Thursday, 11 January 2024

தீர்மானம் & முடிவு எடுத்தல் ஓர் இஸ்லாமியப்பார்வை!!!

 

தீர்மானம் & முடிவு எடுத்தல் ஓர் இஸ்லாமியப்பார்வை!!!


இப்படி முடிவெடுத்து விட்டோமே! அதை இப்படி செய்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே!  என்றெல்லாம் நினைத்து, எடுத்த முடிவுக்காக வருந்தி விரக்தியின் விளிம்புக்குச் சென்று மன நிம்மதியினை அழித்துக் கொள்ளும் பலரை இந்த சமூகத்தில் பரவலாக நாம் காண்கிறோம்.

இன்னும் சிலரோ முடிவுகள் தவறாக போய் விட்டதன் காரணமாக கவலையால் தன் வாழ்வையே மாய்த்துக் கொள்ளும்  நிலைக்குக் கூட சென்றுவிடுவதை காணும் போது முடிவுகள் என்பது வாழ்வின் எத்துணை பெரிய திருப்பு முனைகள் என்பதை நாம் அவதானிக்க முடிகின்றது.

ஒருவரது வாழ்வில் அவர் எடுக்கும் தீர்மானங்களும், முடிவுகளும் மிகவும் முக்கியமானதாகும்.

நிர்பந்தமான நிலையில் எடுக்கப்பட்ட எத்தனையோ முடிவுகள் பலரது வாழ்விற்கும், மன அமைதிக்கும் வேட்டு வைத்து, வாழ்வின் வசந்தத்தை சிதைத்து விடுவதனை நாம் யதார்த்தமாக கண்டு வருகிறோம்.

ஆகவே, தனி மனித வாழ்விலும் சரி, குடும்ப வாழ்விலும் சரி, சமூக மற்றும் சமுதாய வாழ்விலும் சரி "தீர்மானங்கள் & முடிவுகள்" விஷயத்தில் நன்கு ஆராய்ந்து எடுக்க வேண்டும்.

ஏனெனில், எழுதப்படும் வார்த்தைகளும், எடுக்கப்படும் முடிவுகளும் மனித வாழ்வில் மகத்தான தாக்கத்தை உண்டு பண்ணும் ஆற்றல் வாய்ந்தது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் “முடிவெடுப்பது தொடர்பான” வழிகாட்டலில் பல்வேறு அம்சங்களை கையாண்டு இருப்பதை நபிமொழிக் கிரந்தங்கள் நமக்கு சான்றுரைக்கின்றன்.

இஸ்திகாரா, இஸ்திஷாரா, சீட்டுக் குலுக்கி போடுதல், துஆ என ஒரு காரியத்தின் முடிவு சரியாக அமைய மிகவும் முனைப்புக் காட்டியுள்ளார்கள் என்பதை உணர முடிகின்றது.

மிகச் சரியான முடிவு எடுக்க வேண்டும்..

எந்த காரியத்திலும் நாம் உடனடியாக முடிவெடுத்து அடுத்த நொடியே அதை நடைமுறைப்படுத்த ஆவல் கொள்கிறோம்.

அந்த முடிவு நமக்கு சாதகமானதா? நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு நன்மையானதா? அதனால் நமக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? என்றெல்லாம் நாம் சிந்திப்பதில்லை. ஒரு முடிவு எடுக்க ஒருவர் எவ்வளவு காலம் எடுத்துக் கொள்ள வேண்டும்? அது அந்த நபரையும், அவர் எதிர் கொள்ளும் பிரச்சினைகளையும் பொறுத்தது. ஆனால், எடுத்த அந்த முடிவு மிகவும் சரியாக அமைய வேண்டும்.

قَالَ نُوْحٌ رَّبِّ لَا تَذَرْ عَلَى الْاَرْضِ مِنَ الْكٰفِرِيْنَ دَيَّارًا‏

அப்பால் நூஹ் கூறினார்: என் இறைவா! பூமியின் மீது இக்காஃபிர்களில் எவரையும் நீ வசித்திருக்க விட்டு விடாதே.

 اِنَّكَ اِنْ تَذَرْهُمْ يُضِلُّوْا عِبَادَكَ وَلَا يَلِدُوْۤا اِلَّا فَاجِرًا كَفَّارًا‏

நிச்சயமாக நீ அவர்களை விட்டு வைப்பாயானால். உன் அடியார்களை அவர்கள் வழி கெடுத்துவிடுவார்கள்; அன்றியும், பாவிகளையும், காஃபிர்களையும் அன்றி அவர்கள் பெற்றெடுக்கமாட்டார்கள். ( அல்குர்ஆன்: 71: 26, 27 )

இங்கே நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் 950 ஆண்டு காலம் கழித்து ஒரு முடிவு எடுக்கின்றார்கள்.

எடுத்த அந்த முடிவு சரி தான் என்பதை அல்லாஹ்வும் உறுதி செய்தான்.

பின் வரும் இந்த இரண்டு இறை வசனங்களும் அந்த உறுதியைத் தாங்கி நிற்பதை நமக்கு உணர்த்துகிறது.

ஒரு முடிவு எடுக்க எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்?

950 ஆண்டுகாலம் அல்லாஹ்விடத்திலே அவர்கள் அல்லாஹ்வின் உதவியை எதிர்பார்த்துக் கொண்டே இருந்தார்கள்.

இறுதியாக அல்லாஹுத்தஆலா இந்த மக்கள் இனி நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் இவர்களை நாம் அழிக்கப் போகிறோம் என்று கூறினான்:

أَنَّهُ لَنْ يُؤْمِنَ مِنْ قَوْمِكَ

நபியே! இனி உங்களது மக்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள். (அல்குர்ஆன் 11:36)

وَلَا تُخَاطِبْنِي فِي الَّذِينَ ظَلَمُوا إِنَّهُمْ مُغْرَقُونَ

இந்த அநியாயம் செய்தவர்களுக்காக நபியே நீங்கள் இனி சிபாரிசு பேசாதீர்கள் இவர்கள் மூழ்கடிக்கப்பட போகிறார்கள். (அல்குர்ஆன் 11:36)

நபிகளாரின் முன்மாதிரி முடிவுகள்!!

عَنِ ابْنِ شِهَابٍ عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- أَنَّهَا قَالَتْ مَا خُيِّرَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- بَيْنَ أَمْرَيْنِ إِلاَّ أَخَذَ أَيْسَرَهُمَا مَا لَمْ يَكُنْ إِثْمًا فَإِنْ كَانَ إِثْمًا كَانَ أَبْعَدَ النَّاسِ مِنْهُ وَمَا انْتَقَمَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- لِنَفْسِهِ إِلاَّ أَنْ تُنْتَهَكَ حُرْمَةُ اللَّهِ عَزَّ وَجَل .

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: இரண்டு விஷயங்களில்  விரும்பியதைத் தேர்ந்தெடுக்கும்படி அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களுக்கு விருப்ப உரிமை வழங்கப்பெற்றால், அவர்கள் அவ்விரண்டில் எளிதானதையே அது பாவமான  விஷயமாக இல்லாதிருக்கும் பட்சத்தில் தேர்வு செய்வார்கள். அது பாவமான காரியமாக 
இருந்தால், மக்களிலேயே அவர்கள் தான் அதிலிருந்து விலகி வெகுதொலைவில் சென்றுவிடுவார்கள். (நூல்: முஸ்லிம், பாபு முபாஅததிஹி {ஸல்} லில் ஆஸாமி வஃக்தியாரிஹி)

  قال- ثم أتيت بإناءين أحدهما فيه لبن والآخر فيه خمر فقيل لي خذ فاشرب أيهما شئت فأخذت اللبن فشربته فقال لي جبريل أصبت الفطرة ولو أنك أخذت الخمر غوت أمتك

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் விண்ணுலகப் பயணம் மேற்கொண்டிருந்த போது நபிகளாருக்கு ஒரு கோப்பையில் மதுபானமும், இன்னொரு கோப்பையில் பாலும் 
வழங்கப்பட்டதாம். அப்போது நபிகளார் {ஸல்} அவர்கள் பாலை அருந்துவதற்காக 
தேர்ந்தெடுத்தார்களாம். அதைக் கண்ணுற்ற ஜிப்ரயீல் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! இயற்கையான பானத்தையே நீங்கள் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். நீங்கள் மதுவை 
தேர்ந்தெடுத்திருப்பீர்களேயானால் உங்களது சமுதாயம் வழிகெட்டுப் போயிருக்கும்  என்று கூறினார்கள்.  (நூல்: தஃப்ஸீர் அல் குர்துபீ, பாகம்:6, பக்கம் 173)

முஸ்லிம் ஷரீஃபின் இன்னொரு அறிவிப்பில்..

عَنْ الزُّهْرِيِّ قَالَ قَالَ ابْنُ الْمُسَيَّبِ قَالَ أَبُو هُرَيْرَةَ
إِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ لَيْلَةَ أُسْرِيَ بِهِ بِإِيلِيَاءَ بِقَدَحَيْنِ مِنْ خَمْرٍ وَلَبَنٍ فَنَظَرَ إِلَيْهِمَا فَأَخَذَ اللَّبَنَ فَقَالَ لَهُ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَام الْحَمْدُ لِلَّهِ الَّذِي هَدَاكَ لِلْفِطْرَةِ لَوْ أَخَذْتَ الْخَمْرَ غَوَتْ أُمَّتُكَ

ஜிப்ரயீல் (அலை) அவர்கள் இயற்கையை தேர்ந்தெடுப்பதற்கு நேர்வழிகாட்டிய  அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்! என்று கூறியதாக, கூடுதலாக அபூஹுரைரா (ரலி) 
அறிவிப்பின் படி பதிவாகியுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல சந்தர்ப்பங்களில் சீட்டுக் குலுக்கிப் பார்த்து முடிவெடுத்துள்ளார்கள்.

حدثنا  عبد الله بن يوسف ، قال : أخبرنا  مالك ، عن  سمي  – مولى أبي بكر – عن  أبي صالح ، عن  أبي هريرة  أن رسول الله صلى الله عليه وسلم قال :  " لو يعلم الناس ما في النداء، والصف الأول ثم لم يجدوا إلا أن يستهموا عليه لاستهموا، ولو يعلمون ما في  التهجير  لاستبقوا إليه، ولو يعلمون ما في العتمة والصبح لأتوهما ولو حبوا ". 

பாங்கு சொல்வதற்குரிய நன்மையையும் முதல் வரிசையில் நின்று (தொழுவதற்குரிய) நன்மையையும் மக்கள் அறிவார்களானால் அதற்காக அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு வருவர். யாருக்கு அந்த இடம் கொடுப்பது என்பதில் சீட்டுக் குலுக்கியெடுக்கப்படும் நிலையேற்பட்டாலும் அதற்கும் தயாராகி விடுவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள் : புகாரீ615, முஸ்லிம்611

حدثنا  أبو الربيع سليمان بن داود  – وأفهمني بعضه  أحمد  – حدثنا  فليح بن سليمان ، عن  ابن شهاب الزهري ، عن  عروة بن الزبير ،  وسعيد بن المسيب ،  وعلقمة بن وقاص الليثي ،  وعبيد الله بن عبد الله بن عتبة ، عن عائشة رضي الله عنها زوج النبي صلى الله عليه وسلم، حين قال لها أهل الإفك ما قالوا، فبرأها الله منه، قال الزهري : وكلهم حدثني طائفة من حديثها، وبعضهم أوعى من بعض وأثبت له اقتصاصا، وقد وعيت عن كل واحد منهم الحديث الذي حدثني عن  عائشة ، وبعض حديثهم يصدق بعضا، زعموا أن عائشة قالت :  كان رسول الله صلى الله عليه وسلم إذا أراد أن يخرج سفرا أقرع بين أزواجه، فأيتهن خرج سهمها خرج بها معه، فأقرع بيننا في غزاة غزاها، فخرج سهمي، فخرجت معه بعدما أنزل الحجاب

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணம் புறப்பட விரும்பினால் தம் மனைவிமார்களிடயே (எவரைப் பயணத்தில் தம்முடன் அழைத்துச் செல்வது எனத் தீர்மானித்திட) சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். அவர்களில் எவரது (பெயருள்ள) சீட்டு வருகின்றதோ அவரைத் தம்முடன் அழைத்துக் கொண்டு பயணம் புறப்படுவார்கள். இவ்வாறே அவர்கள் மேற்கொண்ட (பனூ முஸ்தலிக் என்ற) ஒரு புனிதப் போரின் போது (பயணத்தில் உடன் அழைத்துச் செல்ல) எங்களிடையே சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். அதில் எனது (பெயருள்ள) சீட்டு வந்தது. எனவே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (பயணம்) புறப்பட்டுச் சென்றேன்…. சுருக்கம் அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல்: புகாரி2661

حدثنا  إسحاق بن نصر ، حدثنا  عبد الرزاق ، أخبرنا  معمر ، عن  همام ، عن  أبي هريرة  رضي الله عنه،  أن النبي صلى الله عليه وسلم عرض على قوم اليمين، فأسرعوا، فأمر أن يسهم بينهم في اليمين أيهم يحلف

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு கூட்டத்தாரை சத்தியப் பிரமாணம் அளிக்கும் படி அழைத்தார்கள். அவர்கள் (ஒருவரையொருவர்) முந்திக் கொண்டு வந்தார்கள். அவர்களில் யார் சத்தியம் செய்வதென்று அவர்களிடையே (முடிவு செய்வதற்காகச்) சீட்டுக் குலுக்கிப் போடும்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி2674

حدثنا  يحيى بن بكير ، حدثنا  الليث ، عن  عقيل ، عن  ابن شهاب ، قال : أخبرني  خارجة بن زيد بن ثابت  أن  أم العلاء  – امرأة من الأنصار بايعت النبي صلى الله عليه وسلم – أخبرته أنه  اقتسم المهاجرون قرعة  فطار  لنا عثمان بن مظعون، فأنزلناه في أبياتنا فوجع وجعه الذي توفي فيه، فلما توفي وغسل وكفن في أثوابه دخل رسول الله صلى الله عليه وسلم فقلت : رحمة الله عليك أبا السائب فشهادتي عليك : لقد أكرمك الله. فقال النبي صلى الله عليه وسلم : " وما يدريك أن الله قد أكرمه ؟ " فقلت : بأبي أنت يا رسول الله، فمن يكرمه الله ؟ فقال : " أما هو فقد جاءه اليقين، والله إني لأرجو له الخير، والله ما أدري – وأنا رسول الله – ما يفعل بي ". قالت : فوالله لا أزكي أحدا بعده أبدا. حدثنا  سعيد بن عفير ، حدثنا  الليث ، مثله وقال  نافع بن يزيد ، عن  عقيل  : ما يفعل به.  وتابعه  شعيب ،  وعمرو بن دينار ،  ومعمر 

(மதீனாவுக்கு வந்த) முஹாஜிர்களில் எவரது வீட்டில் யார் தங்குவது என்பதையறிய சீட்டுக் குலுக்கிப் போட்டுக்கொண்டிருந்த போது உஸ்மான் பின் மழ்வூன் (ரலி) அவர்கள் எங்கள் வீட்டில் தங்குவது என முடிவானது…. சுருக்கம் அறிவிப்பவர் : உம்முல்அலா (ரலி) நூல் : புகாரி 1243

கலந்து ஆலோசித்து முடிவெடுத்தல்..

فَبِمَا رَحْمَةٍ مِنَ اللَّهِ لِنْتَ لَهُمْ وَلَوْ كُنْتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لَانْفَضُّوا مِنْ حَوْلِكَ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِي الْأَمْرِ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ

(முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவ ராகவும் கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள். அவர்களை மன்னிப்பீராக! அவர்களுக்காகப் பாவ மன்னிப்புத் தேடுவீராக! காரியங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்வீராக! உறுதியான முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! தன்னையே சார்ந்திருப்போரை அல்லாஹ் நேசிக்கிறான். ( அல்குர்ஆன்: 3: 159 )

وَالَّذِينَ اسْتَجَابُوا لِرَبِّهِمْ وَأَقَامُوا الصَّلَاةَ وَأَمْرُهُمْ شُورَى بَيْنَهُمْ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ

وَالَّذِينَ إِذَا أَصَابَهُمُ الْبَغْيُ هُمْ يَنْتَصِرُونَ

தமது காரியங்களில் தமக்கிடையே ஆலோசனை செய்வோருக்கும் நாம் வழங்கியவற்றிலிருந்து (நல் வழியில்) செலவிடுவோருக்கும் தமக்கு அநீதி இழைக்கப்பட்டால் (இறைவனிடம்) உதவி தேடுவோருக்கும் சிறந்ததும் நிலையானதுமாகும். ( அல்குர்ஆன்: 42: 38:39 )

முடிவெடுப்பதில் கவனம் வேண்டும்… முடிவை செயல் படுத்துவதில் மிகவும் எச்சரிக்கை வேண்டும்..

وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، وَأَبُو سَعِيدٍ الأَشَجُّ – وَتَقَارَبُوا فِي اللَّفْظِ – قَالُوا حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَلِيٍّ قَالَ :‏ ‏ بَعَثَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم سَرِيَّةً وَاسْتَعْمَلَ عَلَيْهِمْ رَجُلاً مِنَ الأَنْصَارِ وَأَمَرَهُمْ أَنْ يَسْمَعُوا لَهُ وَيُطِيعُوا فَأَغْضَبُوهُ فِي شَىْءٍ فَقَالَ اجْمَعُوا لِي حَطَبًا ‏.‏ فَجَمَعُوا لَهُ ثُمَّ قَالَ أَوْقِدُوا نَارًا ‏.‏ فَأَوْقَدُوا ثُمَّ قَالَ أَلَمْ يَأْمُرْكُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ تَسْمَعُوا لِي وَتُطِيعُوا قَالُوا بَلَى ‏.‏ قَالَ فَادْخُلُوهَا ‏.‏ قَالَ فَنَظَرَ بَعْضُهُمْ إِلَى بَعْضٍ فَقَالُوا إِنَّمَا فَرَرْنَا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنَ النَّارِ ‏.‏ فَكَانُوا كَذَلِكَ وَسَكَنَ غَضَبُهُ وَطُفِئَتِ النَّارُ فَلَمَّا رَجَعُوا ذَكَرُوا ذَلِكَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ ‏ “‏ لَوْ دَخَلُوهَا مَا خَرَجُوا مِنْهَا إِنَّمَا الطَّاعَةُ فِي الْمَعْرُوفِ ‏”‏

وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، وَأَبُو مُعَاوِيَةَ عَنِ الأَعْمَشِ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ

 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒரு படைப் பிரிவை அனுப்பி, அவர்களுக்கு அன்ஸாரிகளில் ஒருவரைத் தளபதியாக்கி, அவரது கட்டளையைச் செவியுற்றுக் கட்டுப்பட்டு நடக்கும்படி படை வீரர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்கள். ஏதோ ஒரு விஷயத்தில் படை வீரர்கள், தளபதியைக் கோபப்படுத்திவிட்டனர். அப்போது அவர், “விறகைச் சேகரியுங்கள்என்று கூறினார். அவ்வாறே அவர்கள் விறகைச் சேகரித்ததும் நெருப்பை மூட்டுங்கள்என்று உத்தர விட்டார்.

அவ்வாறே அவர்கள் நெருப்பை மூட்டிய பின், “நீங்கள் எனது சொல்லைச் செவியுற்று, அதற்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உங்களுக்குக் கட்டளையிடவில்லையா?” என்று கேட்டார். படை வீரர்கள், “ஆம்என்றனர். அவ்வாறாயின் நெருப்பில் குதியுங்கள்என்று அவர் உத்தரவிட்டார்.

அப்போது படைவீரர்கள் ஒருவரையொருவர் பார்த்தபடி, “(நரக) நெருப்பிலிருந்து தப்பிக்கத்தானே நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி வெருண்டோடி வந்தோம்!என்று கூறினர். அவ்வாறே அவர்கள் (சிறிது நேரம்) இருந்துகொண்டிருக்க, அவருடைய கோபம் தணிந்தது; நெருப்பும் அணைந்தது.

பிறகு (மதீனாவுக்குத் திரும்பியதும்) நபி (ஸல்) அவர்களிடம் நடந்ததைத் தெரிவித்தனர். அதில் (மட்டும்) அவர்கள் குதித்திருந்தால், அதிலிருந்து அவர்கள் (ஒருபோதும்) வெளியேறியிருக்கமாட்டார்கள். கீழ்ப்படிதல் என்பதெல்லாம் நன்மையில்தான்என்று நபி (ஸல்) சொன்னார்கள். அறிவிப்பாளர் : அலீ (ரலி) ( நூல்: புகாரி )

وروى أبو داود منْ حديث عَمْرِو بْنِ الْعَاصِ -رضي الله عنه-  قَالَ: احْتَلَمْتُ فِي لَيْلَةٍ بَارِدَةٍ فِي غَزْوَةِ ذَاتِ السُّلَاسِلِ، فَأَشْفَقْتُ إِنْ اغْتَسَلْتُ أَنْ أَهْلِكَ، فَتَيَمَّمْتُ ثُمَّ صَلَّيْتُ بِأَصْحَابِي الصُّبْحَ، فَذَكَرُوا ذَلِكَ لِلنَّبِيِّ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ- فَقَالَ: (يَا عَمْرُو صَلَّيْتَ بِأَصْحَابِكَ وَأَنْتَ جُنُبٌ؟!) فَأَخْبَرْتُهُ بِالَّذِي مَنَعَنِي مِنْ الِاغْتِسَالِ وَقُلْتُ إِنِّي سَمِعْتُ اللَّهَ يَقُولُ: {وَلَا تَقْتُلُوا أَنْفُسَكُمْ إِنَّ اللَّهَ كَانَ بِكُمْ رَحِيمًا} [النساء:29] فَضَحِكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَمْ يَقُلْ شَيْئًا.

 

وفي رواية ابن حبان: عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ، عَنْ عَمْرِو بْنِ الْعَاصِ، أَنَّ رَسُولَ اللَّهِ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ- بَعَثَهُ فِي ذَاتِ السَّلَاسِلِ، فَسَأَلَهُ أَصْحَابُهُ أَنْ يُوقِدُوا نَارًا، فَمَنَعَهُمْ، فَكَلَّمُوا أَبَا بَكْرٍ، فَكَلَّمَهُ فِي ذَلِكَ، فَقَالَ: لَا يُوقِدُ أَحَدٌ مِنْهُمْ نَارًا إِلَّا قَذَفْتُهُ فِيهَا، قَالَ: فَلَقُوا الْعَدُوَّ فَهَزَمُوهُمْ، فَأَرَادُوا أَنْ يَتَّبِعُوهُمْ، فَمَنَعَهُمْ، فَلَمَّا انْصَرَفَ ذَلِكَ الْجَيْشُ ذَكَرُوا لِلنَّبِيِّ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ-، وَشَكَوْهُ إِلَيْهِ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي كَرِهْتُ أَنْ آذَنَ لَهُمْ أَنْ يُوقِدُوا نَارًا فَيَرَى عَدُوُّهُمْ قِلَّتَهُمْ، وَكَرِهْتُ أَنْ يَتَّبِعُوهُمْ فَيَكُونُ لَهُمْ مَدَدٌ فَيُعْطِفُوا عَلَيْهِمْ

 

إذ إنه حين رجع الصحابة إلى المدينة المنورة، واشتكوا ذلك للرسول صلى الله عليه وسلم، سأله صلى الله عليه وسلم عن علَّةِ فعله، فقال: "كرهتُ أن آذن لهم أن يوقدوا نارًا؛ فيرى عدوُّهم قلتَهم

وحين عادوا إلى الرسول صلى الله عليه وسلم اشتكوا له ذلك، فسأله صلى الله عليه وسلم عن ذلك الأمر، فقال: "يا رسول الله، كرهتُ أن يتبعوهم فيكون لهم مدد"

தாதுஸ் ஸலாஸில் எனும் போருக்கு அம்ர் இப்னுல் ஆஸ் {ரலி} அவர்களின்  தலைமையில் 300 பேர் கொண்ட ஒரு படையை நபி  {ஸல்} அவர்கள் அனுப்பி  வைத்தார்கள். அவருக்கு உதவியாக அபூ உபைதா பின் அல் ஜர்ராஹ் {ரலி} அவர்களின் 
தலைமையில் ஓர் துணைப் படையையும் பின்னால் அனுப்பி வைத்தார்கள்.                                                  அம்ர் இப்னுல் ஆஸ் {ரலி} அவர்களின் தலைமையின் கீழ் அபூபக்ர் {ரலி}, உமர் {ரலி} போன்ற பெரும் ஸஹாபிகளெல்லாம் படை வீரராக கலந்து கொண்டார்கள். அவர்கள்  கடும் குளிர் காலத்தில் பயணம் மேற்கொண்டனர்.                                            

ஸலாஸில் என்பது மதீனாவில் இருந்து 10 நாட்கள் நடந்து செல்லும் தொலைவில் உள்ள ஓர் மணற்பாங்கான பகுதியாகும். போருக்குச் செல்கிற வழியில் இந்த உம்மத்திற்கு பெரும் பாடங்களை  கற்றுத் தந்த மூன்று நிகழ்வுகள்  நடந்தேறியது.                                          

பெரும்பாலும் படைத் தளபதிகளே மக்களுக்கு இமாமாக நின்று தொழவைப்பார்கள்அது தான்  அண்ணலாரின் வழக்கமாகவும்  இருந்தது.                                                                      

ஒரு நாள் இரவு அம்ர் இப்னுல் ஆஸ்  {ரலி} அவர்களுக்கு குளிப்புக் கடமையாகி  விடுகின்றது. தயம்மும் செய்து சுபுஹ் தொழுகையை தொழ வைத்தார்கள்.                                

இதை அறிந்து கொண்ட உமர் {ரலி}  அவர்கள் உட்பட, படை வீரர்கள் அனைவரும்  ஆட்சேபித்தனர்.  ஆனாலும், தளபதியின் முடிவுக்கு  கட்டுப் பட  வேண்டுமென்ற  மாநபியின் கட்டளை அவர்களைத் தடுத்து விட்டது.   அடுத்து ஸலாஸிலை சமீபித்திருந்த ஒரு பகுதியில் இரவு தங்க நேரிட்டது.  குளிரின் தாக்கம் அதிகமாகி விடவே, வீரர்கள்  நெருப்பு மூட்டினர்.                                                                

சிறிது நேரத்தில் அங்கு வந்த தளபதி  தீயை அணைத்து விடுங்கள்;  இனி  யாரும்  நெருப்பு மூட்ட வேண்டாம். இது தளபதியின்  உத்தரவாகும் என்று அனைவரிடத்திலும்  கூறினார்கள்.                        

மீண்டும் படை வீரர்களுக்கு மத்தியில் சலசலப்பு  முணுமுணுப்பு. இறுதியாக, போர் நடந்தது. முஸ்லிம்கள் மாபெரும் வெற்றி வாகை சூடினர். எதிரிகள் தலை தெறிக்க  புறமுதுகு காட்டி ஓடினர்.                                   

இப்போது தளபதி அம்ர் இப்னுல் ஆஸ்{ரலி} அவர்களிடம் இருந்து ஓர் கட்டளை  எதிரிகளை யாரும் துரத்திச் சென்று தாக்கிட வேண்டாம்; அப்படியே திரும்பி விடுங்கள். யாரும் இப்படியொரு  உத்தரவை அம்ர் இப்னுல் ஆஸ் {ரலி}  அவர்கள் போடுவார்கள் என சற்றும்  எதிர் பார்க்கவில்லை.                    

எதிரிகளை பதம் பார்த்திட அருமையானதொரு சந்தர்ப்பம். இனிமேல், இது போன்றதொரு வாய்ப்பு  கிடைக்கப் போவதில்லை. இம்முறை எதிர்ப்பு கடுமையாகவே தளபதியிடம் வீரர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் நாம் எதிரிகளை விரட்டிச் சென்று  தாக்குவோம் என்றனர்.

இல்லை, இப்போதே படை வாபஸ் பெறப்படுகிறது.   உடனடியாக, நாம் மதீனா  திரும்பிச் செல்கின்றோம் என்றார்  தளபதி. பல்வேறு சிக்கலுக்குப் பிறகு மதீனா வந்து சேர்ந்தது முஸ்லிம்களின் படை.                                             

உடனடியாக அல்லாஹ்வின் தூதர்  {ஸல்} அவர்களிடம் உமர் {ரலி} அவர்கள்  மற்றும் இன்னும் சில வீரர்கள்சேர்ந்து தளபதியின் நடத்தை குறித்து முறையிட்டனர்.         

அம்ருப்னுல் ஆஸ் {ரலி} அவர்களை அழைத்து வருமாறு ஆளனுப்பினார்கள். அம்ர்  {ரலி} அவர்கள் வந்ததும் அம்ரே! மக்கள் உம் மீது இன்னின்னவாறான ஆட்சேபனைகளை என்னிடம் முறையிட்டுள்ளனர். உம்முடைய பதில் என்ன?” என்று அல்லாஹ்வின் தூதர்  {ஸல்} அவர்கள் கேட்டார்கள்.                                                

அதற்கு அம்ர் {ரலி} அவர்கள்  ஆம்!  அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அவர்கள்  சொல்வது அனைத்தும் உண்மைதான். கடுமையான குளிரில் குளித்தால் மரணித்து  விடுவேனோ” என நான் அஞ்சினேன்.                                                      

அப்போது எனக்கு உங்களை நீங்களே மாய்த்துக் கொள்ள வேண்டாம். திண்ணமாக அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ் உங்கள் மீது அளப்பெரும் கருணையாளனாக  இருக்கின்றான்” (அல்குர்ஆன்:4:29)  எனும்  இறை  வசனம் நினைவுக்கு வந்தது.

எனவே நான் தயம்மும் செய்து தொழவைத்தேன். அது தவறா இறைத்தூதரே!?”  என்று கேட்டார்.                        

அது கேட்ட அண்ணலார் புன்முறுவல்  பூத்தவராக இல்லை, தப்பொன்றும்  இல்லை என்று கூறிவிட்டு, ”ஏன்  நெருப்பை மூட்ட வேண்டாம் என்று கூறினீர்கள்  என்று கேட்டார்கள்.                                                                                           

அதற்கு அம்ர் {ரலி} அவர்கள் எதிரிகளின் இடத்தை நாங்கள் நெருங்கிய பின்பு தான் நான் அவ்வாறுகூறினேன். காரணம் நம் நடமாட்டத்தைஅறிந்து எதிரிகள் நம்மைத் தாக்கி  விடுவார்களோ என நான் அஞ்சினேன்.                                                         

அதன் பின்னர் தான் அப்படி நான் கட்டளை பிறப்பித்தேன் என விளக்கம் தந்தார்கள். அப்போதும் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் புன்னகை பூத்தார்கள். பின்னர்,

ஏன் விரட்டிச் சென்று தாக்கிட  வேண்டாம் என்று உத்தரவிட்டீர்கள் என மாநபி {ஸல்} அவர்கள் கேட்டார்கள்.                                           

அதற்கு எதிரிகளின் எண்ணிக்கை நம் எண்ணிக்கையை விட அதிகம். அவர்கள்  களத்தை விட்டும் வெளியேறிபரந்த வெளியில் ஓடிக்கொண்டிருந்தனர்.                                                    தொடர்ந்து சென்று தாக்கினால்  அவர்கள் சுற்றி வளைத்து நம்மை  தாக்கி , வெற்றி பெற்றுவிடுவார்களோ என நான் அஞ்சிய போது அந்த முடிவைஎடுத்தேன் என்று அம்ர் {ரலி} அவர்கள் கூறினார்கள். இப்போதும் நபி {ஸல்}  சிரித்தார்கள்.                                

பின்பு,“என்ன தான் இருந்தாலும்  களத்தில் நிற்கிற போது படை வீரர்களிடம்  நீங்கள் ஆலோசித்து  முடிவெடுத்து இருக்க வேண்டும். என  அறிவுரை  கூறி  அம்ர்  இப்னுல் ஆஸ்  {ரலி} அவர்களை அனுப்பி  வைத்தார்கள். (நூல்: தாரீகுல் இஸ்லாம் லி இப்னி அஸாக்கிர், பக்கம்: 59 - 67 )

முன்மாதிரி முடிவுகள் "பாராட்டு பெறும்"!

وَضَرَبَ اللّٰهُ مَثَلًا لِّـلَّذِيْنَ اٰمَنُوْا امْرَاَتَ فِرْعَوْنَ‌ اِذْ قَالَتْ رَبِّ ابْنِ لِىْ عِنْدَكَ بَيْتًا فِى الْجَـنَّةِ وَنَجِّنِىْ مِنْ فِرْعَوْنَ وَعَمَلِهٖ وَنَجِّنِىْ مِنَ الْقَوْمِ الظّٰلِمِيْنَ

மேலும், ஈமான் கொண்டவர்களுக்கு ஃபிர்அவ்னின் மனைவியை அல்லாஹ் உதாரணமாக கூறுகிறான். அவர் இறைவா! எனக்காக உன்னிடத்தில், சுவர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டித் தருவாயாக! இன்னும் ஃபிர்அவ்னை விட்டும், அவன் செயல்களை விட்டும் என்னை காப்பாற்றுவாயாக! இன்னும் அநியாயக்கார சமூகத்தாரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றுவாயாகஎன்று (பிரார்த்தித்துக்) கூறினார். என்று பிர்அவ்னின் மனைவி கூறியதால் அவரை நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் கூறுகிறான்.

உஹது தோல்வியைச் சந்தித்து காயத்துடன் 70 ஷுஹதாக்களின் பேரிழப்புகளை சுமந்து வலியுடன் மதீனா திரும்பிக் கொண்டிருந்த அம்மக்களை நோக்கி நாம் மீண்டும் மக்காவாசிகளை தாக்க திரும்ப வேண்டும் இது இறைவனின் கட்டளை என மாநபி (ஸல்) அவர்கள் கூறிய போது நபித்தோழர்கள் எடுத்த முடிவையும், அதற்கான பிரதிபலனையும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சிலாகித்து பின் வருமாறு பாராட்டிக் கூறுவான்.

اَلَّذِيْنَ اسْتَجَابُوْا لِلّٰهِ وَالرَّسُوْلِ مِنْۢ بَعْدِ مَاۤ اَصَابَهُمُ الْقَرْحُ

لِلَّذِيْنَ اَحْسَنُوْا مِنْهُمْ وَاتَّقَوْا اَجْرٌ عَظِيْمٌ‌

அவர்கள் எத்தகையோரென்றால் தங்களுக்கு(ப் போரில்) காயம்பட்ட பின்னரும் அல்லாஹ்வுடையவும், (அவனுடைய) ரஸூலுடையவும் அழைப்பை ஏற்(று மீண்டும் போருக்குச் சென்)றனர்;அத்தகையோரில் நின்றும் யார் அழகானவற்றைச் செய்து, இன்னும் பாவத்திலிருந்து தங்களைக் காத்துக் கொள்கிறார்களோ அவர்களுக்கு மகத்தான நற்கூலியிருக்கிறது.

اَلَّذِيْنَ قَالَ لَهُمُ النَّاسُ اِنَّ النَّاسَ قَدْ جَمَعُوْا لَـكُمْ فَاخْشَوْهُمْ فَزَادَهُمْ اِيْمَانًا وَّقَالُوْا حَسْبُنَا اللّٰهُ وَنِعْمَ الْوَكِيْلُ‏

மக்களில் சிலர் அவர்களிடம்; “திடமாக மக்களில் (பலர் உங்களுடன் போரிடுவதற்காகத்) திரண்டு விட்டார்கள், எனவே அப்படையைப்பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள்என்று கூறி (அச்சுறுத்தி)னர்; ஆனால் (இது) அவர்களின் ஈமானைப் பெருக்கி வலுப்படச் செய்தது: அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன். அவனே எங்களுக்குச் சிறந்த பாதுகாவலன்என்று அவர்கள் கூறினார்கள்.

فَانْقَلَبُوْا بِنِعْمَةٍ مِّنَ اللّٰهِ وَفَضْلٍ لَّمْ يَمْسَسْهُمْ سُوْٓءٌ وَّاتَّبَعُوْا رِضْوَانَ اللّٰهِ وَاللّٰهُ ذُوْ فَضْلٍ عَظِيْمٍ‏

இதனால் அவர்கள் அல்லாஹ்விடமிருந்து நிஃமத்தையும் (அருட்கொடையையும்,) மேன்மையையும் பெற்றுத் திரும்பினார்கள்; எத்தகைய தீங்கும் அவர்களைத் தீண்டவில்லை; (ஏனெனில்) அவர்கள் அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின்பற்றினார்கள் - அல்லாஹ் மகத்தான கொடையுடையவனாக இருக்கிறான். ( அல்குர்ஆன்: 3:  172 - 174 )

பிறர் நலம் நாடுவதே பிரதான நோக்கம்...

நாம் எடுக்கும் முடிவுகள் சமூகம் சார்ந்ததாக இருப்பின் அது சமூகத்தின் நலன் பிரதானமாக இருக்க வேண்டும்.
அதுவே ஈமானிய பண்பாகும்.

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «المُسْلِمُ مَنْ سَلِمَ المُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ، وَالمُؤْمِنُ مَنْ أَمِنَهُ النَّاسُ عَلَى دِمَائِهِمْ وَأَمْوَالِهِمْ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»

எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறாரோ அவர் தான் முஸ்லிம். எவரிடமிருந்து தங்கள் உயிர் மற்றும் பொருட்கள் பற்றி அச்சமற்று மக்கள் இருக்கிறார்களோ அவர் தான் உண்மையான முஃமின்  என்று இறைத்தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார் ( நூல்: திர்மிதீ )

عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: «بَايَعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى إِقَامِ الصَّلاَةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَالنُّصْحِ لِكُلِّ مُسْلِمٍ»

நான் நபி {ஸல்} அவர்களிடம் தொழுகையை நிலை நிறுத்துவதாகவும், ஸக்காத் வழங்குவதாகவும், ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நன்மையே நாடுவதாகவும் உறுதி மொழி எடுத்தேன் என ஜரீர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவித்தார்கள்.

عَنْ تَمِيمٍ الدَّارِيِّ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «الدِّينُ النَّصِيحَةُ» قُلْنَا: لِمَنْ؟ قَالَ: «لِلَّهِ وَلِكِتَابِهِ وَلِرَسُولِهِ وَلِأَئِمَّةِ الْمُسْلِمِينَ وَعَامَّتِهِمْ

தமீமுத் தாரீ (ரலி) அவர்கல் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், “மார்க்கம் (தீன்) என்பதே நலம் நாடுவது தான் என்று கூறினார்கள்.நாங்கள்,யாருக்கு (நலம் நாடுவது)?“ என்று கேட்டோம்.நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கும், அவனது வேதத்துக்கும், அவனது தூதருக்கும், முஸ்லிம் தலைவர்களுக்கும், அவர்களில் பொதுமக்களுக்கும் என்று பதிலளித்தார்கள்.                      ( நூல்: முஸ்லிம் )

மேற்கூறப்பட்ட நபிமொழிகளில் பிறர் நலம் நாடுதலை  ஈமானோடும், தீனோடும் தொடர்பு படுத்தி மாநபி {ஸல் கூறியதிலிருந்து இஸ்லாமிய மார்க்கம் பிறர் நலம் நாடுவதை எவ்வளவு அக்கறையோடு அணுகச் சொல்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

உறுதியாக முடிவெடுப்போம்! இறைவனிடம் பொறுப்புச் சாட்டுவோம்!!

فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ

“(நபியே! ஏதாவது ஒரு விஷயத்தில்) நீர் உறுதியான முடிவுக்கு வந்து விட்டால், அப்பொழுது அல்லாஹ்வையே முழுமையாக சார்ந்திருப்பீராக! ( அல்குர்ஆன்: 3: 159 )

இங்கே அல்லாஹ் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் முதலில் உறுதியான முடிவை மேற்கொள்ள வேண்டும் என்றும், பின்பு தான் அது குறித்து அல்லாஹ்விடம் தவக்குல் பொறுப்புச் சாட்ட வேண்டும் என்றும் மாநபி {ஸல்} அவர்களுக்கு வழிகாட்டுகின்றான் வல்லோன் அல்லாஹ்!.

2 comments:

  1. இளைஞர்களே நிதானமாக உறுதியாக முடிவெடுங்கள்!!!.

    ReplyDelete
  2. பில்கீஸ் பானுவின் உறுதியான முடிவு. குற்றவாலிகளுக்கு தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்.

    ReplyDelete