Thursday, 7 September 2023

தாடி:- ஆண்களின் அலங்காரம்! அழகின் அடையாளம்!!

 

தாடி:- ஆண்களின் அலங்காரம்! அழகின் அடையாளம்!!


அனைத்து  சமுதாய இளைஞர்கள் இடையே  தாடி வைக்கும் போக்கு இன்று அதிகரித்து வருகிறது.

உலக நடைமுறைக்கு ஏற்ப (fashion) தாடி வைக்கின்றனர். ஒவ்வொரு விதமான நவீன வடிவங்களில் (styles) தலை முடிகளை வெட்டுவது போல் தாடிகளையும் ஒவ்வொரு நவீன வடிவங்களில் வடிவமைத்து வருகின்றனர்.

அதே நேரத்தில் இன்று தாடி வைக்கும் ஆண்களின் எண்ணிக்கை முஸ்லிம்கள் மத்தியில் குறைந்து வருவதைக் காணக்கூடியதாகவும் உள்ளது.

தாடி வைப்பதை  புறக்கணிக்கிற பலரும் கூறும் காரணங்கள் எது என்று நாம் பார்த்தால் ....

பெரும்பாலானோர்கள் இது ஒரு சுன்னத்து தானே அதனால் வைக்க வில்லை கடுமை காட்டுகிற அளவுக்கு ஒன்றும் பெரிய குற்றம் இல்லை என்றும்,  சிலர் மனைவி வைக்க வேண்டாம் என்று கூறுவதால் நான் வைக்க வில்லை என்றும், இன்னும் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களில் சிலர் தன்னுடைய பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூறுகிறார் அதனால் வைக்க வில்லை என்றும், இன்னும் சிலர் வேலை செய்கிற இடங்களில் தாடி வைப்பதால் சில சங்கடங்கள் ஏற்படுகிறது அதனால் வைக்க வில்லை என்றும் பதில் கூறுவதைப் பார்க்கின்றோம்.

அந்த குறைந்த எண்ணிக்கையிலானவர்களும் மேலே கூறியது போல உலக நடைமுறைக்கு ஏற்ப (fashion) தாடி வைக்கின்றனர். ஒவ்வொரு விதமான நவீன வடிவங்களில் (styles) தலை முடிகளை வெட்டுவது போல் தாடிகளையும் ஒவ்வொரு நவீன வடிவங்களில் வடிவமைக்கின்றனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் (மாற்றுக் கொள்கையில் உள்ள) ஒரு கூட்டத்தாருக்கு ஒப்ப நடக்கின்றாரோ அவர் அவர்களையே சார்ந்தவர். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி) ( நூல்: அபூதாவூத் 3512 )

சுன்னத் தானே என்ற இந்த பார்வை மிகவும் தவறானதும். பாவமானதும் ஆகும்.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّـهَ وَرَسُولَهُ وَلَا تَوَلَّوْا عَنْهُ وَأَنتُمْ تَسْمَعُونَ ﴿٢٠﴾ وَلَا تَكُونُوا كَالَّذِينَ قَالُوا سَمِعْنَا وَهُمْ لَا يَسْمَعُونَ ﴿٢١﴾

முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையிலேயே அவரை புறக்கணிக்காதீர்கள். (மனப்பூர்வமாகச்) செவியேற்காமல் இருந்துகொண்டே, “நாங்கள் செவியுற்றோம்என்று (நாவால் மட்டும்) சொல்கின்றவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்” ( 8: 20,21)

قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّـهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّـهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ ۗ وَاللَّـهُ غَفُورٌ رَّحِيمٌ

நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான்; இன்னும்,  உங்களுடைய பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடையவனுமாவான் என்று (நபியே!) நீர் கூறுவீராக!” (3:31)

ஏனெனில், தாடி வைப்பது என்பது நபி (ஸல்) அவர்களால் மிகவும் வலியுத்தப்பட்ட, அவர்களால் வாழ்நாள் முழுவதும் பேணப்பட்ட ஒரு வழிமுறையாகும்.

ஒரு முஸ்லிம் தனது உயிரை விட உயர்வாக உத்தம நபி (ஸல்) அவர்களை நேசிப்பது எப்படி கட்டாயக் கடமையோ, அதே போன்று நபி (ஸல்) அவர்களின் செயல்களையும் பின்பற்றி நடப்பதும் கடமையாகும்.

இங்கே மனைவி மக்களையும், பெற்றோர்கள், ஆசிரியர்களையும் பணிபுரியும் இடச் சூழல்களையும் காரணமாக முன் வைப்பது அபத்தமாகும்.

1.   அல்லாஹ்வின் படைப்பாற்றலை மறுப்பதற்கு சமமாகும்.

صِبْغَةَ اللَّهِ وَمَنْ أَحْسَنُ مِنَ اللَّهِ صِبْغَةً وَنَحْنُ لَهُ عَابِدُونَ

அல்லாஹ்வின் வர்ணத்தைப் (பின்பற்றுங்கள்.) அல்லாஹ்வை விட வர்ணம் தீட்டுவதில் மிக அழகானவன் யார்? நாம் அவனையே வணங்குவோராக இருக்கின்றோம் (எனக் கூறுவீர்களாக!)’ (2:138)

ஆண்களுக்கு மட்டும் விசேஷமாக முகத்தில் தாடி வளரும் வண்ணம் அல்லாஹ் படைத்திருக்கின்றான் என்றால் அதை முழுவதுமாக மழித்துக் கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை . 

தாடி மழித்துக் கொள்வதற்குரிய ஒன்றாக இருந்திருந்தால் இறைவன் மனிதனைப் படைக்கும் போதே பெண்களைப் போல் ஆண்களுக்கும் தாடி வளராத வண்ணம் படைத்திருப்பான்.

2. தாடி தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றா?

தாடி வைத்தால் எனக்கு நல்லா இல்லைனு மனைவி சொல்வதால் தாடியை (மழிப்பதாக) தவிர்பதாக பலரும் கூறுகின்றனர். ஆனால், தாடி தான் ஒரு ஆண்மகனுக்கு அழகாகும்.

فقالَ النَّبيُّ صلَّى اللهُ عليه وسلَّمَ: «إنَّ اللهَ جَميلٌ يُحِبُّ الجَمالَ»

நிச்சயமாக அல்லாஹ் அழகானவன். அவன் அழகையே விரும்புகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறி : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), ( நூல்: முஸ்லிம் 147 )

அல்லாஹ்வைப் பற்றி குர்ஆன் அறிமுகம் செய்யும் போது, ”அஹ்ஸனுல் ஹாலிகீன்’ – அழகிய படைப்பாளன்’ (23:14, 37:125) என்று குறிப்பிடுகின்றது. 

இந்த வகையில் இஸ்லாம் அழகுணர்வை ஆர்வமூட்டக் கூடிய மார்க்கம் என்பது புலனாகிறது.

3. நபிமார்களின் நடைமுறைக்கு மாற்றமாகும்.

தாடி வைப்பது அனைத்து நபிமார்களாலும் பேணப்பட்ட ஒரு நடைமுறையாகும்.

நபி (ஸல்) கூறினார்கள்:-பத்து விஷயங்கள் ஆரம்ப கால சுன்னத்துகளாகும். 1. மீசையைக் கத்தரிப்பது. 2. தாடியை வளர்ப்பது.  3. மிஸ்வாக் செய்வது.  4. நாசிக்கு நீர் செலுத்துவது. 5. நகம் வெட்டுவது. 6. (கை, கால், விரல்) இடுக்குகளைக் கழுகுவது.  9. தண்ணீரைக்குறைவாகச் செலவு செய்வது. 10. வாய்க்கொப்பளிப்பது. (நூல்: புகாரி, முஸ்லிம்)

ثم كتب كسرى بعد تمزيق الكتاب إلى باذان -وهو عامله على اليمن- أن ابعث إلى هذا الرجل الذي بالحجاز رجلين جَلْدين يأتيان به، فبعث باذان قهرمانه -وهو بابويه، وكان كاتباً حاسباً- مع رجل آخر من الفرس، فجاءا حتى قدما المدينة على رسول الله صلى الله عليه وسلم، ولما دخلا عليه صلى الله عليه وسلم وقد حلقا لحاهما وأعفيا شواربهما كَرِهَ رسول الله صلى الله عليه وسلم النظر إليهما، وقال: (ويلكما! من أمركما بهذا؟ قالا: أمرنا بهذا ربنا)، يعنيان: كسرى، فقال رسول الله صلى الله عليه وسلم: (ولكن ربي أمرني بإعفاء لحيتي وقص شاربي) رواه ابن جرير الطبري عن يزيد بن أبي حبيب مرسلاً، وحسّنه الألباني

ஹழ்ரத் யஜீது இப்னு அபூ ஹுபைப் (ரலி) அறிவித்துள்ளார்கள்:- “நெருப்பை வணங்குபவர்களான இருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர் இவ்விருவரும் தாடியை முழுமையாகச் சிரைத்து மீசையைப் பெரிதாக வளர்த்திருந்தனர். நபி (ஸல்) அவர்கள் இவ்விருவரையும் பார்த்து அருவருப்படைந்தவர்களாக உங்கள் இருவருக்கும் நாசம் உண்டாகட்டும்! என்று கூறினார்கள். அதற்கு அவ்விருவரும் எங்கள் அரசன் இவ்வாறு தான் எங்களை செய்யச் சொன்னார்’’ என்று கூற ‘’நிச்சயமாக எனது ரப்பு (அல்லாஹ்) எனது தாடியை நீளமாகவும், எனது மீசையைக் கத்தரித்துக் கொள்ளும்படியும் ஏவினான்|’’ என்று கூறினார்கள்.

وقال ابن حزم في المحلى: (وَأَمَّا فَرْضُ قَصِّ الشَّارِبِ وَإِعْفَاءِ اللِّحْيَة: فَإِنَّ عَبْدَ اللَّهِ بْنَ يُوسُف حدثنا [وساق إسناده] عَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ -: خَالِفُوا الْمُشْرِكِينَ, أَحْفُوا الشَّوَارِبَ وَأَعْفُوا اللِّحَى) .. وقال في مراتب الإجماع: (واتفقوا أن حلق جميع اللحية مثلة لا تجوز) ..

பெற்றோர்கள் பணியிட சூழல்களை முன் வைத்து தாடிவைக்க மறுப்பவர்கள் கவனத்திற்கு...

وروى أحمد وصححه السيوطي والهيثمي والألباني أن النبي صلى الله عليه وسلم قال: لا طاعة لمخلوق في معصية الخالق.

இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் "நபி ஸல் அவர்கள் கூறினார்கள்:- அல்லாஹ்வுக்கு மாறு செய்கிற விஷயத்தில் படைப்புகள் யாருக்கும் கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லை". ( நூல்: அஹ்மத் )

أن الحلق وما في حكمه ممنوع ولا يطاع الوالدان إذا أمرا به، لأن طاعة الوالدين لا تشرع في غير المعروف، قال صلى الله عليه وسلم: إنما الطاعة في المعروف. متفق عليه

தாடியின் விஷயத்தில் ஷரீஆவின் சட்டம் தாடியை மழிப்பது தடுக்கப்பட்ட (ஹராமான) செயலாகும்.  மேலும், ஷரீஆவின் பார்வையில் நன்மையல்லாத பாவமான காரியங்களில் பெற்றோர்களுக்கு கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் "நிச்சயமாக! வழிபடுவதும், கட்டுப்படுவதும் நன்மையான காரியங்களுக்குத் தான்" என்று கூறினார்கள். ( நூல்: புகாரி, முஸ்லிம் )

وجاء في البحر الرائق شرح كنز الدقائق لابن نجيم قال: قال في غاية البيان: اختلف الناس في إعفاء اللحى ما هو؟ فقال بعضهم: تركها تطول، فذاك إعفاؤها من غير قص، وقال أصحابنا: الإعفاء تركها حتى تكث وتكثر والقص سنة فيها وهو أن يقبض الرجل لحيته فما زاد منها على قبضة قطعها، كذلك ذكر محمد في كتاب الآثار عن أبي حنيفة قال: وبه نأخذ.

தாடி எந்த அளவுக்கு வளர்கிறதோ அந்த அளவுக்கு அப்படியே விட்டு விட வேண்டும்; அதில் சிறிதளவும் குறைக்கக் கூடாது என்று ஒரு சாரார் கூறுகின்றனர்.

தாடியை குறைக்கலாம் என்று ஆனால் மழித்துவிடக் கூடாது என்று மற்றொரு சாரார் கூறுகின்றனர்

ஒரு பிடிக்கும் மேலாக தாடியை வளர விடாமல் தாடியை கத்தரிப்பது நபிவழியே!

فقد ذهب كثير من أهل العلم إلى القول بجواز قص ما زاد على القبضة من اللحية، وعدم جواز قص ما دون ذلك، وقد روي قص ما زاد على القبضة من اللحية عن علي بن أبي طالب وأبي هريرة وابن عمر ـ رضي الله عنهم أجمعين ـ كما نص عليه ابن أبي شيبة في المصنف، وقال الباجي في المنتقى شرح الموطأ: وقد روى ابن القاسم عن مالك لا بأس أن يؤخذ ما تطاير من اللحية وشذ، قيل لمالك فإذا طالت جدا قال أرى أن يؤخذ منها وتقص، وروي عن عبد الله بن عمر وأبي هريرة أنهما كانا يأخذان من اللحية ما فضل عن القبضة.

அதிகமான மார்க்கச் சட்ட வல்லுநர்கள் ஒரு பிடியை விட அதிகமாக வளருவதை குறைப்பதை அனுமதிக்கின்றனர். அதை விட குறைப்பதை அனுமதிக்க வில்லை.

தாடியில் மாற்றம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்ட இரண்டு விஷயங்கள்:-

1.   தாடியை குறைப்பது. 2. தாடிக்கு சாயம் பூசுவது

صحيح البخاري 5892 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا عُمَرُ بْنُ مُحَمَّدِ بْنِ زَيْدٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " خَالِفُوا المُشْرِكِينَ: وَفِّرُوا اللِّحَى، وَأَحْفُوا الشَّوَارِبَ " وَكَانَ ابْنُ عُمَرَ: «إِذَا حَجَّ أَوِ اعْتَمَرَ قَبَضَ عَلَى لِحْيَتِهِ، فَمَا فَضَلَ أَخَذَهُ»

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இப்னு உமர் (ரலி) அவர்கள் ஹஜ் அல்லது உம்ராச் செய்தால் தமது தாடியைப் பிடித்துப் பார்ப்பார்கள். (ஒரு பிடிக்கு) மேலதிகமாக உள்ளதை (கத்தரித்து) எடுத்து விடுவார்கள். நூல் : புகாரி 5892

தாடியை வளர விடுங்கள் என்பதன் அர்த்தம் அறவே கை வைக்கக் கூடாது என்று இருக்குமானால்  அந்த ஹதீஸை அறிவிக்கும் இப்னு உமர் அவர்களே ஒரு பிடிக்கு மேல் அதிகமாக உள்ள தாடியைக் கத்தரித்து இருக்க மாட்டார்கள்.

இப்னு உமர் (ரலி) அவர்களைப் போல் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் முஹம்மது பின் கஅப் (ரலி) அவர்களும் தாடியை வெட்டலாம் என்ற கருத்தைக் கொண்டுள்ளனர்.

தாடியை வளர விடுங்கள் என்ற சொல்லுக்கு ஒட்ட நறுக்காமல் ஓரளவுக்கு விடுங்கள் என்ற அர்த்தம் இருப்பதால் இவர்கள் நபிவழியை மீறியவர்களாக மாட்டார்கள்.

ஒரு ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளரே அந்த ஹதீஸைப் பற்றி நன்கறிந்தவராக இருப்பார் என்று ஹதீஸ் கலையில் ஒரு விதி கூறப்படும். இந்த அடிப்படையில் பார்த்தாலும் இப்னு உமர் (ரலி) அவர்களின் செயல் தாடியை வெட்டுவது தவறில்லை என்ற நமது கருத்தை உறுதிபடுத்துகிறது.

இதற்கேற்ப தாடியை சீர்படுத்திக் கொள்வது தான் சரியான நபிவழியாகும்.

தாடியை குறைக்கலாமா? அல்லது அப்படியே வளர விட வேண்டுமா?

இப்னு உமர் (ரழி) அவர்கள் தன் தாடியில் ஒரு பிடிக்கு மேல் உள்ளதை நீக்கக் கண்டேன்என்று மர்வான்(ரழி) அறிவிக்கின்றார்கள். (நூல் : அபூதாவூது)

இப்னு உமர் (ரழி) அவர்களின் இந்தச் செயல், தாடியைக் குறைக்கலாம் என்பதற்குத் தெளிவான ஆதாரமாகும். இப்னு உமர்(ரழி) அவர்கள், ஸஹாபாக்களின் வித்தியாசமானவர்கள். நபி(ஸல்) அவர்களின் எல்லாச் செயல்களையும் அப்படியே பின்பற்றக் கூடியவர்கள். நபி(ஸல்) அவர்களின் தற்செயலான காரியங்களையும் கூட அவர்கள் பின்பற்றக் கூடியவர்கள். நபி(ஸல்) அவர்கள் எந்த இடத்திலாவது தன் ஒட்டகத்தை சிறிது நேரம் நிறுத்தினால் அந்த இடத்திற்கு அவர்கள் செல்ல நேர்ந்தால் அந்த இடத்தில் தனது ஒட்டகத்தை நிறுத்துவார்கள். இது போன்ற காரியங்களில் எல்லாம் நாம் அப்படியே செய்ய வேண்டியதில்லை. எனினும், இப்னு உமர்(ரழி) அவர்கள் இது போன்ற செயல்களையும் அப்படியே பின் பற்றியவர்கள்.

அவர்கள் தங்களின் தாடியைக் குறைத்திருந்தால், நபி (ஸல்) அவர்களின் முன் மாதிரி இன்றி நிச்சயம் செய்திருக்க மாட்டார்கள் என்று நம்பலாம். தாடியை விட்டு விடுங்கள் என்ற ஹதீஸ் இப்னு உமர்(ரழி) அவர்களுக்கு தெரியாமலிருக்கலாம் என்றும் கருத முடியாது, அந்த ஹதீஸை அறிவிப்பதே இப்னு உமர்(ரழி) அவர்கள் தான். ஹதீஸை அறிவிக்கக் கூடிய இப்னு உமர்(ரழி) அவர்களே தன் தாடியைக் குறைத்துள்ளார்கள் என்றால், குறைக்கலாம் என்பதற்கு சரியான ஆதாரமாகும்’.

தாடியை விட்டு விடுங்கள்! என்ற இன்னொரு ஹதீஸை அபூ ஹுரைரா(ரழி) அவர்களும் அறிவிக்கிறார்கள். அந்த ஹதீஸை அறிவிக்கின்ற அபூஹுரைரா(ரழி) அவர்களே தன் தாடியைக் குறைத்துள்ளனர் என்று இமாம் நவபீ(ரஹ்) அவர்கள் ஷரஹுல்முஹத்தப் என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள்.

நபி(ஸல்) அவர்கள் தனது தாடியை நீளத்திலும், அகலத்திலும் குறைப்பார்கள்என்று திர்மிதீயில் ஒரு ஹதீஸ் உள்ளது. அதன் அறிவிப்பாளர்களில் இடம் பெறுகின்ற உமர் இப்னு ஹாரூன் என்பவர் பலவீனமானவர் என்று பல ஹதீஸ்கலை வல்லுனர்கள் கருதுவதால். அது ஆதாரமாகாது, எனினும் உமர் இப்னு ஹாரூன் இன்றி உஸாமாஎன்பவர் மூலமும் இந்த ஹதீஸ் அறிவிக்கப்படுகின்றது என்று ஹாபிழ் தஹபீ அவர்கள் மீஸானில்குறிப்பிடுகிறார்கள். அந்த அடிப்படையில், நபி(ஸல்) அவர்கள் தாடியைக் குறைத்திருக்கிறார்கள் என்று அறிய முடிகின்றது. அதைப் பார்த்தே இப்னு உமர்(ரழி) அவர்களும் தம் தாடியைக் குறைத்திருப்பார்கள் என்று அனுமானிக்கலாம்.

ஸாலிம் இப்னு அப்துல்லா (ரழி) அவர்கள், இஹ்ராம் கட்டுவதற்கு முன், தனது தாடியில் சிறிது குறைத்துள்ளார்கள் என்ற செய்தியை இமாம் மாலிக்(ரஹ்) அவர்கள் தனது முஅத்தாவில் பதிவு செய்துள்ளனர்.

 

 

 

حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ قَالَ حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ عَنْ صَالِحٍ عَنْ ابْنِ شِهَابٍ قَالَ قَالَ أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ إِنَّ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ الْيَهُودَ وَالنَّصَارَى لَا يَصْبُغُونَ فَخَالِفُوهُمْ رواه البخاري

 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:- யூதர்களும், கிறிஸ்தவர்களும் (தாடிகளுக்கும் தலைமுடிகளுக்கும்) சாயமிட்டுக் கொள்வதில்லை. ஆகவே, நீங்கள் அவர்களுக்கு மாறு செய்யுங்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

( நூல் : புகாரி 3462 )

حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ عَنْ ابْنِ جُرَيْجٍ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ أُتِيَ بِأَبِي قُحَافَةَ يَوْمَ فَتْحِ مَكَّةَ وَرَأْسُهُ وَلِحْيَتُهُ كَالثَّغَامَةِ بَيَاضًا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَيِّرُوا هَذَا بِشَيْءٍ وَاجْتَنِبُوا السَّوَادَ رواه مسلم

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:- மக்கா வெற்றி நாளில் (அபூபக்ர் (ரலி) அவர்களின் தந்தை) அபூ குஹாஃபா, (நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம்) கொண்டு வரப்பட்டார். அவரது தலை முடியும், தாடியும் தும்பைப் பூவைப் போன்று வெள்ளை நிறத்தில் இருந்தன. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை ஏதேனும் (சாயம்) கொண்டு மாற்றுங்கள். கறுப்பு நிறத்தைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்என்று கூறினார்கள்.

ஆனால் கருப்பு நிறச் சாயம் பூசுவதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடைவிதித்துள்ளார்கள்.

தாடி வைப்பதின் மீதான  பிரியம்!

حَدَّثَنَا مُوسَى، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الوَاحِدِ، قَالَ: حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ عُمَارَةَ بْنِ عُمَيْرٍ، عَنْ أَبِي مَعْمَرٍ، قَالَ: قُلْنَا لِخَبَّابٍ أَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي الظُّهْرِ وَالعَصْرِ؟، قَالَ: نَعَمْ، قُلْنَا: بِمَ كُنْتُمْ تَعْرِفُونَ ذَاكَ؟ قَالَ: «بِاضْطِرَابِ لِحْيَتِهِ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் லுஹரிலும், அஸரிலும் ஓதுவார்களா?  என்று கப்பாப் (ரலி) அவர்களிடம் கேட்டோம். அதற்கவர்கள் ஆம் என்றார்கள்.  நீங்கள் எப்படி அறிந்து கொண்டீர்கள்?  என்று நாங்கள் கேட்டோம்.  நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தாடி அசைவதிலிருந்து இதை அறிந்து கொள்வோம்  என்று கப்பாப் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூமஃமர் நூல்: புகாரீ 746

وكانَ أبُو بكرٍ رَضِيَ اللهُ عنه كَثَّ اللحْيَةِ، وكَانَ عُثْمَانُ رَضِيَ اللهُ عَنْهُ رَقيْقَ اللَّحْيةِ، وَكانَ عليُّ عَرْيضَ اللحية، وَقَدْ مَلأتْ مَا بَيْنْ مَنْكِبَيْهِ رَضِيَ اللهُ عَنْهُ، وَقدْ قالَ صَلَّى اللهُ عَلْيهِ وسَلم: «عَلْيكُم بسُنَّتِي وَسُنَّةِ الخُلفَاءِ الرَّاشِدِينَ المَهْدِيَّينَ منْ بَعْدِيْ، عضُّوا عَليْهَا بالنَّواجِذِ، وَإيَّاكُمْ وَمُحْدثَاتُ الأمُورِ، فَإنَّ كُلَّ مُحْدَثةٍ بَدْعة».

அபூபக்ர் (ரலி) அவர்கள் அடர்த்தியான தாடி உடையவர்களாகவும், உஸ்மான் (ரலி) கெட்டியான தாடி உடையவர்களாகவும், அலீ (ரலி) அவர்கள் அகலமான தாடி உடையவர்களாகவும் அதாவது இரு புஜங்களையும் வந்து தொடும் அளவிற்கு இருந்தார்கள்.. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனக்குப் பின்னால் என்னுடைய நடைமுறையையும், நேர்வழியில் நிலைத்து நிற்கும் என் தோழர்களான கலீஃபாக்களின் நடைமுறையையும் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்!  காரியங்களில் நூதனமானதை செய்வதை விட்டும் உங்களை எச்சரிக்கை செய்கிறேன்! ஏனெனில், காரியங்களில் நூதனமானவைகள் பித்அத் ஆகும்".

 

كان قيس بن سعد رضي الله عنه رجلا أمرد لا لحية له، فقال قومه الأنصار: نعم السيد قيس لبطولته وشهامته ولكن لا لحية له، فو الله لو كانت اللحى تشترى بالدراهم لاشترينا له لحية!!

கைஸ் இப்னு ஸஅத் (ரலி) அவர்கள்  அறிவு தீட்சண்யமும் மதிநுட்பமும் நிறைந்த மனிதராகவும், தம்முடைய கோத்திரமான பனூதமீம் கோத்திரத்தின் பிரபலமான நபித்தோழராகவும் இருந்தார்கள். கோத்திரத்தின் தலைவராகவும் இருந்தார். ஆனால், தாடி முடி வளராதவராக இருந்தார்கள். அவர்கள் சமூகத்தின் மக்களில் சிலர் இப்படி சொல்வார்களாம். தாடி மட்டும் விலை கொடுத்து வாங்கி வைத்துக் கொள்ள (மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட)ஒரு பொருளாக இருக்குமேயானால் இருபதாயிரம் தீனார் அல்லது திர்ஹம் கொடுத்து வாங்கி கைஸ் இப்னு ஸஅத் (ரலி) அவர்களுக்கு கொடுத்து இருப்போம்" என்று.

وهذا الأحنف بن قيس كان رجلا عاقلا حليما وكان أمرد لا لحية له وكان سيد قومه فقال بعضهم: وددنا أنا اشترينا للأحنف لحية بعشرين ألف..!

அஹ்னஃப் இப்னு கைஸ் (ரஹ்) அவர்கள் சாந்தமான அறிவு ஜீவியான மனிதராக இருந்தார்கள். தங்களுடைய சமூகத்தை வழிநடத்தும் தலைவராகவும் பரிணமித்தார்கள். எனினும் அவர்களுக்கு தாடி முடி வளராதவராக இருந்தார்கள். அவர்கள் சமூகத்தின் மக்களில் சிலர் இப்படி சொல்வார்களாம். தாடி மட்டும் விலை கொடுத்து வாங்கி வைத்துக் கொள்ள (மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட)ஒரு பொருளாக இருக்குமேயானால் இருபதாயிரம் தீனார் அல்லது திர்ஹம் கொடுத்து வாங்கி இமாம் அஹ்னஃப் இப்னு கைஸ் (ரஹ்) அவர்களுக்கு கொடுத்து இருப்போம்" என்று.

தாடி என்பது…

தாடிமுடிகள் தான் ஆணை பெண்ணைவிட்டும் வேறுபடுத்திக் காட்டுகிறது. ஆண்களுடைய முகத்தின் அழகை மெருகூட்டுவதற்காகவே இறைவன் தாடியை உண்டாக்கியிருக்கிறான். தாடியை கேலி செய்பவர்கள் ஈஸா (அலை) அவர்களை கேலி செய்கிறார்கள். ஏனெனில் ஈஸா (அலை) அவர்களும் தாடி வைத்திருக்கிறார்கள்` என்று அமெரிக்க டாக்டர் சார்லஸ் ஹிவ்மர் கூறுகிறார். 

ஏழு தலைமுறை வரை தொடர்ந்து தாடி எடுக்கும் பழக்கம் இருந்தால் எட்டாவது தலைமுறையினர் இயற்கையாகவே தாடியில்லாதவர்களாக ஆகிவிடுவார்கள், என்று ஒரு ஐரோப்பிய அறிஞர் கூறுகிறார். (நூல்: நவ்ஜவான் தபாஹி கே தானே பர், நன்றி: http://nizamudden-yousufi.blogspot.com/2013/04/blog-post_8.html?m=1)   

தாடி தீவிரவாதத்தின் அடையாளமா?

கடந்த 21/02/2020 அன்று சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது.

அதாவது திடீரென தீவிரவாதிகள் நுழைந்துவிட்டால், நம்மை எப்படி காத்து கொள்வது குறித்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி அது.

போலீசார் இந்த ஒத்திகையை நடத்தினர். இந்த பாதுகாப்பு ஒத்திகையில், கமாண்டோ வீரர்கள், சென்னை காவல்துறையின் அதிரடிப்படை வீரர்கள் என பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த போலீசார் பங்கேற்றனர்.

ஆஸ்பத்திரியில் தீவிரவாதி ஒருவர் சிகிச்சை பெறுகிறார்.. அவரை கடத்தி செல்ல சக தீவிரவாதிகள் 4 பேர் அங்கு திபுதிபுவென உள்ளே ஆயுதங்களுடன் நுழைகின்றனர். நோயாளிகளை பணய கைதிகளாக பிடித்து வைத்து கொள்கிறார்கள். இந்த தகவலறிந்த கமாண்டோ படை வீரர்கள் உள்ளே புகுந்து தீவிரவாதிகளை சுட்டு ஆஸ்பத்திரியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகின்றனர். இதுதான் அந்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி.

அப்போது போலீசார் தீவிரவாதிகள் இஸ்லாமியர்கள்தான் என்று சித்தரிக்கும் வகையில், முஸ்லிம்களின் மத அடையாளமான தாடியை ஒட்டிக் கொண்டு விழிப்புணர்வு ஒத்திகை நடத்தினர். ( நன்றி: ஒன்இந்தியா.காம். 22/02/2020 )

முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் எனச் சாமானிய மனிதர்களின் மனதில் பதிய வைத்து முஸ்லிம் அல்லாதோர் முஸ்லிம்களை வெறுக்கவும், அவர்களை பொது இடங்களில் சந்தேகப் பார்வையுடன் பார்க்கவும் அமெரிக்க இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களால் கட்டமைக்கப்பட்டு அதி வேகமாக பரப்பப்பட்டு இன்று ஒரு மாநில காவல்துறையால் நடத்திக்காட்டப்பட்ட ஒத்திகையில். தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபடுவர்கள் அனைவரும் முஸ்லிம்களின் மத அடையாளமாக விளக்கும் தாடியை செயற்கையான முறையில் ஒட்டிக்கொண்டு பயங்கரவாதிகளாக அடையாளம் காட்டியிருக்கும் இடத்திற்கு வந்து நிற்கிறது. 

வெறுப்பு அரசியல்...

இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற விவாதத்தை பல தீவிர அறிவுஜீவிகள் அண்மை நாட்களில் தொடங்கியுள்ளனர். முஸ்லிம்கள் எப்படி உடுத்தலாம், எப்படி தோற்றமளிக்க வேண்டும், என்ன சாப்பிட வேண்டும் என எல்லா விசயத்திலும் கருத்து சொல்கின்றனர்.

மாட்டிறைச்சிக்கு தடை என்ற விவாதம் பழங்கதையாகிவிட்ட நிலையில், புதிதாக தாடி, புர்க்கா, ஹலால் என்று வேறுபல விசயங்களைப் பற்றி அறிவுரைகளை அள்ளி வழங்குகின்றனர்.

இப்போது இந்துக்களின் தலைமைக்கு வலு சேர்க்க விரும்பும் சில அமைப்புகள், தேசபக்திக்கான சான்றிதழ்களை வழங்குகின்றன. தாடி வைத்திருக்கும் மற்றும் தொழுகை நடத்தும் முஸ்லிம்கள், குல்லாய், அணிந்த இஸ்லாமியர்கள் தேசபக்தி சான்றிதழுக்கு தகுதியற்றவர்களாக அறிவிக்கும் பொறுப்பை, ஒரு ஜனநாயக நாட்டில் அவை தானாகவே எடுத்துக் கொண்டுள்ளன.

அப்துல் கலாமைப் போன்ற பகவத்கீதை படிக்கும், வீணை வாசிக்கும் இஸ்லாமியர்களே அவர்களுக்கு தேவை. ஆனால் தங்கள் மதத்தின் எந்த அடையாளத்தையும் அவர்கள் வெளிப்படுத்தக்கூடாது என்பதும் முக்கியம்.

ஹர்ஷ் மந்தர் இது தொடர்பாக எழுதியுள்ள கட்டுரை குறிப்பிடத்தக்கது. தனது கூட்டத்திற்கு வருமாறு முஸ்லிம்களுக்கு அழைப்பு விடுத்த ஒரு தலித் அரசியல்வாதி, ஆனால் ஒரு குறிப்பிட்ட விதமான குல்லாய் அல்லது புர்க்கா அணிந்து கொண்டு வரவேண்டாம் என்று குறிப்பிட்டுச் சொன்னார். ( நன்றி: பிபிசி தமிழ்.காம் 01/04/2018 )

தாடி வைப்பதில் ஏராளமான நன்மைகள்...

அடர்த்தியான தாடி ஒவ்வாமையை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் உடலுக்குள் சென்று தொண்டை தொடர்பான பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும். இத்தகவலை அடிசன் பி.டச்சேர் என்ற மருத்துவர் தனது ஆய்வுப் புத்தகத்தில் கூறியுள்ளார். முகத்தில் வளரும் முடிகள் நுரையீரலைப் பாதுகாக்க இயற்கையாக ஏற்படுத்தப்பட்டது என்றும் அவர் கூறியிருக்கிறார்.

தாடி வைப்பதில் ஏராளமான நன்மைகள் இருப்பதனால் தான் இஸ்லாம் தாடி வைப்பதை வலியுறுத்துகின்றது. விஞ்ஞான, மருத்துவ ஆய்வுகளும் இதை ஊர்ஜிதம்செய்கின்றன.

விஞ்ஞான ஆய்வுகளின் படி தாடி வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள். சமூக மனோ தத்துவவியலாளர் Dr.Freedman என்பவரால் நடத்தப்பட்ட ஆய்வுகளின் படி ஆண்கள் தாடி வைப்பதன் மூலம் பெண்கள் மத்தியில் கவர்ச்சியுள்ளவர்களாகவும், ஆண்மையுள்ளவர்களாகவும் இருப்பதுடன் பெண்கள், தாடி வைத்திருக்கும் ஆண்கள் மத்தியில் அவர்களது பெண்தன்மையை உணரக்கூடியவர்களாகவும் உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

1973ல் கலிபோனிய ஸ்டேட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மனோதத்துவவியலாளர்Robert J. Pelligrini என்பவர் தாடி வைத்த 22 - 25 வயதெல்லையுடைய எட்டு இளம்ஆண்களை தமது பரிசோதனைக்கு உட்படுத்தினார். அதாவது இந்த எட்டு ஆண்களையும் கீழுள்ள நான்கு நிலைகளில் புகைப்படம் எடுத்தார். 

1.முழு தாடியுடன்

2. முகத்தின் இரு பக்கங்களில் சிறு கோடு போன்ற சிறிய தாடியுடன்

3. மீசையுடன்

4. தாடி முழுவதும் மழித்து (தாடி இல்லாமல்)

ஒவ்வொருவரிலிருந்து பெறப்பட்ட நான்கு புகைப்படங்களாக மொத்தம் 32 புகைப்படங்களை மனோதத்துவவியல் படிக்கும் 64 ஆண் மாணவர்களுக்கும், 64 பெண்மாணவர்களுக்குமாகக் கொடுத்து புகைப்படங்களில் உள்ளவர்களின் உருவங்களை மதிப்பிடுமாறு கூறினார். ஒவ்வொரு புகைப்படமும் இரு ஆண், இரு பெண் வீதம்மதிப்பிடப்பட்டது.

Pelligrini இன் ஆய்வின் முடிவில் பெறப்பட்ட முடிவானது முகத்தில் அதிகளவில் முடியுள்ளவர்கள் தோற்றத்தில் ஆண்மையுள்ளவர்களாகவும் ,அழகிய தோற்ற முடையவர்களாகவும், கம்பீரமுடையவர்களாகவும்,தக்க வளர்ச்சியுள்ளவர்களாகவும், துணிவுள்ளவர்களாகவும், பெருந்தன்மையுடையவர்களாகவும்,ஆரோக்கியமானவர்களாகவும், கவர்ச்சியானவர்களாகவும் இருக்கின்றனர் என்பதாகும்.

தாடி வைப்பதனால் ஏற்படும் மருத்துவ நன்மைகள்...

மருத்துவ ஆய்வுகளின் படி தாடி வளர்ப்பதானது ஒரு மனிதனை தொண்டை, பல்ஈறு சம்பந்தமான நோய்களிலிருந்து தடுக்கின்றது. மேலும், தாடியானது முகத்தின்சருமத்திற்கு கெடுதி விளைவிக்கக்கூடிய இரசாயன வகைகளிலிருந்தும், மாசுள்ள வளிமண்டலத்திலிருந்தும் கெடுதி ஏற்படாமல் பாதுகாக்கும்.

மேலும் இதனால்முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் குறைந்து வயதான தோற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் குறைவாகக் காணப்படும். தாடி சருமத்தை மூடி காணப்படுவதால் sebaceous சுரப்பிகளின் மூலம் பக்டீரியா தொற்றுக்களிலிருந்து பாதுகாக்கப்படுவதால் முகப்பருக்கள், புள்ளிகள் ஏற்படுவது தடுக்கப்படும்.

தாடி முகத்தை குளிர்ச்சியாக வைத்திருப்பதுடன் நாடியையும் அபாயங்களிலிருந்து காப்பாற்றும். அத்துடன் தாடி வைப்பதனால் சுவாசக் கோளாறுகள் ஏற்படுவதும்தடுக்கப்படும்.

மாற்று மத அமெரிக்க மருத்துவர் Charles Holmes என்பவரின் கருத்து.

இந்த மருத்துவர் கூறுகின்றார் எனக்குப் புரியவில்லை ஏன் மக்கள் தாடி வைப்பதில் அதிருப்தி அடைகின்றனர். மக்கள் தலையில் முடி வளர்த்திருக்கும் போதுமுகத்தில் முடி வளர்ப்பதில் என்ன தவறு இருக்கின்றது? தலை முடி கொட்டும் போது வெட்கத்திற்குள்ளாகும் மனிதன் தாடியை முழுவதுமாக மழிப்பது என்னைஆச்சரியத்திற்குள்ளாக்குகின்றது. நீண்ட தாடியானது மனிதனின் கழுத்துப் பகுதியை குளிர்த் தாக்கங்களிலிருந்து பாதுகாக்கின்றது. நாம் அறிந்த வகையில் தாடி வளர்ப்பதானது மத அனுஷ்டானம் மட்டும்இன்றி மனிதனுக்கு நிறைய நன்மை பயக்கக்கூடியதாகவுள்ளது. முன்னைய காலத்து மருத்துவர்கள், தத்துவஞானிகள் கூட தாடி வளர்த்திருக்கிறார்கள். உதாரணமாகசார்ள்ஸ் டார்வின், லுயிஸ் பெஸ்டர், ஆபிரகாம் லிங்கன் இன்னும் பலர். ஆனால் மக்கள் சமீப காலமாகத் தான் மக்கள் தாடி வைப்பதிலிருந்து விலகி நடக்கின்றனர்”.

அநேக முஸ்லிம் சகோதரர்கள் தாடி வளர்ப்பதில் ஆர்வம் காட்டினாலும் அவர்களின் மனைவிமார்களுக்காக வேண்டி தாடியை மழிக்கும் நிலையைகாணக்கூடியதாகவுள்ளது. இன்று பெரும்பாலான இஸ்லாமியப் பெண்கள் தங்கள் கணவர்கள் தாடி வளர்ப்பதை இழிவாகக் கருதுகின்றனர். மீசையை ஒட்ட கத்தரித்துதாடியை வளர்ப்பது இறைத் தூதர் (ஸல்) அவர்களால் வலியுறுத்தப்பட்ட சிறந்த காரியம் என்பதை இப் பெண்கள் மறந்து விட்டனர். தாடி வைக்காத கணவர்களுக்கும் தாடியின் சிறப்பையும் அதனால் ஏற்படும் நன்மைகளையும் எடுத்துக்கூறி கணவர்களுக்கு தாடி வைக்க ஊக்குவிக்கக்கூடியவர்களாக பெண்கள் இருக்க வேண்டும்.

மேலும், ஊடகங்களும் தாடி வைத்தவர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்துக் காட்டுவதால் இன்று மேலைத்தேய நாடுகளில் வசிக்கும் ஆசிய நாட்டவர்கள் கூட தாடிவைப்பதில் பயந்த நிலையில் உள்ளனர். ( நன்றி: acmyc.com )

2 comments: