மறந்து விடுவது நன்றன்று!!!
இந்த உலகில் நாம்
மறந்து விடுகிற பல விஷயங்கள் இருக்கின்றன.
மறதியை
அருட்கொடையாக கொண்டாடுபவர்களும் நம்மில் உண்டு. மறதியை
பெரும் அவஸ்தையாக கருதுபவர்களும் நம்மில் உண்டு.
மறதியை நோய்
என்றும்,
அது பரம்பரை வழியாக வரும் ஒரு பாதிப்பு என்றும், உடலில் ஏற்படும் சில மாற்றங்களால் உருவாகும் இயற்கையான, மனிதனுக்கு மட்டுமே உண்டான ஒரு நிகழ்வு என்றும் அறிவியல் ஆய்வுகள்
தெரிவிக்கின்றன.
ஆனாலும் இந்த
உலகில் வாழும் காலத்தில் இறைநம்பிக்கையாளர்களாக வாழும் நாம் சிலரை எப்போதும்
மறந்து விடாமல் நினைவில் நிறுத்தி வாழ்வதற்கு கடமைப்பட்டுள்ளோம்.
நாம் அந்த சிலரை
மறந்து வாழும் போது நமக்கு ஏற்படும் பாதிப்புகளும், விளைவுகளும் பாரதூரமான ஒன்றாகும்.
1. ஒரு போதும் அல்லாஹ்வை மறந்து விடக்கூடாது.
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் அல்குர்ஆனில் சிலரைப் போல் ஆகிவிட வேண்டாம் என்று எச்சரிக்கை செய்கின்றான்.
அந்த சிலரில் ஒரு
சாரார் அல்லாஹ்வை மறந்தவர்கள் ஆவர். அவர்களை அல்லாஹ் பெரும்பாவிகள் என்று
அடையாளப்படுத்துகின்றான்.
وَلَا
تَكُوْنُوْا كَالَّذِيْنَ نَسُوا اللّٰهَ فَاَنْسٰٮهُمْ اَنْفُسَهُمْ اُولٰٓٮِٕكَ
هُمُ الْفٰسِقُوْنَ
அன்றியும், அல்லாஹ்வை மறந்து விட்டவர்கள் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்; ஏனெனில் அவர்கள் தங்களையே மறக்கும்படி (அல்லாஹ்) செய்து விட்டான்; அத்தகையோர் தாம் ஃபாஸிக்குகள் - பெரும் பாவிகள் ஆவார்கள். ( அல்குர்ஆன்: 59: 19 )
பெரும்
பாவிகளுக்கு ஹிதாயத்தில் - நேர்வழியில் நீடித்திருக்கும் பாக்கியம் கிடையாது என்று
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அல்குர்ஆனில் பல இடங்களில் சுட்டிக் காட்டுகின்றான்.
وَاللّٰهُ
لَا يَهْدِى الْقَوْمَ الْفٰسِقِيْنَ
அன்றியும் -
ஃபாஸிக்குகளான - பாவம் செய்வோரான சமூகத்தாரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்தமாட்டான். ( அல்குர்ஆன்: 61:
5 )
கடினமான
நேரங்களில் இரு கரம் ஏந்தி இறைவனிடம் உதவி கேட்கும் பெரும்பாலான மனிதர்கள், உதவி கிடைத்தவுடனோ அல்லது மகிழ்ச்சியான தருணங்களிலோ இறைவனை மறந்து விடுவதுடன்
இறைவனை விட்டும் தூரமாகி விடுகின்றனர்.
அல்லாஹ்வை மறந்து
வாழ்பவர்களை அல்லாஹ் மூன்று வகையானவர்களாக அடையாளப் படுத்துகின்றான்.
1. காரியம் முடிந்ததும் காணாது போவார்கள்.
وَاِذَا
مَسَّ الْاِنْسَانَ الضُّرُّ دَعَانَا لِجَنْۢبِهٖۤ اَوْ قَاعِدًا اَوْ قَآٮِٕمًا
فَلَمَّا كَشَفْنَا عَنْهُ ضُرَّهٗ مَرَّ كَاَنْ لَّمْ يَدْعُنَاۤ اِلٰى ضُرٍّ
مَّسَّهٗ كَذٰلِكَ زُيِّنَ لِلْمُسْرِفِيْنَ مَا كَانُوْا يَعْمَلُوْنَ
மனிதனை (ஏதேனும்
ஒரு) துன்பம் தீண்டுமானால் அவன் (ஒருச்சாய்ந்து) படுத்துக்கொண்டோ, அல்லது உட்கார்ந்து கொண்டோ, அல்லது நின்ற நிலையிலோ
(அதை நீக்குமாறு) நம்மிடமே பிரார்த்திக்கின்றான், ஆனால் நாம் அவனை விட்டும் அவனுடைய துன்பத்தை நீக்கி விடுவோமானால், அவன் தனக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்குவதற்கு அவன் நம்மை அழைக்காதது போலவே
(அலட்சியமாகச்) சென்று விடுகிறான். வரம்பு மீறுபவர்களுக்கு அவர்களுடைய செயல்கள்
(இவ்வாறு) அழகாக்கப்பட்டு விடுகின்றன. ( அல்குர்ஆன்: 10: 12 )
2. கஷ்டம் வந்தால் ஓடி விடுவார்கள்...
وَمِنَ
النَّاسِ مَنْ يَّعْبُدُ اللّٰهَ عَلٰى حَرْفٍ فَاِنْ اَصَابَهٗ خَيْرٌ
اۨطْمَاَنَّ بِهٖ وَاِنْ اَصَابَتْهُ فِتْنَةُ اۨنْقَلَبَ عَلٰى وَجْهِهٖ خَسِرَ
الدُّنْيَا وَالْاٰخِرَةَ ذٰ لِكَ هُوَ الْخُسْرَانُ الْمُبِيْنُ
இன்னும்: மனிதர்களில்
(ஓர் உறுதியும் இல்லாமல்) ஓரத்தில் நின்று கொண்டு அல்லாஹ்வை வணங்குகிறவனும்
இருக்கிறான் - அவனுக்கு ஒரு நன்மை ஏற்படுமாயின் அதைக் கொண்டு அவன் திருப்தியடைந்து
கொள்கிறான்;
ஆனால் அவனுக்கு ஒரு சோதனை ஏற்படுமாயின், அவன் (தன் முகத்தை) அல்லாஹ்வை விட்டும் திருப்பிக் கொள்கிறான்; இத்தகையவன் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைகிறான் -இதுதான் தெளிவான
நஷ்டமாகும். ( அல்குர்ஆன்: 22: 11 )
3. சோதனை வந்தால் தூற்றுவார்கள்.
فَأَمَّا
ٱلْإِنسَٰنُ إِذَا مَا ٱبْتَلَىٰهُ رَبُّهُ فَأَكْرَمَهُ وَنَعَّمَهُ فَيَقُولُ
رَبِّىٓ أَكْرَمَنِ
ஆனால், இறைவன் மனிதனுக்கு கண்ணியப்படுத்தி, பாக்கியம் அளித்து அவனைச்
சோதிக்கும் போது அவன்;
"என் இறைவன் என்னை கண்ணியப்படுத்தியுள்ளான்" என்று
கூறுகிறான்.
وَأَمَّآ
إِذَا مَا ٱبْتَلَىٰهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُ فَيَقُولُ رَبِّىٓ أَهَٰنَنِ
எனினும் அவனுடைய
உணவு வசதிகளைக் குறைத்து,
அவனை (இறைவன்) சோதித்தாலோ, அவன்,
"என் இறைவன் என்னைச் சிறுமைப் படுத்தி விட்டான்" எனக்
கூறுகின்றான்.
( அல்குர்ஆன்: 89:
15, 16 )
இவர்களுக்கான தண்டனை என்ன?
وَمَنْ
اَعْرَضَ عَنْ ذِكْرِىْ فَاِنَّ لَـهٗ مَعِيْشَةً ضَنْكًا وَّنَحْشُرُهٗ يَوْمَ
الْقِيٰمَةِ اَعْمٰى
“எவன் (என்னை நினைப்பதை)
என்னுடைய உபதேசத்தைப் புறக்கணிக்கிறானோ, நிச்சயமாக அவனுக்கு
நெருக்கடியான வாழ்க்கையே இருக்கும்; மேலும், நாம் அவனை கியாம நாளில் குருடனாவே எழுப்புவோம்” என்று கூறினான்.
قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِىْۤ اَعْمٰى
وَقَدْ كُنْتُ بَصِيْرًا
(அப்போது அவன்) “என் இறைவனே! நான் பார்வையுடையவனாக இருந்தேனே! என்னை ஏன் குருடனாக எழுப்பினாய்?” என்று கூறுவான்.
قَالَ كَذٰلِكَ اَتَـتْكَ اٰيٰتُنَا فَنَسِيْتَهَاۚ وَكَذٰلِكَ الْيَوْمَ تُنْسٰى
(அதற்கு இறைவன்,) “இவ்விதம்தான் இருக்கும்; நம்முடைய வசனங்கள்
உன்னிடம் வந்தன;
அவற்றை நீ மறந்துவிட்டாய்; அவ்வாறே இன்றைய தினம் நீயும் மறக்கப்பட்டு விட்டாய்” என்று கூறுவான். ( அல்குர்ஆன்: 20: 124 - 126 )
இந்த உலகில்
படைத்த ரப்புல் ஆலமீனை மறந்து வாழ்வதில் இருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு
தேடுவதும்,
படைத்த ரப்புல் ஆலமீனை நினைத்து வாழ அல்லாஹ்விடம்
பிரார்த்தனை புரிவதும் நமக்கு அவசியமும் கட்டாயமும் ஆகும்.
وعَنْ
مُعَاذِ بْنِ جَبَلٍ قَالَ: أَخَذَ بِيَدِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ, فَقَالَ: ((إِنِّي لَأُحِبُّكَ يَا مُعَاذُ, فَقُلْتُ:
وَأَنَا أُحِبُّكَ يَا رَسُولَ اللَّهِ, فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ: فَلَا تَدَعْ أَنْ تَقُولَ فِي كُلِّ صَلَاةٍ رَبِّ أَعِنِّي
عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ )) أخرجه النسائي في سننه
ஓ முஆதே!
என்றழைத்து.. முஆத் அவர்களின் கரங்களைப் பற்றிப் பிடித்து நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “முஆதே! உம்மை நான் நேசிக்கின்றேன்! அது கேட்ட, முஆத் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! நானும் தங்களை நேசிக்கிறேன்! என்றார்கள்.
மீண்டும் நபி {ஸல்} அவர்கள் முஆதே! அப்படி(து உண்மை)யானால், கடமையான ஒவ்வொரு
தொழுகைக்குப் பின்னரும்…. யா
அல்லாஹ்! உன்னை நினைப்பதிலும், உனக்கு நன்றி செலுத்துவதிலும், உன்னை அழகிய முறையில் வணங்குவதிலும் எனக்கு உதவி புரிவாயாக! என்று
பிரார்த்திப்பதை விட்டு விட வேண்டாம்” என்று கட்டளையிட்டார்கள்.
( நூல்: நஸாயீ )
இறைநினைவே மிகப் பெரியது
وَلَذِكْرُ
اللَّهِ أَكْبَرُ وَاللَّهُ يَعْلَمُ مَا تَصْنَعُونَ
அல்லாஹ்வை
நினைப்பதே மிகப் பெரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான். ( அல்குர்ஆன்: 29: 45 )
عَنْ
أَبِي مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ «مَثَلُ الَّذِي يَذْكُرُ رَبَّهُ وَالَّذِي لاَ يَذْكُرُ رَبَّهُ،
مَثَلُ الحَيِّ وَالمَيِّتِ»
தம் இறைவனை நினைவு
கூர்ந்து போற்றுகின்றவரின் நிலை உயிருள்ளவரின் நிலைக்கும், தம் இறைவனை நினைவு கூர்ந்து போற்றாதவரின் நிலை உயிரற்றவரின் நிலைக்கும் ஒத்திருக்கிறது
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி) (நூல்: புகாரி )
உயிருடன்
இருக்கும் காலமெல்லாம் படைத்தவனை நினைவு கூர்வது அவசியமாகும்.
அல்லாஹ்வை நினைவு கூர்வதால்...
1. அல்லாஹ்வை நாம் நினைக்கும் போதுதான் அல்லாஹ் நம் நிலையைக் கவனித்து, உரிய நல்வழியை நமக்குக் காட்டுவான்.
فَاذْكُرُونِي
أَذْكُرْكُمْ وَاشْكُرُوا لِي وَلَا تَكْفُرُونِ
என்னை
நினையுங்கள்! நானும் உங்களை நினைக்கிறேன். எனக்கு நன்றி செலுத்துங்கள்! எனக்கு
நன்றி மறக்காதீர்கள்! ( அல்குர்ஆன்: 2: 152 )
2. சோதனைக் காலங்களில் நமக்கு மன அமைதியைத் தரும் அருமருந்து அல்லாஹ்வை
நினைப்பதாகும்.
இறைவனை நினைவு
கூர்வதால் எவ்வளவு பெரிய கவலைகளும் இல்லாமல் போய்விடும்.
الَّذِينَ
آمَنُوا وَتَطْمَئِنُّ قُلُوبُهُمْ بِذِكْرِ اللَّهِ ۗ أَلَا بِذِكْرِ اللَّهِ
تَطْمَئِنُّ الْقُلُوبُ
நம்பிக்கை
கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க!
அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன. ( அல்குர்ஆன்: 13: 28 )
3. அல்லாஹ்வை அதிகமதிகம் நினைவு கூர்பவகளுக்கு மன்னிப்பும் மகத்தான கூலியும்
உண்டு.
إِنَّ
الْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ وَالْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ
وَالْقَانِتِينَ وَالْقَانِتَاتِ وَالصَّادِقِينَ وَالصَّادِقَاتِ وَالصَّابِرِينَ
وَالصَّابِرَاتِ وَالْخَاشِعِينَ وَالْخَاشِعَاتِ وَالْمُتَصَدِّقِينَ
وَالْمُتَصَدِّقَاتِ وَالصَّائِمِينَ وَالصَّائِمَاتِ وَالْحَافِظِينَ فُرُوجَهُمْ
وَالْحَافِظَاتِ وَالذَّاكِرِينَ اللَّهَ كَثِيرًا وَالذَّاكِرَاتِ أَعَدَّ
اللَّهُ لَهُمْ مَغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا
முஸ்லிமான ஆண்களும்,
பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும்,
பெண்களும்,கட்டுப்படும் ஆண்களும், பெண்களும்,
உண்மை பேசும் ஆண்களும்,
பெண்களும், பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும், பெண்களும்,
அடக்கமாக நடக்கும் ஆண்களும்,
பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும்,
பெண்களும்,
நோன்பு நோற்கும் ஆண்களும்,
பெண்களும்,தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும்,
பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும்,
பெண்களும் ஆகியோருக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான்.
( அல்குர்ஆன்: 33: 35 )
4. தனிமையில் அல்லாஹ்வை நினைக்கும் போது அல்லாஹ்வுடைய அர்ஷின் நிழலில் நமக்கு அரவணைப்பு கிடைக்கின்றது.
وعن أبي
هريرة قالَ: قالَ رسُولُ اللَّه ﷺ: سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ في ظِلِّهِ
يَوْمَ لا ظِلَّ إلَّا ظِلُّهُ: إِمامٌ عادِلٌ، وشابٌّ نَشَأَ فِي عِبَادَةِ
اللَّه تَعالى، وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ في المَسَاجِدِ، وَرَجُلانِ تَحَابَّا
في اللَّه: اجتَمَعا عَلَيهِ، وتَفَرَّقَا عَلَيهِ، وَرَجُلٌ دَعَتْهُ امْرَأَةٌ
ذَاتُ مَنْصِبٍ، وَجَمَالٍ فَقَالَ: إِنِّي أَخافُ اللَّه، ورَجُلٌ تَصَدَّقَ
بِصَدَقَةٍ فأَخْفَاها، حتَّى لا تَعْلَمَ شِمالُهُ مَا تُنْفِقُ يَمِينهُ،
ورَجُلٌ ذَكَرَ اللَّه خالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ متفقٌ عَلَيْهِ.
”அல்லாஹ்வின் நிழலைத் தவிர
வேறு நிழலே இல்லாத மறுமை நாளில் ஏழு பேருக்கு அல்லாஹ் தனது நிழன் மூலம்
நிழலளிப்பான். 1.
நீதி மிக்க ஆட்சியாளர். 2. இறை வணக்கத்திலேயே! வளர்ந்த இளைஞன். 3. தனிமையில்
அல்லாஹ்வை நினைத்து கண்ணீர் சிந்திய மனிதன். 4. பள்ளிவாசலுடன்
(எப்போதும்) தொடர்பு வைத்துக் கொள்ளும் உள்ளம் உடையவர். 5. இறை வழியில் நட்பு கொண்ட இருவர். 6. அந்தஸ்தும் அழகும்
உடைய ஒரு பெண் தம்மை தவறு செய்ய அழைத்த போதும், ”நான்
அல்லாஹ்வுக்கு அஞ்சுகின்றேன்” என்று கூறியவர். 7. தமது இடக்கரம் செய்த தர்மத்தை வலக்கரம் கூட அறியாத வகையில் இரகசியமாகத் தர்மம்
செய்தவர்”
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி.
5. அல்லாஹ் நம்முடன்....
حَدَّثَنَا
قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَزُهَيْرُ بْنُ
حَرْبٍ - وَاللَّفْظُ لِقُتَيْبَةَ - قَالَا: حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: يَقُولُ اللهُ
أَنَا
عِنْدَ ظَنِّ عَبْدِي بِي، وَأَنَا مَعَهُ حِينَ يَذْكُرُنِي، إِنْ ذَكَرَنِي فِي
نَفْسِهِ، ذَكَرْتُهُ فِي نَفْسِي، وَإِنْ ذَكَرَنِي فِي مَلَإٍ، ذَكَرْتُهُ فِي
مَلَإٍ هُمْ خَيْرٌ مِنْهُمْ، وَإِنْ تَقَرَّبَ مِنِّي شِبْرًا، تَقَرَّبْتُ
إِلَيْهِ ذِرَاعًا، وَإِنْ تَقَرَّبَ إِلَيَّ ذِرَاعًا، تَقَرَّبْتُ مِنْهُ
بَاعًا، وَإِنْ أَتَانِي يَمْشِي أَتَيْتُهُ هَرْوَلَةً.
”என் அடியான் என்னைப்
பற்றி என்ன நினைக்கின்றானோ! அதற்கேற்ப அவனிடம் நான் நடந்து கொள்வேன். அவன் என்னை
நினைவு கூரும் போது நான் அவனுடன் இருப்பேன். அவன் தனக்குள் என்னை நினைவு
கூர்ந்தால் நானும் அவனை எனக்குள் நினைவு கூர்வேன். அவன் ஓர் அவையோர் மத்தியில்
என்னை நினைவு கூர்ந்தால் அவர்களை விடச் சிறந்த ஓர் அவையினரிடம் அவனை நான் நினைவு
கூர்வேன். அவன் ஒரு சாண் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் ஒரு முழம் அளவுக்கு
அவனை நெருங்குவேன். அவன் ஒரு முழம் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் இரு கைகளின்
நீள அளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவனை
நோக்கி ஓடிச் செல்வேன்”
என்று உயர்ந்தோனாகிய அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), ( நூல் : புகாரி )
அல்லாஹ்வை நினைப்பதில் முதல் நிலை!
அல்லாஹ் என்ற
அவனது திருப்பெயரை எப்போதும் விரும்பி சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.
وَاذْكُرِ
اسْمَ رَبِّكَ بُكْرَةً وَّاَصِيْلًا
காலையிலும், மாலையிலும் உம்முடைய இறைவனின் திருநாமத்தை சொல்லிக் கொண்டிருப்பீராக. (
அல்குர்ஆன்: 76:
25 )
அல்லாஹ் எனும் பெயர் பெரும் பாக்கியமுடையதாகும்.
تَبٰـرَكَ
اسْمُ رَبِّكَ ذِى الْجَـلٰلِ وَالْاِكْرَامِ
மிக்க சிறப்பும், கண்ணியமுமுள்ள உம்முடைய இறைவனின் திருப்பெயர் மிகவும் பாக்கிய முடையது. (
அல்குர்ஆன்: 55:
78 )
ஆதலால் தான்
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு வழங்கிய முதல் இறைச் செய்தி
வஹ்யின் போது
اِقْرَاْ
بِاسْمِ رَبِّكَ الَّذِىْ خَلَقَ
(யாவற்றையும்) படைத்த
உம்முடைய இறைவனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக. ( அல்குர்ஆன்: 96: 1 )
அல்குர்ஆனின்
ஒவ்வொரு (113)
அத்தியாயத்தின் துவக்கத்திலும் அளவற்ற அருளாளன் நிகரற்ற
அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்... என்று ஆரம்பித்து வைத்துள்ளான்.
அல்லாஹ் என்ற
பெயர் இணையாத,
மொழியப்படாத எந்த வணக்கமும், வழிபாடும் எந்த பிரார்த்தனையும், பாதுகாப்பு கோரலும் இல்லை, எந்த துதியும்,
தஸ்பீஹும் இல்லை எனும் அளவுக்கு அல்லாஹ் எனும் பெயரோடு
நம்மை ஒன்றிணைத்துள்ளான்.
தொழுகையில்
மட்டுமே நாம் எத்தனை முறை அல்லாஹ் என்று கூறுகிறோம்?!!
ஆக அல்லாஹ் எனும்
பெயரை அதிகமதிகம் கூறுவோம். அப்படி கூறும் போது மனதின் ஆழத்தில் இருந்து கூறுவோம்.
அல்லாஹ் என்று
கூறுவதால் தனித்த மகத்துவமும் பயனும் நாம் அடைவோம்.
இரண்டு
இறைத்தூதர்களின் ஹிஜ்ரத் பயணங்கள் அந்த பயணங்கள் ஊடாக இறைவனிடம் இருந்து பெறப்பட்ட
உதவிகள் இரண்டுக்கும் தான் எவ்வளவு வேறுபாடு?
பெருமானார் (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத்தின் போது....
மாநபி {ஸல்} தனது தோழர் அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்களுடன் மக்காவில் இருந்து
மதினாவுக்கு புலம் பெயர்ந்து சென்ற தருணம் அது.
நபி (ஸல்) அவர்கள்
மக்காவில் இருந்து தப்பிச் சென்று விட்டார்கள் என்ற செய்தி அறிந்த குறைஷிகள் கோபம்
அடைந்தனர். குறிப்பாக அபூஜஹ்ல் ஆத்திரத்தின் உச்சியில் இருந்தான்,
அவர்கள் அவ்வளவு
எளிதில் மக்காவின் எல்லையை கடந் திருக்க முடியாது. முஹம்மதை உயிரோடு பிடித்து
கொண்டு வருபவர்களுக்கு நூறு ஒட்டகங்கள் பரிசாக அளிப்பேன்’ என்று அறிவித்தான்.
அரேபியர்கள்
மத்தியில் ஒட்டகத்திற்கு என்று தனி மதிப்பு உண்டு. அதுவும் நூறு ஒட்டகங்கள் என்றால் கேட்கவா வேண்டும். எதிரிகள் அத்தனை பேருமே குழுக்களாக
அண்ணலாரைத் தேடி பல திசைகளில் பயணித்தார்கள்
நபி {ஸல்}
அவர்களும், அபூபக்ர் (ரலி) அவர்களும் பாலைவனத்தில் மாற்றுப் பாதையை தேர்ந்தெடுத்தார்கள்.
கிட்டத்தட்ட பாதி தூரம் சென்றவர்கள், அந்த பாலைவனத்தைக் கடந்து
ஸவ்ர் மலையில் உள்ள ஒரு குகையை அடைந்தார்கள்.
அந்தக் குகை
மிகவும் பழமை வாய்ந்த பள்ளதாக்கில் இருந்ததால் மிகவும் சிரமப்பட்டு இருவரும் அதில்
ஏறினார்கள். தங்களது கால்தடங்கள் கூட தங்களை எதிரிகளிடம் காட்டிக்கொடுத்து விடும்
என்று நபி {ஸல்}
அஞ்சியவர்களாக, தங்களது விரல் நுனியிலேயே
நடந்து வந்தார்கள். இதனால் நபியவர்களது கால் விரல் வெப்பத்தினால் வெந்து காயங்கள்
ஏற்பட்டு ரத்தம் கசிய ஆரம்பித்தது.
அதனைக் கண்ணுற்ற
அபூபக்ர் சித்திக் (ரலி) அவர்கள் உடனே நபிகளாரை தனது தோள்களில் தூக்கி
வைத்துக்கொண்டு அந்த குகையை நோக்கி நடந்தார்கள். குகைக்குச் சென்றதும் அண்ணலாரை
வெளியே இருக்கச் செய்து விட்டு, தான் மட்டும் உள்ளே நுழைந்தார்கள்.
உள்ளே சென்ற
அபூபக்ர் (ரலி) அவர்கள் குகையை நன்றாக சுத்தம் செய்தார்கள். குகைகளில் இருந்த
ஏராளமான துவாரங்களை தங்களுடைய ஆடையை கிழித்து அடைத்தார்கள். பின்னர் நபிகளாரை
உள்ளே அழைத்தார்கள். நபி {ஸல்}
அவர்கள் உள்ளே சென்றதும், களைப்பின் மிகுதியால்
அப்படியே துயில் கொள்ள ஆரம்பித்தார்கள்.
அண்ணலாரின் தலையை
தன் மடியில் சாய்த்துக்கொண்ட அபூபக்ர் (ரலி) அவர்கள், தன்னுடைய கால் விரல்களால் மீதமிருந்த இரண்டு துவாரங்களையும் அடைத்துக்
கொண்டார்கள்.
ولما
آلَمَه اللدغُ بكَى ونزَل دمعه على وجهِ النبي صلَّى الله عليه وسلَّم وهو نائمٌ
في حجرِه، فدَعا له النبيُّ الكريم صلَّى الله عليه وسلَّم وبصَق في مكان اللدْغِ،
فبَرَأ بإذن الله تعالى.
துரதிர்ஷ்டவசமாக
அந்த துவாரத்தில் இருந்த பாம்பு ஒன்று அபூபக்கர் (ரலி) அவர்களின் பாதங்களை தீண்டி
விட்டது. கொடிய விஷம் உடலில் ஏறியதால் சொல்லொண்ணா வலியும் வேதனையும் ஏற்பட்டது.
கால்களை அசைத்தால் அது அண்ணலாரின் தூக்கத்தை கெடுத்து விடும் என்று நினைத்து, வலியை பொறுத்துக் கொண்டு அமைதியாக இருந்தார்கள்.
ஆனால், வலியின் வேதனையில் அவரது கண்ணிலிருந்து வழிந்தோடிய கண்ணீரை கட்டுப்படுத்த
முடியவில்லை. சில கண்ணீர்த்துளிகள் வழிந்தோடி அண்ணலாரின் கன்னங்களில் பட்டு
தெறித்தது உடனே விழித்துக்கொண்ட மாநபி {ஸல்}, ‘அபூபக்கரே! என்ன நேர்ந்தது?’ என வினவினார்கள்.
அபூபக்ர் (ரலி)
அவர்கள்,
”அல்லாஹ்வின் தூதரே!! எனது காலில் ஏதோ விஷ ஜந்து தீண்டி
விட்டது போல் தெரிகிறது. வலியையும் வேதனையையும் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை’ என்றார்கள்.
உடனே பூமான் {ஸல்}
அவர்கள் தங்கள் உமிழ் நீரை எடுத்து கடிபட்ட இடத்தில்
தடவினார்கள். உடனே அபூபக்ர் (ரலி) அவர்களின் வலியும் வேதனையும் இருந்த இடம்
தெரியாமல் மறைந்து விட்டது
நபிகளாரும், அபூபக்கரும் குகையில் நுழைந்ததும் ஒரு புறா ஜோடி அங்கே கூடு கட்டி அதில்
முட்டையிட்டு அடைகாக்க ஆரம்பித்து விட்டது. குகையின் வாயிற் பகுதியில் ஒரு சிலந்தி
தன் வலைகளை முழுவதுமாக பின்னி அந்த இடத்தில் எந்தவித அசைவுகளும் ஏற்படவில்லை
என்பது போலவும், யாரும் அங்கே நுழைந்திருக்க முடியாது என்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தையும்
ஏற்படுத்தி விட்டது.
இந்நிலையில்
அபூபக்ர் (ரலி) அவர்களின் மகன் ஹஸ்ரத் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள், விரோதிகளின் கண்களில் மண்ணை தூவி விட்டு ஒவ்வொரு இரவும் குகைக்கு வந்து மக்கா
நகரின் தற்போதைய தகவல்களை சொல்லிச் செல்வார்கள்.
அபூபக்ர் (ரலி) அவர்களின்
அடிமை ஆமீர் இப்னு ஃபுஹைரா (ரலி) என்பவர் பாலைவனப்பகுதியில் ஆடுகளை மேய்த்து
வருவது போல குகை இருக்கும் பகுதிக்கு இரவில் வந்து, குகையில் தங்கியிருந்த
அண்ணலாருக்கும், அபூபக்ர் (ரலி) அவர்களுக்கும் ஆட்டின் பாலைக் கறந்து அருந்த கொடுப்பார்கள். பரிசுகளின் அறிவிப்பை தொடர்ந்து மேலும் பலர் அண்ணலாரை எல்லா இடங்களிலும் தேட
ஆரம்பித்தார்கள்.
فعندما
رأى أبو بكر رضي الله عنه القافة اشتد حزنه على رسول الله – صلى الله عليه وسلم
قال له رسول الله صلى الله عليه وسلم ” لا تحزن إن الله معنا
ஒரு நாள் ஒரு
கூட்டத்தினர் அண்ணலார் இருந்த குகை வாசல் வரை வந்து விட்டார்கள். அவர்களின் கால்
பாதங்களை அபூபக்ர் (ரலி) அவர்களால் பார்க்க முடிந்தது.
“அல்லாஹ்வின் தூதரே!!
நம்மை எதிரிகள் சூழ்ந்து விட்டார்கள். சற்று குனிந்து பார்த்தால் நாம் பிடிபட்டு
விடுவோம். என்ன செய்வது?” என்றார்கள்.
அதற்கு பூமான் {ஸல்}
அவர்கள் “நீர் அச்சம் கொள்ளாதீர். நிச்சயமாக! அல்லாஹ்
நம்முடன் இருக்கின்றான்” என்றார்கள். (திருக்குர்ஆன் 9:40)
அந்த நேரத்தில்
எதிரிகளில் ஒருவன்,
‘ஏதோ இங்கே ஒரு குகையின் வாசல் போல தோன்று கிறதே’ என்றான். ஆனால் அதற்கு பதிலாக மற்றொருவன், ‘இங்கே புறா கூடு
கட்டியுள்ளது, சிலந்தி வலை பின்னியுள்ளது. இதனை அறுத்துக்கொண்டு யாரும் சென்றதற்கான அடையாளமே
இல்லையே?. எனவே இங்கே யாரும் இருக்க மாட்டார்கள்’ என்று கூறியபடியே
அவ்விடத்தை விட்டு அகன்றார்கள்.
இறைத்தூதர் மூஸா (அலை) அவர்களின் ஹிஜ்ரத்
பயணத்தின் போது...
فَأَتْبَعُوهُمْ مُشْرِقِينَ (60) فَلَمَّا تَرَاءَى الْجَمْعَانِ
قَالَ أَصْحَابُ مُوسَى إِنَّا لَمُدْرَكُونَ (61) قَالَ كَلَّا إِنَّ مَعِيَ
رَبِّي سَيَهْدِينِ (62) فَأَوْحَيْنَا إِلَى مُوسَى أَنِ اضْرِبْ بِعَصَاكَ
الْبَحْرَ فَانْفَلَقَ فَكَانَ كُلُّ فِرْقٍ كَالطَّوْدِ الْعَظِيمِ (63)
وَأَزْلَفْنَا ثَمَّ الْآخَرِينَ (64) وَأَنْجَيْنَا مُوسَى وَمَنْ مَعَهُ
أَجْمَعِينَ
பிறகு, சூரியன் உதிக்கும் நேரத்தில் (ஃபிர்அவ்னின் கூட்டத்தார்) இவர்களைப் பின்
தொடர்ந்தார்கள்.
இவ்விரு கூட்டத்தினரும் ஒருவரையொருவர் கண்டபோது: “நிச்சயமாக நாம் பிடிபட்டோம்” என்று மூஸாவின் தோழர்கள்
கூறினர்.
அதற்கு (மூஸா), “ஒருக்காலும்
இல்லை! நிச்சயமாக என் இறைவன் என்னுடன் இருக்கிறான். எனக்கு சீக்கிரமே அவன் வழி
காட்டுவான்”
என்று கூறினார்;.
உம் கைத்தடியினால்
இந்தக் கடலை நீர் அடியும்”
என்று மூஸாவுக்கு வஹீ அறிவித்தோம். (அவ்வாறு அடித்ததும்
கடல்) பிளந்தது;
(பிளவுண்ட) ஒவ்வொரு பகுதியும் பெரும் மலை போன்று ஆகிவிட்டது. (பின் தொடர்ந்து வந்த) மற்றவர்களையும் நாம் நெருங்கச் செய்தோம். மேலும்,
நாம் மூஸாவையும், அவருடன் இருந்த
அனைவரையும் காப்பற்றினோம். ( அல்குர்ஆன்: 26: 60 - 65 )
அல்லாஹ் என்று
கூறிய போது பாலைவன பகுதியில் வாழவே சாத்தியமற்ற புறாவை கூடு கட்ட வைத்து, சிலந்தியை வலை பின்ன வைத்து மாநபி ஸல் அவர்களையும், மாநபித்தோழர் அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்களையும் அல்லாஹ் பாதுகாத்தான்.
ரப்பு என்று கூறிய
போது கையில் இருக்கும் அஸாவை நீரில் அடிக்கச் சொல்லி, அதன் பின்னர் அது பல பாதைகளாக பிரிந்து பிறகு கரை சேர்ந்து பாதுகாப்பு
பெற்றார்கள்.
2. மாநபி ஸல் அவர்களை நாம் மறந்து விடக்கூடாது.
இந்த உலகில்
மிகவும் கண்ணியமான வாழ்க்கையை நமக்கு வழங்கியவர்கள், அழகிய கலாச்சாரத்தை நமக்கு அளித்தவர்கள், நரகத்தில் இருந்து
காப்பாற்றி சுவனத்திற்கு கரை சேர்த்தவர்கள் நம் உயிரினும் மேலான நமது நபி {ஸல்}
அவர்களை அவர்கள் செய்த பேருபகாரத்தை நாம் ஒரு போதும் மறந்து விடக்கூடாது.
பெருமானார் (ஸல்) அவர்களின்
புனித ஆன்மா இறைவன் பால் சென்ற அந்த தருணத்தில்...
فلما مات قالت فاطمة: يا أبتاه، أجاب ربا دعاه، يا أبتاه، من جنة
الفردوس مأواه، يا أبتاه إلى جبريل ننعاه، فلما دفن، قالت فاطمة عليها السلام: يا
أنس أطابت أنفسكم أن تحثوا على رسول الله صلى الله عليه وسلم التراب.
நபி(ஸல்)
அவர்களின் வீட்டிலிருந்த அண்ணல் நபியின் அருமை மகளார் ஃபாத்திமா (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் அழைப்பை ஏற்றுக்கொண்ட என் தந்தையே!, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்ற உயர்ந்த அந்தஸ்தத்தை அல்லாஹ்விடமிருந்து
பெற்றுக்கொண்ட என்னுடைய தந்தையே!, எப்போதும் உங்களிடம்
தொடர்பில் உள்ள ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் இந்த மரண செய்தியை சொல்லுகிறோம்” என்று கூறி தன்னுடைய தந்தை, எண்ணிலடங்கா மக்களின்
நம்பிக்கைக்குரிய தலைவர் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் மரணத்தைச் சொல்லி
சொர்க்கத்து பெண்களின் தலைவி ஃபாத்திமா (ரலி) அவர்கள் அழுதார்கள்.
فلما
دفن، قالت فاطمة عليها السلام: يا أنس أطابت أنفسكم أن تحثوا على رسول الله صلى
الله عليه وسلم التراب.
நபி(ஸல்) அவர்களை
அடக்கம் செய்த பிறகு ஃபாத்திமா (ரலி) அவர்கள் அண்ணல் நபி(ஸல்) அவர்களுக்கு 10 ஆண்டுகள் பணிவிடை செய்த அனஸ் (ரலி) அவர்களிடம் “ அனஸே இறைத்தூதர் மீது
மண்ணை அள்ளிப் போட எப்படி உங்களுக்கு மனம் வந்தது” என்று கேட்டார்கள் என்பதை புகாரி போன்ற
ஹதீஸ் தொகுப்புகளிலிருந்து வாசிக்கும் அனைவருக்கும் கண்ணீர் வந்தே தீரும்.
நபி(ஸல்) அவர்கள்
மரணித்த பிறகு முதன் முதலில் அபூபக்கர் சித்தீக்(ரலி) அவர்கள் ஒரு ஜும்மா உரை
நிகழ்த்தினார்கள். அந்த ஜும்மா உரையில் நபி(ஸல்) அவர்கள் எப்படி ஜும்மா உரையை
ஆரம்பிப்பார்களோ அது போல் ஹம்து ஸலவாத்து சொல்லி அழ ஆரம்பித்தார்கள்
அபூபக்கர்(ரலி) அவர்கள்,
“இது யார் நின்ற இடம் தெரியுமா? இந்த இடத்தில் நின்று யார் உரை நிகழ்த்தினார்கள் தெரியுமா? அப்படிப்பட்ட இடத்தில் நான் நின்று உரை நிகழ்த்துகிறேன் “ என்று சொல்லி அழுது உரை நிகழ்த்தினார்கள் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள்.
நபி (ஸல்) அவர்களை
அடக்கம் செய்த பின்பு சில நாட்கள் கழித்து உமர்(ரலி) அவர்கள் சொன்னார்கள் “ நான் நினைத்தேன்,
நான் மரணித்து, அபூபக்கர்(ரலி) அவர்கள்
மரணித்து,
உஸ்மான்(ரலி) மரணித்து, அலி(ரலி) மரணித்து, அப்துர்ரஹ்மான் இப்னு அஃவ்ப்(ரலி) மரணித்து நாங்கள் அனைவரும் மரணித்த பிறகு
தான் ரசூலுல்லாஹ் மரணிப்பார்கள் என்று நினைத்தேன், ஆனால் நாங்கள் இருக்கும் போதே எங்கள் ஆருயிர் தோழர் அண்ணல் நபி(ஸல்) அவர்கள்
மரணித்துவிட்டார்களே”
என்று சொல்லி அழுதார்கள் உமர் (ரலி) அவர்கள்.
நபி(ஸல்)
அவர்களுடைய மரணத்திற்கு பிறகு மிகப்பெரிய செல்வந்தராக வாழ்ந்து வந்த நபி தோழர், அல்லாஹ்வின் தூதரால் சொர்க்கவாசி என்று நன்மாராயம் கூறப்பட்ட அப்துர்ரஹ்மான் இப்னு ஆவ்ப்(ரலி) அவர்கள், ஒரு நாள் அவர்கள்
முன்னால் உயர் ரகமான பேரீத்தம் பழங்கள் கொடுக்கப்பட்டது., அந்த பேரீச்சம் பழங்களை சாப்பிடுவதற்கு பதிலாக, அதனை கையில் எடுத்து தோழர்களை எல்லாம் பார்த்து அழ ஆரம்பித்துவிட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதரர் (ஸல்) அவர்களை நினைவு கூர்ந்து “நபி(ஸல்) வாழ்ந்த காலத்தில் இது போன்ற உயர்தரமான பேரீச்சம் கணிகளை கண்ணால் கூட
பார்க்காமலே மரணித்துவிட்டார்களே” என்று சொல்லி அழுதார்கள்
அப்துர்ரஹ்மான் இப்னு அவஃப் (ரலி) அவர்கள்.
3. நமக்கு முன் வாழ்ந்த நமது முன்னோர்களான மேன்மக்களை மறந்து விடக்கூடாது.
وَالَّذِيْنَ
جَآءُوْ مِنْۢ بَعْدِهِمْ يَقُوْلُوْنَ رَبَّنَا اغْفِرْ لَـنَا وَلِاِخْوَانِنَا
الَّذِيْنَ سَبَقُوْنَا بِالْاِيْمَانِ وَلَا تَجْعَلْ فِىْ قُلُوْبِنَا غِلًّا
لِّلَّذِيْنَ اٰمَنُوْا رَبَّنَاۤ اِنَّكَ رَءُوْفٌ رَّحِيْمٌ
அவர்களுக்குப்பின்
குடியேறியவர்களுக்கும் (இதில் பங்குண்டு). அவர்கள் “எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு
முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக; அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை
ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; கிருபை மிக்கவன்”
என்றும் (பிரார்த்தித்துக்) கூறுவர். ( அல்குர்ஆன்: 59:
10 )
உஹத் யுத்தம்
முடிந்து,
எதிரிகளெல்லாம் மகிழ்ச்சியோடு சென்று கொண்டிருக்கிற தருணம் அது. போரில் உயிர் நீத்தவர்களை கணக்கெடுக்கும் பணியில் நபித் தோழர்களோடு மாநபி {ஸல்}
அவர்களும் ஈடுபட்டிருந்தார்கள்.
தூரத்தில் ஓர்
வெண்ணிற மேனி கொண்ட ஓர் உடல் செங்குருதியால் நனைக்கப்பட்டு, அசைவற்று கிடந்ததைக் கண்ணுற்ற பெருமானார் {ஸல்} அந்த உடலை நோக்கி ஓடிப் போகிறார்கள்.
பூமியில்
புதைந்திருந்த முகத்தை திருப்பிப் பார்க்கின்றார்கள். அது முஸ்அப் இப்னு உமைர் (ரலி) அவர்களின் புனித உடல். எதிரிகளால் அதிக துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப் பட்டிருந்ததை
மாநபி {ஸல்} அவர்கள் விளங்கிக் கொண்டார்கள்.
قَالَ :
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ قَالَ :
حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ شُرَحْبِيلَ
العَبْدَرِيُّ ، عَنْ أَبِيهِ قَالَ : كَانَ مُصْعَبُ بْنُ
عُمَيْرٍ رَقِيقَ الْبَشَرَةِ ، حَسَنَ اللَّمَّةِ ، لَيْسَ بِالْقَصِيرِ وَلَا
بِالطَّوِيلِ ، قُتِلَ يَوْمَ أُحُدٍ عَلَى رَأْسِ اثْنَيْنِ وَثَلَاثِينَ شَهْرًا
مِنَ الْهِجْرَةِ وَهُوَ ابْنُ أَرْبَعِينَ سَنَةً أَوْ يَزِيدُ شَيْئًا ،
فَوَقَفَ عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ
فِي بُرْدَةِ مَقْتُولٍ ، فَقَالَ : لَقَدْ رَأَيْتُكَ بِمَكَّةَ وَمَا
بِهَا أَحَدٌ أَرَقُّ حُلَّةً ، وَلَا أَحْسَنُ لِمَّةً مِنْكَ ، ثُمَّ
أَنْتَ شَعِثُ الرَّأْسِ فِي بُرْدَةٍ ، ثُمَّ أَمَرَ بِهِ
يُقْبَرُ ، فَنَزَلَ فِي قَبْرِهِ أَخُوهُ أَبُو الرُّومِ بْنُ عُمَيْرٍ وَعَامِرُ
بْنُ رَبِيعَةَ وَسُوَيْبِطُ بْنُ سَعْدِ بْنِ حَرْمَلَةَ
وقف
الرسول صلى الله عليه و سلم عند مصعب بن عمير وقال وعيناه تلفانه بضيائهما
وحنانهما ووفائهما: من المؤمنين رجال صدقوا ما عهدوا الله عليه ثم القى في أسى نظرة
علي بردته التي كفن فيها وقال : لقد رأيتك بمكة ، وما بها أرق خلة، ولا أحسن لمة
منك .. ثم ها انت ذا شعث الرأس في برده
தோழர்களை
அழைக்கின்றார்கள் {ஸல்} அவர்கள். அப்படியே அவரை மடியில் கிடத்தி அழுதவர்களாக “ அல்குர்ஆனின் (33:23) –ஆம் வசனத்தை ஓதியவர்களாக “முஸ்அபே! மக்காவில் வாழ்ந்த உம்முடைய ஆரம்ப கால வாழ்வை நான் நன்கறிவேன்! உம்மை விட அழகிய ஓர் வாழ்வை யாரும் வாழ்ந்ததாக நான் அறிந்திருக்க வில்லை! ஆனால், இன்றோ! தலையை மூடினால் கால் தெரிகிறது; காலை மூடினால் தலை
தெரிகிறது! முழுமையான ஒரு கஃபன் துணி கூட இல்லை! அல்லாஹ்வின் தூதர், நாளை மறுமையில் நீர் உயிர்த் தியாகி தான் என உமக்காக சாட்சி கூறுவார்!” என்று கூறினார்கள்.
பின்பு தோழர்களை
நோக்கி “மக்களே! அல்லாஹ்விற்காக வாழ்ந்து உயிர் நீத்த இவர்களை அடிக்கடி சந்தியுங்கள்! இவர்களிடம் வாருங்கள்! இவர்களுக்கு ஸலாம்
சொல்லுங்கள்! என் உயிர் எவன் வசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! நீங்கள் சொல்லும் ஸலாத்திற்கு அவர்கள் பதில் தருகின்றார்கள்!” என்று கூறினார்கள். (
நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}, பக்கம்:31.)
عن زيد
بن وهب قَالَ : سِرْنَا مَعَهُ يَعْنِي عَلِيًّا حِينَ رَجَعَ مِنْ صِفِّينَ ،
حَتَّى إِذَا كَانَ عِنْدَ باب الكوفة إِذَا نَحْنُ بِقُبُورِ سَبْعَةٍ ، فَقَالَ
عَلِيٌّ : مَا هَذِهِ الْقُبُورُ ؟ قَالُوا : يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ ، إِنَّ
خَبَّابًا تُوُفِّيَ بَعْدَ مَخْرَجِكَ إِلَى صِفِّينَ ، وَأَوْصَى أَنْ يُدْفَنَ
فِي ظَهْرِ الْكُوفَةِ ، فَقَالَ عَلِيٌّ رَضِيَ اللَّهُ عَنْهُ
: " رَحِمَ اللَّهُ خَبَّابًا ، لَقَدْ أَسْلَمَ رَاغِبًا ، وَهَاجَرَ
طَائِعًا ، وَعَاشَ مُجَاهِدًا ، وَابْتُلِيَ فِي جِسْمِهِ أَحْوَالا ، وَلَنْ
يُضَيِّعَ اللَّهُ أَجْرَ مَنْ أَحْسَنَ عَمَلا " , قَالَ : " طُوبَى
لِمَنْ ذَكَرَ الْمَعَادَ ، وَعَمِلَ لِلْحِسَابِ ، قَنَعَ بِالْكَفَافِ ،
وَرَضِيَ عَنِ اللَّهِ عَزَّ وَجَلَّ.
ஹல்ரத் அலீ (ரலி) அவர்கள் ஸிஃப்ஃபீன் போர் முடிந்து வந்து கொண்டிருக்கையில் ஓரிடத்தில் ஒரு
மண்ணறையைப் பார்க்கிறார்கள். அது சமீபத்தில் இறந்து
போன ஒருவருடைய மண்ணறை என்பதை உணர்ந்தார்கள். பின்பு அருகில் இருந்த
தமது தோழர்களிடத்தில் இது யாருடைய மண்ணறை என வினவினார்கள்.
தோழர்கள் அது “ஃகப்பாப் இப்னு அல் அரத் (ரலி) அவர்களுடையது என்றார்கள்.
கேட்டதும் தான் தாமதம் தாரை தாரையாய் கண்ணீர் வடித்தார்கள்.
தேம்பித் தேம்பி அழுதவர்களாக…
யாஅல்லாஹ்! ஃகப்பாப் (ரலி) அவர்களுக்கு அருள் புரிவாயாக! பேரார்வத்தோடு
முஸ்லிமானார்! உன் உவப்பையும், உன் தூதரின் நெருக்கத்தையும் பெறுவதற்காகவே ஹிஜ்ரத்தும் செய்தார்! தான் ஏற்றுக் கொண்ட ஏகத்துவ கொள்கைக்காக பல் வேறு இன்னல்களை தாங்கிக்
கொண்டார்! யாஅல்லாஹ் ஃகப்பாப் (ரலி) அவர்களின் மீது உன் கருணை மழையைப் பொழிவாயாக! ( நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}, பக்கம்: 234.)
4. நமக்கு உதவியவர்களை நாம் மறக்கக்கூடாது.
இந்த 2 லிங்கில் சென்று பார்த்துக் கொள்ளவும்.
https://vellimedaiplus.blogspot.com/2021/07/?m=1
https://vellimedaiplus.blogspot.com/2015/12/blog-post_31.html?m=1
ஆக நன்றி மறப்பது மட்டுமல்ல.
நம் நினைவில் நிறுத்த வேண்டிய சிலரை நாம் மறந்து போவதும் நன்றன்று.
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் நம் அனைவரையும் மறதியில் இருந்து பாதுகாப்பானாக!
எப்போதும் அவனையும், அவனது தூதரும் ஹபீபுமாகிய நமது நபி ஸல் அவர்களையும் நினைவு கூர்ந்து வாழும் நல்ல தௌஃபீக்கை நம் அனைவருக்கும் தந்தருள்வானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!
புதிய கோணத்தில் ஆதாரங்களுடன் சிறந்த ஆய்வுகள்.மாஷா அல்லாஹ் பாரகல்லாஹ் ஹஜ்ரத்.
ReplyDeleteஅழுது கொண்டே தான் வாசிக்க முடிந்தது ஹழ்ரத்
ReplyDeleteஎல்லாமே அருமையான சிந்தனை கொண்ட பதிவு
ஜஸாக்குமுல்லாஹ் ஹழ்ரத்
"மறக்காமல்" வாரா வாரம் ஆலிம்களுக்காக, தாங்கள் தரும் கருவூலப்பெட்டகம்!,
ReplyDeleteஅல்லாஹ் வும் தங்களை மறக்காமல், தனது கருவூலத்தை தங்களுக்கு தந்தருள்வானாக ஆமீன்...🤲