Monday 1 April 2024

தமது ஆயுளை அமல்களால் அலங்கரித்தவரே சிறந்தவர்!!

 

தராவீஹ் சிந்தனை:  23. சிறந்த அமல் & சிறந்த காரியம் தொடர்:- 13.

தமது ஆயுளை அமல்களால் அலங்கரித்தவரே சிறந்தவர்!!



அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உடைய மகத்தான கருணையால் 22 -ம் நோன்பை நிறைவு செய்து விட்டு, 23 -ம் நாள் தராவீஹ் தொழுகையை தொழுது முடித்து நாம் அமர்ந்திருக்கின்றோம். 

அல்ஹம்துலில்லாஹ்! நபி (ஸல்) அவர்கள் சிறப்பு படுத்திக் கூறிய சில செயல்கள் மற்றும் சில காரியங்கள் மற்றும் சில விஷயங்கள்  குறித்து நாம் பார்த்து வருகின்றோம்.

அந்த வகையில் இந்த நாளின் இன்றைய அமர்வில் "நீண்ட ஆயுட்காலம் வாழ்ந்தவர்களில் சிறந்தவர் யார்?" என்ற கேள்விக்கு நபி மொழியை அடிப்படையாகக் கொண்டு சில விஷயங்களை பேசவும் கேட்கவும் இருக்கின்றோம்.

"حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زَيْدُ بْنُ حُبَابٍ ‏ ‏عَنْ ‏ ‏مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ قَيْسٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ بُسْرٍ ‏ ‏أَنَّ أَعْرَابِيًّا قَالَ يَا رَسُولَ اللَّهِ مَنْ خَيْرُ النَّاسِ قَالَ ‏ ‏مَنْ طَالَ عُمُرُهُ وَحَسُنَ عَمَلُهُ ‏ ‏وَفِي ‏ ‏الْبَاب ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏وَجَابِرٍ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو عِيسَى ‏ ‏هَذَا ‏ ‏حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ ‏ ‏مِنْ هَذَا الْوَجْهِ .

அப்துல்லாஹ் இப்னு புஸ்ருல் மாஸினீ (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: ஒரு கிராமவாசி நபி {ஸல்} அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! மனிதர்களில் மிகவும் சிறந்தவர் யார்? என்று கேட்டார்.

அதற்கு, நபி {ஸல்} அவர்கள் ஒருவரின் ஆயுள் நீட்டிக்கப்பட்டு, அவரின் இபாதத்களும் அழகாக அமைந்திருக்குமே அவர் தான் மனிதர்களில் மிகவும் சிறந்தவர்என்றார்கள். ( நூல்: திர்மிதி ஹதீஸ் எண் 2330).

நீண்ட ஆயுள் வாழும் ஒருவர் உம்மத்தின் பரக்கத்திற்கு காரணமாக அமைகிறார்..

عَنِ ابْنِ عَبَّاسٍ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اَلْبَرَكَةُ مَعَ اَكَابِرِكُمْ. رواه الحاكم

 நபி அவர்கள், உங்களுடைய பெரியவர்களுடன் பரக்கத் இருக்கிறது” ( நூல்: முஸ்தத்ரக் ஹாகிம்)

நீண்ட ஆயுள் வாழும் ஒருவர் தமது பாவ மன்னிப்பிற்கு காரணமாகவும், நன்மைகள் உயர்வதற்கு காரணமாகவும் அமைகிறார்.

عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ اَنَّ رَسُوْلَ الله ﷺ قَالَ: لاَ تَنْتِفُوا الشَّيْبَ فَاِنَّهُ نُوْرٌ يَوْمَ الْقِيَامَةِ، وَمَنْ شَابَّ شَيْبَةً فِي اْلاِسْلاَمِ كُتِبَ لَهُ بِهَا حَسَنَةٌ، وَحُطَّ عَنْهُ بِهَا خَطِيْئَةٌ، وَرُفِعَ لَهُ بِهَا دَرَجَةٌ. رواه ابن حبان

நரைமுடிகளைப் பிடுங்காதீர்கள், ஏனென்றால், கியாமத் நாளன்று இது பிரகாசத்திற்குக் காரணமாகும், எவர் இஸ்லாத்தில் இருக்கின்ற நிலையில் வயோதிகமடைகிறாரோ, (ஒரு முஸ்லிமுடைய ஒரு முடி நரைத்துவிட்டால்), அதன் காரணமாக அவருக்கு ஒரு நன்மை எழுதப்படுகிறது. ஒரு பாவம் மன்னிக்கப்படுகிறது. ஒரு பதவி உயர்த்தப்படுகிறது  ( நூல்: இப்னு ஹிப்பான் )

 

நீண்ட ஆயுள் வாழும் ஒருவர் சமூகத்தின் அடையாளமாக அமைகிறார்.

عَنْ سَهْلِ بْنِ أَبِي حَثْمَةَ، قَالَ انْطَلَقَ عَبْدُ اللَّهِ بْنُ سَهْلٍ وَمُحَيِّصَةُ بْنُ مَسْعُودِ بْنِ زَيْدٍ إِلَى خَيْبَرَ، وَهْىَ يَوْمَئِذٍ صُلْحٌ، فَتَفَرَّقَا، فَأَتَى مُحَيِّصَةُ إِلَى عَبْدِ اللَّهِ بْنِ سَهْلٍ وَهْوَ يَتَشَحَّطُ فِي دَمٍ قَتِيلاً، فَدَفَنَهُ ثُمَّ قَدِمَ الْمَدِينَةَ، فَانْطَلَقَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ سَهْلٍ وَمُحَيِّصَةُ وَحُوَيِّصَةُ ابْنَا مَسْعُودٍ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم، فَذَهَبَ عَبْدُ الرَّحْمَنِ يَتَكَلَّمُ فَقَالَ “” كَبِّرْ كَبِّرْ »‏ وَهْوَ أَحْدَثُ الْقَوْمِ، فَسَكَتَ»‏‏ [إلخ] رواه البخاري

அப்துர்ரஹ்மான் பின் சஹ்ல் (ரலி) அவர்களும், முஹய்யிஸா பின் மஸ்ஊத் (ரலி) அவர்களும், ஹுவைய்யிஸா பின் மஸ்ஊத் (ரலி) அவர்களும், நபி அவர்களிடம் வந்தார்கள்.

அப்துர்ரஹ்மான் பின் சஹ்ல் (ரலி) அவர்கள் (நபி அவர்களிடம்) பேசத் துவங்கினார்கள். நபி அவர்கள், ‘பெரியவர்களைப் பேச விடு! பெரியவர்களைப் பேச விடு!என்று கூறினார்கள். அந்த மூவரில் அப்துர்ரஹ்மான் பின் சஹ்ல் (ரலி) அவர்கள் வயதில் சிறியவராக இருந்தார்கள். உடனே அவர்கள் (வாய் மூடி) மௌனமாகி விட்டார்கள். பின்பு முஹய்யிஸா (ரலி) அவர்களும் ஹுவைய்யிஸா (ரலி) அவர்களும், நபி அவர்களிடம் பேசினார்கள்.  ( நூல்: புகாரி )

நீண்ட ஆயுள் குறித்தான கண்ணோட்டம்

وَاللَّهُ خَلَقَكُمْ مِنْ تُرَابٍ ثُمَّ مِنْ نُطْفَةٍ ثُمَّ جَعَلَكُمْ أَزْوَاجًا وَمَا تَحْمِلُ مِنْ أُنْثَى وَلَا تَضَعُ إِلَّا بِعِلْمِهِ وَمَا يُعَمَّرُ مِنْ مُعَمَّرٍ وَلَا يُنْقَصُ مِنْ عُمُرِهِ إِلَّا فِي كِتَابٍ إِنَّ ذَلِكَ عَلَى اللَّهِ يَسِيرٌ ()

அல்லாஹ் உங்களை மண்ணிலிருந்து படைத்தான்; பிறகு இந்திரியத்திலிருந்து படைத்தான். பின்னர், உங்களை ( ஆண் பெண் என ) ஜோடிகளாய் ஆக்கினான். அல்லாஹ் அறியாமல் எந்த ஒரு பெண்ணும் கர்ப்பம் தரிப்பதுமில்லை; குழந்தையைப் பெறுவதுமில்லை!

இவ்வாறே நீண்ட ஆயுள் உடையவர் அதிக வயதைப் பெறுவதுமில்லை, எவருடைய வயதும் குறைக்கப்படுவதுமில்லை; இவையனைத்தும் அந்த ஏட்டில் பதியப்படாமல்! திண்ணமாக, அல்லாஹ்வுக்கு இது மிக எளிய காரியமாகும்”.

( அல்குர்ஆன்: 35: 11 )

وَأَنْفِقُوا مِنْ مَا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُنْ مِنَ الصَّالِحِينَ () وَلَنْ يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا وَاللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ ()

உங்களில் எவருக்கேனும் மரண நேரம் வருவதற்கு முன்பாகவே நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து செலவு செய்து விடுங்கள்! ஏனெனில், சிலர் அந்த நேரத்தில் இறைவா! நீ எனக்கு இன்னும் சிறிது காலம் அவகாசம் அளிக்கக்கூடாதா? நான் தானதர்மம் செய்வேனே! நல்லோர்களில் ஒருவனாகி விடுவேனே!என்று கூறுவார்.

 

ஆனால், ஒருவருக்கு அவர் வாழ்நாளின் அவகாசம் முடிவடையும் நேரம் வந்து விட்டாலோ எந்த மனிதனுக்கும் கால அவகாசத்தை அல்லாஹ் கண்டிப்பாக வழங்குவதில்லை. மேலும், நீங்கள் என்னென்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கின்றான்”.               ( அல்குர்ஆன்: 63: 10,11 )

قَالَ يَا قَوْمِ إِنِّي لَكُمْ نَذِيرٌ مُبِينٌ () أَنِ اعْبُدُوا اللَّهَ وَاتَّقُوهُ وَأَطِيعُونِ () يَغْفِرْ لَكُمْ مِنْ ذُنُوبِكُمْ وَيُؤَخِّرْكُمْ إِلَى أَجَلٍ مُسَمًّى إِنَّ أَجَلَ اللَّهِ إِذَا جَاءَ لَا يُؤَخَّرُ لَوْ كُنْتُمْ تَعْلَمُونَ ()

இறைத்தூதர் நூஹ் (அலை) அவர்கள் தம் சமூகத்தாரை நோக்கி கூறினார்: சமூக மக்களே! உங்களுக்கு நான் தெளிவாக எச்சரிக்கை செய்யக்கூடியவனாக இருக்கின்றேன். ஆகவே, அல்லாஹ்வையே வணங்குங்கள்; இன்னும் அவனுக்கு நீங்கள் அஞ்சுங்கள்; மேலும், எனக்கு நீங்கள் வழிபடுங்கள்.

அப்படி நீங்கள் செய்வீர்களாயின், அவன் உங்களின் பாவங்களை மன்னிப்பான். மேலும், ஒரு குறிப்பிட்ட காலம் வரை அவகாசம் அளிப்பான். திண்ணமாக, அல்லாஹ் அளிக்கிற அவகாசம் வந்து விட்டதென்றால் அது ஒரு போதும் பிற்படுத்தப் பட மாட்டாது. இதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமே!

 ( அல்குர்ஆன்: 71: 2,3,4 )

இத்தகைய நீண்ட ஆயுள் "வேண்டாம்"...

وَمَنْ نُّعَمِّرْهُ نُـنَكِّسْهُ فِى الْخَـلْقِ‌ؕ اَفَلَا يَعْقِلُوْنَ‏

நாம் யாருக்கு வாழ்நாள் அளித்தோமோ அவரைப் படைப்பில் இறங்குமுகமாக்குகிறோம். (இதை) அவர்கள் விளங்க மாட்டார்களா?

( அல்குர்ஆன்: 36: 68 )

وَاللّٰهُ خَلَقَكُمْ ثُمَّ يَتَوَفّٰٮكُمْ‌ۙ وَمِنْكُمْ مَّنْ يُّرَدُّ اِلٰٓى اَرْذَلِ الْعُمُرِ لِكَىْ لَا يَعْلَمَ بَعْدَ عِلْمٍ شَيْــًٔا‌ؕ اِنَّ اللّٰهَ عَلِيْمٌ قَدِيْرٌ

அல்லாஹ்வே உங்களைப் படைத்தான். பின்னர் உங்களைக் கைப்பற்றுவான். அறிந்ததற்குப் பின் எதையும் அறியாதவராக ஆகிட, முதிர்ந்த வயது வரை தள்ளப்படுவோரும் உங்களில் உள்ளனர். அல்லாஹ் அறிந்தவன், ஆற்றலுடையவன். ( அல்குர்ஆன்: 16: 70 )

يٰۤـاَيُّهَا النَّاسُ اِنْ كُنْـتُمْ فِىْ رَيْبٍ مِّنَ الْبَـعْثِ فَاِنَّـا خَلَقْنٰكُمْ مِّنْ تُرَابٍ ثُمَّ مِنْ نُّـطْفَةٍ ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ مِنْ مُّضْغَةٍ مُّخَلَّقَةٍ وَّغَيْرِ مُخَلَّقَةٍ لِّـنُبَيِّنَ لَـكُمْ‌ ؕ وَنُقِرُّ فِى الْاَرْحَامِ مَا نَشَآءُ اِلٰٓى اَجَلٍ مُّسَمًّى ثُمَّ نُخْرِجُكُمْ طِفْلًا ثُمَّ لِتَبْلُغُوْۤا اَشُدَّكُمْ ‌ۚ وَمِنْكُمْ مَّنْ يُّتَوَفّٰى وَمِنْكُمْ مَّنْ يُّرَدُّ اِلٰٓى اَرْذَلِ الْعُمُرِ لِكَيْلَا يَعْلَمَ مِنْۢ بَعْدِ عِلْمٍ شَيْــًٔـا‌ ؕ

மனிதர்களே! மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவதில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால் (உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறோம்.) உங்களை மண்ணாலும், பின்னர் விந்துத் துளியாலும், பின்னர் கருவுற்ற சினை முட்டையாலும், பின்னர் முழுமைப்படுத்தப்பட்டதும் முழுமைப்படுத்தப்படாததுமான தசைக்கட்டியாலும் படைத்தோம்.

நாம் நாடியதைக் கருவறைகளில் குறிப்பிட்ட காலம் வரை நிலை பெறச் செய்கிறோம். பின்னர் உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்னர் உங்கள் பருவத்தை அடைகின்றீர்கள். உங்களில் கைப்பற்றப்படுவோரும் உள்ளனர். அறிந்த பின் எதையும் அறியாமல் போவதற்காக தள்ளாத வயது வரை கொண்டு செல்லப்படுவோரும் உங்களில் உள்ளனர். ( அல்குர்ஆன்: 22: 5 )

ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) அவர்கள் தம் மக்களுக்குப் பின்வரும் (பிரார்த்தனை) வாசகங்களை ஆசிரியர் மாணவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுப்பதைப் போன்று கற்றுக் கொடுத்தார்கள்:

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ، وَأَعُوذُ بِكَ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ

அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் ஜுப்னி, வஅஊது பிக்க அன் உரத்த இலா அர்தலில் உமுரி, வ அஊது பிக்க மின் ஃபித்னத்தித் துன்யா, வ அஊது பிக்க மின் அதாபில் கப்ரி

(பொருள்: இறைவா! நான் கோழைத்தனத்திலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன். மூப்பின் மோசமான நிலையை அடைவதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன். உலகின் சோதனைகளிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன். கப்ரின் வேதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன்)

இந்த விஷயங்களிலிருந்தெல்லாம் நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்குப் பின்பு பாதுகாப்புக் கோரி வந்தார்கள்என்றும் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அம்ரு பின் மைமூன் அல்அவ்தீ (ரஹ்) ( நூல்: புகாரி )

சாபத்திற்குரிய, இழிவு தரும் நீண்ட ஆயுள் வேண்டாம்...

وعن جابر بن سمرة، رضي الله عنهما .

قال: شكا أهل الكوفة سعداً، يعني: ابن أبي وقاص - رضي الله عنه - إلى عمر بن الخطاب - رضي الله عنه - فعزله واستعمل عليهم عمارًا، فشكوا حتى ذكروا أنه لا يحسن يصلي، فأرسل إليه فقال: يا أبا إسحاق، إن هؤلاء يزعمون أنك لا تحسن تصلي .

فقال: أما أنا والله فإني كنت أصلي بهم صلاة رسول الله صلى الله عليه وسلم لا أخرم عنها أصلي صلاة العشاء فأركد في الأوليين، وأخف في الأخريين، قال: ذلك الظن بك يا أبا إسحاق، وأرسل معه رجلاً - أو رجالاً - إلى الكوفة يسأل عنه أهل الكوفة، فلم يدع مسجداً إلا سأل عنه، ويثنون معروفًا

حَتَّى أَتَوْا مَسْجِداً لِبَنِي عَبْسٍ

فَقَالَ رَجُلٌ يُقَالُ لَهُ: أَبُو سعدَةَ: أَمَا إِذْ نَشَدْتُمُوْنَا بِاللهِ، فَإِنَّهُ كَانَ لاَ يَعْدِلُ فِي القَضِيَّةِ، وَلاَ يَقْسِمُ بِالسَّوِيَّةِ، وَلاَ يَسِيْرُ بِالسَّرِيَّةِ.

فَقَالَ سَعْدٌ: اللَّهُمَّ إِنْ كَانَ كَاذِباً فَأَعْمِ بَصَرَهُ، وَعَجِّلْ فَقْرَهُ، وَأَطِلْ عُمُرَهُ، وَعَرِّضْهُ لِلْفِتَنِ.

قَالَ: فَمَا مَاتَ حَتَّى عَمِيَ، فَكَانَ يَلْتَمِسُ الجُدُرَاتِ، وَافْتَقَرَ حَتَّى سَأَلَ، وَأَدْرَكَ فِتْنَةَ المُخْتَارِ، فَقُتِلَ فِيْهَا  .

قَالَ عَبْدُ المَلِكِ: فَأَنَا رَأَيْتُهُ بَعْدُ يَتَعَرَّضُ لِلإِمَاءِ فِي السِّكَكِ، فَإِذَا سُئِلَ كَيْفَ أَنْتَ؟

يَقُوْلُ: كَبِيْرٌ مَفْتُوْنٌ، أَصَابَتْنِي دَعْوَةُ سَعْدٍ.

مُتَّفَقٌ عَلَيْهِ  .

உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூஃபாவில் ஆளுநராக இருந்தார்கள். அப்போது, ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) அவர்கள் மீது கூஃபா நகர மக்கள் விமர்சனம் ஒன்றை ஆட்சியாளர் உமர் (ரலி) அவர்களின் கவனத்திற்கு கடிதத்தின் வாயிலாக தெரிவித்தார்கள்.

அதாவது, ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் இமாமாக நின்று தொழ வைக்கும் போது சரியாக தொழ வைப்பதில்லை என்றும், குறிப்பாக மக்ரிப் மற்றும் இஷாத் தொழுகையின் போது நீண்ட அத்தியாயங்களை ஓதுகின்றார்கள்என்பது தான் அந்த விமர்சனம்.

உடனடியாக வந்த இந்த விமர்சனம் உண்மைதானா என்று கண்டறிய ஒரு குழுவை நியமித்தார்கள்.அந்த குழு கூஃபா விரைந்து சென்று மக்களிடையே விசாரித்தது. கூஃபா நகர மக்களும், அவர் இமாமாக பணியாற்றும் மஸ்ஜிதின் மக்களும் ஸஅத் (ரலி) அவர்கள் குறித்து நல்லதையே கூறினார்கள்.

பனூஅபஸ் எனும் பள்ளியில் அந்தக் குழு விசாரித்த போது, அங்கிருந்த உஸாமா இப்னு கதாதா ( அபூஸஅதா ) என்பவர் எழுந்து ஆளுநர் ஸஅத் அவர்கள் எங்களுக்கு மத்தியில் சமத்துவமாகப் பங்கு வைப்பதில்லை, தீர்ப்பளிப்பதில் நீதியாக நடந்து கொள்வதும் இல்லை, எங்களோடு யுத்தகளங்களுக்கு வருவதும் இல்லைஎன்று குற்றம் சுமத்தினார்.

உண்மை கண்டறியும் குழுவினர் அதிர்ச்சியோடு கலீஃபா உமர் (ரலி) அவர்களிடம் சென்று நீங்கள் ஒரு விஷயத்தை ஆராய்ந்து வருமாறு அனுப்புனீர்கள். ஆனால், அங்கு ஒருவர் இன்னின்னவாறு புதுசாக விமர்சனங்களை வைக்கின்றார் என்று கூறினார்கள். கடிதம் கிடைக்கப்பெற்ற ஸஅத் (ரலி) அவர்கள் மதீனா வந்தடைந்தார்கள்.

அமீருல் முஃமினீன் முன்பாக வந்து நின்றார்கள் ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) அவர்கள். அமீருல் முஃமினீன்: ஸஅதே! நீங்கள் அழகிய முறையில் தொழ வைக்கவில்லையாமே அப்படியா?

 

வாய் நிறைய புன்னைகை பூத்தவாறு ஸஅத் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறுகின்றேன்! அம்மக்களுக்கு நான் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் தொழ வைத்தது போன்றே முந்திய இரண்டு ரக்அத்தில் சற்று நீட்டியும் கடைசி ரக்அத்களில் சுருக்கமாகவும் தொழ வைத்தேன்என்று கூறினார்கள்.

அடுத்த படியாக உமர் (ரலி) அவர்கள் அபூஸஅதா எழுப்பிய மூன்று விமர்சனங்கள் குறித்து விளக்கம் கேட்டார்கள். இதைச் செவியுற்ற ஸஅத் (ரலி) அவர்கள் அதிர்ச்சியுற்றவராக அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவருக்குப் பாதகமாக நான் மூன்று பிரார்த்தனைகளைச் செய்கின்றேன்எனக்கூறிவிட்டு...

யாஅல்லாஹ்! உனது அடியார் உஸாமா இப்னு கதாதா என் மீது சுமத்திய குற்றச்சாட்டில் பொய்யுரைத்திருந்தால், அவர் பிரபல்யத்திற்காகவும், அதைக் கொண்டு இன்பம் அடைவதற்காகவும் கூறியிருந்தால் அவரின் ஆயுளை நீ நீளமாக்குவாயாக!, அவருக்கு வறுமையை நீ நீடித்துவிடுவாயாக!, அவரைக் குழப்பங்களுக்கு மத்தியில் வாழ வைப்பாயாக!என்று பிரார்த்தித்தார்கள்.

உஸாமா இப்னு கதாதா தங்களது கடைசி காலத்தில் தமது இரு புருவங்களும் கண்களின் மீது விழுந்து தொங்கும் அளவிற்கு முதுமை அடைந்தார். மேலும், கடுமையான வறுமை ஏற்பட்டு, வீதியில் வருவோர் போவோரிடம் கையேந்தி பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். அத்தோடு பாதையில் செல்லும் பெண்களை சில்மிஷம் செய்து, அவமாரியாதைக்கு உள்ளாக்கப்பட்டார். மேலும், இது குறித்து அவரிடம் ஏன் இந்த வயதில் இவ்வாறெல்லாம் நடந்து கொள்கின்றீர்கள்? உங்களுக்கு வெட்கமாக இல்லையா?” என்று கேட்டால் ஸஅத் அவர்களின் மனவருத்தமும், துஆவும் தான் என்னுடைய இந்த கேவலமான நடவடிக்கைகளுக்கு காரணம்என்று பதில் கூறுவார்.

முக்தார் எனும் ஆட்சியாளரின் காலத்தில் ஏற்பட்ட ஒரு கலவரத்தில் கடுமையான முறையில் கொலைசெய்யப்பட்டு இறந்தார். ( நூல்: ஸியரு அஃலா மின் நுபலா, உஸ்துல் ஃகாபா )

வாழ்ந்தால் இப்படித் தான் வாழ வேண்டும்!..

பெருமானார் (ஸல்)  மதீனா நகருக்கு ஹிஜ்ரத்வந்த பின் அனஸ் அவர்களின் தாயார் உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள் மகன் அனஸ் (ரலி) அவர்களை அழைத்துக் கொண்டு நபிகளாரிடம் வந்து இவர் எனது மகன், விவேகமானவர், உங்களுக்குப் பணி செய்வதற்காக அழைத்து வந்துள்ளேன். இவருக்காக துஆசெய்யுங்கள் என்று கூறி ஒப்படைத்தார்கள் உம்மு ஸுலைம்.

மன மகிழ்வோடு ஏற்றுக் கொண்ட நபி {ஸல்} அவர்கள் அனஸ் அவர்களின் நெற்றியில் முத்தம் பதித்து,

اَللهم أَكْثِرْ مَالَهُ وَوُلْدَهُ وَأَطِلْ عُمْرَهُ وَاغْفِرْ ذَنْبَهُ

இறைவா! இவரைச் செல்வந்தனாக ஆக்கி வைப்பாயாக! இவருக்குப் பிள்ளைகளை அதிகமாக வழங்குவாயாக! இவரின் வயதை நீளமாக்கி வைப்பாயாக! இவரின் பாவத்தை மன்னித்து விடுவாயாக! என்று பிரார்த்தித்தார்கள்.

பிற்காலத்தில், அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் மிகப்பெரும் செல்வந்தராகவும்  விளங்கினார். இவரின் ஈச்சமரங்கள் ஆண்டுக்கு இருபோகம் விளைந்தன. இவருக்கு 98 மகன்களும் 2 மகள்களும் பிறந்தனர். 

பித்தோழர் அனஸ் இப்னு மாலிக் (ரலி)அவர்களின் 100 பிள்ளைகளில் 83 ஆண் பிள்ளைகள் மரணித்தனர் – “ஷஹீத்களாயினர் என்றும் வரலாறு கூறுகிறது.

அதாவது 98  மகன்களில் 83 மகன்கள் ஒரே நாளில் தாஊன்எனும் பயங்கர கொள்ளை நோயால் மரணித்து ஷஹீத்களாயினர்.

வணக்க வழிபாட்டில் சிறந்தவர் அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள்...

வணக்கங்களை சிறு வயதிலேயே சிறந்த முறையில் நிறைவேற்றக் கூடியவராக காணப்பட்டார்கள். எந்த அளவிற்கு என்றால், அனஸ் (ரலி) அவர்களோடு இருந்த சில நபித் தோழர்களே இவரின் தொழுகையைப் பற்றி பாராட்டிச் சொல்லியிருக்கிறார்கள்.

قال أبو هريرة: “ما رأيت أحدًا أشبه بصلاة رسول الله ﷺ من ابن أم سليم”، وقال أنس بن سيرين: “كان أنس بن مالك أحسن الناس صلاة في الحضر والسفر”، وقال حفيده ثمامة بن عبد الله: “كان أنس يصلي حتى تفطر قدماه دمًا، مما يطيل القيام”.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்: உம்மு சுலைம் அவர்களின் மகனாகிய அனஸ் இப்னு மாலிக் அவர்களைத் தவிர நபிகளாரின் தொழுகையைப் போன்று தொழக் கூடிய எவரையும நான்; பார்த்ததில்லை.

அனஸ் இப்னு சீரீன் அவர்கள் கூறினார்கள்: அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் பயணம் செல்பவராகவோ அல்லது ஊரில் இருந்தாலோ தொழுகையை சிறந்த முறையில் நிறைவேற்றக் கூடியவராக இருந்தார்கள்.

அனஸ் (ரலி) அவர்கள் அதிகமாக நோன்பு நோற்பவர்களாகவும், இரவில் நீண்ட நேரம் வணக்கம் செய்பவர்களாகவும் இருந்துள்ளார்கள். இவர்களின் பேரர் துமாமா அவர்கள் இவர்களின் வணக்கம் பற்றிக் கூறுகையில்,

அனஸ் தொழுவார்கள். நீண்ட நேரம் நிற்பதால் அவர்களின் காற் பாதத்திலிருந்து இரத்தம் சொட்டுச் சொட்டாக வடிந்து கொண்டிருக்கும் என்று கூறினார்கள்.

ஹிஜ்ரீ 93 ல் தமது 103 வது வயதில் பஸராவில்  இருந்தபோது இறப்பெய்தினார்கள் என்பது தான் உறுதியான தகவல் என்பதாக வரலாற்று ஆசிரியர் அல்லாமா தகபீ (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

அந்த வகையில் நோன்பு ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு கடமையாக்கப்பட்டது. அப்போது அனஸ் (ரலி) அவர்களின் வயது 12 ஆகும்.

قال أبو عمر : الخبر بذلك عن أنس صحيح متصل ، رواه حماد بن زيد ، وحماد بن سلمة ، ومعمر بن راشد ، عن ثابت البناني قال : كبر أنس بن مالك حتى كان لا يطيق الصوم قبل موته بعام أو عامين ، فكان يفطر ويطعم.

 

103 வயது வரை வாழ்ந்த அனஸ் ரலி அவர்கள் தங்களது ஆயுட்காலத்தில் கடைசி இரண்டு ஆண்டுகள் தவிர்த்து 12 வயது முதல் 101 வயது வரை 89 ஆண்டுகள் ரமழான் நோன்பு நோற்றுள்ளார்கள்.

கடைசி இரண்டு ஆண்டுகள் தள்ளாத முதுமை காரணமாக நோன்பு நோற்க வில்லை. அதற்கு ஈடாக ஃபித்யா வழங்கி இருக்கிறார்கள்.

قال أبو عمر : اختلف عن أنس في صفة إطعامه ، فروي عنه مد لكل مسكين ، وروي عنه نصف صاع ، وروي عنه أنه كان يجمعهم فيطعمهم فربما جمع ثلاث مئة مسكين فأطعمهم وجبة واحدة . وربما أطعم ثلاثين مسكينا كل ليلة من رمضان يتطوع بذلك

وروى قتادة ، عن النضر بن أنس مثله ، قال : كان يطعم عن كل [ ص: 213 ] يوم مسكينا .

அந்த ஃபித்யாவும் கூட பேணுதல் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் ஒரு நோன்புக்கு பகரமாக 30 ஏழைகளுக்கு உணவளித்தார்கள் என்று வரலாறு சான்று பகர்கிறது.

சில அறிவிப்புகளில் ஒரு நாளைக்கு ஒரு முத் அளவுக்கு ஒரு ஏழைக்கு தானியமும், பாதி ஸாவு ஒரு ஏழைக்கு தானியமும், சில அறிவிப்புகளில் ஒரு நாளைக்கு ஒரு ஏழைக்கு உணவும் அளித்தார்கள் என்றும் வந்துள்ளது.

எனினும் ஒரு நாளைக்கு 30 ஏழைகளுக்கு உணவு வழங்கியதே சிறந்த தகவலாகும். ( நூல்: அல் இஸ்தித்காருல் ஜாமிவு லிமதாஹிபி ஃபுகஹாஇல் அம்ஸார் லிஇமாமி இப்னு அப்துல் பர் (ரஹ்)... )

ஒரு நாள்.. ஒரு நேரத் தொழுகை தவறி விட்டதற்காக…

تم فتح باب حصن تستر قبل صلاة الفجر بساعات ، وانهمرت الجيوش الإسلامية داخل الحصن، ودارتْ معركة عظيمة بين ثلاثين ألف مسلم ، ومائة وخمسين ألف فارسي ، وكان قتالاً شرسا ، وكانت كل لحظة في هذا القتال تحمل الموت، وتحمل الخطر على الجيش المسلم

ولكن في النهاية – بفضل الله - كتب الله النصر للمؤمنين ، وانتصروا على عدوهم انتصاراً باهراً، وكان هذا الانتصار بعد لحظات من شروق الشمس ،،

وأدرك المسلمون أن صلاة الصبح قد ضاعت في ذلك اليوم الرهيب ،،

لم يستطع المسلمون في داخل هذه الأزمة الطاحنة والسيوف على رقابهم أن يصلوا الصبح في موعده ،،

ويبكي أنس بن مالك رضي الله عنه لضياع صلاة الصبح مرة واحدة في حياته ، يبكي وهو معذور، وجيش المسلمين معذور، وجيش المسلمين مشغول بذروة سنام الإسلام مشغول بالجهاد لكن الذي ضاع شيء عظيم ،،،

 

يقول أنس رضي الله عنه : وما تستر ؟! لقد ضاعت مني صلاة الصبح، ما وددت أن لي الدنيا جميعاً بهذه الصلاة !!

அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் உமர் (ரலி) ஆட்சிக் காலத்தில் துஸ்தர் நோகிச் சென்ற படையணிக்குத் தலைமைதாங்கிச் சென்றார். எதிரிகளுடன் நீடித்த கடுமையான மோதலின் காரணத்தால் சுபுஹ்  உடைய தொழுகை நேரம் கடந்து சென்று விட்டது. இறுதியில் கோட்டை வீழ்ந்தது. பொழுது விடியும் நேரத்தில் எதிரிகள் தோற்று ஓடினர்! அது கண்டு, முஸ்லிம் படையினர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்துமகிழ்ந்தனர். 

ஆனால், அனஸ் (ரலி) அவர்கள் அழுதவண்ணம் நின்றிருந்தார்! காரணம் வினவப்பட்டபோது, வான்மறை தந்த வள்ளல் நபி (ஸல்) அவர்கள், "சுபுஹ் தொழுகையை உரிய நேரத்தில் தொழுபவர்களுக்கு, சுவனத்தில் அழகிய மாளிகை ஒன்று அளிக்கப்படும்" என்று கூறினார்கள். ஆனால், "இம்மையின் கோட்டையை மாளிகை எனப் பெரிது கண்டு, மறுமையின் மாளிகையைக் கோட்டைவிட்டு விட்டோமே!" 

என் வாழ்நாளில் ஒரு நாளின் ஒரு நேரத் தொழுகையை தொழாமல் விட்டு விட்டேனே! என்று மிகவும் வேதனைப்பட்டு அழுதார்கள்.

யுத்தங்களில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனஸ் (ரலி) அவர்கள்

நபி ஸல் அவர்களின் காலத்தில் சிறுவராக இருந்ததால் பத்ரில் வீரராக கலந்து கொள்ள இயல வில்லை. மாறாக, நபி ஸல் அவர்களின் பணியாளராக பங்கேற்றார்கள்.

فقد خرج أنس مع النبي محمد إلى بدر، وهو غلام ليخدم، وما شارك يومها في القتال. كما شارك أنس مع النبي ثماني غزوات منها خيبر والطائف وحنين، كما شهد فتح مكة وصلح الحديبية وعمرة القضاء وحجة الوداع وبيعة الشجرة.

வீராராக கைபரில் துவங்கி தபூக், அஹ்ஸாப், ஃபத்ஹ் மக்கா, தாயிஃப், ஹுனைனிலும், வரலாற்று சிறப்புமிக்க ஹுதைபிய்யா, பைஅத்துர் ரிள்வான், ஹஜ்ஜத்துல் விதா ஆகியவற்றிலும் பங்கேற்றார்கள்.

بعد وفاة النبي محمد، استخلف أبو بكر الصديق على المسلمين الذي شهد بداية عهده ردة العديد من القبائل على سلطة المسلمين وعلى دين الإسلام، فآذن ذلك ببدء حروب الردة. شارك أنس في تلك الحروب، وكان أحد الرماة المهرة، فكان ممن شهد معركة اليمامة،

மாநபி ஸல் அவர்களின் தூய மறைவுக்குப் பிறகு அபூபக்ர் (ரலி) அவர்களின் கிலாஃபத்தில் நடைபெற்ற ரித்தா உடைய யுத்தம் துவங்கி யமாமா யுத்தம் வரை அம்பெறி வீரராக பங்கேற்றார்கள்.

 

وشارك في فتوح العراق وبلاد فارس، وشهد معركة القادسية، وفتح تستر، 

உமர் (ரலி) ஆட்சி காலத்தில் வெற்றி வாகை சூடிய  இராக் போர், பாரசீக போர், காதிஸிய்யா போர், துஸ்தர் போர், ரோம போர் என அனைத்து போர்களிலும் பங்கேற்றார்கள்.

அனஸ் (ரலி) வகித்த பொறுப்புகள்..

أراد أبو بكر أن يبعث أنس بن مالك إلى البحرين ليتولى جباية أموال الزكاة، فاستشار عمر بن الخطاب، فقال له عمر: “ابعثه، فإنه لبيب كاتب”، فبعثه.

عاد أنس من مهمته ليجد الخليفة الأول قد مات، وخلفه الخليفة الثاني عمر بن الخطاب، فبدأ بمبايعته، ثم دفع إليه المال.

அபூபக்ர் (ரலி) ஆட்சி காலத்தில் யமாமா யுத்தத்திற்கு பிறகு பஹ்ரைன் நாட்டிற்கு ஜகாத் பணத்தின் கருவூல காப்பாளராக உமர் ரலி அவர்களின் ஆலோசனையின் பேரில் நியமிக்கப்பட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் இந்த உலகை விட்டு விடை பெற்றுச் சென்றதன் பின்னர், பஹ்ரைனில் இருந்து மதீனா வந்த அனஸ் (ரலி) அவர்கள் கருவூல கணக்கு வழக்குகளை உமர் (ரலி) அவர்களிடம் ஒப்படைத்து விட்டு மதீனாவில் தங்கி விட்டார்கள்.

وهو الذي قدم المدينة المنورة على عمر بن الخطاب بحاكمها وبعد الفتوح، سكن أنس البصرة، وأقام فيها يُحدّث الناس بما يحفظ من الحديث النبوي، حتى أحصى علماء الحديث أكثر من مائتي راوٍ عنه.

துஸ்தர் வெற்றி பெற்றதன் பின்னர் மதீனா வந்தடைந்த அனஸ் (ரலி) அவர்கள் மதீனாவின் ஹாகிமாக - நீதி அதிகாரியாக நியமிக்கப்பட்டார்கள்.

அதற்கு பிறகு நடைபெற்ற ரோம் போரில் பங்கேற்கச் சென்ற அனஸ் (ரலி) அவர்கள் வெற்றிக்குப் பின்னர் பஸராவிலேயே தங்கி விட்டார்கள்.

அங்கே மக்களுக்கு மாநபி (ஸல்) அவர்களின் ஹதீஸை பயிற்றுவிக்கும் ஆசிரியராக பரிணமித்தார்கள்.

இதன் விளைவாக 200 -க்கும் மேற்பட்ட ஹதீஸ் கலை அறிஞர்கள் பஸராவில் உருவானார்கள். 

அண்ணலாரை  அண்மியே இருக்கும் பாக்கியம் பெற்றதால், மொத்தம் 2286 ஹதீஸ்கள், அனஸ்  இப்னு மாலிக் (ரலி) வாயிலாக நமக்குத் தெரிய வருகின்றன. 285 நபித்தோழர்கள் மற்றும் தாபிஈன்கள் இவர்களிடம் இருந்து ஹதீஸ்களை அறிவித்துள்ளார்கள்.

ولما تولى عبد الله بن الزبير الخلافة بعد موت يزيد بن معاوية، كتب ابن الزبير إلى أنس بن مالك ليصلى بالناس بالبصرة، فصلى بهم أربعين يومًا.

 

அதன் பிறகு அவர்கள் மதீனா நகருக்கு செல்லவில்லை. ஆகவே, உஸ்மான் (ரலி) அலீ (ரலி) ஆகியோரின் ஆட்சியில் அவர்களால் எந்தப் பொறுப்புக்கும் நியமிக்கப்படவில்லை.

யஜீத் இப்னு முஆவியா (ரலி) அவர்களின் மறைவிற்கு பின்னர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரலி) அவர்கள் பஸராவில் இமாமத் பொறுப்பை வகிக்குமாறு கடிதத்தின் வாயிலாக கேட்டுக் கொண்டதற்கிணங்க 40 நாட்கள் பஸராவின் ஜாமிஆ பள்ளியில் இமாமத் பொறுப்பை வகித்தார்கள்.

وكتب إلى الخليفة وقتها عبد الملك بن مروان كتابًا جاء فيه: “إني خدمت رسول الله ﷺ تسع سنين، والله لو أن النصارى أدركوا رجلاً خدم نبيهم، لأكرموه، وإن الحجاج يعرض بي حوكة البصرة”، فغضب عبد الملك، وأرسل إلى الحجاج يأمره بأن يعتذر لأنس

அதற்கு பிறகு பஸராவின் கவர்னராக பொறுப்பேற்றுக் கொண்ட ஹஜ்ஜாஜ் அனஸ் (ரலி) அவர்களோடு கடும் போக்கோடு நடந்து கொண்ட போது  அப்போது கலீஃபாவாக இருந்த அப்துல் மலிக் இப்னு மர்வானுக்கு ஹஜ்ஜாஜ் தன்னை துன்புறுத்துவதாக கடிதம் எழுதியதோடு, மாநபி ஸல் அவர்களுக்கு நான் பத்தாண்டுகள் பணி விடை செய்துள்ளேன். கிறிஸ்துவர்கள் தங்களுடைய நபிக்கு பணிவிடை செய்த ஒருவரை தங்களுடைய நபியின் காலத்திற்கு பிறகு தாங்கள் வாழும் காலத்தில் பெற்றுக் கொண்டார்கள் என்றால் அவரை கொண்டாடுவார்கள். அவரை சங்கையோடு நடத்துவார்கள். ஆனால், ஹஜ்ஜாஜோ என்னிடம் கடுமையாக நடந்து கொள்கிறார்" என்று குறிப்பிட்டார்கள்.

இந்த கடிதத்தை கண்ட கலீஃபா ஹஜ்ஜாஜுக்கு கடிதம் எழுதி, அனஸ் (ரலி) அவர்களிடம் மன்னிப்பு கேட்குமாறு கோபத்தை வெளிப்படுத்தி எழுதி இருந்தார்கள். பின்னர் ஹஜ்ஜாஜ் அனஸ் (ரலி) அவர்களிடம் தமது செயலுக்காக மன்னிப்பு கேட்டார்.

قدم دمشق أيام الوليد بن عبد الملك، ثم رحل إلى البصرة يحدث الناس، وفيها توفي رضي الله عنه، قيل: توفي يوم الجمعة سنة 91، وقيل: سنة 92، وقيل: سنة 93 من الهجرة النبوية، وهو آخر من مات من الصحابة 

கலீஃபா அப்துல் மலிக் இப்னு மர்வான்ஆட்சி காலத்தில் ஹஜ்ஜாஜின் அடக்குமுறை காரணமாக திமிஷ்கு சென்ற அனஸ் ரலி அவர்கள் மீண்டும் பஸரா வந்து மீண்டும் தமது ஹதீஸ் பயிற்றுவிக்கும் சேவையை மேற்கொண்டார்கள்.

ஹிஜ்ரி 91, அல்லது 92 அல்லது 93 -ல் தங்களுடைய 100 அல்லது 103 அல்லது 109 வது வயதில் இந்த உலகத்தை விட்டும் விடை பெற்றார்கள். அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அனஸ் (ரலி) அவர்களைப் பொருந்திக் கொள்வானாக! நபித்தோழர்களில் இறுதியாக இந்த உலகத்தை விட்டு விடைபெற்ற நேர்வழியின் நட்சத்திரம் அவர்களே!

 

عن صفوان بن هبيرة، عن أبيه قال: قال لي ثابت البناني: قال لي أنس بن مالك رضي الله عنه: هذه شعرة من شعر رسول الله فضعها تحت لساني. قال: فوضعتها تحت لسانه، فدفن وهي تحت لسانه، 

ஸாபிதுல் புனானி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ஒரு நாள் என்னிடம் கையில் வைத்திருந்த ஒரு முடியை இது  நபி ஸல் அவர்களின் முடியாகும். நான் மரணித்து விட்டால் இந்த முடியை எனது நாவுக்கு கீழே வைத்து என்னை நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். அது போலவே நானும் நடந்து கொண்டேன் " என்றார்கள்.

وقال مؤرق العجلي لما مات أنس بن مالك “ذهب اليوم نصف العلم

முஅர்ரிக்குல் இஜ்லீ (ரஹ்) அவர்கள் "அனஸ் (ரலி) அவர்களின் வஃபாத்தின் போது இன்று இந்த உலகின் பாதி மார்க்கக் கல்வி விடை பெற்றுச் சென்றது" என்று இரங்கல் தெரிவித்தார்கள்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவரையும் நீண்ட ஆயுள் வாழச் செய்வானாக! அந்த ஆயுளில் அவனுக்கு பிடித்தமான வாழ்க்கையை, அமல்களால் அலங்கரிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ நம் அனைவருக்கும் தௌஃபீக் செய்தருள்வானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

1 comment:

  1. وعن أنس بن مالك رضي الله عنه - رفع الحديث – قال ‏:‏ (‏المولود حتى يبلغ الحنث ما عمل من حسنة كتبت لوالده - أو لوالديه - ، وما عمل من سيئة لم تكتب عليه ولا على والديه ، فإذا بلغ الحنث جرى عليه القلم ، أمر الملكان اللذان معه أن يحفظا وأن يشددا ، فإذا بلغ أربعين سنة في الإسلام أمَّنه الله من البلايا الثلاثة ‏:‏ الجنون والجذام والبرص ، فإذا بلغ الخمسين خفف الله حسابه ، فإذا بلغ الستين رزقه الله الإنابة بما يحب ، فإذا بلغ السبعين أحبه أهل السماء ، فإذا بلغ الثمانين كتب الله حسناته وتجاوز عن سيئاته ، فإذا بلغ التسعين غفر الله له ما تقدم من ذنبه وما تأخر ، وشفَّعه في أهل بيته ، وكان أسير الله في أرضه ، فإذا بلغ أرذل العمر لكيلا يعلم بعد علم شيئاً كتب الله له مثل ما كان يعمل في صحته من الخير ، فإذا عمل سيئة لم تكتب عليه‏) 17556- وفي رواية ‏:‏ عن أنس أن رسول الله صلى الله عليه وسلم قال ‏:‏ (‏ما من مسلم يعمر في الإسلام . ‏فذكر نحوه وقال ‏:‏ ‏فإذا بلغ السبعين سنة في الإسلام أحبه الله وأحبه أهل السماء) 17557- وفي رواية ‏:‏ (‏إذا بلغ سبعين سنة في الإسلام أحبه أهل السماء وأهل الأرض)‏ 17558- وفي رواية ‏:‏ (‏فإذا بلغ الستين رزقه الله الإنابة إلى الله بما يحب الله ، فإذا بلغ السبعين غفر الله له ما تقدم من ذنبه وما تأخر ، وكان أسير الله في أرضه ، وشفع في أهل بيته‏) رواها كلها أبو يعلى بأسانيد‏.‏ 17559- ورواه أحمد موقوفاً باختصار وقال فيه ‏:‏ (‏فإذا بلغ الستين رزقه الله عز وجل إنابة يحبه عليها)‏ 17560- وروى بعده بسنده إلى عبد الله بن عمر بن الخطاب عن النبي صلى الله عليه وسلم قال مثله‏.‏ من "مجمع الزوائد ومنبع الفوائد " المجلد العاشر.

    ReplyDelete