Thursday, 23 November 2023

பெண்கள் கவலைப்படுவதை அல்லாஹ் விரும்புவதில்லை!!!

 பெண்கள் கவலைப்படுவதை அல்லாஹ் விரும்புவதில்லை!!!


பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புக்கான சர்வதேச தினம் நாளை (நவம்பர் 25) உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இரண்டாம் நூற்றாண்டாக இருந்தாலும் சரி, இருபத்துயோராம் நூற்றாண்டாக இருந்தாலும் சரி, பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது குறையவே இல்லை.

இத்தகைய வன்முறை இந்தியாவில் மட்டுமே நடக்கிறது என்று சொல்ல முடியாது. உலகளவில் மூன்றில் ஒரு பெண் பாலின அடிப்படையிலான வன்முறையை எதிர்கொள்கிறார்.

அதில் பெரும்பாலானவை நெருங்கிய துணையால் ஏற்படுகிறது என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இந்தியாவின் புள்ளிவிவரங்களும் இதே போலத்தான் உள்ளன.

"கணவன் அல்லது உறவினர்களால் கொடுமை" என்ற சட்டப்பூர்வ வார்த்தையின் கீழ் பெரும்பாலும் புகாரளிக்கப்படும் குடும்ப வன்முறை என்பது இந்தியாவில் பெண்களுக்கு எதிராக தொடர்ந்து நடக்கும் வன்முறைக் குற்றமாகும்.

குற்றத் தரவுகள் கிடைக்கப்பெறும் கடைசி ஆண்டான 2020 இல், 1, 12, 292 பெண்களிடமிருந்து காவல்துறை புகார்களைப் பெற்றுள்ளது. அதாவது ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் ஒரு குற்றம் நடக்கிறது.

ஒரு பெண் என்பவள் அனைத்து மட்டத்திலும், அனைத்து பருவத்திலும் அவள் பயணிக்கிற அனைத்து துறைகளிலும் வன்முறையை எதிர் கொள்கிறாள்.

அவள் எதிர் கொள்ளும் வன்முறையின் வடிவங்கள் தான் இங்கு வேறுபடுகின்றனவே தவிர மற்றபடி அவளுக்கு எதிரான வன்முறைகள் முடிவுக்கு வருவதில்லை.

அந்த வன்முறையின் ஒரு வடிவம் தான் உளரீதியான வன்முறை. அவளை சோர்வுறச் செய்கிற, நலிவுறச் செய்கிற, முடங்கச் செய்கிற ஒரு வன்முறை அது ஒரு பெண்ணை “கவலையடைய வைப்பது”. இன்று இந்த சமூகத்தில் மிகவும் எளிதாக பெண்களுக்கு எதிராக இந்த ஆயுதமே பயன்படுத்தப்படுகிறது.

பெண்கள் கவலைப்படுவதை அல்லாஹ் விரும்புவதில்லை!

மூஸா நபியின் தாயாரை பார்த்து அச்சம் கொள்ளாதீர், கவலை கொள்ளாதீர் என்று அல்லாஹ் சொல்கிறான்...!

وَاَوْحَيْنَاۤ اِلٰٓى اُمِّ مُوْسٰٓى اَنْ اَرْضِعِيْهِ‌ۚ فَاِذَا خِفْتِ عَلَيْهِ فَاَ لْقِيْهِ فِى الْيَمِّ وَلَا تَخَافِىْ وَلَا تَحْزَنِىْ اِنَّا رَآدُّوْهُ اِلَيْكِ وَجٰعِلُوْهُ مِنَ الْمُرْسَلِيْنَ‏

நாம் மூஸாவின் தாயாருக்கு: அவருக்கு (உன் குழந்தைக்குப்) பாலூட்டுவாயாக; அவர் மீது (ஏதும் ஆபத்து வரும் என்று) நீ பயப்படுவாயானால், அவரை ஆற்றில் எறிந்து விடு - அப்பால் (அவருக்காக) நீ பயப்படவும் வேண்டாம், துக்கப்படவும் வேண்டாம்; நிச்சயமாக நாம் அவரை உன்னிடம் மீள வைப்போம்; இன்னும், அவரை (நம்) தூதர்களில் ஒருவராக்கி வைப்போம்என்று வஹீ அறிவித்தோம்.

فَرَدَدْنٰهُ اِلٰٓى اُمِّهٖ كَىْ تَقَرَّ عَيْنُهَا وَلَا تَحْزَنَ وَلِتَعْلَمَ اَنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ وَّلٰـكِنَّ اَكْثَرَهُمْ لَا يَعْلَمُوْنَ

இவ்வாறு அவருடைய தாயாரின் கண்குளிர்ச்சியடையவும், அவள் துக்கப்படாதிருக்கவும், நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்பதை அவள் அறிந்து கொள்வதற்காகவும் நாம் அவரை அவர் தாயாரிடத்தே திரும்பச் சேர்த்தோம் - எனினும், அவர்களில் பெரும்பாலோர் (இதை) அறிய மாட்டார்கள். ( அல்குர்ஆன்: 28: 7 & 13 )

மர்யம் (அலை) அவர்களைப் பார்த்து அல்லஹ் கவலைப்படாதீர் என அழைத்துச் சொன்னான்...!

فَنَادٰٮهَا مِنْ تَحْتِهَاۤ اَلَّا تَحْزَنِىْ قَدْ جَعَلَ رَبُّكِ تَحْتَكِ سَرِيًّا‏

(அப்போது ஜிப்ரீல்) அவருக்குக் கீழிருந்து: “(மர்யமே!) கவலைப்படாதீர்கள்! உம்முடைய இறைவன் நிச்சயமாக உமக்கு கீழாலேயே ஒரு சின்ன ஆற்றை உண்டாக்கியிருக்கின்றான்என்று அழைத்து கூறினார். ( அல்குர்ஆன்: 19: 24 )

நபி அவர்களின் துணைவியர்களைப் பற்றி சொல்லும் போது அல்லாஹ் "அவர்கள் கண்கள் குளிர்ச்சியடைவதற்காகவும் அவர்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும் இதை சொல்கிறோம்" என்று சொல்கிறான்...!

تُرْجِىْ مَنْ تَشَآءُ مِنْهُنَّ وَتُـــْٔوِىْۤ اِلَيْكَ مَنْ تَشَآءُ وَمَنِ ابْتَغَيْتَ مِمَّنْ عَزَلْتَ فَلَا جُنَاحَ عَلَيْكَ ذٰ لِكَ اَدْنٰٓى اَنْ تَقَرَّ اَعْيُنُهُنَّ وَلَا يَحْزَنَّ وَيَرْضَيْنَ بِمَاۤ اٰتَيْتَهُنَّ كُلُّهُنَّ وَاللّٰهُ يَعْلَمُ مَا فِىْ قُلُوْبِكُمْ وَكَانَ اللّٰهُ عَلِيْمًا حَلِيْمًا‏

அவர்களில் நீர் விரும்பிய வரை ஒதுக்கி வைக்கலாம். நீர் விரும்பியவரை உம்முடன் தங்கவைக்கலாம், நீர் ஒதுக்கி வைத்தவர்களில் நீர் நாடியவரை உம்முடன் சேர்த்துக் கொள்ளலாம். (இதில்) உம்மீது குற்றமில்லை; அவர்களுடைய கண்கள் குளிர்ச்சியடையும் பொருட்டும், அவர்கள் விசனப்படாமல் இருப்பதற்கும் அவர்கள் ஒவ்வொருவரும் நீர் அவர்களுக்கு கொடுப்பதைக் கொண்டு திருப்தி அடைவதற்காகவும், இது சுலபமான வழியாகும். மேலும், அல்லாஹ் உங்கள் உள்ளங்களில் இருப்பதை நன்கறிகிறான்; இன்னும் அல்லாஹ் எல்லாம் அறிந்தவன்; மிக்க பொறுமையாளன். ( அல்குர்ஆன்: 33: 51 )

ஆகவே, பெண்களை கவலையடையச் செய்கிறவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

வன்முறையில் மிகப் பெரிய வன்முறை பெண்களை கவலையில் ஆழ்த்துவதே!

நபி (ஸல்) அவர்களின் தூய துணைவியர்களில் ஒருவரான அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் குறித்து அவதூறு பரப்பப்பட்ட செய்தி அன்னை ஆயிஷா (ரலி) அவர்களை பெரிதும் பாதித்தது. மிகப் பெரிய கவலையில் அவர்களை ஆழ்த்தியது.

அப்படியான ஒரு சூழலில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அனுபவித்த வேதனை!

قالت: وأصبح أبوي عندي، قد بكيت ليلتين ويوما، ولا يرقأ لي دمع لا أكتحل بنوم، حتى إني لأظن أن البكاء فالق كبدي، فبينا أبواي جالسان عندي وأنا أبكي، فاستأذنت علي امرأة من الأنصار فأذنت لها، فجلست تبكي معي، قالت: فبينا نحن على ذلك دخل رسول الله صلى الله عليه وسلم علينا فسلم ثم جلس، 

காலையானதும் என் தாய் தந்தையர் என் அருகேயிருந்தனர். நானோ இரண்டு இரவுகள் ஒரு பகல் (முழுக்க) என் ஈரல் பிளந்து விடுமோ என்றெண்ணும் அளவிற்கு அழுதிருந்தேன். நான் அழுதவண்ணமிருக்கும்போது என் தாய்தந்தையார் என்னிடம் அமர்ந்திருக்க, அன்சாரிப் பெண்ணொருத்தி வந்து உள்ளே வர அனுமதி கேட்டாள். நான் அவளுக்கு அனுமதியளித்தவுடன் என்னோடு சேர்ந்து அவளும் அழுதபடி அமர்ந்தாள்.

நாங்கள் இவ்வாறு இருந்து கொண்டிருக்கும் போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வந்து அமர்ந்தார்கள். என்னைப் பற்றி அவதூறு சொல்லப்பட்ட நாளிலிருந்து அவர்கள் என்னருகே அமர்ந்ததில்லை. மேலும், ஒரு மாத காலம் வரை என் விஷயத்தில் (அல்லாஹ்விடமிருந்து தீர்ப்பு) எதுவும் அவர்களுக்கு வஹீயாக அருளப்படவில்லை.

وقالت: (وَاللَّهِ مَا أَجِدُ لِي وَلَكُمْ مَثَلًا، إِلَّا أَبَا يُوسُفَ إِذْ قَالَ: فَصَبرٌ جَميلٌ وَاللَّـهُ المُستَعانُ عَلى ما تَصِفونَ)

அப்போது நபி (ஸல்) அவர்களிடம் ஆயிஷா (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்கும் உங்களுக்கும் (நபி) யூசுஃப்(ர) அவர்களின் தந்தையை (யஃகூப்(ர) அவர்களை)யே நான் உவமையாகக் கருதுகிறேன். (அதாவது): (இதை) சகித்துக் கொள்வதே நல்லது. நீங்கள் புனைந்து சொல்லும் விஷயத்தில் அல்லாஹ்விடம் தான் நான் பாதுகாப்புத் கோர வேண்டும். (திருக்குர்ஆன் 12:83)

تقول أم المؤمنين عائشة: (وَأَنَا أَرْجُو أَنْ يُبَرِّئَنِي اللَّهُ، وَلَكِنْ وَاللَّهِ مَا ظَنَنْتُ أَنْ يُنْزِلَ فِي شَأْنِي وَحْيًا، وَلَأَنَا أَحْقَرُ فِي نَفْسِي مِنْ أَنْ يُتَكَلَّمَ بِالقُرْآنِ فِي أَمْرِي، وَلَكِنِّي كُنْتُ أَرْجُو أَنْ يَرَى رَسُولُ اللَّهِ -صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ- فِي النَّوْمِ رُؤْيَا يُبَرِّئُنِي اللَّهُ ... فَكَانَ أَوَّلَ كَلِمَةٍ تَكَلَّمَ بِهَا، أَنْ قَالَ لِي: «يَا عَائِشَةُ احْمَدِي اللَّهَ، فَقَدْ بَرَّأَكِ اللَّهُ).[٤][٩] فنزل قول الله -تعالى-: (إِنَّ الَّذِينَ جَاءُوا بِالْإِفْكِ عُصْبَةٌ مِّنكُمْ لَا تَحْسَبُوهُ شَرًّا لَّكُم بَلْ هُوَ خَيْرٌ لَّكُمْ لِكُلِّ امْرِئٍ مِّنْهُم مَّا اكْتَسَبَ مِنَ الْإِثْمِ وَالَّذِي تَوَلَّى كِبْرَهُ مِنْهُمْ لَهُ عَذَابٌ عَظِيمٌ* لَّوْلَا إِذْ سَمِعْتُمُوهُ ظَنَّ الْمُؤْمِنُونَ وَالْمُؤْمِنَاتُ بِأَنفُسِهِمْ خَيْرًا وَقَالُوا هَـذَا إِفْكٌ مُّبِينٌ)

பிறகு, அல்லாஹ் நான் குற்றமற்றவள் என அறிவிப்பான் என்ற நம்பிக்கையுடன் நான் என் படுக்கையில் (வேறு பக்கமாகத்) திரும்பிப் படுத்துக் கொண்டேன். ஆயினும், திருக்குர்ஆனில் என் விஷயத்தைப் பற்றிப் பேசுகிற அளவிற்கு நான் ஒன்றும் முக்கியத்துவமுடையவளல்ல மிகச் சாதாரணமானவள் தான் என்று என்னைக் குறித்து நான் கருதிக் கொண்டிருக்க, அல்லாஹ்வின் மீதாணையாக! இறைவன் என் விஷயத்தில் வஹீயையே -வேத வெளிப்பாட்டையே (திருக்குர்ஆனில்) அருளுவான் என்று நான் நினைத்தும் பார்க்கவில்லை. மாறாக, ‘இறைத்தூதர்(ச) அவர்கள் என்னை அல்லாஹ் குற்றமற்றவள் என்று உணர்த்தும் கனவு எதையாவது தூக்கத்தில் காண்பார்கள்என்றே எதிர்பார்த்தேன்.

அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்கள் தாம் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்திருக்கவுமில்லை; வீட்டிலிருந்து எவரும் வெளியே செல்லவுமில்லை; அதற்குள் அல்லாஹ், நபி (ஸல்) அவர்களின் மீது (திருக்குர்ஆன் வசனங்களை) அருள ஆரம்பித்துவிட்டான். உடனே, (வேத வெளிப்பாடு வருகிற நேரங்களில்) ஏற்படும் கடும் சிரமமான நிலை அவர்களுக்கு ஏற்பட்டது. அது கடும் குளிர் காலமாயிருந்தும் அவர்களின் மேனியிலிருந்து முத்துக்களைப் போல் வியர்வைத் துளிகள் வழியத் தொடங்கின.

அந்த நிலை அல்லாஹ்வின் தூதரைவிட்டு நீங்கியவுடன் அவர்கள் சிரித்துக் கொண்டே முதல் வார்த்தையாக, ‘ஆயிஷாவே! அல்லாஹ்வைப் புகழ்ந்து நன்றி செலுத்து. உன்னை அல்லாஹ் குற்றமற்றவள் என அறிவித்துவிட்டான்என்று கூறினார்கள். என் தாயார், ‘அல்லாஹ்வின் தூதரிடம் எழுந்து செல்என்று கூறினார்கள். நான், “மாட்டேன்; அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்களிடம் செல்ல மாட்டேன். அல்லாஹ்வை மட்டுமே புகழ்ந்து, அவனுக்கே நன்றி செலுத்துவேன்என்றேன்.

அப்போது அல்லாஹ், ‘(ஆயிஷாவின் மீது) அவதூறு பரப்பியவர்கள் உங்களில் ஒரு குழுவினர் தான்என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 24:11) வசனங்களை அருளியிருந்தான். 

பெண்கள் தங்களின் கவலையை வெளிப்படுத்தினால்…

ஒரு இஸ்லாமியப் பெண் தமது குடும்பத்தினரின் கவலையை, தமது கணவரின் கவலையை, தமது பிள்ளைகளின், தமது உம்மத்தின் கவலையை உள்வாங்கி கொண்டால் அதன் பிறகு ஏற்படும் மாற்றங்கள் என்ன? என்பதை பின் வரும் நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.

எப்போதுமே இஸ்லாமிய ஞானம் கொண்ட பெண்கள் தங்களுக்காக மட்டுமே சுய நலமாக கவலை கொள்வதில்லை. மாறாக, தம்மைச் சுற்றியுள்ள எவரும் கவலைப்பட்டு விடக் கூடாது என்பதை கவனத்தில் கொண்டு செயல்படுவார்கள்.

ஒரு இஸ்லாமிய பெண்ணின் கவலை எப்படி இருக்கும்?

يروي المؤرخ ابن الأثير في كتابه "أُسد الغابة": أتت أسماء النبي صلى الله عليه وسلم، وهو بين أصحابه فقالت: بأبي وأمي أنت يا رسول الله، أنا وافدة النساء إليك، إن الله بعثك إلى الرجال والنساء كافة فآمنا بك. وإنّا معشر النساء محصوراتٌ مقصوراتٌ قواعدُ بيوتكم ومَقضى شهواتكم وحاملات أولادكم، وإنكم معشر الرجال فُضِّلتم علينا بالجُمَع والجماعات وعيادة المرضى وشهود الجنائز والحج بعد الحج، وأفضل من ذلك الجهاد في سبيل الله، وإنّ الرجل إذا خرج حاجّاً أو معتمراً أو مجاهداً حفظنا لكم أموالكم وغزلنا أثوابكم وربينا لكم أولادكم. أفما نشارككم في هذا الأجر والخير؟..  فالتفت النبي صلى الله عليه وسلم إلى أصحابه بوجهه كلِّه ثم قال: ((هل سمعتم مقالة امرأة قَط أحسن من مساءلتها في أمر دينها من هذه؟)) فقالوا: يا رسول الله، ما ظننا أن امرأة تهتدي إلى مثل هذافالتفت النبي صلى الله عليه وسلم إليها فقال: ((افهمي، أيتها المرأة، وأَعْلِمي مَن خلفك من النساء أنّ حُسْنَ تبعُّلِ المرأة لزوجها وطلَبها مرضاته واتباعَها موافقته يَعْدِل ذلك كلّه)). فانصرفت المرأة وهي تهلّل.

ஒருநாள் நபியவர்கள் தம் தோழர்களுடன் அமர்ந்திருந்தபோது அங்கு வந்தார் அஸ்மா பின்த் யஸீத் (ரலி) அவர்கள்.அல்லாஹ்வின்தூதரே! என் தாயும் தந்தையும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். முஸ்லிம் பெண்கள், அவர்தம் தூதுவராக என்னைத் தங்களிடம் அனுப்பியுள்ளார்கள். நான்அவர்கள் கூறியதைத் தங்களிடம் தெரிவிக்கிறேன். இங்கு நான் சொல்லப்போகும் அவர்களது கருத்தே என் கருத்தும்கூட.

ஆண்கள் பெண்கள் இரு பாலாருக்கும்பொதுவாகத் தான் அல்லாஹ் தங்களை நபியாக அனுப்பி வைத்துள்ளான். நாங்கள் உங்கள் மீது நம்பிக்கைக் கொண்டோம்;  பின்பற்றுகிறோம். பெண்களாகிய நாங்கள் வீட்டின்தூண்களைப் போல் தனித்து வைக்கப்பட்டுள்ளோம். நாங்கள் கணவர்களுக்கு இல்லற சுகம் அளிக்கிறோம்; அவர்களின் பிள்ளைகளைச் சுமக்கிறோம். அவர்கள் ஜிஹாதுக்குச் சென்று விடும் போது அவர்களது வீடு, வாசல், செல்வத்தைப் பாதுகாத்து அவர்களின் பிள்ளைகளையும் பராமரித்து வளர்க்கிறோம்.

ஆண்களுக்கோ ஜமாஅத் - கூட்டுத் தொழுகையும் ஜும்ஆத் தொழுகையும் ஜனாஸா - பிரேத நல்லடக்கத்தில் ஈடுபவதும், ஜிஹாது புரிவதும் என்று பல நல் வாய்ப்புகள் அமைந்திருக்கின்றன.  

அல்லாஹ்வின் தூதரே! அவர்களது நற்கூலியில் எங்களுக்கும் பங்கு இருக்க வேண்டுமில்லையா?” என்று  வினாவொன்றை எழுப்பினார்கள். அது கேட்டு வியந்துபோன நபியவர்கள் தம் தோழர்களிடம் திரும்பி, “தமது மார்க்கம் பற்றி இத்தனை அழகாக வேறு எந்தப் பெண்ணாவது கேள்வி எழுப்பி,  பேசிக் கேட்டிருக்கிறீர்களா?”  என்றார்கள்.

அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக இல்லை. ஒரு பெண் இந்தளவு தெளிவாய்ப் பேசக்கூடும் என்று நாங்கள் நினைத்ததில்லை. . என்று  பதில்  கூறினார்கள்.

அஸ்மா! உன் தோழியரிடம் சென்று சொல், ‘தம் கணவனுக்குச் சிறந்த இல்லத்துணையாகவும் அவனது மகிழ்வே தனது நாட்டமாகவும் அவனது தேவைகளைப் பூர்த்திசெய்யக் கூடியவளாகவும் ஒரு பெண் அமையும்போது ஆணின் நற்கூலிகள் என்று நீ விவரித்ததற்கு இணையான அனைத்தும் அவளுக்கும்  கிடைத்துவிடும் என்று.  இறைத் தூதர் சொல்லியதைக் கேட்டு மகிழ்ந்து இறைவனைப் புகழ்ந்தவாறு தக்பீரை முழங்கியவாறு அங்கிருந்து விடை பெற்றார் அஸ்மா (ரலி) அவர்கள்.

عن زينب الثقفية امرأة عبد الله بن مسعود رضي الله عنهما قالت: قال: رسول الله صلى الله عليه وسلم: تصدَّقنَ يا مَعْشَرَ النساءِ، ولو من حليكنَّ. قالت: فرجعت إلى عبد الله بن مسعود فقلت: إنك رجل خفيف ذات اليد، وإن رسول الله صلى الله عليه وسلم قد أمرنا بالصدقة، فائته فاسأله فإن كان ذلك يجزئ عني وإلا صرفتها إلى غيركم؟ فقال عبد الله: بل ائته أنت، فانطلقتُ فإذا امرأة من الأنصار بباب رسول الله صلى الله عليه وسلم مثل حاجتها حاجتي، وكان رسول الله صلى الله عليه وسلم قد ألقيت عليه المهابة، فخرج علينا بلال رضي الله عنه فقلنا له: ائت رسول الله صلى الله عليه وسلم فأخبره أن امرأتين بالباب يسألانك، أتجزئ الصدقة عنهما على أزواجهما وعلى أيتام في حجورهما؟ ولا تخبره من نحن. قالت: فدخل بلال على رسول الله صلى الله عليه وسلم فسأله؟ فقال له رسول الله صلى الله عليه وسلم: من هما؟ فقال: امرأة من الأنصار، وزينب، فقال رسول الله صلى الله عليه وسلم: أي الزيانب؟ قال: امرأة عبد الله بن مسعود. فقال رسول الله صلى الله عليه وسلم: لهما أجران أجر القرابة وأجر الصدقة

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்  (ரலி)  அவர்களின் மனைவி ஜைனப்  (ரலி)  அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஒரு நாள் எங்களிடையே உரை நிகழ்த்திய பெருமானார் {ஸல்} அவர்கள்  அன்ஸாரிப் பெண்களே!  அல்லாஹ்வின் பாதையில் தான தர்மம் வழங்குங்கள்! உங்களின் ஆபரணங்களாக இருப்பினும் சரியே! என்று கூறினார்கள்.

உரை முடிந்து வீட்டுக்கு வந்த நான் என் கணவரிடம் மாநபி {ஸல்} நிகழ்த்திய உரை குறித்து கூறிவிட்டு, “உங்களுக்கு நான் ஸதகாச் செய்யலாமா? என்று கேட்டு வாருங்கள். செய்யலாம் என்றால், உங்களுக்கே நான் தந்து விடுகின்றேன். செய்யக் கூடாது என்று மாநபி {ஸல்} அவர்கள் கூறினால் பிறருக்கு நான் அதை கொடுத்து விடுகின்றேன் என்றேன்.

இதைக் கேட்ட என் கணவர் (வெட்கத்தின் காரணமாக) மாநபி {ஸல்} அவர்களிடம் சென்று கேட்க மறுத்து, என்னைப் பார்த்து நீயே சென்று கேள்! என்றார்கள்.

நானும் பெருமானார்  {ஸல்} அவர்களைச் சந்தித்து விளக்கம் கேட்பதற்காக மாநபியின் மஸ்ஜிதுக்கு சென்றேன். அங்கு என்னைப் போன்றே விளக்கம் கேட்க அன்ஸாரிப் பெண்களில் சிலர் வந்திருந்தனர்.

அப்போது நானும் ஒரு அன்ஸாரிப் பெண்மனியும் பெருமானார் {ஸல்}  அவர்களைச் சந்தித்து விளக்கம் கேட்க ஆயத்தமாகி, மேலாடையை போர்த்திக் கொண்டிருக்கும் போது உள்ளே இருந்து பிலால் (ரலி) அவர்கள் வந்தார்கள்.

பிலால் (ரலி) அவர்களிடம், நானும்,  அன்ஸாரிப் பெண்மனியும் வந்த விவரத்தைக் கூறி, நாங்கள் யார் என்கிற விவரத்தை மாநபி  {ஸல்}  அவர்களிடம் தெரிவிக்காமல் விளக்கம் கேட்டு வந்து சொல்லுமாறு கூறினோம்.

பிலால் (ரலி) அவர்கள் மாநபி {ஸல்}  அவர்களிடம் அன்ஸாரிப் பெண் ஒருவரும், ஜைனப் (ரலி) அவர்களும் உங்களிடம் இன்னின்னவாறு விளக்கம் கேட்டு என்னை அனுப்பினார்கள்  என்றார்கள்.

அதற்கு, பெருமானார் {ஸல்} அவர்கள் எந்த ஜைனப்? என்று கேட்க,  பிலால்  (ரலி) அவர்கள் என்னைப் பற்றிக் கூறினார்கள்.

அப்போது, மாநபி {ஸல்} அவர்கள் பிலாலே! அவ்விருவரிடமும் சென்று தாராளமாக கணவருக்கு தமது கொடுக்கலாம். மேலும், அவர்களுக்கு ஸதகாவின் கூலி, உறவை ஆதரித்த கூலி என இரண்டு வகையான கூலிகள் கிடைக்கும் என்று சொல்லி விடுங்கள்! என கூறினார்கள்.                           ( நூல்: முஸ்லிம் )

ஆதலால் பெண்கள் கவலையடைவதை அல்லாஹ்..

எப்போதுமே ஆண்கள் கவலைப்படுவதை ஸாலிஹான பெண்கள் விரும்ப மாட்டார்கள்.

பெருமானார் (ஸல்) அவர்கள் முதல் வஹீயைப் பெற்ற போது கவலை கொண்டார்கள்.

அன்னை கதீஜா (ரலி) அவர்கள் உயரிய வார்த்தைகளை கூறி ஆறுதல் படுத்தினார்கள்.

ஹுதைபிய்யாவின் போது நபித்தோழர்களின் செயல் கண்டு பெருமானார் (ஸல்) அவர்கள் கவலை கொண்டார்கள்.

அன்னை உம்மு ஸலமா (ரலி) அவர்கள் உயர்ந்த ஆலோசனை ஒன்றை கூறி சாந்தி படுத்தினார்கள்.

இறைத்தூதர் மூஸா (அலை) அவர்களின் முகவாட்டத்தையும் ஏதோவொரு கவலையில் மூஸா (அலை) அவர்கள் சிக்கியுள்ளதை உணர்ந்த ஷுஐபு (அலை) அவர்களின் மகள்களில் ஒருவர் தமது தந்தையிடம் கூறி மூஸா (அலை) அவர்களின் வாழ்க்கை வெளிச்சம் பெற உதவினார்கள்.

فَسَقٰى لَهُمَا ثُمَّ تَوَلّٰٓى اِلَى الظِّلِّ فَقَالَ رَبِّ اِنِّىْ لِمَاۤ اَنْزَلْتَ اِلَىَّ مِنْ خَيْرٍ فَقِيْرٌ‏

ஆகையால், அவ்விருவருக்குமாக அவர் (ஆட்டு மந்தைக்குத்) தண்ணீர் புகட்டினார்; பிறகு அவர் (ஒரு மர) நிழலில் ஒதுங்கி: என் இறைவா! நீ எனக்கு இறக்கியருளும் நல்லவற்றின்பால் நிச்சயமாக நான் தேவையுள்ளவனாக இருக்கின்றேன்என்று கூறினார்.

 فَجَآءَتْهُ اِحْدٰٮہُمَا تَمْشِىْ عَلَى اسْتِحْيَآءٍ قَالَتْ اِنَّ اَبِىْ يَدْعُوْكَ لِيَجْزِيَكَ اَجْرَ مَا سَقَيْتَ لَـنَا‌ فَلَمَّا جَآءَهٗ وَقَصَّ عَلَيْهِ الْقَصَصَ قَالَ لَا تَخَفْ نَجَوْتَ مِنَ الْقَوْمِ الظّٰلِمِيْنَ‏

(சிறிது நேரத்திற்குப்) பிறகு அவ்விரு பெண்களில் ஒருவர் நாணத்துடன் நடந்து மூஸாவின் முன் வந்து; “எங்களுக்காக நீங்கள் தண்ணீர் புகட்டியதற்கான கூலியை உங்களுக்கு வழங்குவதற்காக எங்கள் தந்தை உங்களை அழைக்கிறார்என்று கூறினார்; இவ்வாறாக மூஸா அவரிடம் வந்தபோது தம் வரலாற்றை எடுத்துச் சொன்னார்; அதற்கவர்; “பயப்படாதீர்! அக்கிரமக்கார சமூகத்தாரை விட்டும் நீர் தப்பித்துவிட்டீர்என்று கூறினார். ( அல்குர்ஆன்: 28: 24, 25 )

ஒரு ஆண் இறைவனோடு தொடர்பில் இருக்கும் வாழ்க்கையை தொடர ஒரு பெண் தொடர்ந்து உதவி செய்து கொண்டே இருப்பார். அப்படியான ஒரு பெண்ணை எப்படி அல்லாஹ் கவலையில் ஆழ்த்துவான்.

இந்த உம்மத்தின் நீண்ட கால கவலையை நீக்க முன் வந்த பெண்..

روي مرفوعا عن النبي صلى الله عليه وسلم أنه قال : ( لَتُفْتَحَنَّ الْقُسْطَنْطِينِيَّةُ ، فَلَنِعْمَ الْأَمِيرُ أَمِيرُهَا ، وَلَنِعْمَ الْجَيْشُ ذَلِكَ الْجَيْشُ ) .

காண்ஸ்டாண்டிநோபிள் நிச்சயம் ஒரு வீரனால் வெற்றி கொள்ளப்படும். அதை வெற்றி கொள்ளும் தளபதிதான் சிறந்த தளபதி. அந்த சேனைதான் சிறந்த சேனை". (முஸ்னத் அஹ்மத்)

عن أبي قَبِيلٍ ، قَالَ : " كُنَّا عِنْدَ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِي ، وَسُئِلَ : أَيُّ الْمَدِينَتَيْنِ تُفْتَحُ أَوَّلًا : الْقُسْطَنْطِينِيَّةُ أَوْ رُومِيَّةُ ؟ فَدَعَا عَبْدُ اللهِ بِصُنْدُوقٍ لَهُ حَلَقٌ ، قَالَ : فَأَخْرَجَ مِنْهُ كِتَابًا ، قَالَ : فَقَالَ عَبْدُ اللهِ : بَيْنَمَا نَحْنُ حَوْلَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَكْتُبُ ، إِذْ سُئِلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : أَيُّ الْمَدِينَتَيْنِ تُفْتَحُ أَوَّلًا : قُسْطَنْطِينِيَّةُ أَوْ رُومِيَّةُ ؟ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : ( مَدِينَةُ هِرَقْلَ تُفْتَحُ أَوَّلًا ) ، يَعْنِي : قُسْطَنْطِينِيَّةَ " .

அம்ர் இப்னு ஆஸ்(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஒரு முறை நாம் நபி(ஸல்) அவர்களைச் சூழ அமர்ந்திருந்தோம். அப்போது அவரிடம் 'காண்ஸ்டாண்டிநோபிள்' மற்றம் ரோம் இவற்றில் எது முதலில் வெற்றி கொள்ளப்படும்?' என வினவப்பட்டது. அதற்கவர் 'ஹிர்கல் மன்னனின் நகரம்    காண்ஸ்டாண்டிநோபிள் தான் முதலில் வெற்றிகொள்ளப்படும் என்றார்கள். (முஸ்னத் அஹ்மத்)

கி. பி 1453ல் சுல்தான் முஹம்மத் தலைமையில் சுமார் 2,65,000 பேரைக் கொண்ட இஸ்லாமியப் படை பைஸாந்தியப் பேரரசின் கோட்டை காண்ஸ்டாண்டிநோபிளை நோக்கி புறப்பட்டது. 

கோட்டையை நெருங்கியதும் சுல்தான் முஹம்மத் தன் சேனைப் படைகள் முன் சென்று இஸ்லாம் வலியுறுத்தியுள்ள போரில் பின்பற்றப்பட வேண்டிய விழுமியங்கள் பற்றி உபதேசங்களை நிகழ்த்தியதுடன் வெற்றி அல்லது வீரமரணம் என்ற கொள்கையை அவர்களின் உள்ளங்களில் ஆழமாக பதித்தார். பின் தன் படையை பிரித்து பல பகுதிகளிலும் முற்றுகைக்காக நிறுத்தி வைத்தார். அவர்களது படகுகளும் கடல் வழியாக வந்து சேர்ந்தன.

 

 

கோட்டையை முற்றுகையிட்ட பின் சுல்தான் முஹம்மத் 'காண்ஸ்டாண்டிநோபிளை தம்மிடம் ஒப்படைத்து நல்லாட்சி புரிய ஒத்துழைக்குமாறு அல்லது ஆள்வரி (ஜிஸ்யா) செலுத்தி இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் கீழ் நல்லாட்சி புரியுமாறும் வேண்டி' காண்ஸ்டாண்டிநோபிள் மன்னனுக்கு நிருபம் ஒன்றை அணுப்பினார். அதைப்பார்த்த கோட்டை மன்னன் ஆவேசப்பட்டு இஸ்லாமியப் படைக்கெதிராக போர் அறிவித்தான். 

முஸ்லிம்களின் படையெடுப்பை முற்கூட்டியே அறிந்து கொண்ட அவன் ஐரோப்பியரிடம் படையுதவியையும் வேண்டி பெற்றுக்கொண்டான்.

இரு தரப்பாருக்கிடையிலும் போர் தொடங்கியது. ஆரம்பத்தில் முஸ்லிம்களால் கோட்டையை சூழ்ந்திருந்த நீர்ப்பரப்பை தாண்டி முன்னேற முடியாமலிருந்தது. எனினும் சுல்தான் முஹம்மதின் சாமர்த்திய உத்தியின் மூலம் இஸ்லாமிய படை நீர்ப்பரப்பை தாண்டி கோட்டையை அடைந்து வெற்றி வாகை சூடினர். 

இதனால் மக்கள் வெற்றியாளர் எனும் பொருளைத்தரும் 'அல் பாதிஹ்' எனும் சிறப்புப் பெயர் கொண்டு அவரை அழைக்கத் தொடங்கினர்.

இந்த வெற்றி எப்படி சாத்தியம் ஆனது? இந்த வெற்றியின் பிண்ணனியில் உள்ள ரகசியம் என்ன?

இந்த உம்மத்திற்கு மகத்தான ஒரு வெற்றியை சாத்தியம் ஆக்கிய மிகவும் இளவயதுள்ள முஹம்மது அல் ஃபாத்திஹ் பென்னம்பெரும் படையை மிக இலகுவாக வீழ்த்தியதன் பிண்ணனியை வரலாற்று ஆசிரியர்கள் பின் வருமாறு விவரிப்பார்கள்.

முஹம்மது அல் ஃபாத்திஹ் பெற்றுக் கொடுத்த வெற்றியின் பின்னால் அவரின் தாயார் தான் இருந்தார்கள் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

ولو رجعنا في التاريخ قليلًا لطفولة الفاتح لعلمنا السر في صفات الأمير التي أهَّلته لأن يكون نِعم الأمير الذي يصنع نِعم الجيش، السر هو الأم، فقد وهبه الله لأمٍّ فاضلة ربته على مكارم الأخلاق وأعدته للمهمة الصعبة التي كانت تراود أحلام المسلمين من أمراء وقادة،

 بدأت البناء والتأسيس في طفولته المبكرة، تأخذه لصلاة الفجر لتريه أسوار القسطنطينية، وتقول له في ثقة: "يا محمد، أنت القائد الذي ستفتح هذه الأسوار، اسمك محمد وهو ما ينطبق على قول رسول الله، فأنت ستكون نعم الأمير".

ஒருநாள் ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு தமது மகன் முஹம்மதை தமதருகே அமர வைத்து "முஹம்மதே! பெருமானார் ஸல் அவர்கள் சொன்ன கான்ஸ்டான்டி நோபிளை வெற்றி வாகை சூடும் தளபதி நீயாக இருக்க வேண்டும் என்பதே என் ஆசை. ஏனெனில், நபி ஸல் அவர்கள் அந்த தளபதியின் பெயர் முஹம்மது என்று கூறியிருக்கின்றார்கள். உனது பெயரும் முஹம்மது" தான். ஆகவே, பெருமானார் ஸல் அவர்களின் புனித வாயால் போற்றிப் பாராட்டப்பட்ட அந்த தளபதி நீயாக இருக்க வேண்டும்" என்று கூறினார்கள்.    

وكان الطفل الصغير ينظر في عيني أمه ويردُّ مستغربًا: "كيف يا أمي أفتح هذه المدينة الكبيرة؟!".

அதற்கு, அந்த பாலகர் "தாயே! இவ்வளவு பெரிய மாநகரத்தை நான் எப்படி வெற்றி வாகை சூட முடியும்?" என்று கேட்டார்.

فترد عليه الأم: "بالقرآن والقوة والسلاح وحب الناس"، وتمسك يديه وترفعهما إلى السماء داعية: "يا رب، يا عظيم، يا مجيب الدعوات، يا قادر على كل شيء، اجعل ابني هذا الأمير الذي يفتح القسطنطينية، اجعل البركة في هاتين اليدين، واجعل نصر المسلمين يأتي من خلالهما".

அப்போது, அந்த தாயார் "மகனே! அல்லாஹ்வின் வேதமான அல்குர்ஆனைக் கொண்டும், எல்லா வகையான ஆற்றலை கொண்டும், நீ பார்த்து வளரும் உன் மக்களின் நேசத்தை கொண்டும்" நீ வெற்றி பெறுவாய்! என்றார்கள்.

பின்னர், தமது மகனின் இரு கரங்களையும் தமது கரத்தோடு கோர்த்துப் பிடித்து வானை நோக்கி உயர்த்தி "இறைவனே! மகத்தான ஆற்றல் கொண்டவனே! அடியார்களின் அழைப்புகளுக்கு பதிலளிப்பவனே! அனைத்து வஸ்துக்களின் மீதும் ஆதிக்கம் செலுத்துபவனே! பெருமானார் (ஸல்) அவர்கள் கூறிய காண்ஸ்டான்டி நோபிளின் வெற்றித் தளபதியாக என் மகனை நீ ஆக்குவாயாக! 

இறைவனே! எனது மகனின் இரு கரங்களிலும் நீ பரக்கத் செய்வாயாக!

இந்த இரு கரங்களின் ஊடாக இந்த உம்மத்தின் நீண்ட கால கனவாகிய காண்ஸ்டான்டி நோபிளின் வெற்றியை வழங்கியருள்வாயாக!" என்று துஆச் செய்தார்கள்.

பின்னர் அதே உத்வேகத்துடன் அந்த வெற்றிக்கு எது தேவையோ அனைத்தையும் தமது மகனுக்கு வழங்கிட தமது கணவரிடம் முறையிட்டு பெற்றுக் கொடுத்தார்கள்.

இதன் அடிப்படையில் சுல்தான் இரண்டாம்  முராத் தனது மகனை கண்காணித்துப் பராமரிக்கும் பொருப்பை "ஷேக் ஆக் சம்சுதீன்" எனும் மார்க்க அறிஞரிடம் ஒப்படைத்தார். 

அந்தவகையில் முஹம்மத் இவரின் உதவியுடன் அல்குர்ஆன், அல்ஹதீஸ்,  இஸ்லாமிய சட்டக்கலை, விளையாட்டு, கணிதவியல், விண்ணியல், போர் தந்திரம், வரலாறு போன்றவற்றையும் அரபு,  பாரஸீகம், துருக்கி, லத்தீன் மற்றும் கிரேக்க மொழிகள் என்பவற்றையும் கற்றுத் தேர்ச்சி பெற்றிருந்தார். 

இயற்கையிலேயே தாயின் அரவணைப்பில் அன்பு, பணிவு, மார்க்கப் பற்று போன்ற குணங்களையும், கவித்துவத்தில் புலமையும் பெற்றிருந்தார்.

மேலும், இவர் சிறுவயது முதல் தனது தந்தையுடன் போர்களிலும் பங்குப்பெற்றிருந்தார்.

எல்லாம் கை வரப் பெற்றிருந்த நேரத்தில் தான் தமது 12 ம் வயதில் நாடாளும் பொறுப்பில் அவரது தந்தையால் அமர்த்தப்பட்டார்.

கி.பி 1444ல் சுல்தான் 2ம் முராத் 12 வயது மாத்திரமே கொண்ட தனது மகன் 'முஹம்மதை'  உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் சுல்தானாக நியமித்தார்.

இந்நிலையில் ஆட்சிப் பொறுப்பையேற்று சில மாதங்களே ஆன நிலையில், கலீஃபா முராத் இல்லாததையறிந்து, ரோமப் பேரரசு உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் மீது பெரிய படையெடுப்பை மேற்கொண்டது.

அதன் பின்னர் நாம் முன்னரே சொன்ன மாநபி ஸல் அவர்களின் சோபன வெற்றி வசமாகியது. ( நூல்: அல் முஸவ்விரு ஃபித் தாரீஃக் )

காண்ஸ்ட்டான்டி நோபிள் வெற்றி கடந்து வந்த பாதை...

காண்ஸ்டாண்டி நோபிள் என்பது துருக்கியின் தற்போதைய இஸ்தான்பூல் நகரமாகும் இதை அரபு மொழியில் குஸ்தன்தீனியா என்றழைக்கப்படுகிறது.

அன்று இறுதி தூதரின் காலத்தில் பெரும் வல்லரசான ரோம் சாம்ராஜ்யம் பரந்த இரண்டு கிளைகளைக் கொண்டு அமைந்திருந்தது . ஒன்று; ரோமைத் தலைநகராகக்கொண்ட மேற்கு ராஜ்யம். இன்னொன்று; காண்ஸ்டாண்டி நோபிளைத் தலைநகராகக்கொண்ட கிழக்கு ராஜ்யம். அக்கிழக்கு ராஜ்யம்தான் பைஸாந்தியப் பேரரசு எனப்பட்டது.

இந்தச் சோபனத்தைப் பெற்றிட வேண்டும் என்ற நோக்கில் முதலாவதாக முயற்சி மேற்கொண்டவர்கள் கலீஃபா முஆவியா (ரலி) அவர்கள்.

ஸுஃப்யான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் தலைமையில் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி), அபூஅய்யூபுல் அன்ஸாரி (ரலி), அப்துல்லாஹ் இப்னு ஜைத் (ரலி) போன்ற முக்கியத்துவம் வாய்ந்த நனித்தோழர்களைக் கொண்ட படையை அனுப்பி வைத்தார்கள்.

எனினும் அந்த நகரின் கோட்டைச் சுவரைக் கூட அந்த படையால் நெருங்க முடியாமல் போனது. அங்கு நடை பெற்ற போரில் வெற்றியும் கிடைக்கவில்லை. அபூஅய்யூபுல் அன்ஸாரி (ரலி) அவர்கள் அந்த போரில் ஷஹீத் ஆனார்கள். அந்த கோட்டையின் அருகேயே நல்லடக்கமும் செய்யப்பட்டார்கள்.

அதன் பின்னர் ஹிஜ்ரி 54 –இல் கலீஃபா வலீத் இப்னு அப்துல் மலிக்கின் காலத்தில் தளபதி மூஸா இப்னு நுஸைர் அவர்களும், ஹிஜ்ரி 99 –இல் ஸுலைமான் இப்னு அப்துல் மலிக்கின் காலத்திலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

உமைய்யாக்கள் ஆட்சியின் போதும், அப்பாஸியர்கள் ஆட்சியின் போதும் பெரும், பெரும் முயற்சிகள் படையெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு இறுதியில் தோல்வியே மிஞ்சியது.

அடுத்து சல்ஜூக்கிய சாம்ராஜ்யம் முயன்று அதுவும் தோல்வியில் முடிந்தது.

பின்னர், நீண்ட காலத்திற்குப் பின்னர் உஸ்மானியப் பேரரசு அந்த சோபனத்தை நோக்கி நகர்ந்தது.

ஆம்! 1393 –இல் உஸ்மானிய்ய பேரரசின் கலீஃபா பாயஸீத் காண்ஸ்டாண்டி நோபிளை முற்றுகையிட்டார்.

எனினும், ஐரோப்பியர்கள், மங்கோலியர்கள் ஆகியோரின் உதவியோடு பைஸாந்தியப் பேரரசன் முஸ்லிம் படையைத் தோற்கடித்தான்.  இதில் கலீஃபா பாயஸீத் (ரஹ்) ஷஹீத் ஆனார்கள்.

கலீஃபா பாயஸீதின் மரணத்தைத் தொடர்ந்து அவரது மகன் முஹம்மது இப்னு பாயஸீத் ( 1 –ஆம் முஹம்மது ), அவர்களும், அவரைத் தொடர்ந்து அவரது மகன் முராத் இப்னு முஹம்மது ( 2 –ஆம் முராத் ) அவர்களும் ஆட்சி செய்தனர்.

இந்த நிலையில் 1432 –இல் 2 ஆம் முராத் அவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. முஹம்மத் என்று பெயரிட்ட 2 ஆம் முராத் அவர்களின் அந்த முஹம்மது அவர்களின் மூலம் இந்த உம்மத்தின் நீண்ட கால கவலைக்கு முற்றுப் புள்ளி வைக்கப் பட்டது. ஆம்! 800 ஆண்டு கால கவலை அது. ( நூல்: அஷ் ஷகாயிக்குன் நுஃமானிய்யா ஃபீ உலமாயித் தவலத்துல் உஸ்மானிய்யா )

ஆகவே, பெண்களை மதிப்பதோடு அவர்களின் உரிமைகளை வழங்கி கௌரவிப்பதோடு, அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வோம்!

அவர்களை தெரிந்து கொள்வோம்! அவர்களை மகிழ்ச்சி படுத்துவோம்!

5 comments:

  1. மாஷா அல்லாஹ். பெண்களை மட்டுமல்ல, உலமாக்களையும் கவலையடையாமல் பார்த்து கொண்டீர் உஸ்மானியா ரே!
    அல்லாஹ் தங்களுக்கு அருள் புரியட்டும்...

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ் அருமையான பதிவு அல்லாஹுத்தஆலா தங்களுக்கு ஈருலகிலும் பரக்கத் செய்வானாக

    ReplyDelete
  3. "தங்களது பார்வை தனி" பாரகல்லாஹு லகும் வலனா...🤲

    ReplyDelete