Thursday, 14 September 2023

அகிலம் அதிசயிக்கும் அற்புத நபி நமது முஹம்மது நபி {ஸல்} அவர்கள்!!

 

அகிலம் அதிசயிக்கும் அற்புத நபி நமது முஹம்மது நபி {ஸல்} அவர்கள்!!


பூமான் நபி {ஸல்} இப்புவியில் வந்துதித்த சங்கை மிகு மாதமான வசந்தம் சுழன்று வீசும் ரபீவுல் அவ்வல் மாதத்தை எதிர் நோக்கி இருக்கின்றோம்.

சிலர் மட்டுமே எல்லா நேரத்திலும் சிறந்தவர் (Greatest of All Time ) என்று அழைக்கப்படுகின்றார்கள்.

அப்படி அழைக்கப்படுபவர்களில் முதன்மையானவர்கள் நமது நபி முஹம்மது (ஸல்) அவர்கள் ஆவார்கள்.

வாழ்க்கையின் அனைத்து காலங்களிலும் அவர்கள் ஏற்றிருந்த அத்தனை பொறுப்புகளிலும் மிகச் சிறந்தவர்களாக வாழ்ந்து அகிலம் அதிசயிக்கும் அற்புதமான வாழ்க்கையை வாழ்ந்து, உலக மாந்தர்களுக்கெல்லாம் முன்மாதிரியான ஒரு வாழ்க்கை தடத்தை விட்டுச் சென்றுள்ளார்கள்.

நமது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் எது தான் அற்புதம் இல்லை. 

அவர்களின் பிறப்பு ஓர் அற்புதம் தானே! 

அவர்களின் வளர்ப்பு ஓர் அற்புதம் தானே!

அவர்களின் நெஞ்சம் பிளக்கப்பட்டு ஜம்ஜம் நீரால் இதயம் தூய்மை படுத்தப்பட்ட  அவர்களின் சிறு பிராயம்  அற்புதம் தானே!

ஹில்ஃபுல் ஃபுளூல் ஊடாக மனித நேய சேவைகள் செய்த அவர்களின் இளமைப் பருவம் ஒரு அற்புதம் தானே!

அரபுலகத்தின் அனைத்து தலைவர்களும் அதிகாலை நேரத்தில் காத்திருந்து ஹஜருல் அஸ்வத் கல்லை பதிக்க ஒரு துணியின் நாற்புறமும் சுற்றி நின்று பதித்த நிகழ்வும் ஒரு அற்புதம் தானே!

எல்லாவற்றிற்கும் மேலாக நபித்துவம் வழங்கப்படுவதற்கு முன் தாம் வாழ்ந்த 40 ஆண்டு கால வாழ்வில் எங்கேயாவது ஒரு குறையை, ஒரு கறையை காட்ட முடியுமா? என அரபுலக மக்களின் முன்பாக சவால் விட்டுக் கூறிய அந்த தருணம் அற்புதம் தானே!

நபித்துவத்துக்கு பிந்தைய வெறும் 23 ஆண்டுகளில், ஹஜ்ஜத்துல் விதாவின் போது "உலக முடிவு நாள் வரை வரவிருக்கும் அனைத்து மனிதர்களுக்குமான வழிகாட்டல் எல்லாவற்றையும்  உங்களுக்கு நான் அறிவித்து விட்டேனா?   எல்லாவற்றையும் உங்களுக்கு நான் சொல்லி விட்டேனா?" என்று 1,24000 ஸஹாபாக்களிடையே கேட்டு, ஒரே குரலில்"ஆம்!" அல்லாஹ்வின் தூதரே! என்ற பதிலை வாங்கி அல்லாஹ்வை சாட்சியாக்கிய அந்த மகத்தான நாளும், நிகழ்வும் ஓர் அற்புதம் தானே!

என்ன சொல்வேன் நான்? எப்படி சொல்வேன் நான்? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே ஒரு அற்புதம் தான்! 

என்றாலும் அவர்களின் வாழ்க்கையில் எல்லா நிலைகளிலும் அவர்களிடம் இடம் பெற்றிருந்த, படைத்த இறைவனை மகிழ்ச்சிப்படுத்திய, சமகாலத்தில் வாழ்ந்த அனைத்து மனிதர்களின் இதயத்திலும் சிம்மாசனம் அமைத்து அமர வைத்த ஒரு பண்பு குறித்து இந்த ஜும்ஆ உரையில் நாம் பார்க்க இருக்கின்றோம்.

பெருமானார் {ஸல்} அவர்களிடம் காணப்பட்ட அந்த உயரிய பண்பு பணிவு தான்.

ஆட்சியாளர், ஆன்மீகத்தலைவர் எனும் மகத்தான செல்வாக்கு மிக்க பொறுப்புக்களில் ஒரு சேர பயணித்த போதும் மாநபி {ஸல்} அவர்கள் பணிவுடன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள்.

அதிலும் குறிப்பாக பொதுமக்களுடனான பொது வாழ்க்கையிலும், மனைவி, மக்களுடனான குடும்ப வாழ்க்கையிலும் பெருமானார் {ஸல்} அவர்கள் மிகவும் யதார்த்தமாக, பணிவாக நடந்து கொண்டார்கள்.

மிடுக்காகவோ, செருக்காகவோ நடந்து கொள்ளாததோடு மட்டுமல்லாமல் பாசாங்கு இன்றி மக்களோடு மக்களாக, மக்களில் ஒருவராக, குடும்பத்தில் ஒரு உறுப்பினராக நடந்து கொண்டார்கள். இத்தனைக்கும் மாநபி {ஸல்} அவர்கள் ஆன்மீகத்தில் உச்சியில் இருந்தார்கள்.

حَدَّثَنِي ‏ ‏عَنْ ‏ ‏مَالِك ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزِّنَادِ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْرَجِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ إِيَّاكُمْ ‏ ‏وَالْوِصَالَ ‏ ‏إِيَّاكُمْ وَالْوِصَالَ قَالُوا فَإِنَّكَ تُوَاصِلُ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏ ‏إِنِّي لَسْتُ كَهَيْئَتِكُمْ إِنِّي أَبِيتُ يُطْعِمُنِي رَبِّي وَيَسْقِينِي

நபி (ஸல்) அவர்கள் தொடர் நோன்பைத் தடுத்தார்கள். மக்கள், “நீங்கள் தொடர்நோன்பு நோற்கிறீர்களே?’ என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் உங்களைப் போன்றவன் அல்லன்; நிச்சயமாக நான் உண்ணவும் பருகவும் வழங்கப்படுகிறேன்என்றார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) (நூல்: புகாரி 1962, 1922 )

حَدَّثَنَا ‏ ‏أَحْمَدُ ابْنُ أَبِي رَجَاءٍ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏زَائِدَةُ بْنُ قُدَامَةَ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏حُمَيْدٌ الطَّوِيلُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَنَسُ بْنُ مَالِكٍ ‏ ‏قَالَ ‏ ‏أُقِيمَتْ الصَّلَاةُ فَأَقْبَلَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِوَجْهِهِ فَقَالَ ‏ ‏أَقِيمُوا صُفُوفَكُمْ ‏ ‏وَتَرَاصُّوا ‏ ‏فَإِنِّي أَرَاكُمْ مِنْ وَرَاءِ ظَهْرِي

ஒரு நாள்) தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை நோக்கித் தம் முகத்தைத் திருப்பி, “வரிசைகளை நேராக்குங்கள்! நெருக்கமாக நில்லுங்கள்! ஏனெனில் என் முதுகுக்குப் பின்புறமாகவும் உங்களை நான் காண்கின்றேன்என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) ( நூல்: புகாரி 719 )

நான் உங்களைப் போன்றவன் அல்லன்” என்று சொல்கின்ற ஆன்மீகத்தின் உச்ச நிலையில் இருந்த போதும் மாநபி {ஸல்} அவர்கள் மிகவும் பணிவுடன் வாழ்ந்தார்கள்.

أُتِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِرَجُلٍ تَرْعَدُ فَرَائِصُهُ قَالَ: فَقَالَ لَهُ: «هَوِّنْ عَلَيْكَ فَإِنَّمَا أَنَا ابْنُ امْرَأَةٍ مِنْ قُرَيْشٍ كَانَتْ تَأْكُلُ الْقَدِيدَ فِي هَذِهِ الْبَطْحَاءِ»

 

ஒரு மனிதர் முதன் முதலாக நபி (ஸல்) அவர்களைச் சந்திக்க வந்தார். உடல் நடுங்கிக் கொண்டிருந்த நிலையில் வந்தார். சாதாரணமாக இருப்பீராக! உலர்ந்த இறைச்சியைப் சாப்பிட்டு வந்த குறைஷி குலத்துப் பெண்ணுடைய மகன் தான் நான்’’ என்று அவரிடம் கூறி சகஜ நிலைக்குக் கொண்டு வந்தார்கள். அறிவிப்பாளர்: ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி), ( நூல்: முஸ்தத்ரக் அல் – ஹாக்கிம் ) 

மக்களோடு மக்களாக… மக்களில் ஒருவராக…

بَيْنَمَا نَحْنُ جُلُوسٌ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَسْجِدِ دَخَلَ رَجُلٌ عَلَى جَمَلٍ ، فَأَنَاخَهُ فِي الْمَسْجِدِ ، ثُمَّ عَقَلَهُ ، ثُمَّ قَالَ لَهُمْ: أَيُّكُمْ مُحَمَّدٌ؟ وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُتَّكِئٌ بَيْنَ ظَهْرَانَيْهِمْ . فَقُلْنَا: هَذَا الرَّجُلُ الْأَبْيَضُ الْمُتَّكِئُ . فَقَالَ لَهُ الرَّجُلُ: ابْنَ عَبْدِ الْمُطَّلِبِ . فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: قَدْ أَجَبْتُكَ. فَقَالَ الرَّجُلُ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنِّي سَائِلُكَ فَمُشَدِّدٌ عَلَيْكَ فِي الْمَسْأَلَةِ ، فَلَا تَجِدْ عَلَيَّ فِي نَفْسِكَ. فَقَالَ: سَلْ عَمَّا بَدَا لَكَ فَقَالَ: أَسْأَلُكَ بِرَبِّكَ وَرَبِّ مَنْ قَبْلَكَ ، آللهُ أَرْسَلَكَ إِلَى النَّاسِ كُلِّهِمْ؟ فَقَالَ: اللَّهُمَّ نَعَمْ. قَالَ: أَنْشُدُكَ بِاللهِ ، آللهُ أَمَرَكَ أَنْ نُصَلِّيَ الصَّلَوَاتِ الْخَمْسَ فِي الْيَوْمِ وَاللَّيْلَةِ؟ قَالَ: اللَّهُمَّ نَعَمْ. قَالَ: أَنْشُدُكَ بِاللهِ ، آللهُ أَمَرَكَ أَنْ نَصُومَ هَذَا الشَّهْرَ مِنَ السَّنَةِ؟ قَالَ: اللَّهُمَّ نَعَمْ. قَالَ: أَنْشُدُكَ بِاللهِ ، آللهُ أَمَرَكَ أَنْ تَأْخُذَ هَذِهِ الصَّدَقَةَ مِنْ أَغْنِيَائِنَا فَتَقْسِمَهَا عَلَى فُقَرَائِنَا؟ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: اللَّهُمَّ نَعَمْ. فَقَالَ الرَّجُلُ: آمَنْتُ بِمَا جِئْتَ بِهِ ، وَأَنَا رَسُولُ مَنْ وَرَائِي مِنْ قَوْمِي ، وَأَنَا ضِمَامُ بْنُ ثَعْلَبَةَ أَخُو بَنِي سَعْدِ بْنِ بَكْرٍ.

நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தபோது ஒட்டகத்தின் மீது அமர்ந்தவராக ஒருவர் பள்ளிக்குள் நுழைந்தார். பள்ளியினுள்ளே ஒட்டகத்தைப் படுக்க வைத்துப் பின்னர் அதனைக் கட்டினார். பின்பு அங்கு அமர்ந்திருந்தர்களிடம் உங்களில் முஹம்மத் யார்?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்களோ மக்களிடையே சாய்ந்து அமர்ந்திருந்தார்கள்.

இதோ சாய்ந்து அமர்ந்திருக்கும் இந்த வெண்மை மனிதர்தாம் (முஹம்மத் நபி)என்று நாங்கள் கூறினோம். உடனே அம்மனிதர் நபி (ஸல்) அவர்களை அப்துல் முத்தலிபின் பேரரே!என்றழைத்தார். அதற்கு நபியவர்கள் என்ன விஷயம்?’ என்று கேட்டார்கள். அப்போது அம்மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் நான் உங்களிடம் சில கேள்விகள் கேட்கப் போகிறேன். சில கடினமான கேள்விகளையும் கேட்கப் போகிறேன்.அதற்காக நீங்கள் என் பேரில் வருத்தப்படக் கூடாதுஎன்றார்.

அதற்கு நபி {ஸல்} அவர்கள் நீர் விரும்பியதைக் கேளும்என்றார்கள். உடனே அம்மனிதர் உம்முடையதும் உமக்கு முன்னிருந்தோரதுமான இரட்சகன் மீது ஆணையாகக் கேட்கிறேன்; அல்லாஹ்தான் உம்மை மனித இனம் முழுமைக்கும் தூதராக அனுப்பினானா?’ என்றார். அதற்கு அவர்கள் அல்லாஹ் சாட்சியாக ஆம்!என்றார்கள்.

 

அடுத்து அவர் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு உம்மிடம் கேட்கிறேன்; அல்லாஹ்தான் இரவிலும், பகலிலுமாக நாங்கள் ஐந்து நேரத் தொழுகையைத் தொழுது வரவேண்டுமென்று உமக்குக் கட்டளையிட்டிருக்கிறானா?’ என்றார். அதற்கவர்கள் ஆம்! அல்லாஹ் சாட்சியாகஎன்றார்கள்.

அடுத்து அவர் இறைவன் மீது ஆணையாக உம்மிடம் கேட்கிறேன்; அல்லாஹ் தான் ஒவ்வோர் ஆண்டிலும் குறிப்பிட்ட இந்த மாதத்தில் நாங்கள் நோன்பு நோற்க வேண்டும் என்று உமக்குக் கட்டளையிட்டிருக்கிறானா?’ என்றார். அதற்கவர்கள் ஆம்! அல்லாஹ் சாட்சியாகஎன்றார்கள்.

அடுத்து அவர், ‘இறைவன் மீது ஆணையாக உம்மிடம் கேட்கிறேன்; அல்லாஹ்தான் எங்களில் வசதி படைத்தவர்களிடமிருந்து இந்த (ஸகாத் என்னும்) தர்மத்தைப் பெற்று எங்களில் வறியவர்களுக்கு நீர் அதனை வினியோகிக்க வேண்டுமென்று உமக்குக் கட்டளையிட்டிருக்கிறானா?’ என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆம் (இறைவன் மீது சாட்சியாக)என்றார்கள்.

உடனே அம்மனிதர் நீங்கள் (இறைவனிடமிருந்து) கொண்டு வந்தவற்றை நான் நம்பி ஏற்கிறேன்என்று கூறிவிட்டு நான், என்னுடைய கூட்டத்தார்களில் இங்கு வராமல் இருப்பவர்களின் தூதுவனாவேன். நான்தான் ளிமாம் இப்னு ஸஃலபா, அதாவது பனூ ஸஃது இப்னு பக்ர் சகோதரன்என்றும் கூறினார். அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி), ( நூல்: புகாரி )

 عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ

قَالَ الْعَبَّاسُ، قُلْتُ: لَا أَدْرِي مَا بَقَاءُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِينَا، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ لَوِ اتَّخَذْتَ عَرِيشًا يُظِلُّكَ، قَالَ: «لَا أَزَالُ بَيْنَ أَظْهُرِهِمْ يَطَؤُونَ عَقِبِي، وَيُنَازِعُونِي رِدَائِي حَتَّى يَكُونَ اللَّهُ يُرِيحُنِي مِنْهُمْ»

நபி (ஸல்) அவர்கள் நம்மோடு இன்னும் எவ்வளவு காலம் இருப்பார்கள் என்பதை நாம் அறிய மாட்டோம். எனவே அவர்கள் நம்மால் சிரமப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்’’ என்று அப்பாஸ் (ரலி) அவர்கள் மக்களிடம் கூறினார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு நிழல் தரும் கூடாரத்தைத் தனியாக நாங்கள் அமைத்துத் தருகிறோமே’’ என்று கேட்டார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் மக்கள் என் மேலாடையைப் பிடித்து இழுத்த நிலையிலும், எனது பின்னங்காலை மிதித்த நிலையிலும் அவர்களுடன் கலந்து வாழவே நான் விரும்புகிறேன். அவர்களிடமிருந்து அல்லாஹ் என்னைப் பிரிக்கும் வரை (மரணிக்கும் வரை) இப்படித்தான் இருப்பேன்’’ எனக் கூறினார்கள். அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), ( நூல்: அல் - பஸ்ஸார் )

முன்பின் அறியாதவர்களோடு…

حَدَّثَنِي ‏ ‏إِسْحَاقُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏قُرَّةُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي جَمْرَةَ ‏ ‏قُلْتُ ‏ ‏لِابْنِ عَبَّاسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏إِنَّ لِي ‏ ‏جَرَّةً ‏ ‏يُنْتَبَذُ لِي نَبِيذٌ فَأَشْرَبُهُ حُلْوًا فِي جَرٍّ إِنْ أَكْثَرْتُ مِنْهُ فَجَالَسْتُ الْقَوْمَ فَأَطَلْتُ الْجُلُوسَ خَشِيتُ أَنْ ‏ ‏أَفْتَضِحَ ‏ ‏فَقَالَ قَدِمَ وَفْدُ ‏ ‏عَبْدِ الْقَيْسِ ‏ ‏عَلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ مَرْحَبًا بِالْقَوْمِ غَيْرَ خَزَايَا وَلَا النَّدَامَى فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّ بَيْنَنَا وَبَيْنَكَ الْمُشْرِكِينَ مِنْ ‏ ‏مُضَرَ ‏ ‏وَإِنَّا لَا نَصِلُ إِلَيْكَ إِلَّا فِي أَشْهُرِ الْحُرُمِ حَدِّثْنَا بِجُمَلٍ مِنْ الْأَمْرِ إِنْ عَمِلْنَا بِهِ دَخَلْنَا الْجَنَّةَ وَنَدْعُو بِهِ مَنْ وَرَاءَنَا قَالَ ‏ ‏آمُرُكُمْ بِأَرْبَعٍ وَأَنْهَاكُمْ عَنْ أَرْبَعٍ الْإِيمَانِ بِاللَّهِ هَلْ تَدْرُونَ مَا الْإِيمَانُ بِاللَّهِ شَهَادَةُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَإِقَامُ الصَّلَاةِ وَإِيتَاءُ الزَّكَاةِ وَصَوْمُ رَمَضَانَ وَأَنْ تُعْطُوا مِنْ الْمَغَانِمِ الْخُمُسَ وَأَنْهَاكُمْ عَنْ أَرْبَعٍ مَا انْتُبِذَ فِي ‏ ‏الدُّبَّاءِ ‏ ‏وَالنَّقِيرِ ‏ ‏وَالْحَنْتَمِ ‏ ‏وَالْمُزَفَّتِ 

அப்துல்கைஸ் தூதுக் குழுவினர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தபோது இம்மக்கள் யார்?’ அல்லது இத்தூதுக் குழுவினர் யார்?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு மக்கள், “(இவர்கள்) ரபீஆ குடும்பத்தினர்என்றார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் இழிநிலை காணாத, வருத்தத்திற்குள்ளாகாத சமுதாயமே வருக! உங்கள் வரவு நலவரவாகுக!என்று (வாழ்த்துக்) கூறினார்கள்.

அத்தூதுக் குழுவினர் நாங்கள் வெகு தொலைவிலிருந்து உங்களிடம் வந்துள்ளோம். எங்களுக்கும் உங்களுக்குமிடையே (எதிரிகளான) முளர் குலத்து இறை மறுப்பாளர்களின் இந்தக் குடும்பத்தினர் (நாம் சந்திக்க முடியாதபடி தடையாக) உள்ளனர். எனவே, (போர்நிறுத்தம் செய்யப்படும்) புனித மாதங்கள் தவிர மற்ற மாதங் களில் எங்களால் தங்களிடம் வர முடிய வில்லை. எனவே, தெளிவான ஆணையொன் றைப் பிறப்பியுங்கள்! அதை நாங்கள் எங்களுக்குப் பின்னணியில் (இங்கே வராமல்) இருப்பவர்களுக்குத் தெரிவிப்போம். அ(தைச் செயல்படுத்துவ)தன் மூலம் நாங்களும் சொர்க்கம் செல்வோம்என்று கேட்டுக் கொண்டார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் நான்கை செயல்படுத்துமாறு கட்டளையிட்டார்கள்; நான்கை (கைவிடுமாறு) அவர்களுக்குத் தடைவிதித்தார்கள்.

வல்லோன் அல்லாஹ் ஒருவனையே நம்புமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டுவிட்டு, “அல்லாஹ் ஒருவனையே நம்புதல் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள் அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிந்தவர்கள்என்று கூறினர்.

நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதி கூறுவது; தொழுகையை (உரியமுறையில்) நிலை நிறுத்துவது; ஸகாத் கொடுப்பது; ரமளான் மாதம் நோன்பு நோற்பது. மேலும் போரில் கிடைக்கும் பொருட்களிலிருந்து ஐந்தில் ஒரு பங்கை (அல்லாஹ்விற்காக) நீங்கள் வழங்கிட வேண்டும்என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), ( நூல்: புகாரி )

தோழர்களோடு…

مَا رُئِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْكُلُ مُتَّكِئًا قَطُّ، وَلَا يَطَأُ عَقِبَهُ رَجُلَانِ»

நபி (ஸல்) அவர்கள் சாய்ந்து கொண்டு சாப்பிட்டதையோ, அவர்களுக்குப் பின்னால் இரண்டு பேர் அடியொற்றி முன் பின்னாக நடப்பதையோ எவரும் பார்த்ததில்லை. அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), ( நூல்: அஹ்மத் )

عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، قَالَ

قُلْتُ لِجَابِرِ بْنِ سَمُرَةَ: أَكُنْتَ تُجَالِسُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: نَعَمْ كَثِيرًا، «كَانَ لَا يَقُومُ مِنْ مُصَلَّاهُ الَّذِي يُصَلِّي فِيهِ الصُّبْحَ، أَوِ الْغَدَاةَ، حَتَّى تَطْلُعَ الشَّمْسُ، فَإِذَا طَلَعَتِ الشَّمْسُ قَامَ، وَكَانُوا يَتَحَدَّثُونَ فَيَأْخُذُونَ فِي أَمْرِ الْجَاهِلِيَّةِ، فَيَضْحَكُونَ وَيَتَبَسَّمُ»

நீங்கள் நபி (ஸல்) அவர்களின் அவையில் அமர்ந்ததுண்டா?’’ என்று ஜாபிர் பின் ஸமுரா (ரலி) என்ற நபித்தோழரிடம் கேட்டேன். அதற்கவர் ஆம்’’ என்றார். மேலும் தொடர்ந்து வைகறைத் தொழுகை முடிந்ததும் சூரியன் உதிக்கும் வரை நபி (ஸல்) அவர்கள் தொழுத இடத்திலேயே அமர்ந்திருப்பார்கள். சூரியன் உதித்த பின்னர் எழுவது தான் அவர்களின் வழக்கம். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு அமர்ந்திருக்கும் போது நபித்தோழர்களும் அமர்ந்திருப்பார்கள். அப்போது அறியாமைக் காலத்தில் (இஸ்லாத்தை ஏற்காத காலத்தில்) தமது நடவடிக்கைகள் குறித்து நபித்தோழர்கள் பேசுவார்கள். அதை நினைத்துச் சிரிப்பார்கள். இதைப் பார்க்கும் நபி (ஸல்) அவர்கள் புன்னகைப்பார்கள்’’ என்று கூறினார். அறிவிப்பாளர்: ஸிமாக் பின் ஹர்பு (ரலி), ( நூல்: முஸ்லிம் ) 

عَبْدُ اللَّهِ بْنُ بَكْرٍ ، نا حُمَيْدٌ ، عَنْ أَنَسٍ ، قَالَ : كَانَتْ نَاقَةٌ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تُسَمَّى الْعَضْبَاءُ وَكَانَتْ لا تُسْبَقُ فَجَاءَ أَعْرَابِيٌّ عَلَى قُعُودٍ فَسَبَقَهَا فَشَقَّ ذَلِكَ عَلَى الْمُسْلِمِينَ فَلَمَّا رَأَى مَا فِي وُجُوهِهِمْ قَالُوا : يَا رَسُولَ اللَّهِ سُبِقَتِ الْعَضْبَاءُ فَقَالَ

 " إِنَّ حَقًّا عَلَى اللَّهِ أَنْ لا يَرْفَعَ مِنَ الدُّنْيَا شَيْئًا إِلا وَضَعَهُ "

அள்பாஃ இது அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் ஒட்டகைகளில் ஒன்று. நபி {ஸல்} அவர்கள் தங்களது இருதிப் பேருரையை இதன் மீது அமர்ந்து தான் ஆற்றினார்கள் என்று ஒரு தகவலும் உண்டு.

அன்றைய அரபுலகத்தின் அனைத்துப் பந்தயங்களிலும் பங்கு கொண்டு முதல் இடத்தை தட்டிச் செல்லும் செல்வாக்கும் துடிப்பும் நிறைந்த ஒட்டகம் அது.

ஒரு சந்தர்ப்பத்தில்  கிராமவாசி ஒருவரின் ஒட்டகையிடம் தோற்றுப் போய் இரண்டாமிடத்திற்கு வந்தது அள்பாஃ, நபித்தோழர்களால் இதைத் தாங்கிக் கொள்ள இயலவில்லை. உணர்ச்சிவசப்பட்டார்கள் நபித்தோழர்கள்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் நபித்தோழர்களின் முகங்களில் காணப்பட்ட கவலை ரேகைகளை அறிந்து கொண்டு, என்ன? எல்லோரும் முகம் வாடியவர்களாக இருக்கின்றீர்கள்? என்று கேட்டார்கள்.

 

அதற்கு நபித்தோழர்கள், அல்லாஹ்வின் தூதரே! ஒரு கிராமவாசியின் ஒட்டகம் தங்களது அள்பாஃவை முந்திவிட்டது. அது தான் தங்களின் முக வாட்டத்திற்கு காரணம் என்று உணர்ச்சி மேலிடக் கூறினார்கள்.

அப்போது, அண்ணல் நபி {ஸல்} அவர்கள் தோழர்களை நோக்கி உலகில் தோற்றுப் போகிற எந்த ஒன்றையும் அல்லாஹ் உயரிய வெற்றிக்கு சொந்தமானதாக ஆக்காமல் இருப்பதில்லை. இது அல்லாஹ் தன் மீது விதியாக்கிக் கொண்ட ஒன்றாகும். இப்போது அந்த கிராமவாசியின் ஒட்டகம் வெற்றி பெரும் முறையாகும். என்று பதில் கூறினார்கள். ( நூல்: அபூதாவூத் )

இருக்கும் நிலையை பொருந்திக் கொள்ளும் போது..

عن أبي هريرة رضي الله عنه قال: دخلت على النبي صلى الله عليه وسلم وهو يصلي جالسا, فقلت: يا رسول الله! اراك تصلي جالسا فما أصابك؟ فقال النبي صلى الله عليه وسلم: الجوع يا أبا هريرة! فبكيت, فقال: لا تبك يا أبا هريرة, فانّ شدة الحساب يوم القيامة لا تصيب الجائع اذا احتسب في دار الدنيا.

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒரு நாள் நான்  அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் வீட்டிற்கு அண்ணலாரைக் காண்பதற்காகச் 

சென்றேன். அப்போது, அண்ணலார் வீட்டில் உட்கார்ந்து தொழுது கொண்டிருந்தார்கள்.

நான் நபி {ஸல்} அவர்கள் தொழுது முடிக்கும் வரை காத்திருந்து விட்டு,  தொழுது முடித்தபின் அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் உட்கார்ந்து தொழ நான்  கண்டேனே!  உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது?” என வினவினேன்.

அப்போது, நபி {ஸல்} அவர்கள் அபூஹுரைராவே! பசி தான் காரணம் என்றார்கள். அதைக் கேட்டதும் நான் அழுது விட்டேன். அப்போது, அல்லாஹ்வின் தூதர் {ஸல்}   அவர்கள் என்னை நோக்கி அபூஹுரைராவே! இப்போது நான் என்ன சொல்லிவிட்டேன்!  என்று அழுகின்றீர்கள்?” நாளை மறுமை நாளில் கேள்வி கணக்கின் கஷ்டத்தை உணரும் பட்சத்தில் உலகில் பசியோடு இருக்கும் நிலை ஒன்றும் பெரிதாகத் தெரியாது என்று  பதில் கூறினார்கள்.                                              ( நூல்: அபூதாவூத் )

سَأَلْتُ سَهْلَ بْنَ سَعْدٍ، فَقُلْتُ:

هَلْ أَكَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّقِيَّ؟ فَقَالَ سَهْلٌ: «مَا رَأَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّقِيَّ، مِنْ حِينَ ابْتَعَثَهُ اللَّهُ حَتَّى قَبَضَهُ اللَّهُ

‘‘தோல் நீக்கப்பட்ட கோதுமையில் தயாரான ரொட்டியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாப்பிட்டதுண்டா?’’ என்று நபிகள் நாயகத்தின் பணியாளர்களில் ஒருவரான ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர் ‘‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைவன் தனது தூதராக அனுப்பியது முதல் அவர்கள் மரணிக்கும் வரை சலிக்கப்பட்ட மாவில் தயாரான ரொட்டியைச் சாப்பிட்டதே இல்லை’’ என்றார். அறிவிப்பவர்: அபூஹாஸிம், ( நூல்: புகாரி ) 

حَدَّثَنَا قَتَادَةُ، قَالَ

كُنَّا نَأْتِي أَنَسَ بْنَ مَالِكٍ، وَخَبَّازُهُ قَائِمٌ، وَقَالَ: «كُلُوا، فَمَا أَعْلَمُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى رَغِيفًا مُرَقَّقًا حَتَّى لَحِقَ بِاللَّهِ، وَلاَ رَأَى شَاةً سَمِيطًا بِعَيْنِهِ قَطُّ

நபி (ஸல்) அவர்களிடம் பத்தாண்டுகள் பணியாளராக இருந்த அனஸ் (ரலி) இடம் நாங்கள் சென்றோம். ரொட்டி தயாரிப்பவர் ரொட்டி தயாரித்துக் கொண்டிருந்தார். எங்களை நோக்கி சாப்பிடுங்கள்என்று அனஸ் (ரலி) கூறி விட்டு ‘‘நபி (ஸல்) அவர்கள் மிருதுவான ரொட்டியைச் சாப்பிட்டதில்லை. தமது கண்களால் எண்ணெயில் பொறிக்கப்பட்ட ஆட்டைப் பார்த்ததில்லை’’ எனக் கூறினார். அறிவிப்பவர்: கதாதா (ரலி), ( நூல்: புகாரி )

وَإِنَّهُ لَعَلَى حَصِيرٍ مَا بَيْنَهُ وَبَيْنَهُ شَيْءٌ وَتَحْتَ رَأْسِهِ وِسَادَةٌ مِنْ أَدَمٍ حَشْوُهَا لِيفٌ وَإِنَّ عِنْدَ رِجْلَيْهِ قَرَظًا مَصْبُوبًا وَعِنْدَ رَأْسِهِ أَهَبٌ مُعَلَّقَةٌ فَرَأَيْتُ أَثَرَ الْحَصِيرِ فِي جَنْبِهِ فَبَكَيْتُ فَقَالَ مَا يُبْكِيكَ ، فَقُلْتُ : يَا رَسُولَ اللهِ إِنَّ كِسْرَى وَقَيْصَرَ فِيمَا هُمَا فِيهِ وَأَنْتَ رَسُولُ اللهِ فَقَالَ أَمَا تَرْضَى أَنْ تَكُونَ لَهُمُ الدُّنْيَا وَلَنَا الآخِرَة

நபியவர்கள் ஒரு ஈச்ச மரப் பாயின் மீது படுத்திருந்தார்கள். அந்த பாய்க்கும் அவர்களுக்குமிடையே (விரிப்பு) எதுவும் இல்லாமல் இருந்தது. அவர்களின் தலைக்குக் கீழ் ஈச்ச நார் நிரப்பப்பட்ட தோல் தலையணை இருந்தது.

அவர்களின் கால்களுக் கீழ் கருவேலை இலைகள் குவிக்கப்பட்டிருந்தன. அவர்களின் தலைமாட்டில் பதனிடப்படாத தோல் தொங்க விடப்பட்டிருந்தது. அப்போது அவர்களின் விலாப்புறத்தில் ஈச்சம்பாயின் அச்சு பதிந்திருப்பதைக் கண்டு அழுதேன். நபியவர்கள், ‘ஏன் அழுகிறீர்!என்று கேட்டார்கள்.

அதற்கு நான், ‘அல்லாஹ்வின் தூதரே! கிஸ்ரா, கைஸர் (பாரசீக மன்னர்கள்) சுக போகத்தில் திளைக்கிறார்கள். நீங்கள் அல்லாஹ்வின் தூதர் அல்லவா? நீங்கள் இந்த நிலையில் இருப்பதா?’ என்று கேட்டேன். அப்போது நபியவர்கள், ‘ அவர்களுக்கு இந்த உலகமும் நமக்கு மறுமையும் இருப்பதை நீ விரும்பவில்லையா?’ என்றார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), ( நூல்: புகாரி )

أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ لَهُ حَصِيرٌ يَبْسُطُهُ بِالنَّهَارِ، وَيَحْتَجِرُهُ بِاللَّيْلِ، فَثَابَ إِلَيْهِ نَاسٌ، فَصَلَّوْا وَرَاءَهُ.

நபி(ஸல்) அவர்களிடம் பாய் ஒன்று இருந்தது. பகலில் அதை விரித்துக் கொள்வார்கள். இரவில் அதையே அறை போன்று அமைத்துக் கொண்டு தொழுவார்கள். மக்கள் அவர்களருகே விரைந்து வந்து அவர்களைப் பின்பற்றித் தொழுவார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), ( நூல்: புகாரி )

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَرَفَةَ حَدَّثَنَا عَبَّادُ بْنُ عَبَّادٍ الْمُهَلَّبِيُّ، عَنْ مُجَالِدِ بْنِ سَعِيدٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: دَخَلَتْ عَلَيَّ امْرَأَةٌ مِنَ الْأَنْصَارِ، فَرَأَتْ فِرَاشَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَبَاءَةً ثَنِيَّةً، فَانْطَلَقَتْ، فَبَعَثَتْ إِلَيَّ بِفِرَاشٍ حَشْوُهُ الصُّوفُ، فَدَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «مَا هَذَا يَا عَائِشَةُ؟» ، قَالَتْ

 فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ فُلَانَةُ الْأَنْصَارِيَّةُ دَخَلَتْ عَلَيَّ، فَرَأَتْ فِرَاشَكَ، فَذَهَبَتْ، فَبَعَثَتْ إِلَيَّ بِهَذَا، فَقَالَ: «رُدِّيهِ يَا عَائِشَةُ» ، قَالَتْ: فَلَمْ أَرُدَّهُ، وَأَعْجَبَنِي أَنْ يَكُونَ فِي بَيْتِي، حَتَّى قَالَ ذَلِكَ ثَلَاثَ مَرَّاتٍ، قَالَتْ: فَقَالَ: «رُدِّيهِ يَا عَائِشَةُ فَوَاللَّهِ لَوْ

شِئْتُ لَأَجْرَى اللَّهُ عَزَّ وَجَلَّ مَعِيَ جِبَالَ الذَّهَبِ وَالْفِضَّةِ

ஒரு நாள் வெளியில் சென்றிருந்த மாநபி {ஸல்} அவர்கள் வீட்டிற்குள்  நுழைகின்றார்கள். நபிகளாரின் புருவம் வியப்பால் உயர்கிறது. ஆம்! தாம் அமரும்  இடத்தைப் பார்க்கின்றார்கள். அங்கே அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய அழகிய புத்தம்புதிய விரிப்பொன்று விரிக்கப்பட்டிருப்பதைக் காண்கிறார்கள்.

இப்போது, நபி {ஸல்} அவர்கள் வீட்டின் இன்னொரு புறத்தில் அமர்ந்திருந்த தமது  அருமைத்துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்களை நோக்கி ஆயிஷாவே! நான் காணும் இந்த விரிப்பு என்ன? எங்கிருந்து வந்தது? யார் தந்தது?” என அன்பொழுக வினவினார்கள்.

அதற்கு, அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அன்ஸாரிப் பெண்மணி ஒருவர் வந்தார். என்னோடு அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது உங்களுடைய விரிப்பைப் பார்த்து இது யாருடையது? எனக் கேட்டார். நான் அல்லாஹ்வின் தூதருடையது என்றேன்

அதற்கு, அந்தப் பெண்மணி இந்த இத்துப்போன, கிழிசல் உடைய பழைய  விரிப்பிலேயா அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அமர்வார்கள்? உறங்குவார்கள்?”  என்று கேட்டு விட்டு நேராக வீட்டிற்குச் சென்றார். பின்னர், நீங்கள் காணும் இந்த அழகிய விரிப்பைக் கொடுத்தனுப்பினார் என்று பதில் கூறினார்கள்.

இது கேட்டதும் அண்ணலாரின் முகம் மாறிப்போனது. ஆயிஷாவே!  இதை  அந்த அன்ஸாரிப் பெண்மணியிடம் சென்று திருப்பிக் கொடுத்து விட்டு வாருங்கள்! என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

அதற்கு, ஆயிஷா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! விரிப்பு பார்ப்பதற்கு மிக அழகாகஇருக்கின்றதே! அவசியம் திருப்பிக் கொடுக்க வேண்டுமா?” என்று கேட்டார்கள்.

அப்போது, அண்ணலார் ஆயிஷாவே! இதை அந்த அன்ஸாரிப் பெண்மணியிடம் சென்று  திருப்பிக் கொடுத்து விட்டு வாருங்கள்! என்று நபி {ஸல்} அவர்கள் மூன்று முறை  கூறினார்கள்.

பின்னர், ஆயிஷா (ரலி) அவர்களை நோக்கி ஆயிஷாவே! நான் விரும்பி கேட்டால் இதோ இருக்கிற இந்த மலைகளை ( அருகில் தெரிந்த மலைகளை காட்டி) தங்கமாகவும், வெள்ளியாகவும் அல்லாஹ் மாற்றித் தந்து விடுவான் என்று கூறினார்கள்.

يا أباذر إن جبرئيل أتاني بخزائن الدنيا على بغلة شهباء فقال لى : يا محمد  هذه خزائن الدنيا ولا ينقصك من حظك عند ربك فقلت : يا حبيبي جبرئيل لا حاجة  لي فيها ، إذا اشبعت شكرت ربي وإذا جعت سألته

அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: என்னுடைய நேசர் முஹம்மது {ஸல்} அவர்கள் என்னிடம் அபூதர்ரே! ஜிப்ரயீல் (அலை) என்னிடம் உலகத்தின் கருவூலங்கள்  அனைத்தையும் கொண்டு வந்து, முஹம்மத் {ஸல்} அவர்களே! இதோ உலகத்தின்  கருவூலங்கள், உங்கள் இரட்சகன் உங்களுக்கு வழங்கிய குறைவில்லா செல்வங்கள்!  எடுத்துக்கொள்ளுங்கள் என்றார்.

அதற்கு, நான் என் நண்பர் ஜிப்ரயீலே! இதன் மீதெல்லாம் நமக்கு விருப்பம் இல்லை, வயிறு நிரம்ப சாப்பிட்டால் என் இறைவனுக்கு நான் நன்றி செலுத்துவேன்! பசியோடு  நான் இருந்தால் என் இறைவனிடமே நான் கேட்டுக் கொள்வேன்! என்று கூறினேன்  என்றார்கள்.

அதிசயிக்கத்தக்க வாழ்க்கையை கொண்டிருக்கும் எம் பூமான் நபி {ஸல்} அவர்களின் வாழ்க்கையைக் கண்டு இந்த அகிலமே வியக்கின்றது. அல்ல, அல்ல அதிசயமே அதிசயித்து நிற்கிறது.

"The Prophet Muhammad (SAL) He is a wondered by the whole world" ஆம்! நமது நபி முஹம்மது (ஸல்) அவர்கள் முழு உலகும் வியந்து போற்றும் அற்புத நபி ஆவார்கள்.

அத்தகைய அற்புத வாழ்க்கையைப் பின்பற்றி வாழும் நல்ல நஸீபை வல்ல ரஹ்மான் நம் அனைவருக்கும் தந்தருள்வானாக!! ஆமீன்! ஆமீன்!! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

3 comments:

  1. மாஷா அல்லாஹ் புதிய கோணத்தில் நிறைய தகவல்கள்

    ReplyDelete
  2. அருமை ஹஜரத். அருமையான பதிவு. பல்வேறு தலைப்.புகளில் அண்ணலாரின் ஆளுமைகளை நாம் படித்திருக்கின்றோம். படித்ததின் அடிப்படையில் உரையாற்றி இருக்கின்றோம். இது சில புதிய தகவல்களோடு புதிய பரிமாணத்தில் அமைந்த ஒரு கட்டுரை. நன்றி ஜும்மா விற்கு சரியான காலத்தில் உதவக் கூடியதாக அமைந்திருக்கின்றது ஜஸாக்கல்லாஹ் அல்லாஹ் உங்கள் ஞானத்தில் பரக்கத் செய்வானாக

    ReplyDelete