பரக்கத் உடைய
வாழ்வு! வாழும்
காலமெல்லாம்....
அல்லாஹ்வின்
மகத்தான கருணையால் நாம் ரஜப் மாதத்தின் துவக்க ஜும்ஆவிலே அமர்ந்திருக்கின்றோம். ரஜப் மாதம் என்பது சந்திர மாத கணக்கின் படி ஏழாவது மாதமாகும்.
إِنَّ
عِدَّةَ الشُّهُورِ عِنْدَ اللَّهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِي كِتَابِ اللَّهِ
يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ذَلِكَ
الدِّينُ الْقَيِّمُ فَلَا تَظْلِمُوا فِيهِنَّ أَنْفُسَكُمْ وَقَاتِلُوا
الْمُشْرِكِينَ كَافَّةً كَمَا يُقَاتِلُونَكُمْ كَافَّةً وَاعْلَمُوا أَنَّ
اللَّهَ مَعَ الْمُتَّقِينَ
நிச்சயமாக
அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும்
படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் - அவற்றில் நான்கு
(மாதங்கள்) புனிதமானவை,
இது தான் நேரான மார்க்கமாகும் - ஆகவே அம்மாதங்களில் (போர்
செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள், இணைவைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் நீங்களும் அவர்கள்
அனைவருடனும் போர் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ்; பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (
அல்குர்ஆன்: 9:
36 )
عَنِ
ابْنِ أَبِي بَكْرَةَ عَنْ أَبِي بَكْرَةَ رَضِي اللَّهم عَنْهم عَنِ النَّبِيِّ
صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الزَّمَانُ قَدِ اسْتَدَارَ كَهَيْئَتِهِ
يَوْمَ خَلَقَ اللَّهُ السَّمَوَاتِ وَا لأرض السَّنَةُ اثْنَا عَشَرَ شَهْرًا
مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ثَلَاثَةٌ مُتَوَالِيَاتٌ ذُو الْقَعْدَةِ وَذُو
الْحِجَّةِ وَالْمُحَرَّمُ وَرَجَبُ مُضَرَ الَّذِي بَيْنَ جُمَادَى وَشَعْبَان
(البخاري, ومسلم).
காலம் அதன் சுழற்சிக்கேற்ப
சுழன்றுகொண்டே இருக்கிறது. வானங்கள் பூமி படைக்கப்பட்ட நாள் முதலே மாதங்களின் எண்ணிக்கை
பன்னிரண்டாகும். அதில் நான்கு மாதங்கள் புனிதமானதாகும். மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக
வருபவை: துல்கஃதா,
துல்ஹஜ், முஹர்ரமாகும். ரஜப் முழர்
என்பது ஜுமாதா (ஜமாதுஸ்ஸானி), ஷஃபான் ஆகிய இரண்டுக்கும்
மத்தியிலுள்ளதாகும்'
என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).
நான்கு மாதங்கள் புனிதமானது என்றும், அவைகள் துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் என்று மேற்கூறப்பட்ட ஹதீஸிலிருந்து
தெளிவாகிறது. எனவே இம்மாதங்கள் போர் புரிவதற்கு தடை செய்யப்பட்ட மாதங்களாகும்.
இம்மாதங்கள் புனிதமானவைகள் ஆகும் என்பது இந்த நபிமொழியின் ஊடாக நாம் புரிந்து
கொள்கின்றோம்.
عَنْ
مُجِيبَةَ الْبَاهِلِيَّةِ عَنْ أَبِيهَا أَوْ عَمِّهَا أَنَّهُ أَتَى رَسُولَ
اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ انْطَلَقَ فَأَتَاهُ بَعْدَ
سَنَةٍ وَقَدْ تَغَيَّرَتْ حَالُهُ وَهَيْئَتُهُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ
أَمَا تَعْرِفُنِي قَالَ وَمَنْ أَنْتَ قَالَ أَنَا الْبَاهِلِيُّ الَّذِي
جِئْتُكَ عَامَ الْأَوَّلِ قَالَ فَمَا غَيَّرَكَ وَقَدْ كُنْتَ حَسَنَ
الْهَيْئَةِ قَالَ مَا أَكَلْتُ طَعَامًا إِلَّا بِلَيْلٍ مُنْذُ فَارَقْتُكَ
فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ لِمَ عَذَّبْتَ
نَفْسَكَ ثُمَّ قَالَ صُمْ شَهْرَ الصَّبْرِ وَيَوْمًا مِنْ كُلِّ شَهْرٍ قَالَ
زِدْنِي فَإِنَّ بِي قُوَّةً قَالَ صُمْ يَوْمَيْنِ قَالَ زِدْنِي قَالَ صُمْ
ثَلَاثَةَ أَيَّامٍ قَالَ زِدْنِي قَالَ صُمْ مِنَ الْحُرُمِ وَاتْرُكْ صُمْ مِنَ
الْحُرُمِ وَاتْرُكْ صُمْ مِنَ الْحُرُمِ وَاتْرُكْ وَقَالَ بِأَصَابِعِهِ
الثَّلَاثَةِ فَضَمَّهَا ثُمَّ أَرْسَلَهَا (أبوداود, أحمد).
முஜீபதுல்
பாஹிலிய்யா (ரலி) அவர்கள் நபிகளார் (ஸல்) அவர்களிடம் வந்துவிட்டு சென்றார்கள்.
அதன் பின் ஒரு வருடம் கழித்து மறுபடியும் வந்த போது அவரது நிலை மாறியிருந்தது.
நபிகளாரிடம் என்னை நீங்கள் அறியமாட்டீர்களா? அறத்கு நபியவர்கள்
நீங்கள் யார்?
நான் தான் அல்பாஹிலீ சென்ற வருடம் வந்து உங்களை சந்தித்து
விட்டு சென்றேன். ஏன் நீர் இந்தளவு மாறிப்போயிருக்கிறீர் என்று நபியவர்கள்
கேட்டார்கள்.
நான் உங்களை
பிரிந்து சென்றதிலிருந்து இரவில் மாத்திரம் தான் உண்ணக்கூடியவனாக இருந்தேன்.
அதற்கு நபியவர்கள் எதற்காக நீர் உம்மை வருத்திக் கொள்கிறீர், பொறுமையுடைய மாதத்தில் மாத்திரம் நோன்பு வைப்பதுடன், ஒவ்வொரு மாதமும் ஒரு நோன்பை வையுங்கள். அதற்கு அவர் இன்னும்
அதிகப்படுத்துங்கள் எனது உடலில் வலிமை இருக்கிறது என்று கேட்டுக்கொண்ட போது
ஒவ்வொரு மாதமும் இரண்டு நோன்பு வைக்குமாறு நபியவர்கள் கூறினார்கள். இன்னும்
அதிகப்படுத்துங்கள் என்று அவர் கேட்டுக்கொண்ட போது ஒவ்வொரு மாதமும் மூன்று நோன்பு
வைக்குமாறு கூறினார்கள். இன்னும் அதிகப்படுத்துங்கள் என்று கேட்டுக்கொண்ட போது
புனிதமான மாதங்களில் நோன்பு வையுங்கள் விடுங்கள், புனிதமான மாதங்களில் நோன்பு வையுங்கள் விடுங்கள், புனிதமான மாதங்களில் நோன்பு வையுங்கள் விடுங்கள் என்று நபியவர்கள் தனது மூன்று
விரல்களையும் இணைத்து பிரித்துக்காட்டினார்கள்' ( நூல்: அபூதாவூத், அஹ்மத் )
இந்த
ஹதீஸிலிருந்து புனிதமான மாதங்களில் நோன்பு வைக்க முடியுமென்பதும் விளங்குகிறது.
ரஜபில் கேட்க வேண்டிய இரண்டு துஆக்கள்…
حَدَّثَنَا
عَبْدُ اللهِ، حَدَّثَنَا عُبَيْدُ اللهِ بْنُ عُمَرَ، عَنْ زَائِدَةَ بْنِ أَبِي
الرُّقَادِ، عَنْ زِيَادٍ النُّمَيْرِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: كَانَ
النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا دَخَلَ رَجَبٌ، قَالَ:" اللهُمَّ
بَارِكْ لَنَا فِي رَجَبٍ وَشَعْبَانَ، وَبَارِكْ لَنَا فِي رَمَضَانَ
நபி (ஸல்) அவர்கள்
ரஜப் மாதம் வந்து விட்டால் 'அல்லாஹும்ம பாரிக் லனா பீ ரஜப வஷஃபான
வபாரிக் லனா பீ ரமழான்'
யா அல்லாஹ் ரஜபிலும், ஷஃபானிலும் எங்களுக்கு
பரக்கத் செய்வாயாக,
இன்னும் ரமழானிலும் எங்களுக்கு பரக்கத் செய்வாயாக"
என்று பிரார்த்தனை செய்வார்கள்.( நூல்: அஹ்மத் )
وَعَنْ
أَنَسٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا دَخَلَ رَجَبٌ
قَالَ: "اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ وَشَعْبَانَ، وَبَلِّغْنَا
رَمَضَانَ
நபி (ஸல்) அவர்கள்
ரஜப் மாதம் வந்து விட்டால் 'அல்லாஹும்ம பாரிக் லனா பீ ரஜப வஷஃபான
வபல்லிغக்னா ரமழான்'
யா அல்லாஹ் ரஜபிலும், ஷஃபானிலும் எங்களுக்கு
பரக்கத் செய்வாயாக,
இன்னும் ரமழானை எங்களுக்கு அடையச் செய்வாயாக" என்று
பிரார்த்தனை செய்வார்கள்.( நூல்: பைஹகீ )
மாநபி ஸல் அவர்கள்
ரஜப் மாதத்தில் கேட்டதாக இந்த இரண்டு நபிமொழிகள் இரண்டு நூல்கள் வாயிலாக நமக்கு
தரப்பட்டுள்ளது.
ஒரு துஆ ரமழானை
அடைந்து கொள்ள கேட்பதும் இன்னொரு துஆ ரமழானிலும் பரக்கத் செய்ய கேட்பதும்
புலனாகிறது.
இந்த துஆவும் ரஜப்
மாதமும் ஒரு இறைநம்பிக்கையாளருக்கு உணர்த்துகிற பாடங்களில் ஒன்று "வாழும்
காலமெல்லாம் பரக்கத்தான வாழ்வு" மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது
தான்.
பரக்கத் உடைய வாழ்க்கையை வாழ விரும்ப வேண்டும்...
ஏனெனில், இந்த உலகில் வாழ்ந்த நபிமார்கள் நல்லோர்கள் பரக்கத் உடைய வாழ்வு வாழ
விரும்பினார்கள்.
நபி ஈஸா (அலை)...
وَجَعَلَنِي مُبَارَكًا أَيْنَ مَا كُنْتُ
"இன்னும், நான் எங்கிருந்தாலும் அவன் என்னை (நற்)பாக்கியமுடையவனாக ஆக்கியிருக்கின்றான்.
( அல்குர்ஆன்: 19:
31 )
நபி நூஹ் (அலை)
فَاِذَا
اسْتَوَيْتَ اَنْتَ وَمَنْ مَّعَكَ عَلَى الْـفُلْكِ فَقُلِ الْحَمْدُ لِلّٰهِ
الَّذِىْ نَجّٰٮنَا مِنَ الْقَوْمِ الظّٰلِمِيْنَ
நீரும் உம்முடன்
இருப்பவர்களும் கப்பலில் அமர்ந்ததும், "அநியாயக்காரர்களான சமூகத்தாரை விட்டும் எங்களைக் காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே
எல்லாப் புகழும்" என்று கூறுவீராக!
وَقُلْ
رَّبِّ اَنْزِلْنِىْ مُنْزَلًا مُّبٰـرَكًا وَّاَنْتَ خَيْرُ الْمُنْزِلِيْنَ
மேலும், "இறைவனே! நீ மிகவும் பாக்கியம் பெற்ற இறங்கும் தலத்தில் என்னை இறக்கி
வைப்பாயாக! நீயே (பத்திரமாக) இறக்கிவைப்பவர்களில் மிக மேலானவன்" என்று
பிரார்த்திப்பீராக! (எனவும் அறிவித்தோம்). ( அல்குர்ஆன்: 23: 28,29 )
أنزلني
إنزالًا، أو مكان إنزال مباركًا، أي مليئًا بالخيرات والبركات، خاليًا مما حل
بالظالمين من إغراق وإهلاك، ﴿ وَأَنتَ ﴾ يا إلهى ﴿ خَيْرُ المنزلين ﴾ بفضلك وكرمك
في المكان الطيب المبارك
இப்ராஹீம் (அலை)
وَبَشَّرْنٰهُ بِاِسْحٰقَ نَبِيًّا مِّنَ الصّٰلِحِيْنَ
நல்லோர்களிலுள்ள
நபியாக இஸ்ஹாக்கை அவருக்கு (மகனாகத் தருவதாக) நாம் நன்மாராயம் கூறினோம்.
وَبٰرَكْنَا
عَلَيْهِ وَعَلٰٓى اِسْحٰقَؕ
இன்னும், நாம் அவர்மீதும்,
இஸ்ஹாக் மீதும் பாக்கியங்கள் பொழிந்தோம். ( அல்குர்ஆன்: 37: 113, 114 )
قال
رسول الله صلى الله عليه وسلم " بينا أيوب يغتسل عريانا فخر عليه جراد من ذهب
فجعل أيوب يحثي في ثوبه فناداه ربه : يا أيوب ألم أكن أغنيتك عما ترى ؟ قال : بلى
وعزتك ولكن لا غنى بي عن بركتك " . رواه البخاري
நபி (ஸல்) அவர்கள்
சொன்னார்கள். நபி அய்யூப் (அலை) அவர்கள் ஆடை இன்றி குளித்துக் கொண்டிருந்தார்கள் அப்பொழுது
அவர்கள் மீது தங்க வெட்டுக்கிளி விழுந்தது உடனே அவர்கள் ஆசையுடன் தனது ஆடையில் அதை
சுருட்டி எடுத்துக்கொண்டார்கள் இதை கண்ட இறைவன் அய்யூபே! இதை விட்டும் நாம் உம்மை
தேவையற்றவனாக ஆக்கவில்லையா?
அவர்கள் சொன்னார்கள் நீ என்னை செல்வந்தனாக ஆக்கினாய்
என்றாலும் நான் உனது பரக்கத்தை விட்டும் தேவையற்றவனாக இல்லை" என்றார்கள். (
நூல். புகாரி. மிஸ்காத் )
பரக்கத்தான
வாழ்க்கை என்றால் எது?
ஈமானுடைய வாழ்க்கை பரக்கதான வாழ்க்கை. அமல் உடைய வாழ்க்கை
பரக்கத்தான வாழ்க்கை. தக்வா உடைய வாழ்க்கை பரக்கத் உடைய வாழ்க்கை. பிறருக்கு
கொடுக்கும்படி உள்ள மனதோடு சேர்ந்த வாழ்க்கை பரக்கத்தான வாழ்க்கை.
ஒரு
இறைநம்பிக்கையாளனின் வாழ்க்கையில் அவனைச் சுற்றி உள்ள அவன் குடும்பம், மனைவி மக்கள்,
அவன் வியாபாரம், கொடுக்கல் வாங்கல், அவன் பொருளாதாரம்,
அவனுடைய உடல் என அனைத்துமே பரக்கத் நிறைந்ததாக அமையப்
பெற்றிருக்க வேண்டும்.
பரக்கத்தான வாழ்வுக்கு துஆ செய்தல்...
நபி {ஸல்}
அவர்களின் சமூகம் தந்து தங்களுடைய பிரச்சினைகளை கூறி துஆச் செய்யுமாறு வேண்டி
நின்றவர்களுக்கும்,
நபி {ஸல்} அவர்களிடம் பிரார்த்திக்குமாறு கோரிக்கை
வைத்தவர்களுக்கும்,
நபி {ஸல்} அவர்களுக்கு மகிழ்ச்சியை பகிர்ந்தளித்தவர்களுக்கும்
மாநபி {ஸல்} அவர்கள் "பரக்கத்தான வாழ்வுக்கே" முன்னுரிமை வழங்கி
பிரார்த்தனை செய்திருப்பதை பல்வேறு நிகழ்வுகள் ஊடாக நாம் புரிந்து கொள்ள
முடிகிறது.
حَدَّثَنَا
عَبْدَانُ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ أَخْبَرَنَا يُونُسُ عَنْ الزُّهْرِيِّ
قَالَ حَدَّثَنِي ابْنُ كَعْبِ بْنِ مَالِكٍ أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ
رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَخْبَرَهُ أَنَّ أَبَاهُ قُتِلَ يَوْمَ أُحُدٍ شَهِيدًا
وَعَلَيْهِ دَيْنٌ فَاشْتَدَّ الْغُرَمَاءُ فِي حُقُوقِهِمْ فَأَتَيْتُ النَّبِيَّ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَهُمْ أَنْ يَقْبَلُوا تَمْرَ حَائِطِي
وَيُحَلِّلُوا أَبِي فَأَبَوْا فَلَمْ يُعْطِهِمْ النَّبِيُّ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ حَائِطِي وَقَالَ سَنَغْدُو عَلَيْكَ فَغَدَا عَلَيْنَا حِينَ
أَصْبَحَ فَطَافَ فِي النَّخْلِ وَدَعَا فِي ثَمَرِهَا بِالْبَرَكَةِ
فَجَدَدْتُهَا فَقَضَيْتُهُمْ وَبَقِيَ لَنَا مِنْ تَمْرِهَا
ஜாபிர் பின்
அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது :என் தந்தையார் உஹுதுப் போரின்போது, அவர் மீது கடன் இருந்த நிலையில் கொல்லப்பட்டு விட்டார்கள். கடன் கொடுத்தவர்கள்
தம் உரிமைகளைக் கேட்டுக் கடுமை காட்டினார்கள். உடனே, நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்றேன். (விஷயத்தைக் கூறினேன்.) நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் கடன் கொடுத்தவர்களிடம் என் தோட்டத்தின் பேரீச்சம் பழங்களை
(கடனுக்குப் பகரமாக) ஏற்றுக் கொண்டு என் தந்தையை மன்னித்து (மீதிக் கடனைத்)
தள்ளுபடி செய்து விடும்படி கேட்டுக் கொண்டார்கள். (அவ்வாறு செய்ய) அவர்கள் மறுத்து
விட்டனர். ஆகவே,
அவர்களுக்கு அந்தப் பேரீச்சம் பழங்களை நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கொடுக்கவில்லை. மாறாக, "நாம் உன்னிடம் காலையில்
வருவோம்''
என்று என்னிடம் கூறினார்கள். பிறகு காலையில் என்னிடம்
வந்தார்கள். பேரீச்ச மரங்களிடையே சுற்றி வந்து, அவற்றின் கனிகளில்
பரக்கத்துக்காக (அருள் வளத்திற்காக) துஆ செய்தார்கள். பிறகு, நான் அவற்றைப் பறித்துக் கடன் கொடுத்தவர்களின் கடன்களையெல்லாம் திருப்பிச்
செலுத்தினேன். (முழுக் கடனையும் தீர்த்த பின்பும்) அதன் கனிகள் எங்களுக்கு மீதமாக
இருந்தன. ( நூல்: புகாரி )
حَدَّثَنِى
مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى الْعَنَزِىُّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ
حَدَّثَنَا شُعْبَةُ عَنْ يَزِيدَ بْنِ خُمَيْرٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُسْرٍ
قَالَ نَزَلَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- عَلَى أَبِى – قَالَ –
فَقَرَّبْنَا إِلَيْهِ طَعَامًا وَوَطْبَةً فَأَكَلَ مِنْهَا ثُمَّ أُتِىَ بِتَمْرٍ
فَكَانَ يَأْكُلُهُ وَيُلْقِى النَّوَى بَيْنَ إِصْبَعَيْهِ وَيَجْمَعُ
السَّبَّابَةَ وَالْوُسْطَى – قَالَ شُعْبَةُ هُوَ ظَنِّى وَهُوَ فِيهِ إِنْ شَاءَ
اللَّهُ إِلْقَاءُ النَّوَى بَيْنَ الإِصْبَعَيْنِ – ثُمَّ أُتِىَ بِشَرَابٍ
فَشَرِبَهُ ثُمَّ نَاوَلَهُ الَّذِى عَنْ يَمِينِهِ – قَالَ – فَقَالَ أَبِى
وَأَخَذَ بِلِجَامِ دَابَّتِهِ ادْعُ اللَّهَ لَنَا فَقَالَ اللَّهُمَّ بَارِكْ
لَهُمْ فِى مَا رَزَقْتَهُمْ وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ
அப்துல்லாஹ் இப்னு
பிஷ்ர் என்ற நபித்தோழர் கூறுகிறார் :
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்கள் வீட்டிற்கு விருந்து
உண்ண வந்தார்கள். அவர்களுக்கு உணவை வைத்தோம். அவர்கள் உண்டார்கள். உண்டுவிட்டு
வீட்டைவிட்டு வெளியில் சென்றபோது என்னுடைய தந்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய
வாகனத்தின் கயிற்றைப் பிடித்து எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்று
கேட்டபோது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வே இவர்களுக்கு வழங்கியவற்றில்
இவர்களுக்கு பரக்கத் செய்வாயாக! மேலும் இவர்களை மன்னித்து இவர்களுக்கு அருள்
புரிவாயாக என்று கேட்டார்கள். ( நூல் : முஸ்லிம் )
حَدَّثَنَا
عَبْدُ اللَّهِ بْنُ أَبِي الْأَسْوَدِ حَدَّثَنَا حَرَمِيٌّ حَدَّثَنَا شُعْبَةُ
عَنْ قَتَادَةَ عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَتْ أُمِّي يَا
رَسُولَ اللَّهِ خَادِمُكَ أَنَسٌ ادْعُ اللَّهَ لَهُ قَالَ اللَّهُمَّ أَكْثِرْ
مَالَهُ وَوَلَدَهُ وَبَارِكْ لَهُ فِيمَا أَعْطَيْتَهُ
அனஸ் (ரலி)
அவர்கள் கூறியதாவது :என் தாயார் (உம்மு சுலைம்) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்)
அவர்களிடம்,
அல்லாஹ்வின் தூதரே! தங்களின் சேவகர் அனஸுக்காகப்
பிரார்த்தியுங்கள் என்றார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வே! அனஸின் செல்வத்தையும் குழந்தைகளையும் அதிகமாக்குவாயாக! அவருக்கு நீ
வழங்கியுள்ளவற்றில் பரகத் அளிப்பாயாக! என்று பிரார்த்தித்தார்கள். ( நூல் : புகாரி
)
பரக்கத்தான மனைவி என்பவர்....
நன்மையான காரியங்களில் நமக்கு துணை நிற்கும் நமது துணைவியர்
பரக்கத்தான துணைவியாவார்.
لما نزلت: { مَنْ ذَا الَّذِي يُقْرِضُ اللَّهَ
قَرْضًا حَسَنًا فَيُضَاعِفَهُ لَهُ } قال أبو الدحداح الأنصاري: يا رسول الله وإن
الله ليريد منا القرض؟ قال: "نعم يا أبا الدحداح" قال: أرني يدك يا رسول
الله. قال: فناوله يده قال: فإني قد أقرضت ربي حائطي. قال: وحائط له فيه ستمائة
نخلة وأم الدحداح فيه وعيالها. قال: فجاء أبو الدحداح فناداها: يا أم الدحداح.
قالت: لبيك قال: اخرجي فقد أقرضته ربي عز وجل. وقد رواه ابن مردويه من حديث عبد
الرحمن بن زيد بن أسلم عن أبيه عن عمر مرفوعًا بنحوه
“அல்லாஹ்விற்கு அழகிய கடன் கொடுப்போர் யாரும் உள்ளார்களா? அழகிய கடன் கொடுத்தால் அல்லாஹ் அதைப் பன்மடங்காகப் பெருக்கித் தருவான்” என்று
அல்லாஹ்வின் தூதரோடு சபையில் இருந்த அபுத்தஹ்தாஹ் (ரலி)
அவர்கள் ”நம்மிடமிருந்து அல்லாஹ் கடன் கோருகின்றானா? என்று பெருமானார் {ஸல்}
அவர்களிடம் வினவ, ஆம்! என நபி {ஸல்}
அவர்கள் பதில் கூற, “தங்களுக்குச்
சொந்தமான 600
பேரீச்சம் மரங்களைக் கொண்ட தோட்டத்தின் சாவியை நபி {ஸல்}
அவர்களின் கரங்களில் வைத்து விட்டு, அல்லாஹ்வின் தூதரே! இதோ நான் அல்லாஹ்விற்காக அழகிய கடனை தந்து விட்டேன்” என்று கூறிவிட்டு,
அங்கிருந்து வேகமாக வெளியேறி தோட்டத்தின் வாயிலில் நின்று
கொண்டு உம்முத்தஹ்தாவே! நம் தோட்டத்தை அல்லாஹ்வுக்காக நான் கடன் வழங்கி விட்டேன்!
அங்கிருந்து நீ எப்படி இருக்கின்றாயோ அப்படியே வெளியேறி விடு!” என்று கூறினார்கள்.
அது போன்றே உம்முத்தஹ்தா (ரலி) அவர்களும் மறு பேச்சு
பேசாமல் வெளியேறி விட்டார்கள்.
பரக்கத்தான வியாபாரம் என்பது...
وروى جبير بن نفير، عن عوف بن مالك أَنه رأَى في
المنام قبة من أَدَم في مرج أَخضر، وحول القبة غَنَم رَبوض تجتر وتَبعر العجوة،
قال: قلت: لمن هذه القبة ؟ قيل: هذه لعبد الرحمن بن عوف. فانتظرناه حتى خرج فقال:
يا ابن عوف، هذا الذي أَعطى الله عز وجل بالقرآن، ولو أَشرفت على هذه الثنيه
لرأَيت بها ما لم تر عينك، ولم تسمع أذنك، ولم يخطر على قلبك مثله، أَعد. الله
لأَبي الدرداء إِنه كان يدفع الدنيا بالراحتين والصدر.
அவ்ஃப் இப்னு மாலிக் அல் அஷ்ஜயீ (ரலி) எனும் சீரிய
நபித்தோழர். ஃபத்ஹ் மக்காவின் போது அஷ்ஜயீ கோத்திரத்தாரின் அணியை தலைமையேற்று வழி
நடாத்தி தமது கோத்திரத்தாரின் கொடியை நபிகளாரின் ஆணைக்கிணங்க பிடித்தபடி மக்காவில்
நுழையும் பாக்கியத்தைப் பெற்றவர்கள்.
ஒரு நாள் கனவொன்று கண்டார்கள். அந்தக் கனவில் பரந்து விரிந்த
ஓர் சோலைவனம். நிழல் படர்ந்த அடர்த்தியான மரங்கள். அதன் நடுவே உயர்ந்த மாடங்கள்
கொண்ட ஓர் அழகிய கூடாரம். முழுக்க தோலினால் ஆன அழகிய கூடாரம் அது. தம் வாழ்நாளில்
அதுவரை கண்டிராத கூட்டம் கூட்டமாக செம்மறி ஆட்டின் மந்தை!
இவ்வளவு உயர்ந்த இந்த பூஞ்சோலை யாருக்குரியது?” என வினவினாராம் அவ்ஃப் இப்னு மாலிக் (ரலி) அவர்கள். தூரத்தில் இருந்து “இது அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களுக்குரியது” என்று அசரீரி வந்தது.
அசரீரியைக் கேட்டுக் கொண்டே முன்னெறிய போது கூடாரத்தின்
உள்ளிருந்து வெளியேறிய அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள், அவ்ஃப் இப்னு மாலிக்கிடம் சொன்னார்களாம்: “அவ்ஃபே! இது அல்லாஹ்
நமக்கு தருவதாக குர்ஆனில் வாக்களித்திருந்தவைகளாகும்.
அதோ தெரிகிறதே அந்த மேடான பகுதிக்குச் சென்றால் அங்கே நீர்
கற்பனைக்கு எட்டாதவைகளை எல்லாம் காண்பீர்” என்றார்கள்.
அப்போது அவ்ஃப் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் “அது யாருக்கு உரியது அபூ முஹம்மத் அவர்களே?” என்று வினவ, வல்ல ரஹ்மான் தோழர் அபூதர்தா (ரலி) அவர்களுக்காக ஆயத்தப்படுத்தி வைத்துள்ளான்.
ஏனெனில், அவர் உலகில் வாழும் போது
தமது முழு ஆற்றலையும் பயன் படுத்தி உலக வளங்களை விட்டும், சுக போக வாழ்வை விட்டும் ஒதுங்கி வாழ்ந்தார். ஆதாலால் இன்று மிகப்பெரிய
செல்வந்தனாக மாறிப்போனார்”
என்று அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் பதில்
கூறினார்களாம்.
இதை ஜுபைர் இப்னு நஃபீர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ( நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}…., உஸ்துல் காபா )
சுவனத்தில் ஏன் இந்த அந்தஸ்து?
அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்களின் சகோதரர் உவைமிர்
மகத்தான வியாபாரி. மண்ணையும் பொன்னாக்கத் தெரிந்த மகத்தான வியாபாரி.
மிகத் தாமதமாகவே இஸ்லாத்தை தழுவினார். அவர் இஸ்லாத்தை
தழுவும் போது திருமணமாகி தர்தா என்ற மகளும் இருந்தார்.
இஸ்லாத்தை தழுவிய பின்னர் ஊரும் உலகும் அவரை அபூதர்தா என்றே
அழைத்தது.
பாரசீகத்தில் இருந்து பல மதங்களைக் கடந்து தாம் தேடிய
வாழ்க்கை நெறி இஸ்லாம் தான் என மிகத் தாமதமாகவே இஸ்லாத்தை தழுவிய நிலையில்
ஸல்மானுல் ஃபார்ஸி ரலி அவர்களும் மதீனா வந்து சேர்ந்தார்.
இறுதியாக மாநபி ஸல் அவர்கள் இருவரையும் சகோதர வாஞ்சைக்குள்
பிணைத்து விட்டார்கள்.
தாமதமாக வந்ததாலோ என்னவோ அபூதர் ரலி அவர்கள் நன்மைகள்
அத்துனையையும் ஆரத் தழுவிக் கொண்டு பாய்ந்து பாய்ந்து செய்தார்.
என்றாலும் அவர் மனம் சமாதானம் அடையவில்லை.
தம் வாழ்நாளில் தாம் தவற விட்ட நன்மை தருகிற அனைத்து
நல்லறங்களையும் ஈடு செய்ய முனைப்புடன் செயல்பட்டார்.
அவரால் மதீனாவில் மிகப் பெரிய வணிக நிறுவனத்தை நடத்திக்
கொண்டு அமல்களில் இன்னும் முனைப்புடன் ஈடுபட வில்லை என்பதாக அவர் மனம் சொல்லவே
தமது வணிக நிறுவனத்தை இழுத்து மூடினார்.
நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் இருக்கும் நிலையில் ஒருவர்
வந்து ,
"என்ன அபூதர்தா இது? ஏன் கடையை இழுத்துப்
பூட்டி விட்டீர்?"
கேட்டார்.
பவ்யமாக அவரைப் பார்த்த அபூதர்தா. "அவசியம் தெரிந்து
கொள்ளத்தான் வேண்டுமா?
சொல்கிறேன் வா என்பதைப் போல நினைத்தவர்,
"இதோ வந்திருக்கிறாரே அல்லாஹ்வின் தூதர், அவரை உணர்வதற்குமுன் நான்
வணிகனாய் இருந்தேன். பின்னர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவுடன் தொழிலையும் இறைவனைத்
தொழுவதையும் வழிபடுவதையும் ஒருங்கே செய்துகொள்ளலாம் என்றுதான் நினைத்தேன்.
ஆனால் அதில் என்ன பிரச்சனை என்றால் நான் நினைப்பதை எல்லாம்
என்னால் சரியான முறையில் அடைய முடியவில்லை. அதற்கு என்ன செய்வது? எனக்கு வழிபாடுதான் முக்கியம். அதனால் தொழிலைத் துறந்து விட்டேன். எனது உயிர் யாருடைய திருக்கரத்தில்
இருக்கிறதோ, அந்த இறைவன் மீது
ஆணையாகச் சொல்கிறேன்,
பள்ளிவாசலின் வாயில் அருகே எனக்கு ஒரு சிறுகடை இருந்தால்
போதும். நான் ஏதோ என் வாழ்க்கைக்குத் தேவையான சிறு பொருள் ஈட்டிக் கொண்டு அதே
நேரம் ஒருவேளைத் தொழுகையைக்கூடத் தவறவிடாமல் இருந்து விடுவேன்" என்றார்.
எனில் வணிகம் தடுக்கப்பட்டதா? பொருளீட்டுவது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளதா? என்னவிதமான வாதம் இது என்று நம் மனதினுள் கேள்வி எழுமல்லவா? கேள்வி கேட்டவருக்கும் அந்த ஐயம் எழுந்திருக்கக் கூடும்.
ஆயினும் அவர் கேட்பதற்கு முன்பே அபூதர்தாவே பதில் கூறிவிட்டார்:
"அல்லாஹ் வியாபாரத்தை, தொழிலை தடைசெய்துள்ளான்
என்றெல்லாம் நான் சொல்லவில்லை.
رِجَالٌ لَا تُلْهِيهِمْ تِجَارَةٌ وَلَا بَيْعٌ عَنْ ذِكْرِ اللَّهِ
وَإِقَامِ الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ يَخَافُونَ يَوْمًا تَتَقَلَّبُ فِيهِ
الْقُلُوبُ وَالْأَبْصَارُ
ஆனால், அவன் குர்ஆனில் சிலரை
விவரித்திருக்கிறானே,
'அல்லாஹ்வை நினைவு கூர்வதைவிட்டு அவர்களை வணிகமும்
கொடுக்கல்-வாங்கல் செய்வதும் தடுக்கவில்லை' என்று, அந்தச் சிலரில் நான் ஒருவனாகி விட விரும்புகிறேன்" என்றார்கள் அபூதர்தா
(ரலி). ( நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் (ஸல்)...)
பரக்கத்தான மரணம் என்பது...
مات بلال رضوان الله عليه وهو يردد في مرض موته:
(غدا نلقى
الأحبة .. محمدًا وصحبه)
பிலால் (ரலி) மரணப்படுக்கையில் சிரித்துக் கொண்டே
இருக்கிறார்கள். விசித்திரமாக இருந்தது. மரணிக்கப் போகிறார். குடும்பம், பிள்ளை,
கோத்திரம் எனஅனைத்தையும் விட்டும் பிரியப் போகிறீர். ஆனால்
சிரிக்கின்றீர்களே?
என்று கேட்டதற்கு பிலால் சொன்னார்கள்.
நாளை நான் என் நேசர்களை சந்திக்கப் போகிறேன். முஹம்மத்
(ஸல்) அவர்களையும்முஹம்மது (ஸல் ) உடைய தோழர்களையும் நான் சந்திக்கப் போகிறேன். (
நூல் : அஷ்ஷிஃபா –
காழி இயாழ் )
யாஅல்லாஹ்! நாங்கள்
வாழும் காலமெல்லாம் பரக்கத்தான வாழ்வு
வாழ
அருள்புரிவாயாக! யாஅல்லாஹ்! ரஜபிலும், ஷஅபானிலும், ரமழானிலும்
எங்களுக்கு பரக்கத் செய்வாயாக! யாஅல்லாஹ் ரமழானை அடையும் பாக்கியத்தையும் எங்களுக்கு
வழங்கியருள்வாயாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!
This comment has been removed by the author.
ReplyDeleteجزاك الله خيرا
ReplyDelete