இழப்பதும்.. அர்ப்பணிப்பதும்.. அல்லாஹ்விற்காக
என்றால்?!
அனைத்தையும் இழந்த
வீட்டின் முன் அமர்ந்து,
பாலஸ்தீனக் குழந்தை ஒருவர் ஓதும் குர்ஆன் ( அல்குர்ஆன் : 2:155-157) ஆயத்தின் காட்சியாகட்டும்...
காசாவில் இஸ்ரேலிய
ராக்கெட்டுகளால் இறந்தால் தன்னுடைய உடமைகளை என்ன செய்ய வேண்டும் என்று ஒரு
பாலஸ்தீன குழந்தை தன்னுடைய விருப்பத்தை எழுதி இருக்கிற சிறுமியின் மரண
சாசனமாகட்டும்...
ஃபலஸ்தீன் போரில்
கொல்லப் (ஷஹீதாக்கப்) பட்ட ஒரு ஷஹீதின் உடலில் இருந்து வெளியேறும் கஸ்தூரி நறுமணம்
என்று பகிரப்படும் செய்தியை படிப்பதாகட்டும்....
இத்தனை கொடுமைகளை
அனுபவித்த பின்னரும் இஸ்ரேலிய இராணுவத்தின் தாக்குதல்களை துணிவுடன் எதிர் கொள்ளும்
அந்த மக்களின் போராட்ட குணமாகட்டும்....
இந்த உலகில் உலக
வாழ்க்கையே கதி என்று சுற்றிக் கொண்டு அதற்காகவே இயங்கிக் கொண்டிருக்கும் நமக்கு
ஒரு முறையே வாழ்கிற வாழ்க்கையில் ஒரு சந்தர்ப்பத்திலாவது அல்லாஹ்விற்காக வாழ்ந்திட
வேண்டும் என்பதை உணர்த்துவதாய் அமைந்துள்ளதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.
உலகில் அனைத்து
பணிகளையும் நடத்துவதற்கு காரண காரியங்களை அல்லாஹ் உருவாக்கி இருக்கின்றான். அந்த காரண காரணிகளின் கீழ் ஒவ்வாரு பணியையும் செய்து
முடிப்பதற்கு முயற்சி மற்றும் தியாகதத்தின் தேவை இருக்கின்றது.
அந்த தியாகம் என்பது பொருள் தியாகமாக இருந்தாலும் சரி, உயிர் தியாயகமாக இருந்தாலும் சரி, கால நேரம் தொடர்பான
தியாகமாக இருந்தாலும் சரி,
தனக்கான ஒன்றை துறப்பதாக இருந்தாலும் சரி, முயற்சி மற்றும் தியாகம் இல்லாமல் எந்தப் பணியும்
முழுமையடைய முடியாது.
இந்த உலகில் மனிதன் வாழும் காலத்தில் தான் விரும்பிய ஒன்றை
அடைந்து கொள்வதற்காக அவன் எதையும் இழக்க தயாராக இருக்கின்றான்.
கடல் கடந்து, வாலிபம் துறந்து, குடும்பம் பிரிந்து,
சுக துக்கங்களை ஒதுக்கி வைத்து வீடு வாசல் மறந்து
பொருளாதாரத்தை பெருக்கிக் கொள்ள விழைகிறான்.
இப்படி உலகின் நன்மைகளுக்காக அதை அடைந்து கொள்வதற்காக அவன்
இழக்க முன் வருவதை வரிசை படுத்த வேண்டுமானால் நீண்ட பட்டியல் போட வேண்டும்.
அவ்வளவு இருக்கிறது.
தியாகம் மற்றும் முயற்சியை ஒரு இறைநம்பிக்கையாளன் எப்படி
அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் இஸ்லாம் தனித்துவமான வழிகாட்டலை வழங்கி
இருப்பதை பார்க்க முடியும்.
பொதுவாக ஒருவனின் முயற்சி எதை நோக்கி அமைந்துள்ளதோ அதை அவன்
அடைந்து கொள்ள முடியும் என்று இஸ்லாம் சொல்கிறது.
اِنَّ سَعْيَكُمْ لَشَتّٰىؕ
நிச்சயமாக உங்களுடைய முயற்சி பலவாகும். ( அல்குர்ஆன்: 92: 4 )
وَأَن لَّيْسَ لِلْإِنسَٰنِ إِلَّا مَا سَعَىٰ
وَأَنَّ سَعْيَهُۥ سَوْفَ يُرَىٰ
இன்னும், மனிதனுக்கு அவன்
முயல்வதல்லாமல் வேறில்லை.அன்றியும், நிச்சயமாக அவன்
முயற்சி(யின் பலன்) பின் அவனுக்குக் காண்பிக்கப்படும். (அல்குர்ஆன்: 53: 39 )
ஆனாலும் பாராட்டத்தக்க முயற்சியும், அல்லாஹ்வால் நன்றி கூறப்படும் முயற்சியும் எது?
مَنْ كَانَ يُرِيْدُ الْعَاجِلَةَ عَجَّلْنَا لَهٗ
فِيْهَا مَا نَشَآءُ لِمَنْ نُّرِيْدُ ثُمَّ جَعَلْنَا لَهٗ جَهَنَّمَۚ
يَصْلٰٮهَا مَذْمُوْمًا مَّدْحُوْرًا
எவர்கள் (மறுமையைப் புறக்கணித்தும் விரைவில் அழியும்)
இவ்வாழ்க்கையை விரும்புகிறார்களோ, அவர்களில் நாம்
நாடியவர்களுக்கு நாம் நாடுவதை (இவ்வுலகிலேயே) விரைந்து கொடுத்து விடுவோம்; பின்னரோ அ(த்தகைய)வருக்காக, நாம் ஜஹன்ன(ம் நரக)த்தைச்
சித்தப்படுத்தி வைத்திருக்கிறோம்; அதில் அவர் பழிக்கப்
பட்டவராகவும் சபிக்கப்பட்டவராகவும் நுழைவார்.
وَمَنْ
اَرَادَ الْاٰخِرَةَ وَسَعٰى لَهَا سَعْيَهَا وَهُوَ مُؤْمِنٌ فَاُولٰۤٮِٕكَ كَانَ
سَعْيُهُمْ مَّشْكُوْرًا
இன்னும் எவர் மறுமையை நாடி அதற்காகத் தக்க பிரயாசையுடன், முஃமினாகவும் இருந்து முயல்கின்றாரோ, அ(த்தகைய)வர்களின்
முயற்சி (அல்லாஹ்விடத்தில் நற்கூலிக்குரியதாக) ஏற்றுக் கொள்ளப்படும். (
அல்குர்ஆன்: 17:
18, 19 )
இன்னும் தெளிவாகவே நபி (ஸல்) அவர்கள்
குறிப்பிட்டுள்ளார்கள்.
அல்லாஹ்வுக்காக உன் தியாகம் இருக்குமானால்....
அல்லாஹ்வுக்காக உன் முயற்சி இருக்குமானால்.... நீ இழக்க முன் வருவது
அல்லாஹ்வுக்காக இருக்குமானால்....
حَدَّثَنَا وَكِيعٌ حَدَّثَنَا
سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ عَنْ حُمَيْدِ بْنِ هِلَالٍ عَنْ
أَبِي قَتَادَةَ وَأَبِي الدَّهْمَاءِ قَالَا أَتَيْنَا عَلَى رَجُلٍ
مِنْ أَهْلِ الْبَادِيَةِ فَقُلْنَا هَلْ سَمِعْتَ مِنْ رَسُولِ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَيْئًا قَالَ نَعَمْ سَمِعْتُهُ يَقُولُ
إِنَّكَ لَنْ تَدَعَ شَيْئًا لِلَّهِ عَزَّ وَجَلَّ إِلَّا بَدَّلَكَ اللَّهُ
بِهِ مَا هُوَ خَيْرٌ لَكَ مِنْهُ.
அபூகதாதா (ரஹ்)
மற்றும் அபுத் தஹ்மாஃ (ரஹ்) ஆகியோர் "நாங்கள் ஒரு நாள் ஒர கிராமவாசியிடம்
வந்து,
நீங்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்களிடம் இருந்து ஏதேனும்
செவியுற்றிருக்கின்றீர்களா?"
என்று கேட்டோம். அதற்கவர், "ஆம் " என்று கூறி விட்டு "நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்விற்காக ஏதேனும்
ஒன்றை இழக்க முன் வந்து இழந்து விட்டீர்கள் என்றால், நீங்கள் இழந்த அந்த ஒன்றிற்குப் பகரமாக அல்லாஹ் அதை விட சிறந்ததை
வழங்குவான்" என்று நபி ஸல் அவர்கள் கூற தாம் கேட்டதாக கூறினார். ( நூல்:
முஸ்னத் அஹ்மத் )
وعن سهل
بن معاذ بن أنس الجهني عن أبيه قال: قال رسول الله صلى الله عليه وسلم: (من ترك
اللباس تواضعاً لله وهو يقدر عليه دعاه الله يوم القيامة على رؤوس الخلائق حتى
يخير من أي حلل الإيمان شاء يلبسها))
ஸஹ்ல் இப்னு முஆத்
இப்னு அனஸுல் ஜுஹனீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:- "ஒருவர் விலையுயர்ந்த
ஆடம்பரமான ஆடையை விலை கொடுத்து வாங்கி அணிந்து கொள்ளும் அளவுக்கு பொருளாதார வசதி
இருந்தும் அல்லாஹ்விற்காக பணிவை மேற்கொண்டு அப்படியான ஆடை அணிவதை தவிர்த்துக்
கொள்வாரானால் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவரை நாளை மறுமையில் அனைத்து படைப்புகளுக்கும்
முன்னிலையில் அழைத்து "ஈமானிய அணிகலன்களில் எதை வேண்டுமானாலும் அணிந்து கொள்ள
இஷ்டம் வழங்கியருள்வான்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்: திர்மிதீ )
وعنه عن
أبيه قال: (من ترك شهوة وهو يقدر عليه تواضعاً لله دعاه الله يوم القيامة على رؤوس
الخلائق))
இன்னொரு
அறிவிப்பில் "தம் மனம் விரும்பும் ஒரு ஆசையை அதை அடைவதற்கு சக்தியும், வழியும் இருந்து அல்லாஹ்விற்காக பணிவை மேற்கொண்டு அப்படியான ஆசையை
விடுவாரானால்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது.
وعن
حذيفة بن اليمان قال: قال رسول الله صلى الله عليه وسلم: (النظرة إلى المرأة سهم
من سهام إبليس مسْمومٌ من تَركَه خَوْف الله أثابه الله إيماناً يجد به حلاوته في
قلبه). رواه أحمد في مسنده
ஒரு பெண்ணைப்
பார்ப்பது இப்லீஸ் ஏவுகிற (பாவமெனும்) விஷம் தேய்க்கப்பட்ட அம்புகளில் ஒரு
அம்பாகும். ஒருவர் அல்லாஹ்வைப் பயந்து அந்தப் பார்வையை தவிர்த்துக் கொள்வாரானால்
அல்லாஹ் அவருக்கு ஈமானின் சுவையை சுவைக்கும் உணர்வை அவரின் உள்ளத்திற்கு
வழங்கியருள்வான்" என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். ( நூல்: அஹ்மத் )
وله شاهد من حديث علي رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه
وسلم: (نظر الرجل في محاسن المرأة سَهْمٌ من سهام إبليس مسموم فمن أعرض عن ذلك
السّهم أعقبه الله عبادة تَسُرُّه). رواه عمر بن شبّة.
இந்த நபிமொழியை
வலுச்சேர்க்கும் வகையில் அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கும் இன்னொரு நபிமொழியில்
"ஒரு பெண்ணின் அழகை ஒரு ஆண் பார்ப்பது இப்லீஸ் ஏவுகிற (பாவமெனும்) விஷம்
தேய்க்கப்பட்ட அம்புகளில் ஒரு அம்பாகும். ஒருவர் அல்லாஹ்வைப் பயந்து அந்தப்
பார்வையை புறக்கணித்துக் கொள்வாரானால் அல்லாஹ் அவருக்கு அவர் அகமகிழ்ந்து கொள்ளும்
வணக்க வழிபாட்டில் ஈடுபடுத்துவான்" என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். (
நூல்: உமர் இப்னு ஷப்பஹ் )
ஸுலைமான் (அலை) அவர்களின் வாழ்விலிருந்து...
وَوَهَبْنَا لِدَاوٗدَ سُلَيْمٰنَ نِعْمَ
الْعَبْدُ اِنَّـهٗۤ اَوَّابٌ ؕ
இன்னும் தாவூதுக்கு(ப் புதல்வராக) ஸுலைமானை வழங்கினோம்; சிறப்பான (நம்) நல்லடியார், நிச்சயமாக அவர் (எதிலும்
நம்மையே) நோக்குபவர்.
اِذْ
عُرِضَ عَلَيْهِ بِالْعَشِىِّ الصّٰفِنٰتُ الْجِيَادُ
நன்கு பயிற்சியளிக்கப்பட்ட உயர்ந்த குதிரைகள் (ஒரு) மாலை
நேரத்தில் அவர் முன் கொண்டுவரப்பட்ட பொழுது:
فَقَالَ
اِنِّىْۤ اَحْبَبْتُ حُبَّ الْخَيْرِ عَنْ ذِكْرِ رَبِّىْۚ حَتّٰى تَوَارَتْ
بِالْحِجَابِ
“நிச்சயமாக நான் (சூரியன் இரவாகிய) திரைக்குள் மறைந்து விடும்வரை, என்னுடைய இறைவனை நினைப்பது விட்டும் இந்த நல்ல பொருட்களின் மேல் அதிக அன்பாக
அன்பு பாராட்டிவிட்டேன்”
என அவர் கூறினார்.
رُدُّوْهَا
عَلَىَّ فَطَفِقَ مَسْحًۢا بِالسُّوْقِ وَ الْاَعْنَاقِ
“என்னிடம் அவற்றை திரும்ப கொண்டு வாருங்கள் (என்று கூறினார்; அவை திரும்ப கொண்டு வரப்பட்டபின்) அவற்றின் பின்னங்கால்களையும் கழுத்துகளையும்
தடவிக் கொடுத்தார்.
وَلَقَدْ
فَتَنَّا سُلَيْمٰنَ وَاَلْقَيْنَا عَلٰى كُرْسِيِّهٖ جَسَدًا ثُمَّ اَنَابَ
இன்னும் நாம் ஸுலைமானைத் திட்டமாகச் சோதித்தோம்; அவருடைய அரியணையில் ஒரு முண்டத்தை எறிந்தோம் - ஆகவே அவர் (நம்மளவில்)
திரும்பினார்.
قَالَ
رَبِّ اغْفِرْ لِىْ وَهَبْ لِىْ مُلْكًا لَّا يَنْۢبَغِىْ لِاَحَدٍ مِّنْۢ
بَعْدِىْۚ اِنَّكَ اَنْتَ الْوَهَّابُ
“என் இறைவனே! என்னை மன்னித்தருள்வாயாக! அன்றியும், பின்னர் எவருமே அடைய முடியாத ஓர் அரசாங்கத்தை எனக்கு நீ நன்கொடையளிப்பாயாக!
நிச்சயமாக நீயே மிகப்பெருங் கொடையாளியாவாய்” எனக் கூறினார்.
فَسَخَّرْنَا
لَهُ الرِّيْحَ تَجْرِىْ بِاَمْرِهٖ رُخَآءً حَيْثُ اَصَابَۙ
ஆகவே, நாம் அவருக்குக் காற்றை
வசப்படுத்திக் கொடுத்தோம்;
அது அவருடைய கட்டளைப்படி அவர் நாடிய இடங்களுக்கெல்லாம்
இலகுவாக (அவரைச் சுமந்து) சென்று கொண்டிருந்தது. ( அல்குர்ஆன்: 38: 30 - 36 )
யூசுஃப் (அலை) அவர்களின் வாழ்விலிருந்து...
சந்தர்ப்பம்: 1-
وَرَاوَدَتْهُ الَّتِىْ هُوَ فِىْ بَيْتِهَا عَنْ نَّـفْسِهٖ
وَغَلَّقَتِ الْاَبْوَابَ وَقَالَتْ هَيْتَ لَـكَ قَالَ مَعَاذَ اللّٰهِ اِنَّهٗ
رَبِّىْۤ اَحْسَنَ مَثْوَاىَ اِنَّهٗ لَا يُفْلِحُ الظّٰلِمُوْنَ
அவர் எந்தப்
பெண்ணின் வீட்டில் இருந்தாரோ, அவள் அவர்மீது
விருப்பங்கொண்டு,
கதவுகளைத் தாழிட்டுக் கொண்டு (தன் விருப்பதிற்கு
இணங்குமாறு) “வாரும்”
என்று அழைத்தாள் - (அதற்கு அவர் மறுத்து,) “அல்லாஹ் (இத்தீய செயலிலிருந்து) என்னைக் காத்தருள்வானாக; நிச்சயமாக (உன் கணவர்) என் எஜமானர், என் இடத்தை அழகாக
(கண்ணியமாக) வைத்திருக்கிறார் - அநியாயம் செய்பவர்கள் நிச்சயமாக வெற்றி பெற
மாட்டார்கள்”
என்று சொன்னார்.
وَلَـقَدْ
هَمَّتْ بِهٖۚ وَهَمَّ بِهَا لَوْلَاۤ اَنْ رَّاٰ بُرْهَانَ رَبِّهٖ كَذٰلِكَ
لِنَصْرِفَ عَنْهُ السُّۤوْءَ وَالْـفَحْشَآءَ اِنَّهٗ مِنْ عِبَادِنَا
الْمُخْلَصِيْنَ
ஆனால் அவளோ அவரைத்
திடமாக விரும்பினாள்;
அவரும் தம் இறைவனின் ஆதாரத்தைக் கண்டிராவிட்டால் அவள் மீது
விருப்பம் கொண்டே இருப்பார்; இவ்வாறு நாம்
அவரைவிட்டுத் தீமையையும் மானக்கேடான செயல்களையும் திருப்பிவிட்டோம் - ஏனெனில்
நிச்சயமாக அவர் நம் தூய்மையான அடியார்களில் ஒருவராக இருந்தார்.
சந்தர்ப்பம்: 2-
وَقَالَ
نِسْوَةٌ فِى الْمَدِيْنَةِ امْرَاَتُ الْعَزِيْزِ تُرَاوِدُ فَتٰٮهَا عَنْ نَّـفْسِهٖۚ
قَدْ شَغَفَهَا حُبًّا اِنَّا لَـنَرٰٮهَا فِىْ ضَلٰلٍ مُّبِيْنٍ
அப்பட்டிணத்தில்
சில பெண்கள்;
“அஜீஸின் மனைவி தன்னிடமுள்ள ஓர் இளைஞரைத் தனக்கு இணங்கும்படி
வற்புறுத்தியிருக்கிறாள்;
(அவர் மேலுள்ள) ஆசை அவளை மயக்கி விட்டது - நிச்சயமாக நாம்
அவளை பகிரங்கமான வழிகேட்டில் தான் காண்கிறோம்” என்று பேசிக்
கொண்டார்கள்.
فَلَمَّا سَمِعَتْ بِمَكْرِهِنَّ
اَرْسَلَتْ اِلَيْهِنَّ وَاَعْتَدَتْ لَهُنَّ مُتَّكَـاً وَّاٰتَتْ كُلَّ
وَاحِدَةٍ مِّنْهُنَّ سِكِّيْنًا وَّقَالَتِ اخْرُجْ عَلَيْهِنَّ فَلَمَّا
رَاَيْنَهٗۤ اَكْبَرْنَهٗ وَقَطَّعْنَ اَيْدِيَهُنّ وَقُلْنَ حَاشَ لِلّٰهِ مَا
هٰذَا بَشَرًا اِنْ هٰذَاۤ اِلَّا مَلَكٌ كَرِيْمٌ
அப் பெண்களின்
பேச்சுக்களை (அஜீஸின் மனைவி) கேட்டபோது (விருந்திற்காகச்) சாய்மானங்கள் சித்தம்
செய்து அப் பெண்களுக்கு அழைப்பனுப்பினாள்; (விருந்திற்கு
வந்த) அப் பெண்களில் ஒவ்வொருத்திக்கும் (பழங்களை நறுக்கித் தின்பதற்காக) ஒரு
கத்தியும் கொடுத்தாள். “இப் பெண்கள் எதிரே செல்லும்” என்று (யூஸுஃபிடம்)
கூறினாள்;
அப் பெண்கள் அவரைப் பார்த்ததும் (அவரழகில் மயங்கி) அவரை மிக
மேன்மையாகக் கண்டார்கள். (அவர் அழகில் மெய் மறந்து) தம் கைகளையும்
வெட்டிக்கொண்டனர்: “அல்லாஹ்வே பெரியவன்;
இவர் மனிதரே அல்லர்! இவர் மேன்மைக்குரிய ஒரு மலக்கேயன்றி
வேறில்லை”
என்று கூறினார்கள்.
قَالَتْ فَذٰلِكُنَّ الَّذِىْ
لُمْتُنَّنِىْ فِيْهِ وَ لَـقَدْ رَاوَدْتُّهٗ عَنْ نَّـفْسِهٖ فَاسْتَعْصَمَ
وَلَٮِٕنْ لَّمْ يَفْعَلْ مَاۤ اٰمُرُهٗ لَـيُسْجَنَنَّ وَلَيَكُوْنًا مِّنَ
الصّٰغِرِيْنَ
அதற்கவள் “நீங்கள் எவர் சம்பந்தமாக என்னை நிந்தித்தீர்களோ, அவர்தாம் இவர்;
நிச்சயமாக நான் அவரை என் விருப்பத்திற்கு இணங்கும்படி
வற்புறுத்தினேன் - ஆனால் அவர் (மன உறுதியுடன்) தம்மைக் காத்துக் கொண்டார். இனியும்
அவர் நான் இடும் கட்டளைக்கிணங்கி நடந்து கொள்ளாவிட்டால் சிறையில் தள்ளப்படுவார்; மேலும் அவர் சிறுமை அடைந்தவர்களில் ஒருவராகவும் ஆகிவிடுவார்” என்று சொன்னாள்.
قَالَ
رَبِّ السِّجْنُ اَحَبُّ اِلَىَّ مِمَّا يَدْعُوْنَنِىْۤ اِلَيْهِ وَاِلَّا
تَصْرِفْ عَنِّىْ كَيْدَهُنَّ اَصْبُ اِلَيْهِنَّ وَاَكُنْ مِّنَ الْجٰهِلِيْنَ
(அதற்கு) அவர், “என் இறைவனே! இவர்கள் என்னை எதன் பக்கம் அழைக்கிறார்களோ, அ(த்தீய)தை விடச் சிறைக்கூடமே எனக்கு அதிக விருப்பமுடையதாகும்; இவர்களின் சதியை விட்டு நீ என்னைக் காப்பாற்றவில்லையானால், நான் இவர்கள் பால் சாய்ந்து (பாவத்தால்) அறிவில்லாதவர்களில் ஒருவனாகிவிடுவேன்” என்று (பிரார்த்தித்தவராக) கூறினார்.
அல்லாஹ் வழங்கிய பரிசு:- 1.
وَكَذٰلِكَ
مَكَّنَّا لِيُوْسُفَ فِى الْاَرْضِۚ يَتَبَوَّاُ مِنْهَا حَيْثُ يَشَآءُ
نُصِيْبُ بِرَحْمَتِنَا مَنْ نَّشَآءُ وَلَا نُضِيْعُ اَجْرَ الْمُحْسِنِيْنَ
யூஸுஃப் தான்
விரும்பிய விதத்தில் காரியங்கள் செய்து வர அந்த நாட்டில் யூஸுஃபுக்கு நாம் இவ்வாறே
வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தோம்; இவ்வாறே நாம்
நாடியவருக்கு நமது அருள் கிடைக்கும் படிச் செய்கின்றோம். நன்மை செய்பவர்களின்
கூலியை நாம் வீணாக்க மாட்டோம்.
அல்லாஹ் வழங்கிய பரிசு:- 2.
وَرَفَعَ
اَبَوَيْهِ عَلَى الْعَرْشِ وَخَرُّوْا لَهٗ سُجَّدًا وَقَالَ يٰۤاَبَتِ هٰذَا
تَاْوِيْلُ رُءْيَاىَ مِنْ قَبْل قَدْ جَعَلَهَا رَبِّىْ حَقًّا وَقَدْ اَحْسَنَ
بِىْۤ اِذْ اَخْرَجَنِىْ مِنَ السِّجْنِ وَجَآءَ بِكُمْ مِّنَ الْبَدْوِ مِنْۢ
بَعْدِ اَنْ نَّزَغَ الشَّيْطٰنُ بَيْنِىْ وَبَيْنَ اِخْوَتِىْ اِنَّ رَبِّىْ
لَطِيْفٌ لِّمَا يَشَآءُ اِنَّهٗ هُوَ الْعَلِيْمُ الْحَكِيْمُ
இன்னும், அவர் தம் தாய் தந்தையரை அரியாசனத்தின் மீது உயர்த்தி (அமர்த்தி)னார்; அவர்கள் (எல்லோரும்) அவருக்கு (மரியாதை செலுத்தியவர்களாகச்) சிரம் பணிந்து
வீழ்ந்தனர்;
அப்போது அவர் (தம் தந்தையை நோக்கி), “என் தந்தையே! இது தான் என்னுடைய முந்தைய கனவின் விளக்கமாகும்; அதனை என் இறைவன் உண்மையாக்கினான்; மேலும், அவன் என்னைச் சிறைச்சாலையிலிருந்து வெளியாக்கியதுடன் எனக்கும் என்
சகோதரர்களுக்குமிடையில் ஷைத்தான் பிரிவினையை உண்டு பண்ணி விட்ட பின்னர் உங்களை
கிராமத்திலிருந்து கொண்டு வந்ததன் மூலம் அவன் நிச்சயமாக எனக்குப் பேருபகாரம்
செய்துள்ளான்;
நிச்சயமாக என் இறைவன், தான் நாடியவற்றை மிக
நுட்பமாகச் செய்கிறவன்,
நிச்சயமாக அவன் (யாவற்றையும்) நன்கறிந்தவன்; மிக்க ஞானமுள்ளவன்”
என்று கூறினார்.
رَبِّ
قَدْ اٰتَيْتَنِىْ مِنَ الْمُلْكِ وَ عَلَّمْتَنِىْ مِنْ تَاْوِيْلِ
الْاَحَادِيْثِ فَاطِرَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ اَنْتَ وَلِىّٖ فِى الدُّنْيَا
وَالْاٰخِرَةِ تَوَفَّنِىْ مُسْلِمًا وَّاَلْحِقْنِىْ بِالصّٰلِحِيْنَ
“என் இறைவனே! நிச்சயமாக நீ எனக்கு
அரசாட்சியைத் தந்து,
கனவுகளின் விளக்கங்களையும் எனக்கு கற்றுத்தந்தாய்; வானங்களையும் பூமியையும் படைத்தவனே! இம்மையிலும் மறுமையிலும் நீயே என்
பாதுகாவலன்; முஸ்லிமாக (உனக்கு முற்றிலும் வழிபட்டவனாக
இருக்கும் நிலையில்) என்னை நீ கைப்பறறிக் கொள்வாயாக! இன்னும் நல்லடியார்
கூட்டத்தில் என்னைச் சேர்த்திடுவாயாக!” (என்று அவர்
பிரார்த்தித்தார்).
மீண்டும் ஒரு முறை பிறந்து விட மாட்டோமா?..
இந்த உலகில் ஒரு முறை அல்லாஹ்விற்காக தியாகம் செய்தவர்கள்
மீண்டும் ஒரு முறை உலகில் வாழ வாய்ப்பு கிடைக்காதா? அப்படி கிடைத்தால் மீண்டும் அல்லாஹ்விற்காக
வாழ்ந்து மீண்டும் தியாகம் செய்ய விரும்புவார்கள்.
حَدَّثَنَا
يَحْيَى بْنُ يَحْيَى، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، كِلَاهُمَا عَنْ أَبِي
مُعَاوِيَةَ، ح وحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا جَرِيرٌ،
وَعِيسَى بْنُ يُونُسَ، جَمِيعًا، عَنِ الْأَعْمَشِ، ح وحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ
عَبْدِ اللهِ بْنِ نُمَيْرٍ، وَاللَّفْظُ لَهُ، حَدَّثَنَا أَسْبَاطٌ، وَأَبُو
مُعَاوِيَةَ، قَالَا: حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ عَبْدِ اللهِ بْنِ مُرَّةَ،
عَنْ مَسْرُوقٍ، قَالَ: سَأَلْنَا عَبْدَ اللهِ عَنْ هَذِهِ الْآيَةِ: {وَلَا
تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللهِ أَمْوَاتًا بَلْ أَحْيَاءٌ
عِنْدَ رَبِّهِمْ يُرْزَقُونَ} [آل عمران: 169] قَالَ: أَمَا إِنَّا قَدْ
سَأَلْنَا عَنْ ذَلِكَ، فَقَالَ: «أَرْوَاحُهُمْ فِي جَوْفِ طَيْرٍ خُضْرٍ، لَهَا
قَنَادِيلُ مُعَلَّقَةٌ بِالْعَرْشِ، تَسْرَحُ مِنَ الْجَنَّةِ حَيْثُ شَاءَتْ،
ثُمَّ تَأْوِي إِلَى تِلْكَ الْقَنَادِيلِ، فَاطَّلَعَ إِلَيْهِمْ رَبُّهُمُ
اطِّلَاعَةً»، فَقَالَ: " هَلْ تَشْتَهُونَ شَيْئًا؟ قَالُوا: أَيَّ شَيْءٍ
نَشْتَهِي وَنَحْنُ نَسْرَحُ مِنَ الْجَنَّةِ حَيْثُ شِئْنَا، فَفَعَلَ ذَلِكَ بِهِمْ
ثَلَاثَ مَرَّاتٍ، فَلَمَّا رَأَوْا أَنَّهُمْ لَنْ يُتْرَكُوا مِنْ أَنْ
يُسْأَلُوا، قَالُوا: يَا رَبِّ، نُرِيدُ أَنْ تَرُدَّ أَرْوَاحَنَا فِي
أَجْسَادِنَا حَتَّى نُقْتَلَ فِي سَبِيلِكَ مَرَّةً أُخْرَى، فَلَمَّا رَأَى أَنْ
لَيْسَ لَهُمْ حَاجَةٌ تُرِكُوا
"
உயிர் தியாகிகளின்
உயிர்கள் பச்சை நிறத்துப் பறவைகளின் கூட்டுக்குள் (வைக்கப்பட்டு) சொர்க்கத்தில்
விரும்பியவாறு அவை சுற்றித் திரியும். பின்னர் அர்ஷின் அடியில் தொங்கிக்
கொண்டிருக்கும் விளக்குகளின் அருகில் அவை நெருங்கும். இறைவன் அவர்களுக்குக் காட்சி
தந்து நீங்கள் விரும்புவது என்ன? என்று கேட்பான். எங்கள்
இறைவா நாங்கள் எதை விரும்புவது? நீ உனது படைப்பினங்களில்
எவருக்கும் வழங்காதவற்றை எங்களுக்கு வழங்கியிருக்கிறாயே என்பார்கள். மீண்டும் அதே
கேள்வியை இறைவன் கேட்பான். ஏதேனும் கேட்காவிட்டால் இறைவன் விடமாட்டான் என்று
அவர்கள் அறிந்து கொண்டபின் எங்கள் இறைவா! எங்களை மண்ணுலகுக்கு மீண்டும் நீ
திருப்பி அனுப்ப வேண்டும். நாங்கள் உனது பாதையில் மீண்டும் போர் புரிய வேண்டும்.
மீண்டும் ஒரு முறை உன் பாதையில் நாங்கள் கொல்லப்பட வேண்டும் என விரும்புகிறோம்
என்பார்கள். உயிர் தியாகத்திற்குக் கிடைக்கும் பரிசுகளைக் கண்டதனால் இவ்வாறு
விரும்புவர். அப்போது திரும்பச் செல்வது தவிர வேறு தேவை இவர்களுக்கு இல்லை
என்பதால் அப்படியே அவர்கள் விடப்படுவார்கள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி) ( நூல் : முஸ்லிம் 3834
)
வாழும் காலத்தில் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் அல்லாஹ்விற்காக
வாழ்வோம்!
حَدَّثَنَا
عَبْدُ العَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ
ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنْ
أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:
كَانَ الرَّجُلُ يُدَايِنُ النَّاسَ، فَكَانَ يَقُولُ لِفَتَاهُ: إِذَا أَتَيْتَ
مُعْسِرًا فَتَجَاوَزْ عَنْهُ، لَعَلَّ اللَّهَ أَنْ يَتَجَاوَزَ عَنَّا، قَالَ:
فَلَقِيَ اللَّهَ فَتَجَاوَزَ عَنْهُ
(முன் காலத்தில்) ஒரு
மனிதர் மக்களுக்குக் கடன் கொடுத்து (உதவி) வந்தார். (அதை வசூலிக்கச் செல்லும்)
தனது (அலுவலரான) வாலிபரிடம், (வசதியின்றிச்)
சிரமப்படுபவரிடம் நீ சென்றால் (அவரைக் கண்டு கொள்ளாமல்) மன்னித்து(க் கடனைத்
தள்ளுபடி செய்து) விடு. அல்லாஹ்வும் (நம்மைக் கண்டு கொள்ளாமல்) மன்னித்து
விடக்கூடும் என்று சொல்லி வந்தார். அவர் (மரணமடைந்து) அல்லாஹ்வைச் சந்தித்தபோது
அவருடைய பிழைகளைப் பொறுத்து அவன் மன்னித்து விட்டான். ( நூல் : புகாரி )
حَدَّثَنَا
أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا مَنْصُورٌ، أَنَّ
رِبْعِيَّ بْنَ حِرَاشٍ، حَدَّثَهُ أَنَّ حُذَيْفَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ،
حَدَّثَهُ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: تَلَقَّتِ
المَلاَئِكَةُ رُوحَ رَجُلٍ مِمَّنْ كَانَ قَبْلَكُمْ، قَالُوا: أَعَمِلْتَ مِنَ
الخَيْرِ شَيْئًا؟ قَالَ: كُنْتُ آمُرُ فِتْيَانِي أَنْ يُنْظِرُوا
وَيَتَجَاوَزُوا عَنِ المُوسِرِ، قَالَ: قَالَ: فَتَجَاوَزُوا عَنْهُ ، قَالَ
أَبُو عَبْدِ اللَّهِ: وَقَالَ أَبُو مَالِكٍ، عَنْ رِبْعِيٍّ: كُنْتُ أُيَسِّرُ
عَلَى المُوسِرِ، وَأُنْظِرُ المُعْسِرَ، وَتَابَعَهُ شُعْبَةُ، عَنْ عَبْدِ
المَلِكِ، عَنْ رِبْعِيٍّ، وَقَالَ أَبُو عَوَانَةَ: عَنْ عَبْدِ المَلِكِ، عَنْ
رِبْعِيٍّ:أُنْظِرُ المُوسِرَ، وَأَتَجَاوَزُ عَنِ المُعْسِرِ، وَقَالَ نُعَيْمُ
بْنُ أَبِي هِنْدٍ، عَنْ رِبْعِيٍّ: فَأَقْبَلُ مِنَ المُوسِرِ، وَأَتَجَاوَزُ
عَنِ المُعْسِرِ
அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு மனிதரின் உயிரை
வானவர்கள் கைப்பற்றி,
அவரிடம் நீர் ஏதேனும் நல்லது செய்திருக்கிறீரா? எனக் கேட்டனர். அதற்கு அம்மனிதர், வசதியானவருக்கு அவகாசம்
அளிக்கும்படியும் வசதியற்றரைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடும்படியும் நான் எனது
ஊழியர்களுக்குக் கட்டளையிட்டிருந்தேன் என்று கூறினார். உடனே, அவரது தவறுகளைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுங்கள் என்று அல்லாஹ்
வானவர்களுக்குக் கட்டளையிட்டான்! ( நூல் : புகாரி )
حَدَّثَنَا
أَبُو الْهَيْثَمِ خَالِدُ بْنُ خِدَاشِ بْنِ عَجْلاَنَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ
زَيْدٍ عَنْ أَيُّوبَ عَنْ يَحْيَى بْنِ أَبِى كَثِيرٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ
أَبِى قَتَادَةَ أَنَّ أَبَا قَتَادَةَ طَلَبَ غَرِيمًا لَهُ فَتَوَارَى عَنْهُ
ثُمَّ وَجَدَهُ فَقَالَ إِنِّى مُعْسِرٌ. فَقَالَ آللَّهِ قَالَ آللَّهِ. قَالَ
فَإِنِّى سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ مَنْ
سَرَّهُ أَنْ يُنْجِيَهُ اللَّهُ مِنْ كُرَبِ يَوْمِ الْقِيَامَةِ فَلْيُنَفِّسْ
عَنْ مُعْسِرٍ أَوْ يَضَعْ عَنْهُ.
அப்துல்லாஹ் பின்
அபீகத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:(என் தந்தை) அபூகத்தாதா
(ரலி) அவர்கள்,
தமக்குக் கடன் தர வேண்டிய ஒருவரைத் தேடினார்கள். அவர்
தலைமறைவாகி விட்டார். பின்னர் அவரைக் கண்டபோது அவர், நான் (வசதியின்றி) சிரமப்படுபவன் என்று கூறினார். அதற்கு அபூகத்தாதா (ரலி)
அவர்கள்,
அல்லாஹ்வின் மீது சத்தியமாகவா? என்று கேட்டார்கள். அவர் அல்லாஹ்வின் மீது சத்தியமாகத்தான் என்றார்.
அதற்கு அபூகத்தாதா
(ரலி) அவர்கள்,
மறுமை நாளின் துயரங்களிலிருந்து அல்லாஹ் தம்மைக் காப்பாற்ற
வேண்டுமென விரும்புகின்றவர், (கடனை அடைக்க முடியாமல்)
சிரமப்படுபவருக்கு அவகாசம் அளிக்கட்டும். அல்லது கடனைத் தள்ளுபடி செய்துவிடட்டும்
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள். ( நூல்
: முஸ்லிம் )
عن أبي
هريرة رضي الله عنه قال ﷺ : بينما رجل يمشي بفلاة من الأرض فسمع صوتاً في سحابة
اسقِ حديقة فلان ، فتنحى ذلك السحابُ فأفرغ ماءه في حَرّة فإذا شَرْجة من تلك
الشراج قد استوعبت ذلك الماء كله ، فتتبع الماء فإذا رجل قائم في حديقته يحوّل
الماء بمِسحاته ، فقال له : يا عبد الله ، ما اسمك ؟
قال:
فلان بالاسم الذي سمع في السحابة ، فقال له: يا عبد الله ، لمَ تسألني عن اسمي ؟
فقال :
إني سمعت صوتاً في السحاب الذي هذا ماؤه يقول : اسقِ حديقة فلان لاسمك ، فما تصنع
فيها ؟
فقال :
أمَا إذ قلتَ هذا فإني أنظر إلى ما يخرج منها فأتصدق بثلثه ، وآكل أنا وعيالي
ثلثاً ، وأرُدّ فيها ثلثه . رواه مسلم.
நபி {ஸல்} அவர்கள்
கூறினார்கள்: ஒரு மனிதர் காட்டுப்பகுதியில் இருக்கும்போது இன்னாரின் தோட்டத்திற்கு
நீர் பொழிவாயாக என்ற சப்தத்தைக் மேகத்திலிருந்து கேட்டார். உடனே அந்த மேகம்
அங்கிருந்து நகர்ந்து கருங்கற்கள் நிறைந்த பகுதியில் மழை கொட்டியது. உடனே
அங்கிருந்த வாய்க்கால் ஒன்றில் அந்த தண்ணீர் நிரம்பி ஓடலாயிற்று . அம்மனிதர்அந்த
தண்ணீரை பின் தொடர்ந்து சென்றார். அங்கு ஒருவர் தனது தோட்டத்தில் நின்று கொண்டு
மண்வெட்டியால் அத்தண்ணீரைத் தன் தோட்டத்திற்குத் திருப்பிவிட்டுக் கொண்டிருந்தார்.
அவரிடம் அல்லாஹ்வின் அடியானே! உனது பெயர் என்ன? என்று கேட்டார், அதற்கு அவர் மேகத்தில் கேட்ட அதே பெயரைக் கூறினார்.
பின்பு அவர், அல்லாஹ்வின் அடியானே! எனது பெயரை ஏன்கேட்கிறீர்? என்று கேட்டார். அதற்கு அவர், இத்தண்ணீரைப் பொழிந்த
மேகத்தில் இன்னாரின் தோட்டத்திற்கு தண்ணீர் ஊற்றுவாயாக! என்று உமது பெயரை
குறிப்பிட்டு ஒரு சப்தத்தை நான் செவியேற்றேன்.
இத்தோட்டத்தில்
(மழை பொழிய) நீர் என்னசெய்வீர்?எனக் கேட்டார். அதற்கு அந்த மனிதர், அது பற்றிக் கேட்டு விட்டதால் கூறுகிறேன். நான் இதிலிருந்து கிடைக்கும்
விளைச்சலை மூன்று பாகங்களாகப் பிரித்து, அதில் ஒன்றை தர்மம்
செய்து விடுகிறேன்;
மற்றொரு பாகத்தை நானும் எனது குடும்பத்தினரும் உண்ணுகிறோம், மீதமுள்ள ஒன்றை இந்நிலத்தில் (பயிரிட) போட்டு விடுகிறேன் என்று கூறினார். (
நூல்: முஸ்லிம் )
அல்லாஹ்விற்கே புகழனைத்தும்!
என்று அந்த நேரத்தில் சொல்வதற்கும் ஒரு மன தைரியம் வேண்டும்!
கன்ஸா பின்த்
அம்ர் (ரலி) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு நபிப் பட்டம் வழங்குவதற்கு
சுமார் ஐந்தாண்டுகளுக்கு முன்பு பிறந்தவர்கள்.
அவர்கள் பிறந்த
காலத்தைய அஞ்ஞான சமூக அமைப்பையும், பிறகு இஸ்லாத்தைத் தழுவி, அதன் சீர்மிகு ஆட்சியையும் ஏற்றமிகு கொள்கைகளின் சிறந்த பலன்களையும் கண்ணாரக்
கண்டவர்கள்!
கன்ஸா (ரலி)
அவர்களுடைய வாழ்க்கையின் அறியாமைக்கால வாழ்க்கையையும் இஸ்லாமிய வாழ்க்கையையும்
ஆராயும்போது ஒரு மனிதனின் சிந்தனை இஸ்லாமிய வரவால் தெளிவடைந்து, இஸ்லாமிய கொள்கையால் மாற்றம் ஏற்பட்டுவிட்டால் அவனுள் ஏற்படும் புரட்சி என்பது எத்தனை உறுதியாக மாறிவிடும் என்பதை தெளிவாக விளக்குகிறது.
மேலும், இஸ்லாமிய வாழ்க்கைக்கும் இஸ்லாமல்லாத வாழ்க்கைக்கும் உள்ள வேறுபாட்டை
விளங்கிக் கொள்வதோடு,
இஸ்லாமிய அழைப்பை ஏற்றுக் கொள்ளும் ஒருவன் அதன்
அறிவுரைகளின் தாக்கத்தால் எத்துணைப் பெரிய பொறுமையாளனாகவும் மகத்தான நன்றியுணர்வு
கொண்ட நல்லடியானாகவும் ஆகிவிடுகின்றான் என்பதையும் தெளிவுபடுத்துகின்றன.
தந்தை இரு
சகோதரர்கள் என வாழ்க்கைப் பயணம் இனிதே நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது தந்தையின்
இழப்பு.
இரு சகோதரர்களின்
பாச மழையில் தமது வாழ்க்கைப் பயணத்தை தொடர்ந்த போது தமது கோத்திரத்தைச் சார்ந்த
ஒருவரோடு திருமணம் அதன் அடையாளமாக ஓர் ஆண்மகனை பெற்றெடுத்ததும் அவர் மரணமடைந்தார்.
பிறகு கன்ஸா (ரலி)
அவர்கள் மர்தாஸ் இப்னு அபீ ஆமிர் என்பவரை மறுமணம் செய்து கொண்டார்கள். அவரின்
மூலம் அம்ர்,
ஜைத், முஆவியா எனும் மூன்று
மகன்களையும் உம்றா எனும் ஒரு மகளையும் பெற்றெடுத்தார்கள். பிறகு மர்தாஸும்
நோய்வாய்ப்பட்டு மரணம் அடைந்தார். அதன்பிறகு கன்ஸா (ரலி) அவர்கள் திருமணம் செய்து
கொள்ளவில்லை. விதவையாகவே வாழ்நாளை கழித்து வந்தார்கள்.
அந்த நாளும் வந்தது...
شهدت
القادسية في أربعة من بنيها، فأوصتهم بالصبر والثبات والرباط، وذكرتهم بما أعد
الله للمجاهدين في سبيله من عظيم الثواب، وحسن المآب، وقالت لهم: اغْدوا إلى قتال
عدوّكم مُسْتَبْصِرين، وبالله على أعدائه مُسْتَنصرين، فإذا رأيتم الحرب قد
شَمَّرَت عن ساقها (أي اشتدَّت واضطَرَبت)، فتَيَمَّمُوا وطِيْسَها (أي شِدَّة
الضِّراب فيها)، تَظْفَروا بالغُنْم والكَرامَة في الخُلْد والمَقامة. فقاتل
بَنُوها يومئذٍ العَدوّ قتالاً شديدًا أَوْرَثَهم الشّهادة جميعاً، ولمّا بلغها
خبرُهم، قالت: الحَمد لله الّذي شَرَّفَني بقتلهم، وأرجو من ربّي أنْ يجمعَني بهم
في مُسْتَقَرّ رحمته..
அன்னை கன்ஸா (ரலி)
அவர்களின் உறுதியான இறைநம்பிக்கையையும், தம்முடைய உயிர்
உடமைகளையும் ஏன்,
பாசத்திற்குரிய பிள்ளைச் செல்வங்கள் அனைத்தையும், இறைவழியில் அர்ப்பணிக்கும் அவர்களின் தியாக மனப்பான்மையையும்
எடுத்துக்காட்டும் ஒரு நிகழ்ச்சி காதிஸிய்யா போரின் போது நிகழ்ந்தது. இது கலீஃபா
உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் ஈராக் நாட்டில் நடைபெற்ற முக்கியமான
போராகும்.
இதில் அன்றைய
ஈரான் அரசாங்கம் சுமார் இரண்டு இலட்சம் போர் வீரர்கள் கொண்ட பெரும் சேனையையும்
பெரியதொரு யானைப் படையையும் முஸ்லிம்களுக்கு எதிராக அனுப்பி வைத்திருந்தது.
முஸ்லிம்களின் படையோ சுமார் 30-ல் இருந்து 40 ஆயிரம் வரையிலான வீரர்களை மட்டும் பெற்றிருந்தது.
அப்போது கன்ஸா
(ரலி) அவர்களும் ஜிஹாதின் - இறைவழிப் போராட்டத்தின் ஆர்வமிகுதியால் களம் நோக்கிப்
புறப்பட்டார்கள். போர்த்திறனும் இளமைத் துடிப்பும் மிக்க தம்முடைய நான்கு
மகன்களையும் உடன் அழைத்து வந்திருந்தார்கள்.
முதல் நாள்
முன்னிரவில் அனைத்து வீரர்களும் சிந்தனை வயப்பட்டிருந்தனர். மறுநாள் விடிந்ததும்
நடைபெற உள்ள பயங்கரமான காட்சியைத் தங்களின் மனத்திரையில் ஓடவிட்டுக் கொண்டு
மௌனத்தில் ஆழ்ந்திருந்தார்கள். ஆனால் அங்கே களத்தின் ஓர் ஓரத்தில் அன்னை கன்ஸா (ரலி)
அவர்கள் தம்முடைய நான்கு புதல்வர்களையும் அருகே அழைத்து அமர்த்தி ஓர் உணர்ச்சிமிகு
உரையைத் தொடங்குகின்றார்கள்.
“என்னுடைய அருமந்தப்
புதல்வர்களே! நீங்கள் சுய விருப்பமுடனும் மகிழிச்சியுடனும்தான் இஸ்லாத்தை
ஏற்றிருக்கின்றீர்கள்,
விரும்பித்தான் ஹிஜ்ரத்தை மேற்கொண்டீர்கள். எந்த இறைவனைத்
தவிர வேறு இறைவன் இல்லையோ –
எவன் என்றென்றும் நிலைத்திருப்பானோ அந்த இறைவன் மீது
சத்தியமாக! எவ்வாறு நீங்கள் ஒரு தாயின் வயிற்றிலிருந்து பிறந்தீர்களோ – அவ்வாறே ஒரே தந்தைக்குப் பிறந்த சகோதரர்களாய் இருக்கின்றீர்கள்.
நான் உங்களின்
தந்தைக்குத் துரோகம் செய்யவுமில்லை. உங்களின் மாமனார்களை இழிவு படுத்தவும் இல்லை.
உங்களுடைய பரம்பரை மாசற்றது. உங்களுடைய குலம் குற்றமற்றது.
قالت فيها: "يا بني إنكم أسلمتم وهاجرتم مختارين، والله الذي لا
إله غيره إنكم لبنو رجل واحد، كما أنكم بنو امرأة واحدة، ما خنت أباكم ولا فضحت
خالكم، ولا هجنت حسبكم ولا غيرت نسبكم. وقد تعلمون ما أعد الله للمسلمين من الثواب
الجزيل في حرب الكافرين. واعلموا أن الدار الباقية خير من الدار الفانية يقول الله
عزَّ وجل: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اصْبِرُوا وَصَابِرُوا وَرَابِطُوا
وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ} [آل عمران: 200]. فإذا أصبحتم غدًا
إن شاء الله سالمين، فاغدوا إلى قتال عدوكم مستبصرين، وبالله على أعدائه مستنصرين.
وإذا رأيتم الحرب قد شمرت عن ساقها واضطرمت لظى على سياقها وجللت نارًا على
أوراقه، فتيمموا وطيسه، وجالدوا رئيسها عند احتدام خميسها تظفروا بالغنم والكرامة
في دار الخلد والمقامة"
என் அன்புச்
செல்வங்களே! இறைவழியில் ஜிஹாத் செய்வதை விடவும் அதிகமான நம்மையைப் பெற்றுத் தரும்
காரியம் வேறொன்றும் இல்லை என்பதை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். மேலும் மறுமையின்
நிலையான வாழ்க்கை,
அழியும் இவ்வுலக வாழ்க்கையைவிட எவ்வளவோ சிறந்ததாகும்
என்பதையும் நன்கு அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ் கூறுகின்றான்:- “இறைநம்பிக்கை
கொண்டவர்களே! பொறுமையைக் கைக்கொள்வீர்களாக! அசத்தியவாதிகளுக்கு எதிரில் உறுதியாக
நிலைத்து நிற்பீர்களாக! (சத்தியத்திற்காகத் தொண்டு புரிய) எப்பொழுதும்
ஒருங்கிணைந்து முனைப்புடன் இருப்பீர்களாக! மேலும் அல்லாஹ்வுக்கு அஞ்சியே
வாழ்வீர்களாக! இதனால் நீங்கள் வெற்றியாளர்களாய்த் திகழக்கூடும். (3:200)
என் அருமைப்
புதல்வர்களே! போர் சூடுபிடிக்க ஆரம்பித்து அதன் தீ கொழுந்து விட்டெரியத்
தொடங்குவதை நீங்கள் கண்டதும் கிளர்ந்தெழுந்து – ஆர்ப்பரித்து எதிரிகளின்
அணிகளிடையே ஊடுருவிச் செல்ல வேண்டும். இறைவழியில் பித்துப்பிடித்தவர்களாக
வாட்களைச் சுழற்றித் தாக்குதல் தொடுத்திட வேண்டும். அல்லாஹ்விடம் உதவிகோரிப்
பிரார்த்தனை புரிந்த வண்ணம் இருங்கள். வெற்றி கிட்டினால் அது நல்லது. ஆனால், மரணம் அடைந்திட நேர்ந்தால், மறுமையின்
சிறப்பற்குரியவர்களாய் ஆவீர்கள் என்பது அதைவிடவும் மிக உயர்வானதாகும்.
மறுநாள் காலையும்
போர் உச்சக்கட்டத்தை அடைந்தபோது அந்த நான்கு புதல்வர்களும் தங்களுடைய தாயின்
அறிவுரைக்கு ஏற்ப வீராவேசத்துடன் எதிரிப்படையினர் மீது ஊடுருவி தாக்குதல் தொடுக்க
ஆரம்பித்தார்கள். வெகுநேரம் வரை அயராமல் சுழன்று சுழன்று தீர்க்கமாகப் போர்
புரிந்து கொண்டிருந்தார்கள். இறுதியில் ஒருவர் பின் ஒருவராக ஷஹீதாக்கப்பட்டார்கள்.
தம்முடைய
புதல்வர்கள் போரில் வீரமரணம் அடைந்த செய்தியை அன்னை கன்ஸா (ரலி) அவர்கள்
கேள்விப்பட்டதும்,
“என்னுடைய புதல்வர்களுக்கு ‘ஷஹாதத்’
எனும் உயர்ந்த பதவியை வழங்கிய இறைவனுக்கு நன்றி
உரித்தாவதாக! அல்லாஹ்வுடைய அருளின் நிழலில் என்னுடைய பிள்ளைகளை நான் சந்திப்பேன்
எனும் நம்பிக்கை –
அவனுடைய கருணையால் எனக்கு உள்ளது. ( நூல்: அல் வாஃபீ ஃபில்
வஃப்யாத்,
உஸுதுல் ஃகாபா, அல் இஸ்தீஆப், ஜவாஹிருல் அதப் )
அல்லாஹ்விற்காக
இழக்கும், விட்டு விடும், தவிர்ந்து வாழும், தியாகம் செய்யும் உயிர்ப்புடன் வாழும்
வாழ்வை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவருக்கும் நஸீபாக்குவானாக! ஆமீன்! ஆமீன்!
யாரப்பல் ஆலமீன்! வஸ்ஸலாம்!!!
No comments:
Post a Comment