அல்லாஹ்வின் அபரிமிதமான அருட்கொடை தூக்கம்!!!
இன்றைய மாடர்ன்
உலகில் மின்னணு சாதனங்கள் மற்றும் ஸ்மார்ட்போன் வருகைக்குப் பின்னர் நாம் தூங்கும்
நேரம் கணிசமாகக் குறைந்துவிட்டது. மேலும், மாறிவிட்ட உணவுக் கலாச்சார பழக்க
வழக்கத்தாலும் தூங்கும் நேரத்தில் மாற்றம் ஏற்பட்டு விட்டது.
தூக்கத்தின்
முக்கியத்துவம் அறியாத காரணத்தால் உணவைத் தாமதப்படுத்தியும்,ஸ்மார்ட்போனில் பல
மணிநேரம் செலவழித்தும் தூக்கத்தை கெடுத்துக் கொள்கிறோம்.
கடந்த நூறு
ஆண்டுகளில் மனிதன் தூங்கும் நேரம் என்பது கணிசமாகக் குறைந்துள்ளதாக விஞ்ஞானிகள்
கூறுகின்றனர்.
தூக்கமின்மையால்
அல்சைமர்,
இன்சோம்னியா உள்ளிட்ட பல்வேறு நோய்கள் மனிதனைத்
தாக்குகின்றன. தூக்கமின்மையால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி பார்க்கும் முன்பாக தூக்கத்தைப்
பற்றி நாம் அறிந்து கொள்வோம்.
இறைவன் தனது
திருமறையில் தூக்கத்தைப்பற்றி இவ்வாறு கூறுகிறான்..
وَهُوَ
الَّذِي جَعَلَ لَكُمُ اللَّيْلَ لِبَاسًا وَالنَّوْمَ سُبَاتًا وَجَعَلَ
النَّهَارَ نُشُورًا
''அவன்தான் உங்களுக்கு இரவை
ஆடையாகவும்,
தூக்கத்தை இளைப்பாறுதலாகவும் ஆக்கியிருக்கின்றான்; இன்னும்,
அவனே பகலை உழைப்பிற்கு ஏற்றவாறு ஆக்கியிருக்கிறான்''.25:47
أَلَمْ
يَرَوْا أَنَّا جَعَلْنَا اللَّيْلَ لِيَسْكُنُوا فِيهِ وَالنَّهَارَ مُبْصِرًا ۚ
إِنَّ فِي ذَٰلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يُؤْمِنُونَ
''நாமே இரவை அதில் அவர்கள்
ஓய்ந்திருப்பதற்காகவும்,
பகலை வெளிச்சமாகவும் ஆக்கினோம் என்பதை அவர்கள்
பார்க்கவில்லையா?
நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நிச்சயமாக இதில் அத்தாட்சிகள்
இருக்கின்றன''.
( அல்குர்ஆன்: 27: 86 )
தூங்கும்போது
நம் உடலில் ஏற்படும் மாற்றம் என்ன என்பதை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
"வளர்சிதை மாற்ற (Metabolism) பணிகளில் ஒன்றுதான் தூக்கம். வளர்சிதை மாற்றத்தில் இரண்டு
வகைகள் உண்டு. ஒன்று அனபாலிசம்; மற்றொன்று
கெடபாலிசம்.இவற்றை சமன்படுத்தும் பணிகள் தூக்கத்தின்போதுதான் நிகழ்கின்றன.
எனவே, தூக்கம் என்பது மிக அவசியம் என்று கூறுகிறார் நுரையீரல்
சிறப்பு மருத்துவர் எஸ். ஜெயராமன். தூக்கத்தின்போதுதான் நமது உடலில் அணுக்கள்
புத்துணர்ச்சி பெறுகின்றன.
மனிதனுடைய தூக்கத்தை இரண்டு நிலைகளாகப் பிரிக்கலாம்.
1) REM -RAPID EYE MOVEMENT SLEEP - தூங்க ஆரம்பித்து அரை மணி நேரத்திலிருந்து 1 மணி நேரத்துக்குள் சின்ன சப்தம் கேட்டால் கூட விழிப்பு வந்துவிடும் 'விளிம்பு நிலைத்தூக்கம்'. இந்த விளிம்பு
நிலைத்தூக்கத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமே, அன்று கண்டவிஷயங்கள் 'புலம்பலாக'
வெளிவருகின்றன.
2. NREM - NON RAPID EYE MOVEMENT SLEEP - வீட்டில் பண்டபாத்திரங்களைத் திருடன் வந்து உருட்டினாலும் காதுக்கு கேட்காத
அளவுக்கு 'ஆழ்ந்த நிலைத்தூக்கம்'.
ஆழ்நிலைத்தூக்கத்தில் இருப்பவர்களுக்கு கனவுகளும்
வருகின்றன.
தூக்கமின்மை...
தூக்கம்
குறையும்போது நோய் எதிர்ப்பு குறைந்துவிடுகிறது. இதனால் பல்வேறு நோய்கள் உடலில்
தோன்றுகின்றன," என்று எஸ்.ஜெயராமன்
குறிப்பிடுகிறார்.
தூக்கமின்மையின்
காரணமாக மனிதனுக்கு கீழ்க்கண்ட நோய்கள் ஆரம்பமாகி விடுகின்றன.
1. அறிவாற்றல் குறைபாடுகள் (COGNITIVE
IMPAIRMENTS) 2. எரிச்சல் (IRRITABILITY)
3.
மருட்சி, மாயத்தோற்ற பயம் (DELUSIONS) 4. பயம்,
கலக்கம், நம்பிக்கையின்னை (PARANOIA) 5. மனநோய் (PSYCHOSIS)
உலகம்
முழுவதும் தூக்கமின்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200 கோடியாக இருக்கலாம் என்றும் அந்நிறுவனம் கூறுகிறது.
தூக்கமின்மை
நோய்க்கு இரண்டு காரணங்களை மருத்துவர்கள் முன்னிறுத்துகின்றனர்.
1. தாமதமாக உணவு சாப்பிடுதல். 2. மின்னணு
மற்றும் மொபைல் சாதனங்கள் பயன்படுத்துதல்.
1. மொபைல் போன்ற மின் சாதனங்கள் பயன் படுத்துதல்..
இரவில்
நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்ப்பது, மொபைல் போன்களை பயன்படுத்துவது போன்றவை தூக்கமின்மைக்கு
முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்த கருத்துடன் தான் உடன்படுவதாக மருத்துவர்
ஜெயராமன் கூறுகிறார்.
“செல்போன் போன்ற மின்சார சாதனங்களின் வரவால் மனிதர்கள்
தூங்கும் அளவு வெகுவாக குறைந்துவிட்டது. நமது மூளையில் உள்ள பீனியல் சுரப்பியில்
இருந்து மெலடோனின் என்ற ஹார்மோன் சுரக்கிறது. தூக்கத்தைத் தூண்டும் சுரப்பியான
மெலடோனின் இருட்டான சூழலில் அதிகமாக உற்பத்தியாகி உடலை தூங்குவதற்கு தயார்
படுத்துகிறது.
ஒளி
நிறைந்த சூழல் மெலடோனின் உற்பத்தியைக் குறைப்பதோடு, உங்கள் உடலுக்கு விழித்திருப்பதற்கானச் சமிக்ஞைக்
கொடுக்கிறது. இரவு நேரத்தில் மொபைல், லேப்டாப் பயன்படுத்தினாலோ, தொலைக்காட்சி பார்த்தாலோ, அதிலிருந்து வெளிப்படும் நீல வெளிச்சம் மெலடோனின்
உற்பத்தியை குறைக்கிறது. இதனால் தூக்கமின்மை ஏற்படுகிறது. தூக்கமின்மை வேறு பல
நோய்களுக்கு காரணமாக அமைகிறது.” என்று
அவர் விளக்கினார்.
கடந்த
ஆண்டு நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய மின்னணு மற்றும் தகவல்
தொழில்நுட்ப அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், குழந்தைகளிடம் உள்ள இணைய பழக்கம் தொடர்பாக தங்களிடம் எந்த
குறிப்பிட்ட தரவுகளும் இல்லையென்றும் அதேவேளையில், குழந்தைகள் இணைய வசதியுடன் மொபைல் போன்கள் மற்றும் பிற
சாதனங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் (உடல், நடத்தை மற்றும் உளவியல்-சமூகம்)" என்ற தலைப்பில்
குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் நடத்திய ஆய்வை மேற்கொள் காட்டி
பதிலளித்தார்.
அப்போது, 23.80
சதவீத குழந்தைகள் தூங்குவதற்கு முன்பு
படுக்கையில் மொபைல் பயன்படுத்துவதாக அந்த ஆய்வு முடிவில் தெரியவந்ததாக அவர் குறிப்பிட்டார்.
மொபைல் பயன்பாடு காரணமாக 37.15 சதவீத குழந்தைகளின்
கவனம் செலுத்தும் திறன் குறைவை எதிர்கொள்கின்றனர் என்றும் அவர்
தெரிவித்திருந்தார்.
2. தூக்கத்தில் உணவு ஏற்படுத்தும் தாக்கம்..
மொபைல்
பயன்பாட்டைப் போன்று உணவுப் பழக்கமும் நமது தூக்கத்தில் முக்கிய பங்காற்றுகிறது
என்று கூறுகிறார் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையின் ஊட்டச்சத்து நிபுணரான
மருத்துவர் மீனாட்சி பஜாஜ்.
“தூங்குவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பாகவே நாம் இரவு உணவை சாப்பிட்டு
முடித்துவிட வேண்டும். இரவில் காலதாமதமாக உணவு சாப்பிடுவது நாம் தூங்குவதை தாமதப்படுத்தும்.
இதேபோல், சிலர் இரவில் உணவை சமைக்க நேரம் இல்லாமல் உணவு செயலிகள்
மூலமாக கண்ட நேரத்தில் ஆரோக்கியமற்ற உணவை ஆர்டர் செய்து சாப்பிடுகின்றனர். இவ்வாறு
சாப்பிடுவது, பதப்படுத்தப்பட்ட உணவை சாப்பிடுவது ஆகியவை
உங்களின் தூக்கத்தை பாதிக்கும்.
எனவே, முடிந்தவரை தூங்க தயாராவதற்கு 2 அல்லது 1 மணி
நேரத்துக்கு முன்பாகவே மின் சாதனங்கள் பயன்படுத்துவதை நிறுத்தி விட வேண்டும்.
மேலும், தூங்க தயாராவதற்கு 2 அல்லது 1 மணி
நேரத்துக்கு முன்பாகவே சாப்பிட்டு முடித்து விட வேண்டும். ( நன்றி: பிபிசி தமிழ். மார்ச் 16/2023
)
உலகில்
தூக்கமின்மை மிகஅதிகம் உள்ள நாடுகளில் தென் கொரியாவும் ஒன்று. வளர்ந்த
நாடுகளுக்கிடையே அதிக தற்கொலை விகிதத்தையும் இந்த நாடு கொண்டுள்ளது, அதிக அளவு மதுபானம் மற்றும் ஆண்டி டிப்ரசண்டுகளை
உட்கொள்ளும் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இங்கு உள்ளனர்.
தூக்கத்தில்
நிபுணத்துவம் பெற்ற மனநல மருத்துவர் டாக்டர் ஜி-ஹியோன் லீ, ஒரு இரவில் 20 தூக்க மாத்திரைகள் வரை சாப்பிடும் நோயாளிகளை தான் அடிக்கடி
பார்ப்பதாக கூறுகிறார்.
அந்த
நாட்டு மக்கள் மிகப்பெரும் பாதிப்பை சந்திக்கின்றனர் என்று பிபிசியின் குளோயி
ஹட்ஜிமெத்யூ குறிப்பிடுகிறார்.
இப்போது, தூங்க முடியாதவர்களுக்கு உதவும் வகையில் தென் கொரியாவில் ஒரு
முழுத் துறையே வளர்ந்துள்ளது. 2019
ஆம் ஆண்டில் 'தூக்க உதவி' தொழிலின் மதிப்பு 2.5 பில்லியன் டாலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
தென்
கொரிய தலைநகர் சியோலில், சில
பல்பொருள் அங்காடிகள் முழுவதுமே தூக்க தயாரிப்புகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.
சரியான படுக்கை விரிப்புகள் முதல் உகந்த தலையணைகள் வரை அங்கு கிடைக்கிறது. அதே
நேரத்தில் மருந்தகங்கள் மூலிகை தூக்க சிகிச்சைகள் மற்றும் டானிக்குகள் நிறைந்த
அலமாரிகளை கொண்டுள்ளன.
தூக்கமின்மைக்கான
தொழில்நுட்ப அணுகுமுறைகள் உள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, டேனியல் டியூடர், 'கொக்கிரி' என்ற
தியான செயலியைத் தொடங்கினார்.மன அழுத்ததால் பாதிக்கப்பட்டுள்ள இளம்வயது
தென்கொரியர்களுக்கு உதவுவதற்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ( நன்றி: பிபிசி
தமிழ் )
எவ்வளவு நேர தூக்கம் தேவை?
CDC எனப்படும் Centers for Disease
Control and Prevention –ன் கோட்பாட்டின் படி ஒரு
வயதிற்கு உட்பட்ட பாலகர்களுக்கு தினசரி 16 மணிநேர தூக்கம்
தேவையாகும்.
ஆனால் பதின்ம வயதினருக்கு 9 மணிநேர தூக்கம் தேவை என
வல்லுனர்கள் கருதுகிறார்கள்.
வளர்ந்த
மனிதனுக்கு எவ்வளவு நேரத் தூக்கம் தேவை? எட்டு மணிநேரம் என
வாய்ப்பாடு போல பலரும் சொல்கிறார்கள். ஆனால் அது
சரிதானா?
என்று பார்த்தால், அமெரிக்காவில் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட மக்களைக் கொண்டு Daniel
F. Kripke.MD ஆனு தலைமையிலான குழுவினரால்ஆறு வருடங்கள் செய்யப்பட்ட ஆய்வு மனிதர்களுக்கு 8 மணி நேர தூக்கம்தேவையற்றது என உறுதியாகக் கூறுகிறது. தினமும் ஏழு
மணி நேரம் தூங்குவதே திருப்தியானது, அதுவே ஆரோக்கியமானது என அதே ஆய்வு மேலும் தெளிவுறுத்துகிறது. இருந்தபோதும் வளர்ந்தவர்களுக்கு தினசரி 7 முதல் 8 மணி தேவை என்பதே பொதுவான கருத்தாகும்.
எனினும், சராசரியாக ஒரு மனிதன் தினமும் 6 முதல் 7 மணி நேரம் வரை தூங்குவது அவசியம். குறைந்தது 5 மணி நேரமாவது தூங்க வேண்டும். ஆனால் இன்றைய பொருளாதார போராட்டத்தில்
பலருக்கும் 2
மணி நேரம் தூக்கம் கிடைப்பதே அரிதாகிவிட்டது.
தினமும் 4 மணி நேரத்திற்கு குறைவாக தூங்குபவர்களும் 16 மணி நேரத்திற்கு
அதிகமாக தூங்குபவர்களும் ஆயுளைக் குறைத்துக்கொள்பவர்கள் என்று ஆராய்ச்சியாளர்கள்
தெரிவிக்கின்றனர். ஆகவே, உடல் இயக்கத்தை சீராக வைத்திருக்க தூக்கம் ஒரு இன்றியமையாத
அருளாகவே காணப்படுகிறது.
எப்போது தூங்க வேண்டும்?
عَنْ
أَبِي بَرْزَةَ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ
يَكْرَهُ النَّوْمَ قَبْلَ العِشَاءِ وَالحَدِيثَ بَعْدَهَا» صحيح البخاري
அபூபர்ஸா (நள்லா பின் உபைத்) ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்
கூறியதாவது:- ”அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் இஷாத் தொழுகைக்கு முன்
உறங்குவதையும் இஷாத் தொழுகைக்குப்பின் (உறங்காமல் வீணாக) பேசிக்கொண்டிருப்பதையும்
வெறுப்பவர்களாக இருந்தார்கள். ( நூல்: புகாரி –
568)
ஆரம்ப நேரத்தில் உறங்குவதுதான் சிறந்தது என மருத்துவ
உலகமும் இன்று இஸ்லாத்தின் செய்தியை உறுதிப்படுத்துகின்றது.
நியூயார்க்கிலுள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தின் உளவியல்
துறை மருத்துவப் பேராசிரியர் ஜேம்ஸ் காங்விஸ்க் தலைமையிலான ஆய்வுக் குழு, மொத்தம் 15,659 வளரிளம் பருவ மாணவ மாணவியரிடம் ஆய்வு
மேற்கொண்டது.
இரவில் சீக்கிரமாகவே தூங்குவதால் போதுமான அளவில்
தூங்கமுடிகிறது. இதனால் மன அழுத்தத்துக்கு முக்கிய காரணியாக இருக்கும் தூக்கமின்மை
பிரச்சனை நீங்குவதோடு, மன அழுத் பாதிப்பில் இருந்து வெகுவாக
பாதுகாத்துக் கொள்ளவும் வழிவகுக்கப்படுகிறது என ஆய்வு முடிவுகள்
பரிந்துரைக்கின்றன.
நள்ளிரவு அல்லது 12 மணி நேரத்துக்குப் பிறகு படுக்கைக்கு
செல்பவர்களுக்கு இரவு பத்து மணி அல்லது அதற்கு முன்பு உறங்கச் செல்பவர்களைக்
காட்டிலும் 24 சதவீதத்துக்கும் அதிகமான மன அழுத்தமும், அதன் விளைவாக 20 சதவீதத்துக்கும் அதிகமாக தற்கொலை
எண்ணமும் ஏற்படுவதற்கான அபாயம் உண்டு என்று எச்சரிக்கிறது, அந்த ஆய்வு. ( நன்றி:http://youthful.vikatan.com/youth)
ஆகவே, தூக்கம்
என்பது மனித வாழ்வில்
இன்றியமையாத தேவைகளில் ஒன்றாகும் என்பதை உணர வேண்டும்.
மேலும், ஒரு முஸ்லிம் தூக்கத்தை அல்லாஹ் வழங்கிய அருட்கொடையாகவே
கருத வேண்டும்.
தூக்கத்தின் மூலம் மன அமைதி கிடைக்கின்றது..
إِذْ يُغَشِّيكُمُ النُّعَاسَ أَمَنَةً مِنْهُ وَيُنَزِّلُ عَلَيْكُمْ
مِنَ السَّمَاءِ مَاءً لِيُطَهِّرَكُمْ بِهِ وَيُذْهِبَ عَنْكُمْ رِجْزَ
الشَّيْطَانِ وَلِيَرْبِطَ عَلَى قُلُوبِكُمْ وَيُثَبِّتَ بِهِ الْأَقْدَامَ
உங்களுக்குச் சிறு
தூக்கத்தை அவன் ஏற்படுத்தியதை எண்ணிப் பாருங்கள்! அது அவனிடமிருந்து கிடைத்த
நிம்மதியாக இருந்தது. தண்ணீர் மூலம் உங்களைத் தூய்மைப்படுத்திடவும், உங்களை விட்டும் ஷைத்தானின் அசுத்தத்தைப் போக்கிடவும், உங்கள் உள்ளங்களைப் பலப்படுத்தவும், உங்கள் பாதங்களை அதன்
மூலம் உறுதிப்படுத்தவுமே வானத்திலிருந்து தண்ணீரை உங்கள் மீது இறக்கினான். ( அல்குர்ஆன்:
8: 11 )
ثُمَّ أَنْزَلَ عَلَيْكُمْ مِنْ بَعْدِ الْغَمِّ أَمَنَةً نُعَاسًا
يَغْشَى طَائِفَةً مِنْكُمْ وَطَائِفَةٌ قَدْ أَهَمَّتْهُمْ أَنْفُسُهُمْ
يَظُنُّونَ بِاللَّهِ غَيْرَ الْحَقِّ ظَنَّ الْجَاهِلِيَّةِ يَقُولُونَ هَلْ
لَنَا مِنَ الْأَمْرِ مِنْ شَيْءٍ قُلْ إِنَّ الْأَمْرَ كُلَّهُ لِلَّهِ يُخْفُونَ
فِي أَنْفُسِهِمْ مَا لَا يُبْدُونَ لَكَ يَقُولُونَ لَوْ كَانَ لَنَا مِنَ
الْأَمْرِ شَيْءٌ مَا قُتِلْنَا هَاهُنَا قُلْ لَوْ كُنْتُمْ فِي بُيُوتِكُمْ
لَبَرَزَ الَّذِينَ كُتِبَ عَلَيْهِمُ الْقَتْلُ إِلَى مَضَاجِعِهِمْ
وَلِيَبْتَلِيَ اللَّهُ مَا فِي صُدُورِكُمْ وَلِيُمَحِّصَ مَا فِي قُلُوبِكُمْ
وَاللَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ
பின்னர் கவலைக்குப்
பிறகு உங்களுக்கு மனஅமைதியை ஏற்படுத்த சிறு தூக்கத்தைத் தந்தான். உங்களில் ஒரு
பகுதியினருக்கு அது மேலிட்டது. இன்னொரு பகுதியினரைக் கவலை பிடித்துக் கொண்டது.
அவர்கள் அல்லாஹ்வைப் பற்றி உண்மைக்கு மாறான அறியாமைக்கால எண்ணம் கொண்டனர். “நமக்குச் சிறிதளவாவது அதிகாரம் கிடைக்குமா?” என்று அவர்கள்
கேட்டனர். “அதிகாரம் முழுமையாக அல்லாஹ்வுக்கே உரியது” என்று கூறுவீராக!
உம்மிடம் வெளிப்படையாகக் கூறாததை தமது உள்ளங்களில் மறைத்துள்ளனர். “நமக்குச் சிறிதளவாவது அதிகாரம் இருந்திருந்தால் இங்கே கொல்லப்பட்டிருக்க
மாட்டோம்”
என்றனர். “உங்கள் வீடுகளில் நீங்கள்
இருந்திருந்தாலும் உங்களில் கொல்லப்பட வேண்டும் என்று விதிக்கப்பட்டோர் தமது
களத்திற்குச் சென்றிருப்பார்கள். உங்கள் உள்ளங்களில் உள்ளதைச் சோதிப்பதற்காகவும், உங்கள் உள்ளங்களில் இருப்பதைத் தூய்மைப்படுத்தவும் அல்லாஹ் இவ்வாறு செய்தான்.
உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் அறிந்தவன்” எனக் கூறுவீராக! (குர்ஆன்
3:154)
மேற்கண்ட இரண்டு
அருள்மறை வசனங்களின் ஊடாக நாம் அறிய வேண்டிய விஷயம் கவலைகளுக்கு அருமருந்தாக
அமைவது சிறு தூக்கமாகும். ஒரு சிறு தூக்கம் கூட சில கவலைகளை மறக்கடிக்கச் செய்வதாக
அல்லாஹ் சான்று பகர்கிறான்.
மேலும், இந்த இரு
வசனங்களையும் ஊன்றிக் கவனித்தால் நமக்கு ஒரு உண்மை புலப்படும்.
பத்ருப் போரில்
பிரச்சினையை எதிர் கொள்வதற்கு முன்பு தூக்கத்தைத் தந்து உள்ளத்தை
அமைதிப்படுத்துகிறான். உஹதுப் போர்க் களத்தில் பிரச்சினை முடிந்த பிறகு
தூக்கத்தைக் கொடுத்து அமைதியை ஏற்படுத்துகிறான்.
உழைப்பதற்கும், உலகின்
அழகை பார்த்து அனுபவிப்பதற்கும்
ஏற்ற வகையில் பகலைப் படைத்திருப்பதாகவும், உறங்குவதற்கும், ஓய்வு எடுப்பதற்கும் ஏற்ற வகையில் இரவைப் படைத்திருப்பதாகவும் அல்லாஹ்
குர்ஆனில் கூறுவதைப் பார்க்கிறோம்.
அந்த வகையில்
இரவு முழுவதையும் வணக்க வழிபாட்டில் ஈடுவடுவதற்காக
விழிப்பது கூட தவறு என்று நபி (ஸல்) அவர்கள் சுட்டிக் காட்டுவதையும், கண்களுக்கு செய்யும் கடமையை தவற விடக்கூடாது என்பதையும் பின் வரும் நபிமொழி
மூலமாக நாம் அறிந்து கொள்கிறோம்.
حَدَّثَنَا
مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُاللَّهِ، أَخْبَرَنَا
الأَوْزَاعِيُّ، قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، قَالَ: حَدَّثَنِي
أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِالرَّحْمَنِ، قَالَ: حَدَّثَنِي عَبْدُاللَّهِ بْنُ
عَمْرِو بْنِ العَاصِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: يَا عَبْدَاللَّهِ،
أَلَمْ أُخْبَرْ أَنَّكَ تَصُومُ النَّهَارَ وَتَقُومُ اللَّيْلَ؟ قُلْتُ:
بَلَى يَا رَسُولَ اللَّهِ، قَالَ: فَلاَ تَفْعَلْ، صُمْ وَأَفْطِرْ، وَقُمْ
وَنَمْ، فَإِنَّ لِجَسَدِكَ عَلَيْكَ حَقًّا، وَإِنَّ لِعَيْنِكَ عَلَيْكَ حَقًّا،
وَإِنَّ لِزَوْجِكَ عَلَيْكَ حَقًّا.
அப்துல்லாஹ் பின்
அம்ரு பின் ஆஸ் (ரலி) கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்கள்
என்னிடம்,
அப்துல்லாஹ்வே நீர் எல்லா நாட்களும் நோன்பு வைப்பதாகவும், இரவு முழுவதும் தொழுவதாகவும் உன்னைப் பற்றிக் கூறப்படுகிறதே (உண்மையா?) என்று கேட்டார்கள். அதற்கு ஆம் (உண்மைதான்) என்று பதில் அளித்தேன். அதற்கு நபி
(ஸல்) அவர்கள் ""அவ்வாறு செய்யாதே! (சில நாட்கள்) நோன்பு வை. (சில
நாட்கள்) நோன்பை விட்டு விடு! (சிறிது நேரம்) தொழு, தூங்கு. ஏனெனில் நீ உனது உடலுக்கு செய்ய வேண்டிய கடமை உள்ளது. நீ உனது
கண்களுக்கு செய்ய வேண்டிய கடமை உள்ளது. நீ உனது மனைவிக்கு செய்ய வேண்டிய கடமை
உள்ளது என்று கூறினார்கள்.
( நூல்: புகாரி, முஸ்லிம், திர்மிதி,
நஸாயீ )
தூக்கம் எனும் அருமருந்து...
பிரச்சினை எதுவாக
இருந்தாலும் முறையாக தூங்கச் சென்றால் அந்த பிரச்சினை இலகுவாகும் என்பது நபி {ஸல்}
அவர்களின் தூய வழிகாட்டல் ஆகும்.
فقد روت عائشة -رضي الله عنها: (أنَّ رسولَ اللهِ صلَّى اللهُ
عليهِ وسلَّمَ كان إذا أخذ مضجعَه نفثَ في يدَيه، وقرأ بالمعوِّذاتِ، ومسح بهما
جسدَه)، وآيات هذه السور هي: (قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ*اللَّهُ الصَّمَدُ*لَمْ
يَلِدْ وَلَمْ يُولَدْ*وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ) (قُلْ أَعُوذُ بِرَبِّ
الْفَلَقِ*مِن شَرِّ مَا خَلَقَ*وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ*وَمِن شَرِّ
النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ*وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ). (قُلْ أَعُوذُ
بِرَبِّ النَّاسِ*مَلِكِ النَّاسِ*إِلَٰهِ النَّاسِ*مِن شَرِّ الْوَسْوَاسِ
الْخَنَّاسِ*الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ*مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ).
நபி {ஸல்} அவர்கள்
தூங்கச் செல்லும்போது,
""குல்ஹுவல்லாஹு அஹத்", "குல்அவூது பிரப்பில் ஃபலக்", "குல்அவூது பிரப்பின்னாஸ் ஆகிய
மூன்று அத்தியாயங்களை ஓதுவார்கள். பின்னர் (கையில் ஊதி) தம் உடலில் எங்கெல்லாம்
முடியுமோ அங்கெல்லாம் தடவிக் கொள்வார்கள். தமது தலையில் ஆரம்பித்து முகம் முன்
உடற்பகுதி ஆகியவற்றில் தடவுவார்கள். இவ்வாறு மூன்று முறை செய்வார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ( நூல்: புகாரி, முஸ்லிம் )
நபி {ஸல்}
அவர்களுக்கு உடல் நலக் குறைவு ஏற்படும்போது, குர்ஆனின் 112,113,113 அத்தியாங்களை ஓதி (பரகத்துக்காக) நபிகளாரின் கைகளில் ஊதி அவர்கள் மீது தடவி விடுவேன். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ( நூல்: புகாரி )
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنهقَالَ وَكَّلَنِي رَسُولُ
اللَّهِ صلى الله عليه وسلم بِحِفْظِ زَكَاةِ رَمَضَانَ، فَأَتَانِي آتٍ فَجَعَلَ
يَحْثُو مِنْ الطَّعَامِ ... قَالَ دَعْنِي أُعَلِّمْكَ كَلِمَاتٍ يَنْفَعُكَ
اللَّهُ بِهَا. قُلْتُ: مَا هُوَ؟ قَالَ: إِذَا أَوَيْتَ إِلَى فِرَاشِكَ
فَاقْرَأْ آيَةَ الْكُرْسِيِّ } اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ
الْقَيُّومُ{ حَتَّى تَخْتِمَ الْآيَةَ، فَإِنَّكَ لَنْ يَزَالَ عَلَيْكَ مِنْ
اللَّهِ حَافِظٌ، وَلَا يَقْرَبَنَّكَ شَيْطَانٌ حَتَّى تُصْبِحَ. فَخَلَّيْتُ
سَبِيلَهُ، فَأَصْبَحْتُ، فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم :«مَا
فَعَلَ أَسِيرُكَ الْبَارِحَةَ»؟ قُلْتُ : يَا رَسُولَ اللَّهِ زَعَمَ أَنَّهُ
يُعَلِّمُنِي كَلِمَاتٍ يَنْفَعُنِي اللَّهُ بِهَا فَخَلَّيْتُ سَبِيلَهُ. قَالَ :
«مَا هِيَ»؟ قُلْتُ: قَالَ لِي: إِذَا أَوَيْتَ إِلَى فِرَاشِكَ فَاقْرَأْ آيَةَ
الْكُرْسِيِّ مِنْ أَوَّلِهَا حَتَّى تَخْتِمَ الْآيَةَ وَقَالَ لِي : لَنْ
يَزَالَ عَلَيْكَ مِنْ اللَّهِ حَافِظٌ وَلَا يَقْرَبَكَ شَيْطَانٌ حَتَّى تُصْبِحَ
-وَكَانُوا أَحْرَصَ شَيْءٍ عَلَى الْخَيْرِ - فَقَالَ النَّبِيُّ صلى الله عليه
وسلم
« أَمَا إِنَّهُ قَدْ صَدَقَكَ
وَهُوَ كَذُوبٌ، تَعْلَمُ مَنْ تُخَاطِبُ مُنْذُ ثَلَاثِ لَيَالٍ يَا أَبَا
هُرَيْرَةَ»؟ قَالَ :لَا. قَالَ :«ذَاكَ شَيْطَانٌ». [أخرجه البخاري] .
ஃபித்ரா ஜகாத்
பொருட்கள் வசூலிக்கப்பட்டு பெருங் குவியலாக மஸ்ஜிதுன் நபவியில் குவிக்கப்பட்டு
இருந்தது. நபி (ஸல்) அவர்கள், அந்தப் பொருட்களை
பாதுகாக்க அபூ ஹுரைரா (ரலி) அவர்களை நியமித்தார்கள். ஒரு நாள் இரவு திருடன்
வந்தான்,
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அவனைப் பிடித்து விட்டார்கள்.
உடனே அந்தத் திருடன் தான் ஏழை என்றும், தன்னை மன்னித்து விட்டு
விடும்படியும்,
இனி வர மாட்டேன் என்றும் கூறினான். அபூ ஹுரைரா (ரலி)
அவர்கள் அவனை விட்டு விட்டார்கள்.
நடந்த விஷயங்களை
நபி (ஸல்) அவர்களிடம் அபூஹுரைரா (ரலி) கூறினார். அப்போது நபிகளால் அவன் நாளை
மீண்டும் வருவான் விட்டுவிடாதே என்று கூறினார்கள்.
நபிகளார் கூறியது
போலவே மறுநாளும் அந்தத் திருடன் வந்தான். அபூஹுரைரா (ரலி) அவனைப் பிடித்து தூணில்
கட்டினார்கள். அப்போது அந்தத் திருடன் ""நான் உமக்கு ஒரு விஷயத்தைக்
கற்றுத் தருகிறேன். அதனை (இரவில்)ஓதினால், அதிகாலை வரை ஷைத்தானின்
தீண்டுதலை விட்டும் பாதுகாப்பு பெறுவீர் என்று கூறி, "ஆயத்துல் குர்ஷியை" கற்றுக் கொடுத்தான். நடந்த விஷயங்களை நபி (ஸல்)
அவர்களிடம் கூறியபோது,
"அவன் சொன்னது உண்மையே. ஆனால் அவன் ஷைத்தான்" என்று நபி
(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபுஹுரைரா
(ரலி), (
நூல்: புகாரி )
أن
فاطمة –رضي الله عنها- شكت ما تلقى في يدها من الرحى، فأتت النبي ﷺ تسأله خادمًا
فلم تجده، فذكرت ذلك لعائشة، فلما جاء أخبرته، قال: فجاءنا وقد أخذنا مضاجعنا
فذهبت أقوم، فقال: مكانك فجلس بيننا حتى وجدت برد قدميه على صدري،
فقال: ألا أدلكما على ما هو خير لكما من خادم؟ إذا أويتما إلى فراشكما، أو
أخذتما مضاجعكما، فكبرا ثلاثًا وثلاثين، وسبحا ثلاثًا وثلاثين واحمدا ثلاثًا
وثلاثين، فهذا خير لكما من خادم وهذا الحديث موجود في الصحيح، قد رواه الإمام
البخاري -رحمه الله تعالى- في ثلاثة مواضع من كتابه الصحيح أو في أربعة، وغيره
رواه
البخاري: 3705، 5361، 6318، ومسلم
7090حديث
علي
நபி {ஸல்}
அவர்களின் மகள் பாத்திமா (ரலி) அவர்கள் வீட்டு வேலைகளின் காரணமாக
கஷ்டப்பட்டார்கள். அப்போது கணவர் அலி (ரலி) அவர்கள், நபி {ஸல்} அவர்களிடம் சென்று வேலைக்காரர் ஒருவரை கேட்டு வாங்கி வா என்றார்கள்.
ஃபாத்திமா (ரலி) அவர்கள் நபிகளாரிடம் வேலை செய்வதற்காக பணியாளை கேட்டார். அப்போது,
நபி {ஸல்} அவர்கள் இதைவிட சிறந்த ஒன்றை உங்களுக்குச் சொல்லட்டுமா? என்று கேட்டுவிட்டு,
நீங்கள் இருவரும் தூங்கும்போது சுப்ஹானல்லாஹ் 33 தடவை,
அல்ஹம்து லில்லாஹ் 33, தடவை, அல்லாஹு அக்பர் 34
தடவை ஓதிக் கொள்ளுங்கள். இது பணியாளர்களை விட உங்கள்
இருவருக்கும் மிகச் சிறந்ததாக இருக்கும் என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: அலி (ரலி), ( நூல்: புகாரி, முஸ்லிம் )
இந்த மூன்று
வகையான ஹதீஸ்களும் மூன்று விதமான செய்திகளை நமக்கு உணர்த்துகின்றன. ஒன்று:- “மனம் பல்வேறு வகையான
சிந்தனையில் குழப்பம் அடைந்திருக்கும் நிலையில் படுக்கைக்குச் சென்றால் அல்குர்ஆன்
2:255
வசனமாகிய "ஆயத்துல் குர்ஷி”யை ஓதிவிட்டு தூங்கச் செல்வது.
இரண்டாவது:- “உடல் கடுமையான வலியால்
அவஸ்தைப்படும் நிலையில் படுக்கைக்குச் சென்றால் அல்குர்ஆன் 112,113,114 ஆகிய அத்தியாயங்களை ஓதி உடல் முழுவதும் தடவி விட்டு தூங்கச் செல்வது.
மூன்று:- “பணியாள் துணை இல்லாத போது, அல்லது
வேலைப்பளு காரணமாக சிரமத்தோடு
கையறு நிலையில் படுக்கைக்குச் சென்றால் சுப்ஹானல்லாஹ் 33 தடவை அல்ஹம்து லில்லாஹ் 33 தடவை அல்லாஹு அக்பர் 34 தடவை ஓதிவிட்டு தூங்கச் செல்வது.
அல்குர்ஆன் கூறும் தூக்கத்தின் வகைகள்…
சிறந்த தூக்கம்
என்பது இரவில் முன்னேரத்தில் தூங்கி அதிகாலையில் முன்னேரத்தில்
எழுந்திருப்பதாகும்.
1. ஹுஜுவு என்னும் குறைந்த மணி்நேர
தூக்கம்:-
அல்லாஹ்
அல்குர்ஆனில் இறை நேசர்கள் என்னும் முத்தகீன்களின் தூக்கம் இரவில் சொற்ப நேரங்களே
இருக்கும் என்று கூறுகின்றான் ( 51:17) இது ஒரு வகை தூக்கம்
இந்த தூக்கமானது
இரவில் முன்னேரமே படுத்து அதிகாலையில் ( தஹஜ்ஜத் நேரத்தில் ) எழுந்திருக்கும்
வழக்கமுடையவர்களின் தூக்கமாகும் அதன் பிறகு அவர்கள் தூங்க மாட்டார்கள்
இப்படிப்பட்ட தூக்கத்தை தூங்குபவர்க்களுக்கு அபார நினைவாற்றல் இருக்கும் அறிவு
கூர்மை ஏற்படும் மூளை நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் அவர்களுக்கு வராது சிறுநீரக
சம்பந்தப்பட்ட நோய்களும் வராது அவர்கள் நீண்ட ஆயுளுடன் இருப்பார்கள்
2. ஸுபாத்தா என்னும் சுகந்தரும்
ஆழ்ந்த உறக்கம்
ஸுபாத்தா என்னும்
தூக்கத்தை பற்றி அல்லாஹ் அல்குர்ஆனில் கூறும் போது உங்களுடைய தூக்கத்தை
சுகந்தருவதாக ஆக்கினோம் ( 78:9)
என்று கூறுகிறான்.
இந்த வசனத்தை
ஆய்வு செய்த அறிஞர்கள் ஆழ்ந்த தூக்கம் என்பது சுகந்தரக்கூடிய நிம்மதியான
தூக்கமாகும் இப்படிப்பட்ட தூக்கத்தை தூங்குபவர்கள் அவரை சுற்றி என்ன நடக்கிறது
என்று அறியாத அளவிற்கு முற்றிலும் நினைவு அற்றவர்களாக ஆழ்ந்த உறக்கத்தில்
இருப்பார்கள்.
3. சினா: இது ஒருவருக்கு
தன்னையும் அறியாமல் குறுகிய நேரத்திற்கு தூக்கம் வருவதை குறிக்கும்
வார்த்தையாகும்.
4. நுஆஸ்: ஒரு இறைநம்பிக்கையாளர் தன் வாழ்க்கையின் சவால்களைப் பற்றி
கவலைப்பட்டு அதிக மன அழுத்தத்தில் இருக்கும்போது, சிறிது நேரம் தூங்குவது, புதுப்பிக்கப்பட்ட
ஆற்றலுடன் எந்த பிரச்சனையையும் சமாளிக்கும் ஆற்றல் கிடைக்க இந்த தூக்கம் உதவும்.
இந்த தூக்கம் நுஆஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த தூக்கம் தான் பத்ரிலும்,
உஹதிலும் நபித்தோழர்களுக்கு அல்லாஹ் வழங்கியதாக குறிப்பிடப்படுகின்றது.
5. ருகூத்: நீண்ட நேரம்/காலம் தூங்குவது மற்றும்
உறங்குபவருக்கு சுற்றுப்புறம் எதவும் தெரியாமல் தூங்குவது, குகை வாசிகளை அல்லாஹ்
தூங்க வைத்ததைப் பற்றி இந்த வார்த்தையிலேயே குறிப்பிடுகின்றான்.
6. கைலுலா என்னும் சிறு தூக்கம்: நபி {ஸல்} அவர்களால் வழிகாட்டப்பட்ட
தூக்கம். இந்த தூக்கம் ஒரு சுன்னத்தான பகல் நேர சிறு தூக்கமாகும் அதாவது சூரியன்
உச்சிக்கு பிறகு லுஹர் தொழுகைக்கு பின் சாப்பிடுவதற்கு முன் தூங்கும் சிறு தூக்கம்
அதிக பட்சமாக 30 - 45
நிமிடங்கள் மிகாமல் இருக்க வேண்டும் இப்படிப்பட்ட
தூக்கத்திற்கு கைலுலா தூக்கம் என்று பெயர்
இந்த தூக்கத்தை
பற்றி ஆய்வு செய்த அறிஞர்கள்
இந்த நேரத்தில் துங்குவதால் உடல் புத்துணர்ச்சி பெறுகிறது மேலும் இதயத்தின் இரத்த
அழுத்தம் சீராகிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.
நபி {ஸல்} அவர்கள்
விஷேசமான இரவுகளைத் தவிர மற்ற இரவுகளில் இரவு முழுவதும் விழித்திருந்து
வணங்குவதையும் மற்ற உலக காரியங்களி்ல் ஈடுபடுவதையும் தடைசெய்தார்கள்
எப்படி தூங்க வேண்டும்?..
இமாம் ஷாஃபி (ரஹ்)
கூறுகிறார்கள்:- தூக்கத்தில் நான்கு முறை உண்டு
1. ஆண்கள் மல்லாக்க படுப்பது இந்த வகை தூக்கம் நபிமார்களின்
தூக்கமாகும் ( ஆண்கள் குப்புற படுப்பது கூடாது மல்லாக்கதான் படுக்க வேண்டும் அதே
சமயத்தில் பெண்கள் மல்லாக்க படுக்க கூடாது குப்புற படுத்து தான் தூங்க வேண்டும்.
2. வலது பக்கம்
சாய்ந்து பக்கவாட்டில் தூங்குவது இது வணக்கசாலிகளின் தூக்கம்
3. இடது பக்கம் சாய்ந்து
பக்க வாட்டில் தூங்குவது இது மன்னர்கள் அதிபர்கள் பிரதமர்கள் முதலமைச்சர்கள் போன்ற
அரசியல் வாதிகளின் தூக்கம் இயற்கையாகவே இடது பக்கம் சாய்ந்து தூங்குபவர்கள்
அரசியலில் ஈடுபடுவார்கள்
4. குப்புற படுத்து
தூங்குவது இது ஷைத்தானின் தூக்கம் ஆனால் பெண்களுக்கு இது கூடும் ஆண்கள் குப்புற
படுத்து தூங்க கூடாது..
அதிக தூக்கம் ஆபத்தாகும்..
சராசரி ஆயுளைப்
பெற்ற ஒருவர் தனது முழு ஆயுளில் மூன்றில் ஒன்றை தூக்கத்தில் கழிக்கின்றார்; சில ஆண்டுகள் குழந்தைப்பருவத்தில் கழிகின்றது.
குளியல் அறையிலும்
உண்பதிலும் குடிப்பதிலும் மற்றும் சில ஆண்டுகளைக் கழிக்கின்றார்.
அடுத்தவர்களுடன்
உறவாடுவதிலும் உரையாடுவதிலும் இன்னும் பல ஆண்டுகளை செலவு செய்கின்றார்.
இந்த நிலையில், அவர் அதிகம் தூங்கும் பழக்கமுடையவராக இருந்தால் அவரது ஆயுளில் உருப்படியாக எதையும்
சாதிக்க முடியாது.
மேன்மக்களான நமது இமாம்கள் அதிக தூக்கத்தினால் விளையும் ஆன்மீக ரீதியிலான பாதிப்புக்களை
விளக்கி,
அதிக தூக்கத்தையிட்டு எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
புழைல் இப்னு
இயாழ் (ரஹ்) அவர்கள் சொல்கிறார்கள்:- “இரண்டு தன்மைகள்
உள்ளத்தின் மென்மையைப்போக்கி அதனை வன்மையாக்கிவிடும். அவையாவன: அதிக தூக்கமும்
மிதமிஞ்சிய உணவுமாகும்.”
قال
العلامة ابن القيم رحمه الله:
كثرة النوم يميت القلب ويثقل البدن, ويضيع الوقت, ويورث
كثرة الغفلة والكسل.
أربعة تمرض
الجسم: الكلام الكثير, والنوم الكثير, والأكل الكثير, والجماع الكثير
உள்ளத்தை
நாசப்படுத்தும் ஐந்து அம்சங்களை விளக்கியுள்ள இமாம் இப்னுல் கையிம் (ரஹ்) அவர்கள்
அவற்றுள் ஒன்றாக அதிக தூக்கத்தைக் குறிப்பிட்டு,
1. அது உள்ளத்தை
மரணிக்கச் செய்துவிடும்;
2. உடலில் சோர்வை
உண்டாக்கும்;
3. நேரம் வீணாகக்
காரணமாக அமையும்;
4.
”ஃகப்லா”
எனும் அலட்சியப் போக்கை, மறதி நிலையை உருவாக்கும் என்றும்
விளக்குகின்றார்கள்
மேலும், உடலை நாசப்படுத்தும் நான்கு விஷயங்களை விளக்கும் இமாம் இப்னுல்
கைய்யிம் (ரஹ்) அவர்கள் அவற்றுள் ஒன்றாக
தூக்கத்தைக் குறிப்பிடுகின்றார்கள்.
1. அதிக பேச்சு
2. அதிக தூக்கம்
3. அதிக உணவு
4. அதிக உடலுறவு
இமாம் ஃகஸ்ஸாலி (ரஹ்)
அவர்கள் அதிக தூக்கத்தின் ஆபத்தை பின்வருமாறு விளக்குகின்றார்கள்:
“அதிக தூக்கம் ஆயுளை
வீணாக்கிவிடும்;
இரவுத் தொழுகையை பாழ்படுத்திவிடும்; மந்த நிலையும் இறுகிய உள்ளமும் உருவாகக் காரணமாக அமையும்.
இரவில்
தூக்கத்தைக் குறைத்து,
குறிப்பாக இரவின் முற்பகுதியில் தூங்கி, பிற்பகுதியில் கண்விழித்து அமல் – இபாதத்களில், வணக்க வழிபாடுகளில் ஈடுபட வேண்டும்.
அல்குர்ஆன்
இறைவிசுவாசிகளைப் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றது:
تَتَجَافٰى
جُنُوْبُهُمْ عَنِ الْمَضَاجِعِ يَدْعُوْنَ رَبَّهُمْ خَوْفًا وَّطَمَعًا…
“அச்சத்துடனும், எதிர்பார்ப்புடனும் தமது இறைவனைப் பிரார்த்திக்க அவர்களின் விலாப்புறங்கள்
படுக்கைகளிலிருந்து விலகும்.”
உண்மையான
இறையச்சம் உடைய முத்தகீன்களைப் பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.
كَانُوْا
قَلِيْلًا مِّنَ الَّيْلِ مَا يَهْجَعُوْنَ
“இரவில் குறைவாகவே அவர்கள்
தூங்கிக் கொண்டிருந்தார்கள்.”
وَبِالْاَسْحَارِ
هُمْ يَسْتَغْفِرُوْنَ
“இரவின் கடைசி நேரங்களில்
அவர்கள் பாவமன்னிப்பும் தேடுவார்கள்.”
பிரபல்யமான தாபிஈ தாவூஸ் (றஹ்) அவர்கள் “தூங்குவதற்காக தனது
படுக்கையை விரிப்பார்கள்; சாய்வார்கள்; சற்று நேரம் புரளுவார்கள். பின்னர் துள்ளிக்குதித்து எழுந்து தொழ ஆரம்பித்து
விடுவார்கள்;
ஸுப்ஹு வரை தொழுவார்கள். “நரகத்தின் நினைவு தூக்கத்தை பறக்க வைக்கின்றது” என்பார்கள்.
இதே போல நரகம்
பற்றிய நினைவு தம்மை தூங்க விடாமல் தடுப்பதாகவும் அதனாலேயே இரவில் தூக்கம் கலைந்து
விடுவதாகவும் தாங்கள் இரவெல்லாம் நின்று வணங்குவதாகவும் ஷத்தாத் இப்னு அவ்ஸ், ஸப்வான் இப்னு மிஹ்ரஸ்,
அர்ரபீஉ இப்னு ஃகைஸம், ஸுப்யானுஸ் ஸவ்ரீ போன்ற
மற்றும் பல முன்னோர்கள் சொல்லியிருக்கின்றார்கள். ( நூல்: ஸிஃபதுஸ் ஸஃப்வா )
قال
العجلي رحمه الله
النَّوْمُ
عَلَى سَتِةِ أَقْسَامٍ
نَوْمُ
الْغَفْلَةِ وَنَوْمُ الشَّقَاوَةِ وَنَوْمُ اللَّعْنَةِ وَنَوْمُ الْعُقُوبَةِ وَنَوْمُ الرَّاحَةِ وَنَوْمُ
الرَّحْمَةِ
أَمَّا
نَوْمُ الْغَفْلَةِ فَالنَّوْمُ فِي مَجْلِسِ الذِّكْرِ وَنَوْمُ الشَّقَاوَةِ
النَّوْمُ فِي وَقْتِ الصَّلاةِ وَنَوْمُ اللَّعْنَةِ النَّوْمُ
فِي
وَقْتِ الصُّبْحِ
وَنَوْمُ
الْعُقُوبَةِ النَّوْمُ بَعْدَ الْفَجْرِ
وَنَوْمُ
الرَّاحَةِ النَّوْمُ قَبْلَ الظُّهْرِ وَنَوْمُ الرَّحْمَةِ النَّوْمُ بَعْدَ
الْعِشَاءِ.اهـ
அல் இஜ்லீ (ரஹ்)
அவர்கள் கூறுகின்றார்கள்:- “தூக்கம் ஆறு வகை இருக்கின்றது. 1.இறைவனை நினைவு
கூறப்படும் சபையிலே தூங்குவது அலட்சிய தூக்கம். 2.தொழுகையின் நேரத்திலே தூங்குவது
மூதவித்தனமான தூக்கம். 3.சுப்ஹு தொழுகையின் நேரத்தில் தூங்குவது இறை சாபத்தைப்
பெற்றுத்தரும் தூக்கம். 4.சுபுஹுத் தொழுகைக்குப் பின் தூங்குவது தண்டனைக் குரிய
தூக்கம். 5. கைலூலா தூக்கம் நிம்மதி தரும் தூக்கம். 6.இஷாவுக்குப் பின் தூங்குவது
இறைவன் புறத்தில் இருந்து அருளைப் பெற்றுத் தரும் தூக்கம்.
தூக்கம் குறித்து ஆய்வு செய்தவருக்கு
அல்லாஹ் வழங்கிய “ஹிதாயத் – நேர்வழி”…
இங்கிலாந்து
நாட்டில் உள்ள புகழ்பெற்ற பல்கலைகழகத்தில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ்
பிரிவின் தலைவராக பணியாற்றியவர் தான் டாக்டர் அலிசன். தூக்கம், மரணம் இவற்றைப் பற்றி பல ஆய்வுகள் செய்த இவர், இறுதியில் தம்முடைய எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களின்
உதவியுடன் ஆய்வு நடத்தினார்.
இந்த ஆய்வின்
முடிவில் ‘ஒரு ஆணோ,
பெண்ணோ உறங்கும்போது ஏதோ ஒன்று மனித உடலிலிருந்து வெளிச்
செல்கிறது என்றும்,
எப்பொழுது திரும்புகிறதோ வந்தவுடன் விழிப்புணர்வை
ஏற்படுத்துகின்றது என்றும்,
ஆனால் மரணத்தின் நிலையிலோ அந்த ஏதோ ஒன்று திரும்ப
வருவதில்லை’
என்று கண்டறிந்தார்.
அதே நேரத்தில் திருக்குர்ஆனையும் ஆய்வு செய்த இவர், பல வசனங்கள் இன்றைய அறிவியலோடு ஒத்துப் போவதையும் பின்வரும் வசனம் அவரின்
ஆய்வு முடிவை மெய்ப்பித்திருப்பதையும் அறிந்து பெரும் வியப்பிற்குள்ளானார்.
அந்த வசனம் இதுதான்.
اللَّهُ يَتَوَفَّى الْأَنْفُسَ حِينَ مَوْتِهَا وَالَّتِي لَمْ تَمُتْ
فِي مَنَامِهَا فَيُمْسِكُ الَّتِي قَضَى عَلَيْهَا الْمَوْتَ وَيُرْسِلُ
الْأُخْرَى إِلَى أَجَلٍ مُسَمًّى إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ
يَتَفَكَّرُونَ
“அல்லாஹ், உயிர்களை அவை மரணிக்கும் போதும், மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி, பின்பு எதன் மீது மரணத்தை விதித்து விட்டானோ அதை(த்
தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான். மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட
தவணைவரை (வாழ்வதற்காக) அனுப்பி விடுகிறான் — சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு நிச்சயமாக அதில்
அத்தாட்சிகள் இருக்கின்றன”. (அல்குர்ஆன்: 39:42)
இறைவனின் இவ்வசனத்தைக் கண்டு அதிசயித்த இவர், எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் நடந்த ‘குர்ஆன் ஒளியில் மருத்துவம்’ என்ற மாநாட்டில் கலந்து
கொண்டு பேசுகையில்,
தாம் சத்திய மார்க்கமாகிய இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்
கொண்டு விட்டதாக கூறி, தம் பெயரை அப்துல்லாஹ் என்றும் மாற்றினார்.
மேலும், அவர் கூறுகையில்,
இஸ்லாத்தில் இந்த அளவுக்கு அறிவியல் நுணுக்கங்களும், அத்தாட்சிகளும் இருப்பதை மேலை நாடுகளும், அறிவியல் உலகமும்
(விஞ்ஞானிகளும்) அறியாமல் இருப்பதைக் கண்டு வருத்தமுறுவதாகவும், அதற்கு காரணம்;
இத்தனை அறிவியல் நுணுக்கங்கள் நிறைந்த இஸ்லாமிய மார்க்கத்தை
பிற மதத்தவர்களுக்கு முஸ்லிம்கள் எடுத்துக்கூற தவறிவிட்டனர் என்று குற்றம்
சாட்டினார்.
அவருடைய இந்தக் குற்றச்சாட்டில் நிறைய உண்மை இருப்பதை நாம்
மறுக்க முடியாது. ஏனெனில், அல்லாஹ் அவனுடைய படைப்புகளை சிந்தித்துப் பார்க்குமாறு
கட்டளை பிறப்பிக்கின்றான். தூக்கமும் ஒரு அத்தாட்சி என குறிப்பிடும் இறைவன் அதை
சிந்தித்துப் பார்க்குமாறு கட்டளையிடுகின்றான்.
وَمِنْ اٰيٰتِه مَنَامُكُمْ بِالَّيْلِ وَالنَّهَارِ وَابْتِغَاؤُكُمْ مِّنْ فَضْلِه اِنَّ فِىْ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يَّسْمَعُوْنَ
இன்னும், இரவிலும் பகலிலும்,
உங்களுடைய (ஓய்வும்) உறக்கமும்; அவன் அருளிலிருந்து நீங்கள் தேடுவதும் அவனுடைய அத்தாட்சிகளினின்றும் உள்ளன -
செவியுறும் சமூகத்திற்கு நிச்சயமாக இதில் அத்தாட்சிகள் இருக்கின்றன. ( அல்குர்ஆன்: 30: 23 )
ஆகவே தான்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின் வருமாறு பிரார்த்தனை செய்து விட்டு
தூங்குமாறு நமக்கு வழிகாட்டி இருக்கின்றார்கள்.
தூங்கும் முன் ஓத வேண்டிய துஆ
வலது புறமாகச் சாய்ந்து படுத்த பின்...
اَللّهُمَّ خَلَقْتَ نَفْسِيْ وَأَنْتَ تَوَفَّاهَا
لَكَ مَمَاتُهَا وَمَحْيَاهَا إِنْ أَحْيَيْتَهَا فَاحْفَظْهَا وَإِنْ أَمَتَّهَا
فَاغْفِرْ لَهَا اَللّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ الْعَافِيَةَ
அல்லாஹும்ம ஃகலக்(த்)த நப்[F]ஸீ, வஅந்(த்)த தவப்பா[F]ஹா, ல(க்)க மமா(த்)துஹா வமஹ்யாஹா, இன் அஹ்யை(த்)தஹா ப[F]ஹ்ப[F]ள்ஹா,
வஇன் அமத்தஹா ப[F]ஃக்பி[F]ர் லஹா,
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)கல் ஆபி[F]யா" என்று ஓத வேண்டும்.
பொருள் :- "இறைவா! நீயே என் ஆத்மாவைப் படைத்தாய். நீயே
அதனைக் கைப்பற்றுகிறாய். அதன் மரணமும், வாழ்வும் உனக்குரியது. நீ
அதை உயிர் வாழச் செய்தால் அதனைக் காத்தருள். அதை நீ மரணிக்கச் செய்தால் அதை
மன்னித்து விடு! இறைவா! உன்னிடம் மன்னிப்பை வேண்டுகிறேன். ( நூல்: முஸ்லிம்
)
படுக்கையை உதறி விட்டு கீழ்க்காணும் துஆவையும் ஓதலாம்.
بِاسْمِكَ رَبّ وَضَعْتُ جَنْبِيْ وَبِكَ أَرْفَعُهُ
إِنْ أَمْسَكْتَ نَفْسِيْ فَارْحَمْهَا وَإِنْ أَرْسَلْتَهَا فَاحْفَظْهَا بِمَا
تَحْفَظُ بِهِ عِبَادَكَ الصَّالِحِيْنَ
பி(B]ஸ்மி(க்)க ரப்பீ[B],
வளஃது ஜன்பீ(B] வபி(B](க்)க அர்ப[F]வுஹு,
இன் அம்ஸக்(த்)த நப்[F]ஸீ ப[F]ர்ஹம்ஹாவஇன் அர்ஸல்(த்)தஹா ப[F]ஹ்ப[F]ள்ஹா பி(B]மா தஹ்ப[F]ளு பி(B]ஹி இபா(B]த(க்)கஸ் ஸாலிஹீன்.
பொருள்:-
"என் இறைவனே! உன் பெயரால் எனது உடலைச் சாய்க்கிறேன். (படுக்கிறேன்) உன்
பெயரால் தான் அதை உயர்த்துகிறேன். (எழுகிறேன்) என் உயிரை நீ கைப்பற்றிக் கொண்டால்
அதற்கு அருள் புரிவாயாக! கைப்பற்றாது அதை நீ விட்டு வைத்தால் உனது நல்லடியார்களைப்
பாதுகாப்பது போல் அதையும் பாதுகாப்பாயாக! ( நூல்: புகாரி )
மேலும், தூங்கி எழும் போதும் இதே கருத்துள்ள பிரார்த்தனையை செய்யுமாறு வழிகாட்டி
இருக்கின்றார்கள்.
اَلْحَمْدُ
للهِ الَّذِيْ أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُوْرُ
அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா ப(B]ஃத மா அமா(த்)தனா வ இலைஹின் னுஷுர்” இதை தூங்கி எழுந்தவுடன்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுவார்கள். ( நூல்: புகாரி )
பொருள்:-
"எங்களை மரணிக்கச் செய்த பின் உயிர்ப்பித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.
மேலும் அவனிடமே (நமது) திரும்பிச் செல்லுதல் உள்ளது.
அல்லாஹ்வின் அருட்கொடைகளின் வலிமையை விளங்கி அவனுக்கு நன்றி செலுத்தும் நல்லோர்களாக நம் அனைவரையும் ஆக்கியருள்வானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்! வஸ்ஸலாம்!!!
மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ்
ReplyDeleteஇந்த பயான் ஒரு மணி பேசலாமே அல்ஹம்துலில்லாஹ்
ReplyDelete