மகத்தான கூலிகளைப் பெற்றுத் தரும் சிறப்பு தினங்கள்!!
துல்ஹஜ் முதல்
பத்து நாட்கள் ஒரு முஸ்லிம் உடைய வாழ்க்கையில் கிடைக்கும் நாட்களில் மகத்தான
நாட்களாகும்.
وَالْفَجْرِ
وَلَيَالٍ عَشْرٍ الفجر: 1-2
துல்ஹஜ் மாதத்தின்
முதல் பத்து நாட்களைப் பற்றி அல்லாஹ் இப்படிக்கூறுகிறான். “காலத்தின் மீது சத்தியமாக மேலும் பத்து இரவுகளின் மீது சத்தியமாக” என்று 89
அல் ஃபஜ்ர் அத்தியாயத்தில் குறிப்பிடுகிறான்.
எனவே, படைத்த இறைவனே சத்தியமிட்டுக் கூறி இந்த நாட்களின் கண்ணியத்தை
உணர்த்துகின்றான்.
பத்து இரவுகள்
என்று இங்கு குறிப்பிடுவது துல் ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களின் இரவுகளாகும்.
என இமாம் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் "இப்னு அப்பாஸ் (ரலி), இப்னு சுபைர் (ரஹ்),
முஜாஹித் (ரஹ்)," போன்ற அறிஞர்களின் கூற்றை ஆதாரமாக குறிப்பிடுகின்றார்கள். ( இப்னு கஸீர் : 8
/ 413 )
وَيَذْكُرُوا
اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَعْلُومَاتٍ
“அல்லாஹ்வின் பெயரை
குறிப்பிட்ட
நாட்களில் அவர்கள் கூறுவதற்காகவும் …. 22:28 என்ற வசனத்திற்கு விளக்கம் தருகிற போது இப்னு அப்பாஸ் (ரலி)
கூறினார்கள்: ”குறிப்பிட்ட நாட்கள் என்பது துல் ஹஜ்
மாதத்தின் முதல் பத்து நாட்கள் ஆகும். ( நூல்: தஃப்ஸீர்
இப்னு கஸீர் )
அல்லாஹ்வுக்கு மிகவும் உவப்பான நாட்களும் மிகவும் பிரியமான அமல்களும்...
فعن ابن
عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال: (ما من أيام أعظم عند الله
ولا أحب إليه العمل فيهن من هذه الأيام العشر، فأكثروا فيهن من التهليل والتكبير
والتحميد) [رواه أحمد
“உலக நாட்களில் மிகவும்
அமலகள் செய்வதில் அல்லாஹ்வுக்கு மிகவும் உவப்பான நாட்கள் துல்ஹஜ் பத்து
நாட்களாகும். இதுபோல் வேறு எந்நாட்களும் இல்லை! எனவே இந்த நாட்களில் ‘லா இலாஹ இல்லல்லாஹு‘
என்றும் ‘அல்லாஹு அக்பர்‘ என்றும் ‘அல்ஹம்துலில்லாஹ்‘
என்றும் அதிகமதிகமாகச் சொல்லுங்கள்”. (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி); நூலகள்: முஸ்னத் அஹ்மத், தப்ரானி)
عن ابن
عباس رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: (ما من أيام العمل
الصالح فيها أحب إلى الله من هذه الأيام ـ يعني أيام العشر ـ قالوا: يا رسول الله،
ولا الجهاد في سبيل الله؟ قال: ولا الجهاد في سبيل الله، إلا رجل خرج بنفسه وماله
ثم لم يرجع من ذلك بشيء) [رواه البخاري
“துல்ஹஜ் மாதத்தில் முதல் 10 நாட்களில் செய்யப்படும் நல் அமல்களைப்போல அல்லாஹ்விற்கு பிரியமான அமல் வேறு
இல்லை” என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்பொழுது, ‘அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வதையும் விடவா?’ என நபித்தோழர்கள் கேட்டார்கள்.
“ஆம்! அல்லாஹ்வின்
பாதையில் போர் செய்வதை விடவும்தான். என்றாலும் போரில் உயிரையும், பொருளையும் தியாகம் செய்து வீர மரணமடைந்தவரைத் தவிர” என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரழி); நூல் : புகாரி
இப்படியாக
அல்லாஹ்வால் சிறப்பித்துக் கூறப்பட்ட நாட்கள் தான் துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து
நாட்கள்.
قال
الحافظ ابن حجر في الفتح: والذي يظهر أن السبب في امتياز عشر ذي الحجة لمكان
اجتماع أمهات العبادة فيه، وهي الصلاة والصيام والصدقة والحج، ولا يتأتى ذلك في
غيره
இப்னு ஹஜர் (ரஹ்)
அவர்கள் கூறுகிறார்கள்: ”துல் ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களின் சிறப்புக்குக் காரணம்
இஸ்லாத்தின் அனைத்து முக்கிய வணக்க வழிபாடுகளும் இந்நாட்களில் ஒருங்கே
அமைந்திருப்பது தான் காரணமாகும்.
இறைநம்பிக்கை கொண்ட
நிலையில் தொழுகை, நோன்பு, தர்மம்,
ஹஜ் ஆகிய யாவும் இந்நாட்களில் நிறை வேற்றப்படுகின்றன! இந்த நிலை
வேறு எந்த நாட்களிலும் அமைவதில்லை! எனவே நாம் இந்நாட்களில் பின் வரும்
நல்அமல்களில் அதிக கவனம் செலுத்துவது சிறப்பாகும். ( நூல்: ஃபத்ஹுல்
பாரி : 2 / 534 )
كانوا
سلفنا الصالحين يعظمون هذه الأيام ويقدرونها حق قدرها، وقد روي عن أنس بن
مالك رضي الله عنه أنه قال: «كان يقال في أيام العشر: بكل يوم ألف يوم، ويوم عرفة
بعشرة آلاف يوم»، يعني في الفضل، وروي عن الأوزاعي قال: «بلغني أن العمل في يوم من
أيام العشر كقدر غزوة في سبيل الله، يصام نهارها ويحرس ليلها».
ஸலஃபுலகளான
ஸஹாபாக்கள் மற்றும் ஸாலிஹீன்கள் துல்ஹஜ் உடைய முதல் பத்து நாட்களை அமல்களால்
மிகவும் கண்ணியப் படுத்தக் கூடியவர்களாக இருந்தார்கள்.
அனஸ் இப்னு மாலிக்
(ரலி) அவர்கள் கூறுவார்களாம்:- துல்ஹஜ் முதல் பத்து நாட்களின் ஒரு நாள் என்பது
ஆயிரம் நாட்களுக்கு சமமானதாகும். அரஃபா நாள் பத்தாயிரம் நாட்களுக்கு சமமானதாகும்.
அவ்ஜாயீ (ரஹ்)
அவர்கள் "துல்ஹஜ் முதல் பத்து நாட்கள் செய்யப்படும் அமலாகிறது இரவெல்லாம்
நின்று வணங்கி பகலெல்லாம் நோன்பு நோற்றவராக அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக
போர்க்களத்தில் போராடும் ஒருவருக்கு ஒப்பானதாகும்" என்று கூறினார்கள். (
நூல்: லதாயிஃபுல் மஆரிஃபு )
قال أبو
عثمان النهدي كما في لطائف المعارف: "كان السلف ـ يعظّمون ثلاثَ عشرات: العشر
الأخير من رمضان، والعشر الأول من ذي الحجة، والعشر الأول من المحرم»
அபூ உஸ்மான் அல்
ஹிந்தீ ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்: ஸலஃபுகளான மேன்மக்கள்
மூன்று பத்து நாட்களை
வணக்க வழிபாடுகளால் கண்ணியப்படுத்துவார்கள்: ரமலானின் கடைசி
பத்து நாட்கள்,
துல்ஹஜ்ஜின் முதல் பத்து நாட்கள், முஹர்ரம் முதல் பத்து நாட்கள் ஆகும்.
முதல் 10 நாட்களை தக்பீர் கூறுவதன் மூலம் சிறப்பிக்க
வேண்டும்..
“துல்ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல்
அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்
பிரியமானவைகளாக இல்லை. ஆகவே, ‘லாஇலாஹா
இல்லல்லாஹ்‘, ‘அல்லாஹு அக்பர்‘, ‘அல்ஹம்துலில்லாஹ்‘ போன்ற திக்ருகளை அதிகமாக செய்யுங்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்: அஹ்மத் )
“இப்னு உமர் (ரலி) அபூஹுரைரா (ரலி) ஆகிய இரு நபித்தோழர்களும்
துல்ஹஜ் (மாதம் ஆரம்ப) பத்து தினங்களிலும் கடைவீதிகளுக்கு செல்லும் போதெல்லாம்
தக்பீர் கூறுவார்கள் இவ்விருவரும் கூறுவதை கேட்கின்ற மற்ற மக்களும் தக்பீர்
கூறுவார்கள்.”
ஆதாரம் – புஹாரி.
துல்ஹஜ் முதல் 9 நாட்களும் நோன்பு நோற்பது…
أَخْبَرَنَا
أَبُو بَكْرِ بْنُ أَبِي النَّضْرِ قَالَ حَدَّثَنِي أَبُو النَّضْرِ قَالَ
حَدَّثَنَا أَبُو إِسْحَقَ الْأَشْجَعِيُّ كُوفِيٌّ عَنْ عَمْرِو بْنِ قَيْسٍ
الْمُلَائِيِّ عَنْ الْحُرِّ بْنِ الصَّيَّاحِ عَنْ هُنَيْدَةَ بْنِ خَالِدٍ الْخُزَاعِيِّ
عَنْ حَفْصَةَ قَالَتْ أَرْبَعٌ لَمْ يَكُنْ يَدَعُهُنَّ النَّبِيُّ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صِيَامَ عَاشُورَاءَ وَالْعَشْرَ وَثَلَاثَةَ أَيَّامٍ
مِنْ كُلِّ شَهْرٍ وَرَكْعَتَيْنِ قَبْلَ الْغَدَاةِ رواه النسائي
ஆஷூரா நோன்பு, (துல்ஹஜ் மாதம் முதல்) பத்து நாட்கள் நோன்பு, ஒவ்வொரு மாதத்திலும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது, ஃபஜர் தொழுகைக்கு முன்னால் இரண்டு ரக்அத்கள் தொழுவது ஆகிய இந்த நான்கு
நல்லறங்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விட்டதே இல்லை. அறிவிப்பவர் : ஹஃப்ஸா (ரலி) ( நூல் : நஸாயீ )
இந்தச் செய்தி
இப்னு ஹிப்பான்,
முஸ்னத் அஹ்மத், தப்ரானீ ஆகிய நூற்களிலும்
பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த நபிமொழி
பலவீனமான நபிமொழியாகும்.
இதன் அறிவிப்பாளர்
தொடரில் அபூ இஸ்ஹாக் அல்அஷ்ஜயீ என்பவர் இடம் பெறுகின்றார். இவர் நம்பகமானவர் என்று
எந்த அறிஞரும் நற்சான்று அளிக்கவில்லை. இவருடைய நம்பகத் தன்மை நிரூபிக்கப்படாத
காரணத்தால் இது பலவீனமான செய்தியாகும்.
ளயீஃபான ஹதீஸ்களை
ஹதீஸ் கலை அறிஞர்கள் நான்கு வகையாக பிரிக்கின்றனர்.
1. இலேசான ளயீஃப். 2. கடுமையான ளயீஃப். 3.
அறிவிப்பாளர் தொடரில் இடம் பெற்றுள்ள ஒருவர் பொய் சொல்லக்கூடியவராகவோ
அல்லது இட்டுக்கட்டி கூறக்கூடியவராக இருப்பது. அல்லது பொய் சொல்லக் கூடியவராகவோ
இட்டுக் கட்டி கூறக்கூடியவராகவோ இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுதல். 4. மவ்ளூவு - இட்டுக்கட்டப்பட்ட நபிமொழி.
இதில் முதல் வகை
ஹதீஸான இலேசான ளயீஃப் வகையைச் சேர்ந்தது இந்த நபி மொழி. அதாவது, அறிவிப்பாளர் தொடரில் இடம் பெற்றுள்ள ஒரு அறிவிப்பாளர் உறுதியானவராகவோ, நம்பகமானவராகவோ இல்லாமல் இருந்து அவர் எதைப் பற்றி அறிவிக்கின்றாரோ அந்த
விஷயம் குறித்து வேறு ஒரு நம்பகமான ஹதீஸோ அல்லது பலவீனமான பல ஹதீஸ்களோ
அறிவிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் அந்த நபி மொழி ஸஹீஹுல் லிஃகைரிஹி அல்லது
ஹஸனுல் லிஃகைரிஹி தரத்தை அடைந்து ஸஹீஹான ஹதீஸ் எனும் தரத்தை அடைந்து விடும். எனவே, அந்த ஹதீஸை அமல் செய்யலாம். அதில் எந்த ஆட்சேபனையும் இல்லை.
இந்தக்
குறிப்பிட்ட நபிமொழி பலவீனம் என்றாலும் துல்ஹஜ் மாதம் முதல் பத்து நாட்கள் நல்லறம் செய்ய ஆர்வமூட்டும் ஆதாரப்பூர்வமான செய்தி உள்ளது.
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَرْعَرَةَ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ،
عَنْ سُلَيْمَانَ، عَنْ مُسْلِمٍ البَطِينِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ
ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ:
«مَا العَمَلُ فِي أَيَّامٍ أَفْضَلَ مِنْهَا فِي هَذِهِ؟» قَالُوا: وَلاَ
الجِهَادُ؟ قَالَ: «وَلاَ الجِهَادُ، إِلَّا رَجُلٌ خَرَجَ يُخَاطِرُ بِنَفْسِهِ
وَمَالِهِ، فَلَمْ يَرْجِعْ بِشَيْءٍ»
(துல்ஹஜ்) பத்து நாட்களில்
நல்லறங்கள் செய்வது ஏனைய நாட்களில் அவற்றைச் செய்வதை விட அல்லாஹ்வுக்கு மிகவும்
விருப்பமானதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது
நபித்தோழர்கள்,
அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் (அறப்போர்) செய்வதை விடவுமா? என்று கேட்டனர்.
அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் பாதையில்
அறப்போர் செய்வதை விடவும் சிறந்தது தான்; ஆயினும் தனது உயிருடனும், தனது செல்வத்துடனும் புறப்பட்டுச் சென்று அவ்விரண்டில் எதையும் திரும்பக்
கொண்டு வராத பேராளியைத் தவிர (அதாவது அல்லாஹ்வின் பாதையில் உயிர் தியாகம்
செய்தவரைத் தவிர) என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) (நூல் : புகாரி 969
)
இந்தச் செய்தி
பொதுவாக நோன்பு உட்பட அனைத்து நல்லறங்களையும் குறிக்கின்றது. மேலும், இந்த நாட்களில் தொழுகை,
திக்ரு, தர்மம் செய்தல் போன்ற
எந்த நல்லறங்களைச் செய்தாலும் அதற்கு தனிச்சிறப்பு உண்டு. எனவே இந்தப் நபிமொழியின்
ஆதாரத்தின் அடிப்படையில் இந்த நாட்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அது
அனுமதிக்கப்பட்டது தான்.
وكان
أئمة التابعين من أمثال محمد بن سيرين ومجاهد وعيسى بن علي بن عبد الله بن عباس
يصومون العشر كله، وآكد الصيام صوم يوم عرفة، لذا ترى سعيد بن جبير يقول:”
أيقظوا خدمكم يتسحرون لصوم يوم عرفة”
[سير أعلام النبلاء 4/ 326]
தாபியீன்களில்
இப்னு ஸீரீன் (ரஹ்) முஜாஹித் (ரஹ்) ஈஸா இப்னு அலீ இப்னு அப்துல்லாஹ் (ரஹ்) இப்னு
அப்பாஸ் (ரஹ்) ஆகியோர் துல்ஹஜ் அரஃபா வரை நோன்பு நோற்கக் கூடியவர்களாக
இருந்தார்கள். மேலும் ஸயீத் இப்னு ஜுபைர் ரஹ் அவர்கள் இப்படி சொல்வார்கள்"
அரஃபா நோன்புக்காக உங்கள் பணியாளர்களை எழுப்பி விடுங்கள்! அவர்கள் ஸஹர் செய்து
அரஃபா நோன்பு நோற்பதற்காக!
துல்ஹஜ் பிறை 9,
அரஃபா தினத்தின் சிறப்புகள்:
“நாட்களில் மிகச்சிறந்த
நாள் அரஃபாவுடைய நாள்”
என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: ஸஹீஹ் இப்னு
ஹிப்பான்)
மேலும், அரஃபா நாளன்று (துல்ஹஜ் பிறை 9 அன்று) நோன்பு வைப்பது
நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த அழகிய நடைமுறையாகும்.
ஆயிஷா (ரலி)
அறிவிக்கின்றார்கள்:- ”அல்லாஹ் நரகிலிருந்து தனது அடியார்களை அதிகமாக விடுதலை செய்யும் நாள் அரஃபா
நாளாகும்.இதைத் தவிர வேறு எந்த நாட்களிலும் இவ்வாறு விடுதலை செய்வதில்லை. அல்லாஹ்
அந்நாளில் இறங்கி வந்து,
இவர்கள் என்ன விரும்புகின்றனர்? என்று தனது வானவர்களிடம் பெருமையாகக் கேட்பான்” என்று நபி {ஸல்}
கூறினார்கள். ( நூல்: முஸ்லிம் )
فقال
الرسول
صلى الله عليه وسلم
(صيامُ يومِ عرفةَ، أَحتسبُ على اللهِ أن يُكفِّرَ السنةَ التي
قبلَه. والسنةَ التي بعده) [رواه مسلم
அபூ கத்தாதா (ரலி)
அறிவிக்கின்றார்கள்:- அரஃபா நாளன்று நோன்பு வைப்பவருக்கு அந்நாளுக்கு முன் வருட
பாவங்களையும்,
பின் வருட பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பான் என்று
நம்பிக்கை கொள்கிறேன்”
என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
( நூல் : முஸ்லிம் )
1.
ஹஜ் & உம்ரா செய்வது...
يجعل
ابن عمر رضي الله عنهما يقول: عمرة في العشر الأول من ذي الحجة أحب إليَّ من أن
أعتمر في العشر البواقي”.
وعن أبي
معن قال: رأيت جابر بن زيد وأبا العالية اعتمرا في العشر”
[مصنف ابن أبي شيبة 3 / 160]
இப்னு உமர் ரலி
அவர்கள் துல்ஹஜ் முதல் பத்து நாட்களில் உம்ரா செய்வதை அதிகம் விரும்புவார்கள்.
துல்ஹஜ் உடைய மற்ற நாட்களில் செய்யும் உம்ராவை விட.!
அபீ மஅன் ரஹ்
அவர்கள் கூறுகிறார்கள்: ஜாபிர் இப்னு ஸைத் ரஹ், அபுல் ஆலியா ரஹ் ஆகியோர்
துல்ஹஜ் முதல் பத்து நாட்களில் உம்ரா செய்வதை நான் பார்த்தேன்.
2. குர்ஆன் ஓதுவது...
وقال خباب بن الأرت لرجل: "تقرب إلى الله ما استطعت واعلم أنك لن
تتقرب إليه بشيء هو أحب إليه من كلامه" (رواه الحاكم)، وقال ابن مسعود:
"من أحب القرآن فهو يحب الله ورسوله" (رواه الطبراني) .
கப்பாப் இப்னு அல்
அரத் (ரலி) அவர்கள் ஒரு மனிதரிடம் "முடிந்த அளவு அல்லாஹ்வின் பக்கம் நெருங்க
முயற்சி செய்யுங்கள்! அல்லாஹ்வின் வார்த்தையாகிய அல்குர்ஆனை விட அவனுக்கு பிரியமான
ஒன்று இல்லை. அல்குர்ஆனை விட அவன் பக்கம் உங்களை நெருங்க வைக்கும் வேறு ஒன்றும்
இல்லை" என்று கூறினார்கள்.
அப்துல்லாஹ் இப்னு
மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: எவர் குர்ஆனை பிரியம் கொள்கின்றாரோ அவரை
அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரும் பிரியம் கொள்கின்றார்கள்.
القرآن
التجارة التي لن تبور ،حاول أن تختمه في هذه العشر ،قال صلى الله عليه وسلم : «لأن
يغدو أحدكم إلى المسجد فيتعلم آية أو يقرأ آيتين من كتاب الله خير له من ناقتين
وثلاث خير له من ثلاث وأربع خير له من أربع ومن أعدادهن من الإبل»[ رواه مسلم ]
குறைந்த பட்சம்
ஒரு குர்ஆனையாவது இந்த முதல் பத்து நாட்களில் முழுமையாக முடித்து விட வேண்டும்.
ஏனெனில்,
நபி (ஸல்) அவர்கள் " உங்களில் ஒருவர் காலையில்
பள்ளிவாசலுக்கு வந்து அல்குர்ஆனின் ஒரு வசனம் அல்லது இரு வசனங்களை ஓதுவதோ அல்லது
கற்றுக் கொள்வதோ இரண்டு ஒட்டகைகள் (லாபமாக - இலவசமாக) கிடைப்பதை விட சிறந்ததாகும்.
அல்குர்ஆனின் மூன்று வசனங்களை ஓதுவதோ அல்லது கற்றுக் கொள்வதோ மூன்று ஒட்டகைகள் (லாபமாக -
இலவசமாக) கிடைப்பதை விட சிறந்ததாகும். அல்குர்ஆனின் நான்கு வசனங்களை ஓதுவதோ அல்லது கற்றுக் கொள்வதோ நான்கு ஒட்டகைகள் (லாபமாக -
இலவசமாக) கிடைப்பதை விட சிறந்ததாகும். மேலும், எத்தனை எண்ணிக்கையில்
அல்குர்ஆன் வசனங்களை ஓதவும் கற்கவும் செய்கின்றீர்களோ அதே எண்ணிக்கையில் ஒட்டகைகள்
கிடைப்பதை விட சிறந்ததாகும்.
3. திக்ர் செய்வது...
روى
الإمام أحمد عن ابن عمر رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال: «ما من
أيام أعظم عند الله ولا أحب إليه من العمل فيهن من هذه الأيام العشر، فأكثروا فيهن
من التهليل والتكبير والتحميد»،
அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் கூறினார்கள்:-
" அல்லாஹ்விடம் நாட்களில் மிகச் சிறந்த நாளாகவும் அமல்களில்
மிகப் பிரியமான அமலாகவும் துல்ஹஜ் முதல் பத்து நாட்களில் செய்யப்படும் அமல்கள்
இருக்கிறது. எனவே,
நீங்கள் அந்த நாட்களில் லாஇலாக இல்லல்லாஹு, அல்லாஹு அக்பர்,
அல்ஹம்துலில்லாஹ் அதிகமாக சொல்லுங்கள்
" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
4. துஆ செய்வது, 5, நரக விடுதலையைக் கேட்பது. 6. இரவுத் தொழுகையை தொழுவது 7. ஃபர்ளான தொழுகைகளை இமாம் ஜமாஅத்துடன் தொழுவது. 8. நஃபிலான தொழுகைகளை தொழுவது. 9. ஸதகா - தர்மம் செய்வது. நபி (ஸல்) அவர்களின்
மீது ஸலவாத்துகளை ஓதிக் கொள்வது, தான தர்மங்கள் செய்வது,
ஏழைக்கு உணவளிப்பது, நோயாளிகளை நலம்
விசாரிக்கச் செல்வது இன்னும்,
குறிப்பாக
இந்த பத்து நாட்களிலும் பாவமான சிந்தனைகளை, செயல்பாடுகளை விட்டும் தூரமாகி நல்லறங்கள், வணக்க, வழிபாடுகள் செய்வதில் அதிக முனைப்பு காட்ட வேண்டும்.
துல்ஹஜ் முதல் பத்து நாட்களில் ஸலஃபுகளான மேன்மக்களின் நிலைகள்!
وقال
البخاري كان ابن عمر وأبو هريرة رضي الله عنهما يخرجان إلى السوق في أيام العشر
يكبران ويكبر الناس بتكبيرها. وقال: وكان عمر يكبر في قبته بمنى فيسمعه أهل المسجد
فيكبرون، ويكبر أهل الأسواق حتى ترتج منى تكبيراً. وكان ابن عمر يكبر بمنى تلك
الأيام وخلف الصلوات وعلى فراشه، وفي فسطاطه ومجلسه وممشاه تلك الأيام جميعاً
அப்துல்லாஹ் இப்னு
உமர் (ரலி),
அபூஹுரைரா (ரலி) ஆகிய இரு நபித் தோழர்களும் (துல் ஹஜ்)
முதல் பத்து நாட்களிலும் கடை வீதிகளுக்குச் சென்று தக்பீர் கூறுவார்கள்
இவ்விருவரும் தக்பீர் கூறுவதை செவியுற்ற மக்களும் தக்பீர் கூறுவார்கள். ( நூல்:
புகாரி : 1/ 339 )
உமர் (ரலி)
அவர்கள் மினாவில் தனது கூடாரத்தில் உரத்த குரலில் தக்பீர் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.
இதைக் கேட்ட பள்ளிவாசலில் உள்ளவர்களும், கடைத்தெருக்களில்
உள்ளவர்களும் மினாவே அதிரும் அளவுக்கு தக்பீர் சொல்லுவார்கள்.
இப்னு உமர் (ரலி)
அவர்கள் மினாவில் ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும், கூடாரத்திலும், படுக்கையிலும்,
மஜ்லிஸிலும், அனைத்து நாட்களிலும்
தக்பீர் சொல்லக் கூடியவர்களாக இருந்தார்கள்…. நூல்: புகாரி 4/123.
سعيد بن
جبير، كان إذا دخلت أيام العشر اجتهد اجتهاداً شديداً حتى ما يكاد يقدر عليه, وكان
الحافظ ابن عساكر يعتكف في شهر رمضان، وعشر ذي الحجة.
لطائف
المعارف ص:263
تذكرة الحفاظ 4/ 13
ஸயீத் இப்னு
ஜுபைர் ரஹ் அவர்கள் துல்ஹஜ் உடைய முதல் பத்து நாட்களில் அதிகமாக வணக்க
வழிபாடுகளில் ஈடுபடுவார்கள். சில போது அவர்கள் வழிபாடுகளில் ஈடுபடும் அளவிற்கான
உடல் வலுவை இழந்து விடுவார்கள்.
இமாம் இப்னு
அஸாக்கிர் ரஹ் அவர்கள் ரமழான் மாதத்தில் கடைசி பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பது
போல் துல்ஹஜ் முதல் பத்து நாட்களிலும் இஃதிகாஃப் இருப்பார்கள். ( நூல்: தத்கிரத்துல்
ஹுஃப்ஃபாள் )
قال
الحافظُ ابنُ رجب رحمه الله: فرَضَ على المستطيعِ الحجَّ مرةً واحدةً في
عُمرِه، وجعلَ موسمَ العشرِ مشتركًا بين السائرينَ والقاعدينَ، فمَن عجزَ عن
الحجِّ في عامٍ، قَدَرَ في العشرِ على عملٍ يعملُه في بيتِه يكونُ أفضلَ مِن
الجهادِ الذي هو أفضلُ مِن الحجِّ.
[لطائف المعارف لابن رجب، ص: 272]
இப்னு ரஜப் ஹம்பலீ
ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்:
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் வசதி படைத்தவர்கள் வாழ்நாளில் ஒரு
முறை ஹஜ் செய்வதை கடமையாக்கினான். ஒவ்வொரு ஆண்டும் ஹஜ் செய்ய இயலாதவர்கள் மற்றும்
ஹஜ் செய்ய வசதி இல்லாதோர் ஆகியோருக்காக துல்ஹஜ் முதல் பத்து நாட்களை அமல் செய்யும்
அபரிமிதமான நாட்களாக ஆக்கியிருக்கிறான். எவருக்கு தன் வீட்டில் இருந்த படியே இந்த
நாட்களில் அமல் செய்யும் பாக்கியம் கிடைக்கிறதோ அவருக்கு அது ஜிஹாதை விட , ஹஜ்ஜை விட மிகச் சிறந்ததாகும்.
وَسُئِلَ
ابنُ تيمية: عَنْ عَشْرِ ذِي الحِجَّةِ والعَشْرِ الأَوَاخِرِ مِنْ رمَضَانَ،
أيُّهُمَا أَفْضَلُ؟
فأَجَابَ:
أَيَّامُ عَشْرِ ذِي الحِجَّةِ أفْضَلُ مِنْ أيَّامِ العَشْرِ مِنْ رمَضَانَ،
واللَّيَالي الْعَشْرُ الأَوَاخِرُ مِنْ رمَضَانَ أَفْضَلُ مِنْ لَيَالي عَشْرِ
ذِي الحِجَّةِ
இப்னு தைமிய்யா
அவர்களிடம் துல்ஹஜ் முதல் பத்து நாட்கள் சிறந்ததா? ரமலான் கடைசி பத்து நாட்கள் சிறந்ததா? எனக் கேட்டதற்கு
துல்ஹஜ்ஜின் முதல் பத்து நாட்கள் தான் சிறந்தது என பதிலளித்தார்கள். துல்ஹஜ் முதல்
பத்து நாட்களின் இரவுகள் சிறந்ததா? ரமலான் கடைசி பத்து
நாட்களின் இரவுகள் சிறந்ததா? எனக் கேட்டதற்கு ரமலான்
கடைசி பத்து நாட்களின் இரவுகள் சிறந்தது என பதிலளித்தார்கள்.
எனவே, மேற்கூறிய குர்ஆன் வசனத்தின் மூலமும், ஹதீஸின் மூலமும்,
நபித்தோழர்கள், இமாம்கள் ஆகியோருடைய
விளக்கங்களின் மூலமும்
துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்கள் மிகவும் சிறப்புக்குரியது. அந்த நாட்களில் அமல்கள் செய்வதை சரியாக அமைத்துக்கொள்ள வேண்டும்
என்பதை விளங்கிக் கொள்ள முடிகின்றது.
விசேஷமான அமல்கள் செய்யா விட்டாலும் வழமையாக நாம் செய்து வரும் அமல்களை பூரணமாகவும், சரியாகவும் செய்து வர முயற்சி செய்ய வேண்டும்.
இது போன்ற சிறப்பு
சலுகைகள் மற்றும் தினங்கள் என்பது அல்லாஹ் அடியார்களின் மீது பொழிகிற அளப்பெரும்
அன்புக்கு சான்றாகும்.
இது போன்ற
வாய்ப்புகளைப் பயன்படுத்தி வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு நம் ஈமானையும், இறை நெருக்கத்தையும் வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களை அமல்களால் அலங்கரிக்கும் நஸீபை தந்தருள்வானாக!! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!
ஆகா அருமை பாரகல்லாஹு லகும்
ReplyDeleteமாஷா அல்லாஹ் அருமையான பதிவு அல்லாஹுத்தஆலா தங்களுக்கு ஈருலகிலும் பரக்கத் செய்வானாக
ReplyDeleteAlhamdulillah Moulana
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete