இறைநேசர்கள்
இல்லையென்றால்....?
ரபீஉல் ஆகிர்
மாதம் முஸ்லிம் சமூகம் ஒரு இறை நேசரின் பெயரால் இறைநேசத்தின் வலிமையை, தேவையை இந்த உம்மத்திற்கும், உலகிற்கும் உணர்த்துகிற
மாதமாகும்.
ஆம்! ரபீஉல் ஆகிர்
மாதம் பிறை11,
முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் இவ்வுலகில்
பிறந்த நாள் ஆகும்.
பொதுவாக
இறைநேசர்களை நினைவு கூறுவதே இதன் நோக்கமாகும். முஹ்யித்தீன் மௌலூது ஓதுகிற
சபைகளில் பல (சுமார் 50
க்கும் மேற்பட்ட) வலிமார்களின் பெயர்களும்
நினைவுபடுத்தப்படுவது கவனிக்கத்தக்கதாகும்.
இறைநேசப்
பெருந்தகை முஹையித்தின் அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் குறித்து சிறப்பாக
நினைவுகூறப்படுகிற இந்தகாலகட்டத்தில் இறைநேசர்கள் யார்? அந்த நிலையயை எப்படிப் பெறுவது? இறைநேசர்களை
எந்தக்கண்ணோட்டத்தில் அணுகவேண்டும் என்பது பற்றி சமுதாயத்திற்கு பல விளக்கங்கள்
தேவைபடுகின்றன.
முஹ்யித்தீன்
அப்துல் காதிர் ஜீலானி அவர்கள், மக்களிடம் உலக மோகம்
மிகைத்திருந்த காலத்தில் மக்களை பக்தி மார்க்கத்திற்கு அழைத்து மாபெரும் வெற்றி
கண்டவர்.
இறைநேசர்களை நாம்
நினைவு கூறுவதும் இதற்காகவே!
சமீப சில
காலங்களாகவே இறை நேசர்கள் எனும் சொல் தவிர்க்கப்பட வேண்டிய ஒரு சொல்லாக பிரச்சாரம்
செய்யப்பட்டு வருகிறது.
சில பகுதிகளில்
(தர்ஹாக்களில்) நடைபெறுகிற முற்றிலும் மார்க்கத்திற்கு அப்பாற்பட்ட ஒரு சில
செயல்பாடுகளை காரணமாக காட்டி இறைநேசர்களை பற்றிய ஒவ்வாமையை சமுதாயத்தில் சிலர்
ஏற்படுத்தி வருகிறார்கள்.
இறை நேசத்தை
பெறவேண்டும் என்பதே முஸ்லிம்களின் ஆதார உணர்வாகவும் அதற்காக முயற்சிப்பது
அவர்களின் அடிப்படை செயல்திட்டமாகவும் இருக்கும் சூழ்நிலையில் அதன் முன்னோடிகளாக
திகழ்ந்த பெருமக்களை நிராகாரிப்பதோ அவர்களின் சேவைகளை மலினப்படுத்துவதோ அவர்களை
மரியதை குறைவாக விமர்சிப்பதோ இந்த உம்மத்தை அவர்களது ஆதார உணர்விலிருந்து
திசைதிருப்புவதாய் அமைந்து விடும்.
இறைநேசர்கள் என்போர் இவ்வுலகில் இல்லாமலில்லை!
أَلَاإِنَّ
أَوْلِيَاءَاللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَاهُمْ يَحْزَنُونَ الَّذِينَ
آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ لَهُمُ الْبُشْرَىٰ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي
الْآخِرَةِ لَا تَبْدِيلَ لِكَلِمَاتِ اللَّهِۚ ذَٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ.
(முஃமின்களே!) அறிந்து
கொள்ளுங்கள்;
நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். அவர்கள் ஈமான் கொண்டு (அல்லாஹ்விடம்) பயபக்தியுடன்
நடந்து கொள்வார்கள். அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் நன்மாராயமுண்டு; அல்லாஹ்வின்
வாக்கு(றுதி)களில் எவ்வித மாற்றமுமில்லை - இதுவே மகத்தான பெரும் வெற்றி
ஆகும்.(அல்குர்ஆன்: 10:62-64)
இறைநேசருக்கான இலக்கணம்?
இறைவனை அறிந்து
அவனுக்கு தூய முறையில் வழிபடுவதை வழக்கமாக்கி கொண்டவரே இறைநேசர் என ஹாபிழ் இப்னு
ஹஜர்அல்அஸ்கலானி விளக்கமளிக்கிறார்கள்.
الولي :
العالم بالله والمواظب على طاعته المخلص في عبادته- فتحالباري -
( அல் ஆலிமு பில்லாஹி
வல்முவாظழிபு அலா தாஅதிஹி அல் முخஹ்லிஸு பீ இபாததிஹி - இறைநேசர் என்பவர் இறைவனை அறிந்தவராகவும்,இறை வணக்கத்தின் மீது
தொடர்படியாக இருப்பவராகவும், மனத்தூய்மையுடன் இறை
வணக்கத்தில் ஈடுபடுபவராகவும் இருப்பார். ( ஃபத்ஹுல் பாரி - ஹதீஸ் எண் 6502 )
முஃமின்களில்
அல்லாஹ்வின் நேசர்கள் இரண்டு பிரிவினர்கள் ஆவார்கள்.
1. நடுநிலையாளர்கள்.,
2. அல்லாஹ்விற்கு
நெருக்கமானவர்கள்.
இதில் முதல்
பிரிவினர் உடலாலும்,
உள்ளத்தாலும் கடமையான செயல்களை நிறைவேற்றி அல்லாஹ்வை
நெருங்குபவர்கள்.
இரண்டாவது
பிரிவினர்கள் நற்செயல்களால் முந்துபவர்கள்.
அதாவது கடமையான
அமல்களுடன் சேர்த்து உபரியான வணக்கங்கள் மூலம் அல்லாஹ்வை நெருங்குபவர்கள்
ஆவார்கள்.
பெருமானார் (ஸல்)
அவாகள் கூறினார்கள்:-
عَنْ
أَبِي هُرَيْرَةَقَالَ قَالَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
إِنَّاللَّهَ قَالَ مَنْ عَادَلِي وَلِيًّا فَقَدْآذَنْتُهُ بِالْحَرْبِ وَمَا
تَقَرَّبَإِلَيَّ عَبْدِي بِشَيْءٍ أَحَبَّ إِلَيَّ مِمَّاافْتَرَضْتُ عَلَيْهِ
وَمَا يَزَالُ عَبْدِييَتَقَرَّبُ إِلَيَّ بِالنَّوَافِلِ حَتَّى أُحِبَّهُ
فَإِذَا أَحْبَبْتُهُ كُنْتُ سَمْعَهُ الَّذِي يَسْمَعُبِهِ وَبَصَرَهُ الَّذِي
يُبْصِرُبِهِ وَيَدَهُ الَّتِي يَبْطِشُبِهَا وَرِجْلَهُا لَّتِي يَمْشِيبِهَا
وَإِنْ سَأَلَنِي لَأُعْطِيَنَّهُ وَلَئِنْ اسْتَعَاذَنِي لَأُعِيذَنَّهُ
وَمَاتَرَدَّ دْتُ عَنْشَيْءٍ أَنَ افَاعِلُهُ تَرَدُّدِي عَنْ نَفْسِ الْمُؤْمِنِ
يَكْرَهُ الْمَوْتَ وَأَنَاأَكْرَهُ مَسَاءَتَهُ
அல்லாஹ் கூறினான்
எவன் என் நேசரை பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர்ப்பிரகடண்ம் செய்கிறேன்.
எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விடவேறு எதன் மூலமும் என்
அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான
(நபிலான) வணக்கங்களால் என் பக்கம்நெருங்கி வந்துகொண்டேயிருப்பான். இறுதி யில் அவனை
நான் நேசிப்பேன். அவ்வாறுநான் அவனை நேசித்துவிடும் போது அவன் கேட்கின்ற செவியாக
அவன் பார்க்கின்றகண்ணாக அவன் பற்றுகின்ற கையாக அவன் நடக்கின்ற காலாக நான்
ஆகிவிடுவேன். அவன்என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன்
பாதுகாப்புக்கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். (புகாரி6502)
ஏன் இறைநேசர்களை நினைவு கூற வேண்டும்?
இறை நேசர்கள் என்ற
சிறந்த மகத்தான மனிதர்களை நினைவு கூர்ந்து அவர்களது வாழ்க்கை வரலாறுகளை படிப்பதும்
கேட்பதும் நமது ஈமானை பலப்படுத்தும் ஆதாரா சுருதியாகும். தக்வாவின் வழிமுறைகளை
நமக்கு அறிமுகப்படுத்தும் வலிமையான ஆயுதமும் ஆகும்.
يَاأَيُّهَا
الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَكُونُوا مَعَ الصَّادِقِينَ
ஈமான்
கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும் உண்மையாளர்களுடன்
நீங்களும் ஆகிவிடுங்கள். ( அல்குர்ஆன்: 9: 119 )
இந்த வசனத்தில்
தக்வாவை வலியுறுத்தும் அல்லாஹ் இந்த வசனத்திலேயே அதற்கான வழிமுறையையும்
சொல்கிறான்.
قال
القرطبي : وقيل: الصَّادِقِينَ هم الذين استوت ظواهرهم وبواطنهم. قال ابن العربي:
وهذا القول هو الحقيقة والغاية التي إليها المنتهى فإن هذه الصفة يرتفع بها النفاق
في العقيدة والمخالفة في الفعل.
தக்வாவிற்கான வழி:
நல்லவர்களுடன் இருத்தல் - நல்லவர்களைப் படித்தல் அவர்களின் இயல்பை பழகுதல்
பயபக்தியுடைய மனிதர்களுடன் பழகுகிற போது அவர்களது வரலாற்றைப் பார்க்கிறபோது எது
தக்வா என்பது புரியும்.
ஏனெனில், இமாம் குர்துபி (ரஹ்) அவர்கள் الصَّادِقِينَ என்பவர்கள் யார் என்பதற்கு வரையறை கூறும் போது
அவர்களின் வெளிரங்க வாழ்வும் (பொதுவாழ்வும்) மறைவான வாழ்வும் (தனிப்பட்ட வாழ்வும்)
சரிசமமாகவே இருக்கும் என்று கூறுகின்றார்கள்.
தஃவாவே அவர்களின் பிரதான நோக்கம்!!
அவ்லியாக்கள்
எனும் இறைநேசர்கள் இந்த உலகில் வாழும் காலத்தில் பெருமானார் (ஸல்) அவர்களின் நபி
மொழிக்கு ஒப்ப வாழ்ந்தவர்கள்.
இறைவனின் பக்கமும்
இறையருளின் பக்கமும் நெருக்கி வைப்பதிலும், இறை மார்க்கமான
இஸ்லாத்தின் பால் மக்களை அழைப்பதிலும் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக வாழ்ந்தவர்கள்.
ஆதலால் தான்
உலகெங்கும் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள வலிமார்களின் மஜார்களை ஜியாரத் செய்யும்
போது ஒரு உண்மையை நாம் புரிந்து கொள்ள முடியும்.
ஒரு ஊரில்
நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள இறைநேசர் உலகின் ஏதோ ஒரு பாகத்தில் இருந்து வந்து அந்த
ஊர் மக்களுக்கும் அதற்கு அருகே உள்ள பகுதிகளுக்கும் இஸ்லாமிய மார்க்கத்தை
எடுத்தியம்பும் பணியில் தம்மை அர்ப்பணித்து அங்கேயே வாழ்ந்து மரணித்து அடக்கம்
செய்யப்பட்டவர்களாவர். அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இறைநேசர்களைப் பொருந்திக்
கொள்வானாக!
இறைநேசர்கள்
என்பவர்கள் சாமானிய மக்கள் அல்ல. மாறாக, அவர்கள் இந்த உலகில் வாழும் போது இஸ்லாத்தை, இஸ்லாமிய வாழ்வியல் நெறியை அதன் தூய வடிவில் மக்களிடையே
கொண்டு சேர்க்கும் பணியில் தங்களை முழுவதுமாக அர்ப்பணித்தவர்கள்.
ஒன்று:
இஸ்லாத்தின் பக்கம் லட்சக்கணக்கான மக்களை கொண்டு வந்து சேர்த்து கொடும் நரகில்
வீழாமல் பாதுகாத்தவர்கள்.
இரண்டு:
ஈமான் கொண்டு வாழ்ந்து வந்த மக்களை தடம் புரண்டு சென்று விடாமல் தமது உபதேசங்களால்
சரியான தடத்தில் நடக்க வைத்தவர்கள்.
1) அழிவில் வீழ்வதிலிருந்து காத்தவர்கள்.
فَخَرَجَ
عَلٰى قَوْمِهٖ فِىْ زِيْنَتِهٖ قَالَ الَّذِيْنَ يُرِيْدُوْنَ الْحَيٰوةَ
الدُّنْيَا يٰلَيْتَ لَـنَا مِثْلَ مَاۤ اُوْتِىَ قَارُوْنُ اِنَّهٗ لَذُوْ حَظٍّ
عَظِيْمٍ
அப்பால், அவன் (கர்வத்துடனும்,
உலக) அலங்காரத்துடன் தன் சமூகத்தாரிடையே சென்றான்; (அப்போது) இவ்வுலக வாழ்க்கையை எவர் விரும்புகிறார்களோ அவர்கள்: “ஆ! காரூனுக்கு கொடுக்கப்படடதைப் போன்று நமக்கும் இருக்கக்கூடாதா? நிச்சயமாக,
அவன் மகத்தான பாக்கியமுடையவன்” என்று கூறினார்கள்.
وَقَالَ
الَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَ وَيْلَـكُمْ ثَوَابُ اللّٰهِ خَيْرٌ لِّمَنْ اٰمَنَ
وَعَمِلَ صَالِحًـا وَلَا يُلَقّٰٮهَاۤ اِلَّا الصّٰبِرُوْنَ
கல்வி ஞானம்
பெற்றவர்களோ;
“உங்களுக்கென்ன கேடு! ஈமான் கொண்டு, நல்ல அமல்களை செய்பவர்களுக்கு அல்லாஹ் அளிக்கும் வெகுமதி இதைவிட மேன்மையானது; எனினும்,
அதைப் பொறுமையாளரைத் தவிர, (வேறு) எவரும் அடைய மாட்டார்கள்” என்று கூறினார்கள்.
فَخَسَفْنَا
بِهٖ وَبِدَارِهِ الْاَرْض فَمَا كَانَ لَهٗ مِنْ فِئَةٍ يَّـنْصُرُوْنَهٗ مِنْ
دُوْنِ اللّٰهِ وَمَا كَانَ مِنَ الْمُنْتَصِرِيْنَ
ஆகவே, நாம் காரூனையும் அவன் வீட்டையும் பூமியில் அழுந்தச் செய்தோம்; அல்லாஹ்வையன்றி அவனுக்கு உதவி செய்கிற கூட்டத்தார் எவருமில்லை; இன்னும் அவன் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளவும் முடியவில்லை.
وَاَصْبَحَ
الَّذِيْنَ تَمَـنَّوْا مَكَانَهٗ بِالْاَمْسِ يَقُوْلُوْنَ وَيْكَاَنَّ اللّٰهَ
يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَّشَآءُ مِنْ عِبَادِهٖ وَيَقْدِرُ لَوْلَاۤ اَنْ
مَّنَّ اللّٰهُ عَلَيْنَا لَخَسَفَ بِنَا وَيْكَاَنَّهٗ لَا يُفْلِحُ
الْكٰفِرُوْنَ
முன் தினம்
அவனுடைய (செல்வ) நிலையை விரும்பியவர்களெல்லாம், “ஆச்சரியம் தான்!
அல்லாஹ் தன் அடியார்களில்,
தான் நாடியவர்களுக்கு ஆகார வசதிகளைப் பெருக்குகிறான், சுருக்கியும் விடுகிறான்; அல்லாஹ் நமக்கு கிருபை
செய்யவில்லையாயின் அவன் நம்மையும் (பூமியில்) அழுந்தச் செய்திருப்பான்; ஆச்சரியம் தான்! நிச்சயமாக காஃபிர்கள் சித்தியடைய மாட்டார்கள்” என்று கூறினார்கள். ( அல்குர்ஆன்: 28:
79 - 83 )
2) அகமிய (மஃரிபா) ஞானத்தின் வலிமையை உணர்த்துவார்கள்.
மூஸா அலை கிள்ர்
அலை ஆகியோர் மேற்கொண்ட பயணங்களும் அதன் ஊடாக இருவரின் இடையே நடந்த உரையாடல்களும்
நிகழ்ந்த சம்பவங்களும்
மஃரிபா எனும் அகமிய ஞானத்தின் தேவையை அதன் வலிமையை
உணர்த்துகின்றது.
இறைநேசர் கிள்ர்
(அலை) அவர்களை அடையாளப்படுத்தும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன்
فَوَجَدَا عَبْدًا مِّنْ عِبَادِنَاۤ اٰتَيْنٰهُ رَحْمَةً مِّنْ عِنْدِنَا وَعَلَّمْنٰهُ مِنْ لَّدُنَّا عِلْمًا
(இவ்வாறு) அவ்விருவரும்
நம் அடியார்களில் ஒருவரைக் கண்டார்கள்; நாம் அவருக்கு
நம்மிடமிருந்து கிருபை அருளியிருந்தோம்; இன்னும் நாம் அவருக்கு
நம்மிடமிருந்து கல்வி ஞானத்தையும் கற்றுக் கொடுத்திருந்தோம். ( அல்குர்ஆன்: 18: 65 )
நடந்த
சம்பவங்களுக்கு விடையும் விளக்கமும் தருகிற போது இறைநேசர் கிள்ர் (அலை) அவர்கள்
فَاَرَدْنَاۤ
اَنْ يُّبْدِلَهُمَا رَبُّهُمَا خَيْرًا مِّنْهُ زَكٰوةً وَّاَقْرَبَ رُحْمًا
“இன்னும், அவ்விருவருக்கும்,
பரிசுத்தத்திலும் (பெற்றோரிடம்) அன்பு செலுத்துவதிலும்
சிறந்திருக்க கூடிய (ஒரு மகனை) அவ்விருவருடைய இறைவன் (கொலையுண்டவனுக்குப்) பதிலாக
கொடுப்பதை நாம் விரும்பினோம். ( அல்குர்ஆன்: 18: 81 )
فَاَرَادَ
رَبُّكَ اَنْ يَّبْلُغَاۤ اَشُدَّهُمَا وَيَسْتَخْرِجَا كَنْزَهُمَا
رَحْمَةً مِّنْ رَّبِّكَ وَمَا فَعَلْتُهٗ عَنْ اَمْرِىْ ذٰ لِكَ تَاْوِيْلُ
مَا لَمْ تَسْطِعْ عَّلَيْهِ صَبْرًا
“எனவே, அவ்விருவரும் தக்க பிராயமடைந்த தம்மிருவரின் புதையலையும் வெளிப்படுத்தி
(எடுத்துக்) கொள்ள வேண்டும் என உம்முடைய இறைவன் நாடினான். (இவையெல்லாம்) உம்
இறைவனுடைய ரஹ்மத்தில் நின்றும் உள்ளவை; என் விருப்பு, வெறுப்பின்படி எந்தக் காரியத்தையும் செய்யவில்லை; எதைப் பற்றி நீர் பொறுமையாக இருக்க முடியவில்லையோ அதன் விளக்கம் இது தான்” என்று கூறினார்.
( அல்குர்ஆன்: 18: 82 )
قَالَ
يٰۤاَيُّهَا الْمَلَؤُا اَيُّكُمْ يَاْتِيْنِىْ بِعَرْشِهَا قَبْلَ اَنْ
يَّاْتُوْنِىْ مُسْلِمِيْنَ
“பிரமுகர்களே! அவர்கள்
என்னிடம் வழிபட்டவர்களாக வருமுன், உங்களில் யார் அவளுடைய
அரியாசனத்தை என்னிடம் கொண்டுவருபவர்?” என்று (ஸுலைமான்
அவர்களிடம்) கேட்டார்.
قَالَ
الَّذِىْ عِنْدَهٗ عِلْمٌ مِّنَ الْـكِتٰبِ اَنَا اٰتِيْكَ بِهٖ قَبْلَ اَنْ
يَّرْتَدَّ اِلَيْكَ طَرْفُكَؕ فَلَمَّا رَاٰهُ مُسْتَقِرًّا عِنْدَهٗ
இறைவேதத்தின்
ஞானத்தைப் பெற்றிருந்த ஒருவர்: “உங்களுடைய கண்ணை மூடித்திறப்பதற்குள், அதை உங்களிடம் கொண்டு வந்து விடுகிறேன்” என்று கூறினார்; (அவர் சொன்னவாறே) அது தம்மிடம் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டார். ( அல்குர்ஆன்: 27:
38, 40 )
3) இறைநம்பிக்கையாளர்களுடன் இணைந்து இஸ்லாமிய வெற்றிக்கு அடித்தளம் அமைப்பார்கள்.
ஹள்ரத் கௌதுல்
அஃழம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆன்மீக
சீடராக பைத்துல் முகத்திஸை கிறிஸ்தவர்களிடமிருந்து வென்றெடுத்த மாவீரர் சுல்தான்
ஸலாஹுத்தீன் அய்யூபி ரஹிமஹுல்லாஹு அவர்கள் இருந்தார்கள் என்று வரலாற்று
குறிப்புகள் கூறுகின்றன.
இஸ்லாமிய
சாம்ராஜ்ஜியத்தில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்கும் சுல்தான்
சலாஹுத்தீன் அய்யுபீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அண்ணவர்களின் தந்தையின் ஆத்மீக குருவாக
திகழ்ந்தவர்கள் கௌஸுல் ஆலம் அண்ணவர்கள்.
தாம் சிறுவயதில்
கௌஸுல் ஆலம் அண்ணவர்களிடத்தில் தந்தையவர்கள் அழைத்துச்சென்ற போது கௌஸ் நாயகம் சுல்தான்
சலாஹுத்தீன் அய்யுபி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அண்ணவர்களின் கழுத்து பகுதியில்
முத்தமிட்டார்கள்.
அதன் பிறகு
வரலாறுகளை புரட்டினால் தெரியும் ஒரு முறைகூட எதிரிகளின் வாள் அய்யுபி அண்ணவர்களின்
கழுத்தை தீண்டியது இல்லை...
சுல்தான்
ஸலாஹுத்தீன் அல் அய்யூபி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் மரணிக்கும் போது, ஒருவர் அவரிடத்தில் வந்து,
"நீங்கள்
இஸ்லாத்துக்காக எத்துனையோ போர்களில் கலந்து கொண்டுள்ளீர்கள். ஆனால், ஒரு யுத்தத்திலாவது ஷஹீதாவில்லையே!" என்று கூறினார்கள். அதற்கு சுல்தான்
அவர்கள்,
"நான் எனது
வாழ்க்கை முழுவதும் ஷஹீதாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால், எனது எதிரியின் வாள் எனது கழுத்தை தொடுவதில்லை" என்றார். காரணம் வினவிய
போது சுல்தான் அவர்கள்,
"எனது தந்தை
சிறுவயதில் என்னை முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (குத்திஸ ஸிர்ருஹ்)
அவர்களிடத்தில் கொண்டு சென்றார்கள். அப்போது குதுபு நாயகம்
தனது #கைகளை எனது கழுத்தில் வைத்தார்கள். குதுபு நாயகத்தின் முபாரக்கான கரங்கள் பட்ட
எனது கழுத்தில் எப்படி
எதிரியின் வாள் படும்?" என்று கூறினார்கள்.
எகிப்தில்
காதிரிய்யா தரீக்கத்தின் ஸாவியாக்களை முதலில் நிறுவியவர் சுல்தான் ஸலாஹுத்தீன் அல்
அய்யூபி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள்,
''ஷைஅன் லில்லாஹ் யா ஷைஹ்
அப்துல் காதிர் ஜீலானி''
என்று தனது ஷெய்ஹான கௌதுல் அஃழத்தின் நாமத்தை தனது வாளில்
பதித்திருந்தார்கள் அந்த வாள் இன்றும் Topkapi நூதனசாலையில் உள்ளது.
மேலதிக
விபரங்களுக்கு: https://seekerofthesacredknowledge.wordpress.com/2013/04/24/sultan-salahuddin-al-ayubi-a-miracle-of-shaykh-abdul-qadir-al-jilani-from-baghdad/ )
(நன்றி: http://akaabdulnasarsiraji.blogspot.com/2017/01/blog-post_17.html?m=1 )
4) கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் மக்களை நல்வழிப்படுத்தியவர்கள்!
وَقِيلَ
: مَرَّ الْحَسَنُ الْبَصْرِيُّ بِشَابٍّ وَهُوَ يَضْحَكُ ، فَقَالَ لَهُ : يَا
بُنَيَّ هَلْ جُزْتَ عَلَى الصِّرَاطِ ؟ قَالَ : لَا فَقَالَ : هَلْ تَبَيَّنَ
لَكَ ، إِلَى الْجَنَّةِ تَصِيرُ أَمْ إِلَى النَّارِ ؟ قَالَ : لَا. قَالَ :
فَفِيمَ هَذَا الضَّحِكُ ؟ قَالَ : فَمَا رُؤِيَ الْفَتَى ضَاحِكًا بَعْدَهُ
قَطُّ. يَعْنِي أَنَّ قَوْلَ الْحَسَنِ وَقَعَ فِي قَلْبِهِ فَتَابَ عَنِ
الضَّحِكِ.
ஒரு நாள் இமாம்
ஹஸன் அல் பஸரீ (ரஹ்) அவர்கள் வீதி வழியாக சென்று கொண்டிருந்தார்கள். அங்கே ஓர்
இளைஞன் ஏதோ ஒரு காட்சியைக் கண்டு சிரித்துக் கொண்டிருந்தான்.
அவனிடம், ஓ மகனே! நீ ஸிராத்துல் முஸ்தகீம் பாலத்தை கடந்து விட்டாயா? என்று கேட்டார். அவன்,
”இல்லை” என்றான்.
நீ சுவனம்
செல்வாயா?
அல்லது நரகம் செல்வாயா? என்பது உமக்கு
தீர்மானமாகத் தெரிந்து விட்டதா?” என்று கேட்டார்கள்.
அதற்கவன் “இல்லை”
என்றான். அப்படியென்றால், எதற்காக நீ இப்படிச் சிரிக்க வேண்டும்? என்று மீண்டும்
கேட்டார்கள்.
இமாம் ஹஸன் பஸரீ
(ரஹ்) கூறுகின்றார்கள்: “
இந்த நிகழ்வுக்குப் பின்னர் அந்த இளைஞனை சிரிப்பவனாக ஒரு
போதும் நான் கண்டதில்லை. நான் கூறிய நல்லுபதேசம் அவனுடைய உள்ளத்தில் நல்ல
மாற்றத்தை உருவாக்கி இருக்கின்றது." ( நூல்: தம்பீஹுல்
ஃகாஃபிலீன்,
பாகம்: 1, பக்கம்: 149 )
5) அறிவுக்கண்களை திறந்தவர்கள்.
புஹ்லூல் மஃப்தூன்
என்கிற இறைநேசர் ஹாரூன் ரஷீத் அவர்களின் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்தவர்கள்.
புஹ்லூல் (ரஹ்)
அவர்களை சக காலத்தில் வாழ்ந்த எல்லா மேதைகளும், அறிஞர்களும் மரியாதையும், கண்ணியமும் செலுத்தி வந்திருக்கின்றனர்.
ஆனால், மக்களும் நாடும் அவரை பைத்தியக்காரன் என்றே அழைத்தது. இதற்கு ஆட்சியாளர்
கலீஃபா ஹாரூன் ரஷீத் அவர்களும் விதிவிலக்கல்ல. அவரும் புஹ்லூல் (ரஹ்) அவர்களை
பைத்தியக்காரன் என்றே அழைத்தார்.
يحكى أن
بهلول كان رجلا مجنونا فى عهد الخليفة العباسي هارون الرشيد
..
ومن
طرائف بهلول أنه مرعليه الرشيد يوما وهو جالس على إحدى المقابر ..
فقال له
هارون معنفا "
يا
بهلول يا مجنون متى تعقل ؟ "
فركض
بهلول وصعد إلى أعلى شجرة ثم نادى على هارون بأعلى صوته
"
ياهارون
يا مجنون متى تعقل ؟"
فأتى
هارون تحت الشجرة وهو على صهوة حصانه وقال له " أنا المجنون أم أنت
الذى
يجلس على المقابر "
فقال له
بهلول " بل أنا عاقل "
قال
هارون وكيف ذلك ؟
قال
بهلول "
لأنى
عرفت أن هذا زائل
وأشار
إلى قصر هارون
وأن هذا
باق وأشار إلى القبر ،
فعمرت
هذا قبل هذا ،
وأما
أنت فإنك قد عمرت هذا ( يقصد قصره ) وخربت هذا ( يعنى القبر
) ..
فتكره
أن تنتقل من العمران إلى الخراب
مع أنك
تعلم أنه مصيرك لامحال ،
وأردف
قائلا " فقل لي أينا المجنون ؟"
،
فرجف قلب
هارون الرشيد من كلمات بهلول وبكى حتى بلل لحيته وهو يقول " والله إنك لصادق .."
ثم قال
هارون زدنى يا بهلول
فقال
بهلول " يكفيك كتاب الله فالزمه
. "
قال
هارون " ألك حاجة فأقضيها
"
قال
بهلول: نعم ثلاث حاجات إن قضيتها شكرتك
قال
فاطلب ،
قال :
" أن تزيد فى عمري "
قال :
"لا اقدر "
قال :
أن تحميني من ملك الموت
قال :
لا أقدر
قال
:" أن تدخلنى الجنة وتبعدنى عن النار
"
قال :
" لا أقدر "
قال :
فاعلم انت مملوك ولست ملك " ولاحاجة لي عندك
"
ஒரு முறை அரசு
முறை பயணமாக வெளியூர் சென்று திரும்பிக் கொண்டிருந்த கலீஃபா ஹாரூன் அவர்களின்
பார்வையில் அந்தக் காட்சி தென்படுகிறது.
பார்வையில் பட்ட
அந்த இடத்தை நோக்கி வந்தார்கள். அது ஒரு மண்ணறை அங்கே புஹ்லூல் (ரஹ்) அமர்ந்து
அழுது கொண்டிருக்கின்றார்.
அருகே வந்த ஹாரூன்
அவர்கள் “பைத்தியக்காரரே! எப்போது உமது பைத்தியம் தெளிந்தது. எப்போது நீர் அறிவு
பெற்றீர் என்று கேலியாகக் கேட்டார்.
அப்போது, அருகில் இருந்த மரத்தில் ஏறி, மரத்தின் மத்தியப்
பகுதியில் அமர்ந்து கொண்டு மன்னர் ஹாரூனை சப்தமாக அழைத்தார்.
மன்னர் குதிரையில்
அமர்ந்தபடி,
மரத்தின் அருகே வந்தார். அப்போது மன்னரை நோக்கி “ஓ பைத்தியக்கார மன்னனே! எனக்கு இப்போது பைத்தியம் தெளிந்து விட்டது. உமக்கு
எப்போது பைத்தியம் தெளியப்போகிறது?” என்று கேட்டார்.
அதிர்ந்து போன
மன்னர் ஹாரூன்,
ஆவேசமாக புஹ்லூல் (ரஹ்) அவர்களை நோக்கி “உம்மைத் தான் ஊர் மக்கள் பைத்தியம் என்று சொல்கின்றார்கள். நீ பைத்தியமா? அல்லது நான் பைத்தியமா?”
என்று கேட்டார்.
அதற்கு, புஹ்லூல் (ரஹ்) அவர்கள் ”நான் தெளிவோடு தான் இருக்கின்றேன்.
நீர் தான் பைத்தியக்காரனாய் அலைகின்றீர்” என்றார்.
எப்போது நீர்
பைத்தியத்திலிருந்து தெளிவு பெற்றீர் என மன்னர் புஹ்லூலை
நோக்கி கேட்ட போது மன்னனின் மாளிகை இருந்த இடத்தைக் காட்டி “இது அழிந்து போகும்”
மண்ணறையைக் காட்டி “இது தான் நிரந்தரமானது” என்பதை நான் எப்போது உணர்ந்தேனோ அப்போதே நான் தெளிவு அடைந்து விட்டேன். மேலும், அழிந்து போகும் இவ்வுலக வாழ்க்கைக்காக வாழாமல் நிரந்தரமான இந்த மண்ணறை
வாழ்க்கைக்காக வாழ ஆரம்பித்து விட்டேன்.
ஆனால், நீரோ இன்னமும் அழிந்து போகும் இவ்வுலக வாழ்விற்காக, சொகுசு வாழ்க்கையை வாழ்கின்றீர்! நிரந்தரமான ஓர் வாழ்க்கையை உணர்த்தும் மண்ணறை
வாழ்க்கைக்காக என்றாவது வாழ்ந்திருக்கின்றீரா?” இப்போது சொல்லும்!
நீர் பைத்தியக்காரரா?
நான் பைத்தியக்காரனா?” என்று.
இந்த வார்த்தையைக்
கேட்டதும் தான் தாமதம்,
மன்னர் ஹாரூன் ரஷீத் அவர்கள் தாரை தாரையாய் கண்ணீர்
வடித்தார்கள். தன் அகக்கண்ணை திறந்து விட்ட புஹ்லூல் (ரஹ்) அவர்களை நன்றிப்
பெருக்கோடு பார்த்து விட்டு “அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுச்
சொல்கின்றேன்! நீர் உண்மையாளர்! பைத்தியக்காரர் அல்ல” என்று கூறினார்கள்.
பின்னர், ”புஹ்லூல் அவர்களே! எனக்கு ஏதாவது உபதேசம் செய்யுங்கள்!” என்றார் ஹாரூன் ரஷீத் அவர்கள். “உம் வாழ்க்கையை
அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு போதுமாக்கிக் கொள்ளுங்கள்!” என்று புஹ்லூல் (ரஹ்) உபதேசித்தார்கள்.
மன்னர் விடைபெறுகிற
போது, புஹ்லூல் (ரஹ்) அவர்களே! உங்களுக்கு ஏதேனும் தேவை இருந்தால் நம்மிடம்
சொல்லுங்கள்! நாம் நிறைவேற்றித் தருகின்றோம்!” என்றார்கள்.
ஆம்! மன்னரே!
எனக்கு மூன்று தேவைகள் இருக்கின்றன, நீங்கள்
நிறைவேற்றுவீர்களா?”
என்று கேட்டார் புஹ்லூல் (ரஹ்) அவர்கள்.
”ஓ! தாராளமாக சொல்லுங்கள்
நிறைவேற்றி விடலாம்”
என்று மன்னர் பதில் கூறினார்.
அப்போது, புஹ்லூல் (ரஹ்) அவர்கள் “என் ஆயுளை நீட்டித்தர வேண்டும்” என்றார். அதற்கு மன்னர், “என்னால் இது இயலாது” என்றார்.
பரவாயில்லை, ”ரூஹைக் கைப்பற்றும் வானவரிடம் இருந்தாவது என்னைக் காப்பாற்றுங்கள்” என்றார் புஹ்லூல் (ரஹ்) அவர்கள். அதற்கும் மன்னர் “என்னால் இது இயலாது”
என்றார்.
சரி, சரி “நரகத்தை விட்டு என்னை தூரமாக்கி, சுவனத்தில் என்னை
நுழைவிக்கச் செய்தால் போதும்” என்றார் புஹ்லூல் (ரஹ்)
அவர்கள். அதற்கும் மன்னர் “என்னால் இது இயலாது”
என்றார்.
இதைக் கேட்ட
புஹ்லூல் (ரஹ்) அவர்கள்,
மன்னர் ஹாரூன் ரஷீத் அவர்களைப் பார்த்து “அறிந்து கொள்ளும்! நீர் ஒரு அடிமை தான், நீர் ஒன்றும் அரசனல்ல.
ஆகவே, உம்மிடம் எனக்கு எந்தத் தேவையும் இல்லை.” என்று பதில் கூறினார்கள்.
( நூல்: வஃபாவுல் வஃபா )
6) ஹிதாயத்தில் நீடிக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள்.
உலகைத்
துறந்த ஆத்ம ஞானி இப்ராஹீம் இப்னு அத்ஹம் (ரஹ்) அவர்கள் ஒரு முறை ஒரு
துறைமுகத்தின் அருகே அமர்ந்து தமது கிழிந்த தங்களது துணியை தைத்துக்
கொண்டிருந்தார்கள்.
அப்போது, அங்கே ஒரு கப்பல் வந்து நின்றது. கப்பலில் பயணம் செய்த
சிலர் மேள தாளங்களுடன் ஆடிப்பாடி மகிழ்ந்து கொண்டிருந்தனர்.
அந்த
காலத்தில் ஒரு பழக்கம் இருந்தது. ஆடல் பாடலின் ஊடே நடுவே ஒருவரை அமர வைத்து இரு
கன்னங்களிலும் மாறி, மாறி அறைந்து அவரை அழ வைத்து ரசிக்கின்ற
கொடிய பழக்கம்.
ஞானி
இப்ராஹீம் இப்னு அத்ஹம் (ரஹ்) அவர்களை அழைத்துச் சென்று நடுவே அமர வைத்து தங்களின்
கொடூர ரசனையை ரசிக்க ஆரம்பித்தனர்.
அல்லாஹ்வின்
நேசரல்லவா அவர்கள்.? ஓர் அசரீரி கேட்டது: ”உங்களுடன் இப்படி நடந்து கொள்கின்றார்களே? நீங்கள் விரும்பினால் இந்தக் கப்பலை அப்படியே புரட்டி, அவர்கள் அனைவரையும் மூழ்கடித்து விடுகின்றேன்.”
இப்ராஹிம்
இப்னு அத்ஹம் (ரஹ்) அவர்கள் கையேந்தி இப்படித் துஆ செய்தார்களாம்: “இறைவா! நீ இக்கப்பலைப் புரட்டி இவர்களை அழித்திடும் ஆற்றல்
பெற்றிருப்பதைப் போன்றே, இவர்களின் கல்புகளைப் புரட்டி இவர்களை சீர்
திருத்தும் ஆற்றலையும் பெற்றிருக்கின்றாய்! இறைவா! இவர்களின் அறிவுக் கண்களை நீ
திறந்து விடு! அவர்கள் தமது தவறுகளை உணரும் பொருட்டு…”
சிறிது
நேரத்திலேயே அவர்கள் தங்களின் தீய நடவடிக்கைகளுக்கு மன்னிப்புக் கோரினர். சிறிது
காலத்திலேயே இறை நேசத்திற்குரிய வாழ்வை வாழ ஆரம்பித்து விட்டனர்.
( நூல்: ஃபகீஹுல் உம்மத் மஹ்மூது ஹஸன் கங்கோஹி அவர்கள் ஆற்றிய
உரையின் தொகுப்பான “குதுபாத்தே மஹ்மூத்” எனும் உர்தூ நூலிலிருந்து.. )
7) மனதில் படிந்திருக்கும் துருவை நீக்குபவர்கள்.
قال رجل
لإبراهيم بن أدهم: يا أبا إسحاق، أحبّ أن تقبَلَ مني هذه الجُبّة كُسوةً.
قال
إبراهيم: إن كنتَ غنيّاً قَبِلتُها منك، وإن كنتَ فقيراً لم أقبَلْها.
قال:
فإنّي غني.
قال
إبراهيم: كم عندك؟
قال:
ألفان.
قال:
فيَسُرُّك أن تكون أربعة آلاف؟
قال:
نعم .
قال
إبراهيم: أنت فقير؛ لا أقبَلها.
இப்ராஹீம் இப்னு
அத்ஹம் (ரஹ்) அவர்களிடம் ஒருவர் வந்து "தம் கையில் வைத்திருந்த ஜுப்பாவை
காட்டி இதை நான் உங்களுக்கு அன்பளிப்பு செய்ய விரும்புகிறேன். இதை நீங்கள் ஏற்றுக்
கொள்ள வேண்டும்" என்றார்.
அதற்கு, இப்ராஹீம் இப்னு அத்ஹம் (ரஹ்) "நீர் செல்வந்தராக
இருந்தால் உம்மிடம் இருந்து இதைப் பெற்றுக் கொள்வேன். நீர் ஏழையாக இருப்பின் நான்
உம்மிடம் இருந்து பெற்றுக் கொள்ள மாட்டேன்" என்றார்கள்.
அப்போது அவர், நான் செல்வந்தர் தான் என்றார்.
அதற்கு, இப்ராஹீம் இப்னு அத்ஹம் (ரஹ்) அவர்கள் "உம்மிடம் எவ்வளவு பணம் இருக்கிறது?" என்று கேட்டார்கள்.
அப்போது அவர்
"இரண்டாயிரம்" என்றார்.
அதற்கு, இப்ராஹீம் இப்னு அத்ஹம் (ரஹ்) அவர்கள் "உமக்கு நான்காயிரமாக இருக்க
வேண்டும்" என்று ஆசை உள்ளதா?" என்று கேட்டார்கள்.
அப்போது அவர்
"ஆம்" என்றார்.
அதற்கு, இப்ராஹீம் இப்னு அத்ஹம் (ரஹ்) அவர்கள் "அப்படியாயின் நீர் ஏழை உம்மிடம்
இருந்து நான் இந்த அன்பளிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது" என்று கூறி
விட்டார்கள்.
இப்ராஹீம் இப்னு
அத்ஹம் (ரஹ்) அவரின் அன்பளிப்பை மறுக்க காரணம் இல்லாமல் இல்லை.
ஏனெனில், உலகப் பற்றற்ற நிலையில் வாழ்வதை இலக்காக கொண்டு வாழ்ந்த அவர்கள் உலகப் பற்றற்ற
வாழ்வை மூன்று வகையாக பிரித்து வைத்திருந்தார்கள்.
قال إبراهيم
بن أدهم: الزهد ثلاثة أصناف:
فزهد
فرض، وزهد فضل، وزهد سلامة .
فالفرض:
الزهد في الحرام .
والفضل:
الزهد في الحلال .
والسلامة:
الزهد في الشبهات .
இப்ராஹீம் இப்னு
அத்ஹம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:- "உலகப் பற்றற்ற நிலை என்பது மூன்று
வகைகளாகும்.1.
ஃபர்ள் கட்டாயமான நிலை. 2. ஃபள்ல் - சிறந்த நிலை. 3. ஸலாமத் - பாதுகாப்பு
நிலை.
1. ஹராம் - தடை
செய்யப்பட்ட விஷயத்தில் பற்றற்ற (கட்டாயம் தவிர்ந்து கொள்ளும்) நிலை.
2. ஹலால் -
அனுமதிக்கப்பட்ட விஷயத்தில் பற்றற்ற (பேணுதலான) நிலை.
3. ஷூப்ஹாத் -
சந்தேகத்திற்கிடமான விஷயத்தில் பற்றற்ற (பாதுகாப்பான) நிலை.
8) மரணித்த போதிலும் சமூகம்
குறித்து கவலை கொள்வார்கள்.
قِيْلَ
ادْخُلِ الْجَـنَّةَ قَالَ يٰلَيْتَ قَوْمِىْ يَعْلَمُوْنَ
(ஆனால், செவிசாய்க்காது அவரைக் கொன்றுவிட்டனர்.) “நீர் சுவர்க்கத்தில்
பிரவேசிப்பீராக”
என்று (அவரிடம்) கூறப்பட்டது. “என்னுடைய சமூகத்தார் அறிந்து கொள்ள வேண்டுமே என்று கூறினார்.”
بِمَا
غَفَرَلِىْ رَبِّىْ وَجَعَلَنِىْ مِنَ الْمُكْرَمِيْنَ
“என்னுடைய இறைவன் எனக்கு
மன்னிப்பளித்து,
கண்ணியமானவர்களில் நின்றும் அவன் என்னை ஆக்கிவிட்டான்” (என்பதை). ( அல்குர்ஆன்: 36: 26, 27 )
இறைநேசர்கள் பெற்ற சோபனத்தைப் பெற இதோ குர்ஆன்
கூறும் சில வழிகள்!
1)
நல்வழியில் செலவிட்டு, நல்லறங்கள்
புரிபவர்களுக்கு சோபனம் உண்டு,
الَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمْ بِاللَّيْلِ وَالنَّهَارِ سِرًّا
وَعَلَانِيَةً فَلَهُمْ أَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ
وَلَا هُمْ يَحْزَنُونَ
தமது செல்வங்களை
இரவிலும்,
பகலிலும், இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (நல் வழியில்) செலவிடுவோருக்கு தமது இறைவனிடம் அவர்களுக்கான
கூலி உண்டு. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.
(2:274)
إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَأَقَامُوا
الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ لَهُمْ أَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ
عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் புரிந்து,
தொழுகையை நிலை நாட்டி, ஸகாத்தையும் கொடுத்து
வருவோருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உள்ளது. அவர்களுக்குஎந்த அச்சமும்
இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். (2;277)
2) நல்வழியில் செலவிட்டதை சொல்லிக்காட்டாதவர்களுக்கு சோபனம் உண்டு
الَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمْ فِي سَبِيلِ اللَّهِ ثُمَّ لَا
يُتْبِعُونَ مَا أَنْفَقُوا مَنًّا وَلَا أَذًى لَهُمْ أَجْرُهُمْ عِنْدَ
رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
அல்லாஹ்வின்
பாதையில் தமது செல்வங்களைச் செலவிட்டு, செலவிட்டதைப் பின்னர்
சொல்லிக் காட்டாமலும்,
தொல்லை தராமலும் இருப்போருக்கு அவர்களின் கூலி அவர்களின்
இறைவனிடம் உள்ளது. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள். (2: 262)
3) அல்லாஹுவின் பாதையில் உயிர்த்தியாகம் செய்பவர்களுக்கு சோபனம் உண்டு.
فَرِحِينَ بِمَا آتَاهُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ وَيَسْتَبْشِرُونَ
بِالَّذِينَ لَمْ يَلْحَقُوا بِهِمْ مِنْ خَلْفِهِمْ أَلَّا خَوْفٌ عَلَيْهِمْ
وَلَا هُمْ يَحْزَنُونَ
தமக்கு அல்லாஹ்
வழங்கும் அருளை எண்ணி மகிழ்கின்றனர். தம்முடன் (இது வரை) சேராமல் பின்னால் (உயிர்
தியாகம் செய்து) வரவிருப்போருக்கு எந்தப் பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும்
மாட்டார்கள் என்பதை எண்ணி மகிழ்ச்சியுடன் உள்ளனர். (3:170)
4) தூதர்களை நம்பி,
தவறை திருத்திக் கொள்வோருக்கு சோபனம் உண்டு.
وَمَا نُرْسِلُ الْمُرْسَلِينَ إِلَّا مُبَشِّرِينَ وَمُنْذِرِينَ
فَمَنْ آمَنَ وَأَصْلَحَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
நற்செய்தி
கூறுவோராகவும்,
எச்சரிக்கை செய்வோராகவும் தவிர நாம் தூதர்களை
அனுப்புவதில்லை. நம்பிக்கை கொண்டு, சீர்திருத்திக்
கொள்வோருக்கு அச்சமும் இல்லை.அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். (6:48)
5) அல்லாஹுக்கு மட்டுமே அடிப்பணிந்தவருக்கு சோபனம் உண்டு.
بَلَى مَنْ أَسْلَمَ وَجْهَهُ لِلَّهِ وَهُوَ مُحْسِنٌ فَلَهُ أَجْرُهُ
عِنْدَ رَبِّهِ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
அவ்வாறில்லை! தமது
முகத்தை அல்லாஹ்வுக்குப் பணியச் செய்து, நல்லறமும்
செய்பவருக்குஅவரது கூலி அவரது இறைவனிடம் உள்ளது. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். (2: 112)
அல்லாஹ்
நேசிக்கின்ற காரியங்கள்,
இறைநேசர்கள் பெற்றுக் கொண்ட சோபனங்கள் இன்னும் நிறைய
பட்டியல் இட்டுக்கொண்டே போகலாம்.
அல்லாஹுவும், அவனின் தூதர் (ஸல்) அவர்களும்
எந்த வழியை காட்டிதந்தார்களோ அத்தகைய வழியைப் பின்பற்றி நடந்து நாம் அல்லாஹுவின் நேசர்களாக மாற முயற்சி செய்வோமாக!
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் நம் அனைவரையும் அவனுடைய நேசத்திற்குரிய மேன்மக்களில் ஒருவராக
ஆக்கியருள்வானாக!
ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!
மாஷா அல்லாஹ் அருமையான கருத்துக்கள்
ReplyDeleteஅல்லாஹ் தங்களுக்கு பரக்கத் செய்வானாக ஆமீன்
ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் ஜஸாக்கல்லாஹு ஃகைரன் பாரக்கல்லாஹ் ஹழ்ரத் பெருந்தகை
Deleteமாஷா அல்லாஹ் அருமையான பயான் தொகுப்பு ஹஜ்ரத் அவர்களுக்கு அல்லாஹுத்தஆலா ஈருலகிலும் நற்பாக்கியத்தை தருவானாக ஆமீன்
ReplyDeleteஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.
Deleteஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் ஜஸாக்கல்லாஹு ஃகைரன் பாரக்கல்லாஹ் ஹழ்ரத் பெருந்தகை
ReplyDelete