அவர் தான் உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்கள்!!!
பணமும் பதவியும்
அதிகாரமும் ஆட்சியும் அறிவும் இந்த உலகில் பலரை மாற்றி இருக்கிறது.
பதவி வந்ததும்
தாம் யார் என்பதை மறந்து வீண் பெருமை பேசி அழிந்தவர்கள் உண்டு.
அதிகாரமும், ஆட்சியும் கைக்கு வந்ததும் தலைகால் புரியாமல் நடந்ததால் தடம் தெரியாமல்
சிதைந்து போனவர்களும் உண்டு.
அறிவும், பணமும் கொண்டு வந்து சேர்த்த புகழால் மமதையோடு நடந்து புவியில் இழிவடைந்தவர்கள் உண்டு.
அல்குர்ஆனும் வீண்
பெருமை பேசி,
ஆட்சி அதிகாரத்தால் தான் யார் என்பதை மறந்து அழிந்து போன
ஒருவனின் முகவரியை அடையாளப்படுத்துகிறது.
எகிப்தின் அடக்கஸ்தலம் ஒன்றின் வெட்டியானாக வாழ்வைத்
துவங்கி எகிப்திய அரண்மனையில் கருவூல காப்பாளராக இடம் பெற்று மன்னருக்கு வாரிசு
இல்லாததால் திடீரென மன்னரால் "முடி சூட்டப்பட்டு" அரச பதவியை அடைந்த
ஃபிர்அவ்ன் எவ்வளவு தான் பேசி விட்டான்? என்னவெல்லாம் தான் கூறி
விட்டான்?
وَنَادَىٰ
فِرْعَوْنُ فِى قَوْمِهِۦ قَالَ يَٰقَوْمِ أَلَيْسَ لِى مُلْكُ مِصْرَ وَهَٰذِهِ
ٱلْأَنْهَٰرُ تَجْرِى مِن تَحْتِىٓ ۖ أَفَلَا تُبْصِرُونَ﴿43:51﴾
மேலும் ஃபிர்அவ்ன்
தன் சமூகத்தாரிடம் பறை சாற்றினான்; "என்னுடைய சமூகத்தாரே! இந்த மிஸ்று (எகிப்தின்) அரசாங்கம், என்னுடையதல்லவா?
என் (மாளிகை) அடியில் ஓடிக் கொண்டிருக்கும் (நைல் நதியின்)
இக்கால்வாய்களும் (என் ஆட்சிக்கு உட்பட்டவை என்பதைப்) பார்க்கவில்லையா? ( அல்குர்ஆன்: 43:
51 )
وَقَالَ فِرْعَوْنُ يٰۤـاَيُّهَا الْمَلَاُ مَا عَلِمْتُ لَـكُمْ مِّنْ
اِلٰهٍ غَيْرِىْ ۚ فَاَوْقِدْ لِىْ يٰهَامٰنُ عَلَى الطِّيْنِ فَاجْعَلْ لِّىْ
صَرْحًا لَّعَلِّىْۤ اَطَّلِعُ اِلٰٓى اِلٰهِ مُوْسٰى ۙ وَاِنِّىْ لَاَظُنُّهٗ
مِنَ الْـكٰذِبِيْنَ
இன்னும்
ஃபிர்அவ்ன் சொன்னான்: “பிரமுகர்களே! என்னைத்தவிர உங்களுக்கு வேறெரு நாயன் இருக்கின்றான் என்பதாக நான்
அறியவில்லை. ஆதலின்,
ஹாமானே! களிமண் மீது எனக்காகத் தீயைமூட்டி (செங்கற்கள்
செய்து) பிறகு எனக்காக ஓர் (உயரமான) மாளிகையைக் கட்டுவாயாக! (அதன் மேல் ஏறி) நான்
மூஸாவின் இறைவனைப் பார்க்க வேண்டும் - மேலும் நிச்சயமாக நான் இவரை பொய்யர்களில்
நின்றுமுள்ளவர்”
என்றே கருதுகின்றேன். (
அல்குர்ஆன்: 28: 38 )
இறுதியில் அவன்
என்ன ஆனான்?
அவனுடைய ஆட்சியும், அதிகாரமும் எங்கே போனது?
ஆனாலும் இந்த
உலகில் சர்வதேச நாடுகளில் ஒவ்வொரு முறை ஆட்சி மாற்றம் நிகழ்கிற போதெல்லாம் ஒரு
மனிதர் பேசப்படுகிறார். புகழப்படுகிறார். அவரின் ஆட்சியும் அதிகாரமும் அவரின்
நீதியும் புகழப்படுகிறது. மறவாமல் ஒவ்வொரு முறையும் நினைவு கூறப்படுகிறது.
ஆம்! அவர் தான் பரந்து
விரிந்த இப்பாருலகின் அன்றைய அகண்ட இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தை ஆண்ட, இஸ்லாமிய
அரசின் இரண்டாம் கலீஃபா உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்கள்.
உமர் (ரலி)
அவர்களின் மாற்றத்திற்குள்ளாகாத மிகவும் எளிமையான வாழ்க்கையை இரண்டு வரியில்
வியப்போடும், வனப்போடும் விவரிக்கின்றார் வரலாற்றாசிரியர் கிப்பன்.
(he
continued to live much as he had when Muslims were poor and persecuted.)
முஸ்லிம்கள்
ஏழைகளாக இருந்த போது எப்படி வாழ்ந்தார்களோ அதே வாழ்வு முறையை உமர் ஆட்சிக்கு வந்த
பிறகும் தொடர்ந்தார்.
فبدأ الخطبة،
أيها الناس! اسمعوا وعوا، فقام سلمان من وسط المسجد، وقال
والله لا نسمع ولا نطيع، فتوقف واضطرب المسجد، وقال: ما لك يا
سلمان؟
قال: تلبس ثوبين
وتلبسنا ثوباً ثوباً ونسمع ونطيع.
قال عمر
يا عبد
الله
قم أجب
سلمان، فقام عبد الله يبرر لسلمان،
هذا ثوبي الذي هو قسمي مع المسلمين أعطيته أبي، فبكى سلمان، وقال
الآن قل
نسمع, وأمر نطع، فاندفع عمر يتكلم
ஒரு நாள் உமர்
(ரலி) அவர்கள் "ஜும்ஆ" பிரசங்கத்திற்காக பள்ளிவாசலுக்கு வருகிறார்கள். பிரசங்கத்தை துவங்கிய போது, உமர் (ரலி) அவர்களை "சல்மான்
அல் பார்ஸி" (ரலி) என்ற தோழர் தடுத்து நிறுத்திக் கேட்கிறார். உமரே..!
நீங்கள் இப்போது அணிந்திருக்கிற ஆடை ஒரு சந்தர்ப்பத்தில் வெகுமதியாக உங்களுக்கு
கிடைத்தது. இதே போல ஒன்று எனக்கும் கிடைத்தது. இப்போது நீங்கள் இரண்டு ஆடைகளை
கீழுக்கு ஒன்றாக மெலே ஒன்றாக அணிந்திருக்கிறீர்களே அது எப்படி..?? என்று கேட்டார்.
உமர், தனது மகன் அப்துல்லாஹ்வை நோக்கினார். அப்துல்லாஹ் சொன்னார். சகோதரரே..!! என்
தந்தையுடையது ஒரு ஆடை தான். உங்களுக்கு வெகுமதியாக ஆடை கிடைத்த அந்த
சந்தர்ப்பத்தில் எனக்கும் ஒரு ஆடை கிடைத்தது. அதை நான் என் தந்தைக்கு கொடுத்தேன்
என்றார்.
கலீஃபா உமர் (ரலி)
அவர்களுக்கு ஒற்றை ஆடை கூட கேள்விக்குரியதாக இருந்தது. அவரது ஆடைகளில்
ஒட்டுக்களும் அதிகம். உமரின் ஆடையில் தோள் புஜங்களுக்கு இடையே நான்கு ஒட்டுக்களை
நான் பார்த்தேன் என நபித்தோழர் அனஸ் கூறுகிறார்.
18 ம் நூற்றாண்டின்
இங்கிலாந்தில் மிகவும் பிரபலமான வரலாற்றாசிரியர் கிப்பன் அந்தஆச்சரியத்தை
வெளிப்படுத்துகிறார்.
"Yet the abstinence and
humility of Umar were not inferior to the virtues of Abu Bakr: his food
consisted of barley bread or dates; his drink was water; he preached in a gown
that was torn or tattered in twelve places; and a Persian satrap, who paid his
homage as to the conqueror, found him asleep among the beggars on the steps of
the mosque of Muslims- Gibbon - In The Decline and Fall of the Roman Empire.
“தொளிக்கோதுமையினால்
செய்யப்பட்ட ரொட்டி அல்லது பேரீத்தம் பழங்களே அவரது உணவாகவும், சாதரண தண்ணீரே அவரது பானமாகவும் இருந்தது. அவரது சட்டை பணிரெண்டு இடங்களில்
தையல் போடப்பட்டிருந்தது. பாரசீக இராஜதந்திரி ஒருவர் மரியாதை நிமித்தமாக அவரை
சந்திக்க மதீனாவுக்கு வந்த போது பள்ளிவாசலின் படிக்கட்டுகளில் ஏழைகளோடு ஏழையாக
உமர் உறங்கிக் கொண்டிருக்க கண்டார்.”
அந்தப் பேரரசர்
பாலஸ்தீனத்தின் வெற்றியை உறுதி செய்வதற்காக ஜெரூஸலம் நோக்கிப் புறப்பட்ட போது அது
ராஜபவனியாக இருக்கவில்லை. அவர் பாலஸ்தீனுக்குள் நுழைந்த அழகுக் காட்சியை சொல்லிச்
சொல்லி நெகிழாத வரலாற்றாசிரியர்களே இல்லை.
ஒரே ஒரு பணியாளரை
அழைத்துக் கொண்டு மதீனாவிலிருந்து புறப்பட்ட உமர் பாலஸ்தீனத்திற்கு நுழைந்த போது
அவரது பணியாளர் ஒட்டகத்தின் மீது அமர்ந்திருக்க உமர் ஒட்டகத்தை இழுத்துக் கொண்டு
வந்தார்.
14 நூற்றாண்டுகளைக்
கடந்தும் உலகின் அத்துனை வரலாற்று ஆசிரியர்களாலும், அரசியல் விற்பன்னர்களாலும் வியந்து போற்றப்படுகின்ற மகத்தான அரசியல் ஆளுமை
அமீருல் முஃமினீன் உமர் (ரலி) அவர்கள்.
இதே துல்ஹஜ்
மாதத்தில் (பிறை 23
அல்லது 24) சன்மார்க்கப் போராளியாக
வீர மரணம் அடைந்தார்கள்.
யார் அந்த உமர்
(ரலி)...?
அன்றைய அரபகத்தில் எழுதப் படிக்கத் தெரிந்த 17பேரில் ஒருவராக இருந்த அவர் மல்யுத்தம் குதிரையேற்றம் உள்ளிட்ட தற்காப்புக் கலைகளையும் கற்றிருந்தார். கவிதைகளோடும் இலக்கியத்தோடும் கூட அவருக்கு அழுத்தமான தொடர்பு இருந்தது. அலாதியான பேச்சுத்திறன் அவரிடமிருந்தது.
ஆனாலும் தந்தையின் அன்பான அரவணைப்பு அவருக்கு கிட்டியதில்லை. தந்தை கத்தாப், உமர் விசயத்தில் எப்போதும் கடுமையாகவே நடந்து கொள்வார் என வரலாற்றாசிரியர்கள் பலரும் குறிப்பிடுகிறார்கள்.
உமர் (ரலி) பிறக்கிற போதே அரசியல்வாதியாகப் பிறந்தார் என்றும் சொல்லலாம். அரபுக்கு குடும்பங்களுக்கிடையே சண்டைகள் மூள்கிறபோது பேச்சு வார்த்தைக்கு செல்கிற சஃபாரத் எனும் தூதுப் பொறுப்பு அவருடைய பனூஅதீ குடும்பத்திற்குரியதாக இருந்தது. உமர் (ரலி)யிடம் அதற்குரிய பேச்சுத்திறன் இயற்கையாகவே இருந்தது. அரசியல் அவரது இரத்தத்தில் கலந்திருந்ததற்கு இது கூட காரணமாக இருக்கலாம்.
நபி (ஸல்) அவர்களோடு தொடர்பு கொண்டு இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு அந்த வீரத்திருமகனுக்கு வாழ்க்கைகான இலக்கு தெளிவில்லாமல் இருந்தது. இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போதித்த சத்தியத்தை உயர்த்திப் பிடிப்பதே அவரது குறிக்கோளாக மாறியது. மிகத் தீரமாகவும், தீவிரமாகவும் ஈடுபாட்டோடும் தியாகத்தோடும் அந்தப் பாதையில் அவர் வீர நடை போட்டார். அதனால் "அல்பாரூக்" சத்தியத்தை திட்டவட்டமாக தெரிந்தவர், அதன் வழி நடப்பவர் என்ற சிறப்பு அடைமொழி அவருக்கு வழங்கப்படலாயிற்று.
இஸ்லாமும்.. வாழ்வும்...
நபித்துவத்தின்
ஆறாம் ஆண்டு துல்ஹஜ் மாதம் ஹம்ஜா (ரழி) அவர்கள் இஸ்லாமைத் தழுவி மூன்று நாட்கள்
கழித்து உமர் இஸ்லாமைத் தழுவினார். நபி (ஸல்) அவர்கள் உமர் இஸ்லாமை தழுவ வேண்டுமென
இறைவனிடம் வேண்டியிருந்தார்கள்.
“அல்லாஹ்வே! உமர் இப்னு
கத்தாப் அல்லது அபூஜஹ்ல் இப்னு ஹிஷாம் ஆகிய இருவரில் உனக்கு விருப்பமானவரைக்
கொண்டு இஸ்லாமை வலிமைப்படுத்துவாயாக!” என்று நபி (ஸல்) அவர்கள்
அல்லாஹ்விடம் வேண்டினார்கள். அவர்களில் அல்லாஹ்விற்கு மிக விருப்பமானவர் உமராக
இருந்தார் என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத், அனஸ், இப்னு உமர் (ரழி) ஆகியோர் அறிவிக்கிறார்கள்.
உமர் இஸ்லாமைத்
தழுவிய நிகழ்ச்சியை விவரிக்கும் அறிவிப்புகளை நாம் ஆய்வு செய்து பார்க்கும்போது
உமரின் உள்ளத்தில் இஸ்லாம் படிப்படியாகத்தான் வேரூன்றியது என்பதை தெரிந்து
கொள்ளலாம்.
அந்த வகையில் பின்
வரும் இந்த அறிவிப்பு மிகவும் கவனிக்கத்தக்கதாகும்.
وروي أن
سبب إسلامه سماعه لتلاوة النبي صلى الله عليه وسلم للقرآن؛ روى هذا الإمام أحمد في
"المسند" (1 / 262) حَدَّثَنَا أَبُو الْمُغِيرَةِ، حَدَّثَنَا
صَفْوَانُ، حَدَّثَنَا شُرَيْحُ بْنُ عُبَيْدٍ، قَالَ: قَالَ عُمَرُ بْنُ
الْخَطَّابِ:
" خَرَجْتُ أَتَعَرَّضُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ قَبْلَ أَنْ أُسْلِمَ، فَوَجَدْتُهُ قَدْ سَبَقَنِي إِلَى الْمَسْجِدِ،
فَقُمْتُ خَلْفَهُ، فَاسْتَفْتَحَ سُورَةَ الْحَاقَّةِ، فَجَعَلْتُ أَعْجَبُ مِنْ
تَأْلِيفِ الْقُرْآنِ، قَالَ: فَقُلْتُ: هَذَا وَاللهِ شَاعِرٌ كَمَا قَالَتْ
قُرَيْشٌ، قَالَ: فَقَرَأَ: ( إِنَّهُ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ * وَمَا هُوَ
بِقَوْلِ شَاعِرٍ قَلِيلًا مَّا تُؤْمِنُونَ )، قَالَ: قُلْتُ: كَاهِنٌ، قَالَ: (
وَلَا بِقَوْلِ كَاهِنٍ قَلِيلًا مَّا تَذَكَّرُونَ * تَنْزِيلٌ مِّنْ رَّبِّ
الْعَالَمِينَ * وَلَوْ تَقَوَّلَ عَلَيْنَا بَعْضَ الْأَقَاوِيلِ * لَأَخَذْنَا
مِنْهُ بِالْيَمِينِ * ثُمَّ لَقَطَعْنَا مِنْهُ الْوَتِينَ * فَمَا مِنْكُمْ
مِّنْ أَحَدٍ عَنْهُ حَاجِزِينَ ) إِلَى آخِرِ السُّورَةِ، قَالَ: فَوَقَعَ
الْإِسْلامُ فِي قَلْبِي كُلَّ مَوْقِعٍ "
ஓர் இரவில் தனது
வீட்டுக்கு வெளியில் தூங்க வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது. நேராக ஹரமுக்கு வந்து
கஅபாவின் திரைக்குள் நுழைந்து கொண்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அங்கு தொழுது
கொண்டிருந்தார்கள். தொழுகையில் நபி (ஸல்) அவர்கள் அத்தியாயம் அல்ஹாக்கா ஓத, அதன் வசன அமைப்புகளை ரசித்து உமர் ஓதுதலைச் செவிமடுத்தார். இதைத் தொடர்ந்து
உமர் கூறுகிறார்:
நபி (ஸல்) அவர்கள்
ஓதுவதை கேட்டுக் கொண்டிருந்த நான் எனது எண்ணத்தில் அல்லாஹ்வின் மீது சத்தியமாக!
இவர் கவிஞராக இருப்பாரோ! என்று என் உள்ளத்தில் கூற,
இது, நிச்சயமாக (நம்மால் அறிவிக்கப்பட்டபடி) மிக்க சங்கை பொருந்திய ஒரு தூதரால்
கூறப்பட்டதாகும். இது,
ஒரு கவிஞனுடைய சொல்லல்ல. எனினும், (இதனை) நீங்கள் வெகு சொற்பமாகவே நம்பிக்கை கொள்கின்றீர்கள். (அல்குர்ஆன் 69:40, 41) என்ற வசனங்களை நபி (ஸல்) அவர்கள் ஓதினார்கள்
அடுத்து இவர் ஜோசியக்காரராக
இருப்பாரோ! என்று என் உள்ளத்தில் நான் கூற,(இது) ஒரு ஜோசியக்காரனுடைய
சொல்லுமல்ல. (எனினும்,
இதனைக் கொண்டு) வெகு சொற்பமாகவே நீங்கள் நல்லுபதேசம்
அடைகின்றீர்கள். உலகத்தார்களின் இறைவனால் (இது) இறக்கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் 69:42, 43) என்ற வசனங்களை நபி (ஸல்) அவர்கள் ஓதினார்கள்.
அது சமயம் எனது
உள்ளத்தில் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை ஏற்பட்ட்டது என்று உமர் (ரலி)
கூறினார்கள். ( நூல்: அஹ்மத் )
தமது சகோதரி
ஃபாத்திமா பின்த் கத்தாப் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் என்ற தகவலை மாநபி (ஸல்)
அவர்களை 100
ஒட்டகைகளுக்காக கொல்லத் துணிந்து பயணித்த வந்த பாதையில்
எதிரில் தென்பட்ட நுஅய்ம் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் தெரிவிக்க, வீட்டை நோக்கி விரைந்த உமர் (ரலி) அவர்களின் செவிகளில் ஒலித்த வசனமும் அதன்
உட்பொருளும் உமர் ரலி அவர்களை என்ன செய்தது?
நீண்ட நபிமொழியின்
ஒரு பகுதி...
وقال لاخته: أعطيني هذه الصحيفة التى كنتم تقرأون آنفا، أنظر ما هذا
الذى جاء به محمد، وكان عمر كاتبا.
فلما قال ذلك قالت له أخته: إنا نخشاك عليها.
قال: لا تخافى، وحلف بآلهته ليردنها إذا قرأها إليها.
فلما قال ذلك طمعت في إسلامه، فقالت: يا أخى إنك نجس على شركك، وإنه لا
يمسه إلا المطهرون، فقام عمر فاغتسل، فأعطته أخته الصحيفة، وفيها « طه ». فلما قرأ
منها صدرا قال: ما أحسن هذا الكلام وأكرمه؟!
فلما سمع ذلك خباب بن الأرت خرج إليه فقال له: والله يا عمر إنى لارجو
أن يكون الله قد خصَّك بدعوة نبيه صلى الله عليه وسلم، فإنى سمعته أمس وهو يقول:
اللهم أيد الاسلام بأبى الحكم بن هشام أو بعمر بن الخطاب.
فطلب منه عمر أن يدله على رسول الله -صلى الله عليه وسلم- حتى يآتيه
فيُسلم، فدله خباب على مكانه وكان عند الصفا في نفر مع أصحابه.
فلما أن وصل عمر إلى باب الدار وطرقه وسمع الصحابة صوته فزعوا.
فقال حمزة فأذن له: فإن كان جاء يريد خيرا بذلناه، وإن كان يريد شرا
قتلناه بسيفه.
فقال رسول صلى الله عليه وسلم: ائذن له، فأَذِن له الرجل، ونهض إليه
رسول الله صلى الله عليه وسلم حتى لقيه في الحجرة، فأخذ بمجمع ردائه ثم جذبه جذبة
شديدة، فقال: ما جاء بك يا ابن الخطاب؟ فو الله ما أرى أن تنتهى حتى يُنزل الله بك
قارعة. فقال عمر: يا رسول الله، جئتك لأُومن بالله ورسوله وبما جاء من عند الله.
قال: فكبر رسول الله صلى الله عليه وسلم تكبيرة، فعرف أهل البيت أن عمر قد
أسلم.
உங்களிடமுள்ள
இப்புத்தகத்தை எனக்குக் கொடுங்கள். நான் அதை படிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
அதற்கு அவரது சகோதரி “நீ அசுத்தமானவர். நீர் எழுந்து குளித்து வாரும்” என்று கூறி அதைத் தர மறுத்துவிட்டார். பிறகு குளித்து வந்தவுடன் திருமறையை
கையிலேந்தி “பிஸ்மில்லார்ரஹ்மானிர்ரஹீம்” (அளவற்ற அருளாளனும்
நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்) என்று ஓதியவுடன் “ஆஹா! என்ன தூய்மையான பெயர்கள்” என்று கூறி, தொடர்ந்து “தாஹா’
என்று தொடங்கி பதினான்காவது வசனம் வரை ஓதி முடித்துவிட்டு “இது எவ்வளவு அழகான சொற்கள்! எவ்வளவு இனிமையான வசனங்கள்! எனக்கு முஹம்மதைக் காட்டுங்கள்!” என்று கேட்டுக் கொண்டார். உமரின் பேச்சைக் கேட்ட கப்பாப் (ரழி) வெளியேறி வந்து
“உமரே! நற்செய்தி பெற்றுக் கொள்ளுங்கள். வியாழன் இரவு, “அல்லாஹ்வே! உமர் அல்லது அபூஜஹ்ல் மூலமாக இஸ்லாமுக்கு உயர்வைக் கொடு!” என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள்
செய்த பிரார்த்தனை உங்கள் விஷயத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று நான் உண்மையில்
நம்புகிறேன்”
என்றுரைத்தார்.
நபி (ஸல்) அவர்கள்
ஸஃபா மலையில் உள்ள இல்லத்தில் இருந்தார்கள். உமர் தனது வாளை அணிந்து கொண்டு நபி
(ஸல்) அவர்களின் வீட்டை நோக்கி வந்தார். உமர் கதவைத் தட்டியபோது ஒருவர் கதவின்
இடுக்கின் வழியாக உமரை வாள் அணிந்த நிலையில் பார்த்து நபி (ஸல்) அவர்களுக்கு
அச்செய்தியைக் கூறினார். அங்கிருந்தவர்கள் எல்லாம் ஒன்று கூடிவிட்டார்கள். மக்கள் “உமர் வந்திருக்கிறார்”
என்று கூறினார்கள். “ஓ! உமரா! (வந்திருக்கிறார்?) அவருக்கு கதவை திறந்து விடுங்கள்! அவர் நன்மையை நாடி வந்திருந்தால் அந்த
நன்மையை நாம் அவருக்குக் கொடுப்போம்! அவர் தீமையை நாடி வந்திருந்தால் அவரது
வாளாலேயே அவரை நாம் கொலை செய்து விடுவோம்!” என்று ஹம்ஜா (ரழி)
கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் வீட்டின் உள்பகுதியில் வஹி (இறைச்செய்தி)
வந்த நிலையில் இருந்தார்கள்.
சிறிது
நேரத்துக்குப் பிறகு உமரை சந்தித்த நபி (ஸல்) அவர்கள் உமரின் சட்டையையும் வாளையும்
பிடித்து அவரைக் குலுக்கி “உமரே! நீ வழிகேட்டிலிருந்து விலக மாட்டாயா? வலீதுக்கு ஏற்பட்டதைப்
போன்ற கேவலத்தையும்,
தண்டனையும் அல்லாஹ் உனக்கு இறக்க வேண்டுமா? அல்லாஹ்வே! இதோ உமர் இப்னு கத்தாப் வந்திருக்கிறார். அல்லாஹ்வே! உமரால்
இஸ்லாமிற்கு உயர்வைக்கொடு!”
என்று கூறினார்கள். உமர் (ரழி) “அஷ்ஹது அல்லாஇலாஹஇல்லல்லாஹ் வ அன்னக்க ரஸுலுல்லாஹ்” என்று கூறி இஸ்லாமைத் தழுவினார். (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு
யாருமில்லை,
அல்லாஹ்வின் தூதர் நீங்கள் என்றும் சாட்சி கூறுகிறேன்
என்பதே இதன் பொருளாகும்.) இதனைப் பார்த்த வீட்டில் உள்ளவர்கள் தக்பீர் (அல்லாஹு
அக்பர் - அல்லாஹ் மிகப் பெரியவன் என்று) முழங்கினர். அந்த சப்தத்தைப் பள்ளியில்
உள்ளவர்களும் கேட்டார்கள்.
உமர் (ரலி) அவர்கள் பெற்ற
சிறப்புகளும்.. சோபனங்களும்.. முன்னறிவிப்புகளும்…
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ حَدَّثَنَا يَعْقُوبُ
بْنُ إِبْرَاهِيمَ حَدَّثَنِي أَبِي عَنْ صَالِحٍ عَنْ ابْنِ شِهَابٍ
قَالَ حَدَّثَنِي أَبُو أُمَامَةَ بْنُ سَهْلٍ أَنَّهُ سَمِعَ أَبَا
سَعِيدٍ الْخُدْرِيَّ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ: بَيْنَمَا أَنَا نَائِمٌ رَأَيْتُ النَّاسَ يُعْرَضُونَ
عَلَيَّ وَعَلَيْهِمْ قُمُصٌ مِنْهَا مَا يَبْلُغُ الثَّدْيَ وَمِنْهَا مَا
يَبْلُغُ دُونَ ذَلِكَ وَمَرَّ عَلَيَّ عُمَرُ بْنُ الْخَطَّابِ وَعَلَيْهِ
قَمِيصٌ يَجُرُّهُ قَالُوا مَا أَوَّلْتَهُ يَا رَسُولَ اللَّهِ قَالَ الدِّينَ
நான் உறங்கிக்
கொண்டிருக்கும்போது கனவில் மக்களில் சிலரைப் பார்த்தேன். அவர்களின் மீது (பல
விதமான) சட்டைகள் அணிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் என்னிடம் எடுத்துக்
காட்டப்பட்டனர். அச்சட்டைகளில் சில அவர்களின் மார்பு வரை நீண்டிருந்தன. இன்னும்
சில அதற்கும் குறைவாக இருந்தன. உமர் இப்னு கத்தாப் (தரையில்) இழுபடும் அளவு
(நீண்ட) சட்டை அணிந்தவர்களாக என்னிடம் எடுத்துக் காட்டப்பட்டார்கள்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியபோது நபித்தோழர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! (சட்டைக்கு) என்ன விளக்கம் தருகிறீர்கள்? எனக் கேட்டதற்கு ‘மார்க்கம்’
‘என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விளக்கம் தந்தார்கள்”.
புஹாரி : 23 அபூ ஸயீதுல் குத்ரீ (ரலி)
.
இந்த உம்மத்தின் ஆகச் சிறந்த கல்வியாளர்...
حَدَّثَنَا عَبْدَانُ أَخْبَرَنَا
عَبْدُ اللَّهِ أَخْبَرَنَا يُونُسُ عَنْ الزُّهْرِيِّ
أَخْبَرَنِي حَمْزَةُ بْنُ عَبْدِ اللَّهِ أَنَّ ابْنَ عُمَرَ قَالَ
سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ
بَيْنَا أَنَا نَائِمٌ أُتِيتُ بِقَدَحِ لَبَنٍ فَشَرِبْتُ مِنْهُ حَتَّى إِنِّي
لَأَرَى الرِّيَّ يَخْرُجُ مِنْ أَظْفَارِي ثُمَّ أَعْطَيْتُ فَضْلِي يَعْنِي
عُمَرَ قَالُوا فَمَا أَوَّلْتَهُ يَا رَسُولَ اللَّهِ قَالَ الْعِلْمَ
‘நான் உறங்கிக்
கொண்டிருந்த வேளையில் (என்னுடைய கனவில்) ஒருபால்கோப்பை என்னிடம் கொண்டு
வரப்பட்டது. உடனே (அதிலிருந்த பாலை நான்) தாகம் தீருமளவு குடித்து அது என்னுடைய
நகக் கண்கள் வழியாக வெளியேறுவதைப் பார்த்தேன். பின்னர் மீதமிருந்ததை உமர் இப்னு
கத்தாப் அவர்களுக்குக் கொடுத்தேன்’ என்று இறைத்தூதர் (ஸல்)
அவர்கள் கூறியபோது நபித் தோழர்கள் இறைத்தூதர் அவர்களே! அந்தப்பாலுக்குத் தாங்கள்
என்ன விளக்கம் தருகிறீர்கள்?’ என்று கேட்டதற்கு ‘கல்வி’
என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்”. புஹாரி: 82
இப்னு உமர் (ரலி).
தலைமைத்துவமும்... கிலாஃபத்தும் கிடைக்கும் என்ற முன்னறிவிப்பு பெற்றவர்..
قال رسول الله (صلى الله عليه وسلم): «رأيت في المنام أنِّي
أنزع بِدَلْوِ بَكْرَة على قَليبٍ، فجاء أبو بكر فنزع ذنوباً، أو ذنوبين نزعاً
ضعيفاً، والله يغفرُ له، ثمَّ جاء عمر بن الخطَّاب، فاستحالت غَرْباً، فلم أر
عبقريّاً يَفْري فَرْيَهُ، حتَّى روي النَّاس، وضربوا بِعَطَنٍ»وهذا
الحديث فيه فضيلةٌ ظاهرةٌ لعمر ـ رضي الله عنه ـ تضمَّنها قوله (صلى الله عليه
وسلم): «فجاء عمر بن الخطاب، فاستحالت غرباً… الحديث» ومعنى «استحالت»: صارت،
وتحوَّلت من الصِّغر إِلى الكبر. وأمَّا «العبقريُّ» فهو السَّيِّد، وقيل: الَّذي
ليس فوقه شيءٌ، ومعنى «ضرب النَّاسُ بِعَطَنٍ» أي: أرووا إِبلهم، ثمَّ اووها إِلى
عطنها، وهو الموضع الَّذي تُساق إِليه بعد السَّقي؛ لتستريح. وهذا المنام الذي راه
النَّبيُّ (صلى الله عليه وسلم) مثالٌ واضحٌ لما جرى للصِّدِّيق، وعمر ـ رضي الله
عنهما ـ في خلافتهما، وحسن سيرتهما، وتطور اثارهما، وانتفاع النَّاس بهما، فقد حصل
في خلافة الصِّدِّيق قتالُ أهل الردَّة، وقطع دابرهم، واتِّساع الإِسلام رغم قصر
مدَّة خلافته، فقد كانت سنتين، وأشهراً، فوضع الله فيها البركة، وحصل فيها من
النَّفع الكثير، ولمَّا توفِّي الصِّدِّيق خلفه الفاروق، فاتَّسعت رقعة الإِسلام
في زمنه وتقرَّر للنَّاس من أحكامه ما لم يقع مثله، فكثر انتفاع النَّاس في خلافة عمر
لطولها، فقد مصَّر الأمصار، ودوَّن الدَّواوين، وكثرت الفتوحات، والغنائم.
நான் உறங்கிக்
கொண்டிருந்தபோது (கனவில்) என்னை, வாளி தொங்கிக்கொண்டிருந்த
ஒரு கிணற்றின் அருகே கண்டேன். அதிலிருந்து அல்லாஹ் நாடிய அளவிற்கு(த்தண்ணீர்)
இறைத்தேன். பிறகு அபூ குஹாஃபாவின் மகன் (அபூபக்ர் அவர்கள்) அதை எடுத்துக் கொண்டு
அதிலிருந்து ஒரு வாளி நீரை.. அல்லது இரண்டு வாளிகள் நீரை இறைத்தார். அவர் (சிறிது
நேரம்) இறைத்தபோது சோர்வு தெரிந்தது. அல்லாஹ் அவரின் சோர்வை மன்னிப்பானாக! பிறகு, அது மிகப் பெரிய வாளியாக மாறிவிட்டது. அப்போது அதை கத்தா பின் மகன் உமர்
எடுத்தார். உமர் இறைத்ததைப் போன்று இறைக்கிற (வலிமை மிக்க) ஒரு புத்திசாலியான
(அபூர்வத்) தலைவர் ஒருவரை மக்களில் நான் பார்த்ததில்லை. மக்கள் (தங்கள்
ஒட்டகங்களுக்கு நீர் புகட்டி, நீர் நிலையருகே அவற்றின்)
ஓய்விடத்தில் கட்டி வைக்கும் அளவிற்கு (அவர் நீர் இறைத்தார்.) என நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள்.
ஷைத்தானே கண்டு நடுங்கும் மனிதர்...
عن سعد بن أبي وقاص ـ رضي الله عنه ـ قال: استأذن عمر بن
الخطَّاب على رسول الله (صلى الله عليه وسلم) وعنده نسوةٌ من قريشٍ يُكَلِّمنه،
ويستكثرنه، عاليةٌ أصواتهنَّ على صوته، فلمَّا استأذن عمر بن الخطاب؛ قمن، فبادرن
الحجاب، فأذن له رسول الله (صلى الله عليه وسلم)، فدخل عمر ورسول الله (صلى الله
عليه وسلم) يضحك، فقال عمر: أضحك الله سِنَّك يا رسول الله! فقال النَّبيُّ (صلى
الله عليه وسلم): «عجبت من هؤلاء اللاَّتي كنَّ عندي، فلمَّا سمعن صوتك ابتدرن
الحجاب» قال عمر: فأنت أحقُّ أن يهبن يا رسول الله! ثمَّ قال عمر: يا عدوَّات
أنفسهنَّ! أتهبنني، ولا تهبن رسول الله (صلى الله عليه وسلم)؟! فقلن: نعم أنت
أفظُّ، وأغلظ من رسول الله (صلى الله عليه وسلم). فقال رسول الله (صلى الله عليه
وسلم): «إِيهاً يا بن الخطَّاب! والَّذي نفسي بيده! ما لقيك الشَّيطان سالكاً
فجّاًقطُّ إِلا سلك فجّاً غير فجِّك».
ஒருமுறை)
அல்லாஹ்வின் தூதரிடம் (அவர்களின் மனைவிமார்களான) குறைஷிப் பெண்கள் பேசிக்
கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்கள் நபி (ஸல்)அவர்களிடம் (ஜீவனாம்சத் தொகையை)
அதிகமாகத் தரும்படி தம் குரல்களை உயர்த்தி கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது
உமர் (ரலி) வந்து (உள்ளே வர) அனுமதி கேட்டார்கள். உமர் (ரலி) அனுமதி கேட்டபோது
அப்பெண்கள் அவரச அவசரமாகத் தங்கள் பர்தாக்களை அணிந்தபடி எழுந்தனர். இறைத்தூதர்
(ஸல்) அவர்கள் சிரித்தபடியே உமர் (ரலி) அவர்களுக்கு (உள்ளே வர) அனுமதி
கொடுத்தார்கள். உமர் (ரலி),
‘இறைத்தூதர் அவர்களே! தங்களை ஆயுள் முழுதும் அல்லாஹ்
சிரித்தபடி (மகிழ்ச்சியாக) இருக்கச் செய்வானாக” என்று கூறினார்கள். நபி
(ஸல்) அவர்கள்,
‘என்னிடமிருந்த இந்தப் பெண்களைக் கண்டு நான் வியப்படைகிறேன்.
(என்னிடம் சகஜமாக அமர்ந்திருந்தவர்கள்) உங்கள் குரலைக் கேட்டவுடன் அவரச அவசரமாகப்
பர்தா அணிந்தார்களே”
என்றார்கள். உமர் (ரலி), ‘எனக்கு அஞ்சுவதை
விட அதிகமாக அஞ்சத் தாங்கள் தாம் தகுதியுடையவர்கள் இறைத்தூதர் அவர்களே!” என்று கூறிவிட்டு,
(அப்பெண்களை நோக்கி) ‘தமக்குத் தாமே
பகைவர்களாகி விட்ட பெண்களே! அல்லாஹ்வின் தூதருக்கு அஞ்சாமல் எனக்கா நீங்கள் அஞ்சுகிறீர்கள்?’ என்று கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண்கள், ‘ஆம், அல்லாஹ்வின் தூதருடன் ஒப்பிடும்போது நீங்கள் கடின சித்தமுடையவராகவும் அதிகக்
கடுமை காட்டக்கூடியவராகவும் இருக்கிறீர்கள்” என்று பதிலளித்தார்கள்.
(அப்போது) இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘என் உயிரைத் தன்
கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! (உமரே!) நீங்கள் ஒரு பாதையில் சென்று
கொண்டிருக்கையில் உங்களை ஷைத்தான் கண்டால் உங்களுடைய பாதையல்லாத வேறொரு பாதையில்
தான் அவன் செல்வான்”
என்று கூறினார்கள். புஹாரி :3294
ஸஅது பின் அபீவக்காஸ் (ரலி).
நபி {ஸல்} அவர்களின் அண்மையில் எப்போதும் இருந்தவர்கள்...
وُضِعَ
عُمَرُ علَى سَرِيرِهِ فَتَكَنَّفَهُ النَّاسُ، يَدْعُونَ ويُصَلُّونَ قَبْلَ أنْ
يُرْفَعَ وأَنَا فيهم، فَلَمْ يَرُعْنِي إلَّا رَجُلٌ آخِذٌ مَنْكِبِي، فَإِذَا
عَلِيُّ بنُ أبِي طَالِبٍ فَتَرَحَّمَ علَى عُمَرَ، وقَالَ: ما خَلَّفْتَ أحَدًا
أحَبَّ إلَيَّ أنْ ألْقَى اللَّهَ بمِثْلِ عَمَلِهِ مِنْكَ، وايْمُ اللَّهِ إنْ
كُنْتُ لَأَظُنُّ أنْ يَجْعَلَكَ اللَّهُ مع صَاحِبَيْكَ، وحَسِبْتُ إنِّي كُنْتُ
كَثِيرًا أسْمَعُ النبيَّ صَلَّى اللهُ عليه وسلَّمَ يقولُ: ذَهَبْتُ أنَا وأَبُو
بَكْرٍ، وعُمَرُ، ودَخَلْتُ أنَا وأَبُو بَكْرٍ، وعُمَرُ، وخَرَجْتُ أنَا وأَبُو
بَكْرٍ، وعُمَرُ
உமர் (ரலி)
(இறந்தவுடன்) கட்டிலில் கிடத்தப்பட்டிருந்தார்கள். அப்போது மக்கள், அவரைச் சுற்றிலும் (எல்லாப் பக்கங்களிலும்) சூழ்ந்து பிரார்த்திக்கலாயினர்.
அவரின் ஜனாஸா (சடலம்) எடுக்கப்படுவதற்கு முன்பாக அவருக்காக ஜனாஸாத் தொழுகை
தொழலாயினர். அப்போது நான் அவர்களிடையே இருந்தேன். என் தோளைப் பிடித்துக்
கொண்டிருந்த ஒருவர் தான் என்னை திடுக்கிடச் செய்தார். (யாரென்று திரும்பிப்
பார்த்த போது) அது அலீ இப்னு அபீதாலிப் (ரலி) தாம். அவர்கள், ‘உமர் அவர்களுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக!” என்று பிரார்த்தித்துவிட்டு, ‘(உமரே!) உயரிய நற்செயலுடன்
நான் அல்லாஹ்வைச் சந்திப்பதற்கு முன்மாதிரியாக, நான் விரும்பி ஏற்கத்
தக்கவர் எவரும் உங்களுக்குப் பின்னால் இல்லை. (நீங்கள் தாம் அத்தகைய மனிதர்.)
அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் உங்களை உங்கள் தோழர்க(ளான நபி – ஸல் –
அவர்கள் மற்றும் அபூபக்ர் – ரலி –
அவர்)கள் இருவருடனும் தான் (அவர்களின் மண்ணறைக்கு அருகில்
தான்) அடங்கச் செய்வான் என்று எண்ணியிருந்தேன். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள்,
‘நானும் அபூபக்ரும் உமரும் (இங்கே) சென்றோம்” என்றும் ‘நானும் அபூபக்ரும் உமரும் (இந்த இடத்திற்கு) உள்ளே புகுந்தோம்” என்றும் ‘நானும் அபூபக்ரும் உமரும் புறப்பட்டோம்” என்று சொல்வதை நான்
நிறையச் செவியுற்றிருக்கிறேன் எனக் கூறினார்கள். புஹாரி : 3685
இப்னு அப்பாஸ் (ரலி).
அதிக ரோஷம் மிக்கவர் உமர் (ரலி) அவர்கள்...
இஸ்லாத்திற்கும்,
மாநபி {ஸல்} அவர்களுக்கும், முஃமின்களுக்கும் எதிராக யார் களம் கண்டாலும் முதல்
நபராய் எதிர்த்து நிற்கும் ரோஷக்காரர் உமர் (ரலி) அவர்கள். “அல்லாஹ்வின் தூதரே!
அனுமதி கொடுங்கள்! இவரின் தலையை கொய்து விடுகின்றேன்!” என்று வாளேந்தி மாநபி {ஸல்}
அவர்களின் முன்பாக உமர் (ரலி) அவர்கள் முறையிட்ட பல தருணங்கள் வரலாற்றில் உண்டு.
حَدَّثَنَا
أَبُو الْيَمَانِ ، أَخْبَرَنَا شُعَيْبٌ ، عَنْ الزُّهْرِيِّ ، قَالَ :
أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ، أَنَّ أَبَا سَعِيدٍ
الْخُدْرِيَّ رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : بَيْنَمَا نَحْنُ عِنْدَ رَسُولِ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَقْسِمُ قِسْمًا أَتَاهُ ذُو
الْخُوَيْصِرَةِ وَهُوَ رَجُلٌ مِنْ بَنِي تَمِيمٍ ، فَقَالَ : يَا رَسُولَ
اللَّهِ اعْدِلْ ، فَقَالَ :
وَيْلَكَ
وَمَنْ يَعْدِلُ إِذَا لَمْ أَعْدِلْ قَدْ خِبْتَ وَخَسِرْتَ ، إِنْ لَمْ أَكُنْ
أَعْدِلُ فَقَالَ عُمَرُ : يَا رَسُولَ اللَّهِ ائْذَنْ لِي فِيهِ فَأَضْرِبَ
عُنُقَهُ ، فَقَالَ : دَعْهُ فَإِنَّ لَهُ أَصْحَابًا يَحْقِرُ أَحَدُكُمْ
صَلَاتَهُ مَعَ صَلَاتِهِمْ وَصِيَامَهُ مَعَ صِيَامِهِمْ يَقْرَءُونَ الْقُرْآنَ
لَا يُجَاوِزُ تَرَاقِيَهُمْ يَمْرُقُونَ مِنَ الدِّينِ كَمَا يَمْرُقُ السَّهْمُ
مِنَ الرَّمِيَّةِ يُنْظَرُ إِلَى نَصْلِهِ فَلَا يُوجَدُ فِيهِ شَيْءٌ ، ثُمَّ
يُنْظَرُ إِلَى رِصَافِهِ فَمَا يُوجَدُ فِيهِ شَيْءٌ ، ثُمَّ يُنْظَرُ إِلَى
نَضِيِّهِ وَهُوَ قِدْحُهُ فَلَا يُوجَدُ فِيهِ شَيْءٌ ، ثُمَّ يُنْظَرُ إِلَى
قُذَذِهِ فَلَا يُوجَدُ فِيهِ شَيْءٌ قَدْ سَبَقَ الْفَرْثَ وَالدَّمَ آيَتُهُمْ
رَجُلٌ أَسْوَدُ إِحْدَى عَضُدَيْهِ مِثْلُ ثَدْيِ الْمَرْأَةِ أَوْ مِثْلُ
الْبَضْعَةِ تَدَرْدَرُ وَيَخْرُجُونَ عَلَى حِينِ فُرْقَةٍ مِنَ النَّاسِ ، قَالَ
أَبُو سَعِيدٍ : فَأَشْهَدُ أَنِّي سَمِعْتُ هَذَا الْحَدِيثَ مِنْ رَسُولِ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَشْهَدُ أَنَّ عَلِيَّ بْنَ أَبِي
طَالِبٍ قَاتَلَهُمْ وَأَنَا مَعَهُ فَأَمَرَ بِذَلِكَ الرَّجُلِ فَالْتُمِسَ
فَأُتِيَ بِهِ حَتَّى نَظَرْتُ إِلَيْهِ عَلَى نَعْتِ النَّبِيِّ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ الَّذِي نَعَتَهُ
நாங்கள், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஹவாஸின்) போரில் கிடைத்த செல்வங்களைப் பங்கிட்டுக்
கொண்டிருந்தபோது அவர்களின் அருகே இருந்தோம். அப்போது 'பனூ தமீம்'
குலத்தைச் சேர்ந்த 'துல் குவைஸிரா' என்னும் மனிதர் வந்து,
'இறைத்தூதர் அவர்களே! நீதியுடன் நடந்து கொள்ளுங்கள்"
என்று கூறினார். உடனே நபி(ஸல்) அவர்கள், 'உனக்குக்
கேடுண்டாகட்டும்! நான் நீதியுடன் நடந்து கொள்ளவில்லையென்றால் வேறு யார் தான்
நீதியுடன் நடந்து கொள்வார்கள்? நான் நீதியுடன் நடந்து
கொள்ளவில்லையென்றால் நீ இழப்புக்குள்ளாகி நஷ்டமடைந்து விடுவாய்" என்று
பதிலளித்தார்கள். உடனே,
உமர்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே!
எனக்கு இவர் விவகாரத்தில் அனுமதி கொடுங்கள். இவரின் கழுத்தைக் கொய்து
விடுகிறேன்" என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இவரைவிட்டுவிடுங்கள். நிச்சயமாக, இவருக்குத் தோழர்கள்
சிலர் இருக்கிறார்கள். அவர்களின் தொழுகையுடன் உங்களுடைய தொழுகையையும், அவர்களின் நோன்புடன் உங்களுடைய நோன்பையும் ஒப்பிட்டுப் பார்த்து உங்களுடைய
தொழுகையையும் உங்களுடைய நோன்பையும் அற்பமானவையாகக் கருதுவீர்கள்.
(அந்த அளவிற்கு அவர்களின்
வழிபாடு அதிகமாக இருக்கும். ஆயினும்,) அவர்கள் குர்ஆனை
ஓதுவார்கள். ஆனால்,
அது அவர்களின் கழுத்தெலும்பை (தொண்டையை) தாண்டிச்
செல்லாது. வேட்டைப் பிராணியைவிட்டு (அதன் உடலைத் துளைக்கின்ற) அம்பு (உடலின்
மறுபக்கம்) வெளிப்பட்டுச் சென்று விடுவதைப் போல் மார்க்கத்திலிருந்து அவர்கள்
வெளியேறிச் செல்வார்கள். (அந்தப் பிராணியின் உடலைத் துளைத்து வெளி வந்ததற்கான
அடையாளம் எதுவும் இருக்கிறதா என்று) அம்பின் முனை பார்க்கப்படும். அதில்
(அடையாளம்) எதுவும் காணக் கிடைக்காது. பிறகு (அம்பில்) அதன் (முனையைப்
பொருத்துவதற்குப் பயன்படும்) நாணைப் பார்க்கப்படும். அதிலும் (அடையாளம்) எதுவும்
காணக்கிடைக்காது. பிறகு,
அம்பின் (அடிப்பாகக்) குச்சியைப் பார்க்கப்படும். அதிலும்
எதுவும் காணப்படாது. பிறகு,
அம்பின் இறகைப் பார்க்கப்படும். அதிலும் (அடையாளம்) எதுவும்
காணப்படாது.
அம்பானது
சாணத்தையும் இரத்தத்தையும் (அவை தன் மீது படாதவாறு) முந்தியிருக்கும். அவர்களின்
அடையாளம் ஒரு கறுப்பு நிற மனிதராவார். அவரின் இரண்டு கொடுங்கைகளில் ஒன்று
பெண்ணின் கொங்கை போன்றிருக்கும்... அல்லது துடிக்கும் இறைச்சித் துண்டு
போன்றிருக்கும்... அவர்கள் மக்களிடையே பிரிவினை ஏற்படும் வேளையில்
புறப்படுவார்கள்" என்று கூறினார்கள்.
நான் இந்த
நபிமொழியை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து கேட்டேன் என்று சாட்சியம்
அளிக்கிறேன். மேலும்,
அந்தக் கூட்டத்தாருடன் அலீ(ரலி) போர் புரிந்தார்கள்.
அப்போது நானும் அலீயுடன் இருந்தேன். அலீ(ரலி) (நபி - ஸல் - அவர்கள் அடையாளமாகக்
கூறிய) அந்த மனிதரைக் கொண்டு வரும் படி கட்டளையிட, அவ்வாறே அவர் தேடப்பட்டு கொண்டு வரப்பட்டார். நபி(ஸல்) அவர்களின் வர்ணணையின்
படியே அவர் இருப்பதை பார்த்தேன்.( புகாரி 3610. அபூ ஸயீத்
அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்
حَدَّثَنَا
أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي
سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، أَخْبَرَهُ:
أَنَّ عُمَرَ بْنَ الخَطَّابِ: انْطَلَقَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ فِي رَهْطٍ مِنْ أَصْحَابِهِ قِبَلَ ابْنِ صَيَّادٍ، حَتَّى
وَجَدَهُ يَلْعَبُ مَعَ الغِلْمَانِ فِي أُطُمِ بَنِي مَغَالَةَ، وَقَدْ قَارَبَ
ابْنُ صَيَّادٍ يَوْمَئِذٍ الحُلُمَ، فَلَمْ يَشْعُرْ حَتَّى ضَرَبَ رَسُولُ
اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ظَهْرَهُ بِيَدِهِ، ثُمَّ قَالَ:
«أَتَشْهَدُ أَنِّي رَسُولُ اللَّهِ» فَنَظَرَ إِلَيْهِ فَقَالَ: أَشْهَدُ أَنَّكَ
رَسُولُ الأُمِّيِّينَ، ثُمَّ قَالَ ابْنُ صَيَّادٍ: أَتَشْهَدُ أَنِّي رَسُولُ اللَّهِ،
فَرَضَّهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ قَالَ: «آمَنْتُ
بِاللَّهِ وَرُسُلِهِ» ثُمَّ قَالَ لِابْنِ صَيَّادٍ: «مَاذَا تَرَى» قَالَ:
يَأْتِينِي صَادِقٌ وَكَاذِبٌ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ: «خُلِّطَ عَلَيْكَ الأَمْرُ» قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ: «إِنِّي خَبَأْتُ لَكَ خَبِيئًا» قَالَ: هُوَ الدُّخُّ،
قَالَ: «اخْسَأْ، فَلَنْ تَعْدُوَ قَدْرَكَ» قَالَ عُمَرُ: يَا رَسُولَ اللَّهِ،
أَتَأْذَنُ لِي فِيهِ أَضْرِبْ عُنُقَهُ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ: «إِنْ يَكُنْ هُوَ لاَ تُسَلَّطُ عَلَيْهِ، وَإِنْ لَمْ
يَكُنْ هُوَ فَلاَ خَيْرَ لَكَ فِي قَتْلِهِ»،
நபிகள் நாயகம்
(ஸல்) அவர்களோடு உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் இப்னுஸ் ஸய்யாதை நோக்கி நபித் தோழர்கள் சிலருடன் நடந்தார்கள். பனூ மஃகாலா' குலத்தாரின் மாளிகைகளுக்கருகே சிறுவர்களுடன் இப்னு ஸய்யாத் விளையாடிக்
கொண்டிருக்கக் கண்டார்கள். -அப்போது இப்னு ஸய்யாத் பருவ வயதை
நெருங்கிவிட்டிருந்தார்.- நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கரத்தால் அவனது
முதுகில் தட்டும் வரை அவன்
உணரவில்லை. பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நான் என்று நீ உறுதி கூறுகிறாயா? என்று கேட்டார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பார்த்துவிட்டு இப்னு ஸய்யாத், நீங்கள் (எழுதப் படிக்கத் தெரியாத மக்களான) உம்மீகளின் தூதர் என்று நான் உறுதி
கூறுகிறேன் என்றான்.
பிறகு இப்னு ஸய்யாத்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம், நான் அல்லாஹ்வின் தூதன்
என்று உறுதி கூறுகின்றீர்களா? என்று கேட்டான். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவனைத் தள்ளிவிட்டு விட்டு, நான் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர்கள் மீதும்
நம்பிக்கை கொண்டேன் என்று கூறினார்கள். பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்னு
ஸய்யாதிடம்,
நீ என்ன காண்கிறாய்? என்று கேட்டார்கள்.
அதற்கு இப்னு ஸய்யாத் என்னிடம், மெய்யான செய்திகளும், பொய்யான செய்திகளும் வருகின்றன என்று சென்னான்.
நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள்,
உனக்கு இப்பிரச்சினையில் குழப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது
என்று கூறிவிட்டு,
நான் ஒன்றை மனத்தில் மறைத்து வைத்துள்ளேன். (அது என்னவென்று
சொல்!) என்று கேட்டார்கள். அது துக் என்று பதிலளித்தான். உடனே நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் தூர விலகிப்போ;
நீ உன் எல்லையைத் தாண்டி விட முடியாது என்று சொன்னார்கள்.
உமர் (ரலி) அவர்கள்,
இவனைக் கொல்ல எனக்கு அனுமதியளிப்பீர்களா? இவனது கழுத்தைக் கொய்து விடுகிறேன் என்று கேட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள்,
இவன் அவனாக (தஜ்ஜாலாக) இருந்தால் இவனைக் கொல்லும் பொறுப்பு
உங்களுக்குக் கொடுக்கப்படவில்லை. இவன் அவனில்லையென்றால் இவனைக் கொல்வதால்
உங்களுக்கு நன்மையேதும் இல்லை என்று சொன்னார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) நூல் : புகாரி 6173,
1354
நன்மையான காரியங்களின் மீது ஆசை கொண்டவர்கள்..
حَدَّثَنَا عَمْرُو بْنُ
عَوْنٍ، قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ،
قَالَ: قَالَ عُمَرُ بْنُ الخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ، " وَافَقْتُ
رَبِّي فِي ثَلاَثٍ: فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ، لَوِ اتَّخَذْنَا مِنْ مَقَامِ
إِبْرَاهِيمَ مُصَلًّى، فَنَزَلَتْ: {وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ
مُصَلًّى} [البقرة: 125] وَآيَةُ الحِجَابِ، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، لَوْ
أَمَرْتَ نِسَاءَكَ أَنْ يَحْتَجِبْنَ، فَإِنَّهُ يُكَلِّمُهُنَّ البَرُّ
وَالفَاجِرُ، فَنَزَلَتْ آيَةُ الحِجَابِ، وَاجْتَمَعَ نِسَاءُ النَّبِيِّ صَلَّى
اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الغَيْرَةِ عَلَيْهِ، فَقُلْتُ لَهُنَّ: (عَسَى
رَبُّهُ إِنْ طَلَّقَكُنَّ أَنْ يُبَدِّلَهُ أَزْوَاجًا خَيْرًا مِنْكُنَّ)،
فَنَزَلَتْ هَذِهِ الآيَةُ
உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: மூன்று விஷயங்களில் என் ஆசைக்கு ஏற்ப ரப்பும் இறை வசனங்களை இறக்கியருளினான்.
1..அல்லாஹ்வின் தூதரே! மகாமு இப்ராஹீமை தொழுமிடமாக நாம்
ஆக்கலாமே என்று கேட்டேன். அப்போது, "மகாமு இப்ராஹீமில் ஒரு பகுதியை தொழும்
இடமாக்கிக் கொள்ளுங்கள்'' எனும் இறைவசனம் அருளப்பெற்றது.
2. பர்தா (சட்டம்) குறித்த
இறைவசனமும் இவ்வாறே இறங்கியது. "அல்லாஹ்வின் தூதரே!
தங்களின் மனைவியரிடம் நல்லவரும் கெட்டவரும் உரையாடுகின்றனர். எனவே தங்கள்
மனைவியரை ஹிஜாபைப் பேணுமாறு தாங்கள் பணிக்கலாமே! '' என்று சொன்னேன். அப்போது
ஹிஜாப் குறித்த இறைவசனம் அருளப்பெற்றது.
3. (ஒரு முறை) நபி (ஸல்) அவர்களின் மனைவியர் அனைவரும் சேர்ந்து
கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் வைராக்கியமாக
நடந்துகொண்டபோது நான் அவர்களிடம்,
"இறைத்தூதர்
உங்களை மணவிலக்குச் செய்துவிட்டால், உங்களைவிடச் சிறந்த துணைவியரை அல்லாஹ் அவருக்கு வழங்கலாம்'' என்று சொன்னேன். அப்போது இந்த (66:5ஆவது) இறைவசனம்
அருளப்பெற்றது.
( அறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல் : புகாரி 402 )
முஸ்லிமுடைய அறிவிப்பில் மேலும் ஒரு விஷயம்
சொல்லப்படுகிறது.
حَدَّثَنَا عُقْبَةُ بْنُ
مُكْرَمٍ الْعَمِّىُّ حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَامِرٍ قَالَ جُوَيْرِيَةُ بْنُ
أَسْمَاءَ أَخْبَرَنَا عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ قَالَ قَالَ عُمَرُ
وَافَقْتُ رَبِّى فِى ثَلاَثٍ فِى مَقَامِ إِبْرَاهِيمَ وَفِى الْحِجَابِ وَفِى
أُسَارَى بَدْرٍ.
உமர் (ரலி) அவர்கள்
கூறியதாவது:
மூன்று விஷயங்களில் என் ஆசைக்கு ஏற்ப ரப்பும் இறை வசனங்களை இறக்கியருளினான்.
அவை: 1. மகாமு இப்ராஹீம்
விஷயத்தில், 2. பர்தா விஷயத்தில், 3. பத்ருப் போரில் பிடிக்கப்பட்ட கைதிகள் விஷயத்தில். ( நூல்
: முஸ்லிம் 6359 )
இதில் பத்ருப்போரில் கைது
செய்யப்பட்டவர்கள் விஷயம் மூன்றாவது விஷயமாக சொல்லப்பட்டுள்ளது.
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ:
حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنِي
نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ
أُبَيٍّ لَمَّا تُوُفِّيَ، جَاءَ ابْنُهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَعْطِنِي قَمِيصَكَ أُكَفِّنْهُ فِيهِ،
وَصَلِّ عَلَيْهِ، وَاسْتَغْفِرْ لَهُ، فَأَعْطَاهُ النَّبِيُّ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ قَمِيصَهُ، فَقَالَ: «آذِنِّي أُصَلِّي عَلَيْهِ»، فَآذَنَهُ،
فَلَمَّا أَرَادَ أَنْ يُصَلِّيَ عَلَيْهِ جَذَبَهُ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ،
فَقَالَ: أَلَيْسَ اللَّهُ نَهَاكَ أَنْ تُصَلِّيَ عَلَى المُنَافِقِينَ؟ فَقَالَ:
" أَنَا بَيْنَ خِيَرَتَيْنِ، قَالَ: {اسْتَغْفِرْ لَهُمْ أَوْ لاَ
تَسْتَغْفِرْ لَهُمْ إِنْ تَسْتَغْفِرْ لَهُمْ سَبْعِينَ مَرَّةً، فَلَنْ يَغْفِرَ
اللَّهُ لَهُمْ} [التوبة: 80] " فَصَلَّى عَلَيْهِ، فَنَزَلَتْ: {وَلاَ
تُصَلِّ عَلَى أَحَدٍ مِنْهُمْ مَاتَ أَبَدًا، وَلاَ تَقُمْ عَلَى قَبْرِهِ}
[التوبة: 84]
முனாபிக்குகளின் தலைவன் அப்துல்லாஹ் பின் உபை மரணித்த போது
அவருக்கு ஜனாஸா தொழுகை நடத்த நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் முயன்ற போது அதை உமர் (ரலி) அவர்கள் ஆட்சேபித்தார்கள். அதையும் மீறி நபி {ஸல்} அவர்கள்
அவனுக்கு ஜனாஸா தொழுகை நடத்தினார்கள்.
இனிமேல் இவ்வாறு செய்யக் கூடாது என்று அதைத் தடை செய்து அல்லாஹ் வசனத்தை அருளினான்.
وأخرج ابن أبي حاتم في
تفسيره عن أنس قال: قال عمر: وافقت ربي في… هذه الآية: (وَلَقَدْ خَلَقْنَا
الْإِنسَانَ مِن سُلَالَةٍ مِّن طِينٍ). الآية فلما نزلت قلت أنا: فتبارك الله
أحسن الخالقين. فنزلت: (فَتَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ).
”முஃமினூன் 12
முதல் 14 வரையிலான இறைவசனங்களை
நான் ஓதும் போது அல்லாஹ்வின் படைப்பாற்றலையும், மனிதனின் அழகிய
தோற்றத்தையும் கண்டு வியந்து “அல்லாஹ் படைப்பாளர்களிலெல்லாம் மிக
அழகான படைப்பாளன்”
என்று நினைத்தேன். என் உள்ளக்கிடங்கின் ஆசைக்கு தக்கவாறு
அல்லாஹ்வும் இறக்கியருளினான் என உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ( நூல்:
இப்னு அபீ ஹாத்தம் )
அல்லாஹ்வுக்கு அதிகம் அஞ்சுபவர்...
جاء رسول بِالشَّامِ
عمر بن
الخطاب من إحدى الغزوات فبشره بالنصر
فسأله عمر بن الخطاب : متى بدأ القتال ؟
فقالوا : قبل الضحى
قال : ومتى كان النصر ؟
فقالوا : قبل المغرب
فبكى سيدنا عمر حتى ابتلت لحيته..
فقالوا : يا أمير المؤمنين نبشرك بالنصر فتبكى ؟
فقال رضي الله عنه : والله إن الباطل لا يصمد أمام الحق
طوال هذا الوقت إلا بذنب أذنبتموه أنتم أو أذنبته أنا
ابن
الحاج في كتاب المدخل 3ج/ص5
أبو بكر
الطرطوشي في كتاب سراج الملوك ص: 174
ஷாம் தேசத்திற்கு உமர் (ரலி) அவர்கள் அனுப்பியிருந்த படைப்பிரிவுகளின் ஓர் படைப்பிரிவில் இடம் பெற்றிருந்த தூதுவர் ஒருவர் அமீருல் முஃமினீன் உமர் (ரலி) அவர்களின் சபைக்கு வந்திருந்தார்.வந்தவர்,”அமீருல் முஃமினீன் அவர்களே! நமது இஸ்லாமியப் படை வெற்றி பெற்றுவிட்டது. அல்லாஹ் நமது படைப்பிரிவுக்கு வெற்றியை நல்கினான்” என்று கூறினார்.
அது கேட்ட உமர் (ரலி) அவர்கள் “எப்போது நமது படை வீரர்கள் எதிரணியினரின் படை வீரர்களோடு போரிட ஆரம்பித்தனர்?” என்று கேட்டார்கள்.
அதற்கவர், ”ளுஹா உடைய நேரத்திற்கு சற்று முன்னதாக” என்று பதில் கூறினார்.
அப்போது, உமர் (ரலி) அவர்கள் “எப்போது முஸ்லிம் படையினருக்கு வெற்றி கிடைத்தது?” என்று கேட்டார்கள்.
அதற்கவர், “மஃக்ரிப் உடைய நேரத்திற்கு சற்று முன்னதாக” என்று பதில் கூறினார்.
இந்த பதிலைக் கேட்டதும் தான் தாமதம் உமர் (ரலி) அவர்கள் அழ ஆரம்பித்து விட்டார்கள். அழுகையின் உச்சபட்சமாக தாடி முழுவதும் நனைந்து தேம்பித் தேம்பி அழுதார்கள்.
சபையில் இருந்தவர்கள், உமர் (ரலி) அவர்களை சமாதானப்படுத்த முயற்சி செய்கின்றார்கள். எனினும், உமர் (ரலி) அவர்கள் அழுகையை நிறுத்தவில்லை.
அப்போது, சபையில் இருந்தவர்கள் “அமீருல் முஃமினீன் அவர்களே! அவர் இப்போது என்ன சொல்லி விட்டார் என்று நீங்கள் அழுகின்றீர்கள்? அவர் நல்ல செய்தியைத் தானே சொல்லியிருக்கின்றார்? நமது படை வெற்றி பெற்றது மகிழ்ச்சியான செய்தி தானே?” என்று கேட்டனர்.
அதற்கு, உமர் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் மீது ஆணையாக! அசத்தியத்திற்கெதிரான அறப்போரட்டத்தில் சத்தியத்தின் வெற்றி இவ்வளவு நேரம் வரை தாமதம் ஆகாது, அப்படியானால், நான் ஏதாவது பாவம் செய்திருக்க வேண்டும்? அல்லது மக்களாகிய நீங்கள் ஏதாவது பாவம் செய்திருக்க வேண்டும்?” இல்லையென்றால், இவ்வுளவு நேரம் வெற்றி தாமதப்பட்டிருக்காது”. என்று பதில் கூறினார்கள்.( நூல்: அல் மத்ஃகல் லிஇமாமி இப்னுல் ஹாஜ் (ரஹ்)…, ஸிராஜுல் முலூக் லி இமாமி அத் தர்தூஸீ (ரஹ்)… )
No comments:
Post a Comment