Thursday, 27 July 2023

ஆஷூரா படிப்பினைகளின் புதையல்!!!

 

ஆஷூரா படிப்பினைகளின் புதையல்!!!


இருள் படர்ந்தால் மறு பக்கம் விடியல் உண்டு என்பது இயற்கை.

இருள் சூழ்ந்து இருக்கும் போதே விடியலை பார்க்க முடியும், விடியலின் பிரகாசத்தை அனுபவிக்க முடியும் என்பதே இறைவன் வகுத்த நியதி.

ஆம்! நெருப்பு தன் ஜுவாலையை ஆவர்த்தனமாக வெளிப்படுத்திக் கொண்டே தான் நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு குளிர்விக்கும் சோலையாக மாறியது.

இறைவனின் மீதான அசாத்தியமான, அசைக்க முடியாத நம்பிக்கை எப்போதும் தனியொரு மனிதனையோ, ஒரு சமூகத்தையோ காப்பாற்றாமல் இருந்ததில்லை என்பதை பறை சாற்றும் மகத்தான செய்தியைச் சுமந்தது தான் ஆஷூரா தினம்.

அன்று தான் இறைத்தூதர் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும், அவர்களின் சமூகமான பனூ இஸ்ரவேலர்களும் ஈடேற்றம் பெற்ற நாள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: "அல்லாஹ்வின்  தூதர் (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது, யூதர்கள் முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்றிருப்பதைக் கண்டார்கள். நீங்கள் நோன்பு நோற்றிருக்கும் இது என்ன நாள்?” என்று கேட்டார்கள். அதற்கு யூதர்கள், “இது ஒரு மகத்தான நாள்; இந்த நாளில் தான் மூஸாவையும், அவருடைய சமுதாயத்தாரையும் இறைவன் காப்பாற்றி, ஃபிர்அவ்னையும் அவனுடைய சமுதாயத்தாரையும் (செங்கடலில்) மூழ்கடித்தான்.

எனவே, மூசா (அலை) அவர்கள் (இறைவனுக்கு) நன்றி தெரிவிக்கும் முகமாக (இந்நாளில்) நோன்பு நோற்றார்கள்.

ஆகவே, நாங்களும் இந்நாளில் நோன்பு நோற்கிறோம்.என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களை விட நாங்களே மூஸா (அலை) அவர்களுக்கு மிகவும் உரியவர்களும், நெருக்கமானவர்களும் ஆவோம்என்று கூறினார்கள்.

பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்நாளில்) தாமும் நோன்பு நோற்று, பிறருக்கும் நோன்பு நோற்குமாறும் (மக்களுக்குக்) கட்டளையுமிட்டார்கள்.

ஆஷூரா பல்வேறு படிப்பினைகளின் புதையல் என்றால் அது மிகையல்ல.

இந்த நபிமொழி நமக்கு மூன்று பாடங்களை சொல்லித் தருகின்றது.

ஒன்று:- இறைவன் தனக்கு மட்டும் அல்ல தம்மைப் போன்ற இறைத்தூதருக்கும், இறைநம்பிக்கையாளர்களுக்கும் செய்த உதவியை நினைத்துப் பார்த்து நன்றிப் பெருக்கோடு இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்ற மகத்தான முதல் படிப்பினையை இந்த உம்மத்துக்கு விசாலமாகவே கற்றுத் தருகிறார்கள் மாநபி (ஸல்) அவர்கள்.

அதுவும் அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்தமான ஒரு அமலைக் கொண்டு அவனுக்கு நன்றி செலுத்த கற்றுத் தருகிறார்கள்.

ஆகவே, வாழ்க்கையில் எப்போதெல்லாம் அல்லாஹ் நமக்கு பேருபகாரம் செய்து விட்டதாக நாம் நினைக்கின்றோமோ, இந்த உம்மத்தில் எங்கோ யாருக்கோ அல்லாஹ் மகத்தான உதவிகளைப் புரிந்ததாக நாம் கேள்விப்படுகின்றோமோ அப்போது நாம் நன்றிப் பெருக்கோடு நோன்பு வைத்து இறைவனை நன்றி பாராட்ட உறுதி மொழி எடுத்துக் கொள்வோம்.

இரண்டு: அநியாயமும், அக்கிரமும் செய்கிற எவரையும் நீண்ட காலத்திற்கு அந்த அநியாயம் செய்வதிலும், அக்கிரமம் செய்வதிலும் நீடிக்க வைப்பதில்லை. ஒரேயடியாக தண்டித்து விடுகிறான். அநியாயம் செய்தவர்கள் அழிக்கப்பட்ட நாளை நினைத்து பெருமிதம் கொள்ளும், மகிழ்ச்சி அடையும் ஒரு சமூகத்தை, காலம் காலமாக அதைப் பற்றி பேசும் ஒரு சமூகத்தை உருவாக்குகின்றான். உலகம் என்ற ஒன்று இயங்கும் காலம் முழுமைக்கும் பேசு பொருளாக அவர்களை ஆக்கிவிடுவான்.

فَالْيَوْمَ نُـنَجِّيْكَ بِبَدَنِكَ لِتَكُوْنَ لِمَنْ خَلْفَكَ اٰيَةً وَاِنَّ كَثِيْرًا مِّنَ النَّاسِ عَنْ اٰيٰتِنَا لَغٰفِلُوْنَ

எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்” (என்று அவனிடம் கூறப்பட்டது). ( அல்குர்ஆன்: 10: 92 )

மூன்று: எக்காலத்திலும் அல்லாஹ்வை நம்பியவர்களை அல்லாஹ் கை விடுவதில்லை. எந்த நேரத்திலும் கை விடுவதில்லை. பிரச்சினையின் துவக்கமானாலும் சரி, பிரச்சினையின் இறுதி கட்டத்தில் இருந்தாலும் சரி.

اَمَّنْ يُّجِيْبُ الْمُضْطَرَّ اِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوْٓءَ وَيَجْعَلُكُمْ خُلَفَآءَ الْاَرْضِ‌ ءَاِلٰـهٌ مَّعَ اللّٰهِ ‌ؕ قَلِيْلًا مَّا تَذَكَّرُوْنَ

கஷ்டத்திற்குள்ளானவன் அவனை அழைத்தால் அவனுக்கு பதில் கொடுத்து, அவன் துன்பத்தை நீக்குபவனும், உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? (இல்லை) எனினும் (இவையெல்லாம் பற்றி) நீங்கள் சிந்தித்துப் பார்ப்பது மிகக் குறைவே யாகும். ( அல்குர்ஆன்: 27: 62 )

فَاَ تْبَعُوْهُمْ مُّشْرِقِيْنَ‏

பிறகு, சூரியன் உதிக்கும் நேரத்தில் (ஃபிர்அவ்னின் கூட்டத்தார்) இவர்களைப் பின் தொடர்ந்தார்கள்.

فَلَمَّا تَرَآءَ الْجَمْعٰنِ قَالَ اَصْحٰبُ مُوْسٰٓى اِنَّا لَمُدْرَكُوْنَ‌ۚ‏

இவ்விரு கூட்டத்தினரும் ஒருவரையொருவர் கண்டபோது: நிச்சயமாக நாம் பிடிபட்டோம்என்று மூஸாவின் தோழர்கள் கூறினர்.


 قَالَ كَلَّا‌‌ ۚ اِنَّ مَعِىَ رَبِّىْ سَيَهْدِيْنِ‏

அதற்கு (மூஸா), “ஒருக்காலும் இல்லை! நிச்சயமாக என் இறைவன் என்னுடன் இருக்கிறான். எனக்கு சீக்கிரமே அவன் வழி காட்டுவான்என்று கூறினார்;.

فَاَوْحَيْنَاۤ اِلٰى مُوْسٰٓى اَنِ اضْرِبْ بِّعَصَاكَ الْبَحْرَ‌ؕ فَانْفَلَقَ فَكَانَ كُلُّ فِرْقٍ كَالطَّوْدِ الْعَظِيْمِ‌ۚ‏

உம் கைத்தடியினால் இந்தக் கடலை நீர் அடியும்என்று மூஸாவுக்கு வஹீ அறிவித்தோம். (அவ்வாறு அடித்ததும் கடல்) பிளந்தது; (பிளவுண்ட) ஒவ்வொரு பகுதியும் பெரும் மலை போன்று ஆகிவிட்டது.

 وَاَزْلَـفْنَا ثَمَّ الْاٰخَرِيْنَ‌ۚ‏

(பின் தொடர்ந்து வந்த) மற்றவர்களையும் நாம் நெருங்கச் செய்தோம்.

 وَاَنْجَيْنَا مُوْسٰى وَمَنْ مَّعَهٗۤ اَجْمَعِيْنَ‌ۚ‏

மேலும், நாம் மூஸாவையும், அவருடன் இருந்த அனைவரையும் காப்பற்றினோம்.

ثُمَّ اَغْرَقْنَا الْاٰخَرِيْنَ‌ؕ‏

பிறகு, மற்றவர்களை (ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை) நாம் மூழ்கடித்து விட்டோம்.

 اِنَّ فِىْ ذٰ لِكَ لَاَيَةً

நிச்சயமாக இதிலே படிப்பினை (அத்தாட்சி) இருக்கிறது; ( அல்குர்ஆன்: 26: 60 - 67 )

ஃபிர்அவ்ன்  அழிக்கப்பட்டு  உலக அழிவு நாள் வரை காட்சிப் பொருளாக அல்லாஹ் ஆக்கியதன் பிண்ணனியை நாம் தெரிந்து கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.

குர்ஆனில் அதிகமாக கூறப்படும் தீயவன் ஒருவனின் பெயர் இருக்குமானால் அது ஃபிர்அவ்னின் பெயர் மட்டுமே.

ஷைத்தானின் பெயருக்கு அடுத்த இடம் ஃபிர்அவ்னுக்குத் தான். ஷைத்தானின் பெயர் 88 முறை இடம் பெறுகிறது.

ஃபிர்அவ்னின் பெயர் 27 அத்தியாயங்களில் சுமார் 74 முறை இடம் பெறுகிறது. அதிகபட்சமாக அல் அஃராஃப் மற்றும் சூரா அல் ஃகாஃபிர் ஆகிய சூராக்களில் 9 முறை இடம் பெறுகிறது.

ஒவ்வொரு இடத்திலும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவனுடைய தீய பண்புகளை அடையாளப் படுத்துகின்றான்.

ஒட்டுமொத்த அவனுடைய தீய பண்புகளையும் வட்டுறுக்கமாக அல்லாஹ் ஒரேயொரு வசனத்தில் இப்படி குறிப்பிடுவான்.

اِنَّ فِرْعَوْنَ عَلَا فِى الْاَرْضِ وَجَعَلَ اَهْلَهَا شِيَـعًا يَّسْتَضْعِفُ طَآٮِٕفَةً مِّنْهُمْ يُذَبِّحُ اَبْنَآءَهُمْ وَيَسْتَحْىٖ نِسَآءَهُمْ‌ ؕ اِنَّهٗ كَانَ مِنَ الْمُفْسِدِيْنَ‏

 

நிச்சயமாக ஃபிர்அவ்ன் இப்பூமியில் பெருமையடித்துக் கொண்டு, அந்த பூமியிலுள்ளவர்களைப் (பல) பிரிவினர்களாக்கி, அவர்களிலிருந்து ஒரு கூட்டத்தாரை பலஹீனப்படுத்தினான்; அவர்களுடைய ஆண் குழந்தைகளை அறுத்(துக் கொலை செய்)து பெண் குழந்தைகளை உயிருடன் விட்டும் வைத்தான்; நிச்சயமாக அவன் குழப்பம் செய்வோரில் ஒருவனாக இருந்தான். ( அல்குர்ஆன்:  28: 4 )

 

ஒருவனிடம் இடம் பெற்றுள்ள தீய பண்புகள் எவ்வளவு பாரதூரமான பாவங்களுக்கும் இறைவனின் கோபத்திற்கும் ஒருவனை அழைத்துச் செல்லும் என்பதற்கு ஃபிர்அவ்னே சாட்சியாவான்.

اَلنَّارُ يُعْرَضُوْنَ عَلَيْهَا غُدُوًّا وَّعَشِيًّا ۚ وَيَوْمَ تَقُوْمُ السَّاعَةُ

اَدْخِلُوْۤا اٰلَ فِرْعَوْنَ اَشَدّ الْعَذَابِ‏َ

காலையிலும், மாலையிலும் அவர்கள் நரக நெருப்பின் முன் கொண்டுவரப்படுவார்கள்; மேலும் நியாயத் தீர்ப்பு காலம் நிலைபெற்றிருக்கும் நாளில் ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரைக் கடினமான வேதனையில் புகுத்துங்கள்” (என்று கூறப்படும்). ( அல்குர்ஆன்: 40: 46 )

அவனுடைய தீய பண்புகள் அனைத்திற்கும் அஸ்திவாரமாக அவனிடம் அமைந்திருந்தது பெருமையும், ஆணவமும் தான்.

பெருமையும், ஆணவமும் ஷைத்தான் வழி கெட்டுப் போக அடிப்படையாய் அமைந்த பண்பாகும்.

உலக முடிவு நாள் வரை உள்ள மக்கள் பாடம் பெற வேண்டிய படிப்பினையாக அல்லாஹ் ஷைத்தானையும், ஃபிர்அவ்னையும் ஆக்கியிருப்பது ஆணவம், பெருமை எனும் நேர்கோட்டில் சந்திப்பதால் தான்.

ஒரு வகையில் ஷைத்தானின் நகல் தான் ஃபிர்அவ்ன். ஷைத்தான் மனித உருவில் இருந்தால் அவன் ஃபிர்அவ்னின் தோற்றத்தை ஒத்திருப்பானோ என்று எண்ணத் தோன்றுவதை தடுக்க இயல வில்லை.

நான் ஆரம்பமாக குறிப்பிட்டதைப் போன்று ஆஷூரா அது படிப்பினைகளின் புதையல் ஆகும்.

எனவே, உலகில் வாழும் காலத்தில் நாம் பெருமை, ஆணவம் ஆகிய தீய பண்புகளில் இருந்து விலகி வாழ கடமைப் பட்டுள்ளோம்.

ஆணவம் என்றால் என்ன?

அனைவரும் தனக்கு அடங்கி நடக்க வேண்டும்; அனைவரும் தன்னை மட்டுமே மதிக்க வேண்டும் என்ற உணர்வைத் தோற்றுவிக்கும் மாபாதக பண்பு ஆணவம் ஆகும்.

இத்தன்மைகளை இறைவனும் வெறுக்கின்றான். மனிதர்களும் வெறுக்கின்றார்கள். ஆணவம் கொண்டவர்கள் தாமும் அமைதியாக இருக்க மாட்டார்கள். பிறரையும் அமைதியாக வாழ விட மாட்டார்கள்.

எனவே இவர்களை நோக்கி குர்ஆன் எச்சரிக்கை விடுக்கின்றது.

மனிதர்களை விட்டும் உனது முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் கர்வமாக நடக்காதே! கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் விரும்ப மாட்டான். ( அல்குர்ஆன்31:18

"ஆணவம் என்பது உண்மையை மறுப்பதும், பிறரைத் தாழ்வாக எண்ணுவதும் ஆகும்என்கிறார்கள் முஹம்மது நபி ஸல் அவர்கள். (நூல் முஸ்லிம்)

 

அணுவளவு ஆணவம் தற்பெருமை இருந்தாலும் சுவனம் புகமாட்டான்என்கிறார்கள் நபி (ஸல்) அவர்கள்

(நூல்: முஸ்லிம், திர்மிதி)

மக்களை விட்டும் முகத்தைத் திருப்பியவாறு பேசாதே! பூமியில் செருக்குடன் நடக்காதே! அகந்தையும் ஆணவமும் கொண்ட எவரையும் இறைவன் நேசிப்பதில்லை” ( அல்குர்ஆன்: 31: 18 )

ஆணவம் என்பதைக் குறிக்க...

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் பெருமை ஆணவம் என்பதைக் குறிக்க ஸ்தக்பர, ஃஇஸ்ஸத், முஃக்தாலன், Fபஃகூர், தகப்பர், பதரன்,  கிப்ர், மரஹா,  ஃஉலுவ்வன், ஃஅலா, Fப்ரஃஹ், Fப்ரஹுன, தம்ரஹுன, அஷி(ருன்)ர், வதFபாஃகுருன் என்று பல வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளான்.

மேலும்,அஃரழ , ஜப்பாரன், யுழில், ஃஆலீ(ன)ன், Fபாரிஹீ(ன)ன், தஃலுா, மஜீது(ன்) என்று குர்ஆனில் இடம் பெறும் வார்த்தைகளுக்கும் சில விரிவுரையாளர்கள் பெருமை என்று பொருள் கொள்கின்றனர்.

ஆணவக்கரர்களுக்கு இறைவன் விடும் சவால்..

 وَلَا تَمْشِ فِى الْاَرْضِ مَرَحًا‌ ۚ اِنَّكَ لَنْ تَخْرِقَ الْاَرْضَ وَلَنْ تَبْلُغَ الْجِبَالَ طُوْل

மேலும், நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம்; (ஏனென்றால்) நிச்சயமாக நீர் பூமியைப் பிளந்துவிட முடியாது; மலையின் உச்சி(யளவு)க்கு உயர்ந்து விடவும் முடியாது. (அல்குர்ஆன்:17:37.)

ஆணவத்தால் அழிக்கப்பட்ட காரூன்

إِنَّ قَارُونَ كَانَ مِنْ قَوْمِ مُوسَى فَبَغَى عَلَيْهِمْ وَآتَيْنَاهُ مِنَ الْكُنُوزِ مَا إِنَّ مَفَاتِحَهُ لَتَنُوءُ بِالْعُصْبَةِ أُولِي الْقُوَّةِ إِذْ قَالَ لَهُ قَوْمُهُ لَا تَفْرَحْ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْفَرِحِينَ (76) وَابْتَغِ فِيمَا آتَاكَ اللَّهُ الدَّارَ الْآخِرَةَ وَلَا تَنْسَ نَصِيبَكَ مِنَ الدُّنْيَا وَأَحْسِنْ كَمَا أَحْسَنَ اللَّهُ إِلَيْكَ وَلَا تَبْغِ الْفَسَادَ فِي الْأَرْضِ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُفْسِدِينَ (77) قَالَ إِنَّمَا أُوتِيتُهُ عَلَى عِلْمٍ عِنْدِي أَوَلَمْ يَعْلَمْ أَنَّ اللَّهَ قَدْ أَهْلَكَ مِنْ قَبْلِهِ مِنَ الْقُرُونِ مَنْ هُوَ أَشَدُّ مِنْهُ قُوَّةً وَأَكْثَرُ جَمْعًا وَلَا يُسْأَلُ عَنْ ذُنُوبِهِمُ الْمُجْرِمُونَ

காரூன், மூஸாவின் சமுதாயத்தில் ஒருவனாக இருந்தான். அவர்களுக்கு அநீதி இழைத்தான். அவனுக்குக் கருவூலங்களை வழங்கினோம். அவற்றின் சாவிகளைச் சுமப்பது வலிமைமிக்க கூட்டத்தினருக்குச் சிரமமாக இருக்கும். மமதை கொள்ளாதே! மமதை கொள்வோரை அல்லாஹ் விரும்பமாட்டான்என்று அவனிடம் அவனது சமுதாயத்தினர் கூறியதை நினைவூட்டுவீராக!

அல்லாஹ் உனக்குத் தந்தவற்றில் மறுமை வாழ்வைத் தேடு! இவ்வுலகில் உன் கடமையை மறந்து விடாதே! அல்லாஹ் உனக்கு நல்லுதவி செய்தது போல் நீயும் நல்லுதவி செய்! பூமியில் குழப்பத்தைத் தேடாதே! குழப்பம் செய்வோரை அல்லாஹ் விரும்ப மாட்டான் (என்றும் கூறினர்). என்னிடம் உள்ள அறிவின் காரணமாகவே இது எனக்குத் தரப்பட்டுள்ளதுஎன்று அவன் கூறினான். இவனை விட அதிக வலிமையும், ஆள் பலமும் கொண்ட பல தலைமுறையினரை இவனுக்கு முன்பு அல்லாஹ் அழித்திருக்கிறான்என்பதை இவன் அறியவில்லையா? அவர்களின் பாவங்கள் பற்றி இக்குற்றவாளிகள் விசாரிக்கப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன் 28:76-78)

خَسَفْنَا بِهِ وَبِدَارِهِ الْأَرْضَ فَمَا كَانَ لَهُ مِنْ فِئَةٍ يَنْصُرُونَهُ مِنْ دُونِ اللَّهِ وَمَا كَانَ مِنَ الْمُنْتَصِرِينَ

அவனை அவனது வீட்டோடு சேர்த்து பூமிக்குள் புதையச் செய்தோம். அல்லாஹ்வையன்றி அவனுக்கு உதவி செய்யும் ஒரு கூட்டத்தினரும் இருக்கவில்லை. அவன் உதவி பெறுபவனாகவும் இல்லை.

(அல்குர்ஆன்:28:81.)

ஆணவத்தால் அழிக்கப்பட்ட ஆது சமூதாயம் ..

அன்றியும் ஆது(க் கூட்டத்தார்) பூமியில் அநியாயமாகப் பெருமையடித்துக் கொண்டு, “எங்களை விட வலிமையில் மிக்கவர்கள் யார்?” என்று கூறினார்கள் அவர்களைப் படைத்த அல்லாஹ் நிச்சயமாக அவர்களை விட வலிமையில் மிக்கவன் என்பதை அவர்கள் கவனித்திருக்க வில்லையா? இன்னும் அவர்கள் நம் அத்தாட்சிகளை மறுத்தவாறே இருந்தார்கள். (அல்குர்ஆன்:41:15.)

தாங்களின் வலிமையின் மூலம் அவர்கள் ஆணவம் கொண்டார்கள். அல்லாஹ் அவர்களின் அழிவை எப்படி ஆக்கினான்.என்பதை பின்வருமாறு குறிப்பிடுகிறான்.

سَخَّرَهَا عَلَيْهِمْ سَبْعَ لَيَالٍ وَّثَمٰنِيَةَ اَيَّامٍۙ حُسُوْمًا ۙ 

فَتَرَى الْقَوْمَ فِيْهَا صَرْعٰىۙ كَاَنَّهُمْ اَعْجَازُ نَخْلٍ خَاوِيَةٍ‌ ۚ‏

அவர்கள் மீது, அதை ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ந்து வீசச் செய்தான்; எனவே அந்த சமூகத்தினரை, அடியுடன் சாய்ந்துவிட்ட ஈச்சமரங்களைப் போல் (பூமியில்) விழுந்து கிடப்பதை (அக்காலை நீர் இருந்திருந்தால்) பார்ப்பீர். (அல்குர்ஆன்:69:7.)

فَهَلْ تَرٰى لَهُمْ مِّنْۢ بَاقِيَةٍ‏

ஆகவே, அவர்களில் எஞ்சிய எவரையும் நீர் காண்கிறீரா? (அல்குர்ஆன்:69:8.)

                                                                                                                                                                     ஃபிர்அவ்னின் அழிவு 

وَاسْتَكْبَرَ هُوَ وَجُنُوْدُهٗ فِى الْاَرْضِ بِغَيْرِ الْحَـقِّ وَظَنُّوْۤا اَنَّهُمْ اِلَـيْنَا لَا يُرْجَعُوْنَ

அவனும், அவனது படையினரும் நியாயமின்றி பூமியில் பெருமையடித்தனர். நம்மிடம் அவர்கள் திரும்பக் கொண்டு வரப்பட மாட்டார்கள் எனவும் நினைத்தனர்.

   فَاَخَذْنٰهُ وَجُنُوْدَهٗ فَنَبَذْنٰهُمْ فِى الْيَمِّ‌ۚ فَانْظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الظّٰلِمِيْنَ

எனவே அவனையும், அவனது படையினரையும் தண்டித்தோம். அவர்களைக் கடலில் எறிந்தோம். அநீதி இழைத்தோரின் முடிவு எப்படி இருந்தது?” என்று கவனிப்பீராக! (அல்குர்ஆன்:28:39,40.)

 

எச்சரிக்கை!!!

تِلْكَ الدَّارُ الْآخِرَةُ نَجْعَلُهَا لِلَّذِينَ لَا يُرِيدُونَ عُلُوًّا فِي الْأَرْضِ وَلَا فَسَادًا وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِينَ

பூமியில் ஆணவத்தையும், குழப்பத்தையும் விரும்பாதவர்களுக்காக அந்த மறுமை வாழ்வை ஏற்படுத்தியுள்ளோம். நல்ல முடிவு (இறைவனை) அஞ்சுவோர்க்கே. (அல்குர்ஆன் 28:83)

وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ

என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்;எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள்என்று உங்கள் இறைவன் கூறுகிறான். ( அல்குர்ஆன்: 40:60)

 حَدَّثَنَا ابْنُ أَبِى عُمَرَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ أَبِى الزِّنَادِ عَنِ الأَعْرَجِ عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم-

« احْتَجَّتِ النَّارُ وَالْجَنَّةُ فَقَالَتْ هَذِهِ يَدْخُلُنِى الْجَبَّارُونَ وَالْمُتَكَبِّرُونَ. وَقَالَتْ هَذِهِ يَدْخُلُنِى الضُّعَفَاءُ وَالْمَسَاكِينُ فَقَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ لِهَذِهِ أَنْتِ عَذَابِى أُعَذِّبُ بِكِ مَنْ أَشَاءُ – وَرُبَّمَا قَالَ أُصِيبُ بِكِ مَنْ أَشَاءُ – وَقَالَ لِهَذِهِ أَنْتِ رَحْمَتِى أَرْحَمُ بِكِ مَنْ أَشَاءُ وَلِكُلِّ وَاحِدَةٍ مِنْكُمَا مِلْؤُهَا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நரகமும் சொர்க்கமும் வாக்குவாதம் செய்துகொண்டன. நரகம், “அக்கிரமக்காரர்களும் ஆணவம் கொண்டவர்களுமே எனக்குள் நுழைவார்கள்என்று சொன்னது. சொர்க்கம், “பலவீனர்களும் ஏழைகளுமே எனக்குள் நுழைவார்கள்என்று சொன்னது. அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் நரகத்திடம், “நீ எனது வேதனை. உன் மூலம் நான் நாடியவர்களுக்கு வேதனை கொடுக்கிறேன்என்றும், சொர்க்கத்திடம், “நீ எனது பேரருள். உன் மூலம் நான் நாடியவர்களுக்கு அருள் புரிகிறேன்என்றும் கூறினான். பிறகு (இரண்டையும் நோக்கி), “உங்களில் ஒவ்வொன்றையும் நிரப்புபவர்கள் (மக்க ளிடையே) உள்ளனர்என்று சொன்னான். அறி: அபூஹுரைரா (ரலி), முஸ்லிம்-5469 

 

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ

« لاَ يَدْخُلُ الْجَنَّةَ مَنْ كَانَ فِى قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِنْ كِبْرٍ  قَالَ رَجُلٌ إِنَّ الرَّجُلَ يُحِبُّ أَنْ يَكُونَ ثَوْبُهُ حَسَنًا وَنَعْلُهُ حَسَنَةً. قَالَ « إِنَّ اللَّهَ جَمِيلٌ يُحِبُّ الْجَمَالَ الْكِبْرُ بَطَرُ الْحَقِّ وَغَمْطُ النَّاسِ

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:- "நபி (ஸல்) அவர்கள் யாருடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்கிறதோ அவர் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், “தமது ஆடை அழகாக இருக்க வேண்டும்; தமது காலணி அழகாக இருக்க வேண்டும் என ஒருவர் விரும்புகிறார். (இதுவும் தற்பெருமையில் சேருமா?)” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் அழகானவன்; அழகையே அவன் விரும்புகின்றான். தற்பெருமை என்பது (ஆணவத்தோடு) உண்மையை மறுப்பதும், மக்களைக் கேவலமாக மதிப்பதும்தான்என்று கூறினார்கள். நூல் : முஸ்லிம்-147

பெருமைக்கும் ஆணவம் கொள்வதற்கும் தகுதியானவன்..

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُوسُفَ الأَزْدِىُّ حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ حَدَّثَنَا أَبِى حَدَّثَنَا الأَعْمَشُ حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ عَنْ أَبِى مُسْلِمٍ الأَغَرِّ أَنَّهُ حَدَّثَهُ عَنْ أَبِى سَعِيدٍ الْخُدْرِىِّ وَأَبِى هُرَيْرَةَ قَالاَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم-

« الْعِزُّ إِزَارُهُ وَالْكِبْرِيَاءُ رِدَاؤُهُ فَمَنْ يُنَازِعُنِى عَذَّب

 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கண்ணியம், அ(ந்த இறை)வனுடைய கீழாடையாகும். பெருமை அவனுடைய மேலாடையாகும். (அல்லாஹ் கூறினான்:) ஆகவே, (அவற்றில்) யார் என்னோடு போட்டியிடுகிறானோ அவனை நான் வதைத்துவிடுவேன். அறி: அபூசயீத் அல்குத்ரீ (ரலி), நூல் : முஸ்லிம்-5114 

وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ عُمَرَ بْنِ حَمْزَةَ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللهِ، أَخْبَرَنِي عَبْدُ اللهِ بْنُ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

يَطْوِي اللهُ عَزَّ وَجَلَّ السَّمَاوَاتِ يَوْمَ الْقِيَامَةِ، ثُمَّ يَأْخُذُهُنَّ بِيَدِهِ الْيُمْنَى، ثُمَّ يَقُولُ: أَنَا الْمَلِكُ، أَيْنَ الْجَبَّارُونَ؟ أَيْنَ الْمُتَكَبِّرُونَ. ثُمَّ يَطْوِي الْأَرَضِينَ بِشِمَالِهِ، ثُمَّ يَقُولُ: أَنَا الْمَلِكُ أَيْنَ الْجَبَّارُونَ؟ أَيْنَ الْمُتَكَبِّرُونَ؟

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மறுமைநாளில் வானங்களைச் சுருட்டுவான். பிறகு அவற்றைத் தனது வலக் கரத்தில் எடுத்துக்கொள்வான். பிறகு நானே அரசன். அடக்குமுறையாளர்கள் எங்கே? ஆணவம் கொண்டவர்கள் எங்கே?” என்று கேட்பான். பிறகு பூமிகளைத் தனது இடக் கரத்தில் சுருட்டிக்கொள்வான். பிறகு நானே அரசன். அடக்கு முறையாளர்கள் எங்கே? ஆணவம் கொண்டவர்கள் எங்கே?” என்று கேட்பான். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) நூல்: முஸ்லிம்-5376 

2. ஃபிர்அவ்ன் ஒரு குழப்பவாதி...

ஃபிர்அவ்னை அல்லாஹ் குழப்பவாதி என்று அல் கஸஸ் அத்தியாயத்தில்  கூறியிருக்கிறான். அவனது கோபத்திற்கும் தண்டனைக்கும் ஆளானதற்கு இரண்டாவது பிரதான காரணமாக  கூறியுள்ளான். குழப்பம் செய்யும் கேவலமான பண்பு அவனிடம் சர்வ சாதாரணமாக இருந்துள்ளது. அதனால் அழிவில் சிக்கிக் கொண்டான். அந்தப் பண்பு முஃமின்களான நம்மிடம் புகுந்துவிடாதபடி கவனத்தோடு வாழவேண்டும்.

குழப்பம் செய்வது ஷைத்தானின் பண்பு..

பூமியில் குழப்பம் விளைவிப்பது பெருங்குற்றம் என்பதை இன்னொரு கோணத்திலும் புரிந்து கொள்ளலாம். இப்லீஸ், மனித இனத்தை வழிகெடுக்க ஒவ்வொரு நிமிடமும் துடித்துக் கொண்டிக்கிறான்; தனது அடியாட்களை அங்கும் இங்குமாக ஓயாமல் அனுப்பிக் கொண்டிருக்கிறான். அதற்கு அவனது வகையறாக்கள் கையாளும் முக்கிய ஆயுதம் மக்களிடம் குழப்பத்தை விதைப்பதாகும்.

إِنَّ إِبْلِيسَ يَضَعُ عَرْشَهُ عَلَى الْمَاءِ، ثُمَّ يَبْعَثُ سَرَايَاهُ، فَأَدْنَاهُمْ مِنْهُ مَنْزِلَةً أَعْظَمُهُمْ فِتْنَةً، يَجِيءُ أَحَدُهُمْ فَيَقُولُ: فَعَلْتُ كَذَا وَكَذَا، فَيَقُولُ: مَا صَنَعْتَ شَيْئًا، قَالَ ثُمَّ يَجِيءُ أَحَدُهُمْ فَيَقُولُ: مَا تَرَكْتُهُ حَتَّى فَرَّقْتُ بَيْنَهُ وَبَيْنَ امْرَأَتِهِ، قَالَ: فَيُدْنِيهِ مِنْهُ وَيَقُولُ: نِعْمَ أَنْتَ ” قَالَ الْأَعْمَشُ: أُرَاهُ قَالَ: «فَيَلْتَزِمُهُ

இப்லீஸ், தனது சிம்மாசனத்தை (கடல்) நீரின் மீது அமைக்கிறான். பிறகு தன் பட்டாளங்களை (மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்த) அனுப்புகிறான். அவர்களில் மிகப்பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற (ஷைத்தான் எவனோ அ)வனே இப்லீஸிடம் மிகவும் நெருங்கிய அந்தஸ்தைப் பெறுகிறான். அவனிடம் ஷைத்தான்களில் ஒருவன் (திரும்பி)வந்து நான் இன்னின்னவாறு செய்தேன் என்று கூறுவான்.

அப்போது இப்லீஸ், “(சொல்லிக்கொள்ளும் அளவுக்கு) நீ எதையும் செய்யவில்லை என்று கூறுவான். பிறகு அவர்களில் மற்றொருவன் வந்து, “நான் ஒரு மனிதனுக்கும் அவனுடைய மனைவிக்கும் இடையே பிரிவை ஏற்படுத்தாமல் அவனை நான் விட்டுவைக்கவில்லை என்று கூறுவான். அப்போது இப்லீஸ், அவனை அருகில் வரச்செய்து, “நீதான் சரி(யான ஆள்) என்று (பாராட்டிக்) கூறுவான். இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்-5419 , 5418

وَمِنْهُمْ مَنْ يُؤْمِنُ بِهِ وَمِنْهُمْ مَنْ لَا يُؤْمِنُ بِهِ ۚ وَرَبُّكَ أَعْلَمُ بِالْمُفْسِدِينَ

அவர்களில் இதை (குர்ஆனை) நம்புவோரும் உள்ளனர். இதை நம்பாதோரும் உள்ளனர். குழப்பம் செய்வோரை உமது இறைவன் மிக அறிந்தவன். ( அல்குர்ஆன்:10: 40 )

وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ
أَلَا إِنَّهُمْ هُمُ الْمُفْسِدُونَ وَلَٰكِنْ لَا يَشْعُرُونَ

பூமியில் குழப்பம் செய்யாதீர்கள்! என்று அவர்களிடம் கூறப்படும் போது நாங்கள் சீர்திருத்தம் செய்வோரே எனக் கூறுகின்றனர். கவனத்தில் கொள்க! அவர்களே குழப்பம் செய்பவர்கள்; எனினும் உணர மாட்டார்கள். ( அல்குர்ஆன்: 2: 11,12 )

எனவே அல்லாஹ்வுக்கு அஞ்சி நமது சிந்தனைகளையும் செயல்களையும் நல்ல முறையில் அமைத்துக் கொள்வோமாக! 

குழப்பம் ஏற்படுத்துதல் குறித்து அல்குர்ஆன்...

குழப்பம் செய்தல் நயவஞ்சகர்களின் குணம் – 2:11

குழப்பம் செய்தல் தீயவர்களின் குணம் – 2:27

குழப்பம் செய்யத் தடை – 2:60, 7:56, 7:74, 7:85

குழப்பத்தை அல்லாஹ் விரும்ப மாட்டான் – 2:205, 5:64

குழப்பம் செய்தால் உலகில் கடும் தண்டனை – 5:33

குழப்பம் செய்தால் மறுமையிலும் கடும் தண்டனை – 5:33, 13:25

வணிகத்தில் நேர்மையின்மையும் குழப்பத்தில் அடங்கும் – 7:85, 11:85, 26:183

நல்வழி செல்வதைத் தடுப்பதும் குழப்பத்தில் அடங்கும் – 7:86, 16:88

எளியோரைத் தாழ்த்துவதும் குழப்பம் தான் – 28:4

நன்மை செய்ய மறுப்பதும் குழப்பத்தில் அடங்கும் – 28:77

குழப்பம் விளைவிக்காதவர்க்கே சொர்க்கம் – 28:83

அல்லாஹ்வையும், மறுமையையும் நம்பாததும் குழப்பத்தில் அடங்கும் – 29:36

உறவினரைப் பகைப்பதும் குழப்பத்தில் அடங்கும் – 47:22

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அழிவில் ஆழ்த்தி நரகத்தில் வீழ்த்தி, இறையோனின் நெருக்கத்தை தடை செய்து, ஷைத்தானின் அண்மையைப் பெற்றுத் தரும் ஆணவம் எனும் மாபாதக, கொடிய தீய பண்பிலிருந்து நம்மைப் பாதுகாத்து அருள் புரிவானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

1 comment:

  1. மாஷா அல்லா அருமையான பதிவு ஹஜ்ரத் அவர்களுக்கு அல்லாஹுத்தஆலா நீண்ட ஆயுளையும் நிறைந்த செல்வத்தையும் தந்தருள் புரிவானாக

    ReplyDelete