப் செய்வது, சயீ செய்வது ,பிறகு மூன்று நாட்கள் மினாவில் கல்லெறிவது உள்ளிட்ட அமல்களுக்கு சொல்லப்படும்
பெயர்.
7) அரஃபா தினம் & மைதானம் பற்றிய சிறப்பு..
அரஃபா தினத்தின் சிறப்பு குறித்து அல்குர்ஆனிலும், நபிமொழிக் கிரந்தங்களிலும் ஏராளமான செய்திகள் இடம் பெற்றிருப்பதைக் காண முடிகின்றது.
அரஃபா – பெயர்க்காரணம்…..
هناك عدّة أقوال فيما يخصّ سبب تسمية يوم عرفة بهذا
الاسم، حيث قيل بأنّها سميت بذلك نسبة لتعارف سيدنا آدم على زوجته في تلك المنطقة،
أما الرواية الثانية فهي تعريف جبريلُ إبراهيمَ بمناسك الحج، حيث ذكر الإمام
القرطبي في التفسير وغيره: "وقالوا في تسمية عرفة بهذا الاسم لأنّ الناس
يتعارفون فيه، وقيل لأنّ جبريل عليه السلام طاف بإبراهيم فكان يريه المشاهد فيقول
له: أعرفت أعرفت؟ فيقول إبراهيم عرفت عرفت"، وقيل أيضاً أنّ الاسم بسبب تعارف
الناس فيها، كما قيل بأّن الكلمة مقتبسة من العَرف وهو الطيب؛ كونها تعتبر هذه المنطقة
مقدّسة، ولكن قد يكون تكون الرواية الأكثر تأكيداً هي راوية سيدنا آدم وزوجته.
நமது தந்தை ஆதம் {அலை} அவர்கள் சுவர்க்கத்தில் இருந்து தமது துணைவியாரோடு பூமிக்கு இறக்கப்பட்டதன் பின்னர் நீண்ட காலங்கள் பிரிந்து வாழ்ந்து மீண்டும் ஒருவருக்கொருவர் சந்தித்து அறிமுகம் ஆனது அரஃபாத்தில் இருக்கும் மலைக்குன்றின் அருகே தான். ஆகவே, அரஃபா என பெயர் வந்ததாக கூறப்படுகின்றது.
நபி இப்ராஹீம் {அலை} அவர்களுக்கு ஹஜ்ஜின் கிரியைகளை அல்லாஹ்வின் பேரில் கறுறுக் கொடுக்க வந்த ஜிப்ரயீல் (அலை) அவர்கள் ஒவ்வொன்றையும் கற்றுக் கொடுத்த பின்னர் ”நீங்கள் அறிந்து கொண்டீர்களா?” என்று கேட்டுக் கொண்டே வந்தார்கள்.
இறுதியாக, அரஃபாவில் செய்ய வேண்டிய கிரியைகளை கற்றுக் கொடுத்த பின்னர் மீண்டும்”நீங்கள் அறிந்து கொண்டீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு, இப்ராஹீம் {அலை} அவர்கள் “அரஃப்து” நான் அறிந்து கொண்டேன் என பதில் கூறினார்கள். ஆகவே, அரஃபா என பெயர் வந்ததாக கூறப்படுகின்றது.
ஒவ்வொரு ஆண்டும் ஹஜ்ஜுடைய காலத்தில் லட்சோப லட்ச முஸ்லிம்கள் இன, மொழி, நிற பேதமின்றி ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆகிக் கொள்வதால் அரஃபா என பெயர் வந்ததாகவும் கூறப்படுகின்றது.
அரஃபா தினம் & மைதானம் ஓர் கண்ணோட்டம்…
இது மக்காவிற்கு கிழக்கே 12 கல் தொலைவில் உள்ள மலையாகும்.
அதைச்சுற்றியுள்ள மைதானத்திற்கு சொல்லப்படும் பெயர் அரஃபா ஆகும். அரஃபா மைதானம் சுமார் 8 மைல் நீளமும், 4 மைல் அகலமும் கொண்டதாகும்.
அரஃபா பெருவெளிக்கு “அல் மஷ்அருல் ஹராம்” புனித வழிபாட்டுத் தலம், ”அல் மஷ்அருல் அக்ஸா” கோடியிலுள்ள வழிபாட்டுத்தலம், இலால் மணற்குன்று ஆகிய பெயர்களும் உண்டு.
அரஃபா பெருவெளியின் நடுப்பகுதியில்
அமைந்துள்ள குன்றுக்கு “ஜபலுர் ரஹ்மத்” – அருள் மலை என்று பெயர்.
أنه يوم عيد لأهل الموسم؛ فعن عمر بن الخطاب - رضي
الله عنه - أن رجلاً من اليهود قال له: يا أمير المؤمنين آية في كتابكم تقرؤونها
لو علينا معشر اليهود نزلت لاتخذنا ذلك اليوم عيداً!! قال: أي آية؟ قال: الْيَوْمَ
أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ
الإِسْلاَمَ دِينًا (3) سورة المائدة. قال عمر: قد عرفنا ذلك اليوم والمكان الذي
نزلت فيه على النبي - صلى الله عليه وسلم - وهو قائم بعرفة يوم جمعة"
”ஒரு முறை யூதர்கள் உமர் (ரலி) அவர்களிடம் ”நீங்கள் ஒரு வசனத்தை ஓதி வருகின்றீர்கள்! அது மட்டும் எங்களுக்கு அருளப்பெற்றிருந்தால், அந்த நாளைப் பெருநாளாக கொண்டாடி இருப்போம்” என்று கூறினார்கள்.
அப்போது உமர் (ரலி) அவர்கள் “அது எந்த வசனம்? என்று கேட்டார்கள். அதற்கவர்கள் அல்மாயிதா அத்தியாயத்தின் 3ஆம் வசனத்தொடரில் இடம் பெற்றிருக்கிற “இன்று உங்களது மார்க்கத்தை உங்களுக்காக நான் முழுமையாக்கி விட்டேன்” எனும் வசனம் என்றனர்.
அப்போது, உமர் (ரலி) அவர்கள் “அந்த வசனம் அருளப்பெற்ற நாளையும், அந்த வசனம் அருளப்பெற்ற இடத்தையும், அது அருளப்படும் போது மாநபி {ஸல்} அவர்கள் எங்கே இருந்தார்கள் என்பதையும் நான் அறிவேன்” என்று கூறிவிட்டு “அது அரஃபா ( துல்ஹிஜ்ஜா 9 –ஆவது ) நாளன்று வெள்ளிக்கிழமை அருளப்பெற்றது.
அல்லாஹ் புகழுக்குரியவன்! அவ்விரு நாட்களுமே எங்களுக்குப் பண்டிகை நாட்கள் தான்” என்று கூறினார்கள். ( நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர் )
أن يوم عرفة يوم أقسم الله به، والعظيم لا يقسم إلاّ
بعظيم، فهو اليوم المشهود في قوله تعالى: ﴿ وَشَاهِدٍ وَمَشْهُودٍ ﴾ [البروج: 3].
قال أبو هُرَيْرَةَ رضي الله عنه: قَالَ رَسُولُ
اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ -: "الْيَوْمُ الْمَوْعُودُ
يَوْمُ الْقِيَامَةِ، وَالْيَوْمُ الْمَشْهُودُ يَوْمُ عَرَفَةَ وَالشَّاهِدُ
يَوْمُ الْجُمُعَةِ..."؛ رواه الترمذي وحسنه الألباني.
ويوم عرفة هو الوتر الذي أقسم الله به في قوله: ﴿ وَالشَّفْعِ
وَالْوَتْر ﴾
الفجر: 3]، قال ابن عباس:
"الشفع يوم الأضحى، والوتر يوم عرفة
அரஃபா நாளின் சிறப்புக்கு சிறப்பு சேற்கும் விதமாக அல்லாஹ்வின் இரண்டு வசனங்களை எடுத்துக் கொள்ளலாம்.
ஒன்று அல்புரூஜ் அத்தியாயத்தின் 3ஆம் வசனம், மற்றொன்று அல்ஃபஜ்ர் அத்தியாயத்தின் 3ஆம் வசனம் இவ்விரு வசனத்திலும் அல்லாஹ் அரஃபா தினத்தின் மீது சத்தியமிட்டுக் கூறுகின்றான்.
“வாக்களிக்கப்பட்ட அந்த நாளின் மீது சத்தியமாக! மேலும், பார்க்கின்றவர் மீதும், பார்க்கப்படும் பொருள் மீதும் சத்தியமாக! ( அல்குர்ஆன்: 85: 2, 3 )
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “வாக்களிக்கப்பட்ட நாள் என்பது மறுமை நாள் ஆகும். மஷ்ஹூத் – பார்க்கப்படும் நாள் என்பது அரஃபா நாள் ஆகும். பார்க்கின்ற நாள் என்பது ஜும்ஆ நாள் ஆகும்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: திர்மிதீ )
“வைகறைப் பொழுதின் மீதும், மேலும், பத்து இரவுகளின் மீதும், ஒற்றை மற்றும் இரட்டைகளின் மீதும் சத்தியமாக!” ( அல்குர்ஆன்: 89: 1 – 4 )
இப்னு அப்பாஸ் (ரலி) இந்த வசனத்திற்கு விளக்கம் தருகிற போது, “வைகறை பொழுது என்பது நஹ்ர் உடைய நாளின் வைகறையையும், பத்து இரவுகள் என்பது துல்ஹஜ்ஜுடைய முதல் பத்து நாட்களின் இரவுகளையும், இரட்டை என்பது ஈதுல் அள்ஹா உடைய நாளையும், ஒற்றை என்பது அரஃபா உடைய நாளையும் எடுத்துக் கொள்ளும்!” என்று விளக்கமளித்தார்கள். ( தஃப்ஸீர் இப்னு கஸீர் )
மன்னிப்பு மற்றும் நரக விடுதலையின் நாள்…
أن يوم عرفة هو من أفضل الأيام عند الله... أنه يوم
مغفرة الذنوب والعتق من النار والمباهاة بأهل الموقف، وهذا ما اخبر عنه الصادق
المصدوق سيدنا محمد - صلى الله عليه وسلم -؛ فعَنْ جَابِرٍ
قَالَ:
قَالَ رَسُولُ اللهِ - صلى الله عليه وسلم ِ مَا مِنْ أَيَّامٍ
أَفْضَلُ عِنْدَ اللهِ مِنْ أَيَّامِ عَشْرِ ذِي
الْحِجَّة
فَقَالَ رَجُلٌ: يَا
رَسُولَ اللهِ، هُنَّ أَفْضَلُ أَمْ عِدَّتُهُنَّ جِهَادًا فِي سَبِيلِ اللهِ،
قَالَ: هُنَّ أَفْضَلُ مِنْ عِدَّتِهِنَّ جِهَادًا فِي سَبِيلِ اللهِ، وَمَا مِنْ
يوْمٍ أَفْضَلُ عِنْدَ اللهِ مِنْ يوْمِ عَرَفَةَ يَنْزِلُ اللَّهُ إِلَى السَّمَاءِ
الدُّنْيَا فَيُبَاهِي بِأَهْلِ الأَرْضِ أَهْلَ السَّمَاءِ، فَيَقُولُ: انْظُرُوا
إِلَى عِبَادِي شُعْثًا غُبْرًا ضَاحِينَ جَاؤُوا مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ
يَرْجُونَ رَحْمَتِي، وَلَمْ يَرَوْا عَذَابِي، فَلَمْ يُرَ يَوْمٌ أَكْثَرُ
عِتْقًا مِنَ النَّارِ مِنْ يوْمِ عَرَفَةَ))؛ صحيح ابن حبان
ஜாபிர் (ரலி) அறிவிக்கின்றார்கள்: “ஒரு நாள் மாநபி {ஸல்} அவர்கள் எங்களிடத்தில் ”உலகின் நாட்களில் அல்லாஹ்விடத்தில் மிகச் சிறந்த நாட்கள் துல்ஹஜ் உடைய முதல் பத்து நாட்களாகும்” என்று கூறிய போது, சபையில் இருந்த ஒரு நபித்தோழர் “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் போராடுவதற்காக கழிக்கின்ற நாட்களை விடவுமா மிகச்சிறந்தது?” என்று கேட்டார்.
அதற்கு, மாநபி {ஸல்} அவர்கள் “ஆம்!” என்று பதில் கூறிவிட்டு, அல்லாஹ்விடத்தில் அரஃபா நாளை விடவும் மிகச் சிறந்த நாள் உலகின் நாட்களில் வேறெதுவும் இல்லை என்றார்கள்.
அந்நாளில், அல்லாஹ் உலகின் வானத்திற்கு வருகை தந்து, வானவர்களிடம் அரஃபா தினத்தன்று ஒன்று கூடியிருக்கின்றவர்களைப் பற்றி பெருமை பாராட்டி பேசுகின்றான்.
இதோ! என் அடியார்களைப் பாருங்கள்! என்னுடைய அருளை ஆதரவு வைத்து வெகு தூரமான இடங்களில் இருந்து “தலைவிரி கோலத்தோடு, புழுதி படிந்த நிலையில் இங்கு குழுமியிருக்கின்றார்களே!” என்று அல்லாஹ் கூறுவான்” என்று கூறிய மாநபி {ஸல்} அவர்கள் “(அன்றைய) அரஃபா நாளில் அல்லாஹ் நரகில் இருந்து விடுவிப்பது போன்று வேறெந்த நாளிலும் விடுவிப்பதில்லை” என்று கூறினார்கள். ( நூல்: ஸஹீஹ் இப்னு ஹிப்பான் )
ஹஜ் முழுமை பெற….
أن الله جعل الوقوف بعرفة
ركن من أركان الحج بل هو أهمهما فقد قال - صلى الله عليه وسلم -: (الحج عرفة) قال
ابن رشد: "أجمعوا على أنه ركن من أركان الحج، وأن من فاته فعليه حج
قابل"، وقال ابن قدامة المقدسي: "والوقوف ركن لا يتم الحج إلا به
إجماعاً".
அரஃபா மைதானத்தில் ஹாஜிகள் துல்ஹஜ் பிறை 9 இல் மாலை வரைத்தங்க வேண்டும். இது ஹஜ்ஜின்
முக்கிய கடமை (பர்ளு) ஆகும். எவரேனும் சிறிது நேரமாவது இங்கு தங்கவில்லை என்றால்
ஹஜ் முழுமை பெறாது என்பதை உணர்த்தும் முகமாக “ஹஜ்
என்றால் அரஃபாவில் தங்குவது தான்” என மாநபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
ரப்பின் முதல் அறிமுகம் கிடைத்த இடம்...
أن الله أخذ فيه الميثاق؛ فعن ابن عباس عن النبي -
صلى الله عليه وسلم - قال: (إن الله أخذ الميثاق من ظهر آدم بنعمان - يعني يوم
عرفة -، وأخرج من صلبه كل ذرية ذرأها فنثرهم بين يديه كالذر، ثم كلمهم قُبلاً قال:
أَلَسْتَ بِرَبِّكُمْ قَالُواْ بَلَى شَهِدْنَا أَن تَقُولُواْ يَوْمَ
الْقِيَامَةِ إلى يقوله: بِمَا فَعَلَ الْمُبْطِلُونَ
سورة الأعراف(172-173)
“அல்லாஹ் நுஃமான் எனப்படும்
அரஃபா பெருவெளியில் ஆதம் {அலை} அவர்களின்
முதுகுத்தண்டிலிருந்து உறுதிமொழி பெற்றான். அதாவது, அவரது
முதுகுத்தண்டிலிருந்து தான் படைத்த அனைத்து வழித்தோன்றல்களையும் வெளியோக்கினான்.
பிறகு தனக்கு முன்னால் அவர்களை அணுக்களைப் போன்று பரப்பினான்.
பின்னர், அவர்களை
நோக்கி “ நான் உங்கள் இறைவன் அல்லவா?” என்று
கேட்டான். ஆம்! நாங்கள் நீதான் எங்கள் இறைவன் என சாட்சியமளிக்கின்றோம்” என்றனர்” என மாநபி {ஸல்}
அவர்கள் கூறினார்கள். ( நூல்: இப்னு கஸீர் )
8) மழித்துக் கொள்பவருக்கு மன்னிப்பு
1727- حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ ، أَخْبَرَنَا مَالِكٌ ، عَنْ
نَافِعٍ ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ
رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ
:
اللَّهُمَّ
ارْحَمِ الْمُحَلِّقِينَ قَالُوا وَالْمُقَصِّرِينَ يَا رَسُولَ اللهِ قَالَ
اللَّهُمَّ ارْحَمِ الْمُحَلِّقِينَ قَالُوا وَالْمُقَصِّرِينَ يَا رَسُولَ اللهِ
قَالَ وَالْمُقَصِّرِينَ.
وَقَالَ
اللَّيْثُ : حَدَّثَنِي نَافِعٌ رَحِمَ اللَّهُ الْمُحَلِّقِينَ مَرَّةً ، أَوْ
مَرَّتَيْنِ.
قَالَ
وَقَالَ عُبَيْدُ اللهِ ، حَدَّثَنِي نَافِعٌ وَقَالَ فِي الرَّابِعَةِ
وَالْمُقَصِّرِينَ.
நபி (ஸல்) அவர்கள்
தமது ஹஜ்ஜின் போது தலையை மழித்தார்கள். அவர்கள், “இறைவா! தலையை மழித்துக் கொள்பவர்களுக்கு நீ கருணை புரிவாயாக!” என்று கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும்” என்று தோழர்கள் கூறினர். பிறகு நபி (ஸல்) அவர்கள், “இறைவா! தலையை மழித்துக் கொள்பவர்களுக்கு நீ கிருபை செய்வாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். “அல்லாஹ்வின் தூதரே! முடியைக்
குறைத்துக் கொள்பவர்களுக்கும்” என்று தோழர்கள் கூறினர்.
நபி (ஸல்) அவர்கள்,
“முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும்” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),
நூல்: புகாரி-1727
ஒரு ஹஜ் அல்ல... மீண்டும் மீண்டும் ஹஜ் செய்ய
ஆசைப்படுவோம்!!!
ஹஜ்ஜுடைய வணக்கங்கள்
மற்றும் வழிபாடுகள் அதன் மூலம் கிடைக்கும் அபரிமிதமான நன்மைகள் மற்றும் கூலிகளை
கவனத்தில் கொண்டு மேன்மக்களான ஸலஃபுகள் வாழும் காலத்தில் மூன்றில் இரண்டு பங்கு
இன்னும் சிலர் அதை விட கூடுதலாக ஹஜ் செய்திருக்கின்றார்கள்.
எனவே, நாம்
தான் ஒரு முறை ஹஜ் செய்து விட்டோமே ஃபர்ளை நிறைவேற்றி விட்டோமே என்று இருந்து
விடக் கூடாது. மாறாக, உளத் தூய்மையோடு அல்லாஹ்விடம் அழுது
மன்றாடி மீண்டும் மீண்டும் ஹஜ் செய்ய ஆசையுடன் துஆ செய்ய வேண்டும். அல்லாஹ்
ரப்புல் ஆலமீன் வாய்ப்பளிக்கும் போது இரண்டாம் முறையாக மூன்றாவது முறையாக என்று
ஹஜ் செய்து கொண்டே இருக்க வேண்டும்
அல்லாஹ் நம் அனைவருக்கும் ஹஜ்ஜை நஸீபாக்குவானாக!!
ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!!
الأصل
أن كثرة الحج والعمرة مرغب فيها شرعا، وقد دلت على ذلك نصوص كثيرة منها:
அடிப்படையில் ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஹஜ் மற்றும் உம்ராவை அதிகமாக செய்வது குறித்து மார்க்கத்தில் அதிகம்
ஆர்வமூட்டப்பட்டுள்ளது. அது சம்பந்தமாக பல்வேறு நபிமொழிகள் காணக் கிடைக்கின்றன.
- حديث عبد الله بن مسعود قال: قال رسول الله صلى الله عليه وسلم: «تابعوا بين الحج والعمرة؛ فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكير خبث الحديد والذهب والفضة، وليس للحجة المبرورة ثواب إلا الجنة».
தொடர்படியாக ஹஜ்
மற்றும் உம்ரா செய்து வாருங்கள்! ஏனெனில், அவ்விரண்டும் வறுமையையும்
பாவத்தையும் நம்மை விட்டு அகற்றி விடுகின்றது. பொற்கொல்லனின் நெருப்பு தங்கத்தின் மீதும் வெள்ளியின் மீதும் இரும்பின் மீதும் படிந்திருக்கும் அழுக்குகளை அகற்றி
விடுவது போல. மேலும்,
ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜிற்கு சுவனத்தை தவிர கூலி வேறேதும்
இல்லை" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
- وعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: «من حج هذا البيت فلم يرفث ولم يفسق رجع كما ولدته أمه».
உடலுறவு கொள்ளாமல், தீயகாரியங்களில் ஈடுபடாமல் யாரேனும் ஹஜ் செய்தால் அன்று பிறந்த பாலகன் போன்று
பாவமற்றவராக அவர் திரும்புகிறார்.” என நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம்
- وعن أبي
هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال: «العمرة إلى العمرة كفارة لما بينهما،
والحج المبرور ليس له جزاء إلى الجنة».
ஒரு உம்ராச்
செய்துவிட்டு மற்றொரு உம்ராச் செய்வது அவ்விரண்டுக்கும் இடைப்பட்ட காலங்களில்
ஏற்பட்ட பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சுவர்க்கத்தை
தவிர வேறு கூலி இல்லை.”
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :
அபூஹுரைரா (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத்,
நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா.
- وعن أبي هريرة قال: سئل رسول الله صلى الله عليه وسلم أي
الأعمال أفضل؟ قال: «إيمان بالله» قال: ثم ماذا؟ قال: «الجهاد في سبيل الله» قال:
ثم ماذا؟ قال: «حج مبرور».
அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்களிடம் "அமல்களில் மிகச் சிறந்த அமல் எது? என்று ஒருவர் கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் "அல்லாஹ்வை நம்பிக்கை
கொள்வது" என்றார்கள். மீண்டும் எது மிகச் சிறந்த அமல்? என்று அவர் வினவவே,
அல்லாஹ்வின் மார்க்கத்தை நிலை நாட்டும் நோக்கோடு
அல்லாஹ்வின் பாதையில் போரிடுவது" என்றார்கள். மீண்டும் அவர் எது மிகச் சிறந்த அமல்? என்று கேட்கவே, நபி (ஸல்) அவர்கள் "ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்" என்று
பதிலளித்தார்கள்.
- وعن عائشة أم المؤمنين رضي الله عنها أنها قالت: يا رسول الله نرى الجهاد أفضل العمل أفلا نجاهد؟ قال: «لا لكن أفضل الجهاد حج مبرور».
அன்னை ஆயிஷா (ரலி)
அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதரே! ஜிஹாத்
செய்வதை பெண்களாகிய நாங்கள் மிகச் சிறப்பான அமலாக கருதுகின்றோம்?" ஆகவே,
நாங்கள் ஜிஹாதில் பங்கேற்கலாமா?" என்று கேட்ட போது இல்லை, ஜிஹாதில் சிறந்தது
ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ் ஆகும்" என்று நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
قال:
فسافر الأسود ثمانين ما بين حجة وعمرة لم يجمع بينهما، وسافر عبد الرحمن بن
الأسود ستين ما بين حجة وعمرة لم يجمع بينهما.
அஸ்வத் (ரஹ்) அவர்கள் 80 ஹஜ்
மற்றும் உம்ரா செய்திருக்கின்றார்கள். அவர்களின் மகனார் அப்துர்ரஹ்மான் (ரஹ்)
அவர்கள் 60 ஹஜ் மற்றும் உம்ரா செய்திருக்கின்றார்கள்.
ஹஜ்ஜையும் உம்ராவையும் தனித்தனியாக செய்திருக்கிறார்கள்.
- قال أبو إسحاق السبيعي: «جمع الأسود بن يزيد بين
ثمانين حجة وعمرة، وجمع عمرو بن ميمون بين ستين حجة وعمرة».
- وقال ابن شوذب: «شهدت جنازة طاووس بن كيسان بمكة سنة ست ومائة فسمعتهم
يقولون: رحمك الله يا أبا عبد الرحمن، حج أربعين حجة».
அபூ இஸ்ஹாக்
(ரஹ்) அவர்கள் கூறினார்கள்:-அஸ்வத்
இப்னு யஸீத் (ரஹ்)
80 ஹஜ்
மற்றும் உம்ரா சேர்த்து
செய்திருக்கின்றார்கள்.
அம்ர் இப்னு மைமூன்
(ரஹ்) அவர்கள் 60 ஹஜ்
மற்றும் உம்ரா சேர்த்து
செய்திருக்கிறார்கள்.
தாவூஸ் இப்னு
கைஸான் (ரஹ்) அவர்களின்
ஜனாஸாவின் போது மக்கள்
"அபூ அப்துர்ரஹ்மான் அவர்களே!
அல்லாஹ் உங்களுக்கு அருள்
புரிவானாக! 40 ஹஜ் செய்திருக்கின்றீர்கள்"! என்று
துஆ செய்து இரங்கல்
தெரிவித்தனர் என இப்னு
ஷூஃதப் (ரஹ்) அவர்கள்
கூறினார்கள்.
قال ابن
أبي ليلى: وكان عطاء قد حج سبعين حجة، وعاش مائة سنة.
இப்னு அபீ லைலா
(ரஹ்) அவர்கள் கூறினார்கள்:- நூறு ஆண்டுகள் வாழ்ந்த அதாவு
இப்னு அபீ ரபாஹ் (ரஹ்) அவர்கள் 70 ஹஜ் செய்துள்ளார்கள்.
- قال
الحسن بن عمران – ابن أخي سفيان بن عيينة -: حججت مع عمي سفيان آخر حجة حجها سنة
سبع وتسعين ومائة فلما كنا بجمع وصلى استلقى على فراشه، ثم قال: فد وافيت هذا
الموضع سبعين عاما أقول في كل سنة: اللهم! لا تجعله آخر العهد من هذا المكان، وإني
قد استحييت من الله من كثرة ما أسأل ذلك، فرجع فتوفي في السنة الداخلة يوم السبت
أول يوم من رجب سنة ثمان وتسعين ومائة ودفن بالحجون... وتوفي وهو ابن إحدى وتسعين
سنة
ஸுஃப்யான் இப்னு உயைனா
(ரஹ்) அவர்களின் சகோதரர் மகன் ஹசன் இப்னு இம்ரான் இப்னு உயைனா (ரஹ்) அவர்கள்
கூறுகிறார்கள்:- ஹிஜ்ரி 198
-ம் ஆண்டு எனது சிறிய தந்தையுடன் ஹஜ் செய்ய சென்றிருந்த போது ஒரு
இடத்தில் தொழுது விட்டு படுக்கையில் அமர்ந்திருந்த என் சிறிய தந்தை இதோ இந்த
இடத்திற்கு நான் 70 ஆண்டுகள் வந்து விட்டேன். ஒவ்வொரு
ஆண்டும் நான் இந்த இடத்தில் இருந்து அல்லாஹ்விடம் "அல்லாஹ்வே! இந்த ஆண்டோடு
நான் ஹஜ்ஜை நிறைவு செய்யும் ஆண்டாக அமைத்து விடாதே!" என்று துஆ செய்வேன்.
ஆனால், "என் ரப்பிடம் நான் தொடர்ந்து இங்கு வர
வேண்டும் என்று கேட்பதற்கு எனக்கு வெட்கமாக இருக்கிறது" என்று கூறினார்கள். ஹஜ்ஜை முடித்து அங்கிருந்து ஊர் வந்த பிறகு ஹிஜ்ரி 199 -ம் ஆண்டு ரஜப் மாதத்தில் தங்களுடைய 91 வயதில்
வஃபாத் ஆனார்கள்.
وقال
سحنون الفقيه: كان عبد الله بن وهب قد قسم دهره أثلاثا: ثلثا في الرباط،
وثلثا يعلم الناس بمصر، وثلثا في الحج، وذكر أنه حج ستا وثلاثين حجة.
அப்துல்லாஹ் இப்னு
வஹப் (ரஹ்) அவர்கள் தங்களுடைய ஒரு வருஷத்தை மூன்று பகுதிகளாக பிரித்து
விடுவார்கள். ஒரு பகுதி இரவு வணக்கங்களுக்காக. இரண்டாம் பகுதியை அவர்கள் வாழ்ந்த
மிஸ்ரில் கல்விச் சேவைகளுக்காக. மூன்றாம் பகுதியை ஹஜ்ஜுக்காக. இப்படியாக அவர்கள்
தங்களது வாழ்நாளில் முப்பத்து ஆறு ஹஜ் செய்திருக்கிறார்கள்.
-
وعن محمد بن سوقة قال: قيل لمحمد بن المنكدر: تحج وعليك دَيْن؟ قال:
الحج أقضى للدين ـ قال: يعني إذا حججت قضى الله عني ديني -.
முஹம்மது இப்னு
முன்கதிர் (ரஹ்) அவர்களிடம் நீங்கள் உங்களுக்கு கடன் இருக்கும் நிலையில் ஹஜ்
செய்கின்றீர்களே?
என்று கேட்கப்பட்ட போது நான் ஹஜ் செய்வதே கடனை அடைப்பதற்காக தான்
என்றார்களாம். அதாவது, நான் ஹஜ் செய்வதால் அல்லாஹ் என்
கடனை (அடைப்பதற்குரிய பொருளாதார வளத்தை, அந்த பொருளாதார
வளத்தில் பரக்கத்தை தந்து) நிறைவேற்றி விடுகிறான்".இப்படியாக அவர்கள் தங்களது வாழ்நாளில்
நாற்பதுக்கும் மேற்பட்ட ஹஜ் செய்திருக்கின்றார்கள்.
وممن
ذكر أنه حج أكثر من أربعين حجة: سعيد بن المسيب، ومحمد بن سوقة، وبكير بن عتيق،
وابن أبي عمر العدني، وسعيد بن سليمان، وجعفر الخلدي، والعباس بن سمرة أبو الفضل
الهاشمي، وأيوب السختياني، وهمام بن نافع، ومكي بن إبراهيم وغيرهم كثير..
ஸயீத் இப்னுல்
முஸய்யப்,
முஹம்மது இப்னு ஸவ்கா, புகைர் இப்னு
அதீக், இப்னு அபூ அம்ருல் அத்னீ, ஸயீத் இப்னு ஸுலைமான், ஜஅஃபருல் குல்தீ,
அப்பாஸ் இப்னு ஸம்ரா அபுல் ஃபள்லுல் ஹாஷிமீ, அய்யூப் அஸ் ஸக்தியானீ, ஹுமாம் இப்னு நாஃபிஉ,
மக்கீ இப்னு இப்ராஹீம் (ரஹிமஹுமுல்லாஹு அலைஹிம்) ஆகியோரும்
நாற்பதுக்கும் மேற்பட்ட ஹஜ் செய்திருக்கின்றார்கள்.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மீண்டும் மீண்டும் ஹஜ் செய்யும்
பாக்கியத்தை நம் அனைவருக்கும் தந்தருள் புரிவானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!
வஸ்ஸலாம்!!!
அஸ்ஸலாமு
அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு...
بِسْمِ
اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
மஸாபீஹுல்
மிஹ்ராப் தளத்தில் பதிவு செய்யப்பட்ட துல்ஹஜ் மாத (பழைய) கட்டுரைகள்.
1. சிறப்பு தினங்கள் (துல்ஹஜ் பத்து நாட்கள்)
https://vellimedaiplus.blogspot.com/2017/08/blog-post_17.html?m=1
2. அரஃபா தின சொற்பொழிவு
https://vellimedaiplus.blogspot.com/2014/10/blog-post.html?m=1
3. அரஃபா தின சொற்பொழிவு
https://vellimedaiplus.blogspot.com/2017/08/blog-post_31.html?m=1
4. உள்ஹிய்யா அதன் சட்டங்களும், சிறப்புகளும்
https://vellimedaiplus.blogspot.com/2015/09/blog-post_46.html?m=1
5. ஹஜ் - உள்ஹிய்யா அல்லாஹ் எதிர்பார்ப்பது?
https://vellimedaiplus.blogspot.com/2014/09/blog-post_25.html?m=1
6. இப்ராஹீமிய குடும்பம் அமைப்போம்!
https://vellimedaiplus.blogspot.com/2015/09/blog-post_23.html?m=1
7. இஸ்லாத்தை தந்த இறைவனுக்காக..
https://vellimedaiplus.blogspot.com/2015/09/blog-post_65.html?m=1
8. உளப்பூர்வமாக அமல்கள் செய்வோம்.
https://vellimedaiplus.blogspot.com/2021/07/blog-post_22.html?m=1
9. வணக்க வழிபாடுகள் சடங்கு அல்ல.
https://vellimedaiplus.blogspot.com/2021/07/blog-post_15.html?m=1
10. ஈமானிய வாழ்வின் திறவுகோல் தியாகம்
https://vellimedaiplus.blogspot.com/2014/10/blog-post_5.html?m=1
11. தியாகிகள் மறக்கப்படுவதில்லை
https://vellimedaiplus.blogspot.com/2013/10/blog-post_13.html?m=1
12. உடமைகளும், தியாகமும்
https://vellimedaiplus.blogspot.com/2013/10/blog-post_14.html?m=1
13. வெற்றுக் கல் அல்ல அது
https://vellimedaiplus.blogspot.com/2018/07/?m=1
14. ஹஜ் செய்ய ஆசைப்படுவோம்.
https://vellimedaiplus.blogspot.com/2018/07/blog-post_12.html?m=1
15. ஹஜ் விரைவும் தாமதமும்
https://vellimedaiplus.blogspot.com/2019/07/blog-post.html?m=1
16. தனித்துவம் வாய்ந்த ஹஜ்
https://vellimedaiplus.blogspot.com/2016/08/blog-post.html?m=1
17. குர்பானி சந்தேகங்களும், தெளிவுகளும்.
https://vellimedaiplus.blogspot.com/2016/09/blog-post_7.html?m=1
18. இறைக்காதலுக்கு இலக்கணம்
https://vellimedaiplus.blogspot.com/2016/09/blog-post.html?m=1
19. இப்ராஹீம் அலை வாழ்வு தரும்
பாடங்கள்
https://vellimedaiplus.blogspot.com/2021/07/blog-post.html?m=1
20. அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற்றுத்த்ரும்
அற்புதமான வாய்ப்பே துல்ஹஜ் முதல் பத்து நாட்கள்!!!
https://vellimedaiplus.blogspot.com/2018/08/blog-post_9.html?m=1
இன்னும் சில
கட்டுரைகள் உண்டு. எனினும் இது போதுமானதாகும்.
மஸாபீஹுல்
மிஹ்ராப்
பஷீர் அஹமது
உஸ்மானி.
08/06/2023 தொடர்பு எண்: 9789258041
மாஷா அல்லாஹ் அருமையான பதிவு ஹஜ்ரத் அவர்களுக்கு அல்லாஹுத்தஆலா ஈருலக நற் பாக்கியங்களை தந்தருள் புரிவானாக ஆமீன்
ReplyDeleteகூட்டுக் குர்பானி இன்றளவில் ஒரு வியாபாரமாக மாறியுள்ளது.அதைப்பற்றி சிறிது விரிவாக எழுதி,உலமாக்கள் அதைப்பேசினால் நன்றாக இருக்கும்.
ReplyDeletehttps://vellimedaiplus.blogspot.com/2021/07/blog-post_15.html?m=1
Deleteஇந்த தலைப்பில் பார்க்கவும்