Thursday, 24 August 2023

விண்வெளிப் பயணம் சாத்தியமாகும் என்று கூறிய அல்குர்ஆன்!!!

 

விண்வெளிப் பயணம் சாத்தியமாகும் என்று கூறிய அல்குர்ஆன்!!!


இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலாவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. நிலாவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றிருக்கிறது.

இஸ்ரோவின் இந்த சாதனை முயற்சியைத் தான் உலகம் முழுவதிலும் உள்ள விஞ்ஞானிகள் மற்றும் பொதுமக்கள் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டுள்ளனர்.

சந்திரயான்-3 விண்ணில் ஏவப்பட்டதன் மூலம் நிலவின் மீதான மக்களின் ஆர்வம் அதிகரித்து வருவது கண்கூடாகத் தெரிகிறது.

கடந்த சில நாட்களாக இணையத்தில் நிலா தொடர்பான தேடல்கள் அதிகரித்துவருகின்றன.

சந்திரயான்-3 செயற்கைக்கோள் சென்றடைந்துள்ள  நிலவின் தென் துருவப் பகுதி மிகவும் வியப்பை ஏற்படுத்தும் பகுதியாகக் கருதப்படுகிறது.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் கூற்றின்படி, இந்த பகுதியில் பல ஆழமான குழிகளும் மலைகளும் உள்ளன என்றும், அவற்றைத் தாண்டி, சூரிய ஒளி பல பில்லியன் ஆண்டுகளாக அந்த நிலப்பரப்புகளை அடையவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

23/08/2023 அன்று மாலை 6:04 மணிக்கு இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலாவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.

"சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக நிலாவின் தென் துருவத்தில் தரையிறக்கிய இஸ்ரோவுக்கும் நிலாவில் விண்கலத்தை இறக்கிய 4-ஆவது நாடு என்ற பெருமையைப் பெற்ற இந்தியாவுக்கும் வாழ்த்துகள். இந்தத் திட்டத்தில் உங்களுடன் கூட்டணி சேர்வதை எண்ணி மகிழ்கிறோம்" என்று அமெரிக்காவின் நாசா விண்வெளி அமைப்பு கூறியுள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) நிலவை ஆய்வு செய்வதற்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய சந்திரயான்-3 விண்கலத்தை சுமார் ரூ.250 கோடியில் வடிவமைத்தது. இது 3,895 கிலோ எடை கொண்டது. ஏற்கனவே சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர், நிலவை சுற்றிவருவதால் இம்முறை விண்கலத்தில் லேண்டர், ரோவர் பாகங்கள் மட்டும் இடம்பெற்றன.

சந்திரயான்-3 விண்கலம் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. தரையில் இருந்து புறப்பட்ட 16 நிமிடங்களில் திட்டமிட்ட புவி நீள்வட்ட சுற்றுப்பாதையில் விண்கலத்தை எல்விஎம்-3 வெற்றிகரமாக நிலைநிறுத்தியது.

ஆக.1-ம் தேதி சந்திரயான்-3 புவியீர்ப்பு விசையில் இருந்து விலக்கப்பட்டு, நிலவை நோக்கி செல்லும்படி அதன் பயணப் பாதை மாற்றப்பட்டது. 5 நாள் பயணத்துக்கு பிறகு ஆக.5-ம் தேதி நிலவின் ஈர்ப்பு விசைப்பகுதிக்குள் சந்திரயான் நுழைந்தது. அதன்பின் நிலவின் சுற்றுப்பாதையில் வலம்வந்த விண்கலத்தின் உயரம் படிப்படியாக குறைக்கப்பட்டு நிலவுக்கு அருகே விண்கலம் கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து சந்திரயானின் உந்துவிசை கலனில் இருந்து லேண்டர் ஆக.17-ம் தேதி பிரிக்கப்பட்டது.

பூமிக்கும், நிலவுக்கும் இடையே உள்ள 3.84 லட்சம் கி.மீ. தூரத்தை சந்திரயான்-3 விண்கலம் 41 நாட்களில் சென்றடைந்துள்ளது. நிலவில் ஹீலியம் போன்ற வாயு மூலக்கூறுகள், நிலவு உருவான விதம், பனிக்கட்டிகளின் நிலை, தனிமங்கள் பற்றிய தகவல்களை ஆய்வு செய்வதே இத்திட்டத்தின் முக்கிய பணியாகும்.

லேண்டரில் இருந்து ரோவர் வாகனம் வெளியேறிய பிறகு, நிலவில் ஆராய்ச்சியை மேற்கொள்ளும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். லேண்டர், ரோவர் வழங்க உள்ள அரிய தகவல்கள் மூலம் நிலவு பற்றிய பல்வேறு தகவல்கள் தெரியவரும் என்று அறிவியல் ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

( நன்றி: தமிழ் திசை இந்து, 24/08/2023 )

ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பிய ஸ்பேஸ் ஏஜென்சி, சீனா ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக இந்தியாவின் விண்கலம் தான் நிலவை சுற்றி வருகிறது. இதன் மூலம் நிலவில் ஏற்படும் சில மாற்றங்களை அடுத்த இரண்டு வருடங்களுக்கு கண்காணிக்க முடியும் என்றும் அதற்குள் சந்திரயான் 4 திட்டம் செயல்படத் தொடங்கும் என்றும் எனவே அடுத்த 10 வருடங்களுக்குள் இந்தியாவின் நிலவை நோக்கிய கனவு மேலும் விரிவடைந்துவிடும் என்றும் கூறப்படுகிறது. ( நன்றி: புதிய தலைமுறை, 24/08/2023 )

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு கடந்து வந்த பாதை...

1960களில் மிகவும் எளிமையாக தொடங்கப்பட்ட இந்திய விண்வெளி ஆராய்ச்சி திட்டம் அடுத்த 60 ஆண்டுகளில் அடுத்தடுத்து வளர்ச்சி அடைந்து மிகவும் வலிமையான ஒன்றாக இன்று மாறியிருக்கிறது.

1962 ஆம் ஆண்டில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி என்பது விண்வெளி ஆராய்ச்சிகளை இந்திய தேசிய குழு அமைப்பை உருவாக்கியதில் தொடங்கியது. அதன் பின்னர் 1963 ஆம் ஆண்டில்  இந்தியாவின் விண்வெளி திட்டம் முறைப்படி தொடங்கியது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி திட்டத்தின் பிதாமகன் என்று போற்றப்படும் டாக்டர் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி திட்டத்திற்கான தேவையான கருவிகளை தயாரிக்க கூடிய இணைக்கக்கூடிய ஏவுகணை கூடிய மையங்கள் பல்வேறு இடத்திலே உருவாக்கினார்.

1962 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட விண்வெளி ஆராய்ச்சிக்கான இந்திய தேசிய குழுவை விட உயர்ந்த அமைப்பாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இந்தியன் ஸ்பேஸ் ரிசர்ச் ஆர்கனைசேஷன் 1969 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. அப்போது உருவாக்கப்பட்ட இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இப்போது மொத்தம் 18 ஆயிரம் பணியாளர்களுடன் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரோவின் கிளை அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு கிளை அமைப்புகள் ஒவ்வொரு வகையான அர்ப்பணிக்கப்பட்ட பணியை செய்து வருகிறது. இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி திட்டத்தின் நாட்டின் பொதுத்துறை தனியார் துறை நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க வகையில் பங்களிப்பு செய்து வருகின்றனர். இந்த நிறுவனங்கள் மட்டுமின்றி இந்தியாவின் கல்வி நிறுவனங்களும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி முயற்சிக்கு குறிப்பிடத்தக்களவு பங்களிப்பு செய்கின்றனர். 

1972 ஆம் ஆண்டில் இந்திய விண்வெளி ஆணையமும் விண்வெளி துறையும் உருவாக்கப்பட்டதை தொடர்ந்து இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மத்திய அரசின் விண்வெளித் துறையின் கீழ் கொண்டுவரப்பட்டது. அதன் பின்னர் பணிகளுக்காக முறைப்படி பயன்படுத்தும் நடவடிக்கைகளும் தொடங்கினர் இன்சாட் வகை செயற்கைக்கோள்கள் தொலை உணர்வு ஆகியவற்றில் உள்ள வசதிகள் இன்சாட் ஒருங்கிணைப்பு குழு தேசிய இயற்கை வள வேளாண்மை அமைப்பு ஆகியவற்றின் ஒருங்கிணைப்புடன் மிகவும் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளப்பட்டன.

அல்குர்ஆன் அழைக்கிறது!

كِتَابٌ أَنْزَلْنَاهُ إِلَيْكَ مُبَارَكٌ لِيَدَّبَّرُوا آيَاتِهِ وَلِيَتَذَكَّرَ أُولُو الْأَلْبَابِ

(நபியே!) பாக்கியம் பெற்ற இவ்வேதத்தை உம்மீது அருளினோம். அவர்கள் இதன் வசனங்களைக் கவனித்து ஆய்வதற்காகவும், அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும்.( அல்குர்ஆன்: 38: 29 )

குர்ஆன், இறக்கப்பட்ட அன்றிலிருந்து இறுதி முடிவு நாள்வரை, வழி வழியாக வரும் எல்லாக் கால மக்களுக்கும் நேர் வழி காட்டியாக உள்ளது. இனி வரப்போகும் மக்களுக்கும் இதில் அறிவார்ந்த செய்திகள் உள்ளன.

நடந்து முடிந்த, நடந்து கொண்டிருக்கும்,  இனி நடக்க இருக்கின்ற அனைத்தும் இந்த இறைமறையில் இடம் பெற்றுள்ளது குர்ஆனின் அற்புதங்களில் ஒன்றாகும்.

21 ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு அறிவியல் உண்மையை 1400 ஆண்டுகளுக்கும் முன்பாக அல்குர்ஆனின் வசனம் ஒன்று அழகு பட விவரித்திருப்பது விந்தையிலும் விந்தையாகும்.

உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானியாகிய ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 100 ஆண்டுகளுக்கு முன், 1915ம் ஆண்டு ஈர்ப்பு விசை (Gravitational force) குறித்த தனது பொது சார்பியல் தத்துவத்தை (General Theory of Relativity) வெளியிட்டார். அண்டத்தின் கண்களுக்குப் புலப்படாத, இன்னொரு இருண்ட பக்கம் குறித்த தத்துவம் அது. விண்வெளியில் சூரியன் போன்றுள்ள நட்சத்திரங்கள், தங்கள் வாழ்வின் இறுதியில் கருந்துளைகளாக மாறும், இதையடுத்து உருவாகும் மாபெரும் வெடிப்பின்போது (Big bang) வலுவான ஈர்ப்பு விசை அலைகள் உருவாகும் என்றார்.

இந்த அலைகள், தான் உருவான இடத்தை ஒட்டிய விண்வெளியையும் காலத்தையும் (Space and Time) சேர்த்து மடக்கி, அதன் உருவத்தையே சிதைக்கும் என்றார் அவர். இந்த சிதைவு அந்த இடத்துடன் நிற்காது, அது விண்வெளியின் பிற பகுதிகளுக்கும் அலைகளாக பரவும் என்றார். ஆனால், ஐன்ஸ்டீனின் இந்த கருத்தை உறுதி செய்ய முடியாமல் தவித்து வந்தது இயற்பியல் உலகம்.

மாபெரும் நட்சத்திரங்கள் தங்கள் எரியும் ஆற்றலை இழந்து இறுதியில் கருந்துளைகளாக மாறும் மாபெரும் நிகழ்ச்சியை அல்லாஹ் குர் ஆனில் கூறுகிறான்.

فَلَا أُقْسِمُ بِمَوَاقِعِ النُّجُومِ (75) وَإِنَّهُ لَقَسَمٌ لَوْ تَعْلَمُونَ عَظِيمٌ (76)

நட்சத்திரங்கள் மறையும் இடங்களின் (Black Hole) மீது நாம் சத்தியம் செய்கின்றோம். (உங்களுக்கு) அறிவிருந்தால் நிச்சயமாக இது ஒரு மகத்தான சத்தியம் என்பதை தெரிந்து கொள்வீர்கள். ( அல்குர்ஆன்: 56: 75,76 )

இவ்வாறான இரு (Binary Stars)நட்சத்திர கருந்துளைகள் ஒன்றுடன் ஒன்று மோதும்போது (Big Bang) பெருவெடிப்பு எனும் அண்டவெளியில் அதிர்வுகள் ஏற்பட்டு,அவை ஈர்ப்பு அலைகளாக விண்வெளியில் பரவும்.இந்த ஈர்ப்பு அலைகள் சுருங்கி விரிவதன் மூலம் ஆற்றல் உந்தப்பட்டு உலகம் உருவானதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.ஈர்ப்பு அலைகளின் விரிவாக்கம்தான் வெளியையும் காலத்தையும் (Space & Time) உருவாக்குகின்றன. ஓசைமயமான இந்த ஈர்ப்பாற்றல் அலைகள் பிரபஞ்சத்தின் ஒலித்தடங்கள்என்று அழைக்கப்படுகின்றன.

கடந்த பிப்ரவரி 11,2016 அன்று, இயற்பியல் விஞ்ஞானிகள் ஈர்ப்பு அலைகளின் இருப்பை (existence of gravitational waves) உலகத்துக்கு அறிவித்தனர். இந்த கண்டுபிடிப்பை அறிவியல் உலகம் போற்றிக் கொண்டாடி வருகிறது. காரணம் 1916 ஆம் ஆண்டு ஆரம்பித்த இந்த தேடல், நூறு ஆண்டுகள் கழித்து 2016 ஆம் ஆண்டுதான் முடிவுக்கு வந்துள்ளது. அதனால்தான் ஈர்ப்பு அலைகள் இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்றாக அறிவியல் அறிஞர்களால் புகழப்படுகிறது. இந்த ஈர்ப்பு அலைகளின் விளைவை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்றால் பொதுச்சார்பியல் கோட்பாடு அடிப்படையாக என்ன சொல்கிறது என்று நாம் தெரிந்து கொள்வது அவசியம்.

பொதுச்சார்பியல் கோட்பாட்டின் அடிப்படைக் கருத்து எந்த ஒரு பொருளும் (mass) தன்னை சுற்றியுள்ள காலவெளியை (space-time) வளைக்கிறது. அதிக நிறையுள்ள பொருள் (massive object) தன்னைச் சுற்றியுள்ள காலவெளியை (space-time) மிக அதிகமாக வளைக்கிறதுஎன்பதே நியூட்டன் ஈர்ப்பு விசைக் கோட்பாடு எந்த இரு பொருளுக்கும் இடையில் ஈர்ப்பு விசை உள்ளது. அதனால்தான் மேலே எறியப்பட்ட கல் பூமியை நோக்கி திரும்ப வருகிறது. அதைப்போல நிலா பூமியை சுற்றி வருவதற்கும் இந்த பூமியின் ஈர்ப்பு விசைதான் காரணம்என்று கூறுகிறது..

ஆனால் ஐன்ஸ்டீன் பொதுச்சார்பியல் கோட்பாடோ நிலா பூமியை சுற்றி வரக் காரணம் பூமியை சுற்றி உள்ள வெளி (space) வளைந்துள்ளதால்தான் (space is curved). அதே மாதிரி மேலே எறியப்பட்ட பொருள் பூமியை நோக்கி வரக்காரணம் பூமியின் மிக அருகில் வெளி மிக அதிகமாக வளைந்துள்ளதால்தான். நிலா மிக தொலைவில் இருப்பதால் வளைவின் வலிமை இதை விட சற்று குறைவானதாக இருக்கிறது. அதனால்தான் அது நேரடியாக பூமியில் வந்து விழவில்லைஎன்று விளக்குகிறது. இதன் மூலம் ஐன்ஸ்டீன் ஈர்ப்புவிசை என்பதே காலவெளியின் வளைவுதான் (gravity is nothing but space-time curvature)” என்று சொன்னார்.

இப்போது நாம் கண்டுபிடித்த ஈர்ப்பு அலைகளை வெளியிட்ட ஈர்மை கருந்துளைகளில் ஒரு கருந்துளை 29 மடங்கு சூரியனின் நிறையும் (29 times of sun’s mass), இன்னொரு கருந்துளை 36 மடங்கு சூரியனின் நிறையும் கொண்டது. இரண்டும் ஒன்று சேர்ந்து ஒரே கருந்துளையாக மாறியபின் அதன் நிறை 62 மடங்கு சூரியனின் நிறைதான். மீதமுள்ள மூன்று மடங்கு சூரியனின் நிறை முழுவதும் ஈர்ப்பு அலைகளாக மாறி பிரபஞ்சத்தில் பரவியது. ஈர்ப்பு அலைகள் ஒளியின் வேகத்தில் பயணம் செய்கின்றன (நொடிக்கு மூன்று லட்சம் கிலோ மீட்டர்). அப்படி இருந்தும் இந்த ஈர்ப்பு அலைகள் பூமியை வந்தடைய எடுத்துக்கொண்ட காலம் கிட்டத்தட்ட 130 கோடி ஒளியாண்டு வருடங்கள்.

மின்காந்த அலைகளின் கண்டுபிடிப்பு நமக்கு பிரபஞ்ச ரகசியங்களை அறிய உதவியது போல இந்த ஈர்ப்பு அலைகளின் கண்டுபிடிப்பு இது வரை அறிய முடியாத பிரபஞ்சத்தின் பல மர்மங்களை விளக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். அதுமட்டுமில்லாமல் ஈர்ப்பு அலைகளின் கண்டுபிடிப்பால் இந்த பிரபஞ்சம் பெரு வெடிப்பின் போது, இந்த அலைகள் சுருங்கி விரிவடைவதால் ஆற்றல் உந்தப்பட்டு உலகம் உருவானதாக கருதப்படுகிறது. விஞ்ஞானிகள் மேற்கொண்ட இந்த ஆய்வின் மூலம், கருத்துளைகளின் மோதலில் எழுந்த நம் காதுக்குக் கேட்காத ஈர்ப்பாற்றல் அலை ஓசையை நவீன கருவிகள் மூலம் பதிவு செய்துள்ளனர்.

கருந்துளைகள் உருவாக்கிய ஈர்ப்பலைகளின் இரைச்சல் ஒலி, விண்வெளி பெருவெளியில் தொடர்ந்து வருகிறது.

ஆனால், 1400ஆண்டுகளுக்கு முன்பே, நபி (ஸல்) அவர்கள் வானத்தின் ஈர்ப்பு அலை இரைச்சலை கேட்டுள்ளார்கள்.

حَدَّثَنَا ‏ ‏أَحْمَدُ بْنُ مَنِيعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْرَائِيلُ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ بْنِ الْمُهَاجِرِ ‏ ‏عَنْ ‏ ‏مُجَاهِدٍ ‏ ‏عَنْ ‏ ‏مُوَرِّقٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي ذَرٍّ ‏ ‏قَالَ ‏ ‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ‏ ‏إِنِّي ‏ ‏أَرَى مَا لَا تَرَوْنَ وَأَسْمَعُ مَا لَا تَسْمَعُونَ ‏ ‏أَطَّتْ ‏ ‏السَّمَاءُ وَحُقَّ لَهَا أَنْ ‏ ‏تَئِطَّ ‏ ‏مَا فِيهَا مَوْضِعُ أَرْبَعِ أَصَابِعَ إِلَّا وَمَلَكٌ وَاضِعٌ جَبْهَتَهُ سَاجِدًا لِلَّهِ

நிச்சயமாக! நீங்கள் பார்க்காத ஒன்றை நான் பார்க்கிறேன். நீங்கள் கேட்காத ஒன்றை நான் கேட்கிறேன்.வானம் இரைகிறது. அதற்கான தகுதியுடன் அது இரைகிறது. வான்வெளி எங்கும் மலக்குமார்கள் நிறைந்துள்ளார்கள். எந்தளவு என்றால் நான்கு விரற்கடை அளவு இடைவெளியிலும் ஒரு மலக்கு குனிந்து வணங்கியோ,அல்லாஹ்வுக்கு ஸஜ்தா செய்யாமல் இல்லை.என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதர் (ரலி). ஆதாரம்: அஹ்மது 5.173,திர்மிதீ 2312, இப்னு மாஜா.4190,அல் ஹாக்கிம்.2:510.)

The heaven Atat ( creaking) and it has every right to creak.

And the Atit is the Sarir Ar-Rahl ( camel s creaking) Meaning, if there was a heavy load on top of the camel , you would hear to it a creaking sound due to heavy weight of the load.

இரண்டு பெரும் நட்சத்திரங்கள் ஒளி இழந்து பெரும் வேகத்தில் அதிக நிறையுடன் மோதும் போது ஈர்ப்பாற்றல் ஒலியானது எப்படி இருக்கும் என்பதற்கு உதாரணமாய், ஒரு ஒட்டகத்தின் மீது பளு மிகுந்த சுமையை ஏற்றும்போது, அதை சுமக்க முடியாமல் அந்த ஒட்டகம் எழுப்பும் முனங்கல் ஒலி போன்று இருப்பதாக விரிவுரையாளர்கள் கூறுகிறார்கள்.

வானத்தின் ஈர்ப்பலை இரைச்சலின் ஒலிப்பதிவு.

மேலும் அல்லாஹ்வின் ஏழு வானங்களிலும் வானவர்கள் நெருக்கமாக இருந்து அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்து வருவதையும் அறிய முடிகிறது.

حدثنا ابن المثنى, قال: ثنا ابن أبي عديّ, عن سعيد, عن قتادة, عن أنس بن مالك, عن مالك بن صعصعة, رجل من قومه قال: قال نبيُّ الله صلى الله عليه وسلم

" رفِعَ إليَّ البَيْتُ المَعْمُورُ, فَقُلْتُ: يا جبريلُ ما هَذَا؟ قال: البَيْتُ المَعْمُورُ, يَدْخُلُهُ كُلَّ يَوْم سَبْعُونَ أَلْفَ مَلَكٍ إذَا خَرَجوا مِنْهُ لَمْ يَعُودُوا آخِرَ ما عَلَيْهِمْ".

நபி (ஸல்) அவர்கள் இஸ்ராஎன்ற விண்வெளி மிஹ்ராஜ் பயணத்தில், ஏழாம் வானத்தில், அங்கு,”பைத்துல் மஹ்மூர்என்னும் வளமான இறையில்லம் எனக்கு காட்டப்பட்டது. நான் அதைக்குறித்து ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் கேட்டேன், இதுதான் அல் பைத்துல் மஹ்மூர்ஆகும் இதில் ஒவ்வொரு நாளும் எழுபதாயிரம் வானவர்கள் தொழுகிறார்கள். அவர்கள் இதிலிருந்து வெளியே சென்றால், திரும்ப இதனிடம் வர மாட்டார்கள். அதுவே அவர்களின் கடைசியாக நுழைந்ததாகிவிடும்என்று கூறினார்கள்.. -புஹாரி.3207.

وَإِنَّا لَنَحْنُ الصَّافُّونَ (165) وَإِنَّا لَنَحْنُ الْمُسَبِّحُونَ (166) وَإِنْ كَانُوا لَيَقُولُونَ (167)

த்-தபரீ விரிவுரையில் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், எல்லா வானங்களிலும் வானவர்கள் நிறைந்துள்ளனர், எந்தளவு என்றால் நான்கு விரற்கடை இடைவெளியிலும் ஒரு வானவர் நின்ற நிலையில் அல்லது குனிந்த நிலையில் அல்லாஹ்வுக்கு ஸஜ்தா செய்து கொண்டிருப்பதாக கூறி இவ்வசனத்தை ஓதினார்கள்.

“(மேலும் மலக்குகள் கூறுகிறார்கள்) குறிப்பிட்ட ஓர் இடம் இல்லாதவராக திடமாக எங்களில் ஒருவருமில்லை.நிச்சயமாக, நாங்கள் (அல்லாஹ்வின் கட்டளையை எதிர்பார்த்து) அணிவகுத்தவர்களாகவே (நிற்கின்றோம்).மேலும் நிச்சயமாக,நாங்கள் (அல்லாஹ்வை துதி செய்து) தஸ்பீஹ் செய்பவர்களாகவே இருக்கின்றோம்.” ( அல் குர்ஆன்: 37:164-167 )

விண்வெளியில் ஒளியின் வேகத்தில் பயணிக்கும்போது காலம் சுருங்கும். இயற்பியல் கோட்பாடுகள் மூலம் காலப்பயணம் (Time Travel) சாத்தியம் என ஐன்ஸ்டீன் முதல் ஸ்டீபன் ஹாக்கிங் வரை பல அறிவியல் அறிஞர்களால் கூறப்பட்டிருந்தாலும், செயல்முறையில் இதனை இன்னும் சாத்தியப்படுத்தியதாக எந்த பதிவும் இல்லை.

கால வெளியில் பயணம் செய்ய வேண்டுமென்றால்: ஒளி வேகத்துக்கு இணையான வேகத்தில் பயணிக்க வேண்டும். அப்படி பயணம் செய்ய பயன்படும் அந்த பாதைகளை Worm Holes என விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். மனிதனால் போக முடியாத அளவில் காணப்படும் அந்த துளைகள், இந்த பேரண்டத்தில் பல கோடிக் கணக்கிலிருக்கின்றன

நபி (ஸல்) அவர்கள் விண்ணேற்றம் செய்த இஸ்ராமற்றும் மிஹ்ராஜ்பயணம் கூட சிறப்பு சார்பியல் தத்துவத்தை (Special Relativity Theory) அனுபவப்பூர்வமாக விளக்குகிறது.

ஐன்ஸ்டின் கூறியது இதுதான்.ஒளியின் வேகத்தில் செல்லும்போது அளவில் சுருக்கம் ஏற்படும். எடைகூடும். காலம் சுருங்குதல்போன்ற என்ற வினோதங்கள் நடைபெறும் என்றார்.

நபி (ஸல்) அவர்கள் ஓர் இரவில், மக்காவிலிருந்து பைத்துல் முகத்திஸ் (ஜெருஸலம்) சென்று,அங்கிருந்து ஏழாம் வானம் வரை சென்று அல்லாஹ்விடம் உரையாடி கடமையான ஐவேளை தொழுகையை பெற்று வந்தார்கள்.நாம் பூமியில் கணக்கிடும் கால நேரத்தைக் கொண்டு இப்பயணத்தை விளக்கமுடியாத அளவில் இப்பயணம் ஒரு அற்புதமாக உள்ளது.

وَإِنَّ يَوْمًا عِنْدَ رَبِّكَ كَأَلْفِ سَنَةٍ مِمَّا تَعُدُّونَ

மேலும் அல்லாஹ் அல் குர்ஆனில் கூறுகிறான்:- “நிச்சயமாக உங்களது இறைவனிடத்தில் ஒரு நாள் என்பது நீங்கள் கணக்கிடுகின்ற ஆயிரம் ஆண்டுகளைப் போலாகும். ( அல்குர்ஆன்: 22: 47 )

அறுநூறு இறக்கைகள் கொண்ட, ஒளியால் படைக்கப்பட்ட ஜிப்ரீல் (அலை) அவர்களுடன், ஒரு காலடி தூரத்தில் கண்ணுக்கெட்டிய தொலைவு பயணம் செய்யக்கூடிய புராக்என்ற வாகனத்தில் பயணிக்கும்போது வெளி-நேரம் (Space-Time) சுருங்கிவிடுவதால் ஓர் இரவில் நடந்த மிஹ்ராஜ் காலப்பயணம் (Time Travel) அறிவியல் ரீதியாகவே உண்மையாகிறது.

நமது கணக்குப்படி ஒளியின் வேகம் நொடிக்கு 30,00,00 K.M.(2,86282 மைல்).ஒளியால் படைக்கப்பட்ட ஜிப்ரீல்(அலை) அவர்களின் வேகமும்,புராக் வாகனத்தின் வேகமும் அல்லாஹ் மட்டுமே அறிந்தவன். ( நன்றி:readislam.net/ஈர்ப்பு அலைகளின் விண்வெளி இரைச்சல் )

விண்வெளிப் பயணம் சாத்தியமே!..

குர்ஆனில், விண்வெளி ஆய்வு சாத்தியமாகும் என்று அல்லாஹ் தெளிவாகக் குறிப்பிட்டு, அதற்குச் செல்லுமாறு மக்களைக் கேட்டுக்கொள்கிறான்.

விண்வெளி உட்பட இயற்கையை கண்காணிக்க இஸ்லாம் மக்களை ஊக்குவிக்கிறது. 

விண்வெளி ஆய்வு பற்றி நாம் பேசும்போது, ​​அதை இந்த வசனத்துடன் தொடர்புபடுத்தலாம்: அர் ரஹ்மான் வசனம் 33.

يَامَعْشَرَ الْجِنِّ وَالْإِنْسِ إِنِ اسْتَطَعْتُمْ أَنْ تَنْفُذُوا مِنْ أَقْطَارِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ فَانْفُذُوا لَا تَنْفُذُونَ إِلَّا بِسُلْطَانٍ

"ஓ ஜின்கள் மற்றும் மனிதர்களின் கூட்டமே, நீங்கள் வானங்கள் மற்றும் பூமியின் பகுதிகளை ஊடுருவிச் செல்ல முடிந்தால், அவற்றை ஊடுருவிச் செல்லுங்கள்! ஒரு சக்தியைக் கொண்டே த் தவிர நீங்கள் அவைகளை ஊடுருவ மாட்டீர்கள்."

விண்வெளி ஆய்வை இஸ்லாம் ஊக்குவிப்பதை அந்த வசனத்திலிருந்து பார்க்கலாம். இந்த வசனத்தின்  "தன்ஃபுதூ என்பதற்கு ஊடுருவுதல் = ஆராய்தல் என்றும், சுல்தான் என்பதற்கு ஆற்றல் = அறிவியல் என்றும் வானியல் நிபுணரும் இஸ்லாமிய அறிஞருமான டாக்டர். மாரிஸ் புக்கைல் எழுதிய விண்வெளியின் வெற்றி எனும் நூலில் டாக்டர். மாரிஸ் புக்கைல் பொருள் படுத்துகின்றார்.

விண்வெளியில் தடம் பதித்த முஸ்லிம்கள்....

முதலாவதாக விண்வெளியில் கால் பதித்தவர் சவூதியைச் சேர்ந்த சுல்தான் பின் சல்மான் அல் சவுத். (1985) இரண்டாவது, சிரியாவைச் சேர்ந்த முஹம்மது பாரிஸ்.  மூன்றாவது சோவியத் ஒன்றியத்தின் மூசா மனரோவ், உட்பட மொத்தம் 10 ஆண்களும், 3 பெண்களும் விண்வெளிக்குச் சென்றுள்ளனர். 

ஷேக் முஸ்ஸாபர் (மலேசியா) 2007 ரமழானின் போது விண்வெளி நிலையத்திற்குச் சென்றபோது, ​​மலேசியாவின் இஸ்லாமிய மேம்பாட்டுத் துறையால் தயாரிக்கப்பட்ட வழிகாட்டுதல் "சர்வதேச விண்வெளி நிலையத்தில் இபாதாவைச் செய்வதற்கான வழிகாட்டுதல்" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது.

https://makkah.files.wordpress.com/2007/10/a_guideline_ibadah_at_iss.pdf

முஸ்லிம் விண்வெளி வீரர்களின் பட்டியல் - விக்கிபீடியா

அடுத்து முகமது பின் ரஷித் விண்வெளி மையம் மற்றும் எமிரேட்ஸ் மார்ஸ் மிஷன் ஆகியவை உள்ளன. எமிரேட்ஸ் மார்ஸ் மிஷன் )

வானம், பூமியின் எல்லையைக் கடப்பதற்கு…?

வானம் பூமியின் எல்லையைக் கடப்பதற்கு இன்று சக்தி வாய்ந்த ராக்கெட் என்ஜின்களை பயன்படுத்துகிறார்கள்.

பூமியின் புவி ஈர்ப்பு சக்தியை மீறி செல்வதற்கு விடுபடும்  வேகம் (Escape Velocity) வினாடிக்கு  11.2 கி.மீ ( மணிக்கு 40,320 கி.மீ.) தேவைப்படுகிறது. 

ஒரு கிலோ எடையுள்ள பொருளை பூமியின் எல்லையை தாண்டி தூக்கிச் செல்ல சுமார் 25,000 அமெரிக்க டாலர்கள் செலவாகின்றது.

மேலும் தூக்கிச் செல்லும் ராக்கெட் முற்றிலும் அழிந்து விடுவதால் மீண்டும் செல்ல புதிய ராக்கெட்டுக்கு அதிகம் செலவு செய்ய வேண்டியுள்ளதால் விண்வெளிப்பயணம் செலவு  மிகுந்த ஒன்றாக உள்ளது. விண் ஏணி மூலம் ஒரு கிலோவிற்கு சுமார் 200 டாலர் மட்டுமே செலவாகும் என்று மதிப்பிடப்படுகிறது.

குறைந்த செலவில் உயரே  ஏறுவதற்கு என்ன வழி என்று மனிதன் சிந்தனை செய்தான்.

சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்னால் ரஷ்யா நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி கான்ஸ்டன்டைன் (Konstantin Tsiolkovsky-1895) என்பவர்.

சுவாரஸ்யமான ஒரு விஷயத்தை முன்வைக்கிறார். விண் ஏணி! (Space Ladder), ஒரு நாள் ஈபில் டவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் போது இந்த சிந்தனை தோன்றியதாம். இதே கோபுரத்தை இன்னும் கொஞ்சம் உயர்த்தினால் வானத்திற்கு ஏணி அமைத்துவிடமுடியும் என்று நம்பினார். அவர் முயற்சி செய்த உயரம் 35,786 K.M பூமியின் தரைப் பகுதியிலிருந்து புவிநிலைச்   சுற்றுப்பாதை ( Geo Stationary Orbit ) அமைந்திருக்கும் உயரம். இந்த உயரத்தில் செயற்கை கோளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பது அவர் திட்டம்.

உயரமான இடத்திற்கு ஏறுவதற்கு நாம் ஏணியை பயன்படுத்துகிறோம். இதுபோல் விண்ணில் ஏறுவதற்கு ஒரு ஏணியை உருவாக்கினால் செலவு குறைந்த பயணமாக ஆகும் என்ற கருத்தில் விண்ஏணி, விண் தூக்கி, (Space Ladder-Space Lift-Space Elevator) குறித்து ஆய்வுகள் இன்று நடந்து வருகின்றன.

http://www.extremetech.com/extreme/176625-60000-miles-up-geostationary-space-elevator-could-be-built-by-2035-says-new-study

http://en.wikipedia.org/wiki/Space_elevator

உயரமான இடங்களுக்குச் செல்ல நாம் ஏணியை பயன்படுத்துகின்றோம். மிக உயரமான கட்டிடங்களின் உச்சிக்கு செல்ல மின் ஏணியை (LIFT) பயன்படுத்துகிறோம். 

இதையே நாம் ஏன் விண்வெளிக்கு பயன்படுத்தக்கூடாது என்று யோசித்ததன் விளைவுதான் (Space Ladder Project)விண் ஏணித் திட்டம் அமெரிக்காவின் நாசாவால் (NASA) உருவாக்கப்பட்டது. 

பூமியிலிருந்து அடிக்கடி விண்வெளி ஓடத்தை அனுப்புவதைக் காட்டிலும் ஒரு ஏணி இருந்தால் விண்வெளி வீரர்களுக்குத் தேவையான பொருள்களை மிகக் குறைந்த செலவில் பாதுகாப்பாக எடுத்துச் செல்லலாம் என்று திட்டமிட்டு இம்முயற்சியில் இறங்கியது.

ஏறக்குறைய மூன்று முறை இத்திட்டம் தோல்வி அடைந்த நிலையில், தற்போது ஜப்பானிய நிறுவனம் ஒன்று இம்முயற்சியில் தீவீரமாக ஈடுபட்டுள்ளது. 

விண்வெளிக்கு சென்று வர, 2050ம் ஆண்டிற்குள், ‘லிப்ட்அமைக்கப்படும்என்று ஜப்பான் நாட்டின் பிரபல கட்டுமான நிறுவனம் கூறியுள்ளது. ஜப்பானின் மிகப் பெரிய கட்டுமான நிறுவனமான, ‘ஒபாயஷிவெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது: நேர்கோட்டில், காந்த மோட்டாரில் இயங்கும் ரோபாட்டிக் கார்கள், சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் வரை கொண்டு செல்லப்படும். 96,000 கி.மீ., உயரம் வரை செல்லும் இந்த லிப்ட்டில், விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் சென்று வரவும், பொருட்களை கொண்டு வரவும் செல்லவும் முடியும். விண்ணில் ஏவப்படும் ராக்கெட் தயாரிப்பு செலவை விட, லிப்ட் தயாரிப்பு செலவு மிகவும் குறைவு. இந்த லிப்ட்டில், விண்வெளி ஆய்வு நிலையத்தை ஏழு நாட்களில் சென்றடையலாம். 

விண்வெளி வரை கொண்டு செல்வதற்குத் தேவையான நீண்ட கேபிள்கள், 2030ம் ஆண்டிற்குள் தயாரிக்கப்படும். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. பூமியிலிருந்து, சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம், 330 கி.மீ., துாரத்தில் உள்ளது.

50 மாடி, 100 மாடி லிப்ட் கேள்விப்பட்டிருக்கலாம். விண்வெளிக்கு, அதாவது சுமார் 35 ஆயிரம் கி.மீ. உயரத்துக்கு லிப்ட் அமைப்பது குறித்து ஜப்பானின் ஒபயாஷி நிறுவன விஞ்ஞானிகள் (ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். ஸ்டீலைவிட 100 மடங்கு உறுதியான கார்பன் நானோ டியூப் ( carbon nanotube or boron nitride nanotube ) பயன்படுத்தி, பூமியில் இருந்து சுமார் 35 ஆயிரம் கி.மீ. உயரத்துக்கு ஒரு பிரமாண்ட போஸ்ட் நடவேண்டும்.

அதன் உச்சியில் ஆய்வு மையம் மற்றும் சுற்றுலா தலம் அமைக்கப்படும். போஸ்ட்டின் உச்சிக்கு லிப்ட்டிலேயே போகலாம். இந்த லிப்ட்  மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் செல்லும். ஒரு நேரத்தில் 30 பயணிகள் சென்றுவர முடியும். ஆராய்ச்சியை தீவிரப்படுத்தினால், 2050-ம் ஆண்டுக்குள் விண்வெளி லிப்ட் ரெடி என்று சர்வசாதாரணமாக சொல்கிறார் ஆய்வு நிறுவனத்தின் தலைவி ஒபயாஷி.

தற்போது கார்பன் நானோ இழைகளைக்காட்டிலும் மிக மெல்லிய ஆனால் உறுதியான வைர நானோ இழைகள் (Diamond nanothreads) அமெரிக்க ஆய்வாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

“Want to ride an elevator into space? While the idea has been around for more than 100 years, a breakthrough in nanotechnology could mean we will be riding into space on a cable made of diamonds.”

Scientists at Penn State University in the US released a research paper last month that showed the way forward to producing ultra-thin “diamond nanothreads” that have a strength and stiffness greater than that of today’s strongest nanotubes and polymers.

http://edition.cnn.com/2014/10/10/tech/innovation/space-elevator-nanotechnology/

http://www.abc.net.au/news/2014-09-21/japanese-construction-giants-promise-space-elevator-by-2050/5756206

அநேகமாக அமெரிக்கா சியாட்டில் நகரில் கடந்த ஆகஸ்ட் 21-23 ல் நடக்க இருக்கும் விண் ஏணி சர்வதேச மாநாட்டில் இது குறித்து விரிவாக விவாதிக்க இருக்கிறார்கள். கூடுதல் விவரங்களுக்கு பார்க்க:- http://www.isec.org/sec ) (நன்றி:readislam.net/ விண்வெளி ஏணி” (Space Ladder-Space Escalator) ஆர்வமூட்டும் அல்குர்ஆன் )

 )

விண் ஏணி சாத்தியமா?..

3500 ஆண்டுகளுக்கு முன்பே இந்த விண்வெளி ஏணித் திட்டம், எகிப்தை ஆண்ட ஃபிர்அவ்னுக்கு” வந்ததாக அல்குர் ஆன் கூறுகிறது.

وَقَالَ فِرْعَوْنُ يَاهَامَانُ ابْنِ لِي صَرْحًا لَعَلِّي أَبْلُغُ الْأَسْبَابَ (36) أَسْبَابَ السَّمَاوَاتِ فَأَطَّلِعَ إِلَى إِلَهِ مُوسَى

 ஹாமானே! உயரமான ஒரு கோபுரத்தை எனக்காக நீ கட்டுவாயாக நான் (மேலே செல்வதற்கான) பாதைகளைப் பெரும்பொருட்டு! ஆம்! வானங்களின் பாதைகளை அடைந்து மூசாவுடைய ஆண்டவனை நான் காண வேண்டும். ( அல் குர்ஆன்: 40: 36.37 )

இறுதி உம்மத்தான நாளைய மனிதர்களால் இதுவும் சாத்தியமே என்றே அல்குர் ஆனும் கூறுகிறது. விண்ணில் ஏணி மூலம் ஏறிச் செல்ல, மனிதர்களை ஊக்குவிப்பதை பின் வரும் வசனங்கள் ஊடாக நாம் விளங்கலாம்.

وَسَخَّرَ لَكُمْ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ جَمِيعًا مِنْهُ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ

அவனே வானங்களிலுள்ளவை, பூமியிலுள்ளவை அனைத்தையும் தன் அருளால் உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; அதில்  சிந்திக்கும் சமூகத்தாருக்கு நிச்சயமாக பல அத்தாட்சிகள் உள்ளன.  ( அல்குர்ஆன்: 45: 13 )

وَإِنْ كَانَ كَبُرَ عَلَيْكَ إِعْرَاضُهُمْ فَإِنِ اسْتَطَعْتَ أَنْ تَبْتَغِيَ نَفَقًا فِي الْأَرْضِ أَوْ سُلَّمًا فِي السَّمَاءِ فَتَأْتِيَهُمْ بِآيَةٍ وَلَوْ شَاءَ اللَّهُ لَجَمَعَهُمْ عَلَى الْهُدَى فَلَا تَكُونَنَّ مِنَ الْجَاهِلِينَ

 நபியே! அவர்களின் புறக்கணிப்பு உமக்கு பெரும் கஷ்டமாக இருந்தால்,உம்மால் முடியுமானால் பூமியில் சுரங்கம் வைத்து அல்லது வானத்தில் ஓர் ஏணி வைத்து (ஏறிச்சென்று அவர்கள் விருப்பப்படி) ஒரு அத்தாட்சியை அவர்களிடம் கொண்டு வாரும்.  ( அல்குர்ஆன்: 6: 35 )

أَمْ لَهُمْ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا فَلْيَرْتَقُوا فِي الْأَسْبَابِ

                 “..அல்லது வானங்களுடையவும், பூமியினுடையவும் அவ்விரண்டிற்கும் இடையேயும் இருப்பவற்றின் மீதுள்ள ஆட்சி அவர்களிடம் இருக்கிறதா? அவ்வாறாயின் அவர்கள் (ஏணி போன்ற-Space Ladder) சாதனங்களில் ஏறிச் செல்லட்டும்.  ( அல்குர்ஆன்: 38: 10 )

أَمْ لَهُمْ سُلَّمٌ يَسْتَمِعُونَ فِيهِ فَلْيَأْتِ مُسْتَمِعُهُمْ بِسُلْطَانٍ مُبِينٍ

“..அல்லது அவர்களுக்கு ஏணி ( Space Ladder-Space Elevator)  இருந்து அதன் மூலம் (வானத்தின் ரகசியங்களை) கேட்டு வருகிறார்களா? அவ்வாறாயின் அவர்களில் கேட்டு வந்தவர் செவியேற்றதை தெளிவான ஆதாரத்துடன் கொண்டு வரட்டும்.  ( அல் குர்ஆன்: 52: 38 )

 இப்படி விண் ஏணியின் மூலம்  இவர்கள் வானத்திற்கு சென்றாலும் நிராகரிப்பவர்கள் விசுவாசம் கொள்ளவே மாட்டார்கள் என்பதையும் அல்லாஹ் சொல்லிக்காட்டுகிறான்.

وَلَوْ فَتَحْنَا عَلَيْهِمْ بَابًا مِنَ السَّمَاءِ فَظَلُّوا فِيهِ يَعْرُجُونَ (14) لَقَالُوا إِنَّمَا سُكِّرَتْ أَبْصَارُنَا بَلْ نَحْنُ قَوْمٌ مَسْحُورُونَ

 இவர்களுக்காக நாம் வானத்திலிருந்து ஒரு வாயிலைத் திறந்து விட்டு, அதில் அவர்கள் (நாள்  முழுவதும் தொடர்ந்து) ஏறிக்கொண்டிருந்தாலும் (அவர்கள் விசுவாசம் கொள்ள மாட்டார்கள்).  ( அல்குர்ஆன்: 15: 14 )

أَوْ يَكُونَ لَكَ بَيْتٌ مِنْ زُخْرُفٍ أَوْ تَرْقَى فِي السَّمَاءِ وَلَنْ نُؤْمِنَ لِرُقِيِّكَ حَتَّى تُنَزِّلَ عَلَيْنَا كِتَابًا نَقْرَؤُهُ قُلْ سُبْحَانَ رَبِّي هَلْ كُنْتُ إِلَّا بَشَرًا رَسُولًا

 “..அல்லது ஒரு தங்க மாளிகை உமக்கு இருந்தாலன்றி; அல்லது வானத்தின் மீது நீர் ஏறிச் செல்ல வேண்டும்.அங்கிருந்து எங்களுக்காக நாங்கள் பார்க்ககூடிய வேத (நூலை)த்  நீர் கொண்டு வந்து தரும் வரையிலும், நீர் வானத்தில் ஏறியதையும் நாங்கள் நம்பமாட்டோம்.என்று கூறுகிறார்.  ( அல்குர்ஆன்: 17: 93 )

பூமியிலிருந்து வானத்திற்கு கயிற்றின் மூலம் ஏறுவது பற்றிய உதாரணச் செய்தியை புஹாரி ஹதீஸில் பார்க்கலாம்.

حَدَّثَنَا ‏ ‏حَاجِبُ بْنُ الْوَلِيدِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ حَرْبٍ ‏ ‏عَنْ ‏ ‏الزُّبَيْدِيِّ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏الزُّهْرِيُّ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏أَنَّ ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏أَوْ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏كَانَ يُحَدِّثُ ‏ ‏أَنَّ رَجُلًا أَتَى رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى التُّجِيبِيُّ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏أَنَّ ‏ ‏عُبَيْدَ اللَّهِ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ ‏ ‏أَخْبَرَهُ أَنَّ ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏كَانَ يُحَدِّثُ أَنَّ رَجُلًا أَتَى رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَرَى اللَّيْلَةَ فِي الْمَنَامِ ‏ ‏ظُلَّةً ‏ ‏تَنْطِفُ ‏ ‏السَّمْنَ وَالْعَسَلَ فَأَرَى النَّاسَ يَتَكَفَّفُونَ مِنْهَا بِأَيْدِيهِمْ فَالْمُسْتَكْثِرُ ‏ ‏وَالْمُسْتَقِلُّ ‏ ‏وَأَرَى ‏ ‏سَبَبًا ‏ ‏وَاصِلًا مِنْ السَّمَاءِ إِلَى الْأَرْضِ فَأَرَاكَ أَخَذْتَ بِهِ فَعَلَوْتَ ثُمَّ أَخَذَ بِهِ رَجُلٌ مِنْ بَعْدِكَ فَعَلَا ثُمَّ أَخَذَ بِهِ رَجُلٌ آخَرُ فَعَلَا ثُمَّ أَخَذَ بِهِ رَجُلٌ آخَرُ فَانْقَطَعَ بِهِ ثُمَّ وُصِلَ لَهُ فَعَلَا قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏يَا رَسُولَ اللَّهِ بِأَبِي أَنْتَ وَاللَّهِ لَتَدَعَنِّي ‏ ‏فَلَأَعْبُرَنَّهَا ‏ ‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ‏ ‏اعْبُرْهَا ‏ ‏قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏أَمَّا ‏ ‏الظُّلَّةُ ‏ ‏فَظُلَّةُ ‏ ‏الْإِسْلَامِ وَأَمَّا الَّذِي ‏ ‏يَنْطِفُ ‏ ‏مِنْ السَّمْنِ وَالْعَسَلِ فَالْقُرْآنُ حَلَاوَتُهُ وَلِينُهُ وَأَمَّا مَا يَتَكَفَّفُ النَّاسُ مِنْ ذَلِكَ فَالْمُسْتَكْثِرُ مِنْ الْقُرْآنِ ‏ ‏وَالْمُسْتَقِلُّ ‏ ‏وَأَمَّا ‏ ‏السَّبَبُ ‏ ‏الْوَاصِلُ مِنْ السَّمَاءِ إِلَى الْأَرْضِ فَالْحَقُّ الَّذِي أَنْتَ عَلَيْهِ تَأْخُذُ بِهِ فَيُعْلِيكَ اللَّهُ بِهِ ثُمَّ يَأْخُذُ بِهِ رَجُلٌ مِنْ بَعْدِكَ فَيَعْلُو بِهِ ثُمَّ يَأْخُذُ بِهِ رَجُلٌ آخَرُ فَيَعْلُو بِهِ ثُمَّ يَأْخُذُ بِهِ رَجُلٌ آخَرُ فَيَنْقَطِعُ بِهِ ثُمَّ يُوصَلُ لَهُ فَيَعْلُو بِهِ فَأَخْبِرْنِي يَا رَسُولَ اللَّهِ بِأَبِي أَنْتَ أَصَبْتُ أَمْ أَخْطَأْتُ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ‏ ‏أَصَبْتَ بَعْضًا وَأَخْطَأْتَ بَعْضًا قَالَ فَوَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ لَتُحَدِّثَنِّي مَا الَّذِي أَخْطَأْتُ قَالَ لَا تُقْسِمْ ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏قَالَ ‏ ‏جَاءَ رَجُلٌ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مُنْصَرَفَهُ مِنْ ‏ ‏أُحُدٍ ‏ ‏فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي رَأَيْتُ هَذِهِ اللَّيْلَةَ فِي الْمَنَامِ ‏ ‏ظُلَّةً ‏ ‏تَنْطِفُ ‏ ‏السَّمْنَ وَالْعَسَلَ ‏ ‏بِمَعْنَى حَدِيثِ ‏ ‏يُونُسَ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏أَوْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏كَانَ ‏ ‏مَعْمَرٌ ‏ ‏أَحْيَانًا يَقُولُ عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏وَأَحْيَانًا يَقُولُ عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏أَنَّ رَجُلًا أَتَى رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ إِنِّي أَرَى اللَّيْلَةَ ‏ ‏ظُلَّةً ‏ ‏بِمَعْنَى حَدِيثِهِمْ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ كَثِيرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُلَيْمَانُ وَهُوَ ابْنُ كَثِيرٍ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ مِمَّا يَقُولُ لِأَصْحَابِهِ مَنْ رَأَى مِنْكُمْ رُؤْيَا فَلْيَقُصَّهَا ‏ ‏أَعْبُرْهَا ‏ ‏لَهُ قَالَ فَجَاءَ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ رَأَيْتُ ‏ ‏ظُلَّةً ‏ ‏بِنَحْوِ حَدِيثِهِمْ ‏

ஒருவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் நேற்றிரவு கனவில் மேகம் ஒன்றைக் கண்டேன். அந்த மேகத்திலிருந்து நெய்யும் தேனும் சொட்டிக்கொண்டிருந்தன. உடனே மக்கள் தங்கள் கைகளை நீட்டி அவற்றைப் பிடித்துக்கொண்டிருக்கக் கண்டேன். (அவர்களில்) அதிகம் பிடித்தவர்களும் உண்டு;குறைவாக பிடித்தவர்களும் உண்டு. அப்போது ஒரு கயிறு பூமியிலிருந்து வானம் வரைப் போய்ச்சேர்ந்தது.அப்போது (இறைத்தூதர் அவர்களே!) நீங்கள் அந்தக் கயிற்றைப் பற்றிக்கொண்டு மேலே சென்றார்.பிறகு (நான்காவதாக) இன்னோரு மனிதர் (வந்து) அதைப்பற்றிக் கொள்ள அந்தக்கயிறு அறுந்து (விழுந்து)விட்டது. பிறகு (மீண்டும்) அக்கயிறு (வானத்துடன்) இணைக்கப்பட்டது.என்றார்.

அப்போது (அங்கிருந்த) அபூபக்கர் (ரலி௦) அவர்கள், “இறைதூதர் அவர்களே! என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும், அல்லாஹ்வின் மீதாணையாக இந்தக்கனவிற்கு விளக்கம் அளிக்க என்னை அனுமதிக்க வேண்டும்என்று கேட்டார்கள்.அதற்க்கு நபி (ஸல்௦) அவர்கள் சரி இதற்க்கு விளக்கம் சொல்லுங்கள்என்றார்கள்.அபூபக்கர் (ரலி) அவர்கள், “அந்த மேகம் தான் இஸ்லாமாகும். (மேகத்திலிருந்தது) சொட்டிக்கொண்டிருந்த தேனும் நெய்யும் குர்ஆனாகும்.அதன் இனிமை சொட்டிக்கொண்டிருக்கிறது.குர்ஆனிலிருந்து அதிகம் பெற்றவர்களும் உள்ளனர்; குறைவாக பெற்றவர்களும் உள்ளனர்.

வானிலிருந்து பூமிவரை நீண்டு செல்லும் அந்தக் கயிரானது, நீங்கள் இருந்து வருகிற சத்திய மார்க்கமாகும்.அதை நீங்கள் பற்றுகிறீர்கள். அல்லாஹ் உங்களை (வானளவிற்கு) உயர்த்திவிடுகிறான்.பிறகு உங்களுக்கு பின்னால் இன்னொரு மனிதர் அதைப் பற்றுகிறார்.அதன் மூலம் அவரும் உயர்ந்து விடுகிறார். அதன் பின்னர் இன்னொரு மனிதர் அதைப்பற்றிக்கொண்டு அதன் மூலம் உயர்ந்து விடுகிறார். அதை (நான்காவதாக) மற்றொருவர் பற்றுகிறார்.(ஆனால்) அது அவரோடு அறுந்து விடுகிறது.பின்னர் அவருக்காக அக்கயிறு இணைக்கப்படுகிறது.அதன் மூலம் அவரும் உயர்ந்து விடுகிறார்.என்று கூறிவிட்டு, “இறைத்தூதர் அவர்களே! என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்.(நான் சொன்ன விளக்கம்) சரியா? அல்லது தவறா?” என்று கேட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள், “ சிலவற்றை சரியாகச் சொன்னீர்கள்; சிலவற்றை தவறாகச் சொல்லி விட்டீர்கள்என்றார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள்,”இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் தவறாகக் கூறியதைத் தாங்கள் எனக்குத் தெரிவிக்க வேண்டும்என்றார்கள்.நபி (ஸல்) அவர்கள் இனி சத்தியம் செய்து கேட்காதீர்கள் (நான் சொல்லப்போவதில்லைஎன்றார்கள். அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்  ஸஹிஹுல் புஹாரி.7046.

ஆகவே, சந்திராயன் 3 இஸ்ரோ குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு நம் சமூகத்தின் ஆற்றல் மிகு இளைஞர் சமூகமும் எதிர் கால இஸ்ரோவின் இளம் விஞ்ஞானிகளாய் வலம் வர ஆசைப்படுவோம்!

1 comment:

  1. மாஷா அல்லாஹ் அருமையான பல விஷயங்கள் அல்லாஹுத்தஆலா தங்களுக்கு அருள் புரிவானாக

    ReplyDelete