Thursday, 24 August 2023

தொழுகையாளிகள் பெறும் சோபனமும்.. சாபமும்…

 

தொழுகையாளிகள் பெறும் சோபனமும்.. சாபமும்


அல்லாஹ் தொழுகையாளிகளின் முடிவை இரண்டுவிதமாக அல்குர்ஆனில் அடையாளப் படுத்திக் காட்டுகிறான்.

قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ (1) الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ (2)

தங்கள் தொழுகையில் உள்ளச்சத்துடன் இருக்கும் முஃமின்கள் நிச்சயம் வெற்றி பெற்று விட்டார்கள்.( அல்குர்ஆன்: 23: 1, 2 )

فَوَيْلٌ لِلْمُصَلِّينَ (4) الَّذِينَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُونَ (5)

தங்கள் தொழுகையில் கவனமற்றவர்களாக இருக்கும் தொழுகையாளிகளுக்கு கேடுதான்.( அல்குர்ஆன்: 107: 4, 5 )

தொழுகையாளிகளில் சிலருக்கு வெற்றி கிடைக்கின்றது. சிலருக்கு நாசம் உண்டாகிறது.

தொழுகையாளிகளுக்கு வெற்றி கிடைப்பது மகிழ்ச்சி தரும் விஷயமாகும். ஆனால், தொழுகையாளிகளுக்கு நாசம் கிடைப்பது பார தூரமான ஒன்றாகும்.

எனினும், இரண்டுமே தொழுகையிலிருக்கும் தன்மையை பொறுத்தே அமைகின்றது. 

அல்லாஹ் ரப்புல் ஆலமீன்  மனிதனிடம்  இருந்து அடிமைத்தனம் வெளிப்பட வேண்டும் என்பதற்காக சில அமல்களை மனிதனுக்கு கடமையாக்கியுள்ளான்.

அந்த அமல்களில் மிகவும் முக்கியமானது தொழுகையாகும். அந்த தொழுகையை முறைப்படி,  முழுமையாக நிறைவேற்றும் போது  அந்த தொழுகை அல்லாஹ்வால்  அங்கிகரிக்கப்பட்டு  நன்மைகளை பெற்றுத் தரும் உயரிய நற்காரியமாக அமைந்து விடுகிறது.

மாறாக, முறை தவறி   முறைகேடாக தொழுகையில் ஈடுபடுவோமேயானால் அந்த தொழுகை அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படாததாக ஆகி விடுகின்றது.

ஆதலால், அல்லாஹ்வின் புறத்திலிருந்து சாபத்தைப் பெற்றுத் தரும் சாதனமாகவும் அது மாறி விடுகின்றது.

இன்று இந்த உம்மத்தில் பெரும்பாலான தொழுகையாளிகளால் அலட்சியமாக பார்க்கப்படும், கவனக்குறைவாக அனுகப்படும் முக்கியமான அம்சங்களில் ஸஃப்ஃபில் நிற்பதில் குளறுபடி, தொழுபவரின் குறுக்கே செல்வது ஆகிய இரண்டு அம்சங்களைப் பற்றி நாம் இந்த ஜும்ஆ உரையிலே நாம் பார்க்க இருக்கிறோம்.

1.   ஸஃப் - வரிசையில் நிற்பது.

COVID-19 என்னும் கொரோனா நோயின் பரவலாலும் அதனால் ஏற்பட்ட அச்சத்தாலும்  பாதுகாப்பு காரணங்களுக்காக நாட்டின் பல்வேறு விதிமுறைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் விதித்தன. அவைகளை கடைப்பிடிக்க வேண்டிய சூழலில் இந்த உம்மத் தள்ளப்பட்டது. 

ஜும்ஆ & ஜமாஅத் தொழுகைகளை தொழ முடியாமல் வீட்டிலேயே தொழுதது. பின்னர் சில கட்டுப்பாடுகளுடன் பள்ளிவாசலில் தொழ அனுமதிக்கப்பட்டோம். அந்த கட்டுப்பாடுகளில் ஒன்று தொழுகையின் வரிசையில் (ஸஃப்பில்) இடைவெளி விட்டு தொழுதது.

அதற்குப் பின்னர் இன்று வரை முஸ்லிம் சமூகத்தின் ஜமாஅத் தொழுகையின் வரிசையில் (ஸஃப்பில்) இடைவெளி என்பது பல மஸ்ஜித்களில் தொடர்ந்து வருகிறது.

வரிசையில் (ஸஃப்பில்) இடைவெளி விட்டு தொழுவது தவறு, பாவம் என்று இந்த உம்மத் விளங்கிக் கொள்ள முன் வர வேண்டும். ஏனெனில், தொழுகையில்  வரிசை - ஸஃப் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.

இந்த உம்மத்தின் தனிச் சிறப்பு...

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:- “(இறுதி சமுதாயத்தாராகிய) நாம் மூன்று விஷயங்களில் (மற்ற) மக்கள் அனைவரை விடவும் சிறப்பிக்கப்பட்டுள்ளோம்:

1.நம் (தொழுகை) வரிசைகள் வானவர்களின் (தொழுகை) வரிசைகளைப் போன்று (சீராக) ஆக்கப்பட்டுள்ளன.

2. நமக்கு பூமி முழுவதும் தொழுமிடமாக ஆக்கப்பட்டுள்ளது. (தொழுகைக்காக "அங்கத் தூய்மை" செய்ய) நமக்குத் தண்ணீர் கிடைக்காதபோது தரை முழுவதும் சுத்தம் (தயம்மும்) செய்வதற்கேற்றதாக ஆக்கப்பட்டுள்ளது.

மற்றொரு சிறப்பையும் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். இதை ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

حَدَّثَنَا أَبُو الوَلِيدِ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: « سَوُّوا صُفُوفَكُمْ، فَإِنَّ تَسْوِيَةَ الصُّفُوفِ مِنْ إِقَامَةِ الصَّلاَةِ»

வரிசையை நேராக்குங்கள்! ஏனெனில் வரிசைகளை நேராக்குவது தொழுகையை நிலை நாட்டுதலில் உள்ளதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி), ( நூல்கள்: புகாரீ, முஸ்லிம் )

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ الْمُخَرِّمِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو هِشَامٍ قَالَ: حَدَّثَنَا أَبَانُ قَالَ: حَدَّثَنَا قَتَادَةُ قَالَ: حَدَّثَنَا أَنَسٌ، أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «رَاصُّوا صُفُوفَكُمْ وَقَارِبُوا بَيْنَهَا، وَحَاذُوا بِالْأَعْنَاقِ، فَوَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ إِنِّي لَأَرَى الشَّيَاطِينَ تَدْخُلُ مِنْ خَلَلِ الصَّفِّ كَأَنَّهَا الْحَذَفُ»

வரிசைகளைச் சரி செய்யுங்கள்! நெருக்கமாக ஆக்கிக் கொள்ளுங்கள்! கழுத்தைக் கவனித்து சரி செய்து கொள்ளுங்கள்! முஹம்மதின் உயிர் எவன் கை வசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! நிச்சயமாக ஷைத்தான் வரிசைகளின் இடையில் சிறிய ஆட்டுக் குட்டிகளைப் போல் நுழைவதை நான் காண்கிறேன்  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்கள்: நஸயீ. அபூதாவூத் )

حَدَّثَنَا أَبُو الوَلِيدِ هِشَامُ بْنُ عَبْدِ المَلِكِ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ مُرَّةَ، قَالَ: سَمِعْتُ سَالِمَ بْنَ أَبِي الجَعْدِ، قَالَ: سَمِعْتُ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ، يَقُولُ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَتُسَوُّنَّ صُفُوفَكُمْ، أَوْ لَيُخَالِفَنَّ اللَّهُ بَيْنَ وُجُوهِكُمْ»

உங்களது வரிசைகளை நேராக அமைத்துக் கொள்ளுங்கள்! இல்லையெனில் அல்லாஹ் உங்கள் முகங்களை (கருத்து வேறுபாடுகளால்) மாற்றி விடுவான்”  என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி) நூல்கள்: புகாரீ, முஸ்லிம் )

வரிசையை ஒழுங்கு படுத்துவது

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ جَدَّتَهُ مُلَيْكَةَ دَعَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِطَعَامٍ صَنَعَتْهُ لَهُ، فَأَكَلَ مِنْهُ، ثُمَّ قَالَ: «قُومُوا فَلِأُصَلِّ لَكُمْ» قَالَ أَنَسٌ: فَقُمْتُ إِلَى حَصِيرٍ لَنَا، قَدِ اسْوَدَّ مِنْ طُولِ مَا لُبِسَ، فَنَضَحْتُهُ بِمَاءٍ، فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَصَفَفْتُ وَاليَتِيمَ وَرَاءَهُ، وَالعَجُوزُ مِنْ وَرَائِنَا، فَصَلَّى لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَكْعَتَيْنِ، ثُمَّ انْصَرَفَ

என் பாட்டி முளைக்கா (ரலி), நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்காக உணவைச் சமைத்து அவர்களை அழைத்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாப்பிட்டு விட்டுப் பின்னர்  எழுந்திருங்கள்! உங்களுக்கு நான் தொழுகை நடத்துகிறேன்  என்று கூறினார்கள். பயன்படுத்தப்பட்டதால் கருத்துப் போய் விட்ட எங்களுடைய ஒரு பாயை எடுத்து அதில் சிறிது தண்ணீர் தெளித்து விரித்தேன். அப்பாயில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகைக்காக நின்றார்கள். அவர்களுக்குப் பின்னால் நானும் (எங்களுடன் வசிக்கும்) அனாதையும் நின்றோம். எங்களுக்குப் பின்னால் பாட்டி (முளைக்கா) நிற்குமாறு வரிசைகளை ஒழுங்குபடுத்தினேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத் தொழுகை நடத்தி விட்டுச் சென்று விட்டார்கள்.அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்கள்: புகாரீ 380,

முதல் வரிசையின் சிறப்பு

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ سُمَيٍّ مَوْلَى أَبِي بَكْرٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَوْ يَعْلَمُ النَّاسُ مَا فِي النِّدَاءِ وَالصَّفِّ الأَوَّلِ، ثُمَّ لَمْ يَجِدُوا إِلَّا أَنْ يَسْتَهِمُوا عَلَيْهِ لاَسْتَهَمُوا، وَلَوْ يَعْلَمُونَ مَا فِي التَّهْجِيرِ لاَسْتَبَقُوا إِلَيْهِ، وَلَوْ يَعْلَمُونَ مَا فِي العَتَمَةِ وَالصُّبْحِ، لَأَتَوْهُمَا وَلَوْ حَبْوًا»

பாங்கு சொல்வதற்குரிய நன்மையையும், (தொழுகையில்) முதல் வரிசையில் நிற்பதன் நன்மையையும் மக்கள் அறிவார்களானால் அதற்காக அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு வருவர். யாருக்கு அந்த இடம் கொடுப்பது என்பதில் சீட்டுக் குலுக்கி எடுக்கப்படும் நிலையேற்பட்டாலும் அதற்கும் தயாராகி விடுவர்  என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ( நூல்கள்: புகாரீ, முஸ்லிம் )

عن جابر بن سمرة رضي الله عنهما ، قال (( خرج علينا رسول الله صلى الله عليه وسلم فقال : ألا تصفون كما تصف الملائكة عند ربها ؟ فقلنا : يا رسول الله وكيف تصف الملائكة عند ربها ؟ قال: يتمون الصفوف الأول ، ويتراصون في الصف )) [ رواه مسلم ] .

மகத்துவமும் கண்ணியமும் நிறைந்த அல்லாஹ்வின் முன்னிலையில் மலக்குகள் அணிவகுப்பது போன்று நீங்கள் அணிவகுக்க வேண்டாமா ? என்று அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் சொன்ன போது , மலக்குகள் தங்கள் இறைவனின் முன்னிலையில் எப்படி அணிவகுத்து நிற்பர் ? என்று நாங்கள் கேட்டோம் . அதற்கு நபி ( ஸல் ) அவர்கள் முந்தைய வரிசைகளை பூர்த்தி செய்வார்கள் . வரிசையில் ( இடைவெளி இல்லாது ) ஒருவர் இன்னொருவருடன் சேர்ந்து நிற்பார்கள் என்று பதிலளித்தார்கள் என ஜாபிர் பின் சமூரா ( ரலி ) அறிவிக்கின்றார். 

وأخرج ابن ماجه والنسائي وابن خزيمة عن العرباض بن سارية رضي الله عنه: أن رسول الله صلى الله عليه وسلم كان يستغفر للصف الأول ثلاثًا وللثاني مرة؛ (صحيح الترغيب والترهيب:

திண்ணை ஸஹாபாக்களில் ஒருவரான இர்பாள் இப்னு ஸாரியா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் முதலாவது வரிசைக்கு மூன்று முறையும், இரண்டாவது வரிசைக்கு ஒரு தடவையும் ஸலவாத் (பிரார்த்தனை) சொல்லக்கூடியவர்களாக இருந்நனர் ( நூல்: அஹ்மத் )

وعن أَبي هُريْرة رضي الله عنه قَالَ: قَالَ رسُولُ اللَّهِ ﷺ: خَيْرُ صُفوفِ الرِّجالِ أَوَّلُهَا، وشرُّها آخِرُهَا  رواه مُسلِم.

முதல் ஸஃப்பை பூர்த்தி செய்யுங்கள். பிறகு அடுத்த ஸஃப்பை பூர்த்தி செய்யுங்கள். ஸஃப்பில் குறை இருக்குமாயின் அது கடைசி ஸப்பாக இருக்கட்டும். (முஸ்லிம்)

தொழுகையில் இமாமை நடுவில் நிற்கச் செய்யுங்கள். ஸஃப்புகளுக்கு இடையில் இடைவெளியை அடையுங்கள் என நபி(ஸல்) கூறினார்கள். (அபூதாவூது)

வரிசை சீர்பெற்றாலே தொழுகை முழுமை பெறும்..

عنْ أَنَسِ بْنِ مَالِكٍ رضي الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : ( سَوُّوا صُفُوفَكُمْ , فَإِنَّ تَسْوِيَةَ الصَّفِّ مِنْ تَمَامِ الصَّلاةِ ) رواه البخاري ( 690 ) ومسلم ( 433) , وفي رواية للبخاري ( 723 ) : ( سَوُّوا صُفُوفَكُمْ , فَإِنَّ تَسْوِيَةَ الصُّفُوفِ مِنْ إِقَامَةِ الصَّلاةِ ) .

وفي رواية للبخاري ( سَوُّوا صُفُوفَكُمْ , فَإِنَّ تَسْوِيَةَ الصُّفُوفِ مِنْ حسن الصَّلاةِ ) .

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் (தொழுகை) வரிசைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில், வரிசைகளை ஒழுங்குபடுத்துவது தொழுகை முழுமை அடைவதன் ஓர் அங்கமாகும். அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: முஸ்லிம் (741)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் (தொழுகை) வரிசைகளை ஒழுங்குபடுத்துங்கள். வரிசைகளை ஒழுங்குபடுத்துவது தொழுகையை (நிறைவுடன்) நிலை நாட்டுவதேயாகும். அறிவிப்பவர்:  அனஸ் (ரலி),  நூல்: புகாரி (723)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகை வரிசையை நேராக்குங்கள். ஏனெனில் வரிசை நேராக்குவது தொழுகையை அழகுறச் செய்வதேயாம். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),  நூல்: புகாரி (722)

முதல் வரிசையில் யார் நிற்க வேண்டும்

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ إِدْرِيسَ، وَأَبُو مُعَاوِيَةَ، وَوَكِيعٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ عُمَارَةَ بْنِ عُمَيْرٍ التَّيْمِيِّ، عَنْ أَبِي مَعْمَرٍ، عَنْ أَبِي مَسْعُودٍ، قَالَ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْسَحُ مَنَاكِبَنَا فِي الصَّلَاةِ، وَيَقُولُ: «اسْتَوُوا، وَلَا تَخْتَلِفُوا، فَتَخْتَلِفَ قُلُوبُكُمْ، لِيَلِنِي مِنْكُمْ أُولُو الْأَحْلَامِ وَالنُّهَى ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ» قَالَ أَبُو مَسْعُودٍ: «فَأَنْتُمُ الْيَوْمَ أَشَدُّ اخْتِلَافًا»

உங்களில் பருவம் அடைந்தவர்களும், அறிவில் சிறந்தவர்களும் எனக்கு அருகில் (முதல் வரிசையில்) நிற்கட்டும். பிறகு அவர்களுக்கு அடுத்து உள்ளவர்களும், பிறகு அவர்களுக்கு அடுத்து உள்ளவர்களும், பிறகு அவர்களுக்கு அடுத்து உள்ளவர்களும் நிற்கட்டும்  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூமஸ்வூத் (ரலி), ( நூல்: முஸ்லிம் )

முதல் வரிசையில் நின்று தொழுவது இங்கே மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துப் பேசப்படுகின்றது. எனவே, ஸப்பில் நிற்கும் போது முதல் வரிசையில் நின்று தொழ முற்பட வேண்டும்.

ஸஃப்ஃபை சரியாக அமைக்க வில்லை என்றால்?...

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகையில் (ஒருவருக்கொருவர்) இடைவெளி விட்டு நிற்பதை விட்டும் உங்களை நான் எச்சரிக்கை செய்கிறேன்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) ( நூல்: அல் முஃஜமுல் கபீர் (11289 பாகம் : 9 பக்கம் ; 390 )

وعن النُّعْمَانَ بْنَ بَشِيرٍ رضي الله عنهما قال : كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُسَوِّي صُفُوفَنَا حَتَّى كَأَنَّمَا يُسَوِّي بِهَا الْقِدَاحَ ، حَتَّى رَأَى أَنَّا قَدْ عَقَلْنَا عَنْهُ ثُمَّ خَرَجَ يَوْمًا فَقَامَ حَتَّى كَادَ يُكَبِّرُ ، فَرَأَى رَجُلا بَادِيًا صَدْرُهُ مِنْ الصَّفِّ ، فَقَالَ : ( عِبَادَ اللَّهِ ، لَتُسَوُّنَّ صُفُوفَكُمْ أَوْ لَيُخَالِفَنَّ اللَّهُ بَيْنَ وُجُوهِكُمْ ) . رواه البخاري ( 717 ) ومسلم (436) .

நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஒழுங்கு முறையை புரிந்து நாங்கள் கடைபிடித்து விட்டோம் என்று அவர்கள் எண்ண தலைப்படும் வரை அம்பை சீர் செய்வது போல் எங்களது வரிசைகளை சீர் செய்வார்கள் . ஒரு நாள் அவர்கள் தனது திருமுகத்தால் எங்களை நோக்கி பார்க்கும்போது , தனது நெஞ்சை முன்னால் நிமிர்த்திக் கொண்டு ஒருவர் நின்றிருந்தார் . உடனே அவர்கள் " நீங்கள் உங்கள் வரிசைகளை சரிப்படுத்துங்கள் அல்லது உங்களுடைய முகங்களை மாற்றியமைத்து விடுவான் என்று சொன்னார்கள் என நுஃமான் பின் பஷீர் (ரலி) அறிவிக்கின்றார்.

وعن ابن عمر رضي الله عنهما ، أن رسول الله صلى الله عليه وسلم : قال : (( أقيموا الصفوف ، وحاذوا بين المناكب ، وسدوا الخلل، ولينوا بأيدي إخوانكم ، ولا تذروا فرجات للشيطان ، ومن وصل صفاً وصله الله ، ومن قطع صفاً قطعه الله )) [ رواه أبو داود وهو صحيح ] .

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மலக்குமார்களின் வரிசையைக் கொண்டு தான் நீங்கள் வரிசையாக நிற்கிறீர்கள். எனவெ தொழுகை வரிசையை நேராக்குங்கள்! இடைவெளிகளை நிரப்புங்கள்! தோள் புஜங்களை நேராக்கிக் கொள்ளுங்கள்!) உங்களின் சகோதரர்களின் கைகளை (பிடித்து அருகில் நிறுத்துவதில்) இதமாக நடந்து கொள்ளுங்கள். ஷைத்தானிற்கு இடைவெளிகளை விடாதீர்கள். யார் வரிசையில் இணைந்து நிற்கிறாரோ அவரை அல்லாஹ் இணைத்துக் கொள்வான். யார் வரிசையைத் துண்டிக்கிறாரோ அவரை அல்லாஹ் துண்டித்து விடுவான்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), ( நூல்: அஹ்மத் )

வரிசையில் பிந்தியவர்கள் மறுமையிலும் பிந்தியவர்களே!

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى فِي أَصْحَابِهِ تَأَخُّرًا ، فَقَالَ لَهُمْ : ( تَقَدَّمُوا فَأْتَمُّوا بِي وَلْيَأْتَمَّ بِكُمْ مَنْ بَعْدَكُمْ ، لا يَزَالُ قَوْمٌ يَتَأَخَّرُونَ حَتَّى يُؤَخِّرَهُمْ اللَّهُ ) .

அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலர் (தொழுகையில் முன் வரிசையில் சேராமல்) பின்னால் விலகி நிற்பதைக் கண்டார்கள். அப்போது முன் வரிசைக்கு வந்து என்னைப் பின்பற்றித் தொழுங்கள். உங்களுக்குப் பின்னால் இருப்பவர்கள் உங்களைப் பின்பற்றித் தொழட்டும். மக்களில் சிலர் எப்போதும் (தொழுகை வரிசையில்) பின்தங்கிக்கொண்டே இருப்பார்கள். முடிவில் அவர்களை அல்லாஹ் (மறுமையில்) பின்தங்கச் செய்துவிடுவான் என்று கூறினார்கள்.

(நூல்: முஸ்லிம்)

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ مَعِينٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏عَنْ ‏ ‏عِكْرِمَةَ بْنِ عَمَّارٍ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏ ‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ‏ ‏لَا يَزَالُ قَوْمٌ يَتَأَخَّرُونَ عَنْ الصَّفِّ الْأَوَّلِ حَتَّى يُؤَخِّرَهُمْ اللَّهُ فِي النَّارِ ‏

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:- “ஒரு கூட்டத்தார் (வேண்டுமென்றே) முன் வரிசையிலிருந்து பின்தங்கிக் கொண்டேயிருந்தால் இறுதியாக அல்லாஹ் அவர்களை நரகத்தில் பின்தங்கச் செய்துவிடுவான். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ( நூல்: அபூதாவூத் )

பள்ளிக்கு முன்கூட்டியே வரும் சிலர் வரிசையில் வேண்டுமென்றே பிற்பகுதிக்குச் செல்வார்கள். இவ்வாறு முன்கூட்டியே வருபவர்கள் பின்வரிசையை நாடிச் செல்வது மறுமையில் அனைவரையும் விட பிந்தச் செய்யக்கூடிய செயலாகும்.

சோபனமும்... சாபமும்...

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ஸஃப்ஃபில்வரிசையில் நேராக, சரியாக நிற்பவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிகின்றான். வானவர்கள் அல்லாஹ்வின் அருள் அந்த அடியாருக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக துஆச் செய்கின்றார்கள் என்கிற சோபனத்தை கூறுவதோடு, ஸஃப்ஃபில் சரியாக நிற்பதே தொழுகையை பூர்த்தியாக்குகின்றது, அழகுறச் செய்கிறது என்று வலியுறுத்திக் கூறுகின்றார்கள்.

அதே போன்று எவர் ஸஃப்ஃபில் இணைந்து தொழுவதில் ஆர்வம் கொள்ளவில்லையோ, இடைவெளி விட்டு தொழுகின்றாரோ, கடைசி ஸஃப்ஃபில் நின்று தொழுவதையே வழக்கமாக்கி கொள்கின்றாரோ, ஸஃப்ஃபில் சரியாக நிற்பதில்லையோ அவர் குறித்து பல்வேறு சாபங்களை வழங்கி இருப்பதை பார்க்கின்றோம்.

அல்லாஹ்வின் அருளின் முக்கியத்துவம்

இறைவனை வழிபடுவதற்கு இறையருள் தேவை என்பதால் தான் அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் பின்வருமாறு பிரார்த்தனை செய்துள்ளார்கள்.

 

عَنْ الصُّنَابِحِيِّ عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخَذَ بِيَدِهِ وَقَالَ يَا مُعَاذُ وَاللَّهِ إِنِّي لَأُحِبُّكَ وَاللَّهِ إِنِّي لَأُحِبُّكَ فَقَالَ أُوصِيكَ يَا مُعَاذُ لَا تَدَعَنَّ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ تَقُولُ اللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ وَأَوْصَى بِذَلِكَ مُعَاذٌ الصُّنَابِحِيَّ وَأَوْصَى بِهِ الصُّنَابِحِيُّ أَبَا عَبْدِ الرَّحْمَنِ

நபி (ஸல்) அவர்கள், முஆத் (ரலி) அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டு, “முஆதே! உன்னை நான் நேசிக்கின்றேன். அல்லாஹும்ம அயின்னீ அலா திக்ரிக வஷுக்ரிக வஹுஸ்னீ இபாததிக

பொருள்: அல்லாஹ்வே! உன்னை நினைப்பதற்கும் உனக்கு நன்றி செலுத்துவதற்கும் உன்னை அழகான முறையில் வணங்குவதற்கும் உதவி செய்வாயாக! என்று ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் நீ சொல்வதை விட்டு விடாதே என நான் உனக்கு அறிவுறுத்துகின்றேன்என்று கூறினார்கள். ( நூல்: நஸாயீ )

எனவே நன்மைகள் புரிய இறையருள் எவ்வளவு முக்கியமானது என்பது குறித்தும் அதைப் பெறுவதற்கான வழிமுறைகள் என்ன என்பது குறித்தும் குர்ஆன், ஹதீஸ் கூறும் சில முக்கிய தகவல்களைக் காண்போம்.

சொர்க்கம் செல்ல காரணி

முஸ்லிம்களின் இலக்கு மறுமையில் வெற்றி பெற்று சொர்க்கம் செல்ல வேண்டும் என்பதே. அத்தகைய சொர்க்கத்தினுள் மனிதர்கள் செல்ல தங்கள் வழிபாடுகளை விடவும் முக்கிய காரணமாக இறையருளே திகழ்கிறது.

 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَنْ يُنَجِّيَ أَحَدًا مِنْكُمْ عَمَلُهُ قَالُوا وَلَا أَنْتَ يَا رَسُولَ اللَّهِ قَالَ وَلَا أَنَا إِلَّا أَنْ يَتَغَمَّدَنِي اللَّهُ بِرَحْمَةٍ سَدِّدُوا وَقَارِبُوا وَاغْدُوا وَرُوحُوا وَشَيْءٌ مِنْ الدُّلْجَةِ وَالْقَصْدَ الْقَصْدَ تَبْلُغُوا

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:- "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களில் யாரையும் அவரது நற்செயல் ஒருபோதும் காப்பாற்றாது. (மாறாக, அல்லாஹ்வின் தனிப் பெரும் கருணையாலேயே எவரும் காப்பாற்றப்படுவார்)என்று கூறினார்கள். மக்கள் அல்லாஹ்வின் தூதரே! தங்களையுமா (தங்களது நற்செயல் காப்பாற்றாது)?” என்று வினவினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “(ஆம்) என்னையும்தான்; அல்லாஹ் (தனது) அருளால் என்னை அரவணைத்துக் கொண்டால் தவிரஎன்று கூறிவிட்டு, “(ஆகவே,) நேர்மையோடு (நடுநிலையாகச்) செயல்படுங்கள். நிதானமாக நடந்துகொள்ளுங்கள். (வரம்பு மீறிவிடாதீர்கள்.) காலையிலும், மாலையிலும், இரவில் சிறிது நேரமும் நற்செயல் புரியுங்கள். (எதிலும்) நடுநிலை (தவறாதீர்கள்). நடுநிலை(யைக் கடைப்பிடியுங்கள்). (இவ்வாறு செய்தால் இலட்சியத்தை) நீங்கள் அடைவீர்கள் என்று சொன்னார்கள். ( நூல்: புகாரி )

சிறந்த செல்வம்..

மனிதர்கள் திரட்டும் செல்வங்கள் அனைத்தையும் விட இறையருளே மிகச் சிறந்த செல்வமாகும்.

وَلَئِنْ قُتِلْتُمْ فِي سَبِيلِ اللَّهِ أَوْ مُتُّمْ لَمَغْفِرَةٌ مِنْ اللَّهِ وَرَحْمَةٌ خَيْرٌ مِمَّا يَجْمَعُونَ(3:157)

அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் கொல்லப்பட்டாலோ, மரணித்தாலோ அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் மன்னிப்பும், அருளும் அவர்கள் திரட்டிக் கொண்டிருப்பவற்றை விடச் சிறந்தது. ( அல்குர்ஆன்: 3: 157 )

எல்லையில்லா இறையருள்..

அல்லாஹ்வின் அருளுக்கு வரம்போ, எல்லையோ கிடையாது. ஒரு மனிதன் இறையருளின்மீது அளப்பரிய நம்பிக்கை கொண்டால் அவன் எங்கிருந்தபோதும் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் இறையருள் அவனுக்கு கிட்டிவிடும். இறையருளை எந்தச் சூழலும் தடுக்க முடியாது. எந்த மனிதனும் தடுத்து விட முடியாது.

مَا يَفْتَحْ اللَّهُ لِلنَّاسِ مِنْ رَحْمَةٍ فَلَا مُمْسِكَ لَهَا وَمَا يُمْسِكْ فَلَا مُرْسِلَ لَهُ مِنْ بَعْدِهِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ(35:2)

மனிதர்களுக்காக அல்லாஹ் திறந்து விட்ட எந்த அருளையும் தடுப்பவன் எவனும் இல்லை. அவன் தடுத்ததை அவனுக்குப் பின் அனுப்புபவனும் இல்லை. அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன். ( அல்குர்ஆன்: 35: 2 )

சாபத்திலிருந்து பாதுகாப்பு பெறுவோம்..

தனது கோபத்தைவிட தனது அன்பு,கருணை,அருள் தான் மிகைத்து நிற்குமென்று தன் ஸிஃபத்துகளைப் பற்றி அல்லாஹ் பல இடங்களில் வர்ணித்துக் கூறுவான். ஓரிடத்தில்.... 

نَبِّئْ عِبَادِي أَنِّي أَنَا الْغَفُورُ الرَّحِيمُ

என் அடியார்களுக்கு என்னை அறிமுகப்படுத்தி விடுங்கள்! நிச்சயமாக நான்தான் மகா மன்னிப்பாளன், மகா கருணையுடையவன், அன்புடையோன் என்று கூறுகிறான். (அல்குர்ஆன் 15 : 49)

அதே நேரத்தில் அவனது சட்ட வரம்புகள் மீறப்பட்டால், அவனுடைய கட்டளைகளுக்கு மாற்றமாக அடியார்கள் நடந்து கொண்டால், அல்லாஹ்வுடைய ஷரீஆவை மீறினால், அல்லாஹு தஆலா வெறுத்த, சபித்த பாவங்களை மக்கள் செய்தால் அவர்களை தண்டிப்பதிலும் அல்லாஹ் மிகக்கடுமையானவன் என்பதை எச்சரிக்குமாறு அறிவுறுத்துகின்றான்.

وَأَنَّ عَذَابِي هُوَ الْعَذَابُ الْأَلِيمُ

நபியே! எனது தண்டனை மாபெரும் கடுமையான தண்டனை ஆகும். (அல்குர்ஆன் 15 : 50)

குர்ஆனில் அல்லாஹ் தன்னைப்பற்றி சொல்லும்போது, شديد العقاب-"ஷதீதுல் இகாப், شديد العذاب-ஷதீதுல் அதாப்" -தண்டனை வழங்கும் விஷயத்தில் கடுமையானவன். அல்லாஹ்வுடைய தண்டனையைப் போன்று வேறு யாரும் தண்டனை கொடுக்க முடியாது.

سريع الحساب-" ஸரீஉல் ஹிசாப்" அவன் விசாரிணை என வந்துவிட்டால் அவனை விட விரைவாக தீவிரமாக வேறு யாரும் விசாரணை செய்ய முடியாது.

எனவே அல்லாஹ்வை பயந்து கொள்ள வேண்டும்.

அல்லாஹ்  தஆலா விசாரணை குறித்து கூறக்கூடிய கடுமையான வசனத்தை பாருங்கள்:-

وَكَأَيِّنْ مِنْ قَرْيَةٍ عَتَتْ عَنْ أَمْرِ رَبِّهَا وَرُسُلِهِ فَحَاسَبْنَاهَا حِسَابًا شَدِيدًا وَعَذَّبْنَاهَا عَذَابًا نُكْرًا

எத்தனையோ ஊர்வாசிகள் தங்கள் இறைவனின் கட்டளைக்கும், அவனுடைய தூதர் களுக்கும் மாறுசெய்தனர். ஆதலால், அவர்களை நாம் வெகு கடினமாகவே கேள்வி கணக்குக் கேட்டு, அவர்களை மிகக் கடினமான வேதனையைக்கொண்டு வேதனை செய்தோம். (அல்குர்ஆன் 65 : 8)

ஒரு கட்டளையை மீறுவதை மிக எளிதாக எடுத்துக் கொண்டு ஒரு சமூகம் கடந்து போகுமேயானால், அந்த பாவத்தை அவர்கள் பழகி விட்டார்கள் என்று பொருள். அந்த பாவத்திலே அவர்கள் தங்களை பரிகொடுத்து விட்டார்கள் என்று பொருள்.

ஒரு பாவத்தை செய்யப்பழகி அந்த பாவத்திலே தங்களை பரிகொடுத்து விட்ட காரணத்தினால் ஒரு சமூகத்தை அழித்ததாக அல்லாஹ்  தஆலா கூறுகின்றான்.

 

فَلَمَّا عَتَوْا عَنْ مَا نُهُوا عَنْهُ قُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِينَ

ஆகவே தடுக்கப்பட்டிருந்த வரம்பை அவர்கள் மீறவே, அவர்களை நோக்கி ‘‘நீங்கள் சிறுமைப்பட்ட குரங்குகளாகி விடுங்கள்'' என்று (சபித்துக்) கூறினோம். (அவ்வாறே அவர்கள் ஆகிவிட்டனர்.) (அல்குர்ஆன்7 : 166)

இந்த இடத்தில் குர்ஆனின் விரிவுரையாளர் அப்பாஸ் (ரலி) அவர்கள் விளக்கம் சொல்கிறார்கள்:- அந்த சனிக்கிழமையில் வரம்பு மீறி பாவம் செய்தவர்கள்,மீன் பிடிக்க தந்திரம் செய்தவர்களை மட்டும் தான் அல்லாஹ் கண்டித்தான் என்று நீங்கள் நினைத்து கொள்ள வேண்டாம்.

யார் நன்மையை ஏவி தீமையை தடுக்கவில்லையோ அவர்களும் குரங்குகளாக மாற்றப்பட்டார்கள். .(அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்!)

அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரும் தடுத்த ஒரு பாவத்தை அலட்சியமாக கருதி செய்தவர்கள், அவர்கள் செய்வதை அலட்சியமாக கடந்து சென்றவர்கள் என இரு சாராரும் இறைவனின் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

இன்று ஸஃப்ஃபுடைய விஷயத்தில் சமூகம் மிகவும் அலட்சியமாக இருந்து வருவதை நாம் கண்கூடாக கண்டு வருகின்றோம். அல்லாஹ் பாதுகாப்பானாக!

2. தொழுபவருக்கு குறுக்கே செல்வது

தொழுது கொண்டிருப்பவரின் குறுக்கே எவ்வித குற்ற உணர்வும் இன்றி கடந்து செல்வது இன்று இந்த உம்மத்தில் பெருகி விட்டது.

கிராமப்புறம், நகர்ப்புறம் என்றில்லாமல் இமாம் ஸலாம் வாங்கியதும் சிலரும், இமாம் துஆ ஓதி முடித்ததும் சிலரும் அவசர அவசரமாக பிந்தி வந்து தொழுது கொண்டிருப்பவர்களை கண்டு கொள்ளாமல் உரசிக் கொண்டும், இடித்துக் கொண்டும் கடந்து செல்வதை சாதாரணமாக நாம் பார்த்துக் கொண்டு

இருக்கின்றோம்.

எந்த அளவுக்கெனில் சில போது தொழுது கொண்டிருப்பவர் எதிரில் வருபவருக்கு தொழுது கொண்டிருக்கும் நிலையிலேயே ஒதுங்கி கொடுக்கும் சூழல் ஏற்படுகிறது.

இப்படி எவ்வித குற்ற உணர்வும் இன்றி தொழுது கொண்டிருப்பவரின் குறுக்கே கடந்து செல்பவர்கள் தாங்கள் செய்கிற பாவம் எவ்வளவு பாரதூரமானது என்பதை சிந்தித்து உணரும் பொருட்டு "அவர்கள் குறுக்கே செல்வதின் மூலம் உண்டாகும் பாவத்தை உணர்வார்கள் எனில் 40 ஆண்டு காலம்" தொழுது முடிக்கும் வரை காத்திருப்பார்கள் என்றார்கள்.

குறுக்கே செல்பவர் ஷைத்தான்...

தொழுது கொண்டிருக்கும் போது எவராவது குறுக்கே செல்ல முற்ப்பட்டால், நாம் தொழுத நிலையிலே கையை நீட்டிஅவரை தடுக்க வேண்டும்.அதையும் மீறி குறுக்கே செல்ல முற்ப்பட்டால் அவரை தள்ளி விட வேண்டும்.

ஏனெனில், அவன் ஷைத்தானின் துாண்டுதலால் தொழுகையின் குறுக்கே செல்ல முற்ப்படுகிறான் என்பதை பின் வரும் ஹதீஸ் உறுதிப் படுத்துகிறது.

حَدَّثَنَا ‏ ‏سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ هِلَالٍ يَعْنِي حُمَيْدًا ‏ ‏قَالَ ‏ ‏بَيْنَمَا أَنَا وَصَاحِبٌ لِي نَتَذَاكَرُ حَدِيثًا إِذْ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو صَالِحٍ السَّمَّانُ ‏

أَنَا أُحَدِّثُكَ مَا سَمِعْتُ مِنْ ‏ ‏أَبِي سَعِيدٍ ‏ ‏وَرَأَيْتُ مِنْهُ قَالَ بَيْنَمَا أَنَا مَعَ ‏ ‏أَبِي سَعِيدٍ ‏ ‏يُصَلِّي يَوْمَ الْجُمُعَةِ إِلَى شَيْءٍ يَسْتُرُهُ مِنْ النَّاسِ إِذْ جَاءَ رَجُلٌ شَابٌّ مِنْ بَنِي ‏ ‏أَبِي مُعَيْطٍ ‏ ‏أَرَادَ أَنْ ‏ ‏يَجْتَازَ ‏ ‏بَيْنَ يَدَيْهِ فَدَفَعَ فِي نَحْرِهِ فَنَظَرَ فَلَمْ يَجِدْ ‏ ‏مَسَاغًا ‏ ‏إِلَّا بَيْنَ يَدَيْ ‏ ‏أَبِي سَعِيدٍ ‏ ‏فَعَادَ فَدَفَعَ فِي نَحْرِهِ أَشَدَّ مِنْ الدَّفْعَةِ الْأُولَى ‏ ‏فَمَثَلَ ‏ ‏قَائِمًا فَنَالَ مِنْ ‏ ‏أَبِي سَعِيدٍ ‏ ‏ثُمَّ زَاحَمَ النَّاسَ فَخَرَجَ فَدَخَلَ عَلَى ‏ ‏مَرْوَانَ ‏ ‏فَشَكَا إِلَيْهِ مَا لَقِيَ قَالَ وَدَخَلَ ‏ ‏أَبُو سَعِيدٍ ‏ ‏عَلَى ‏ ‏مَرْوَانَ ‏ ‏فَقَالَ لَهُ ‏ ‏مَرْوَانُ ‏ ‏مَا لَكَ وَلِابْنِ أَخِيكَ جَاءَ ‏ ‏يَشْكُوكَ فَقَالَ ‏ ‏أَبُو سَعِيدٍ ‏ ‏سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏إِذَا صَلَّى أَحَدُكُمْ إِلَى شَيْءٍ يَسْتُرُهُ مِنْ النَّاسِ فَأَرَادَ أَحَدٌ أَنْ ‏ ‏يَجْتَازَ ‏ ‏بَيْنَ يَدَيْهِ فَلْيَدْفَعْ فِي نَحْرِهِ فَإِنْ أَبَى فَلْيُقَاتِلْهُ فَإِنَّمَا هُوَ شَيْطَانٌ

ஹுமைத் பின் ஹிலால் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:- “நானும் என் தோழர் ஒருவரும் ஒரு ஹதீஸ் குறித்துப் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது (அங்கு வந்த) சாலிஹ் அஸ்ஸம்மான் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

நான் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்து செவியேற்ற ஒரு ஹதீஸையும் அவர்களிடம் நான் கண்ட ஒரு நிகழ்ச்சியையும் உமக்குக் கூறுகிறேன்:

நான் ஒரு வெள்ளிக்கிழமை (ஜுமுஆ) தினத்தன்று அபூசயீத் (ரலி) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தேன். அப்போது அவர்கள் மக்களில் யாரும் தமக்கு குறுக்கே சென்று விடாமலிருக்கத் தடுப்பொன்றை வைத்து அதை நோக்கித் தொழுதுகொண்டிருந்தார்கள்.

அப்போது பனூ அபீமுஐத் குலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அபூசயீத் (ரலி) அவர்களுக்கு முன்னால் குறுக்கே கடந்துசெல்ல முற்பட்டார். உடனே அபூசயீத் (ரலி) அவர்கள் தமது கையால் அவரது நெஞ்சில் (கை வைத்துத்) தள்ளினார்கள். அந்த இளைஞர் பார்த்தார். அபூசயீத் (ரலி) அவர்களுக்கு முன்னால் கடந்துசெல்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதைக் கண்ட அவர், மீண்டும் அவர்களைக் கடந்து செல்லப்பார்த்தார். அபூசயீத் (ரலி) அவர்கள் முன்னைவிடக் கடுமையாக அவரது நெஞ்சில் (கை வைத்துத்) தள்ளினார்கள். அந்த இளைஞர் அப்படியே நின்றுகொண்டு அபூசயீத் (ரலி) அவர்களைச் சாடினார்.

பிறகு மக்களை விலக்கிக்கொண்டு (மதீனாவின் ஆளுநராயிருந்த) மர்வான் பின் ஹகமிடம் சென்று நடந்ததை அந்த இளைஞர் முறையிட்டார். அபூசயீத் (ரலி) அவர்களும் மர்வானிடம் சென்றார்கள். அப்போது மர்வான், அபூசயீத் (ரலி) அவர்களிடம், உங்களுக்கும் உங்கள் சகோதரர் புதல்வருக்கும் (இடையே) என்ன நேர்ந்தது? அவர் உங்களைப் பற்றி முறையிடுகிறாரே! என்று கேட்டார். அதற்கு அபூசயீத் (ரலி) அவர்கள், மக்களில் எவரும் குறுக்கே செல்லாமலிருக்கத் தமக்கு முன்னே ஒரு தடுப்பை வைத்துக்கொண்டு உங்களில் ஒருவர் தொழும்போது, அவருக்கு முன்னால் குறுக்கே செல்ல யாரும் முற்பட்டால் அவரது நெஞ்சில் (கை வைத்துத்) தள்ளட்டும். அவர் (விலகிச் செல்ல) மறுக்கும்போது அவருடன் சண்டையிட(நேர்ந்தால் சண்டையிட்டுத் தடுக்க)ட்டும்! ஏனெனில், அவன்தான் ஷைத்தான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன் (எனவே தான், அந்த இளைஞரை அவ்வாறு நான் தடுத்தேன்) என்று கூறினார்கள். ( முஸ்லிம் 876 )

தொழுகைக்கு குறுக்கே செல்வது பாவம்...

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي النَّضْرِ مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، أَنَّ زَيْدَ بْنَ خَالِدٍ، أَرْسَلَهُ إِلَى أَبِي جُهَيْمٍ يَسْأَلُهُ: مَاذَا سَمِعَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي المَارِّ بَيْنَ يَدَيِ المُصَلِّي؟ فَقَالَ أَبُو جُهَيْمٍ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ يَعْلَمُ المَارُّ بَيْنَ يَدَيِ المُصَلِّي مَاذَا عَلَيْهِ، لَكَانَ أَنْ يَقِفَ أَرْبَعِينَ خَيْرًا لَهُ مِنْ أَنْ يَمُرَّ بَيْنَ يَدَيْهِ» قَالَ أَبُو النَّضْرِ: لاَ أَدْرِي، أَقَالَ أَرْبَعِينَ يَوْمًا، أَوْ شَهْرًا، أَوْ سَنَةً

தொழுபவரின் குறுக்கே செல்பவர் பற்றி நபி(ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றதை அறிந்து வருமாறு என்னை அபூஜுஹைம் (ரலி) அனுப்பி வைத்தார். தொழுபவருக்குக் குறுக்கே செல்பவர், அதனால் தமக்கு ஏற்படும் பாவத்தைப் பற்றி அறிந்திருந்தால் அவருக்குக் குறுக்கே செல்வதற்குப் பதில் நாற்பது நாட்கள் நின்று கொண்டிருப்பது அவருக்கு நல்லதாகத் தோன்றும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஜுஹைம் (ரலி) விடையளித்தார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபுன்னழ்ரு என்பவர் நாற்பது வருடங்கள் என்று கூறினார்களா? அல்லது நாற்பது மாதங்கள் அல்லது நாற்பது நாட்கள் என்று கூறினார்களா? என்பது சரியாக தமக்கு நினைவில்லை என்கிறார். புகாரி-510: புஸ்ரு பின் ஸயீத் (ரலி)

தொழுகையாளியும், தடுப்பின் சுத்ராவின் அளவும்...

أن السنة للمصلي أن يكون بين يديه سترة من جدار أو سارية أو نحوه... وأما المسافة التي تكون بين المصلي وسترته فقد اختلف العلماء في تحديدها على أقوال، فقيل: ثلاثة أذرع، وقيل: ستة أذرع، قال ابن قدامة في المغني ( قال مهنا: سألت أبا عبد الله عن الرجل يصلي كم ينبغي أن يكون بينه وبين القبلة؟ قال: يدنو من القبلة ما استطاع، ثم قال بعد: إن ابن عمر قال: صلى النبي صلى الله عليه وسلم في الكعبة فكان بينه وبين الحائط ثلاثة أذرع... قال عطاء أقل ما يكفيك ثلاثة أذرع، وبه قال الشافعي )

قال النووي في المجموع: (السنة للمصلي أن يكون بين يديه سترة من جدار أو سارية أو غيرهما ويدنو منها).

ஸுன்னத்தான நடைமுறை என்னவென்றால் தொழக்கூடியவர் தமக்கு முன்னால் ஏதேனும் ஒரு தடுப்பை வைத்து தொழுவது சிறந்ததாகும்.

அந்த தடுப்பு என்பது மூன்று முழ தூரம் வரை இருப்பது பேணுதலாகும்.

பெரும்பாலும் பள்ளிவாசலில் தொழும் போது சுவர், தூண் போன்ற ஏதேனும் மறைவுக்குப் பின் நின்று தொழ வேண்டும். அல்லது மிஹ்ராபுக்கு சற்று நெருக்கமாக நின்று தொழ வேண்டும். பள்ளிவாசலில் இடையில் சுவரோ அல்லது தூணோ இல்லாத அளவு விசாலமான பள்ளியாக இருக்கும் பட்சத்தில் மேற்பட்ட அளவு தூரம் ஏதேனும் ஒரு தடுப்பை ஏற்படுத்தி தொழ வேண்டும்.

இப்னு உமர் ரலி அவர்கள் "நபி ஸல் அவர்கள் கஅபாவிலே சுவர் மறைவுக்குப் பின் நின்று தொழுதார்கள். நபி (ஸல்) அவர்களுக்கும் சுவருக்கும் இடையே மூன்று முழ தூரம் இருந்தது" என கூறுகின்றார்கள். இதுவே, இமாம் ஷாஃபிஈ (ரஹ்) மற்றும் இமாம் முக்னீ (ரஹ்) ஆகியோரின் நிலைப்பாடாகும்.

தடுப்பு வைத்து தொழ வேண்டும் என்ற கட்டளை கட்டாயம் என்பதை குறிக்க வில்லை. மாறாக, தொழுகையில் கவனச் சிதறல் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு சொல்லப்பட்ட ஒன்று தான் என ஃபுகஹாக்கள் சிலர் கூறுகின்றனர்

கவனச் சிதறல் ஏற்படும் என்று எச்சரிக்கும் ஹதீஸ்..

அப்துல்லாஹ் பின் அஸ்ஸாமித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபூதர் அல்கிஃபாரீ (ரலி) அவர்கள், உங்களில் ஒருவர் (திறந்தவெளியில்) தொழ நிற்கும் போது தமக்கு முன்னால் வாகன (ஒட்டக)த்தின் (சேணத்திலுள்ள) சாய்வுக்கட்டை போன்றது இருந்தால் அதுவே அவருக்குத் தடுப்பாக அமைந்துவிடும். சாய்வுக்கட்டை போன்றது இல்லாவிட்டால் கழுதை, பெண் மற்றும் கறுப்புநாய் ஆகியன அவரது (கவனத்தை ஈர்த்து) தொழுகையை முறித்துவிடும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றார்கள். உடனே நான், அபூதர் (ரலி) அவர்களே! சிவப்பு நிற நாய், மஞ்சள் நிற நாய் ஆகியவற்றை விட்டுவிட்டுக் கறுப்பு நிற நாயை மட்டுமே குறிப்பிடக் காரணம் என்ன? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், என் சகோதரரின் புதல்வரே! நீங்கள் என்னிடம் கேட்டதைப் போன்றே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் கறுப்பு நாய் ஷைத்தான் ஆகும் என்று கூறினார்கள் என்றார்கள். ( முஸ்லிம் 882 )

(மூன்று கடந்து செல்வதால் தொழுகை முறியும் என்று கூறும் ஹதீஸ் விஷயத்தில்) இமாம்கள் மாலிக், அபு ஹனிஃபா, ஷாஃபீ ஆகியோரும் மற்றும் முற்கால, பிற்கால அறிஞர்களில் பலரும் இம்மூன்றில் ஒன்றோ அல்லது வேறு எதுவுமோ கடந்து செல்வதால் தொழுகை முறியாதுஎன்று கூறுகிறார்கள். மேலும் தொழுகை முறியும் என்பதின் கருத்து, “இவை கடந்து செல்லும்போது இவற்றில் கவனம் செல்வதால் தொழுகையில் குறைவு ஏற்படும். ஆனால், தொழுகையே செல்லாமல் போய்விடும் என்பது இதன் கருத்து அல்லஎன்றும் இவர்கள் விளக்கமளிக்கிறார்கள். மேலும், இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்) அவர்கள் கறுப்பு நாய குறுக்கே நுழைந்து விட்டால் தொழுகை முறிந்து விடும் என்கின்றார்கள். மேலும், வீட்டில் தொழும் போது உங்கள் மனைவி மக்கள் நடந்து சென்றால் தொழுகை முறியாது என்றும் கூறுகின்றார்கள். (ஷரஹுன்னவவி அலா ஸஹீஹ் முஸ்லிம்)

எனினும், நபி (ஸல்) அவர்களின்  பயணம் மற்றும் ஊரில் இருக்கும் போது பல்வேறு சந்தர்ப்பங்களில் தடுப்பு வைத்தே தொழுததை அதிக நபிமொழிகள் நமக்கு காணக் கிடைக்கின்றன. எனவே, தடுப்பு வைத்து தொழுவது சிறந்ததாகும்.

قال في الهداية: (ولا بأس بترك السترة إن أمن المرور).

யாரும் கடந்து செல்ல மாட்டார்கள் என்ற நம்பிக்கை இருக்குமானால் அவர்கள் தடுப்பு வைத்து தொழ தேவை இல்லை.

للفقهاء رأيان في اتخاذها مطلقاً أو في حالة خشية مرور أحد: فقال المالكية والحنفية : السترة في الفرض أو النفل مندوبة للإمام والمنفرد إن خشيا مرور أحد بين يديهما في محل سجودهما فقط، وأما المأموم فسترة الإمام سترة له، لأنه عليه السلام صلى ببطحاء مكة إلى عَنَزة(1)، ولم يكن للقوم سترة. ولا بأس بترك السترة إذا أمن المصلي المرور، ولم يواجه الطريق. فالمستحب لمن صلى بالصحراء أن ينصب بين يديه عوداً أو يضع شيئاً، ويعتبر الغرز دون الإلقاء والخط، لأن المقصود وهو الحيلولة بينه وبين المار لا يحصل به.

இமாம் மாலிக் (ரஹ்) இமாம் அபூஹனீஃபா (ரஹ்) ஆகியோரிடம் மஸ்ஜிதில் அல்லது தனித்து தொழும் போது "யாரும் கடந்து சென்று விடுவார்கள் என்ற பயம் இருக்கும் போது தடுப்பு ஏற்படுத்திக் கொள்வது சுன்னத்தாகும்.
ஆனால், வெட்ட வெளியில் தொழும் போது அவசியம் ஏதாவது தடுப்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

      وقال الشافعية والحنابلة: يستحب للمصلي أن يصلي إلى سترة، سواء أكان في مسجد أم بيت، فيصلي إلى حائط أو سارية (عمود)، أم في فضاء، فيصلي إلى شيء شاخص بين يديه كعصا مغروزة أو حربة، أو عرض البعير أو رحله عند الحنابلة، فإن لم يجد خطَّ خطاً قبالته، أو بسط مصلَّى كسجادة كما ذكر الشافعية.

இதற்கு மாற்றுக் கருத்தை அதாவது பள்ளி வாசல் வீடு, கடை, என எங்கு தொழுதாலும் தடுப்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இமாம் ஷாஃபிஈ (ரஹ்) இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்) ஆகியோர் கொண்டிருக்கின்றார்கள்.

தொழும் போது வைக்கப்படும் சுத்ராவின் நெருக்கம் எந்த அளவு துாரம் இருக்க வேண்டும் என்பதை பின் வுரும் ஹதீஸிகளில் காணலாம்.

சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழ நிற்கும் இடத்திற்கும் (பள்ளிவாசலின் கிப்லாத் திசையில் அமைந்த) சுவருக்கும் இடையே ஓர் ஆடு கடந்து செல்லும் அளவுக்கு இடைவெளி இருந்தது. ( முஸ்லிம் )

யஸீத் பின் அபீஉபைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

சலமா பின் அக்வஃ (ரலி) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலில்) குர்ஆன் வைக்கப்படும் இடத்திற்கு அருகில் (உள்ள தூண் அருகே) கூடுதலான (நஃபில்) தொழுகையைத் தொழுவார்கள். மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து (இந்தத் தூணை முன்னோக்கி நின்று) தொழுவார்கள். சொற்பொழிவு மேடைக்கும் (மிம்பர்) கிப்லாவுக்கும் இடையே ஓர் ஆடு கடந்துசெல்லும் அளவுக்கு இடைவெளி இருந்தது என்றும் குறிப்பிட்டார்கள்.

( முஸ்லிம் 880 )

சலமா பின் அக்வஃ (ரலி) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலில்) குர்ஆன் வைக்கப்படும் இடத்திற்குப் பக்கத்திலிருந்த தூணருகில் தொழுவதைத் தேர்ந்தெடுத்துக்கொள்வார்கள். அவர்களிடம் நான், அபூ முஸ்லிம்! தாங்கள் இந்தத் தூணுக்கு அருகில் தொழுவதையே தேர்ந்தெடுத்துக் கொள்வதை நான் காண்கிறேனே (என்ன காரணம்)? என்று கேட்டேன். அதற்கு சலமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் இந்தத் தூணுக்கு அருகில் தொழுவதைத் தேர்ந்தெடுத்துக்கொள்வதை நான் பார்த்திருக்கிறேன் (ஆகவேதான், நானும் இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தேன்) என்று பதிலளித்தார்கள்.

(முஸ்லிம் 881)

எனவே நமது தொழுகைக்கும் தடுப்பு- சுத்ரா வைக்கப்படும் இடமும் மிக நெருக்கமானதாக இருக்க வேண்டும் என்பதை தான் இந்த ஹதீஸ்களில் காணலாம்.அதாவது ஸஜ்தாவிற்கு நெற்றி வைக்கும் இடத்தில் தடுப்பு - சுத்ரா வைக்க வேண்டும்.என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்,

மேலும், நாம் தொழுது கொண்டிருக்கும் போது நம்மை யாராவது கடந்து செல்வதால் நமது தொழுகை முறிந்து விடாது. மாறாக, நடந்து செல்பவருக்கே பாவம் ஏற்படும்.

மேலும், தொழுது கொண்டிருப்பவரின் குறுக்கே நடந்து செல்வது மக்ரூஹ் தன்ஜீஹ் – ஹராமுக்கு நெருக்கமான பாவமாகும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

தொழுபவரின் குறுக்கே செல்வதில் இருந்து தவிர்ந்து கொள்வோமாக!

தொழுகையை முறையாக தொழுவோம்!!

ويروى عن يوسف بن عاصم أنه ذكر له عن حاتم الأصم أنه كلن يتكلم على الناس في الزهد، والإخلاص، فقال يوسف لأصحابه: اذهبوا بنا إليه نسأله عن صلاته إن كان يكملها، وإن لم يكن يكملها، نهيناه عن ذلك.

قال: فأتوه وقال له يوسف: يا حاتم كيف تخشي فى صلاتك؟ فأجاب حاتم الأصم أنه عندما يقوم فيكبر للصلاة، يتخيل الكعبة من أمامة والصراط تحت قدمية، والجنة عن يمينة والنار عن شمالة وملك الموت من ورائة، وأن رسول الله صلي الله علية وسلم يتأمل صلاتي وأظنها ستكون آخر صلاة لي، فأكبر الله عز وجل بتعظيم وأقرأ بتدبر وخشوع وتأني وأسجد بخضوع لله عز وجل وأجعل صلاتي خوفاً من الله ورجاءاً فى رحمتة، ثم أسلم ولا أدري أيقبلها الله مني أم يقول: اضربوا بها وجه من صلاها" !

யூஸுஃப் இப்னு ஆஸிம் (ரஹ்) அவர்களிடம் அவர்களின் மாணவர்கள் வந்து, ஹாத்தமுல் அஸம்மு அவர்கள் மக்களிடையே இக்லாஸ் - மனத்தூய்மை குறித்தும், ஜுஹ்த் - துறவறம் குறித்தும் அதிகம் பேசுகிறார்கள் என்று முறையிட்டனர்.

அது கேட்ட யூஸுஃப் இப்னு ஆஸிம் (ரஹ்) அவர்கள் "என்னை அவரிடம் அழைத்துச் செல்லுங்கள்!  அவரின் தொழுகையின் நிலை குறித்து நாம் அவரிடம் கேட்போம். அவர் தொழுகையை பூரணமாக நிறைவேற்றுபவராக இருந்தால் அவரை மக்களுக்கு அறிவுரை கூற விட்டு விடுவோம். அவர் தொழுகையை பூரணமாக நிறைவேற்றாத பட்சத்தில் மக்களிடையே அவர் அறிவுரை கூறுவதை விட்டும் அவரை நாம் தடுத்து விடுவோம்" என்று கூறினார்கள்.

ஹாத்தமுல் அஸம்மு (ரஹ்) அவர்களிடம் வந்து, "ஹாத்தமே! நீங்கள் தொழும் போது எப்படி இறையச்சத்தோடு தொழுகின்றீர்கள்?" என்று யூஸுஃப் இப்னு ஆஸிம் (ரஹ்) அவர்கள் கேட்டார்கள்.

அதற்கு, ஹாத்தமுல் அஸம்மு (ரஹ்) அவர்கள் "தக்பீர் கட்டுவதற்கு எழுந்து தயாராகும் போது நான் கஅபாவுக்கு முன்னால் நிற்பது போன்றும், ஸிராத்தை கடக்க என் பாதங்கள் தயாராக இருப்பது போன்றும், சுவனம் எனக்கு வலப்புறமாக இருப்பது போன்றும், நரகம் எனக்கு இடப்புறமாக இருப்பது போன்றும், மலக்குல் மவ்த் என் உயிரைக் கைப்பற்ற எனக்குப் பின்னால் ஆயத்தமாக இருப்பது போன்றும், என்னுடைய தொழுகையை குறித்து என்னுடைய ஹபீப் (ஸல்) அவர்கள் என்ன நினைப்பார்கள் என்றும், இதுவே நான் தொழப் போகிற கடைசி தொழுகை என்றும்  நினைத்துக் கொண்டு அல்லாஹ்வை உயர்வாக எண்ணிக் கொண்டே தக்பீர் கட்டுவேன். சிந்தனையோடும், பயபக்தியோடும் நான் இறை மறை வசனங்களை ஓதுவேன். மிகவும் பணிவோடு ஸஜ்தா செய்வேன். அல்லாஹ்வின் தண்டனையைப் பயந்தும், அல்லாஹ்வின் கருணையை ஆதரவு வைத்த நிலையிலும் தொழுகையில் ஈடுபடுவேன். பின்னர் அழகிய முறையில் தொழுகையை நிறைவு செய்வேன். 

என்றாலும், என் தொழுகையை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஏற்றுக் கொள்வானோ? இல்லை, தொழுதவரின் முகத்தில் இந்த தொழுகையை வீசி விடுங்கள் என்று சொல்லி விடுவானோ? என்பதை நான் அறியேன்!" என்று கேள்வி கேட்டவரிடம் தெரிவித்தார்கள். ( நூல்: பஹ்ருத் துமூ(ஃ)உ லிஇமாமி இப்னுல் ஜவ்ஸீ (ரஹ்)... )

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمِ بْنِ مَيْمُونٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، عَنْ رَبِيعَةَ يَعْنِي ابْنَ يَزِيدَ، عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلَانِيِّ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ. ح، وَحَدَّثَنِي أَبُو عُثْمَانَ، عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، قَالَ: كَانَتْ عَلَيْنَا رِعَايَةُ الْإِبِلِ فَجَاءَتْ نَوْبَتِي فَرَوَّحْتُهَا بِعَشِيٍّ فَأَدْرَكْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَائِمًا يُحَدِّثُ النَّاسَ فَأَدْرَكْتُ مِنْ قَوْلِهِ: «مَا مِنْ مُسْلِمٍ يَتَوَضَّأُ فَيُحْسِنُ وُضُوءَهُ، ثُمَّ يَقُومُ فَيُصَلِّي رَكْعَتَيْنِ، مُقْبِلٌ عَلَيْهِمَا بِقَلْبِهِ وَوَجْهِهِ، إِلَّا وَجَبَتْ لَهُ الْجَنَّةُ» قَالَ فَقُلْتُ: مَا أَجْوَدَ هَذِهِ فَإِذَا قَائِلٌ بَيْنَ يَدَيَّ يَقُولُ: الَّتِي قَبْلَهَا أَجْوَدُ فَنَظَرْتُ فَإِذَا عُمَرُ قَالَ: إِنِّي قَدْ رَأَيْتُكَ جِئْتَ آنِفًا، قَالَ: " مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ يَتَوَضَّأُ فَيُبْلِغُ - أَوْ فَيُسْبِغُ - الْوَضُوءَ ثُمَّ يَقُولُ: أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُ اللهِ وَرَسُولُهُ إِلَّا فُتِحَتْ لَهُ أَبْوَابُ الْجَنَّةِ الثَّمَانِيَةُ يَدْخُلُ مِنْ أَيِّهَا شَاءَ ". (صحيح مسلم -234)

உக்பா இப்னு ஆமீர்  ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்க கூடிய ஹதீஸை இமாம் முஸ்லிம் பதிவு செய்கிறார்கள். 

 

நபியவர்கள் போருக்கு செல்லும் பொழுது தோழர்களை பல குழுக்களாக பிரித்து வைத்திருப்பார்கள். ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு பொறுப்பு கொடுத்திருப்பார்கள்.

உக்பா இப்னு ஆமிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு ஒட்டகங்களை பாதுகாப்பது, மேய்ப்பது இந்த பொறுப்பு. 

உக்பா (ரலி) அவர்கள் சொன்னார்கள், நான் ஒட்டகங்களை மேய்த்து விட்டு நபி {ஸல்} அவர்களை மாலையில் சந்திக்க வரும்பொழுது நபியவர்கள் நின்றவர்களாக மக்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருக்கிறார்கள். நான் இறுதியாக வந்து சேர்ந்த பொழுது நபி அவர்கள் என்ன சொன்னார்கள் என்பதை நான் நன்கு நினைவு படுத்திக் கொண்டேன்.  அல்லாஹ்வுடைய தூதர் {ஸல்} அவர்கள் சொன்னார்கள்:- 

«مَا مِنْ مُسْلِمٍ يَتَوَضَّأُ فَيُحْسِنُ وُضُوءَهُ، ثُمَّ يَقُومُ فَيُصَلِّي رَكْعَتَيْنِ، مُقْبِلٌ عَلَيْهِمَا بِقَلْبِهِ وَوَجْهِهِ، إِلَّا وَجَبَتْ لَهُ الْجَنَّةُ»

ஒரு முஸ்லிம் உளு செய்கிறான். அந்த உளுவை மிக அழகாக செய்கிறான். பிறகு இரண்டு ரக்அத் தொழுகிறான். (அது  ஃபர்ளான தொழுகையோ அல்லது சுன்னத்தான தொழுகையோ) அந்தத் தொழுகையில்  எப்படி இருக்கின்றான் என்றால் அவனுடைய உள்ளத்தாலும் முகத்தாலும் அந்த இரண்டு ரக்அத் தொழுகையை முன்நோக்கி இருக்கின்றான். இப்படி ஒரு மனிதன் தொழுது விட்டால் கண்டிப்பாக அவனுக்கு சொர்க்கம் கட்டாயமாகி விடும். (1) அறிவிப்பாளர் : உக்பா இப்னு ஆமீர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 234. )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சுவனத்திற்கு அழைத்துச் செல்கிற தொழுகையாக நம் தொழுகையை ஆக்கியருள்வானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

2 comments:

  1. மாஷா அல்லாஹ் மிக அருமை

    ReplyDelete
  2. அவசியம் அனைவரும் அறிய செய்ய வேண்டிய பதிவு. நன்றி

    ReplyDelete