வாழ்வதற்கு மறுக்கப்படும் ஃபலஸ்தீன குழந்தைகள்!!
நவம்பர் 20 –ம் தேதி உலக குழந்தைகள் தினம் 1954
–ம் ஆண்டு முதல் உலகெங்கிலும் கொண்டாடப்படுகின்றது.
1959 –ம் ஆண்டு நவம்பர் 20 –ம் தேதி குழந்தைகள்
உரிமைகளின் பிரகடனம் ஏற்றுக் கொள்ளப்பட்டு, 1989 –ம் ஆண்டு நவம்பர் 20 –ம் தேதி குழந்தைகளின்
உரிமைகள் மீதான ஒப்பந்தம் ஐ. நா சபையின் அவையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ஐ. நாவின் குழந்தைகள் மீதான ஒப்பந்தத்தின் அடிப்படை
நோக்கமே “குழந்தைகளுக்கு அடிப்படை உரிமைகள்” அளிக்கப்படல் வேண்டும் என்பது தான்.
ஐ. நா வின் குழந்தைகளின் உரிமைகள் மீதான ஒப்பந்தம்
நான்கு பரந்த பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
1.வாழும் உரிமை, 2.பாதுகாக்கப்படும் உரிமை, 3.பங்கேற்கும்
உரிமை, 4.முன்னேற்ற உரிமை ஆகியன ஆகும்.
நவம்பர் 20 –ம் தேதிக்கு இன்னும் எவ்வளவோ நாட்கள்
இருக்கின்றதே இப்போதே ஏன் இது குறித்து பேச வேண்டும்? என்று உங்கள் உள் மனம் சொல்வதை
உங்கள் விழிகளின் ஊடாக புரிந்து கொள்ள முடிகின்றது.
இது தான் அது குறித்து பேசுவதற்கு உகந்த நேரமும்
தருணமும் கூட.
“ஒய்யாரக் கொண்டையாம் தாழம் பூவாம், உள்ளே பார்த்தால்
பேனும், ஈருமாம்” என்று தமிழில் ஒரு சொலவடை உண்டு அது போலத் தான் ஐ. நா சபையின் குழந்தைகளின்
உரிமைகள் மீதான பிரகடனமும், உலக குழந்தைகள் தின கொண்டாட்டமும்.
குழந்தைகள், குழந்தைகளாக வளர முடியவில்லை, குழந்தைகள்
வாழ முடியவில்லை எனும் சூழல் உலகின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் நிலவும் போது இந்தப்
பிரகடனத்திலும், இந்த கொண்டாட்டத்திலும் என்ன அர்த்தம் இருக்கின்றது?.
தாயின் மடி தொட்டு நடை பழகுவதும், தந்தையின் கரம்
பிடித்து உலகை அறிவதும், ஆசிரியரின் கண்காணிப்பில் ஒழுக்கம் பெறுவதும், உறவுகளுடன்
கலந்துறவாடி அன்பைப் பெறுவதும், நண்பர்களோடு விளையாடி சமூகத்தைப் படிப்பதும் சாத்தியமில்லாத
குழந்தைப்பருவம் என்பது எப்படியானது என்பதை இந்த உலகம் உணர வேண்டுமா? அவர்கள் ஃபலஸ்தீனின்
காஸா குழந்தைகளைப் பார்க்கட்டும்.
ஃபலஸ்தீனில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு குழந்தை
போரில் கொல்லப்படுகின்றது. இதுவரை 70 ஆயிரம் குழந்தைகள் வீடற்றவர்களாக ஆகிவிட்டனர்.
நான்கு லட்சம் குழந்தைகள் மன நல சிகிச்சை தேவைப்படும் நிலையில் இருக்கின்றார்கள். ஆறு
வயதைத் தொடுவதற்குள் ஒரு குழந்தை உயிருடன் இருந்தால் மூன்று போர்களைப் பார்த்து விடுகின்றது.
அந்தக் குழந்தைகளால் தூங்கவே முடிவதில்லை. நள்ளிரவில் திடீரென எழுந்து அலறுகின்றார்கள்”
என தனது வேதனையை பகிர்ந்து கொள்கின்றார் ஃபலஸ்தீன மருத்துவர் ஒருவர். ( நன்றி: குங்குமம்,
அகஸ்டஸ் எழுதிய கட்டுரையில் இருந்து. )
உலகில் இப்படி ஒரு குழந்தைச்
சமூகம் வாழ்ந்திருக்க வாய்ப்பில்லை..
தான்
கொல்லப்பட்டுவிட்டால் தன்னை அடையாளம் கண்டுபிடிக்க கைகளில் தனது பெயரை எழுதி
வைத்திருக்கும் ஒரு குழந்தையின் மனநிலை எப்படியிருக்கும்?
100 ஆண்டுகளாக தொடரும்
போர் சூழலில் வளர்கிற பாலஸ்தீன குழந்தைகள் இப்படி கற்பனைக்கெட்டாத, தீர்க்க முடியாத உளவியல் சிக்கல்களோடுதான் வாழ்ந்து வருகின்றார்கள்.
எந்நேரம்
வேண்டுமானாலும் தலைகீழாக மாறிவிடுகின்ற வாழ்க்கையை எதிர்நோக்கி வாழ்வதென்பது
பாலஸ்தீன குழந்தைகள் மீது 3
மூன்று தலைமுறைகளாக திணிக்கப்பட்ட ஒன்று.
பாலஸ்தீன மக்கள் 1917ல் இருந்தே நேரடியான போர் சூழலில் வாழ்ந்து வருகிறார்கள். இந்த சூழலில் வளரும்
பாலஸ்தீன குழந்தைகளின் நிலை எண்ணிப் பார்க்க முடியாததாகிறது. குறிப்பாக, ‘காசா’
பகுதியைச் சேர்ந்த குழந்தைகள்.
உலகின்
அடர்த்தியான மக்கள் தொகை நிறைந்த காசா மீது இதுவரை 8 முறை போர் தொடுத்திருக்கிறது இஸ்ரேல். ஒவ்வொரு போரிலும் பெருமளவில் குழந்தைகள்
படுகொலை செய்யப்பட்டு இருக்கின்றனர். இவை மட்டுமல்லாமல் தீவிரவாத ஊடுருவல், சோதனைகள்,
என்கிற பெயரில் பல்வேறு தாக்குதல்கள் அங்கே
நடத்தப்படுக்கின்றன. குழந்தைகளை ராணுவ விசாரணைக்கு உட்படுத்தும் உலகின் ஒரே கொடியநாடு
இஸ்ரேல் மட்டும் தான்.
அதிர்ச்சியூட்டும் புள்ளி விவரங்கள்...
கடந்த அக்டோபர் 7
–ம் தேதி முதல் 26 நாட்களாக நடந்து வரும் இஸ்ரேல் – ஹமாஸ் போரில் காஸாவில் இதுவரை 8,000-க்கும்
மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், அதில் 3,320 பேர் குழந்தைகள் என்று பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் அதிர்ச்சி தகவலை
வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின்
சிறுவர் நிதியம் (யுனிசெஃப்), “உடனடியான போர்
நிறுத்தமும் வாழ்வாதார உதவிகளுமே குழந்தைகள் மற்றும் அந்த மக்களின் முதன்மையான
தேவை, குழந்தை என்பது குழந்தை தான். எல்லா இடங்களில் இருக்கும் குழந்தைகளும் எல்லா
நேரமும் பாதுக்கப்பட வேண்டும். குழந்தைகளை தாக்குதலுக்கு ஆளாக அனுமதிக்கக் கூடாது” என்று ஏற்கனவே தெரிவித்திருக்கின்றது.
ஃபலஸ்தீன குழந்தைகளை கொல்வதும் கொடுமை படுத்துவதும் தான் இஸ்ரேலின் இலட்சியம்!
பாலஸ்தீனிய
குழந்தைகளை இரக்கமில்லாமல் கொடுமைப்படுத்தியதாக முன்னாள் இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்
ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கின்றனர். 30 முன்னாள் படைவீரர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கை
இஸ்ரேலிய படைவீரர்கள் செய்த எண்ணற்ற கொடுமைகளை விவரிக்கிறது.
2004-ம் ஆண்டு
ஆரம்பிக்கப்பட்ட பிரேக்கிங் சைலன்ஸ் (மௌனத்தை கலைக்கிறோம்) என்ற முன்னாள் இஸ்ரேலிய
ராணுவ வீரர்களுக்கான அமைப்பின் சார்பில் தயாரிக்கப்பட்ட அந்த அறிக்கை கடந்த
சனிக்கிழமை வெளியிடப்பட்டது. இப்போதைய மற்றும் முன்னாள் இஸ்ரேலிய படைவீரர்கள்
பங்கேற்ற அல்லது கண்ணுற்ற கொடுமைகளை பற்றி விவரிக்கும் 850 நிகழ்வுகளை திரட்டியிருக்கிறார்கள். இஸ்ரேலிய படைவீரர்கள் மீது கல்லெறியும்
மைனர் குழந்தைகளை பிடித்து அடைத்து வைத்த நிகழ்வுகள்,
வெஸ்ட் பேங்கில்
உள்ள காலந்தியா என்ற இடத்தில் பாலஸ்தீனிய குழந்தைகளை சூழ்ந்து கொண்ட ஒரு குழுவினர்
அவர்களை மரத்தடிகளால் அடித்து துவைத்ததை ஒரு வாக்குமூலம் விவரிக்கிறது.
6 வயதுக்குட்பட்ட பல
குழந்தைகள் காவலில் வைக்கப்பட்டு, கண்கள் கட்டப்பட்டு, உணவும் நீரும் கொடுக்கப்படாமல் கொடுமைப்படுத்தப்பட்டதை அறிக்கை
ஆவணப்படுத்தியுள்ளது. எல்லையைத் தாண்டி இஸ்ரேலுக்குள் போக முயற்சித்ததற்காக 12-14 வயதுடைய குழந்தைகளை கைது செய்ததாக சொல்லும் துணை ராணுவப் படை பிரிவின் முதன்மை
சார்ஜன்ட் ஒருவர்,
குழந்தைகளை பயங்கரவாதிகளுக்கு துணை புரிபவர்களாகவே நடத்த
வேண்டும் என்று தனக்கு சொல்லித் தரப்பட்டது என்கிறார்.
“பிடிக்கப்பட்டவர்களில்
ஒருவரை இரண்டு படைவீரர்கள் அடிப்பதை அதிகாரி பார்த்துக் கொண்டிருந்தார். எனது
நினைவு சரியாக இருந்தால் பிடித்து வைக்கப்பட்டவர்களுக்கு 16 வயதுதான் இருக்கும்”
என்றார் அவர். ( நன்றி: வினவு, 28/08/2012 )
நெஞ்சு பொறுக்குதில்லையே!
2008க்கு பின்னர்
மட்டும் நாள் ஒரு பொழுதுமாக இஸ்ரேல் நடத்துகின்ற கோரத்தாக்குதல்களில் 1,50,000 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் அதில் 33,000 குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ( நன்றி: மக்கள் அதிகாரம், 09/10/2023 )
2019 ஆம் ஆண்டு முதல்
உலகெங்கிலும் நடத்தப்பட்ட போரில் கொல்லப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையை விட அதிகளவிலான பாலஸ்தீன குழந்தைகள் தற்போது நடந்து வரும் போரில் கடந்த மூன்று
வாரங்களில் இஸ்ரேல் ராணுவத்தால்
கொல்லப்பட்டுள்ளனர் என ‘சேவ் தி சில்ரன்’ என்ற அரசு சாரா அமைப்பு தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு 24 நாடுகளில் 2,985 குழந்தைகளும்,
2021 ஆம் ஆண்டு
2,515 குழந்தைகளும்,
2020 ஆம் ஆண்டு
22 நாடு களில் 2,674 குழந்தைகளும்
கொல்லப் பட்டுள்ளனர் என குழந்தைகளும் ஆயுத மோதல்களும் தொடர்பான ஐ.நா அறிக்கை
தெரிவித்துள்ளது. தற்போது இஸ்ரேல் படு கொலை செய்துள்ள குழந்தைகளின் எண்ணிக்கை, ஐ.நா. கூறிய முந்தைய கால
எண்ணிக்கையை விட அதிகமாகும்.
இது தவிர காசாவில்
1,000 க்கும் மேலான குழந்தைகள் காணாமல் போயுள்ளனர் என்றும், அவர்களில் பெரும்பாலும் கட்டட இடிபாடுகளுக்கு அடியில்
சிக்கி மரணித் திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள் ளது. காசாவில் கொல்லப்பட்ட 8,000க்கும் மேற்பட்டவர்களில் 40 சதவீதத்திற்கும் அதிக
மானோர் குழந்தைகள். மேலும் காசாவில் போர் தொடங்கியதில் இருந்து 6,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் படுகாயமடைந்து ள்ளனர் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது. (
நன்றி: தீக்கதிர், 30/10/2023 )
காசாவின் ஒரு குழந்தை சராசரியாக 5 வயதை நெருங்கும் முன்பே பெற்றோர், உறவினர், நண்பர்கள் என யாரோ ஒருவர் இஸ்ரேலிய ராணுவத்தால் படுகொலை செய்யப்படுவதைப் பார்க்க நேரிடுகிறது. ஒவ்வொரு குழந்தையும், பதின்பருவத்துக்கு முன்னர் 3 முறை மனவதை உண்டாக்கும் நிகழ்வுகளை (Traumatic Events) சந்திக்கின்றனர் என்கிறது ஆய்வு (R R Gogineni et al.,). இதில், காசாவின் குழந்தைகளில் இனரீதியான ஒதுக்குதலை சந்திக்கின்றவர்கள் 99% பேர்; குண்டு வெடிப்பில் நேரடி அனுபவமுடையவர்கள் 97 % குழந்தைகள்; போரில் இறந்தவர்களின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட குழந்தைகள் 85% பேர்; டாங்கி, கனரக ஆயுத வாகனங்கள், ராணுவ விமானம் ஆகியவற்றில் இருந்து எறியப்பட்ட குண்டுகளை கண்ட குழந்தைகள் 84% பேர்.( நன்றி: கீற்று, 25/10/2023 )
கொடிய குணமும், கடின மனமும் கொண்டவர்களால் மட்டுமே குழந்தைகளை கொன்று குவிக்க முடியும்!
குழந்தைகளிடம்
அழகிய முறையில் நடந்து கொள்வதற்கு இரக்கக் குணம் தேவை. இரக்கக் குணம் உள்ளவர்களால் மட்டும்தான் குழந்தைகளிட் அழகிய
முறையில் நடக்க முடியும்.
حَدَّثَنَا
أَبُو الْيَمَانِ ، أَخْبَرَنَا شُعَيْبٌ ، عَنِ الزُّهْرِيِّ ، حَدَّثَنَا أَبُو
سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ أَبَا هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ
، قَالَ
قَبَّلَ
رَسُولُ اللهِ صلى الله عليه وسلم الْحَسَنَ بْنَ عَلِيٍّ وَعِنْدَهُ الأَقْرَعُ
بْنُ حَابِسٍ التَّمِيمِيُّ جَالِسًا فَقَالَ الأَقْرَعُ إِنَّ لِي عَشَرَةً مِنَ
الْوَلَدِ مَا قَبَّلْتُ مِنْهُمْ أَحَدًا فَنَظَرَ إِلَيْهِ رَسُولُ اللهِ صلى
الله عليه وسلم ثُمَّ قَالَ مَنْ لاَ يَرْحَمُ لاَ يُرْحَمُ.
அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் ஹஸன் பின் அலீயை முத்தமிட்டார்கள். அப்போது அவர்களுக்கு அருகில்
அமர்ந்து கொண்டிருந்த அக்ரஃ பின் ஹாபிஸ் அத்தமீமி (ரலி), “எனக்குப் பத்து குழந்தைகள் இருக்கின்றன. அவர்களில் ஒருவரைக் கூட நான்
முத்தமிட்டதில்லை”
என்றார். அவரை ஏறெடுத்துப் பார்த்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள்,
“அன்பு காட்டாதவர் அன்பு காட்டப்பட மாட்டார்” என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி 5997
حَدَّثَنَا
مُحَمَّدُ بْنُ يُوسُفَ ، حَدَّثَنَا سُفْيَانُ ، عَنْ هِشَامٍ ، عَنْ عُرْوَةَ ،
عَنْ عَائِشَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهَا ، قَالَتْ
جَاءَ
أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ تُقَبِّلُونَ
الصِّبْيَانَ فَمَا نُقَبِّلُهُمْ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَوَ
أَمْلِكُ لَكَ أَنْ نَزَعَ اللَّهُ مِنْ قَلْبِكَ الرَّحْمَةَ.
ஒரு கிராமவாசி நபி
(ஸல்) அவர்களிடம் வந்து,
“நீங்கள் சிறு குழந்தைகளை முத்தமிடுகின்றீர்களா? நாங்களெல்லாம் அவர்களை முத்தமிடுவதில்லை” என்று கூறினார். அதற்கு
நபி (ஸல்) அவர்கள்,
“அல்லாஹ் உமது இதயத்திலிருந்து அன்பைக் கழற்றி விட்ட பின்னர்
உமக்காக நான் என்ன செய்ய முடியும்?” என்று
கேட்டார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : புகாரி 5998
குழந்தைகள் படும் அவஸ்தையும், மரண வேதனையும் சங்கடப்படுத்தும்!
عن
أسامة بن زيد بن حارثة رضي الله عنهما قال: أرسلت بنت النبي صلى الله عليه وسلم
إنَّ ابني قد احتُضِر فاشْهَدنَا، فأرسَل يُقرِىءُ السَّلام، ويقول
«إنَّ لِلَّه ما أَخَذ ولَهُ ما أَعطَى، وكلُّ شَيءٍ عِنده
بِأجَل مُسمَّى فَلتَصبِر ولتَحتَسِب».
فأرسلت إليه تُقسِم عَليه لَيَأتِيَنَّها، فقام ومعه سعد
بن عبادة، ومعاذ بن جبل، وأبي بن كعب، وزيد بن ثابت، ورجال رضي الله عنهم فَرفع
إلى رسول الله صلى الله عليه وسلم الصَّبِي، فأَقعَدَه في حِجرِه ونَفسه تَقَعقَع، فَفَاضَت
عينَاه فقال سعد
يا رسول الله، ما هذا؟ فقال
«هذه رَحمَة جَعلَها الله تعالى في قُلُوب عِباده» وفي رواية
«في قلوب من شاء من عباده، وإنَّما يَرحَم الله من عِبَاده
الرُّحَماء»
தமது அன்பு மகளார்
ஜைனபிடமிருந்து ஓர் அவசரச் செய்தி நபிகளாருக்கு வந்தது. ஜைனபின் மகள் (நபிகளாரின் பேத்தி) இறக்கும் நிலையில் இருப்பதாகவும் நபிகளார்
உடனே வரவேண்டும் என்றும் ஜைனப் (ரலி) சொல்லியனுப்பினார்கள்.
செய்தி கொண்டுவந்த மனிதரிடம் இறைத்தூதர் (ஸல்)
கூறினார்கள்:- “ஜைனபுக்கு என் ஸலாம் சொல்லுங்கள். கொடுக்கும் உரிமையும் இறைவனுக்கு உரியது, எடுக்கும் உரிமையும் இறைவனுக்கு உரியது. ஒவ்வொன்றுக்கும் இறைவனிடம் ஒரு தவணை
உண்டு. ஆகவே பொறுமையைக் கைக்கொள்ளுமாறும் நன்மையை எதிர்பார்க்குமாறும் ஜைனபிடம்
சென்று சொல்லுங்கள்.”
செய்தி கொண்டுவந்த நபித்தோழர் நபிகளார் சொன்னதை அப்படியே
ஜைனப் (ரலி) அவர்களிடம் கூறுகிறார்கள்.
“இல்லை… இல்லை…
என் தந்தையாரை உடனே வரச்சொல்லுங்கள். இறைவன்மீது
ஆணையிட்டுக் கூறுகிறேன். அவர் வந்து என் மகளைப் பார்க்க வேண்டும்” என்கிறார்.
மீண்டும் தகவல்
நபிகளாரிடம் சொல்லப்படுகிறது. உடனே இறைத்தூதர் (ஸல்) அருகிலிருந்த சில
நபித்தோழர்களை அழைத்துக் கொண்டு தம் மகளின் இல்லத்திற்கு விரைந்து சென்றார்கள். மூச்சுவிட முடியாமல் திணறிக் கொண்டிருந்த பேத்தியை சிலர் தூக்கிவந்து
நபிகளாரின் கையில் கொடுத்தார்கள்.
பேத்தியின்
சிரமத்தைப் பார்த்து பாட்டனாரின் உள்ளம் துடிக்காமல் இருக்குமா? நபிகளாரின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. இதைப் பார்த்து அருகில் இருந்த நபித்தோழர்கள், “இறைத்தூதர் அவர்களே,
ஏன் அழுகிறீர்கள்?” கேட்டனர்.
அப்போது நபியவர்கள், “இது இறைவன் தன்
அடியார்களின் உள்ளங்களில் ஏற்படுத்தும் இரக்க உணர்வாகும். யார் இரக்கம்
கொள்கிறார்களோ அவர் மீது இறைவனும் இரக்கம் கொள்வான்” என்று கூறினார்கள். ( நூல்: புகாரி )
இஸ்லாத்தின் ஆரம்ப
கால பிரச்சாரங்களில் பிரதானமாக இடம் பெற்ற கட்டளை ஜாஹிலிய்ய செயலான பெண்
குழந்தைகளை கொல்வதற்கு எதிராக அமைந்துள்ளதை குர்ஆன் பல இடங்களில் பேசுகிறது.
ஆணவக்காரர்கள் அனைவரும் குழந்தைகளை ஈவிரக்கமின்றி கொன்றவர்களே!
ஃபிர்அவ்ன்
ஆயிரக்கணக்கான குழந்தைகளை கொன்று குவித்தான் என்று குர்ஆன் கூறுகிறது.
اِنَّ
فِرْعَوْنَ عَلَا فِى الْاَرْضِ وَجَعَلَ اَهْلَهَا شِيَـعًا يَّسْتَضْعِفُ
طَآٮِٕفَةً مِّنْهُمْ يُذَبِّحُ اَبْنَآءَهُمْ وَيَسْتَحْىٖ نِسَآءَهُمْ
اِنَّهٗ كَانَ مِنَ الْمُفْسِدِيْنَ
நிச்சயமாக
ஃபிர்அவ்ன் இப்பூமியில் பெருமையடித்துக் கொண்டு, அந்த பூமியிலுள்ளவர்களைப் (பல) பிரிவினர்களாக்கி, அவர்களிலிருந்து ஒரு கூட்டத்தாரை பலஹீனப்படுத்தினான்; அவர்களுடைய ஆண் குழந்தைகளை அறுத்(துக் கொலை செய்)து பெண் குழந்தைகளை உயிருடன்
விட்டும் வைத்தான்;
நிச்சயமாக அவன் குழப்பம் செய்வோரில் ஒருவனாக இருந்தான். ( அல்குர்ஆன்: 28:
4 )
தீக்குண்டத்தார்கள்
என்று அல்குர்ஆன் கூறும் ஒரு சமூகத்தார் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள் என்ற ஒரே
காரணத்திற்காக (குழந்தைகள் உட்பட) மொத்தமாக ஒரு சமூகத்தையே அழித்தார்கள் என்று
குர்ஆன் குறிப்பிடுகின்றது.
وَالسَّمَاءِ
ذَاتِ الْبُرُوجِ (1) وَالْيَوْمِ الْمَوْعُودِ (2) وَشَاهِدٍ وَمَشْهُودٍ (3)
قُتِلَ أَصْحَابُ الْأُخْدُودِ (4) النَّارِ ذَاتِ الْوَقُودِ (5) إِذْ هُمْ
عَلَيْهَا قُعُودٌ (6) وَهُمْ عَلَى مَا يَفْعَلُونَ بِالْمُؤْمِنِينَ شُهُودٌ (7)
وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَنْ يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ
(8) الَّذِي لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ
شَهِيدٌ (9)
”உறுதியான கோட்டைகளைக் கொண்ட வானத்தின் மீது சத்தியமாக! வாக்களிக்கப்பட்ட அந்த நாளின் மீது
சத்தியமாக! மேலும், பார்க்கின்றவர்
மீதும், பார்க்கப்படும் பொருளின் மீதும் சத்தியமாக! தீக்குண்டத்தார் அழிக்கப்பட்டார்கள்!
அது எத்தகைய தீக்குண்டமெனில், அதில் நன்கு கொழுந்து விட்டெரியும்
எரி பொருள் இருந்தது. அவர்கள் அதன்ஓரத்தில் அமர்ந்திருந்து இறை
நம்பிக்கையாளர்களுக்குத் தாம் செய்துகொண்டிருந்த அக்கிரமச் செயல்களைப் பார்த்து ரசித்த வண்ணம் இருந்தார்கள்.அந்த இறைநம்பிக்கையாளர்களிடம் தீக்குண்டத்தார்கள் பகைமை பாராட்டிக்கொள்ள காரணம் இதைத் தவிர
வேறெதுவும் இருக்கவில்லை.
“யாவற்றையும் மிகைத்தவனும் தனக்குத்தானே புகழுக்குரியவனும் வானங்கள் மற்றும் பூமியின்
ஆட்சியதிகாரத்திற்கு உரிமையாளனுமாகிய அல்லாஹ்வின் மீது அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்பது தான்!” ( அல்குர்ஆன்: 85: 1- 9 )
இந்த செய்தி
நபிமொழிகளில் விரிவாக இடம் பெற்றுள்ளது.
இது முந்தைய பனூ இஸ்ராயீல்களின் காலத்தில் நடைபெற்ற வியப்பின்
விளிம்பிற்கே அழைத்துச் செல்லும் வினோதமான வரலாறாகும்.
ஸுஹைப் இப்னு ஸினான் (ரலி) அவர்கள் வாயிலாக இமாம் முஸ்லிம் (ரஹ் ) அவர்கள் அறிவிக்கும் நீண்ட ஹதீஸ் முஸ்லிம் ஷரீஃபில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தன்னை கடவுளாக அறிவித்து,
தன்னை வணங்க வேண்டும் என
ஆணை பிறப்பித்திருந்த ஓர் அரசனின் பிரதேசத்தில் ஈமான் கொண்டிருந்த ஒரு சிறுவனின் மரணத்தின் மூலம் ஒட்டு மொத்த நாட்டு மக்களும் முஸ்லிமானார்கள்.
قد آمن
الناس كلهم. فأمر بأفواه السكك فَخُدّت فيها الأخاديد، وأضرمت فيها النيران، وقال:
من رجع عن دينه فدعوه وإلا فأقحموه فيها. قال: فكانوا يتعادون فيها ويتدافعون
அப்போது, அரசன் பெரிய கிடங்குகள் தோண்டச் சொல்லி அதில் நெருப்பு
மூட்டுமாறு கட்டளைப் பிறப்பித்து,
“யார் யாரெல்லாம் தங்களது ஈமானை கைவிட
வில்லையோ அவர்களைப் பிடித்து இவற்றில் வீசியெறியுங்கள்! அல்லது இந்த நெருப்பில் இறங்குங்கள்என்று அவர்களை நிர்ப்பந்தியுங்கள்! என்று தம் சேவகர்களுக்கு
உத்தரவிட்டான்.
فجاءت
امرأة بابن لها ترضعه، فكأنها تقاعست أن تقع في النار، فقال الصبي: اصبري يا أماه،
فإنك على الحق".
அவர்களும் அவ்வாறே செய்தனர். அல்லாஹ்வைக் கொண்டு நம்பிக்கைக் கொண்ட அத்துனை பேர்களும் தீக்குண்டத்தில் வீசியெறியப்பட்டார்கள்இறுதியாக, ஒரு பெண்மணி வந்தாள். பால்குடி பருவத்தில் உள்ள தன் குழந்தையை கையில் சுமந்தவாறு
தீக்குண்டத்தின் வாசல் அருகே தயங்கிய படி நின்ற போது, அந்தக் குழந்தை சொன்னது: “தாயே! பொறுமை காத்திடு! நிச்சயமாக நீ சத்தியத்தின் மீது இருக்கின்றாய்” என்று. ( நூல்: இப்னு கஸீர், ரியாளுஸ்ஸாலிஹீன், பாபுஸ் ஸப்ர், ஹதீஸ்எண்: 30
)
ஃபிர்அவ்னும் சரி, தீக்குண்டத்தாரும் சரி
அழிக்கப்பட்டார்கள் என்று அல்குர்ஆன்
அடையாளப்படுத்துகிறது.
அல்லாஹ் சூழ்ச்சியாளர்களில் மிகச் சிறந்தவன்!!
யூதர்கள் ஃபலஸ்தீனில்
முஸ்லிம்களே இருக்கக்கூடாது எனும்
நோக்கில் பெண்களையும், குழந்தைகளையும் கொன்று
குவிக்கின்றனர். ஆனால், போர் தொடர்கிற இச்சூழலின் நடுவே இன்னும் சில மாதங்களில் குழந்தைப் பெறும்
நிலையில் மட்டும் 3500
கர்ப்பிணிகள் இருக்கிறார்கள் என்கின்ற ஐநா-வின் மனித
உரிமைகள் அமைப்பின் (UNHRC)
தகவல் தந்துள்ளது.
அப்படியே அவர்கள்
குழந்தைப் பெற்றுக் கொண்டாலும் ஒரே பிரசவத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளையே
அல்லாஹ் அவர்களில் சிலருக்கு வழங்குகின்றான். 13 வருட காத்திருப்புக்குப் பின் ஒரே
பிரசவத்தில் 6
குழந்தைகளை பெற்றெடுத்த பாலஸ்தீன தம்பதிகள்.
பாலஸ்தினியர்களை முற்றிலுமாக ஒழித்து விட இஸ்ரேல் பல கொடூர செயல்னை தினம் தினம்
அரங்கேற்றி வருகிறது. மறு பக்கம் பாலஸ்தீனியர்களை இறைவன் பல்கிப் பெருக வைக்கவே
செய்கிறான்.
எல்லா புகழும் இறைவனுக்கே! ( நன்றி: சுவனப்பிரியன், 17/12/2015 )
இஸ்லாத்தின் பார்வையில் குழந்தைகள்....
1.இறைவனின் அன்பளிப்புகள்!
لِلّٰهِ
مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ يَخْلُقُ مَا يَشَآءُ يَهَبُ لِمَنْ يَّشَآءُ
اِنَاثًا وَّيَهَبُ لِمَنْ يَّشَآءُ الذُّكُوْرَ
அல்லாஹ்வுக்கே
வானங்களுடையவும் பூமியுடையவும் ஆட்சி சொந்தமாகும்; ஆகவே தான் விரும்பியவற்றை அவன் படைக்கின்றான்; தான் விரும்புவோருக்குப் பெண் மக்களை அளிக்கிறான்; மற்றும் தான் விரும்புவோருக்கு ஆண் மக்களை அளிக்கின்றான்.
اَوْ
يُزَوِّجُهُمْ ذُكْرَانًا وَّاِنَاثًا وَيَجْعَلُ مَنْ يَّشَآءُ عَقِيْمًا
اِنَّهٗ عَلِيْمٌ قَدِيْرٌ
அல்லது
அவர்களுக்கு அவன் ஆண்மக்களையும், பெண் மக்களையும்
சேர்த்துக் கொடுக்கின்றான்;
அன்றியும் தான் விரும்பியோரை மலடாகவும் செய்கிறான் -
நிச்சயமாக,
அவன் மிக அறிந்தவன்; பேராற்றலுடையவன். ( அல்குர்ஆன்: 42:
49, 50 )
2.இறைவனின் சோபனம்!
ஆண் குழந்தையோ, பெண் குழந்தையோ இரண்டுமே இறைவன் புறத்திலிருந்து வந்த சோபனங்களே!
وَاِذَا
بُشِّرَ اَحَدُهُمْ بِالْاُنْثٰى ظَلَّ وَجْهُهٗ مُسْوَدًّا وَّهُوَ كَظِيْمٌ
அவர்களில்
ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நன்மாராயங் கூறப்பட்டால் அவன் முகம்
கறுத்து விடுகிறது - அவன் கோபமுடையவனாகிறான்.
(
அல்குர்ஆன்: 16: 58 )
فَبَشَّرْنٰهُ
بِغُلٰمٍ حَلِيْمٍ
எனவே, நாம் அவரு(இப்ராஹீம்)க்கு பொறுமைசாலியான ஒரு மகனைக் கொண்டு சோபனம் கூறினோம். ( அல்குர்ஆன்: 37:
101 )
وَبَشَّرْنٰهُ
بِاِسْحٰقَ نَبِيًّا مِّنَ الصّٰلِحِيْنَ
ஸாலிஹானவர்களிலுள்ளவரான
நபி இஸ்ஹாக்கை அவருக்கு இன்னும் (மகனாகத் தருவதாக) நாம் சோபனம் கூறினோம். ( அல்குர்ஆன்: 37:
112 )
3.வாழ்வின் அலங்காரங்கள்!
اَلْمَالُ
وَ الْبَـنُوْنَ زِيْنَةُ الْحَيٰوةِ الدُّنْيَا
செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களாகும். ( அல்குர்ஆன்: 18: 46 )
4.இன்பம் தரும் அருட்கொடை!
زُيِّنَ
لِلنَّاسِ حُبُّ الشَّهَوٰتِ مِنَ النِّسَآءِ وَالْبَـنِيْنَ وَالْقَنَاطِيْرِ
الْمُقَنْطَرَةِ مِنَ الذَّهَبِ وَالْفِضَّةِ وَالْخَـيْلِ الْمُسَوَّمَةِ
وَالْاَنْعَامِ وَالْحَـرْثِ ذٰ لِكَ مَتَاعُ الْحَيٰوةِ الدُّنْيَا وَاللّٰهُ
عِنْدَهٗ حُسْنُ الْمَاٰبِ
பெண்கள், மக்கட் செல்வங்கள்;
பொன்னிலும், வெள்ளியிலுமான
பெருங்குவியல்கள்;
அடையாளமிடப்பட்ட (உயர்ந்த) குதிரைகள்; (ஆடு,
மாடு, ஒட்டகை போன்ற) கால்
நடைகள், சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள இச்சை மனிதர்களுக்கு
அழகாக்கப்பட்டிருக்கிறது;
இவை(யெல்லாம் நிலையற்ற) உலக வாழ்வின் சுகப்பொருள்களாகும்; அல்லாஹ்விடத்திலோ அழகான தங்குமிடம் உண்டு. ( அல்குர்ஆன்: 3: 14 )
5.வலிமையின் அடையாளம்!
“ஏராளமான பொருள்களையும்
புதல்வர்களையும் (தந்து) கொண்டு உங்களுக்கு உதவி செய்து, உங்களைத் திரளான கூட்டத்தினராகவும் ஆக்கினோம்.” (17: 06)
6.கண்களுக்கு குளிர்ச்சியானவர்கள் (குர்ரதுல் அஃயுன்) என்றும் அல்குர்ஆன்
குழந்தைகளை வர்ணிக்கிறது.
“மேலும் அவர்கள் எங்கள்
இறைவா! எங்கள் மனைவியரிடமும் எங்கள் சந்ததியரி டமும் இருந்து எங்களுக்குக்
கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக!” (25: 74)
7.சுவனவாசிகளுக்கு அல்லாஹ் வழங்கும் அருட்கொடை!
وَيَطُوْفُ
عَلَيْهِمْ غِلْمَانٌ لَّهُمْ كَاَنَّهُمْ لُـؤْلُـؤٌ مَّكْنُوْنٌ
அவர்களுக்கு(ப்
பணி விடைக்கு) உள்ள சிறுவர்கள், அவர்களைச் சுற்றிக்
கொண்டே இருப்பார்கள்;
அவர்கள் பதித்த ஆணி முத்துகளைப் போல் (இருப்பார்கள்).
يَطُوْفُ
عَلَيْهِمْ وِلْدَانٌ مُّخَلَّدُوْنَ
நிலையான இளமையுடைய
சிறுவர்கள் (இவர்கள் பணிக்காகச்) சுற்றிக் கொண்டே இருப்பார்கள். ( அல்குர்ஆன்: 56:
17 )
وقد
اختلف المفسرون والرواة المسلمين في تحديد هوية هؤلاء الأولاد، ومما قالوه:
இந்த
இறைவசனங்களுக்கு அறிஞர் பெருமக்கள் பல்வேறு விளக்கங்களை தந்துள்ளதை பார்க்க
முடிகிறது.
هم من
أخْدَمَهُمُ الله تعالى إياهُم من أولاد غيرهم.
هم
غلمان خلقوا في الجنّة لخدمة أهل الجنّة من غير ولادة.
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் சுவன வாசிகளுக்கு பணிவிடை செய்வதற்காகவே "குழந்தைகளை"
படைக்கிறான். அந்த குழந்தைகள் உலகில் வாழ்ந்து மரணித்த குழந்தைகள் அல்ல, மாறாக,
நாம் காணும் குழந்தைப்பேறு அடிப்படையில் அல்லாமல்
பிரத்யேகமான முறையில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் படைப்பான் என்றும் அவர்கள்
குற்ப்பிடுகின்றனர்.
இந்த கருத்தை
இப்னு தைமிய்யா மற்றும் இப்னுல் கைய்யிமுல் ஜவ்ஸீ (ரஹ்) இமாம் இப்னு கஸீர் (ரஹ்)
ஆகியோர் கொண்டுள்ளனர்.
فروي عن
علي بن أبي طالب رضي الله عنه ، والحسن البصري أن المراد بالولدان هنا ولدان
المسلمين الذين يموتون صغارا ولا حسنة لهم ولا سيئة
.
அலீ (ரலி) அவர்கள்
மற்றும் இமாம் ஹஸன் அல் பஸரீ (ரஹ்) ஆகியோர் "உலகில் வாழும் காலத்தில்
இறைநம்பிக்கையாளர்களுக்குப் பிறந்த, பாவம் செய்யாத நன்மைகளும்
இல்லாத நிலையில் பெற்றோர்களுக்கு முன்பே சிறுவயதில் மரணித்த சிறுவர்கள்" தான்
இந்த இறைவசனங்களில் குறிப்பிடப்படும் சிறுவர்கள் என்று கூறுகின்றார்கள்.
وروي عن
سلمان رضي الله عنه أنه قال : أطفال المشركين هم خدم أهل الجنة .
இணைவைப்பாளர்களுக்குப்
பிறந்த சிறு பிராயத்திலேயே மரணித்த சிறுவர்கள் சுவனவாசிகளுக்கு பணிவிடை
செய்வார்கள் என்று கூறுகின்றார்கள். ( நூல்: இப்னு கஸீர் )
இங்கே இந்த
இறைவசனங்களில் குறிப்பிடப்படும் பணிவிடை செய்யும் சிறுவர்கள் யார்? என்பதில் தான் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றதே தவிர அவர்கள் பருவ வயதை
அடையாத சிறுவர்களா?
இல்லையா?என்பதில் அல்ல.
இந்த
இறைவசனங்களில் இரண்டு அம்சங்கள் குறிப்பிடப்படுவதை நாம் அவதானிக்கலாம்.
ஒன்று:- அவர்கள்
சுவன வாழ்க்கையில் சுவனவாசிகளுக்கு வழங்கப்பட்ட நிரந்தரமான அருட்கொடை.
ஹூருல்ஈன்கள்,
சுவனத்தின் இன்பங்களைப் போல.
இரண்டு:-
சுவனவாசிகளை எப்போதுமே சுற்றி சுற்றி வந்து கொண்டே இருப்பார்கள்.
குழந்தைகள், பருவமடையாத சிறுவர்கள் மீதான இஸ்லாம் வழங்கும் இத்தகைய மாண்பை உலகில் வேறெந்த
சமயங்களிலும் காண முடியாது.
குழந்தைகள் மீது கவனமெடுத்த
நபி (ஸல்)!
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى قَالَ :
أَخْبَرَنَا الْوَلِيدُ قَالَ : حَدَّثَنَا الأَوْزَاعِيُّ ، عَنْ يَحْيَى بْنِ
أَبِي كَثِيرٍ ، عَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِي قَتَادَةَ ، عَنْ أَبِيهِ أَبِي
قَتَادَةَ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ :
إِنِّي
لأَقُومُ فِي الصَّلاَةِ أُرِيدُ أَنْ أُطَوِّلَ فِيهَا فَأَسْمَعُ بُكَاءَ
الصَّبِيِّ فَأَتَجَوَّزُ فِي صَلاَتِي كَرَاهِيَةَ أَنْ أَشُقَّ عَلَى أُمِّهِ.
“ நீண்ட
நேரம் தொழுவிக்கும் எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குகின்றேன். அப்போது
குழந்தையின் அழுகுரலை நான் கேட்கின்றேன். (என்னைப் பின்பற்றித் தொழும்) அந்தக்
குழந்தையின் தாயாருக்குச் சிரமம் அளிக்கக் கூடாது என்பதால் தொழுகையைச் சுருக்கமாக
முடித்து விடுகின்றேன்”
என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்
: அபூகதாதா (ரலி), நூல் : புகாரி 707, 709, 710
பசிக்கு உணவு
கொடுத்தால் சொர்க்கம்!
وَحَدَّثَنِى
عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ بَهْرَامَ وَأَبُو بَكْرِ بْنُ
إِسْحَاقَ – وَاللَّفْظُ لَهُمَا – قَالاَ أَخْبَرَنَا أَبُو الْيَمَانِ
أَخْبَرَنَا شُعَيْبٌ عَنِ الزُّهْرِىِّ حَدَّثَنِى عَبْدُ اللَّهِ بْنُ أَبِى
بَكْرٍ أَنَّ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ أَخْبَرَهُ أَنَّ عَائِشَةَ زَوْجَ
النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَتْ
جَاءَتْنِى
امْرَأَةٌ وَمَعَهَا ابْنَتَانِ لَهَا فَسَأَلَتْنِى فَلَمْ تَجِدْ عِنْدِى
شَيْئًا غَيْرَ تَمْرَةٍ وَاحِدَةٍ فَأَعْطَيْتُهَا إِيَّاهَا فَأَخَذَتْهَا
فَقَسَمَتْهَا بَيْنَ ابْنَتَيْهَا وَلَمْ تَأْكُلْ مِنْهَا شَيْئًا ثُمَّ قَامَتْ
فَخَرَجَتْ وَابْنَتَاهَا فَدَخَلَ عَلَىَّ النَّبِىُّ -صلى الله عليه وسلم-
فَحَدَّثْتُهُ حَدِيثَهَا فَقَالَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- « مَنِ
ابْتُلِىَ مِنَ الْبَنَاتِ بِشَىْءٍ فَأَحْسَنَ إِلَيْهِنَّ كُنَّ لَهُ سِتْرًا
مِنَ النَّارِ ».
தன் இரு
பெண் குழந்தைகளைக் கூட்டிக்
கொண்டு என்னிடத்தில் ஓர்
ஏழைப் பெண் வந்தார்.
அவருக்கு நான் மூன்று
பேரீச்சம் பழங்களைக் கொடுத்தேன்.
அவ்விரு குழந்தைகளுக்கும் (ஆளுக்கு)
ஒரு பேரீச்சம் பழத்தைக்
கொடுத்து விட்டு, ஒரு
பேரீச்சம் பழத்தைத் தான்
சாப்பிடுவதற்காக தனது
வாய்க்குக் கொண்டு சென்றார்.
அப்போது அவ்விரு குழந்தைகளும்
தங்களுக்கு சாப்பிடத் தருமாறு
கேட்டன! தான் சாப்பிட
நினைத்த அந்தப் பேரீச்சம்
பழத்தை இரு துண்டுகளாகப்
பிய்த்து (குழந்தைகளிடம்) கொடுத்தார்.
அந்தப் பெண்ணின் அச்செயல்
என்னை ஆச்சரியப்பட வைத்தது.
அவர் செய்த அந்தக்
காரியத்தை நான் அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்களிடம்
தெரிவித்தேன். அதற்கு
அவர்கள், “இதன் மூலம்
அல்லாஹ் அப்பெண்ணுக்கு சுவனத்தை
விதித்து விட்டான்” என்றோ
அல்லது “அப்பெண்ணுக்கு நரகிலிருந்து
விடுதலை அளித்து விட்டான்”
என்றோ கூறினார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல்
: முஸ்லிம் 4764
முஸ்லிம்களின் மீதான
வன்மத்தில் உச்சம் தொட்டவர்கள் யூதர்கள்!
لَـتَجِدَنَّ
اَشَدَّ النَّاسِ عَدَاوَةً لِّـلَّذِيْنَ اٰمَنُوا الْيَهُوْدَ وَالَّذِيْنَ
اَشْرَكُوْا وَلَـتَجِدَنَّ اَ قْرَبَهُمْ مَّوَدَّةً لِّـلَّذِيْنَ اٰمَنُوا
الَّذِيْنَ قَالُوْۤا اِنَّا نَصٰرٰى ذٰ لِكَ بِاَنَّ مِنْهُمْ قِسِّيْسِيْنَ
وَرُهْبَانًا وَّاَنَّهُمْ لَا يَسْتَكْبِرُوْنَ
நிச்சயமாக யூதர்களையும், இணைவைப்பவர்களையும்
முஃமின்களுக்குக் கடும் பகைவர்களாகவே (நபியே!) நீர் காண்பீர்; “நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்களாக இருக்கின்றோம் என்று சொல்பவர்களை, முஃமின்களுக்கு நேசத்தால் மிகவும் நெருங்கியவர்களாக (நபியே!) நீர் காண்பீர்; ஏனென்றால் அவர்களில் கற்றறிந்த குருமார்களும், துறவிகளும் இருக்கின்றனர் மேலும் அவர்கள் இறுமாப்புக் கொள்வதுமில்லை. ( அல்குர்ஆன்: 5:
82 )
குழந்தைகளை
கொல்பவர்களுக்கு தண்டனை என்ன?
حدثنا
محمد: أخبرنا عبد الله بن إدريس، عن شعبة، عن هشام بن زيد ابن أنس، عن جده
أنس بن مالك قال: خرجت جارية عليها أوضاح بالمدينة، قال: فرماها يهودي بحجر،
قال: فجيء بها إلى النبي ﷺ وبها رمق، فقال لها رسول الله ﷺ : (فلان قتلك). فرفعت
رأسها، فأعاد عليها، قال: (فلان قتلك). فرفعت رأسها، فقال لها في الثالثة: (فلان
قتلك). فخفضت رأسها، فدعا به رسول الله ﷺ فقتله بين الحجرين.
அனஸ் {ரலி}
அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “மதீனாவில்
வெள்ளி நகை அணிந்து கொண்டு ஒரு சிறுமி வெளியே சென்றாள். அப்போது அச் சிறுமியின்
மீது யூதன் ஒருவன் கல் எறிந்தான்.
உயிர்
ஊசலாடிக்கொண்டிருந்த நிலையில் அச் சிறுமி நபியவர்களிடம் கொண்டுவரப்பட்டாள்.
அச் சிறுமியிடம் அல்லாஹ்வின்
தூதர் {ஸல்} அவர்கள் ”இன்னார்
உன்னைத் தாக்கினாரா? என்று இரண்டு முறை (யாரோ இரு
நபர்களின் அடையாளங்களையோ, அல்லது பெயர்களையோ கூறி)
கேட்டார்கள். அவள் இல்லை என்று தலையால் சைகை செய்தாள்.
மூன்றாம் முறையாக
அவளிடம் “இன்னாரா உன்னைத் தாக்கினார்? என்று கேட்ட போது,
அவள் கீழ் நோக்கி (ஆம் என்று கூறும் விதமாக) தாழ்த்தி தலையால்
சைகை செய்தாள்.
ஆகவே, அந்த
யூதனை அழைத்து வருமாறு நபி {ஸல்} ஆணை பிறப்பித்தார்கள். அவனை அழைத்து வந்து விசாரித்த போது அவன்
குற்றத்தை ஒப்புக்கொண்டான். ஆகவே, இரு கற்களுக்கிடையில்
வைத்து அவனது தலையினை நசுக்கிக் கொல்லுமாறு நபி {ஸல்}
அவர்கள் உத்தரவிட்டார்கள். ( நூல்:
புகாரி, பாடம், பாபு இதா கதல
பிஹஜரின் அவ் பிஅஸா)
யாஅல்லாஹ்! ஃபலஸ்தீன குழந்தைகளுக்கு அச்சமற்ற நிம்மதியான
வாழ்வை தந்தருள்வாயாக!
யாஅல்லாஹ்! குழந்தைகளை கொன்று குவிக்கும் யூதப் பயங்கரவாதிகளுக்கு தகுந்த பாடத்தையும், படிப்பினையையும் வழங்குவாயாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!
மாஷா அல்லாஹ் நிகழ்காலத்திற்கு தேவையான அருமையான தொகுப்பு அல்லாஹுத்தஆலா தங்களுக்கு ஈருலகிலும் நற் பாக்கியத்தை தந்தருள் புரிவானாக ஆமீன்
ReplyDeleteமிகவும் பயனுள்ள பயான் குறிப்புகள் மாஷா அல்லாஹ்
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் மாஷா அல்லாஹ் பாரகல்லாஹ்
ReplyDeleteவேண்டுகோள்
ஹஜ்ரத் பழைய பயான்களை எளிமையான முறையில் தேடி எடுக்க தேதியுடன் தலைப்பு பதிவிட்டு ஒரு அட்டவணை வெளியிட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
அல்லாஹ் தங்களுக்கு கிருபை செய்வானாக ஆமீன்
முஹம்மது சலீம் காஷிஃபி 7373 234 786
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்....
Deleteகண்ணியம் நிறைந்த மஸாபீஹுல் மிஹ்ராப் தளத்தின் பார்வையாளர்களான மேதகு ஆலிம்கள் சமூகத்திற்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு....
மஸாபீஹுல் மிஹ்ராப் தளத்தில் மாற்றம் செய்ய வேண்டும். தலைப்பு வாரியாக பதிவு செய்ய வேண்டும். தேவையான தலைப்புகளை உடனடியாக இலகுவாக பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை வெகுவான ஆலிம்கள் நீண்ட நாட்களாக நம்மிடம் தெரிவித்து வந்தனர்.
அந்த அடிப்படையில் தற்போது www.vellimedaiplus.blog என்று App வடிவமைப்பில் மாற்றம் செய்யப்பட்டு சுமார் 12 பொது தலைப்புகளின் கீழ் கொண்டு வந்து மஸாபீஹுல் மிஹ்ராப் தளத்தில் இது வரை பதிவு செய்யப்பட்ட 460 க்கும் மேற்பட்ட கட்டுரைகள் மறு பதிவேற்றம் செய்யப்படும் பணி நடந்து வருகிறது.
முதற்கட்டமாக முஹம்மது (ஸல்) அவர்கள் எனும் பொது தலைப்பின் கீழ் மீலாது தொடர் பயான் 36 தலைப்புகள் கீழ் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
சற்றேறக்குறைய இன்னும் மூன்று வாரங்களுக்குள் அத்துனை கட்டுரைகளும் புதிய www.vellimedaiplus.blog App -ல் பதிவேற்றம் செய்யப்பட்டு இதன் பயன்பாடு நடைமுறையில் வந்து விடும்.
புதிய App பயன்பாட்டில் ஆலிம்கள் சிரமப்பட்டு விடக்கூடாது என்பதற்காக மிகவும் இலகுவான வழிமுறைகள் கையாளப்பட்டுள்ளது.
அந்த வகையில் முதன் முறையாக இந்த லிங்கின் வாயிலாக உள்ளே நுழையும் போது app download என்று ஸ்கிரீனில் கேட்கும் அதை ஓகே செய்து கொண்டால் போதும் உங்கள் மொபைலில் அந்த app உடனே install ஆகிவிடும்.
இதன் பிறகு மஸாபீஹுல் மிஹ்ராப் தளத்தின் கட்டுரைகளை அந்த app -ன் ஊடாகவே சென்று மிகவும் இலகுவாக பார்த்துக் கொள்ளலாம்.
இந்த ஆப் உருவாக்கத்தின் பிண்ணனியில் உந்து சக்தியாக இருக்கும் ஆலிம்கள் இந்த ஆப்பை உருவாக்கித் தந்த சகோதரர் பள்ளப்பட்டி ஸமீர் நிஜாமி ஆகியோருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஈருலகத்தின் அனைத்து ஃகைர் பரக்காத்துகளையும் நிரப்பமாக வழங்கியருள்வானாக!!
ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!!
இந்த ஆப் பயன்பாட்டுக்கு வந்த பிறகு பழைய blogspot ல் கட்டுரைகள் பதிவு செய்வது நிறுத்தப்படும்.
ஆலிம்களின் சேவையில்...
மௌலவி பஷீர் அஹமது உஸ்மானி
மஸாபீஹுல் மிஹ்ராப்.
Jazakallah khair
Delete