இஸ்லாம் கூறும் ஊடகவியலாளர் ஒழுங்குகள்!!!
நவம்பர் 16 தேசிய ஊடகவியலாளர் தினம் நம் இந்திய
திரு நாட்டில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் ஒரு தினமாகும். நம் நாட்டின் 130 கோடி
மக்களில் 80 கோடி மக்கள் ஏதேனும் ஒரு ஊடகத்தின் வாசகர்களாக, பார்வையாளராக இருக்கின்றார்கள்
என்கிறது ஒரு புள்ளி விவரம். அந்த அளவு ஊடகத்தொடர்பு நம் இந்திய மக்களுக்கு இருப்பதை
இந்த புள்ளி விவரம் நமக்கு உணர்த்துகின்றது.
பிரஸ் கவுன்சில்
ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட தினத்தை தான் இந்தியா முழுவதும்
தேசிய பத்திரிகையாளர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
தேசிய
பத்திரிகையாளர் தினம் என்பது ஊடக சுதந்திரம் மற்றும் தன்னிச்சையான தைரியத்துடன்
இயங்கும் இதழியல் துறையின் செயல்பாடுகளை உறுதிப்படுத்திக் கொள்ளும் நாளாக 1996 ஆம் ஆண்டு முதல் நவம்பர் 16 ஆம் நாள் இந்தியாவெங்கும்
கொண்டாடப்பட்டு வருகிறது.
பத்திரிகை
சுதந்திரம் என்பதை எப்போதும் தங்களது சுய லாபத்துக்காகப் பயன்படுத்திக் கொள்ள
நினைக்கும் அத்தனை விதமான ஆதிக்க சக்திகளும் இன்றும் உண்டு. சற்று அதீதமாகவே
உண்டு. அவர்களிடையே எவ்வித சமரசமும் இன்றி தங்களது சுதந்திரத்தை இழக்காமல் ஊடக
தர்மத்தை நிலைநிறுத்தும் பத்திரிகைகள் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான்
உள்ளது என்றால் அது மிகையாகாது.
பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா என்பது?..
பிரஸ் கவுன்சில்
ஆஃப் இந்தியா என்பது 1978
ஆம் ஆண்டின் பத்திரிகைக் கவுன்சில் சட்டத்தின் கீழ்
செயல்படும் பத்திரிகைகளின் சுய கட்டுப்பாட்டு கண்காணிப்புக் குழுவாகும்.
ஓய்வுபெற்ற உச்ச
நீதிமன்ற நீதிபதி இதன் தலைவராகவும், இந்தியாவில் செயல்படும்
செய்தித்தாள்கள்,
தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் பிற ஊடகங்களால்
பரிந்துரைக்கப்பட்ட 28
கூடுதல் உறுப்பினர்கள் ஊடக உறுப்பினர்களாக உள்ளனர்.
28 உறுப்பினர்
குழுவில்,
5 பேர் இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபை (மக்களவை) மற்றும்
மேல் சபை (மாநிலங்களவை) உறுப்பினர்களாக உள்ளனர்,
மேலும் மூன்று
பேர் இலக்கிய மற்றும் சட்டத் துறையைச் சார்ந்தவர்களாவர்.
மேலும், இவர்களே சாகித்ய அகாடமி, பல்கலைக்கழக மானிய ஆணையம்
மற்றும் இந்திய பார் கவுன்சில் ஆகியவற்றின் வேட்பாளர்களாக பிரதிநிதித்துவப்
படுத்துகின்றனர்.
பத்திரிக்கைச் சுதந்திரம்..
இந்தியா விடுதலை
பெற்றபின் பத்திரிக்கை சுதந்திரத்துக்கும் விடிவுகாலம் பிறந்தது எனலாம். அதன்பின்
உருவான இந்திய அரசியலமைப்பு சட்டம், மக்களாட்சியில்
எழுத்துரிமையையும் பேச்சுரிமையையும் அடிப்படை உரிமைகளாக அறிவித்தது. அரசின்
அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிடுவது மட்டுமின்றி, மக்களின் பிரச்னைகளை அரசிற்கும் சமூகத்திற்கும் வெளிப்படைத்தன்மையுடன் கொண்டு
சேர்ப்பதிலும்,
நாட்டில் நிலவும் குற்றங்கள், மோசடிகள்,
ஊழல்கள் போன்றவற்றை பிரதிபலிக்கும் கண்ணாடியாகவும் ‘இன்வெஸ்டிகேஷன் ஜெர்னலிசம்’ விளங்குகிறது.
இன்றைய ஊடகங்களின் நிலை?..
ஜனநாயகத்தின்
நான்காவது தூண் என்றும் போற்றப்படுகிற ஊடகம் இன்று எப்படி இயங்கிக்
கொண்டிருக்கிறது என்பதை நாம் சிரமப்பட்டு விளங்கிக் கொள்ள அவசியம் இல்லை எனலாம்.
உலக நாடுகளின்
பத்திரிக்கை சுதந்திரத்துக்கான தரவரிசை பட்டியலில் இந்தியா 142வது இடத்தில் மிக மோசமான நிலையில் உள்ளதாக “எல்லைகளற்ற பத்திரிக்கையாளர்கள்”(Reporters Without Borders) என்ற அமைப்பு ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
உலகளவில் 180 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியா 142வது இடத்தில், பத்திரிகை சுதந்திரத்தில் மிக மோசமான நிலையில் உள்ளதாகவும் அந்த ஆய்வில்
தெரியவந்துள்ளது.
80 கோடி
இந்தியர்களால் பின்தொடரப்படும் 70க்கும் அதிகமான ஊடக
நிறுவனங்களுக்கு உரிமையாளர் மோடியின் நண்பரும் தொழிலதிபருமான முகேஷ் அம்பானி
என்பதே முதன்மையான உதாரணம்”
என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ( நன்றி: arensei.com 16/11/2022 )
2016 ஆண்டிற்கான
தரவரிசையில். இந்தியா 133
ஆவது இடத்தை பிடித்திருந்த நிலையில், 5 ஆண்டுகளில் 17
இடங்களில் சரிந்து 150-வது இடத்தை 2022-ல் பிடித்துள்ளது.
உலக பத்திரிகை
சுதந்திர குறியீட்டு அட்டவணையில் இந்தாண்டு 161வது இடத்தில்
இருக்கிறது இந்தியா. இது கடந்த வருட நிலையான 150ஐ விட பின்தங்கிய
நிலை. இதன் அர்த்தம் முன்பை விட மோசமாக ஊடக சுதந்திரத்தை நசுக்கும் நாடாக இந்தியா
மாறி வருகிறது என்பதே. ( நன்றி: சமயம் தமிழ்.காம் 03/052023 )
உலக அளவில்
பத்திரிகை சுதந்திரம் வலுவாக உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 136 வது இடத்திலேயே இப்போதும் இருந்து வருகிறது. உலகில் உள்ள மொத்த நாடுகளின்
எண்ணிக்கை 196.
அதில் பிரஸ் கவுன்சில் உருவாக்கப்பட்டு பத்திரிகை
சுதந்திரம் பற்றியெல்லாம் சிந்திக்கக் கூடிய நாடுகளாக இருப்பவை வெறும் 50. பத்திரிகை சுதந்திரத்தில் முதலிடத்தில் இருக்கும் நாடு நார்வே. கடைசி இடத்தில் இருக்கும் நாடு வடகொரியா. என்கிறது அந்த சர்வே!
யுனெஸ்கோ
வெளியிட்ட தகவலின் படி சர்வதேச அளவில் ஒவ்வொரு 5 நாள் இடைவெளியில் உலகின் ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒரு பத்திரிகையாளர் அல்லது
ஊடகவியலாளர் கொலையுண்டு கொண்டே தான் இருக்கிறார். ( நன்றி: தினமணி 16/11/2019 )
ஊடகவியலாளர்கள்?..
ஊடகத்துறையை
ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்பார்கள். பத்திரிகையாளர்கள் - ஊடகவியலாளர்கள் என்பவர்கள்
சமுதாயத்தின் கண்ணாடி போன்றவர்கள்.
சமூகம் என்ன
நினைக்கிறது என்பதை அதன் எதிர்பார்ப்புகளை, எதிர்ப்புகளை, ஆதங்கங்களை,
ஏமாற்றங்களை, வலிகளை, துயரங்களை,
அறச்சீற்றங்களை மிகச்சரியாகப் பதிவு செய்ய ஊடகமே இன்றளவும்
உதவுகிறது.
ஆனாலும், ஒன்றுக்கும் மேற்பட்ட பல ஊடகங்கள் பெருகிப் போய் இருக்கிற இந்த காலகட்டத்தில் 130 கோடி இந்தியர்களின் நன்னம்பிக்கையைப் பெற்றதாக நம் நாட்டின் செய்தி ஊடகங்கள்
இருக்கின்றனவா?
என்றால், இந்த கேள்விக்கான பதிலை
மக்கள் தான் தெரிவிக்க வேண்டும்.
ஊடகம் என்றால் என்ன?
ஒரு நாட்டின் ,சமூகத்தின் இருப்புக்கு மருத்துவம்,கல்வி,அரசாங்கம்,பாதுகாப்பு,
சட்டம் போன்றவை எவ்வாறு முக்கியத்துவமோ அதே போன்ற ஒரு
முக்கியமான துறை ஊடகமாகும்,
எல்லா துறைகளுக்கு சில வரையறை இருந்தாலும் ஊடகம் மக்கள்
சார்பாக நாட்டில் நடைபெறும் அனைத்து செயற்பாடுகள் மற்றும் ஏனைய துறைகளின் இரு
பக்கங்கள் மற்றும் மக்களுக்கான அத்தியாவசிய தகவல் போன்றவற்றை மக்களுக்காக வழங்கும்
ஒரு மக்கள் சேவைக்கான துறையாகும்.
நாட்டின்
அரசாங்கம்,ஜனாதிபதி,பிரதமர் ,ஏனைய துறையினர் மக்களுக்கு ஒரு முக்கியமான தகவல்களை வழங்குவதற்கும்,அவசர ஆணைகள் போன்றவற்றையும், விழிப்புணர்வு, பாதுகாப்பு தகவல்களை வழங்குவதற்கும் இத்துறையை பயன்படுத்துவார்கள்.
ஊடகத்தை தவிர்த்து
மக்களோடு எத்துறையும் தொடர்பு பேண முடியாது. அதனால்தான் . ஊடரங்கு உத்தரவுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள், யுத்தம்,தடைசெய்யப்பட்ட பகுதிகள் போன்றவற்றிற்கு ஊடகங்கள் மாத்திரம்
அனுமதிக்கப்படுகிறது.
ஊடக வகைகள்:
தொழில்நுட்ப
வளர்ச்சிக்கு ஏற்ப ஊடகத் துறை உருமாறிவருகிறது. தற்போது
மக்களிடையே செல்வாக்கு பெற்றுவரும் ஊடகங்களை பார்ப்போம்.
1.அச்சு ஊடகங்கள், 2. மின்னணு ஊடகங்கள்,
3. இணைய ஊடகங்கள்
அச்சு ஊடகங்கள் ( Print Media )
இணைய உலகில்
தற்போது இருந்தாலும்,
இந்தியாவை பொறுத்தவரை அச்சு ஊடகங்கள் நாளுக்கு நாள்
வளர்ச்சி பெற்றுவருகிறது. நாளிதழ்கள், வார, மாத இதழ்கள் அச்சு ஊடகங்கள் ஆகும்.
மின்னணு ஊடகங்கள் ( Electronic Media )
தற்போதைய
டிஜிட்டல் உலகிலும் மின்னணு ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. வானொலி, தொலைக்காட்சி,
திரைப்படம், விளம்பரம் ஆகியவை மின்னணு
ஊடகங்கள் ஆகும்.
இணைய ஊடகங்கள் ( Internet Media )
அதிகமான் ஸ்மார்ட்
போன் பயன்பாடு மற்றும் குறைந்த விலையில் இண்டர்நெட் டேட்டா கிடைப்பதால் இணைய
ஊடகங்கள் தற்போதைய சூழலில் அபரிமிதமான வளர்ச்சி கண்டுவருகிறது.
கல்வித் தகுதிகள்
ஊடகத் துறையில்
நுழைவதற்கு மாஸ் கம்யூனிகேஷன் & ஜர்னலிசம், எலக்ட்ரானிக் மீடியா போன்ற படிப்புகள் உதவுகிறது. பிளஸ் 2 வில் எந்த பிரிவை தேர்ந்தெடுத்து படித்திருந்தாலும் நீங்கள் மாஸ் கம்யூனிகேஷன்
படிப்பை மேற்கொள்ளலாம். பி.ஏ. பி.எஸ்சி போன்ற படிப்புகள் இதில் உள்ளன. மற்ற துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருந்தாலும் மாஸ் கம்யூனிகேஷனில், முதுநிலை படிப்பில் சேரலாம். பல்வேறு அரசு மற்றும் தனியார் பல்கலைகழகங்கள், கல்லூரிகள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்கள் ஜர்னலிசத்தில் பட்டம், பட்டயம்,
பட்டப் படிப்புகள் வழங்குகின்றன.
ஊடகப் பிரிவுகள்:
ஊடகத் துறை வெறும்
செய்திகளை மட்டும் தருவதல்ல. அதில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. இன்வெஸ்டிகேடிவ்
ஜர்னலிசம்,
பேஷன் ஜர்னலிசம், ஸ்போர்ட்ஸ் ஜர்னலிசம், டிரேட் ஜர்னலிசம்,
இன்னோவேஷன் ஜர்னலிசம் உள்ளிட்ட பிரிவுகள் இதில் அடங்கும்.
ஜர்னலிசம் தொடர்பாக படிக்காமல், ஜர்னலிசத்தில் இது போன்ற
குறிப்பிட்ட பிரிவுகளைத் தேர்வு செய்து படித்தால் அதே துறையில்
பத்திரிகையாளராக பணிபுரியும் வாய்ப்புப் பெறலாம்.
வெறும் படிப்பு
மட்டும் ஜர்னலிஸ்டாக ( how
to pursue journalism as a career in tamil ) இருப்பதற்கான தகுதியாக பார்க்க முடியாது. சிறு வயதில் இருந்தே எதையும்
ஆராய்ந்து பார்க்கும் திறன் இருத்தல் வேண்டும். பல விதமான விஷயங்களை படித்து
தெரிந்து கொள்ளவேண்டும்.
ஜர்னலிசம்:
தமிழில் ஊடகவியல்
அல்லது இதழியலை ஜர்னலிசம்
( career in journalism and mass communication in india ) என்கிறோம். பல்வேறு தகவல்கள்,
நிகழ்வுகளை நாளிதழ் , தொலைக்காட்சி உள்ளிட்டவற்றின் மூலமாக பொதுமக்களிடம் கொண்டு செல்லும் துறையை
ஜர்னலிசம் என்கிறோம்.
இந்த துறையில்
வேலை செய்பவர்கள் ஜர்னலிஸ்ட் என்று அழைக்கப்படுகின்றனர். ஜர்னலிசம் என்பது
செய்திகளை சேகரித்தல்,
கட்டுரைகள் எழுதுதல், தொகுத்தல், வெளியிடுதல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பணி ஆகும்.
ஜர்னலிஸ்ட்
எழுத்தாளர் அல்லது
ஊடகவியலாளர் மக்களோடு தொடர்புள்ள நிகழ்வுகளையும், எண்ணங்களையும்,
பிரச்சினைகளையும் விளக்குவதற்கு உண்மையான தகவல்களை வெளியிட
வேண்டும் என்பதே ஊடக நெறியாக இருக்க வேண்டும், என
எதிர்பார்க்கப்படுகிறது. ஊடகவியலாளர் தகவல்களைத் திரட்டி வெளியிடுவதால் உள்ளூர்,
மாநில, தேசிய, சர்வதேச என
அனைத்து தரப்பு செய்திகளையும் உடனுக்குடன் மக்கள் அறிந்து கொள்ள முடிகிறது.
ஊடக அறம்..
உலகில் ஊடகத்துறை
எப்போது துவங்கப்பட்டதோ அன்று முதல் ஊடவியலுக்கான ஒழுக்கங்கள் (Ethics) பற்றியும் பேசப்பட்டே வந்துள்ளது.
15 -ம் நூற்றாண்டில்
ஐரோப்பாவில் பத்திரிகைத்துறை ஆரம்பமானது முதல் அத்துறைக்கான உரிமைகள், கடமைகள்,
ஒழுக்கங்கள் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. 1920ஆம் ஆண்டிலேயே இத்துறைக்கான பொதுவான ஒழுக்கவியல் கோவை வகுக்கப்பட்டது. 1926 இல் Plan
American Press எனும் அமைப்பு ஒழுக்கவியல் கோவை ஒன்றை உருவாக்கியது. 1950 இல் Inter
American Press எனும் அமைப்பு இது தொடர்பான மற்றுமொரு முன்மொழிவை
முன்வைத்தது. 1952
இல் ஐ.நா.சபை இதழியல்துறை தொடர்பான ஓர் ஒழுக்கவியல்
சட்டக்கோவை குறித்து ஓர் ஆய்வை நடத்தியது. 1954 இல் ஐ.நா.சபை இது
தொடர்பில் சர்வதேச கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவது சிக்கலானது எனக் கூறியது. 1974 ஷஇல் ஐரோப்பிய சமூகப் பத்திரிகைகள் வர்த்தக சங்கம்| எனும் அமைப்பு ஓர் ஒழுக்கக் கோவையை அறிமுகம் செய்தது. இதே காலப்பிரிவில்
சர்வதேசப் பத்திரிகை அமைப்பு இது தொடர்பில் கூடிய கரிசனை செலுத்தியது.
1977 இல் அரபுப்
பத்திரிகைகளுக்கான ஒழுக்கவியல் பிரமாணங்கள் தயாரிக்கப்பட்டன. அவ் ஒழுக்கவியல் கோவை
இஸ்லாமிய அடிப்படைகளுக்கு அமைவாக இல்லாவிட்டாலும், மனித விழுமியங்கள் மற்றும் பொதுவான ஆன்மிக, தார்மிக ஒழுக்கப்
பண்பாடுகளை கவனத்திற் கொண்டு தயாரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இப்படி
காலத்துக்கு காலம் இதழியல் துறைக்கான ஒழுக்கக் கோவைகள் வகுக்கப்பட்டபோதும் அவை
வெறும் கோட்பாட்டளவில் மாத்திரமே இருக்கின்றன.
ஊடகத்துறையில் யூத செல்வாக்கு:
தேசிய, சர்வதேச ரீதியில் வத்திக்கானில் 2000 இற்கும் அதிகமான
பத்திரிகைகளை வெளியிடுகிறார்கள். அதே போன்று 154 ஒலிபரப்பு
நிலையங்களின் மூலமாக ஒலிபரப்புக்களை வெற்றிகரமாக மேற்கொள்கிறார்கள்; இன்னும் ஒருபடி மேலே சென்று பார்த்தால் தொலைக்காட்சி அலைவரிசைகளையும் தமது
வல்லாதிக்கத்தின் கீழ் கொண்டுள்ளார்கள் அந்த வகையில் 49 அலைவரிசைகள் காணப்படுகின்றது. பெரும்பான்மையான தொலைக்காட்சிகள் யூதர்களின்
வல்லாதிக்கத்ததின் கீழே உள்ளது.(BBC, ABC, CNN, AFP, FOX NEWS….).
அதுமாத்திரமின்றி
கலாச்சார சீரழிவிற்கு காரணகர்த்தாக்களாகவும் திகழ்கிறார்கள். ஒரு நாளுக்கு 250 ஆபாச காணொளிகளை பதிவேற்றம் செய்யப்படுகின்றது. அவ்வாறு பதிவேற்றம்
செய்யப்படுகின்றவைகளை ஒரு வினாடியில் 28,000 பேர்
பர்வையிடுகிறார்கள் குறிப்பாக இளைஞர் யுவதிகளும் சிறார்களுமே பார்வையிடுகிறார்கள்.
உலகின் செய்தி
வெளியிடுகின்ற மிகப் பிரபலமான ஊடகங்கள் யூதர்களது கை பொம்மைகள் தாங்கள்
விரும்புவதைதான் உலகிற்கு செய்திகளாக காண்பிக்கிறார்கள். பக்கச்சார்பற்ற ஊடகம்
என்ற நாமத்தில் ஒரு சாராரை உயர்த்தியும் மற்றைய சாராரை தாழ்த்தியும் உலகில்
கருத்து உருவாக்கங்களை மேற் கொள்கின்றனர். ( நன்றி: இஸ்லாம் கல்வி.காம் 19/05/2016 )
முஸ்லிம் சமூகம் கண்டு கொள்ளாத ஊடகத்துறை..
இஸ்லாமிய உலகின்
சமகால அறிஞர்களுள் ஒருவரான பேராசிரியர் குர்ஷித் அஹ்மத் அவர்கள் “இன்று இஸ்லாமிய உலகத்திற்கு மூன்று வகையான மனிதர்கள் தேவைப்படுகிறார்கள்"
என்று பதிவு செய்கின்றார்கள்.
முதலாவது புத்திஜீவிகள் (Intellectuals)
இரண்டாவது துறைசார் நிபுணர்கள் (Professionals)
மூன்றாவது ஊடகவியலாளர்கள் (Media Persons)
எந்தளவு தூரம் இந்த சமூகத்தின் பொறுப்பு மிக மகத்தானது
என்பதை நினைத்துப் பார்க்க கடமைப்பட்டுள்ளோம்.
இலங்கை அறிஞர்களில் ஒருவரான ஷைக் அகார் அஹமது அவர்கள்
கூறுகையில் "ஊடகத்துறை என்பது ஒரு தொழில் அல்ல அது ஒரு Mission அல்லது ஒரு Noble Vision.
உலகிலே சில துறைகள் இருக்கின்றன. அவை தொழிலும் அல்ல
வருமானத்தை பெருக்குவதற்கான வழியும் அல்ல. அவை புனிதமானவை அவற்றின் சேவைகள் மிக
உயர்ந்தவை இஸ்லாமியக் கண்ணோட்டத்திலே இபாதத்தாக கருதப்படக் கூடியவை.
அந்த வகையிலே அரசியல் என்பது வருமானத்துக்கு வழிசெய்கின்ற
ஒரு துறை அல்ல. அது ஒரு சேவை மிகப் புனிதமான சேவை.
மருத்துவத்துறை என்பது வருமானம் பெறுகின்ற ஒரு துறை அல்ல.
அது ஒரு சேவை புனிதமான சேவை.
கற்பித்தல் என்பது வருமானம் பெறுவதற்கான தொழில் அல்ல அது
ஒரு சேவை புனிதமான சேவை.
அதேபோலத்தான்
ஊடகத்துறை என்பதும் வருமானத்துக்கு வழியமைத்துக் கொடுக்கும் ஒரு துறை அல்ல. அது
ஒரு சேவை புனிதமான சேவை.
குறிப்பாக
முஸ்லிம் ஊடகவியலாளர்கள் இந்த ஊடகப்பணியை ஒரு தொழிலாக அல்லாமல் ஒரு புனிதப்பணியாக (Noble
Vision) எடுத்துக்கொள்ள வேண்டும்.
துரதிஷ்டவசமாக
நானும் நீங்களும் வாழும் இந்தக்காலத்தில் எல்லாமே வர்த்தகமயப்பட்டிருக்கிறது.
புனிதமான துறைகள்,
சேவைகளும் வர்த்தகமயப்படுத்தப்பட்டிருக்கி
"எனக்கு முஸ்லிம்
பத்திரிகையாளர்கள் அதிக அளவில் தேவைப்படுகிறார்கள்”
கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்திற்குக் கடந்த மார்ச் 4ம் தேதியன்று (04-03-2008)
வருகை தந்திருந்த பிரபல வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை நிறுவனத்தின்
நிர்வாக இயக்குனரானஃபிலிப்ஸ் பென்னட் பேசியபோது வெளிப்பட்ட ஆதங்கம் இது.
“இஸ்லாத்தைப் பற்றிய தவறான எண்ணங்களைக் கொண்டுள்ள ஊடகங்களே எனது கூற்றிற்கு
அடிப்படைக் காரணம்!”
என்கிறார் இவர்.
நமக்கு முன் இருக்கும் இரண்டு கட்டளைகள்!
நாம் ஏன் ஊடகத்தை கையில் எடுக்க வேண்டும் என்பதற்கு
பிரதானமான இரண்டு காரணங்கள் இருக்கின்றன.
ஒன்று நாம் வாழும் உலகில் அனைத்து மக்களுக்கும் சான்று
பகரும் நடுநிலை சமூகமாகவும், தீமைகள் தலைவிரித்து
தாண்டவமாடும் இப்பாருலகில் தீமையைக் களைந்து நன்மையை விதைக்கும் சிறந்த
சமூகமாகவும் இருக்க வேண்டிய கடமையும் கடப்பாடும் இருக்கிறது என்பதை பின் வரும்
இறைவசனம் மற்றும் நபிமொழியின் மூலம் நாம் விளங்கிக் கொள்ள முடியும்.
وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى
النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا
“(விசுவாசிகளே!) நீங்கள் (பிற)
عن أبي سعيدٍ الخدري رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله
عليه وسلم يقول: ((من
رأى منكم
منكرًا، فليغيره بيده، فإن لم يستطع
فبلسانه، فإن لم يستطع فبقلبه، وذلك أضعف الإيمان))؛ رواه مسلم.
“உங்களில்
எவரேனும் தீய செயல் நடப்பதைக் கண்டால் அவர் அதனைத் தம் கரங்களால் தடுக்கட்டும்; இயலாவிட்டால் நாவினால் தடுக்கட்டும்; (அதற்கும்) இயலா
விட்டால் இதயத்தால் தடுத்து(ஒதுங்கி)க் கொள்ளட்டும். இது ஈமானின் பலவீனமான (இறுதி)
நிலையாகும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ சயீத் (ரலி) நூல்: புகாரி.
மேற்காணும்
இறைவசனம் மற்றும் நபிமொழிக்கேற்ப நமது சமுதாயத்திற்கெதிரான மறைத்தலும் திரித்தலும்
நம் கண் முன்னே நடைபெறும் போது "நமக் கென்ன?" என்று ஒதுங்கி நிற்காமல் ஒவ்வொரு முஸ்லிமும் தம்மால் இயன்ற வழியில் இத்தகைய
அநீதிக் கெதிராகக் களம் இறங்க வேண்டும்.
நம் சமுதாயம்
விழிப்புடன் இருக்கிறது என்பதை ஊடகத்துறையும், உலகமும் உணர வேண்டும்.
இஸ்லாம் கூறும் ஊடக அறமும்… ஊடகவியலாளர் ஒழுங்குகளும்..
இஸ்லாம் மனிதனுக்கு
கருத்துச் சுதந்திரத்தை வழங்கியுள்ளது.
“விசுவாசிகளே! நீங்கள்
அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நீங்கள் கூறுவதை தெளிவாகவே கூறுங்கள்” ( அல்குர்ஆன்: 33: 70
)
ஒரு முறை நபி
(ஸல்) அவர்களிடம் மிகச் சிறந்த ஜிஹாத் எது என்று வினவப்பட்டது அப்போது, “தீய ஆட்சியாளன் முன்னிலையில் சத்தியத்தை எடுத்துரைப்பதாகும்” என பதில் கூறினார்கள். (அபூ-தாவூத்)
மனிதனுக்கு பேசுவதற்கு
சுதந்திரத்தை அளித்த இஸ்லாம் அதற்கு சில ஒழுங்குகளையும் விதித்துள்ளது. கருத்தை
வெளிப்படுத்துகையில் பிறர் உள்ளமும் உணர்வுகளும் புண்படாதிருக்கவேண்டும்.
அவை மதிக்கப்பட வேண்டும் என இஸ்லாம் வழிகாட்டுகிறது.
“நீங்கள் அவர்களுடன்
மிகவும் அழகிய வழிமுறையிலேயே விவாதம் புரியுங்கள்” ( அல்குர்ஆன்: 16: 125 )
கொடுங்கோலன் பிர்அவ்னிடம் சென்ற
மூஸா,
ஹாரூன் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் கருத்துப் பரிமாறும்
ஒழுங்கைக் கற்றுக்கொடுத்தான்.
“அவனிடம் நீங்கள் இருவரும்
மிக இதமான வார்த்தையையே கூறுங்கள்” ( அல்குர்ஆன்: 18: 44)
பொறுப்புணர்வுடன் செய்தி வெளியிட வேண்டும்.
நாம் எழுதுகின்ற ஒவ்வொரு வாசகத்துக்கும் சொல்கின்ற கருத்துக்கும்
பதில் சொல்ல வேண்டும். நாளை மஹ்ஷரில் கேட்கப்படும் நான்கு கேள்விகளுள்
"உனது அறிவைக் கொண்டு என்ன செய்தாய்?" என்ற வினாவும் ஒன்று.
ஆதாரமில்லாமல் செய்தியை சொல்வது மற்றும் எழுதுவது தடை!
المُغِيرَةِ
بْنِ شُعْبَةَ، قَالَ كَتَبَ مُعَاوِيَةُ إِلَى المُغِيرَةِ بْنِ شُعْبَةَ: أَنِ
اكْتُبْ إِلَيَّ بِشَيْءٍ سَمِعْتَهُ مِنَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ، فَكَتَبَ إِلَيْهِ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ يَقُولُ: ” إِنَّ اللَّهَ كَرِهَ لَكُمْ ثَلاَثًا: قِيلَ وَقَالَ،
وَإِضَاعَةَ المَالِ، وَكَثْرَةَ السُّؤَالِ
நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்: அல்லாஹ் மூன்று செயல்களை வெறுக்கிறான். ‘இவ்வாறு சொல்லப்பட்டது;
அவர் சொன்னார்’ (என ஆதாரமின்றிப்
பேசுவது),
பொருள்களை வீணாக்குவதும், அதிகமாக (பிறரிடம்) யாசிப்பதுமாகும்.
அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஃபா (ரலி) நூல்: புகாரி )
عن أبي
علي رجل من بني كاهل قال:
خطبنا أبو موسى الأشعري فقال: يا أيها الناس اتقوا هذا
الشرك فإنه أخفى من دبيب النمل فقام إليه عبد الله بن حزن وقيس بن المضارب فقال:
والله لتخرجن مما قلت أو لنأتين عمر مأذونا لنا أو غير مأذون فقال: بل أخرج مما
قلت خطبنا رسول الله صلى الله عليه وسلم ذات يوم فقال:
يا أيها
الناس اتقوا هذا الشرك فإنه أخفى من دبيب النمل
فقال له
من شاء الله أن يقول وكيف نتقيه وهو أخفى من دبيب النمل يا رسول الله قال قولوا
اللهم إنا نعوذ بك من أن نشرك بك شيئا نعلمه ونستغفرك لما لا نعلمه.
رواه أحمد والطبراني ورواته إلى أبي علي محتج بهم في
الصحيح وأبو علي وثقه ابن حبان ولم أر أحدا جرحه
மனிதர்களே!
எறும்பு ஊர்வதைவிடவும் இரகசியமான இணைவைத்தலை பயந்து கொள்ளுங்கள் என்று அபூ மூஸா
அல் அஷ் அரீ ( ரலி ) அவர்கள் எங்களுக்கு உரை நிகழ்த்தும் போது
கூறினார்கள்.அவர்களிடம் அப்துல்லாஹ் இப்னு ஹஸ்ன் ,கைஸ் இப்னுல் முழாரிப் ஆகியோர் எழுந்து “ அல்லாஹ்வின் மீது
சத்தியமாக ! நீங்கள் கூறியதை நிரூபிக்க வேண்டும் அல்லது உமர் ( ரலி ) யிடம்
விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நீங்கள் வந்தாக வேண்டும் என்றனர்.
அதற்கவர் நான்
கூறியதை நிரூபிக்கிறேன் எனக்கூறிவிட்டு ; எங்களிடம் ஒரு நாள்
உரையாற்றும் போது நபி ஸல் அவர்கள் “ மனிதர்களே! எறும்பு
ஊர்வதை விட இரகசியமான இணைவைத்தலை அஞ்சுங்கள் என்று கூறினார்கள். இறைத்தூதர்
அவர்களே ! எறும்பு ஊர்வதைவிட இரகசியமான ஒன்றை எப்படி அஞ்சமுடியும் ? என்று ஒருவர் கேட்டார்.
”இறைவா ! எதையும் நாங்கள்
அறிந்து உனக்கு இணைவைப்பதை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறோம் “ நாங்கள் அறியாது உள்ளதை செய்வது பற்றி உன்னிடம் மன்னிப்புக் கோருகிறோம் என்று
பிரார்த்தனை செய்யுங்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ அலி , நூல்கள் : அஹ்மத் (19108)
தப்ரானீ
கேள்விப் பட்டதையெல்லாம் பேச எழுத தடை...
அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
عَنْ
حَفْصِ بْنِ عَاصِمٍ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ : " كَفَى بِالْمَرْءِ كَذِبًا أَنْ يُحَدِّثَ بِكُلِّ
مَا سَمِعَ
தான்
கேள்விப்பட்டதை எல்லாம் ஒருவன் பரப்புவதே அவன் பொய்யன் என்பதற்குப் போதுமானதாகும். அறிவிப்பவர்: ஹஃப்ஸ் பின் ஆசிம் (ரலி) நூல்: முஸ்லிம் 6)
يَاأَيُّهَا
الَّذِينَ آمَنُوا إِنْ جَاءَكُمْ فَاسِقٌ بِنَبَإٍ فَتَبَيَّنُوا أَنْ تُصِيبُوا
قَوْمًا بِجَهَالَةٍ فَتُصْبِحُوا عَلَى مَا فَعَلْتُمْ نَادِمِينَ)
“இறைநம்பிக்கை
கொண்டவர்களே! தீயவன் ஒருவன் ஏதேனும் ஒரு செய்தியை உங்களிடம் கொண்டுவந்தால், அதன் உண்மைநிலையை நன்கு விசாரித்து தெளிவு படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் தெரியாத்தனமாக ஏதேனும் ஒரு கூட்டத்தினர்க்கு தீங்கிழைத்து விட்டு
பின்னர் உங்கள் செயலுக்காக வருந்தும் நிலை ஏற்பட்டு விடக்கூடாது. இதை நன்றாக
அறிந்து கொள்ளுங்கள்!” ( அல்குர்ஆன்: 49:
6 )
عَنِ
ابْنِ عَبَّاسٍ فِي هَذِهِ الْآيَةِ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وسلم بَعَثَ الْوَلِيدَ بْنَ عُقْبَةَ بْنِ أَبِي مُعَيْط إِلَى بَنِي
الْمُصْطَلِقِ لِيَأْخُذَ مِنْهُمُ الصَّدَقَاتِ، وَإِنَّهُمْ لَمَّا أَتَاهُمُ
الْخَبَرُ فَرِحُوا وَخَرَجُوا يَتَلَقَّوْنَ رَسُولَ رَسُولِ اللَّهِ ﷺ،
وَأَنَّهُ لَمَّا حُدِّثَ الْوَلِيدُ أَنَّهُمْ خَرَجُوا يَتَلَقَّوْنَهُ، رَجَعَ
الْوَلِيدُ إِلَى رَسُولِ اللَّهِ ﷺ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ بَنِي
الْمُصْطَلِقِ قَدْ مَنَعُوا الصَّدَقَةَ. فَغَضِبَ رَسُولُ اللَّهِ ﷺ مِنْ ذَلِكَ
غَضَبًا شَدِيدًا، فَبَيْنَا هُوَ يُحَدِّثُ نَفْسَهُ أَنْ يَغْزُوَهُمْ إِذْ
أَتَاهُ الْوَفْدُ فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، إِنَّا حُدِّثْنَا أَنَّ
رَسُولَكَ رَجَعَ مِنْ نِصْفِ الطَّرِيقِ، وَإِنَّا خَشِينَا أَنَّ مَا رَدَّهُ
كِتَابٌ جَاءَ مِنْكَ لِغَضَبٍ غَضِبْتَهُ عَلَيْنَا، وَإِنَّا نَعُوذُ بِاللَّهِ
مِنْ غَضَبِهِ وَغَضَبِ رَسُولِهِ. وَإِنَّ النَّبِيَّ ﷺ اسْتَغَشَّهُمْ وَهَمَّ
بِهِمْ، فَأَنْزَلَ اللَّهُ(١٠) عُذْرَهُمْ فِي الْكِتَابِ، فَقَالَ: ﴿يَا
أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ جَاءَكُمْ فَاسِقٌ بِنَبَإٍ فَتَبَيَّنُوا﴾ إلى
آخر الآية
ஒரு தடவை நபி ﷺ அவர்கள் ஜகாத் நிதியை வசூலிப்பதற்கு ஹழ்ரத் வலீத் பின் உக்பா (ரலி) அவர்களை
பனீமுஸ்தலிக் எனும் கோத்திரத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள். இவருக்கும் அந்த
கோத்திரத்தாருக்கும் இஸ்லாத்திற்கு வரும் முன் ஒரு கொலை சம்பந்தமான பகை உணர்வு
இருந்து வந்தது. இஸ்லாத்திற்கு வந்தபின் அந்த பகை மறைந்து போனது.
ஹழ்ரத் வலீத் பின்
உக்பா (ரலி) அவர்கள் வருகை புரியும் செய்தியறிந்து, அந்த கோத்திரத்தார் அவரை
வரவேற்பதற்காக பெரும் படையை திரட்டி புடைசூழ ஊரின் எல்லையில் குழுமியிருந்தார்கள்.
இதைக் கண்ட ஹழ்ரத்
வலீத் பின் உக்பா (ரலி) அவர்கள் உண்மை என்னவென்று உறுதிப்படுத்தாமல் பழைய பகை
உணர்வை மனதில் வைத்து நம்மை தீர்த்து கட்ட இவர்கள் ஒன்று குழுமியிருக்கிறார்கள் என
மனதில் நினைத்துக் கொண்டு, வந்த வழியை நோக்கி நபி ﷺ அவர்களிடம் திரும்பி
விட்டார்கள்.
மேலும் அந்த
கோத்திரத்தார் குறித்து தம் எண்ண அடிப்படையில் பின்வரும் சில வதந்திகளை பரப்பி
விடுகிறார்கள். 1) அவர்கள் இஸ்லாத்திலிருந்து வெளியேறி விட்டார்கள், 2) ஜகாத் நிதியை தர மறுக்கிறார்கள், 3) என்னை கொலை செய்யவும்
தயாராகி விட்டார்கள்.
இந்த வதந்திகளை
நபி ﷺ அவர்கள் கேட்டதும் நம்பவில்லை. நடந்தது உண்மையா? அல்லது வதந்தியா? என்பதை ஆய்வு செய்வதற்காக ஹழ்ரத் காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் தலைமையில்
ஒரு சிறிய படையை அனுப்பி வைத்து, அவர்களுக்கு தெரியாமல் இரவு நேரத்தில் அந்த ஊருக்குள்
நுழையும்படி ஆலோசனை வழங்கினார்கள்.
\அந்த ஊரின் எல்லை அருகே
படை வந்ததும், ஹழ்ரத் காலித் (ரலி) அவர்கள் சில ஒற்றர்களை உளவு பார்க்க அனுப்பி வைத்தார்கள்.
அந்த நேரம் மக்ரிப் தொழுகை நேரமாகும். ஒற்றர்கள் சென்ற போது அந்த கோத்திரத்தார்
தொழுகையில் ஆர்வமாக ஈடுபட்டதை கண்டார்கள்.
இந்த செய்தியை
அறிந்து கொண்ட காலித் (ரலி) அடுத்த நாள் காலையில் அவர்களிடம் சென்று ஜகாத் நிதியை
வசூலித்துக் கொண்டு, நபி ﷺ அவர்களிடம் திரும்பிச் சென்று நடந்த உண்மை நிலவரத்தை எடுத்துச் சொன்னார்கள்.
அப்போது தான் மேற்கூறப்பட்ட (49:6) இறைவசனம் இறங்கியது. (இப்னுகஸீர்)
மேற்குறிப்பிடப்பட்ட
குர்ஆன் வசனம் மற்றும் ஹதீஸ் ஓர் ஊடகவியலாளன் ஆதாரமற்ற செய்திகள், வதந்திகள் சமுதாயத்தில் உலாவரும்போது அவற்றை நன்கு ஆராய்ந்து உண்மைகளை
துல்லியமாகக் கண்டறிந்து அவற்றை மாத்திரமே வெளியிடவேண்டும் என்பதை தெளிவுபடுத்துகின்றது.
இரகசியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்
பத்திரிகைச்
சுதந்திரம் அல்லது தகவலறியும் சுதந்திரம் என்ற போர்வையில் தனி நபர்களின்
இரகசியங்களை பகிரங்கப்படுத்தும் அரட்டைச் சந்தைகளாக ஊடகங்கள் தொழிற்படலாகாது.
இஸ்லாம் பிற மனிதர்களது
மானத்தை களங்கப்படுத்துவதை, அந்தரங்கத்தை வெளிப்படுத்துவதை கடுமையான குற்றமாகப் பார்க்கிறது.
“யார் ஒருவர் தன் சகோதரனின்
குறையை (குற்றத்தை) மறைக்கிறாரோ அல்லாஹ் மறுமையில் அவரது குறையை மறைப்பான்.” (இப்னுமாஜா)
பக்கச் சார்பற்ற நீதமான செய்தியையே வெளியிட வேண்டும்.
தற்காலத்தில் ஊடகங்கள்
வாயிலாக பெரும்பாலும் பக்கச் சார்பான செய்திகளே வெளியிடப்படுகின்றன.
தமக்கு வேண்டியவர்களின் செய்திகளுக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுப்பதும்
அவர்களின் தவறுகளைக் குறைத்துக் காட்டுவதும் போன்ற நீதமற்ற நடைமுறைகள்தான்
ஊடகத்துறையில் கடைப் பிடிக்கப்படுகின்றன. இஸ்லாம் இப்போக்கை வன்மையாகக்
கண்டிக்கிறது.
“உங்களுக்கு ஒரு சமுதாயத்தில்
இருக்கும் பகையானது நீங்கள் நீதியாக நடந்து கொள்வதற்கு ஒரு போதும் தடையாக
இருக்க வேண்டாம். நீதியாக நடவுங்கள். அப்படி நடப்பது இறைபக்திக்கு மிக
நெருக்கமானதாகும்.”
( அல்குர்ஆன்: 05-:08 )
அறிவு நுட்பமும்.. சமயோசிதமும்..
சில தகவல்களை உடனுக்குடன்
வெளியிடுவது மக்கள் மத்தியில் பதற்றத்தை உண்டுபண்ணும் என்றிருந்தால்
அவற்றை மறைப்பது அவசியமாகும். ஏனெனில் நாம் தகவல்களை பரிமாறும்போதும் நன்மையை
ஏவி தீமையைத் தடுக்கும்போதும் அறிவு மற்றும் உளவியல் அணுகுமுறைகளைப் பின்பற்றவேண்டும்
என்பது இஸ்லாத்தின் கட்டளையாகும்.
“நபியே! நீர் உமது இரட்சகனின்
பாதையின் பால் (ஹிக்மா) அறிவு ஞானத்தை பிரயோகித்தும் அழகிய உபதேசங்களை
கொண்டும் அழைப்பு விடுப்பீராக” ( அல்குர்ஆன்: 16: 125 )இங்கு குறிப்பிடப்படும் ஹிக்மா என்ற சொல் அவர்களது சூழல் அறிவுப் பின்னணி
போன்ற விரிந்த கருத்துக்களை தருகிறது.
மானக்கேடான தகவல்களைப் பரப்புவதை தவிர்க்கப்பட வேண்டும்
சமூகத்தில் இடம்பெறும்
பாலியல் ரீதியான அத்துமீறல்கள், குற்றச் செயல்கள் தாறுமாறாக
அம்பலப்படுத்தப்படும் போது குற்றச் செயல்கள் புரியும்விதம், அவற்றிலிருந்து தப்பும் வழிகள் பற்றி அறிவதற்கும் குற்றச் செயல்களில்
ஈடுபடவும் வழி பிறக்கின்றது. எனவே மனிதர்களது கற்பொழுக்கம் தொடர்பான
செய்திகளை மிகவும் கவனமாக ஊடகவியலாளர்கள் சமூகத்தில் முன்வைக்க
வேண்டும்.
“விசுவாசிகளுக்கு
மத்தியில் மானக்கேடான செயல்களை பரப்பவேண்டுமென யார் விரும்புகின்றாரோ!
அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நோவினை தரும் வேதனையுண்டு.” ( அல்குர்ஆன்: 24: 19
)
பயமுறுத்தும், அச்சமூட்டும் செய்திகள் வெளியிட தடை
அச்சத்தையும்
பதற்றத்தையும் தரும் செய்திகளை ஆராய்ந்து பார்க்காமல் தேவையின்றி பரப்புவது
சமூகத்தை பேராபத்தில் கொண்டுபோய் சேர்த்துவிடும். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக
அல்லது சிறுபான்மையாக இருக்கும் சூழலில் பதற்றமான செய்திகளை பரப்பிவிடுவதனால்
சமூகத்தில் அமைதி குலைந்து பீதியும் அச்சமும் நிலவி இறுதியில் விரும்பத்தகாத விளைவுகள்
ஏற்படலாம்.
“மேலும் பாதுகாப்பு அல்லது
பீதியை ஏற்படுத்தும் செய்தி அவர்களிடம் வந்துவிட்டால் அதை அவர்கள்
பரப்பிவிடுகின்றார்கள்.”
( அல்குர்ஆன்: 4: 83 )
சிந்திப்போம்! ஊடகத்துறையில் கால் பதிப்போம்!!
ஒவ்வொரு
காலத்திலும் ஒரு சக்தி மிகவும் செல்வாக்கு வாய்ந்தாக காணப்படும். அந்த சக்திதான் குறித்த அந்த காலத்தில் மாபெரும் செல்வாக்காக திகழும். இதனைத்தான் மலேசியாவின் முன்னால் ஜனாதிபதி மஹாதிர் முஹம்மத் பின்வருமாறு
குறிப்பிடுகின்றார்.
’19ஆம் நூற்றாண்டில்
யாரிடம் கடற்படை இருந்ததோ அவர்கள்தான் அந்நூற்றாண்டின் சக்திகள், 20 ஆம் நூற்றாண்டில் யாரிடம் விமானங்கள் இருந்ததோ அவர்கள்தான் அந்நூற்றாண்டின்
சக்தி, 21
ஆம் நூற்றாண்டில் யாரிடம் ஊடகம் உள்ளதோ அவர்கள்தான்
அந்நூற்றாண்டின் சக்தி’
அதே போன்று சமூகவியல் அறிஞர் கோவிந்தநாத் குறிப்பிடும் போது
பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
‘இன்றைய உலகின் ஜாம்பவாhன்கள் ஊடகத்துறையினரே அவர்கள்தான் இவ்வுலகில் கருத்துருவாக்கத்தை (opinion makers) தீர்மானிக்கிறார்கள்.
எனவே, 21 –ம் நூற்றாண்டின் மகத்தான சக்தியாக திகழும்
ஊடகத்துறையில் இஸ்லாம் கூறும் ஊடகவியலாளனின் உயர் பண்புகளை மகுடமாய் கொண்டு ஊடகத்துறையில்
தடம் பதித்து, இந்த உலகிற்கும், உம்மத்திற்கும் உயரிய சேவையாற்றுவோம்!!
பயனுள்ள தேவையான தகவல்கள்!
ReplyDeleteபழமைவாதிகள் என்று முஸ்லிம்களை சொல்கிறார்கள் ஆனால் முஸ்லிம்களின் மார்க்கம் கற்றுத் தரும் ஒழுங்குகள் எவ்வளவு உயர்வானவை மாஷா அல்லாஹ்!
ReplyDeleteமாஷா அல்லாஹ்
ReplyDelete