சுற்றுச்சூழலைப் பாதுகாக்கத் தூண்டும் இஸ்லாம்!!
மாசுபாடு என்பது
காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகியவற்றில் நேரடி தாக்கத்தை
ஏற்படுத்தும் உலகளாவிய பிரச்சனையாகும்.
சர்வதேச அளவில் பல்வேறு
தளங்களில் இன்று பரவலாக விவாதிக்கப்படும் காற்று, நீர்,
ஒலி மற்றும் பிளாஸ்டிக் போன்றவைகளால் ஏற்படும் நில மாசுபாடு
இப்படியாக பல்வேறு வகையான மாசுபாடுகளை நாம் அனைவரும் அறிவோம்.
உலகம் சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சினைகளில் முதன்மையானது ‘சுற்றுச்சூழல் சீர்கேடு’ ஆகும். உலகை அச்சுறுத்தும் பத்து
அச்சுறுத்தல்களில் சூழ்நிலை சீர்கேடும் ஒன்று என ஐக்கிய நாடுகள் சபை
அறிவித்துள்ளது.
மனிதன் உட்பட
அனைத்து உயிரினங்களும்,
உயிரிகளும் வாழ்வதற்கு ஏற்ற இடம்தான் இந்த புவிமண்டலமாகும்.
இந்த புவி மண்டலம்
சீராக இயங்குவதற்கு ஐந்து வகையான ஏற்பாடுகளை இறைவன் வகுத்துள்ளான். அவைகளாவன: 1) நிலம்,
2) நீர், 3) காற்று, 4) ஆகாயம்,
5)
நெருப்பு.
நமக்கு முந்தைய
தலைமுறை செய்யாத, கண்டிராத ஒன்றை நாம் செய்து கொண்டிருக்கின்றோம். ஆம்! தண்ணீரை
விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கின்றோம். ஆனால், அடுத்த தலைமுறையோ
சுவாசிப்பதற்கு காற்றை விலை கொடுத்து வாங்கிட நேர்ந்திடுமோ என்கிற அச்சம் எழும்
அளவிற்கு இன்று சுற்றுச் சூழல் கெட்டுப் போய் இருக்கின்றது. காற்று மாசு
அடைந்திருக்கின்றது.
காற்று மாசடைவதால் ஏற்படும் பாதிப்புகள்:-
பல்வேறு வகையான
வேதியியற் பொருட்களும்,
தூசியும் வளிமண்டலத்துக்கு வெளியேற்றப்படுவதன் மூலம் வளி
மாசடைகின்றது.
தற்காலப்
போக்குவரத்து வாகனங்களாலும், பட்டாசு வெடி
வெடிக்கப்படுவதாலும்,
தொழிற்சாலைகளாலும் வெளிவிடப்படும் கார்பன் மோனாக்சைடு, குளோரோ புளோரோ கார்பன்கள், நைட்ரசன் ஆக்சைடுகள்
என்பன வளி மாசடைதலுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
தரமற்ற காற்று, மனிதன் உள்ளிட்ட உயிரினங்களைக் கொல்லக் கூடியது. ஓசோன் மாசு, கீழ்க்காணும் நோய்களை மனிதனில் ஏற்படுத்துகிறது:
மூச்சு நோய், இதய நோய்,
தொண்டை எரிச்சல், நெஞ்சு வலி, மூக்கடைப்பு ஆகியவையாகும்.
காற்று மாசுபடுதல்
காரணமாக சீனாவில் ஒவ்வொரு வருடமும் 656,000 பேர்,
குறித்த காலத்துக்கு முன்பே இறக்கிறார்கள்.
இந்தியாவில் இந்த
நிலை 527,700
பேர் என்பதாக உள்ளது. ஐக்கிய அமெரிக்காவில்
ஆண்டுக்கு 50,000
பேருக்கு மேல் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
காற்று மாசினால்
பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் வயதானோர் ஆவர். ஏற்கனவே இதயம் அல்லது நுரையீரல்
பாதிக்கப்பட்டோர்,
கூடுதல் சிரமம் அடைகிறார்கள்.
சிறுவர்களும், குழந்தைகளும் எளிதில்
பாதிக்கப்படுகிறார்கள் என்கிறது ஐ.நா சபையின் ஓர் ஆய்வு. ( நன்றி: UPSC
IN Tamil.blogspot.com )
உலகளவில், நம்மில் 10ல் 9
பேர் சுவாசிக்கும் காற்றானது நமது ஆரோக்கியத்திற்கு தீங்கு
விளைவிக்கும். கண்ணுக்குத் தெரியாத துகள்கள் நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல் மற்றும்
உறுப்புக்குள் ஊடுருவி,
ஆஸ்துமா, பக்கவாதம், மாரடைப்பு மற்றும் டிமென்ஷியா உள்ளிட்ட கடுமையான மற்றும் நாள்பட்ட நோய்களை
ஏற்படுத்துகின்றன.
வெளிப்புற காற்று
மாசுபாடு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4.2 மில்லியன் ஆரம்ப
மரணங்களை ஏற்படுத்துகிறது.
15 வயதிற்குட்பட்ட
குழந்தைகளில் 93%
சுத்தமான மற்றும் ஆரோக்கியமான சூழலில் வளரும் உரிமை
மறுக்கப்படுகிறது. பல குழந்தைகள் தங்கள் முதல் சுவாசத்திலிருந்து மாசுபட்ட
காற்றை சுவாசிக்கிறார்கள்,
இது வளர்ச்சி மற்றும் அறிவாற்றல் வளர்ச்சியின் அடித்தளங்களை
நிறுவும் ஒரு முக்கியமான காலகட்டமாகும்.
காற்று மாசுபாடு
குழந்தையின் உடல் ஆரோக்கியம், கல்வி மற்றும்
விளையாடுவதற்கான உரிமையை எதிர்மறையாக பாதிக்கிறது. இந்த காரணிகள்
மூளை வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும், மேலும் மன ஆரோக்கியம்
மற்றும் நடத்தை சிக்கல்களுக்கு பங்களிக்கின்றன. ( நன்றி:airfound - org.google
13/06/2022 )
இந்த
பிரபஞ்சத்தில் மாசுபாடுகளை ஏற்படுத்துவது இந்த பிரபஞ்சத்தில் குழப்பம்
ஏற்படுத்துவதற்கு ஒப்பான பாவமான செயலாகும்.
وَلَا تُفْسِدُوْا
فِى الْاَرْضِ بَعْدَ اِصْلَاحِهَا
(மேலும்,) பூமியில் (அமைதி உண்டாகி) சீர்திருத்தம் ஏற்பட்ட பின்னர் அதில் குழப்பம்
உண்டாக்காதீர்கள். ( அல்குர்ஆன்: 7: 56 )
ஏனெனில், படைத்த ரப்புல் ஆலமீன் இந்தப் பூமியில் எவ்வித குழப்பத்தையும்
ஏற்படுத்துவதில்லை. அது அவனுக்கு அவசியம் இல்லாத அவனுடைய மாட்சிமைக்கு தகுதி
இல்லாத ஒன்றாகும்.
காரணம் இந்த
பூமியில் குழப்பம் விளைவிப்பவர்கள் மனிதர்கள் மட்டுமே என்று அல்குர்ஆன் அடையாளப்
படுத்துகின்றது.
ظَهَرَ الْفَسَادُ فِى الْبَرِّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ اَيْدِى النَّاسِ لِيُذِيْقَهُمْ بَعْضَ الَّذِىْ عَمِلُوْا لَعَلَّهُمْ يَرْجِعُوْنَ
மனிதர்களில் கைகள்
தேடிக்கொண்ட (தீச் செயல்களின்) காரணத்தால் கடலிலும் தரையிலும் (நாசமும்)
குழப்பமும் தோன்றின;
(தீமைகளிலிருந்து) அவர்கள் திரும்பிவிடும் பொருட்டு அவர்கள்
செய்தார்களே (தீவினைகள்) அவற்றில் சிலவற்றை (இவ்வுலகிலும்) அவர்கள் சுவைக்கும்படி
அவன் செய்கிறான்.
(
அல்குர்ஆன்: 30: 41 )
ஆகவே தான் அல்லாஹ்
ரப்புல் ஆலமீன் இந்த உலகில் குழப்பம் செய்வதை தடை விதித்துள்ளான். அந்த தடையை
மீறுபவர்கள் மீது கடுமையான கண்டனங்களை பதிவு செய்வதோடு கொடுமையான தண்டனைகளை
வழங்குவதாகவும் எச்சரிக்கை செய்துள்ளான்.
அந்த வகையில் மனித
சமூகம் இந்த உலகில் செய்யும் பல்வேறு குழப்பங்களில் பிரதானமான ஒரு குழப்பம்
இருக்குமானால் அது சுற்றுச்சூழலை பாழாக்கும் "மாசு படுத்துதல்" ஆகும்.
பூமியில் குழப்பம் விளைவித்தல் என்றால் என்ன?
இதற்கு அரபியில்
"அல் ஃபஸாது ஃபில் அர்ள்" என்று கூறப்படும்.
معناه
كما ذكر أهل اللغة: الفساد مصدر فَسَدَ يُفْسُدُ فَسادًا، وهو ضد الإصلاح،
قال الليث: الفساد نقيض الإصلاح، وقال الراغب: الفساد خروج الشيء عن الاعتدال سواء
أكان الخروج عليه قليلاً أم كثيرًا، وكل اعتداء على الدين، أو العقل، أو المال، أو
العرض، أو النفس فهو إفساد.
சீராக இருக்கும்
ஒன்றை சீர் குழைத்தல் என்று பொருள். இமாம் ராغகிபு அவர்கள் கூறுகிறார்கள்:- ஒரு பொருள் சமநிலை யில் இருந்து வெளியேறுதல்.
அந்த வெளியேற்றம் என்பது குறைவாக அல்லது கூடுதலாக இருந்தாலும் சரியே!
அது சில போது
மார்க்க விஷயங்களில் ஆகலாம். சில போது அறிவு தொடர்பான விஷயங்களில் ஆகலாம். சில
போது பொருளாதாரம் ஊடாக நிகழலாம். ஒரு மனிதனின் மானம், உயிர் போன்றவற்றில் கூட ஏற்படலாம். ஆகவே, இவையனைத்தும் ஃபஸாத் -
குழப்பம் ஏற்படுத்துவதில் அடங்கும்.
மாசு ஏற்படுத்துபவர்கள் பூமியில் குழப்பம் செய்பவர்கள்!!
நாம் வாழும் இந்த
உலகை நம் கரங்களால் நம்மில் பலரே பல்வேறு வழிகளில் மாசு படுத்த காரணமாக அமைகிறோம்.
அதில் ஒன்று. நாம்
மகிழ்ச்சியாக இருக்கும் பண்டிகை நாட்களில், இன்ன பிற சுப (திருமண, புதுவீடு,
அரசியல் வெற்றி, அரசியல் தலைவர் வருகை, சினிமா நடிகர் வருகை,
திரைப்படம் வெளியாகும் நாள்) தினங்களில் வெடி வெடித்து, பட்டாசு போட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது.
வெடி வெடிப்பது, பட்டாசு போடுவது தவறு,
பிழை, அது சமூகத்தில் பல்வேறு
பாதிப்புகளை உண்டாக்குகிறது என்று அறிவியல் பூர்வமாக கூறினாலும், அதற்காக சட்டபூர்வ நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் அதற்கு சப்பைக்கட்டு கட்டி
மிகவும் கீழமையான காரணங்கள் கூறி பட்டாசு தொழிற்சாலையில் பல லட்சக்கணக்கான
பணியாளர்கள் இதை நம்பியே தொழில் செய்கின்றனர். பல லட்சக்கணக்கான குடும்பங்கள்
வாழ்வதற்கு தொழிற்சாலைகள் நடத்தும் தொழிலதிபர்கள் காரணமாக இருக்கின்றனர் எனவே
அவர்களும் வாழ வேண்டும் அல்லவா? என்று ஏதோ நியாயமாக
பேசுவது போல,
சக மனிதர்களின் மீது நேயம் கொள்வது போல பாசாங்கு செய்து
தங்களது சீர் கெட்ட செயலுக்கு நியாயம் கற்பிக்கின்றனர்.
அவர்களுக்கு
தெரியாமல் இல்லை. பட்டாசு போடுவதாலும், வெடி வெடிப்பதாலும் பாரிய
அளவில் மாசுகள் ஏற்படுகிறது, அதன் விளைவாக சக மனித
சமூகத்திற்கும்,
உயிரினங்களுக்கும், உயிரிகளுக்கும் பல்வேறு
தீமைகள் நிகழ்கிறது என்று.
இத்தகைய மனோநிலையை
கொண்ட உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசும் இது போன்றவர்களை அல்குர்ஆன் இவ்வாறு
இழித்துப் பேசுகின்றது.
وَاِذَا
قِيْلَ لَهُمْ لَا تُفْسِدُوْا فِىْ الْاَرْضِ قَالُوْاۤ اِنَّمَا نَحْنُ
مُصْلِحُوْنَ
“பூமியில் குழப்பத்தை உண்டாக்காதீர்கள்” என்று அவர்களிடம்
சொல்லப்பட்டால் “நிச்சயமாக நாங்கள் தாம் சமாதானவாதிகள்” என்று அவர்கள் சொல்கிறார்கள்.
اَلَا
اِنَّهُمْ هُمُ الْمُفْسِدُوْنَ وَلٰـكِنْ لَّا يَشْعُرُوْنَ
நிச்சயமாக அவர்கள் தாம் குழப்பம் உண்டாக்குபவர்கள் அன்றோ; ஆனால் அவர்கள் (இதை) உணர்கிறார்களில்லை. ( அல்குர்ஆன்: 2: 11, 12 )
மேலும், இத்தகைய மாசுபாடுகள்
மூலமாக பல்வேறு உயிரினங்களின் வாழ்க்கையை கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழக்கச் செய்யும்
இந்த போக்கு மனித சமூகத்தையே கொலை செய்வதற்கு நிகரான பாவமாகும். அத்தகைய செயலை
நியாயப்படுத்தி தொடர்ந்து செய்து வரும் ஒரு மனிதனின் நிலை என்ன தெரியுமா? அத்தகைய மனிதன் யார் தெரியுமா? அவனுக்கான தண்டனை என்ன
தெரியுமா?
مِنْ
اَجْلِ ذٰ لِكَ كَتَبْنَا عَلٰى بَنِىْۤ اِسْرَآءِيْلَ اَنَّهٗ مَنْ قَتَلَ
نَفْسًۢا بِغَيْرِ نَفْسٍ اَوْ فَسَادٍ فِى الْاَرْضِ فَكَاَنَّمَا قَتَلَ
النَّاسَ جَمِيْعًا
இதன் காரணமாகவே, “நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த்
தடுப்பதற்காகவோ) அன்றி,
மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே
கொலை செய்தவன் போலாவான். ( அல்குர்ஆன்: 5: 32 )
اِنَّمَا
جَزٰٓؤُا الَّذِيْنَ يُحَارِبُوْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ وَيَسْعَوْنَ فِى
الْاَرْضِ فَسَادًا اَنْ يُّقَتَّلُوْۤا اَوْ يُصَلَّبُوْۤا اَوْ تُقَطَّعَ
اَيْدِيْهِمْ وَاَرْجُلُهُمْ مِّنْ خِلَافٍ اَوْ يُنْفَوْا مِنَ الْاَرْضِ ذٰ
لِكَ لَهُمْ خِزْىٌ فِى الدُّنْيَا وَ لَهُمْ فِى الْاٰخِرَةِ عَذَابٌ عَظِيْمٌ
அல்லாஹ்வுடனும்
அவன் தூதருடனும் போர் புரிந்து, பூமியில் குழப்பம் செய்து
கொண்டு திரிபவர்களுக்குத் தண்டனை இதுதான்; (அவர்கள்)
கொல்லப்படுதல்,
அல்லது தூக்கிலிடப்படுதல், அல்லது மாறுகால் மாறு கை வாங்கப்படுதல், அல்லது நாடு
கடத்தப்படுதல்;
இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும்; மறுமையில் அவர்களுக்கு மிகக்கடுமையான வேதனையுமுண்டு. ( அல்குர்ஆன்: 5:
33 )
ஏனெனில், பட்டாசு,
வெடி வெடித்தலின் ஊடாக காற்று மாசு, ஒலி மாசு,
நீர் நிலைகள் மாசு என புவிமண்டலத்தின் மனித சமூகத்தின் வாழ்வாதாரமான ஆகப் பெரிய மூன்று இறைவனின் அருட்கொடைகள்
பாழாக்கப்படுகின்றன.
ஆகவே தான் மாசு
ஏற்படுத்தும் இத்தகைய மனிதர்கள் "பூமியில் குழப்பம் ஏற்படுத்துபவர்கள்"
என்று நாம் குறிப்பிடுகின்றோம், குற்றம் சுமத்துகின்றோம், அடையாளப் படுத்துகின்றோம்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பும் இஸ்லாமும்...
எப்படி இந்த
பூமியில் குழப்பம் விளைவிக்கக் கூடாதோ, அதைப் போன்றே பூமியின்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு விஷயத்தில் எல்லைகளை மீறக் கூடாது.
மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விஷயத்தில் மிகவும் கவனமாக நடந்து இந்த பூமியின்
சூழலை பாதுகாக்கவும்,
வளப்படுத்தவும் முஸ்லிம்களாகிய நாம் முன் வர வேண்டும்.
هُوَ أَنْشَأَكُمْ مِنَ الْأَرْضِ وَاسْتَعْمَرَكُمْ فِيهَا
அவன்தான் உங்களை
பூமியில் இருந்து படைத்தான். மேலும் ,அதனை வளப்படுத்துமாறு
கேட்டுக் கொண்டான்”.
( அல்குர்ஆன்: 11: 61 )
சுற்றுச்சூழல்
மாசுபடாமல் நாம் வாழும் இந்த பூமியைப் பாதுகாக்கும் கடமை மனித சமூகத்திற்கு
குறிப்பாக சமநிலைச் சமுதாயமான நம் சமூகத்திற்கு இருக்கின்றது.
நம்முடைய ஷரீஆவும்
நம்மை இந்த விஷயத்தில் அப்படித்தான் வழி நடத்தவும் செய்கிறது.
1. இறைவனின் பிரதிநிதி நாம்...
وَاِذْ
قَالَ رَبُّكَ لِلْمَلٰٓٮِٕكَةِ اِنِّىْ جَاعِلٌ فِى الْاَرْضِ خَلِيْفَةً
(நபியே) இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி “நிச்சயமாக நான் பூமியில்
ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்” எனக் கூறினான். (
அல்குர்ஆன்: 2:
30 )
2. அமானிதத்தைச் சுமந்தவர்கள் நாம்...
اِنَّا
عَرَضْنَا الْاَمَانَةَ عَلَى السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَالْجِبَالِ فَاَبَيْنَ
اَنْ يَّحْمِلْنَهَا وَاَشْفَقْنَ مِنْهَا وَ حَمَلَهَا الْاِنْسَانُ اِنَّهٗ
كَانَ ظَلُوْمًا جَهُوْلًا
நிச்சயமாக
வானங்களையும்,
பூமியையும், மலைகளையும் (நம்
கட்டளைகளான) அமானிதத்தை சுமந்து கொள்ளுமாறு எடுத்துக் காட்டினோம்; ஆனால் அதைச் சுமந்து கொள்ள மறுத்தன;அதைப் பற்றி அவை அஞ்சின;ஆனால் மனிதன் அதைச் சுமந்தான்;நிச்சயமாக மனிதன்
(தனக்குத்தானே) அநியாயம் செய்பவனாகவும், அறிவிலியாகவும்
இருக்கின்றான். ( அல்குர்ஆன்: 33: 72 )
3. பிரபஞ்சத்தின் இயக்கம் நமக்காகவே!
وَسَخَّرَ
لَـكُمْ مَّا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ جَمِيْعًا مِّنْهُ اِنَّ فِىْ
ذٰ لِكَ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يَّتَفَكَّرُوْنَ
அவனே
வானங்களிலுள்ளவை,
பூமியிலுள்ளவை அனைத்தையும் தன் அருளால் உங்களுக்கு
வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; அதில் சிந்திக்கும்
சமூகத்தாருக்கு நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் உள்ளன. ( அல்குர்ஆன்: 45: 13 )
وَلَقَدْ مَكَّنَّاكُمْ فِي الْأَرْضِ وَجَعَلْنَا لَكُمْ فِيهَا
مَعَايِشَ قَلِيلًا مَا تَشْكُرُونَ
உங்களுக்கு
பூமியில் அதிகாரத்தைத் தந்தோம்,
அதில் உங்களுக்கு வாழ்வதற்கான எல்லா வழிவகைகளையும் செய்தோம், நீங்கள் குறைவாகவே நன்றி தெரிவிக்கிறீர்கள்” ( அல்குர்ஆன்: 7:
10 )
هُوَ الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ ذَلُولًا فَامْشُوا فِي
مَنَاكِبِهَا وَكُلُوا مِنْ رِزْقِهِ وَإِلَيْهِ النُّشُورُ
“நீங்கள் விரும்பியவாறு
வளைந்து கொடுக்கும் வகையில் பூமியை நாங்கள்தான் வடிவமைத்தோம், அதன் பல்திசைகளிலும் பரந்து சென்று அல்லாஹ்வின் ரிஸ்க்கைப் பெற்றுக்
கொள்ளுங்கள், இறுதியில் அவனிடமே மீண்டு வரவேண்டும்” ( அல்குர்ஆன்: 67: 15 )
4. பூமியின் பொறுப்புதாரிகள் நாம்...
وعن ابن
عمَر رضي اللَّه عنهما قال: سَمِعتُ رَسُولَ الله ﷺ يقول: كُلُّكُمْ راعٍ،
وكُلُّكُمْ مسئولٌ عنْ رعِيَّتِهِ،
நீங்கள்
ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை பற்றி நீங்கள்
விசாரிக்கப்படுவீர்கள்.
5. சமநிலை பேணப்பட வேண்டும் என்பதற்காக...
وَوَضَعَ الْمِيزَانَ (7) أَلَّا تَطْغَوْا فِي الْمِيزَانِ (8)
وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيزَانَ
“வானத்தை உயர்த்தி
சமநிலையில் வைத்தான், அந்த சமநிலையை மீறிவிடவேண்டாம், சமநிலையை நீதியாகப்
பேணுங்கள், அதில் குறைபாடு செய்யாதீர்கள்” ( அல்குர்ஆன்: 55: 7, 8, 9 )
وَالْأَرْضَ
مَدَدْنَاهَا وَأَلْقَيْنَا فِيهَا رَوَاسِيَ وَأَنْبَتْنَا فِيهَا مِنْ كُلِّ
شَيْءٍ مَوْزُونٍ (19) وَجَعَلْنَا لَكُمْ فِيهَا مَعَايِشَ وَمَنْ لَسْتُمْ لَهُ
بِرَازِقِينَ (20) وَإِنْ مِنْ شَيْءٍ إِلَّا عِنْدَنَا خَزَائِنُهُ وَمَا
نُنَزِّلُهُ إِلَّا بِقَدَرٍ مَعْلُومٍ
“பூமியை நாம் விரித்து
வைத்திருக்கிறோம், அதில் மலைகளை அமைத்திருக்கிறோம், அதில் ஒவ்வொன்றையும்
சமநிலையில் முளைக்கச் செய்திருக்கிறோம், பூமியில் உங்களுக்கு
வாழ்க்கைக்கான எல்லா வசதிகளையும் செய்துள்ளோம், நீங்கள் அவனுக்கு ஒரு
போதும் உணவளிக்க முடியாது, ஒவ்வொரு(படைப்பின்) விஷயமும் நமது களஞ்சியத்தில் இருக்கிறது, அதிலிருந்து தேவையான அளவில் மாத்திரமே நாம் இறக்கிவைக்கிறோம்” ( அல்குர்ஆன்: 15:
19, 20, 21 )
ஆகவே, பூமியில்
படைக்கப்பட்டுள்ள எதுவும் தேவையின்றி படைக்கப்படவில்லை. மேலும், ஒழுங்கின்றி அமைக்கப்படவுமில்லை. பூமியில் படைக்கப்பட்டுள்ள அனைத்தும் உயரிய, உரிய ஓர் நோக்கத்திற்காகவே படைக்கப்பட்டுள்ளன.
6. இன்ன பிற படைப்புகளின் வணக்க வழிபாடுகளில் இடையூறு ஏற்படுத்தாதிருக்க...
أَوَلَمْ يَرَوْا إِلَى مَا خَلَقَ اللَّهُ مِنْ شَيْءٍ يَتَفَيَّأُ
ظِلَالُهُ عَنِ الْيَمِينِ وَالشَّمَائِلِ سُجَّدًا لِلَّهِ وَهُمْ دَاخِرُونَ
(48) وَلِلَّهِ يَسْجُدُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مِنْ دَابَّةٍ
وَالْمَلَائِكَةُ وَهُمْ لَا يَسْتَكْبِرُونَ
அல்லாஹ்
படைத்துள்ளவற்றை அவர்கள் பார்க்கவில்லையா?
அவற்றின் நிழல்கள் வலமும் இடமும் சாய்ந்து, அல்லாஹ்வுக்கு சுஜுது செய்து,
அடிபணிகின்றன. வானங்கள் பூமியில் உள்ள அனைத்து ஜீவராசிகளும்
மலக்குகளும் அல்லாஹ்வுக்கு சுஜுது செய்கின்றனர், அவர்கள் பெருமையடிப்பதில்லை”
(அல்குர்ஆன்: 16: 48, 49 )
سَبَّحَ لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَهُوَ
الْعَزِيزُ الْحَكِيمُ
“வானங்கள் பூமியில் உள்ள
அனைத்தும் அல்லாஹ்வுக்கு தஸ்பீஹ் செய்கின்றன அவன் அறிந்தவன் கண்ணியமானவன்” ( அல்குர்ஆன்: 59: 01 )
மனிதர்களைப் போல்
அனைத்துப் படைப்புக்களும் அல்லாஹ்வுக்கு தஸ்பீஹ் செய்வதாகவும், வானங்கள் பூமியில் உள்ள அனைத்தும் அல்லாஹ்வுக்கு சுஜுது செய்வதாகவும் அல்குர்ஆன் குறிப்பிடுகிறது.
சுற்றுச்சூழல்
பாதுகாப்பு ஏன் அவசியம் ஆகிறது?
சூழல் என்பது
மிகவும் எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் மனிதன் வாழ்வதற்குரிய இந்த பூமியைக்
குறிக்கிறது.
மேலும், பூமியில் நிலைகொண்டிருக்கிற காடுகள், மலைகள், மரம் செடி கொடிகள், தாவரங்கள்,
காற்று,
நீர்,
வானம்,
பறவைகள், மிருகங்கள் போன்ற இயற்கைச் சூழலையும் உள்ளடக்கியிருக்கிறது. மனிதனால் உருவாக்கப்படும் கட்டடங்கள், வீதிகள், தோட்டங்கள்,
நீர் நிலைகள் போன்றனவற்றையும் உள்ளடக்கியது. அதுபோல் உயிருள்ளவற்றையும் உயிரற்றவற்றையும் உள்ளடக்கியது.
قال
الإمام الشاطبي رحمه الله: "اتفقت الأمة بل سائر الملل على أن الشريعة وضعت
للمحافظة على هذه الضروريات الخمس، وهي: الدين، والنفس، والنسل، والمال، والعقل".
இமாம் ஷாத்திபி
(ரஹ்) அவர்கள்,
மார்க்கத்தைப் பாதுகாப்பது, உயிரைப் பாதுகாப்பது, அறிவைப் பாதுகாப்பது, பரம்பரையைப் பாதுகாப்பது, செல்வத்தைப் பாதுகாப்பது
என்ற, ஷரீஆவின் அத்தியவசிய ஜந்து பிரதான நோக்கங்கள் குறித்து பேசும் பொழுது, பாதுகாத்தல் என்பதன் பொருள் என்ன என்பது பற்றியும் விளக்குகிறார்கள்.
وقال:
"وحفظ الشريعة للمصالح الضرورية وغيرها يتم على وجهين، يكمل أحدهما الآخر،
وهما: حفظها من جانب الوجود لا يحققها، يوجدها، يثبتها ويرعاها وحفظها من جانب
العدم بإبعاد كل ما يزيلها أو ينقصها، أو يجعلها تختل أو تتعطل، سواءً كان شيئاً
واقعاً أو متوقعاً الشرع يمنعه، أي شيء يخل بالضروريات، أو ينقصها، أو يعطلها، أو
يخل بها يمنعه الشرع، سواءً كان واقعاً أو متوقعاً، فإذا كان واقعاً فالشرع يريد
رفعه وإزالته، وإذا كان متوقعاً فالشرع يريد منع وقوعه وتجنبه".
பாதுகாத்தல்
என்பது இரண்டு வகையில் நிகழ முடியும் என்கிறார்கள்.
முதலாவது,
நேர்மறையான அம்சம், அதனை வளர்ச்சியடையச்
செய்தல். அதாவது அதன் அடிப்படைகளைப் பலப்படுத்தி அதனை பெருக்கம் செய்வது.
ஆகவே தான் நபி ஸல்
அவர்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு மரம் நடுதலை ஊக்குவித்தார்கள்.
மரம் நடுதல்....
قال صلى
الله عليه وسلم: " ما من مسلم يغرس غرسا أو يزرع زرعا فيأكل منه طير أو إنسان
أو بهيمة، إلا كان له به صدقة " [ رواه البخاري (2/ 817)]،
وعند مسلم: " ما من مسلم يغرس غرسا إلا كان ما أكل منه له
صدقة، وما سرق منه صدقة، وما أكل السبع فهو له صدقة، وما أكلت الطير فهو له صدقة،
ولا يرزؤه أحد إلا كان له صدقة " [أخرجه مسلم (3/1188، رقم 1552)] .
“ஒருவர் ஒரு மரத்தினை
நட்டு அல்லது விதைவிதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன்
விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ, ஒரு மனிதனோ அல்லது
பிராணியோ உண்பதினாலோ,
அல்லது திருடினாலோ யாரேனும் அதிலிருந்து எடுத்துக்
கொண்டாலும் சரி அனைத்துமே அவனுக்கு ஸதகாவாக அமைந்து விடும்” என்றார்கள். ( நூல்: புகாரி,
முஸ்லிம் )
عن أنس
رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: " إن قامت الساعة وفى
يد أحدكم فسيلة (نخلة صغيرة) فإن استطاع أن لا تقوم حتى يغرسها فليغرسها"
[أخرجه أحمد (3/191)، والبخارى فى الأدب المفرد (1/168)]،
"அடுத்த நொடியில்
உலகம் அழியும் என்றிருந்தாலும் ஒரு ஈத்த மரக்கன்று ஒன்றை உங்கள் கரத்தால் நட்டு
விட முடியும் என்றால் உடனடியாக அதை
நட்டு விடுங்கள்" என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்: புகாரி )
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மரம் ஆற்றும் பங்கு மகத்தானது.
புவி
வெப்பமாதலுக்கு முதன்மையான காரணம், பசுமை கூட வாயுக்களின்
வெளியேற்றம்,
அவற்றில் முக்கியமாக கார்பன்-டை-ஆக்சைடின் விகிதாச்சார அளவு
அதிகரிப்பது. ஒளிர்சேர்க்கை செய்யும் உயிர்களைத் தவிர மற்ற அனைத்தும்
கார்பன்-டை-ஆக்சைடை வெளியேற்றுபவையாகவே உள்ளன, அத்தோடு மனிதர்களின்
உருவாக்கங்களும் கார்பனை வெளியேற்றுகின்றன.
பூமியில் இவை
அனைத்திற்கும் எதிராக கார்பன் ஆக்சிஜன் விகிதாச்சாரத்தை சமன் செய்யப் போராடுவது
மரங்கள் ஒன்று மட்டுமே!
ஒரு ஏக்கர்
நிலப்பரப்பில் உள்ள வளர்ந்த மரங்கள் ஒரு வருடத்தில் எடுத்துக் கொள்ளும் கார்பனின்
அளவு, ஒரு வாகனம் 26000
மைல் பயணிப்பதால் வெளியிடும் கார்பன் அளவிற்கு ஈடானதாகும், அத்தோடு 18
மனிதர்கள் ஒரு வருடம் சுவாசிக்க தேவையான ஆக்சிஜனையும்
வெளிவிடுகிறது.
ஒரு தனி மரம்
ஆண்டுக்கு 260
பவுண்டுகள் ஆக்சிஜனை வெளியிடுகிறது. இது இரண்டு மனிதர்கள்
ஒரு வருடம் சுவாசிக்க போதுமானதாகும்.
ஒரு
கணக்கீட்டின்படி ஐம்பது வருடங்கள் வாழும் ‘ஒரு மரம்’ உற்பத்தி செய்யும் ஆக்சிஜன் மதிப்பு $30,000 , சுத்திகரிக்கும் நீரின் மதிப்பு $35,000 மற்றும் கார்பன் வடிகட்டுவதற்கான செலவில் $1,25,000 . அரசாங்கங்கள் நீரை சுத்திகரிக்கவும், கார்பன் வெளியேற்றத்தை
குறைக்கவும் பல பில்லியன் டாலர்களைச் செலவிடுகின்றன! இவை அனைத்தையும் மரங்கள்
இலவசமாகவே செய்து வருகின்றன.
மரங்கள்
பணத்திற்காகவே வெட்டப்படுகின்றன, ஆதலால் இயற்கை
ஆர்வலர்களும் மரங்களின் மதிப்பை பணத்தின் மதிப்பிலேயே விளக்கத் துவங்கி
விட்டார்கள்.
ஆனால் இயற்கையின்
மீதான நமது எந்த அளவீடுகளும் மிகச் சரியான அளவாக இராது. மண் அரிப்பை தடுத்தல், நிலத்தடி நீரின் அளவை உயர்த்துதல், ஆறுகளின் பாதையை-பெருக்கை
கட்டுப்படுத்துதல்,
குளிர்விப்பான்களுக்கு ஆகும் செலவைக் குறைத்தல், பல்லுயிர் பெருக்கம்,
மரக்கட்டைகளின் மதிப்பு, மழை பொழிவு அதன் வேளாண்
பலன்கள் என அளவிட இயலாத செல்வம் மர வளம்.
உதாரணமாக நமது
வீட்டு செலவு கணக்கில் போட்டுப் பார்க்கலாம், வீட்டின் நான்கு
முனையிலும் நான்கு மரங்கள் நட்டிருந்தால் வீட்டின் உள்வெப்பநிலை 5 முதல் 9
டிகிரி செல்சியஸ் வரை குறைகிறது. இதனால்
குளிர்விப்பான்களுக்கு (Air
Conditioner AC) செலவாகும் மின்சாரத்தில் 30% குறைகிறது. வருடத்திற்கு ஒரு வீட்டில் ஆகும் சேமிப்பை நீங்களே கணக்கிட்டுக்
கொள்ளுங்கள்.
ஒரு மனிதன் ஒரு
நாளைக்கு மூன்று சிலிண்டர்கள் அளவு ஆக்ஸிஜனை சுவாசிக்கிறான்.,
ஒரு ஆக்ஸிஜன்
சிலிண்டரின் விலை 700
ரூபாய்.,
மூன்று
சிலிண்டரின்விலை2100
ரூபாய்.,
ஒரு வருடத்திற்கு 7,66,000 ரூபாய்க்கு மேல் போகிறது.,
ஒரு மனிதனின்
சராசரி ஆயுள் காலம் 65
வருடம் என்றால் 5 கோடி ரூபாய்க்கு மேல்
எட்டுகிறது.,
மரங்கள் தோன்றிய
வரலாறு..
சுருக்கமாக..
உலகில் சுமார் 380 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாகவே இயற்கையாக வனங்கள் தோன்றியுள்ளதாக வரலாறுகள் குறிப்பிடுகின்றன.
இவை லேட்டேவோனியன்,
ஆர்கியாபோடேரிஸ் எனும் தாவரங்களின் வேர் மற்றும் தண்டு
என்பவற்றின் மூலம்
பெருக்கமடைந்து வனங்களாக தோன்றியதாகவும் குறிப்பிடப்படுகிறது.
பொதுவாக மரங்கள்
அடர்ந்த நிலப்பகுதியானது
வனம் என
அழைக்கப்படுகின்றது. புவி மேற்பரப்பில் 9.4 % வனங்களாகும். உயிர்க்கோளத்தின் மொத்த உற்பத்தித் திறனில் 75 % ம் பூமியின் மொத்த உயிரினத் தொகுதியில் 8 ம் வனங்களாகவே காணப்படுகின்றன.
விரிவாக...
ஏறத்தாழ 1 பில்லியன் வருடங்களுக்கு முன்னதாக உலகில் பாசி போன்ற தாவரங்களே முதன் முதலில்
தோன்றியிருக்கலாம் என கூறப்படுகிறது.
எனினும், நிலத்தாவரங்கள் ஏறத்தாழ 850 மில்லியன் வருடங்களுக்கு
முன்பு பச்சைப் பாசி குழுவிலிருந்து தோன்றியுள்ளன.
400 மில்லியன்
வருடங்களுக்கு முன்பு லைகோபைட்ஸ் (Lycophytes), ஃபேர்ன்ஸ் (Ferns)
மற்றும் ஹோர்ஸ்டெயில்ஸ் (Horsetails) ஆகிய தாவரங்கள் தோன்றியதற்கான புதைவடிவ ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
380 மில்லியன்
ஆண்டுகளுக்கு முன்னர் முதலாவது விதைக்கப்பட்ட தாவரங்கள் தோன்றியுள்ளன. அத்துடன், இந்த விதைகள் புறத்தோல் இல்லாமல் மிக சாதாரணமானதாகவே இருந்துள்ளன.
தண்டுடன் கூடிய
மரங்கள் 360
மில்லியன் வருடங்களுக்கு முன்பு இருந்துள்ளதாக
கண்டறியப்பட்டுள்ளது. இந்த தண்டுகள் உயரமாக வளர்வதற்கு துணை புரிந்துள்ளதோடு, நீர் கடத்தலை செம்மைப்படுத்தியுள்ளன.
200 மில்லியன்
வருடங்களுக்கு முன்பு ஜிம்கோ (Ginkgo) எனும் விசிறி மர வகை
தோன்றியதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது.
பைன் (Pine) எனும் மரங்கள் 150
மில்லியன் வருடங்களுக்கு முன்னதாக தோன்றியிருக்கிறன.
இந்த உலகின் பூ
பூக்கும் முதலாவது மரம் 125
மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு படிப்படியாக
தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 67 மில்லியன் வருடங்களுக்கு முன்பு மேப்ல் (Maple) வகை மரங்களும் 56 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக ஓக் மரமும் தோன்றியுள்ளன.
இவை
எல்லாவற்றுக்கும் பிறகு தான் நாம் தற்போது பார்க்கும் அனைத்து மரங்களும்
உருவாகியுள்ளன.
ஒரு மரத்தின் சேவையும்... பலனும்...
ஒரு மரம்
சராசரியாக 50
ஆண்டு காலம் வாழ்கிறது. இந்த காலகட்டத்தில் அது தயாரிக்கும்
பிராணவாயுவில் (ஆக்ஸிஜன்) மதிப்பு சுமார் ரூ.6. 4 லட்சம்.
இடத்தை
சுற்றியுள்ள நிலத்தை வளப்படுத்துவதில் சுமார் ரூ.6. 4 லட்சம்,
மண் அரிப்பை தடுப்பதில் ரூ.6. 4 லட்சம்.
சுற்றுப்புற
காற்றிலுள்ள மாசுக்களை அகற்றுவதில் ரூ. 10. 5 லட்சம்.
பிராணிகள் மற்றும்
பறவைகளுக்கு புகலிடம் அளிப்பதில் ரூ.5. 2 லட்சம்.
இவை தவிர தான்
வாழும் பொழுது பழங்கள்,
பூக்கள் என நமக்கு தருகிறது.
வாழும்பொழுது
இவற்றையெல்லாம் கொடுத்துவிட்டு செத்து மடிந்த பிறகு தன்னை கட்டிடம் கட்டவும், நமக்குத் தேவையான மரசாமான்கள் செய்யவும் அர்ப்பணிக்கிறது. கிராமங்களில், நகரங்களில் எரிபொருளாகப் பயன்படுகிறது. இவற்றிக்கெல்லாம் மதிப்பே இல்லை.
இரண்டாவது, எதிர்மறையான அம்சம்,
பக்கம்,
அதனை அழிவுகளில் இருந்து பாதுகாத்தல், அதாவது அதற்கு ஏற்படக் கூடிய அல்லது ஏற்படும் என்று எதிர்பார்க்கக் கூடிய
பாதிப்புக்களிலிருந்து பாதுகாப்பதாகும்.
அந்தவகையில்
பாதுகாத்தல் என்பது, ஒரு விஷயத்தில் ஏற்படக் கூடிய பாதிப்புகளைத் தவிர்த்தல் என்பது
மாத்திரமல்லாமல் அந்த விஷயத்தை உரிய முறையில் வளர்ச்சியடையச் செய்வது, பெருக்கம் செய்வது என்பதும் உள்ளடங்குகிறது என்பதைப் புரியலாம்.
எனவே, சுற்றுச் சூழலை கெடுக்கும், காற்று மாசுபடுவதை ஏற்படுத்தும் பட்டாசு, வெடி போன்றவற்றை தவிர்ப்போம்! சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்!!
No comments:
Post a Comment