நீர் நிலைகளின் ஆக்கிரமிப்பு தடுக்கப்பட/அகற்றப்பட
வேண்டும்!!!
தென் கிழக்கு
வங்கக் கடலில் உருவாக உள்ள ‘மிக்ஜாம்’ (Cyclone Michaung) என்ற புயல் 3-ஆம் தேதி உருவாகி புதுச்சேரிக்கு கிழக்கு- வடகிழக்கே சுமார் 210 கிலோமீட்டர் தொலைவிலும் சென்னைக்கு கிழக்கு- தென்கிழக்கே சுமார் 130 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டு இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 04/12/2023 பிற்பகல் மத்தியமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் வந்து அதன் பிறகு தெற்கு
ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப் பகுதிகளில் நிலவி, தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து 05/12/2023 காலை தெற்கு ஆந்திரா கடற்கரை நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே
தீவிர புயலாக கடக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. எச்சரித்தது போலவே நடந்தும் இருக்கிறது.
திங்கள், டிசம்பர் 4
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை
பெய்தது.சென்னை முழுவதும்
வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
மிக்ஜாம் புயல்
இந்த புயலுக்கு பெயர் வைத்தது மியான்மர் நாடு. இந்த பெயருக்கு வலிமை என்று ஒரு
அர்த்தமும் மீள்தன்மை,
விரியும் திறன் (Strength or Resilience) என்பதாகும். வலிமை என்ற அர்த்தத்திற்கு ஏற்ப மழையும் காற்றும் பலமாகவே
இருந்திருக்கின்றது.
(டிச.5) கரையைக் கடந்த மிக்ஜாம் புயல் அண்மைக் காலங்களில் இல்லாத அளவுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திச் சென்றிருக்கிறது. மிக்ஜாம் புயல் குறித்த முன்னறிவிப்பு 10 நாட்களுக்கு முன்பாகவே வெளியிடப்பட்டுவிட்ட போதிலும், புயலால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை தடுப்பதிலும், குறைப்பதிலும் பெரிய அளவில் அரசால் வெற்றி பெற இயலவில்லை.
கடந்த 2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம். 2015ல் பெய்த 33மிமீ மழையால் செங்கல்பட்டு, தாம்பரம் பகுதியில் கனமழை
பெய்து செம்பரம்பாக்கம்,
புழல் ஏரி திறந்து விடப்பட்டதால் சென்னையே வெள்ளக்காடாக
காட்சியளித்தது.
அந்த வெள்ள
பாதிப்பு சென்னையின் மழை நீர் வடிகால் உட்கட்டமைப்பு மற்றும் மழைநீரை வெளியேற்றும்
திட்டமிடலில் தமிழ்நாட்டின் தலைநகரம் பின் தங்கி இருப்பதை வெளிச்சம் போட்டுக்
காட்டியது.
இதனைத் தொடர்ந்து
மழைநீர் வடிகால்களை சீரமைக்கும் பணியை அரசு மேற்கொண்டு வந்தது. இருந்த போதிலும்
அதற்கு அடுத்தடுத்த ஆண்டுகளில் வர்தா, நீவர் புயல்கள் டிசம்பர்
மாதத்தில் சென்னையை தாக்கின.
இதற்கு நிரந்தர
தீர்வு வேண்டும் என சென்னை மக்கள் தொடர்ச்சியாக அரசை கேட்டு வந்தனர். தமிழ்நாடு
அரசு சார்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு கடந்த இரண்டரை ஆண்டுகளாக 3,031 கிலோ மீட்டருக்கு மழை நீர் வடிகால்கள், 33 மைக்ரோ ஏரிகள், 16 இதர ஏரிகள் 4,000
கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர்
அதிகாரிகள் கூறுகின்றனர். ( நன்றி: பிபிசி தமிழ், 05/12/2023 )
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு
பாதுகாப்புக்காக பள்ளிவாசல்களை திறந்து விட வேண்டும் என்று தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா
சபையின் தலைவர் பி.ஏ காஜா முயீனுத்தீன் பாகவி ஹழ்ரத் வேண்டுகோள் விடுத்ததும், சென்னையின்
பல்வேறு இமாம்கள் தங்களுடைய மஹல்லா மக்களுடன் களப்பணியாற்றியதும், குறிப்பாக கோடம்பாக்கம்
மஸ்ஜிதுர் ரஹீமா பள்ளியின் இமாம் ஸதக்கத்துல்லாஹ் பாகவி ஹள்ரத் சுழன்று சுழன்று சேவை
செய்ததும், முன்னாள் பள்ளிகரணை இமாம் அப்பாஸ் சுபூரி அவர்கள் தங்களுடைய இரு சிறு வயது
பெண்மக்களுடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பால் வினியோகம் செய்ததும், பூந்தமல்லி
உட்பட சென்னையின் பல்வேறு பள்ளிவாசல்களை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து சமூக மக்களுக்காக
திறந்து விட்டதோடு, அவர்களுக்கான உணவு மற்றும் சிறு சிறு தேவைகளை நிறைவேற்ற உதவி புரிந்ததும்
“இஸ்லாமியர்கள் இப்போதும், எப்போதும் எல்லாவற்றிலும் துணை நிற்பவர்கள் என்பதை பறை சாற்றும்
விதமாக அமைந்திருந்ததை நம்மால் மறக்க இயலாது.
அதே போன்று மிகவும் துரிதமாக செயல்பட்ட அரசு மற்றும்
மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் மின்வாரிய பொறியாளர்கள் ஊழியர்கள் மற்றும்
தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் ஆகியோரின் பங்களிப்பையும் நன்றியுடன் பார்ப்பதற்கு
தவறி விடக்கூடாது.
மழை பொழியும் போதும்.. காற்று வீசும் போதும்…
மழை பொழியும்போது “அல்லாஹும்ம ஸய்யிபன் நாபிஃஅன் – யா அல்லாஹ் பயனுள்ளதாக
மழையைப் பொழிவிப்பாயாக”
என்று பிரார்த்திக்குமாறு நபிகளார் கூறினார்கள்.
அதிகமாக மழை
பெய்யும்போது “அல்லாஹும்ம ஹவாலைய்னா,
வலா அலைனா – இந்த மழை எமக்குப் போதும் ஏனைய பகுதிகளுக்கு அதனைப் பொழியச்செய்வாயாக” என்று
கேட்குமாறு
நபிகளார்
துஆவைக் கற்றுத்தந்தார்கள்.
அதே போன்று காற்று
வீசும் போது..
اَللّهُمَّ
إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا فِيهَا وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ
وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا فِيهَا وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ
அல்லாஹும்ம இன்னீ
அஸ்அலு(க்)க கைரஹா வகைர மாபீ[F]ஹா வகைர மா உர்ஸிலத் பி(B]ஹி. வஅவூது பி(B](க்)க மின் ஷர்ரிஹா வஷர்ரி மா பீ[F]ஹா வஷர்ரி மா உர்ஸிலத்
பி(B]ஹி
இதன் பொருள்:”இறைவா! இதில் உள்ள நன்மையையும், எந்த நன்மைக்காக இது
அனுப்பப்பட்டதோ அந்த நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இதன் தீங்கை விட்டும், எந்தத் தீங்கைக் கொண்டு வருவதற்காக இது அனுப்பப்பட்டதோ அந்தத் தீங்கை விட்டும்
உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்”. ( நூல்: முஸ்லிம் 1496 )
மழையோ காற்றோ அதன் மூலம் நமக்கு பயன் மட்டுமே கிடைக்க
வேண்டுமாய் பிரார்த்திப்பதும், அதன் மூலம் ஏற்படும் தீங்கள் ஆபத்துகளில் இருந்து பாதுகாக்குமாறு
அல்லாஹ்விடம் கோருவதும் ஆகச் சிறந்த செயலாக நமக்கு இதை நமது நபி {ஸல்} அவர்கள் ஆக்கித்
தந்துள்ளார்கள். “ஜஸல்லாஹு ஸைய்யிதினா முஹம்மதன் அன்னா ஃகைரன்”!!.
சில போது காற்றும் மழையும்..
மழை அது அளவோடு
பொழிந்தால் அருள் என்பதுபோன்றே கூடுதலாகப் பெய்தால் அது சோதனையாக மாறிவிடும்
வாய்ப்பும் உண்டு.
நூஹ் நபியின்
சமூகம் மிக அதிகமாக மழை பொழிந்து ஏற்பட்ட வெள்ளத்தின் மூலம்தான்
அழிக்கப்பட்டார்கள். மழைவரும்போது நபியவர்களின் நிலை பற்றி ஆயிஷா (ரலி) கூறுவதை
அவதானியுங்கள். “மேகத்தையோ அல்லது (சூறாவளிக்) காற்றையோ கண்டால், நபி(ஸல்) அவர்களின் முகத்தில் (ஒருவிதமான கலக்கத்தின்) ரேகை தென்படும்.
(ஒருநாள்) நான், 'இறைத்தூதர் அவர்களே! மக்கள் மேகத்தைக் காணும்போது அது மழை மேகமாக இருக்கலாம்
என்றெண்ணி மகிழ்ச்சியடைகின்றனர். ஆனால், தாங்கள் மேகத்தைக்
காணும்போது ஒருவிதமான கலக்கம் தங்கள் முகத்தில் தென்படக் காண்கிறேனே (ஏன்)?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஆயிஷா! அதில்
(அல்லாஹ்வின்) வேதனை இருக்கலாம் என்பதால் என்னால் கலக்கமடையாமல் இருக்க இயலவில்லை.
('ஆத்'
எனும்) ஒரு சமூகத்தார் (சூறாவளிக்) காற்றினால் வேதனை
செய்யப்பட்டனர். (அந்தச்) சமூகத்தார் (மேகமாக வந்த) அந்த வேதனையைப் பார்த்துவிட்டு, 'இது நமக்கு மழையைப் பொழிவிக்கும் மேகம்' என்றே கூறினர்' என பதிலளித்தார்கள்.”
( நூல்: புகாரி )
காற்றும்.... மழையும்...
وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ وَمَا أَنْزَلَ اللَّهُ مِنَ
السَّمَاءِ مِنْ رِزْقٍ فَأَحْيَا بِهِ الْأَرْضَ بَعْدَ مَوْتِهَا وَتَصْرِيفِ
الرِّيَاحِ آيَاتٌ لِقَوْمٍ يَعْقِلُونَ
இரவு - பகல் மாறி
மாறி வருவதிலும்,
வானத்தில் இருந்தும் அருள் மழையை அல்லாஹ் இறக்கி வைத்து, இறந்து போன பூமியை அதைக் கொண்டு உயிர்ப்பிப்பதிலும், காற்றுகளை மாறி மாறி வீசச் செய்வதிலும் அறிவுடைய சமூகத்தாருக்கு அத்தாட்சிகள்
இருக்கின்றன (அல்குர்ஆன்: 45: 5 )
إِنَّ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ
وَالنَّهَارِ وَالْفُلْكِ الَّتِي تَجْرِي فِي الْبَحْرِ بِمَا يَنْفَعُ النَّاسَ
وَمَا أَنْزَلَ اللَّهُ مِنَ السَّمَاءِ مِنْ مَاءٍ فَأَحْيَا بِهِ الْأَرْضَ
بَعْدَ مَوْتِهَا وَبَثَّ فِيهَا مِنْ كُلِّ دَابَّةٍ وَتَصْرِيفِ الرِّيَاحِ
وَالسَّحَابِ الْمُسَخَّرِ بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ لَآيَاتٍ لِقَوْمٍ
يَعْقِلُونَ
நிச்சயமாக
வானங்களையும்,
பூமியையும் படைத்திருப்பதிலும், இரவும் - பகலும் மாறி மாறி வருவதிலும், மனிதர்களுக்குப் பயன்
தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும், வானத்தில் இருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமி இறந்தபின் அதை
உயிர்ப்பிப்பதிலும்,
அதன் மூலம் ஒவ்வொரு விதமான உயிரினத்தையும் பரவ
விட்டிருப்பதிலும்,
காற்றுகளை மாறி மாறி வீசச் செய்வதிலும், வானத்திற்கும்,
பூமிக்கும் இடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் -
விளங்கும் மக்களுக்கு (அல்லாஹ்வுடைய வல்லமையையும், கருணையையும் எடுத்துக் காட்டும்) சான்றுகள் உள்ளன. ( அல்குர்ஆன்: 2: 164 )
இந்த உலகம் சரியாக
இயங்குவதற்கு இரவு பகல்,
நீர் காற்று ஆகியவை மிகவும் முக்கியமானவைகள் என்று
மேற்கூறிய இரண்டு வசனங்களும் சான்றுரைக்கின்றன.
இந்தப் பூமியை
வளிக்கோளம்,
நீர்க்கோளம், நிலக்கோளம் என்று மூன்று
பிரிவுகளாகப் பிரிக்கலாம். 'வளிக்கோளம்' என்பது வாயு நிலையில் உள்ள பொருள். 'நீர்க்கோளம்' என்பது திரவப்பொருள். 'நிலக்கோளம்'
என்பது திடப்பொருள். பொருள்கள் எல்லாவற்றிற்கும் மூன்று
நிலைகள் உள்ளன என்பதை நாள்தோறும் நமக்கு உணர்த்தும் உருமாதிரிகள் இந்த மூன்று
பிரிவுகள் என்றும் கூட சொல்லலாம்.
காற்றுகளின்
சேர்க்கைதான் வளிக்கோளம். காற்றில் ஒரு சில வாயுக்களின் செறிவு நிலை மாறாமல்
இருக்கும். உலகமெங்கும் இவைகளின் அளவு ஒரே விதத்தில் இருக்கும். வளிக்கோளத்தில்
அடங்கியுள்ள காற்றுகள் நைட்ரஜன், ஆக்சிஜன், ஆர்கான்,
கரியமில வாயு, நியான், ஹீலியம்,
கிரிப்டான், செனான், ஹைட்ரஜன்,
நைட்ரஸ் ஆக்சைடு, மீத்தேன் முதலியனவாகும்.
இவற்றில் நைட்ரஜன்
கன அளவில் 78
சதவீதம்; ஆக்சிஜன் 21 சதவீதம். மற்ற காற்றுகள் எல்லாம் சேர்ந்து ஒரு சதவீதம் மட்டுமே உள்ளன. காற்று
மண்டலத்தில் அடங்கியுள்ள முக்கியமான காற்று, நைட்ரஜன். இது எந்தவித வினைச்செயல்களிலும்
ஈடுபடாமல் தனித்து இயங்கக்கூடியது. இதற்கு முக்கியத்துவம் அளிப்பதற்கு ஒரு முக்கிய
காரணம் உண்டு. ஆக்சிஜன் எளிதில் தீப்பற்றக் கூடியது. வெடிக்கக் கூடியது. காற்றில்
நைட்ரஜன் இல்லாவிட்டால்
ஆக்சிஜன் பற்றி எரியத் தொடங்கும். மிகவும் கடுமையாக வெடித்து
பலத்த சேதங்களை ஏற்படுத்தி விடும். ஆக்சிஜனின் அத்தகைய தன்மையை அடக்கி ஒடுக்கி ஒரு
கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது நைட்ரஜன் தான்.
மனிதன், விலங்குகள் சுவாசிப்பது ஆக்சிஜனைத்தான். ஆக்சிஜன் இல்லாவிட்டால் உயிரினங்கள்
இருக்காது. மனிதர்கள் ஆக்சிஜனை சுவாசித்து கரியமில வாயுவை வெளியிடுகிறார்கள்.
இதைத் தாவரங்கள் சுவாசித்து, அதற்குப் பதிலாக ஆக்சிஜனை
வெளியிட்டு காற்று மண்டலத்தில் கலக்கச் செய்கின்றன.
ஒரு மனிதன்
நிமிடத்திற்கு 15
முறை சுவாசத்தை உள்ளிழுத்து வெளியே விடுகிறான். இந்தக்
கணக்கின்படி ஒருநாளைக்கு 21,600
முறை சுவாசிக்கிறான். மனிதன் ஒரு நாளைக்கு 16 கிலோ கிராம் காற்றைச் சுவாசிக்கிறான்.
மனிதன் உணவின்றி 5 வாரம் உயிர் வாழ முடியும். நீரில்லாமல் 5 நாள் உயிர் வாழலாம்.
ஆனால் காற்று இல்லாமல் 5
நிமிடங்கள் கூட தாக்குப் பிடிக்க முடியாது.
எந்தக் காற்றினால்
மனிதனும்,
இந்த உலகமும் உயிரினங்களும் வாழ்கிறதோ அதே காற்றினால்
மனிதனுக்கும் உயிரினங்களுக்கும் இந்த உலகத்திற்கு பேரழிவும் ஆபத்தும்
ஏற்படுவதுண்டு என்பதை அவ்வப்போது
ஏற்படும் புயல், சூறாவளி போன்றவைகள்
நமக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றன.
புயலும் (மழை)
வெள்ளமும் ஏற்பட காரணம் என்ன?
إِنَّ اللَّهَ لَا يَظْلِمُ النَّاسَ شَيْئًا وَلَكِنَّ النَّاسَ
أَنْفُسَهُمْ يَظْلِمُونَ
நிச்சயமாக அல்லாஹ்
மனிதர்களுக்கு எவ்வித அநியாயமும் செய்வதில்லை. எனினும், மனிதர்கள் தமக்குத்தாமே அநியாயம் செய்து கொள்கிறார்கள்.” ( அல்குர்ஆன்: 10:
44 )
ظَهَرَ الْفَسَادُ فِي الْبَرِّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ أَيْدِي
النَّاسِ لِيُذِيقَهُمْ بَعْضَ الَّذِي عَمِلُوا لَعَلَّهُمْ يَرْجِعُونَ
மனிதர்களின் கைகள்
தேடிக்கொண்ட (தீச் செயல்களின்) காரணத்தால் கடலிலும், தரையிலும் (நாசமும்) குழப்பமும் தோன்றின; (தீமைகளிலிருந்து) அவர்கள் திரும்பி விடும் பொருட்டு அவர்கள் செய்தார்களே
(தீவினைகள்) அவற்றில் சிலவற்றை இவ்வுலகிலும் அவர்கள் சுவைக்கும்படி அவன் செய்கிறான்.” ( அல் குர்ஆன்: 30:
41 )
மழைநீரைப் பொறுத்த
வரை நாம் அடிக்கடி சொல்வது போல "வரலாறு காணாத மழை" பெய்யோ பெய் என்று
பெய்த மழை" கொட்டித் தீர்த்த மழை" இப்படி நாம் கூறும் படியான மழை என்று
ஒன்று கிடையாது.
ஏனெனில்,
وَاَنْزَلْنَا
مِنَ السَّمَآءِ مَآءًۢ بِقَدَرٍ فَاَسْكَنّٰهُ فِى الْاَرْضِ وَاِنَّا عَلٰى
ذَهَابٍۢ بِهٖ لَقٰدِرُوْنَ
மேலும், வானத்திலிருந்து நாம் தேவையான அளவில் (மழை) நீரை இறக்கி, அப்பால் அதனைப் பூமியில் தங்க வைக்கிறோம்; நிச்சயமாக அதனைப்
போக்கிவிடவும் நாம் சக்தியுடையோம்.
فَاَنْشَاْنَا
لَـكُمْ بِهٖ جَنّٰتٍ مِّنْ نَّخِيْلٍ وَّ اَعْنَابٍ لَـكُمْ فِيْهَا فَوَاكِهُ
كَثِيْرَةٌ وَّمِنْهَا تَاْكُلُوْنَ
அதனைக் கொண்டு, நாம் உங்களுக்கு பேரீச்சை திராட்சை மற்றும் தோட்டங்களை
உண்டாக்கியிருக்கின்றோம்;
அவற்றில் உங்களுக்கு ஏராளமான கனிவகைகள் இருக்கின்றன; அவற்றிலிருந்து நீங்கள் புசிக்கின்றீர்கள். ( அல்குர்ஆன்: 23: 18, 19 )
எனவே, ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒவ்வொரு பகுதியிலும்
எவ்வளவு நீர் தேவையோ அதற்கேற்பவே மழை நீரை அல்லாஹ் பொழியச் செய்கிறான்.
மழை பொழிந்த
பின்னர் அந்த நீரால் நடைபெறும் பல்வேறு பணிகளையும் குறிப்பிடும் அல்லாஹ் அதனை ஒரு
பகுதியிலேயே தேங்க விட்டு விடாமல் வடியச் செய்து விடுவதாகவும் கூறுகின்றான்.
மழைநீர் எப்படி
ஒவ்வொரு காலகட்டத்திற்கும்,
ஒவ்வொரு இடத்திற்கும் தக்கவாறு தேவையான அளவு அல்லாஹ்
ரப்புல் ஆலமீன் பொழியச் செய்கிறானோ அதைப் போன்றே காற்றையும் வீசச் செய்கிறான்.
ஏனெனில்,
إِنَّا
كُلَّ شَيْءٍ خَلَقْنَاهُ بِقَدَرٍ
அல்லாஹ்
கூறுகின்றான்: ”நிச்சயமாக! நாம் அனைத்துப் பொருட்களையும் ஒரு குறிப்பிட்ட விதி முறையின்படி இயங்குவதாகவே படைத்திருக்கின்றோம்.” ( அல்குர்ஆன்: 54:
49 )
காற்றின் முக்கியத்துவம் அறிவோம்!
நாம் வாழும்
பூமியின் முக்கியமான முக்கியத்துவமான பொருட்கள், காரியங்கள் மீது அல்லாஹ் சத்தியமிட்டுக் கூறும் வசனங்கள் அல்குர்ஆனில் பல்வேறு
இடங்களில் காணப்படுகின்றன.
அவற்றுள் ஓர்
அங்கமாக,
காற்றும் குறிப்பிடப்பட்டு இருப்பதை இங்கு நாம் கவனத்தில்
கொள்ள வேண்டும்.
وَالذّٰرِيٰتِ
ذَرْوًا ۙ فَالْحٰمِلٰتِ وِقْرًا ۙ فَالْجٰرِيٰتِ يُسْرًا ۙ فَالْمُقَسِّمٰتِ
اَمْرًا ۙ اِنَّمَا تُوْعَدُوْنَ لَصَادِقٌ
வேகமாக புழுதியைப்
பரத்துபவை மீதும்,
மழையைச் சுமப்பவற்றின் மீதும், எளிதாகச் செல்பவை மீதும், கட்டளைகளைப் பங்கிடுவோர்
மீதும் சத்தியமாக! நீங்கள் எச்சரிக்கப்படுவது உண்மை. ( அல்குர்ஆன்: 51: 1-5 )
وَالْمُرْسَلٰتِ عُرْفًا ۙ فَالْعٰصِفٰتِ عَصْفًا
ۙوَّالنّٰشِرٰتِ نَشْرًا ۙ فَالْفٰرِقٰتِ فَرْقًا ۙفَالْمُلْقِيٰتِ
ذِكْرًا عُذْرًا اَوْ نُذْرًا
தொடர்ந்து
அனுப்பப்படுபவை மீதும்,
கடுமையாக வீசும் புயல் மீதும் சத்தியமாக! பரப்பிவிடுபவை
மீதும், ஒரேயடியாகப் பிரித்து விடுபவை மீதும் சத்தியமாக! மன்னிப்பாகவோ, எச்சரிக்கையாகவோ படிப்பினையைப் போடுபவற்றின் (காற்றின்) மீது சத்தியமாக! ( அல்குர்ஆன்: 77:
1-6 )
அதே போல் காற்றின்
மூலம் இந்த உலகில் நடைபெறும் பணிகள் குறித்து அல்குர்ஆனின் பல்வேறு இடங்களில்
அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
وَمِنْ
آيَاتِهِ أَنْ يُرْسِلَ الرِّيَاحَ مُبَشِّرَاتٍ وَلِيُذِيقَكُمْ مِنْ رَحْمَتِهِ
وَلِتَجْرِيَ الْفُلْكُ بِأَمْرِهِ وَلِتَبْتَغُوا مِنْ فَضْلِهِ وَلَعَلَّكُمْ
تَشْكُرُونَ
“மேலும், நற்செய்தி கூற்வதற்காக
காற்றை அனுப்புவது அவனுடைய சான்றுகளில் உள்ளதாகும்; எதற்காகவெனில்,
அவனுடைய
அருளிலிருந்து உங்களை சுவைக்கச் செய்வதற்காகவும், மேலும், அவனுடைய கட்டளைப்படி கப்பல்கள் செல்வதற்காகவும், நீங்கள் அவனுடைய அருளை
தேடுவதற்காகவும், அவனுக்கு நீங்கள் நன்றி
செலுத்துவோராய்த் திகழ்வதற்காகவும் தான்!”
وَهُوَ
الَّذِىْ يُرْسِلُ الرِّيٰحَ بُشْرًۢا بَيْنَ يَدَىْ رَحْمَتِهٖ حَتّٰۤى
اِذَاۤ اَقَلَّتْ سَحَابًا ثِقَالًا سُقْنٰهُ لِبَلَدٍ مَّيِّتٍ فَاَنْزَلْنَا
بِهِ الْمَآءَ فَاَخْرَجْنَا بِهٖ مِنْ كُلِّ الثَّمَرٰتِ كَذٰلِكَ نُخْرِجُ
الْمَوْتٰى لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ
தனது அருளுக்கு
முன்னால் நற்செய்தியாக அவனே காற்றை அனுப்புகிறான். அது கனமான மேகத்தைச் சுமக்கும்
போது இறந்து போன ஊருக்கு அதை ஓட்டிச் செல்கிறோம். அதிலிருந்து தண்ணீரை இறக்கி, அதன் மூலம் எல்லாப் பலன்களையும் வெளிப்படுத்துகிறோம். இவ்வாறே இறந்தோரையும்
வெளிப்படுத்துவோம். (இதன் மூலம்) நீங்கள் படிப்பினை பெறக் கூடும். ( அல்குர்ஆன்: 7:
57 )
எனவே, முழுக்க முழுக்க பூமியின் படைப்புகளின் நன்மைகளுக்காக படைக்கப்பட்டிருக்கும்
காற்றும்,
மழைநீரும் ஏன் மனித சமூகத்திற்கும், மற்ற படைப்புகளுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதை நாம் சிந்திக்க
கடமைப்பட்டுள்ளோம்.
இந்தப் பூமியை
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சீராக சரியாக படைத்திருப்பதாக கூறியிருப்பது போலவே இந்தப்
பூமியில் ஏற்படும் சீர்குலைக்கு எது? யார்? எப்போது?
காரணமாக அமைகிறது அமைகிறார்கள் என்பது குறித்தும் அல்லாஹ்
தெளிவாக கூறியுள்ளான்.
ظَهَرَ
الْفَسَادُ فِى الْبَرِّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ اَيْدِى النَّاسِ
لِيُذِيْقَهُمْ بَعْضَ الَّذِىْ عَمِلُوْا لَعَلَّهُمْ يَرْجِعُوْنَ
மனிதர்களில் கைகள்
தேடிக்கொண்ட (தீச் செயல்களின்) காரணத்தால் கடலிலும் தரையிலும் (நாசமும்)
சீர்குலைவும் தோன்றின;
(தீமைகளிலிருந்து) அவர்கள் திரும்பிவிடும் பொருட்டு அவர்கள்
செய்தார்களே (தீவினைகள்) அவற்றில் சிலவற்றை (இவ்வுலகிலும்) அவர்கள் சுவைக்கும்படி
அவன் செய்கிறான்.(
அல்குர்ஆன்: 30: 41 )
இந்த
இறைவசனத்திற்கு விளக்கம் தருகிற அறிஞர் பெருமக்கள் மனித சமூகத்தின் பாவத்தின்
மீதான துணிவும்,
அல்லாஹ்வின் மீது அச்சமில்லாமல் வாழும் நிலையும் தான்
காரணம் என்று சொல்கிறார்கள்.
நாமும் புயல்
மற்றும் மழை வெள்ளம் மற்றும் பேரிடர்கள் ஆகியவை ஏற்படும் போது அந்த பகுதியில்
வாழ்ந்த மக்கள் செய்கின்ற பாவங்களுக்கான தண்டனை தான் இது என்று எளிதாக சொல்லி
கடந்து விட்டு செல்கிறோம்.
ஆனால், இந்த இறைவசனம் இன்னொரு செய்தியையும் குறிப்பிடுவதை நாம் மறந்து விடுகிறோம்.
இந்த வசனத்தில்
"மனிதர்கள் கைகளால் தேடிச் செல்லும் தீய செயல்கள்" என்று கூறப்படுகிறது.
அப்படி என்றால் மனிதர்களின் செயல்பாடுகள், நடைமுறைகள், பண்பாடுகள் ஆகியவைகளும் தீயதாக இருக்கிறது என்றும் பொருள் உண்டு.
இந்த உலகில்
வாழும் போது நம் வசதிகளுக்காக நாம் இயற்கைக்கு முரணாக சில காரியங்களை மிகவும்
துணிவோடு மேற்கொள்கிறோம். அதன் விளைவையே இன்று "வெள்ளம் புயல், நில நடுக்கம்,
நிலச்சரிவு, சுனாமி" போன்ற
பேரிடர்களை
அனுபவித்து வருகிறோம்.
நீர் நிலைகள் மீதான ஆக்கிரமிப்புகள்!
நீர் நிலைகள்
என்பது மழை நீரை தேக்கி வைப்பதற்கும் (குளம், குட்டை, ஏரி) எஞ்சிய,
மிதமிஞ்சிய நீரை வடிகால் மூலமாக கடலில் சென்று கலக்கும்
அளவில் அமைக்கப்பட்டதாகும். சில போது இயற்கையாகவும், சில போது மேன்மக்களான முன்னோர்களாலும் அமைக்கப்பட்டதாகும்
சென்னை, திருவள்ளூர்,
காஞ்சிபுரம், செங்கல்பட்டு
மாவட்டங்களைப் பொறுத்தவரை மட்டுமல்ல, தமிழகம் உள்பட இந்திய
தேசம் முழுவதும் நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு குடிசைகள் முதல் வானளாவிய
கட்டடங்கள் வரை கட்டப்பட்டு நீரின் வழித்தடம் கடுமையான முறையில்
சூறையாடப்பட்டுள்ளன.
வியப்பின் விளிம்புக்கே அழைத்துச் செல்லும் புள்ளி விவரங்கள்!
பிப்ரவரி 2023இல் மத்திய நீர்வள அமைச்சகத்தால் முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ள நீர்நிலைகள்
பற்றிய முதல் மொத்தக் கணக்கெடுப்பு (First Census on Water Bodies), இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் உள்ளதாகத்
தெரிவிக்கிறது. குறிப்பாக,
தனிநபர் சராசரி நீர் அளவின்படி தண்ணீா்ப் பஞ்சம் மிகவும்
அதிகமாக உள்ள தமிழ்நாட்டில், நீர்நிலைகள் மிகவும்
அதிமாக ஆக்கிரமிக் கப்பட்டுள்ளன.
கணக்கெடுப்பின்
முடிவுகள்: இதுவரை எந்த ஆதாரங்களிலிருந்தும் கிடைக்காத பல முக்கியத் தரவுகளை
நீர்நிலைகளின் முதல் மொத்தக் கணக்கெடுப்பு முதன் முதலாக
வெளிக்கொண்டுவந்திருக்கிறது. இந்தியாவில் மொத்தம் 24,24,540 நீர்நிலைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை குட்டைகள் (59.5%). இவற்றைத்தவிர,
குளங்கள் (15.7%), அணைகள் (12.1%),
மீதமுள்ள 12.7% மற்ற நீர் ஆதாரங்கள் என
இக்கணக்கெடுப்பில் தெரியவந்திருக்கிறது.
எதிர்பார்த்தபடி, கணக்கிடப் பட்டுள்ள மொத்த நீர்நிலைகளில், 97.1% கிராமப்புறங் களிலும் மீதமுள்ள 2.9% நகர்ப்புறங்களிலும்
அமைந் துள்ளன. மொத்த நீர்நிலைகளில் 83.7% பயன்பாட்டில்
இருக்கின்றன. மீதமுள்ள 16.3%
(3,94,500) நீர்நிலைகள் வறட்சி, கட்டுமானம், வண்டல் மண் படிதல்,
பழுது பார்ப்பு, உப்புத்தன்மை, தொழிற்சாலைக் கழிவுகள் கலந்திருப்பது போன்ற காரணங்களால் பயன்பாட்டில் இல்லை.
நீர்நிலைகளின்
உரிமையைப் பொறுத்தவரை,
55.2% தனியாருக்குச் சொந்தமானவை என்றும், மீதமுள்ள 44.8%
பொதுத் துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும்
கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
பெரும்பாலான
நீர்நிலைகள் (78%)
மனிதர்களால் உருவாக்கப் பட்டவை. 22% மட்டுமே இயற்கையாக உருவானவை. பெரும்பாலான நீர்நிலைகள் மண்ணால் ஆனவை. இதன்
கட்டுமானச் செலவு ரூ.1,00,000க்கும் குறைவாக இருக்கக் கூடும் என்கிறது இந்தக் கணக்கெடுப்பு. கிட்டத்தட்ட
பாதி நீர்நிலைகளின் நீர் சேமிப்புத் திறன் 1,000 முதல் 10,000 கன மீட்டர்கள் வரை உள்ளது.
ஆக்கிரமிப்பு நிலை:
நீர்நிலைகளின்
முதல் மொத்தக் கணக்கெடுப்பின் முக்கியமான முடிவுகளில் ஒன்று, வெவ்வேறு மாநிலங்களில் எந்த அளவுக்கு நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு
செய்யப்பட்டுள்ளன என்பதைப் பற்றியதாகும்.
அரசால்
அமைக்கப்பட்ட பல்வேறு குழுக்கள் - ஆராய்ச்சியாளர்கள் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பின்
தீவிரத்தைத் தொடர்ச்சியாகப் பதிவுசெய்து வந்தாலும், எந்த ஓர் அரசுத் துறையும் ஆக்கிரமிப்பின் அளவு குறித்த தரவுகளை இதுவரை
வெளியிடவில்லை. நம் நாட்டில் பல்வேறு பகுதிகளில் மொத்தமாக 38,496 நீர்நிலைகள் (பெரும்பாலும் குளங்கள், குட்டைகள்) ஆக்கிரமிப்பு
செய்யப்பட்டுள்ளதாக இக்கணக்கெடுப்பின் தரவுகள் காட்டுகின்றன.
ஆக்கிரமிக்கப்பட்டுள்ள
நீர்நிலைகளில்,
சுமார் 93% சிறிய நீர்நிலைகள்
(குளங்கள்,
குட்டைகள், ஏரிகள்) என்பதால், இவை எங்கு அமைந்துள்ளன என்பதைப் புரிந்துகொள்வது முக்கியமானது. மொத்த
எண்ணிக்கையின் அடிப்படையில், ஆக்கிரமிப்பு மிக
அதிகமாகக் கண்டறியப்பட்ட முதல் ஐந்து மாநிலங்கள் உத்தரப் பிரதேசம் (15,213), தமிழ்நாடு (7,828),
தெலங்கானா (2,748), ஆந்திரப் பிரதேசம் (2,733),
மத்தியப் பிரதேசம் (1,765).
இதில் கவனிக்கப்பட
வேண்டிய விஷயம்,
ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், தமிழ்நாடு,
தெலங்கானா ஆகிய நான்கு தென் மாநிலங்களின் பங்கு, இந்தியாவில் மொத்தமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நீர்நிலைகளில் சுமார் 40% (14,219) ஆகும். நீர்நிலைகள் ஆக்கிரமிப்பில் தமிழ்நாட்டின் பங்கு மட்டும் ஏறக்குறைய 22%. இவை என்ன சொல்கின்றன?
பல நூற்றாண்டுகளாகச் சிறிய நீர்நிலைகள், தென் மாநிலங்களில் மிக அதிகமாக ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன.
விளைவுகள்:
நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு பல்வேறு விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்துகிறது.
நீர்நிலைகளின் நீர்பரப்புப் பகுதியில் (water spread area) பெருமளவில் ஆக்கிரமிப்பு நடப்பதால், நீர்க் கொள்ளளவுத் திறன்
குறைந்து பாசனப் பரப்பளவைக் குறைத்துவிடுகிறது. பல்வேறு மாநிலங்களில் குளங்கள்
மூலம் பாசனம் பெறும் பரப்பளவு பற்றிய தரவுகள் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு எந்த
அளவுக்குத் தீங்கு விளைவிக்கும் என்பதை உறுதிப்படுத்துகின்றன.
உதாரணமாக, மொத்த மழையளவில் பெரிய மாற்றங்கள் இல்லாதபோதும், இந்தியாவில் குளங்கள் வழி பாசனப் பரப்பளவு 1960-61 இல் 46.30
லட்சம் ஹெக்டேரிலிருந்து 2019-20 இல் 16.68
லட்சம் ஹெக்டேர்களாகக் குறைந்துள்ளது.
இதேபோல், ஆக்கிரமிப்பு மட்டத்தில் இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தில் உள்ள தமிழ்நாட்டில், குளங்கள் மூலம் கிடைக்கும் பாசனப் பரப்பளவு 9.36 லட்சம் ஹெக்டேரிலிருந்து 3.72 லட்சம் ஹெக்டேர்களாகக்
குறைந்துள்ளது. ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், தெலங்கானா போன்ற பிற தென்னிந்திய மாநிலங்களிலும் இதேபோன்று குளங்களின்
நீர்ப்பாசனப் பரப்பளவு தொடர்ந்து குறைந்துவருகிறது.
அரசுகளின்
பொறுப்பு: ஆக்கிரமிப்பால் நீர்நிலைகளில் நீர்க் கொள்ளளவு குறைவதால் பாசனப்
பகுதியில் அமைந்துள்ள கிணறுகளின் நீர் சுரக்கும் (recharging of wells) திறனும் குறைகிறது. மத்திய அரசு வெளியிட்டுள்ள பல்வேறு சிறிய நீர்நிலைகளின்
நீர்ப்பாசனக் கணக்கெடுப்புகளில் இருந்து (Minor Irrigation Census) கிடைக்கும் தரவுகள்,
ஆக்கிரமிப்பு காரணமாகச்செயலிழந்த கிணறுகளின் எண்ணிக்கை
அதிகரித்துள்ளதைக் காட்டுகின்றன. நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு காரணமாக மழைக்
காலங்களில் ஏற்படும் வெள்ளச் சேதம் அதிகரித்துவருவதையும் சமீபத்திய அனுபவங்கள்
கூறுகின்றன.
எனவே, நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை எவ்விதச் சமரசமும் இன்றி அகற்ற மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீர்நிலைகளில்
ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதைக் கருத்தில்கொண்டு, செப்டம்பர் 6,
2014 அன்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, நீர்நிலைகளில் அமைந்துள்ள நிலங்களில் தளவமைப்பு (layout), கட்டிடத் திட்டத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது எனத் தீர்ப்பளித்தது.
இத்தீர்ப்பை
மதித்து,
மாநில அரசுகள் முழு அக்கறையோடு அதனைச் செயல்படுத்த
வேண்டும். அதிர்ச்சியூட்டும் வகையில், மொத்தம் 10,95,913 நீர்நிலைகளில் நீண்ட காலமாக எந்தச் சீரமைப்பு வேலைகளும் செய்யப்படவில்லை என
நீர்நிலைகளின் கணக்கெடுப்புத் தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்தச் சூழலில், நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீரின் கொள்ளளவுத் திறனை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்காவிட்டால், வருங்காலத்தில் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் தண்ணீர்ப் பஞ்சம் மேலும்
அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. ( நன்றி: தமிழ் திசை
இந்து,
02/08/ 2023 )
நாடு முழுவதிலும்
உள்ள நீர்நிலைகளின் எண்ணிக்கை குறித்த மாநில வாரியான தரவுகள், சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் எவ்வளவு நீர்நிலைகள் குறைந்துள்ளன, கடந்த 3
ஆண்டுகளாக மாநில வாரியாக நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பாக
பதிவான வழக்குகளின் எண்ணிக்கை, மீட்கப்பட்ட
நீர்நிலைகளின் எண்ணிக்கை என நீர்நிலைகள் தொடர்பான தகவல்களை வேண்டி காங்கிரஸ்
கட்சியின் எம்.பி சம்ஷர் சிங் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு மார்ச் 14-ம் தேதி ஒன்றிய ஜல்சக்தித்துறை இணை அமைச்சர் பிஸ்வேஷ்வர் தூடு ராஜ்யசபாவில்
அளித்த பதிலில்,
22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அடையாளம்
காணப்பட்ட 9.45
லட்சம் நீர்நிலைகளில் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரிய
வந்துள்ளது
அவற்றில், 18,691 நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன ” என மாநிலவாரியான தகவலை அளித்து இருக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள 1,06,957 நீர்நிலைகளில் 8,366
நீர்நிலைகள் ஆக்கிரமிப்பில் உள்ளன. ( நன்றி: யூடர்ன்.இன் 15/03/2022 )
நீதிமன்றங்களும்.... சட்டங்களும்...
தமிழகத்தில் உள்ள
அனைத்து நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், நீர் நிலைகளைப் பாதுகாக்கவும் உத்தரவிடக்கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்ற கிளையில் பொதுநலன் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை
விசாரித்த உயர் நீதிமன்றம்,
நீர் நிலைகளில் கட்டப்படும் கட்டிடங்களைப் பதிவு
செய்யக்கூடாது. நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள எந்தவிதமான
கட்டிடங்களுக்கும் மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு
வழங்கக்கூடாது. சொத்து வரி உள்ளிட்ட எந்த வரியும் வசூலிக்கக்கூடாது.
நீர்நிலை
ஆக்கிரமிப்பாளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கக்கூடாது என 28.1.2019-ல் உத்தரவிட்டனர். ( நன்றி: தமிழ் திசை இந்து 20/02/2020 )
நீர்நிலை
ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கில், தமிழகத்தில்
நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஏன் தனிக்குழு அமைக்கக் கூடாது என மதுரை உயர்
நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த வழக்கில், நீர்நிலைகளைக் காக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில், வருங்கால தலைமுறையினர் அல்லல்படுவர் எனக் கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், தமிழகத்தில் 1980
ஆம் ஆண்டு ஆறு, குளம், ஏரி உள்ளிட்ட எத்தனை நீர் நிலைகள் இருந்தன. நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தொடர்பாக
எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்.
நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஏன் தனிக்குழு அல்லது ஒரு அமைப்பை உருவாக்கக்
கூடாது எனக் கேள்வி எழுப்பி அரசுத் தரப்பில் பதிலளிக்க 06/11/2020 அன்று உத்தரவிட்டது. ( நன்றி: நக்கீரன், 06/11/2020 )
நீர்நிலைகளில்
மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கூறிய நீதிமன்ற உத்தரவை 10 நாள் களுக்குள் அமல்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின்
நீர்நிலைகள் மற்றும் மழைநீர் வடிகால்களில் ஆக்கிரமிப்புகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளதால் பெரும் இடர்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்கிற
செய்தியின் அடிப்படையில்,
சென்னை உயர் நீதிமன்றமே தானாக முன் வந்து இந்த வழக்கை
விசாரித்தது. நீர்நிலைகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஆக்கிரமிப்புகளைக்
கண்டறிந்து,
அவற்றை அகற்றிவிட்டு அது குறித்த அறிக்கையை தாக்கல்
செய்யக்கூறி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டிருந்தது.
அவ்வழக்கின்
விசாரணை கடந்த 2022
ஜூலை 31-ம் தேதி மீண்டும் நடந்த
நிலையில் அறிக்கை தாக்கல் செய்ய அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. அதைக்
கண்டித்த நீதிபதிகள் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு 25,000 ரூபாய் அபராதம் விதித்திருக்கிறது.
இன்னும் பத்து
நாள்களில் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என்றால் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராக
வேண்டுமென்று தெரிவித்திருக்கிறது.
(
நன்றி: விகடன், 02/08/2022 )
2021 செப்டம்பர் மாதம்
சென்னை உயர்நீதிமன்றம்,
” தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளிலும் உள்ள
ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். சென்னையில் மட்டும் 950 நீர் நிலைகள் காணாமல் போய் உள்ளன, அவை ஆக்கிரமிக்கப்பட்டு
கட்டிடங்களாக மாறியுள்ளன. எனவே, நீர்நிலைகள், வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை தமிழக அரசு அகற்ற வேண்டும் ” என உத்தரவிட்டு இருந்தது
( நன்றி: யூடர்ன்.இன் 15/03/2022 )
எப்படி நடவடிக்கை எடுப்பார்கள்?
அரசுக் கட்டடங்களே
பலவும் நீர்நிலைகளை ஆக்கிரமித்துதான் கட்டப்பட்டிருக்கின்றன.
செம்மஞ்சேரி காவல் நிலையமே
நீர்நிலையில் தான் கட்டப்பட்டிருக்கிறது என
ஐ.ஐ.டி அறிக்கை கொடுத்திருக்கிறது. தனியார் நிறுவனங்களின் கட்டடங்கள், தொழிற்சாலைகள் எனப் பலவும் நீர்நிலைகளில் கட்டப்பட்டிருக்கின்றன. அவற்றுக்குப்
பட்டாவும் வழங்கப்பட்டிருக்கின்றன.
சட்ட ரீதியில் மேற்கொண்டாலும் ஆக்கிரமிப்பு என்பது
ஆக்கிரமிப்புதான்.
நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டதன் காரணமான விளைவை 2015 மற்றும் 2023
தற்போதும் சென்னை பெருவெள்ளத்தில் சந்தித்துள்ளது. ( நன்றி: விகடன்,
02/08/2022 )
நீர் நிலைகள் ஆக்கிரமிப்புக்கு எதிராக தனிச்சட்டம்!
தமிழ்நாடு சட்டப்பேரவையின் பின்வரும் சட்டமானது,
2007 ஆம் ஆண்டு மே திங்கள் 22ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது. பொதுப்பணித்
துறையின் கட்டுப்பாடு மற்றும் மேலாண்மையின் கீழ் உள்ள ஏரிகளில் உள்ள
ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்துவதற்காகவும், ஆக்கிரமிப்பை அகற்றுவதற்காகவும், இத்தகைய ஏரிகளைப் பாதுகாப்பதற்கும் அதற்கு இடைவிளைவான பொருட்பாடுகளுக்குமான நடவடிக்கைகளுக்கு வகை செய்வதற்கானதொரு சட்டம்.இந்தியக் குடியரசின் ஐம்பத்து எட்டாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப் பேரவையால் பின்வருமாறுசட்டம் இயற்றப்படுவதாகுக:தமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 (Tamilnadu
protection of Tanks and Eviction of Encroachment Act,2007) (சட்ட எண் - 8/2007)
நீர் நிலைகள் உருவானது எப்படி?
சென்னையின்
குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கிட்டத்தட்ட 235 கிமீ
தூரத்திலிருக்கும் ஒரு ஏரியில் இருந்து நீர் எடுத்துச் வரப்படுகிறது. இந்த ஏரி
தமிழகத்தின் மற்ற ஏரிகளைப் போலில்லை.
இதற்கு பின் ஒரு
வரலாறே இருக்கிறது. வாருங்கள் வீராணம் எனும் வீர நாராயண ஏரியைப் பற்றி தெரிந்து
கொள்வோம்.
பராந்தகன்
காலத்தில்,
வடக்கே ரெட்டை மண்டலத்து ராஷ்டிரக்கூட மன்னர்கள் வலிமை
பெற்று வந்தனர். அவர்கள் அவ்வப்போது போரிட்டு பல நாடுகளை வென்றிருந்தனர். இதனால்
தென்னாட்டை நோக்கி அவர்கள் படையெடுத்து வரக்கூடும் என்று கணித்திருந்த பராந்தகன்
தன் மூத்த மகனாகிய ராஜாதித்தனை ஒரு பெரும்படையுடன் திருமுனைப் பாடி நாட்டுக்கு
செல்ல பணித்தார். அது நடுநாடு, தென்னார்க்காடு நாடு என
அழைக்கப்பட்டது.
இந்த படை வடக்கு
நாட்டின் படையை எதிர்கொள்ள ஆயத்தமாக இருந்த காத்திருப்பு காலத்தில்
ராஜாதித்யனுக்கு ஒரு யோசனை.
இந்த படையில்
இருக்கும் லட்சக்கணக்கான வீரர்கள் சும்மா இருந்த நேரத்தில் பயனுள்ளதாக ஏதும்
செய்யலாமே என்று எண்ணிய அரசர், பெரும் அணை ஒன்றைக் கட்ட
முடிவெடுத்தார். அந்த ஏரிக்கு தன் தந்தையின் பெயரையே வீர நாராயண ஏரி என வைத்தார்.
9ம் நூற்றாண்டில்
கட்டப்பட்ட இந்த ஏரியானது,
16 கிமீ நீளமாகும். 4 கிமீ அகலம் கொண்டது இந்த
ஏரி. இது கிண்டியிலிருந்து அண்ணாநகர் வரையிலான நீளம் என்பது குறிப்பிடத் தக்கது.
ஆரம்ப காலத்தில் 74 மதகுகளும் வாய்க்கால்களும் இருந்தன. இப்போது 28 வாய்க்கால்கள் மட்டுமே உள்ளன. 1445 கன அடி நீரை
தேக்கி வைக்கும் திறன் கொண்டது இந்த ஏரி. ஆனால் இப்போது 935 கன அடி நீரையே தேக்கி வைக்க முடிகிறது.
1011ம் ஆண்டு
கட்டத்தொடங்கி,
1037ம் ஆண்டு வெட்டி முடிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. ( நன்றி:
தமிழ் . நேட்டிவ் பிளானட்.காம், 25/10/2018 )
நீர் நிலைகள் இல்லாது பூமி இல்லை..
ஒரு தேசமாகட்டும்
ஒரு மாநிலமாகட்டும் ஒரு நகரமாகட்டும் ஒரு ஊராகட்டும் ஒரு கிராமமாகட்டும் அது
மக்கள் வசிப்பதற்கு ஏற்ற இடமாக, நல்ல வாழ்விடமாக நிம்மதி
தரும் இடமாக இருக்க வேண்டுமானால் அது நீர் நிலைகள் சூழ்ந்த, வேளாண் நிலங்கள் அடர்த்தியாக கொண்ட, கனி வர்க்கங்கள் தாராளமாக
கிடைக்கும் இடமாக இருக்க வேண்டும். இருக்கும் என்று அல்குர்ஆன் அடையாளப்
படுத்துகின்றது.
அல்லாஹ் ஸபா எனும் சமூகத்தார்
வசித்த பகுதியைப் பற்றி அடையா
لَقَدْ كَانَ لِسَبَإٍ فِي مَسْكَنِهِمْ آيَةٌ
جَنَّتَانِ عَنْ يَمِينٍ وَشِمَالٍ كُلُوا مِنْ رِزْقِ رَبِّكُمْ وَاشْكُرُوا لَهُ
بَلْدَةٌ طَيِّبَةٌ وَرَبٌّ غَفُورٌ
“ஸபா சமூகத்திற்கு அவர்கள் வசி
இப்ராஹீம் (அலை) அவர்கள் கஅபாவை கட்டி முடித்ததும்
அல்லாஹ்விடம் கேட்ட பிரார்த்தனையில் மக்காவை நிம்மதி நிறைந்த வாழ்விடமாக்குமாறு
கேட்கும் போது அங்கு வசிக்கும் மக்களுக்கு கனி வர்க்கங்கள் தாராளமாய் கிடைக்க
வேண்டும் என்று குறிப்பிட்டதை குர்ஆன் சுட்டிக் காட்டுகிறது.
وَاِذْ قَالَ اِبْرٰهٖمُ رَبِّ اجْعَلْ هٰذَا بَلَدًا
اٰمِنًا وَّارْزُقْ اَهْلَهٗ مِنَ الثَّمَرٰتِ مَنْ اٰمَنَ مِنْهُمْ بِاللّٰهِ
وَالْيَوْمِ الْاٰخِرِ قَالَ وَمَنْ كَفَرَ فَاُمَتِّعُهٗ قَلِيْلًا ثُمَّ
اَضْطَرُّهٗۤ اِلٰى عَذَابِ النَّارِؕ وَبِئْسَ الْمَصِيْرُ
(இன்னும் நினைவு கூறுங்கள்:) இப்ராஹீம்: “இறைவா! இந்தப்
பட்டணத்தைப் பாதுகாப்பான இடமாக ஆக்கி வைப்பாயாக! இதில் வசிப்போரில் யார்
அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறார்களோ அவர்களுக்குப் பல வகைக்
கனிவர்க்கங்களையும் கொண்டு உணவளிப்பாயாக” என்று கூறினார்; அதற்கு இறைவன் கூறினான்: “(ஆம்;) யார் நம்பிக்கை கொள்ளவில்லையோ அவனுக்கும் சிறிது காலம் சுகானுபவத்தை அளிப்பேன்; பின்னர் அவனை நரக நெருப்பின் வேதனையில் நிர்பந்திப்பேன் - அவன் சேரும் இடம்
மிகவும் கெட்டதே.”
( அல்குர்ஆன்: 2: 126 )
வளமான ஒரு ஊருக்கும் வளமற்ற வறட்சியான ஊருக்கும் இடையேயான
வித்தியாசத்தை வேளாண்மையோடு இறைவன் இணைத்துக் கூறுவதை நாம் அவதானிக்க முடிகிறது.
وَالْبَلَدُ الطَّيِّبُ يَخْرُجُ نَبَاتُهٗ بِاِذْنِ
رَبِّهٖ وَالَّذِىْ خَبُثَ لَا يَخْرُجُ اِلَّا نَكِدًا كَذٰلِكَ نُصَرِّفُ
الْاٰيٰتِ لِقَوْمٍ يَّشْكُرُوْنَ
(ஒரே விதமான மழையைக் கொண்டே) வளமான பூமி (ஊர்) தன் இறைவன் கட்டளையைக் கொண்டு
(செழுமையாகப்) பயிர் (பச்சை)களை வெளிப்படுத்துகிறது; ஆனால் கெட்ட நிலம் (ஊர்) சொற்பமான விளைச்சலையே வெளிப்படுத்துகிறது; நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறே நாம் வசனங்களை விவரிக்கின்றோம். ( அல்குர்ஆன்: 7:
58 )
நீரின்றி அமையாது உயிரினங்கள்...
உயிரினங்களுக்கு தண்ணீர் மிகவும் முக்கியமானது என்பது
மட்டுமல்ல;
தண்ணீர் இல்லாவிட்டால் இந்த பூமியில் உயிரினங்களே தோன்றி
இருக்க முடியாது.
ஒவ்வொரு உயிரினமும் நீரால் படைக்கப்பட்டுள்ளது என்பதைத்
திருக்குர்ஆன் தெளிவுபடுத்துகிறது:
‘‘நிச்சயமாக வானங்களும்
பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே
பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும்
நாம் தண்ணீரில் இருந்து படைத்தோம் என்பதையும் நிராகரிப்பாளர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லையா?’’ ( அல்குர்ஆன்: 21:
30 ).
விலங்குகளை நீரில்
இருந்து படைத்ததாக இன்னொரு வசனம் பறைசாற்றுகிறது:
‘‘எல்லா உயிரினங்களையும் அல்லாஹ் நீரில் இருந்து படைத்துள்ளான். அவற்றில் தன்
வயிற்றின் மீது நடப்பவையும் உண்டு. அவற்றில் இரு கால்களால் நடப்பவையும் உண்டு.
அவற்றில் நான்கு (கால்)களைக் கொண்டும் நடப்பவையும் உண்டு. தான் நாடியதை அல்லாஹ்
படைக்கிறான்’’
(24:45).
பெரும்பாலான உயிரினங்கள் 50 சதவீதம் முதல் 90
சதவீதம் வரை தண்ணீரையே அடிப்படையாகக் கொண்டுள்ளன என்பது
அறிவியல் அறிவிக்கும் உண்மையாகும்.
நீர் நிலைகளை கட்டமைப்பது...
மனிதன் இறந்த பிறகு அவனுக்கு நி
أنس بن مالك رضي الله عنه أن النبي صلى الله عليه
وسلم قال
(( سبع يجري للعبد أجرهن وهو في
قبره بعد موته :من عَلّم علماً, أو أجرى نهراً , أو حفر بئراً , أو غرس نخلاً , أو
بنى مسجداً , أو ورّث مصحفاً , أو ترك ولداً يستغفر له بعد موته ))
حسنه الألباني رحمه الله في صحيح الجامع برقم :3596].
அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு
இதில் கிட்டத்தட்ட 4 அம்சங்களை
பிராதான மூன்று விஷயங்கள் மரம்
எனவே, நீர் என்பது மனிதனும், விலங்குகளும், உயிரினங்களும்,
இந்த உலகும் இயங்குவதற்கு இன்றியமையாத ஒன்றாகும். அந்த நீர் முழுமையாக கிடைக்க
நீர் நிலைகள் இருக்க வேண்டும், நீர் நிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும், நீர் நிலைகள்
இனிமேல் ஆக்கிரமிப்புச் செய்யப்படுவது தடுக்கப்பட வேண்டும், ஏற்கனவே
செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும்.
அல்லாஹ் பேரிடர்கள், புயல், மழை, வெள்ளம் போன்றவற்றில்
இருந்து உங்களையும், என்னையும், தமிழக, இந்திய மக்களையும், ஒட்டு மொத்த
சமூகத்தையும் காத்தருள்வானாக! வெள்ளப்பாதிப்பைச் சந்தித்துள்ள மக்களை எல்லா வகையான
ஆபத்துகளில் இருந்தும் பாதுகாப்பானாக! வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு
அடைக்கலம் தந்து ஆதரவளித்த, உணவு வழங்கி பசி தீர்த்த, அத்தியாவசியப் பொருட்கள்
வழங்கி அரவணைத்த அதற்கு தூண்டுகோலாய், உதவியாய் இருந்து மனித நேயப் பணிகளில் பங்கு
கொண்ட அனைவருக்கும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஈருலகத்தின் அனைத்து ஃகைர்
பரக்காத்துகளையும் வழங்கியருள்வானாக! ஆமீன்! ஆமீன்!ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!
வஸ்ஸலாம்!!!
,உலகிலுள்ள எல்லாப் பொருளின் வித்தையும் ஒரு பாட்டிலில் போட்டு எனக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
ReplyDeleteஎன்று கடிதத்தை எழுதி அமீர் முஆவியா ரலியுல்லாஹூ அன்ஹூ அவர்கள், அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ரலியுல்லாஹூ அன்ஹூ அவர்களுக்கு அனுப்பினார்கள்....!!!
ஹள்ரத் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு பாட்டிலில் நீரை நிரப்பி “இது தான் எல்லா பொருளின் மூல வித்து” என பதிலளித்தார்கள்...!!!!
ஏனெனில் அல்லாஹ் தன் மறையில் وَجَعَلْنَا مِنَ الْمَاءِ كُلَّ شَيْءٍ حَيٍّ "நீரிலிருந்து தான் உயிருள்ள ஒவ்வொரு வஸ்துவையும் நாம் ஆக்கினோம்". [அல்குர்ஆன் :21 ;30] எனக் கூறுகிறான்...!!!!