Thursday 25 January 2024

அச்சமற்ற வாழ்வு அல்லாஹ் வழங்கும் அழகிய அருட்கொடை!!

 

அச்சமற்ற வாழ்வு அல்லாஹ் வழங்கும் அழகிய அருட்கொடை!!


இந்திய தேசத்தின் 75 வது குடியரசு தினத்தை கொண்டாடி அமைந்திருக்கின்றோம்.

சுதந்திர இந்தியாவின் முதல் மைல் கல்லாக அமைந்தது குடியரசு தான் என்றால் அது மிகையல்ல.

நமக்கான தேவையை, நமக்கான முன்னேற்றத்தை, நமக்கான மாற்றத்தை, நாமே தீர்மானிப்பது நாமே முன்னெடுத்துச் செல்வது, நமக்குள் நாமே தேர்ந்தெடுப்பது, என்பதை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டதே குடியரசு என்று சொல்லலாம்.

ஆனால், இன்று இந்தியா அந்த மைய நீரோட்டத்தில் இருந்து மெல்ல மெல்ல விலகிச் சென்று கொண்டிருப்பதை நாம் அனுபவித்து வருகின்றோம்.

பெரும்பான்மை வாதம் பிரதானப் படுத்தப்படும் சூழல் அதை அங்கீகரிக்கும் நீதி பரிபாலன அமைப்பான நீதிமன்றம் என்று பேரபாயத்தை நோக்கி நம் தேசம் நகர்ந்து கொண்டிருக்கும் சூழலில் 75 வது குடியரசு தினத்தை நாம் கொண்டாடி அமைந்திருக்கின்றோம்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தேர்ந்தெடுத்த மக்களின் நலனில் அக்கறை கொள்ளாமல் சிலருக்கு மட்டுமான அரசாக மாறி வருவதையும் நாம் கண்டு வருகிறோம்.

குறிப்பாக, இந்த தேசத்தில் சிறுபான்மை சமூகமாக வாழ்ந்து வரும் இஸ்லாமிய சமூகம் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது.

மத்தியில் தொடர்ந்து இந்த அரசு நீடிக்குமானால் இஸ்லாமிய சமூகத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

எனவே, எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலோடு ஃபாசிஸ அரசுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த 75 வது குடியரசு தினத்தன்று நாம் சபதமேற்போம்!

வட மாநிலங்களில் சொல்லெனா துயரத்தை முஸ்லிம் சமூகம் சந்தித்து வருகிறது. பிஜேபி ஆளும் மாநிலங்களில் பல்வேறு சட்டங்களை இயற்றி முஸ்லிம் சமூகத்திற்கு நெருக்கடி தரப்படுகிறது.

ஊடகங்கள் ஃபாசிஸ அரசின் ஊதுகுழலாக செயல்படுவதால் முற்றிலுமாக அவர்களின் துன்பங்களும், அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளும் நமக்கு எட்டுவதில்லை. 

சமூக ஊடகங்கள் வாயிலாகவே அங்கொன்றும் இங்கொன்றுமாக நாம் சில செய்திகளை அறிந்து வருகிறோம்.

மொத்தத்தில் ஒரு பாதுகாப்பற்ற சூழலை இஸ்லாமிய சமூகம் உணர்கிறது.

அந்த சூழல் மாற வேண்டும், அச்சமற்ற பாதுகாப்பான நிலை ஏற்பட வேண்டும் 

அதற்கான காரணிகளை கண்டறிந்து இஸ்லாமிய சமூகம் முன்பை விட முனைப்போடு செயலாற்ற வேண்டும்.

இன்றைய உலகம் பசுமைக்காக ஏங்குவதைப் போன்று, நீருக்காக வாடுவதைப் போன்று பாதுகாப்புக்கான வாழ்க்கைக்காக பரிதவித்துக்கொண்டிருக்கின்றது என்பதை சர்வதேச அளவிலான நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.

பாதுகாப்பான சூழல், அமைதியான வாழ்க்கை முறை, சமாதானமான  சகவாழ்வு போன்றவைகளும் அல்லாஹ்வின் அருட்கொடைகள் தான் என்பதை நம்மில் எத்தனை பேர் நாம் உணர்ந்திருக்கின்றோம்?

குறைஷிகளுக்கு ஓர் அத்தியாயத்தையே இறக்கியருளி அச்சமற்ற பாதுகாப்பான வாழ்வை வழங்கியது தாம் வழங்கிய மகத்தான அருட்கொடை என்று கூறுவதை நாம் அவதானிக்க கடமைப்பட்டுள்ளோம்.

لِإِيلَافِ قُرَيْشٍ ، إِيلَافِهِمْ رِحْلَةَ الشِّتَاءِ وَالصَّيْفِ ، فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ ، الَّذِي أَطْعَمَهُمْ مِنْ جُوعٍ وَآمَنَهُمْ مِنْ خَوْفٍ ، (سورة قريش)

குறைஷிகளை மகிழ்வித்ததற்காகவும், குளிர் மற்றும் கோடை காலப் பயணங்களில் அவர்களை மகிழ்வித்ததற்காகவும் இந்த ஆலயத்தின் இறைவனை அவர்கள் வணங்கட்டும். பசியின் போது அவர்களுக்கு உணவளித்தான். பயத்திலிருந்து அவர்களுக்கு அபயமளித்தான்‘ (அல்குர்ஆன் 106:1-4)

பசியை உணர்கிற போது உண்பதற்குத் தேவையான உணவைக் கொடுத்து, எப்போதும் பயமற்ற சூழலை ஏற்படுத்திக் தந்து மகிழ்வான வாழ்வைத் தந்தமைக்காக தன்னை வணங்குமாறு அல்லாஹ் குறைஷிகளுக்கு ஆணையிடுவதன் மூலமாக  சந்தோசமான வாழ்வின் இலக்கணங்களாக அமைதி மற்றும் பாதுகாப்பையும்,  நிர்ணயித்தது அல்லாஹ் ஒருவனே என்பதையும், அதனை வழங்குவதும் அல்லாஹ் ஒருவனே என்பதையும் விளங்க முடிகிறது.

عَنْ سَلَمَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ مِحْصَنٍ الخَطْمِيِّ، عَنْ أَبِيهِ، وَكَانَتْ لَهُ صُحْبَةٌ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَصْبَحَ مِنْكُمْ آمِنًا فِي سِرْبِهِ مُعَافًى فِي جَسَدِهِ عِنْدَهُ قُوتُ يَوْمِهِ فَكَأَنَّمَا حِيزَتْ لَهُ الدُّنْيَا

سنن الترمذي 2346

தனது வீட்டில் பாதுகாப்பாக இருந்த நிலையிலும், தனது உடல் ஆரோக்கியத்துடன் இருந்த நிலையிலும், அன்றைய நாளுக்குப் போதுமான உணவைப் பெற்றிருந்த நிலையிலும் யார் ஒரு காலைப் பொழுதை அடைகின்றாரோ, அவர் உலகையே பெற்றவர் போன்றவர் ஆவார். (திர்மிதி)

ஒவ்வொரு மாதமும் தலைப் பிறையை கண்டதும் மாநபி {ஸல்} அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுமாறு கூறிய துஆவின் ஊடாக...

اللهم أهله علينا بالأمن و الإيمان و السلامة و الإسلام ربي و ربك الله هلال رشد و خير

அல்லாஹும்ம‌ அஹில்ல‌ஹூ அலைனா பில் அம்னி வ‌ல் ஈமான் வ‌ஸ்ஸ‌லாம‌த்தி வ‌ல் இஸ்லாம் ரப்பி  வ ரப்புக்கல்லாஹ் ஹிலாலு ருஸ்தின் வ ஹைர்.

அல்லாஹ்! இந்த‌ பிறையை பாதுகாப்பானதாக‌வும், ஈமானையும் இஸ்லாமையும் சாந்தியையும் கொண்டு த‌ர‌க் கூடிய‌தாக‌வும் வெளியாக்கி வை! (பிறையே!) என‌து ர‌ப்பும், உன‌து ர‌ப்பும் அல்லாஹ் தான்! இறைவா! நேர்வழிக்கும் நல்லதற்க்கும் வழிவகுக்கும் பிறையாக ஆக்கிவைப்பாயாக!

பாதுகாப்பான சூழல் மனித வாழ்வில் எவ்வளவு மகத்தானது என்பதை இரத்தினச் சுறுக்கமாக மாநபி (ஸல்) அவர்கள் கூறிய இந்த இரண்டு நபி மொழிகளும்  நாம் புரிந்து கொள்ள போதுமானதாகும்.

நபிமார்கள் விரும்பிய வாழ்வு!

மேன்மக்களான நபிமார்கள் அனைவரும் அச்சமற்ற வாழ்வையே விரும்பினார்கள் என்று அல்குர்ஆனின் பல்வேறு பாகங்களில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் குறிப்பிடுகின்றான்.

இப்றாஹீம் (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் கேட்டதும்...

وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ مَنْ آمَنَ مِنْهُمْ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ (البقرة -126)

இறைவா! இவ்வூரைப் பாதுகாப்பு மையமாக ஆக்குவாயாக! இவ்வூரில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பியோருக்குக் கனிகளை வழங்குவாயாக ( அல்குர்ஆன்:  2: 126 )

யூசுஃப் (அலை) அவர்கள் ஆதரவு வைத்ததும்...

فَلَمَّا دَخَلُوْا عَلٰى يُوْسُفَ اٰوٰٓى اِلَيْهِ اَبَوَيْهِ وَقَالَ ادْخُلُوْا مِصْرَ اِنْ شَآءَ اللّٰهُ اٰمِنِيْنَ

(பின்னர் குடும்பத்துடன்) அவர்கள் யூஸுஃபிடம் வந்தபோது, அவர் தம் தாய் தந்தையரை (கண்ணியத்துடன் வரவேற்றுத்) தம்முடன் வைத்துக் கொண்டார்; இன்னும் அல்லாஹ் நாடினால் நீங்கள் மிஸ்ருக்குள் அச்ச மற்றவர்களாகப் பிரவேசியுங்கள்என்றும் கூறினார். ( அல்குர்ஆன்: 12: 99 )

மூஸா (அலை) அவர்களுக்கு அல்லாஹ் ஆறுதல் கூறியதும்...

وَاَنْ اَ لْقِ عَصَاكَ‌ فَلَمَّا رَاٰهَا تَهْتَزُّ كَاَنَّهَا جَآنٌّ وَّلّٰى مُدْبِرًا وَّلَمْ يُعَقِّبْ‌ يٰمُوْسٰٓى اَ قْبِلْ وَلَا تَخَفْ اِنَّكَ مِنَ الْاٰمِنِيْنَ‏

உம் கைத்தடியைக் கீழே எறியும்என்றும் (கட்டளையிடப்பட்டார். அவ்வாறு எறிந்ததும்) அது பாம்பைப் போன்று நெளிவதைக் கண்டு, அவர் திரும்பிப் பார்க்காமல் பின் வாங்கி ஓடினார்; (அப்பொழுது): மூஸாவே! முன்னோக்கி வாரும்! இன்னும், அஞ்சாதீர்; நீர் அச்சமற்றவர்களில் உள்ளவர்.” ( அல்குர்ஆன்: 28: 31 )

அச்சமற்ற வாழ்விற்கு குந்தகம் ஏற்படுத்தும் காரணிகள் 2.

1. இணைவைப்பு.

الَّذِينَ آمَنُوا وَلَمْ يَلْبِسُوا إِيمَانَهُمْ بِظُلْمٍ أُولَئِكَ لَهُمُ الْأَمْنُ وَهُمْ مُهْتَدُونَ 

நம்பிக்கை கொண்டு, தமது நம்பிக்கையுடன் அநீதியைக் கலந்து விடாமல் இருப்போர்க்கே அச்சமற்ற நிலை உள்ளது. அவர்களே நேர்வழி பெற்றோர். ( அல்குர்ஆன்: 6: 82 )

மேற்கூறிய இறை வசனத்தில் ஈமானுடன் அநீதியைக் கலந்து விடாமல் இருப்பவர்களுக்கே அச்சமற்ற நிலை உள்ளதுஎனக்கூறப்பட்டுள்ளது. இங்கு அநீதி என்ற வார்த்தை, அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதைக் குறிக்கின்றது என்பதாக நேரடியாக நபி (ஸல்) அவர்களே விளக்கியிருக்கிறார்கள். 

ஆகவே அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பது மிகப்பெரும் பாவமாக இருக்கின்ற அதேவேளையில், அதனால் ஏற்படும் மோசமான விளைவுகளில் பாதுகாப்பற்ற தன்மையும் ஒன்றாகும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

2. இறைவனுக்கு நன்றி செலுத்தாமல் இருப்பது.

وَضَرَبَ اللَّهُ مَثَلًا قَرْيَةً كَانَتْ آمِنَةً مُطْمَئِنَّةً يَأْتِيهَا رِزْقُهَا رَغَدًا مِنْ كُلِّ مَكَانٍ فَكَفَرَتْ بِأَنْعُمِ اللَّهِ فَأَذَاقَهَا اللَّهُ لِبَاسَ الْجُوعِ وَالْخَوْفِ بِمَا كَانُوا يَصْنَعُونَ 

ஓர் ஊரை அல்லாஹ் முன்னுதாரணமாகக் கூறுகின்றான். அது நிம்மதியுடனும், அமைதியுடனும் இருந்தது. ஓவ்வொரு இடத்திலிருந்தும் அவ்வூருக்குரிய உணவு தாரளமாக வந்து சேர்ந்தது. ஆனால் அவ்வூர் அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி மறந்தது. எனவே அவர்கள் செய்து கொண்டிருந்ததன் காரணமாக பசி மற்றும் பயம் எனும் ஆடையை அல்லாஹ் அவ்வூருக்கு அணிவித்தான்‘. ( அல்குர்ஆன்:  16: 112 )

அச்சமற்ற வாழ்வு உண்டா?

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தன்னுடைய அருள் மறையில் அச்சமற்ற பாதுகாப்பான வாழ்வு தருவதாக வாக்குறுதி தந்துள்ளான்.

அந்த வாக்குறுதி நிலையானது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

وَعَدَ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا مِنْكُمْ وَ عَمِلُوا الصّٰلِحٰتِ لَـيَسْتَخْلِفَـنَّهُمْ فِى الْاَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِيْنَهُمُ الَّذِى ارْتَضٰى لَهُمْ وَلَـيُبَدِّلَــنَّهُمْ مِّنْۢ بَعْدِ خَوْفِهِمْ اَمْنًا‌ يَعْبُدُوْنَنِىْ لَا يُشْرِكُوْنَ بِىْ شَيْــٴًــــا‌ وَمَنْ كَفَرَ بَعْدَ ذٰ لِكَ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ‏

உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல், பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்; “அவர்கள் என்னோடு (எதையும், எவரையும்) இணைவைக்காது, அவர்கள் என்னையே வணங்குவார்கள்;” இதன் பின்னர் (உங்களில்) எவர் மாறு செய்(து நிராகரிக்)கிறாரோ அவர்கள் பாவிகள்தாம். ( அல்குர்ஆன்: 24: 55 )

வாக்குறுதியை நோக்கி பயணிக்க தயாராகுவோம்!

1. எப்போதும் ஆயத்தமாக இருத்தல்.

وَاَعِدُّوْا لَهُمْ مَّا اسْتَطَعْتُمْ مِّنْ قُوَّةٍ وَّمِنْ رِّبَاطِ الْخَـيْلِ تُرْهِبُوْنَ بِهٖ عَدُوَّ اللّٰهِ وَعَدُوَّكُمْ وَاٰخَرِيْنَ مِنْ دُوْنِهِمْ‌ لَا تَعْلَمُوْنَهُمُ‌ اَللّٰهُ يَعْلَمُهُمْ‌ؕ وَمَا تُـنْفِقُوْا مِنْ شَىْءٍ فِىْ سَبِيْلِ اللّٰهِ يُوَفَّ اِلَيْكُمْ وَاَنْـتُمْ لَا تُظْلَمُوْنَ‏

அவர் (நிராகரிப்பவர்)களை எதிர்ப்பதற்காக உங்களால் இயன்ற அளவு பலத்தையும், திறமையான போர்க் குதிரைகளையும் ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்; இதனால் நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும், உங்களுடைய எதிரியையும் அச்சமடையச் செய்யலாம்; அவர்கள் அல்லாத வேறு சிலரையும் (நீங்கள் அச்சமடையச் செய்யலாம்); அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள் - அல்லாஹ் அவர்களை அறிவான்; அல்லாஹ்வுடைய வழியில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும், (அதற்கான நற்கூலி) உங்களுக்கு பூரணமாகவே வழங்கப்படும்; (அதில்) உங்களுக்கு ஒரு சிறிதும் அநீதம் செய்யப்பட மாட்டாது. ( அல்குர்ஆன்: 8: 60 )

இந்த இறைவசனத்தில்  பகைவர்களையும், விரோதிகளையும்  எதிர் கொள்வதற்கு வலிமை அவசியம் என்பதையும், முஸ்லிம் சமூகம் எதிர் கொள்வதற்காக எப்போதும் தயார்  நிலையில் இருக்க வேண்டும்  என்பதையும் அல்லாஹ்  குறிப்பிடுகின்றான்.

இந்த இறைவசனம் ஜிஹாதை மட்டும் வலியுறுத்தவில்லை. மாறாக,  ஷைத்தான்  நமக்கு விரோதியாவான்  அவனை எதிர் கொள்ள சில போது நமக்கு ஆன்மீக வலிமை அவசியம். அறியாமை நமக்கு விரோதியாகும்  அதை எதிர் கொள்ள சில போது  அறிவாற்றல் அவசியம். ஏழ்மையும்,  வறுமையும் நமக்கு விரோதியாகும் அவைகளை எதிர் கொள்ள சில போது மன வலிமையும், சில போது  பொருளாதார பலமும் அவசியம்.  கொடுங்கோன்மை நிறைந்த  ஆட்சியாளார்களை எதிர் கொள்ள சில போது அரசியல் வலிமை அவசியம்அதிகார வரம்பை நமக்கெதிராக சுழற்றும் அதிகாரிகளுக்கு எதிரா  சில போது அதிகார பலம் அவசியம்  இப்படியாக நாம் பலம் பெற்று நம்முடைய சமூகத்தையும் நாம் பலப் படுத்த கடமைப்  பட்டிருக்கின்றோம்.

பலமான இறைநம்பிக்கையாளனையே இறைவன் நேசிக்கிறான்.

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُؤْمِنُ الْقَوِيُّ خَيْرٌ وَأَحَبُّ إِلَى اللَّهِ مِنْ الْمُؤْمِنِ الضَّعِيفِ

பலகீனமான இறைநம்பிக்கையாளரை விட சக்தியும், வலிமையும் நிறைந்த இறைநம்பிக்கையாளரே சிறந்தவரும், அல்லாஹ்விற்கு அதிக விருப்பமானவரும் ஆவார்என மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்தார்கள். ( நூல்: திர்மிதி )

அந்த இளைஞர் ஓர் ஆட்டு மந்தையை ஓட்டிச் சென்று வாழ்வைக் கழிக்கும் இடையர்.

அல்லாஹ்வின் தூதரை அகபாவில் சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு பிரமாணம் எடுத்துக் கொள்ளும் வாய்ப்பும் பெற்றார்.

பின்னர் ஊர் (மதீனா) சென்ற அந்த இளைஞர் மாநபி (ஸல்) அவர்களின் மதீனா வருகைக்காக காத்திருந்தார்.

அண்ணலார் (ஸல்) அவர்கள் மதீனா வந்தடைந்த நேரத்தில் அந்த இளைஞர் மதீனாவை விட்டும் தூரமான பகுதியில் தம்முடைய ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்.

ஓரிரு தினங்களுக்குப் பிறகே அவருக்கு மாநபி ஸல் அவர்களின் மதீனா வருகை கிடைக்கப் பெறுகிறது.

ஆடுகளை அங்கேயே அப்படியே விட்டு விட்டு மதீனா வந்தடைந்து மாநபி ஸல் அவர்களைச் சந்தித்து தம்முடைய பிரமாணத்தைப் புதுப்பித்துக் கொண்டு முகமலர்ச்சியோடு மீண்டும் இடையர் பணிக்கு திரும்பி விட்டார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அருகேயே அமர்ந்து சன்மார்க்க கல்வியை கற்க வேண்டும் என்ற ஆவல் உந்தவே தம் ஆட்டு மந்தையை (சில ஆடுகளை) வேறு ஒருவரிடம் விற்று விட்டு மீண்டும் மதீனா வந்து மாநபி ஸல் அவர்களின் "அஸ்ஹாபுஸ் ஸுஃப்ஃபா" அணியில் ஐக்கியமானார்.

கொஞ்சம் கொஞ்சமாக மாநபி ஸல் அவர்களின் அருகாமையைப் பெற்ற அந்த இளைஞர் அழகிய முறையில் அல்குர்ஆனை ஓதும் காரீ ஆனார்.

لزم عقبة بن عامرٍ الجهنيُّ رسول الله صلى الله عليه وسلم لزوم الظِّلِّ لصاحبه، فكان يأخذ له بزمام بغلته أينما سار، و يمضي بين يديه أنَّى اتجَّه، وكثيراً ما أردفه(12) رسول الله صلى الله عليه وسلم وراءه، حتى دعي برديف رسول الله، وربَّما نزل له النبيُّ الكريم عن بغلته ليكون هو الذي يركب، و النبي عليه الصلاة و السلام هو الذي يمشي .

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பயண வாகனத்தை பராமரிக்கும் பொறுப்பைப் பெற்ற அந்த இளைஞர் மாநபி (ஸல்) அவர்களின் வாகனத்தின் மூக்கணாங்கயிற்றை பிடித்து மாநபி ஸல் அவர்களை அழைத்துச் செல்லும் வாகன ஓட்டியானார்.

சற்று நாள்களில் மாநபி (ஸல்) அவர்களின் தூர பயணத்தின் பாதுகாவலராக மாறி, மாநபி ஸல் அவர்களின் அண்மையில் அமர்ந்து பயணிக்கும் பேற்றை பெற்றார்.

நபித்தோழர்கள் எல்லாம் "மாநபி ஸல் அவர்களின் பயணத் தோழர்" என்றழைக்கப்படும் நிலைக்கு உயர்ந்தார்.

ولقد جعل عقبة بن عامرٍ الجهنيُّ همَّه

() في أمرين اثنين :

العلم والجهاد  

و انصرف إليهما بروحه و جسده، و بذل لهما من ذاته أسخ البذل، وأكرمه .

أما في مجال العلم فقد جعل يعبُّ من مناهل رسول الله الثرَّة(15) العذبة حتى غدا مقرئاً، محدِّثاً، فقيهاً، فرضياً()، أديباً، فصيحاً، شاعراً .

وكان من أحسن النّاس صوتاً بالقرآن، و كان إذا ما سجا(

الليل وهدأ الكون انصرف إلى كتاب الله يقرأ من آياته البيَّنات، فتصغي لترتيله أفئدة الصحابة الكرام، و تخشع له قلوبهم وتفيض عيونهم بالدمع من خشية الله .

அந்த இளைஞர் இரண்டு விஷயங்களில் முண்ணனியில் இருந்தார்.

ஒன்று மார்க்க அறிவு, குர்ஆனை மனனம் செய்து, அழகிய குரலில் ஓதுவது. வாரிசுரிமை சட்டத்தை கற்றுக் கொண்டது, மாநபி ஸல் அவர்களின் அண்மையிலேயே இருந்ததால் நபிமொழிகளை அறிந்து கொண்டது.

இரண்டு: மிகச் சிறந்த போர் வீரராக, குறி தவறாமல் அம்பெய்யும் வீரராக பரிணமித்தார். பத்ரில் துவங்கி மாநபி ஸல் அவர்களுடன் அத்துனை போர்களிலும் பங்கேற்றார். மாநபி ஸல் அவர்களின் மறைவுக்குப் பின்னர் அபூபக்ர் சித்தீக் (ரலி) கிலாஃபத் முதற் கொண்டு முஆவியா (ரலி) அவர்களின் கிலாஃபத் வரை நடந்த அத்துனை போர்களிலும் தளராமல் அயராமல் பங்கேற்றார்.

இதனிடையே அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில், உமர் (ரலி) ஆட்சி காலத்தில் மக்களுக்கு குர்ஆனைக் கற்றுக் கொடுக்கும், நபிமொழிகளை கற்றுக் கொடுக்கும், முக்கியமான சட்டங்களை மக்களுக்கு சொல்லிக் கொடுக்கும் ஆசானாக மிளிர்ந்தார்.

குறிப்பாக உமர் (ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில் எகிப்து வெற்றி கொள்ளப்படும் போது அந்தப் படையில் அம்பெறியும் பிரிவுக்கு தளபதியாக செயல்பட்டு, பின்னர் எகிப்து மக்களுக்கு தீன் அறிவை கற்றுக் கொடுக்கும் ஆசானாக அம்ரு இப்னுல் ஆஸ் (ரலி) அவர்களுடன் இணைந்தார்.

ثم إنَّه كان أحد قادة جيوش المسلمين التي فتحت مصر، 

فكافأه أمير المؤمنين معاوية بن أبي سفيان بأن جعله والياً عليها ثلاث سنين، ثم وجَّهه لغزو جزيرة رودس في البحر الأبيض المتوسِّط . و قد بلغ من ولع عقبة بن عامرٍ الجهنيِّ بالجهاد، أنه وعى أحاديث الجهاد في صدره، و اختصَّ بروايتها للمسلمين، وأنه دأب على حذق الرِّماية حتى إنَّه إذا أراد أن يتلهَّى تلهَّى بالرَّمي .

ولما مرض عقبة بن عامرٍ الجهنيُّ مرض الموت - وهو في مصر و لما أدركته الوفاة، دفنوه في سفح المقّطم(19) ثم انقلبوا إلى تركته يفتِّشونها، فإذا هو قد خلَّف بضعاً وسبعين قوساً، مع كلِّ قوسٍ قرنٌ ونبالٌ، وقد أوصى بهنَّ أن يجعلن في سبيل الله .

نضَّر الله وجه القارىء العالم الغازي عقية بن عامرٍ الجهنيِّ، وجزاه عن الإسلام و المسلمين خير الجزاء

முஆவியா (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் முஆவியா (ரலி) அவர்கள் அந்த இளைஞரை எகிப்தின் ஆளுநராக பொறுப்பில் அமர வைத்தார்கள்.

மூன்று ஆண்டுகள் கழித்து கடல் மார்க்கமாக நடைபெற்ற ஒரு போருக்கு பொறுப்பேற்க முஆவியா (ரலி) அவர்கள் அழைத்த போது மறுக்காமல் அந்த போரில் பங்கு பெற்று மகத்தான வெற்றியோடு எகிப்து திரும்பினார்கள்.

தங்களுடைய வாழ்க்கையின் பெரும்பகுதியை சமூகத்தின் (தீன் மற்றும் துன்யா) பாதுகாப்பான வாழ்விற்காக தம் மொத்த வாழ்க்கையையும் ஆசானாக, வீரனாக, தளபதியாக, அதிகாரியாக அமைத்துக் கொண்டார்.

எல்லோரும் போலவே முதுமையை அடைந்து நோய் வாய்பட்டு இறைவனின் அழைப்பை ஏற்றுக் கொண்டார் அவர். (அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர்களைப் பொருந்திக் கொள்வானாக!)

யார் அவர்? அவர் தான் உக்பா இப்னு ஆமிர் (ரலி) அவர்கள். ( நூல்: ஸியரு அஃலா மின் நுபலா, தபகாத் இப்னு ஸஅத் )

இடையராக வாழ்க்கையை துவங்கி. இந்த உம்மத்தின் அச்சமற்ற வாழ்வுக்காக அல்லாஹ் தமக்கு வழங்கிய அத்துனை ஆற்றல்களையும் அல்லாஹ்விற்காகவே அர்ப்பணித்தார்.

அவர்கள் இறக்கும் போது அவர்கள் விட்டுச் சென்ற சொத்தான 70 வில் 70 அம்புகள் அவர்களின் விருப்பப்படியே முஜாஹிதீன்களுக்கு பங்கு வைக்கப்பட்டது. இறந்த பின்னரும் கூட இந்த உம்மத்தின் பாதுகாப்பான சூழலையே அந்த மாமனிதர் தேர்ந்தெடுத்தார்கள்.

இந்த உம்மத்திற்கும் இப்படியான உக்பாக்கள் தேவைப்படுகிறார்கள்.

வாருங்கள்! உக்பாக்களை உருவாக்குவோம்!

வாருங்கள்! உக்பாக்களாக உருவாகுவோம்!

அச்சமற்ற வாழ்வை சமூகத்திற்கு வழங்குவோம்!!

3 comments:

  1. மாஷா அல்லாஹ் அருமையான பதிவு ஹஜ்ரத் அவர்களுக்கு அல்லாஹுத்தஆலா ஈருலகிலும் நற்பாக்கியங்களை நல்குவானாக ஆமீன்

    ReplyDelete
  2. இந்த உம்மத்திற்கும் இப்படியான உக்பாக்கள் தேவைப்படுகிறார்கள்.👌

    ReplyDelete
  3. மாஷா அல்லாஹ் அருமையான பதிவு ஹஜரத்

    ReplyDelete