இருள் அகற்றும்
இறைமறை
தராவீஹ் சிந்தனை -
1.
رحم الله امير المؤمنين عمر بن الخطاب
அல்லாஹ்! அமீருல் முஃமினீன் உமர் ஃபாரூக்
(ரலி) அவர்களுக்கு அருள் புரிவானாக!!!
முதல் நாள்
தராவீஹ் தொழுகையை மிகச் சிறப்பாக முடித்து விட்டு முதல் நோன்புக்கான
ஆயத்தப்பணிகளில் நாம் ஈடுபட்டு இருக்கின்றோம்.
அல்ஹம்துலில்லாஹ்!
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ரமழானின் 30 நாட்கள், நோன்பையும்,
இதர வணக்க, வழிபாடுகளையும் எவ்வித
தடங்கல் இன்றி உடல்
ஆரோக்கியத்துடன், மன நிறிவோடு, இன்பத்தோடு பரிபூரணமாக
நிறைவேற்றுகிற நற்பேற்றினை நம் அனைவருக்கும் நல்குவானாக! ஆமீன்!!
இன்றைய நாளின்
தராவீஹ் தொழுகையில் அல்குர்ஆனின் பெரிய அத்தியாயமான, வரிசைப்படி இரண்டாவதாக இடம் பெற்றுள்ள அத்தியாயமான 286 வசனங்களைக் கொண்ட,
இறைத்தூதர் முஹம்மது நபி ﷺ அவர்களின் அமுதவாயால் பல்வேறு சிறப்புகளைப்
பெற்றிருக்கிற அல் பகரா அத்தியாயத்தின் 176 வசனங்கள்
ஓதப்பட்டிருக்கின்றன.
ஒவ்வொரு ஆண்டும் முதலாவது நாள் தராவீஹ் தொழுகையின் பின்னால் ஒட்டு மொத்த உம்மத்தும் அமீருல்
முஃமினீன் உமர் (ரலி) அவர்களுக்காக துஆச் செய்ய கடமைப்பட்டிருக்கின்றோம்.
ஆம்! 1400
ஆண்டுகளுக்கு முன்பாக அவர்கள் மேற்கொண்ட மிகப்பெரிய முயற்சியால் தான் அழகிய
முறையில் இன்று அல்குர்ஆன் வசனங்களை தராவீஹ் தொழுகையில் அல்குர்ஆனை மனனம் செய்த
ஹாஃபிழ் ஒருவர் ஓதி
அதை செவிமடுத்துக் கேட்டு இன்புறும் பாக்கியத்தை அல்லாஹ்
ரப்புல் ஆலமீன் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தாராகிய நமக்கு
வழங்கியிருக்கின்றான்.
ஆம்! 20 ரக்அத்துகளின் வாயிலாக ஹாஃபிழ்களின் தலைமையின் கீழ் தராவீஹ் தொழுகையை இந்த
உம்மத்திற்கு முதன் முதலாக வடிவமைத்து தந்தவர்கள் அமீருல் முஃமினீன் ஸைய்யிதுனா
உமருப்னுல் கத்தாப் (ரலி) அவர்கள் ஆவார்கள்.
இதற்காக
மாத்திரமல்ல இன்னும் ஒரு காரியத்திற்காகவும் நாம் உமர் ரலி அவர்களுக்காக துஆச்
செய்ய கடமைப் பட்டுள்ளோம்.
ஆம்! இன்று மிக
எளிதாக நம் கையில் நூல் வடிவில் அல்குர்ஆன் வந்து சேர்ந்ததற்கும் உமர் ரலி அவர்களே
முதன்மைக் காரணம்.
அல்குர்ஆனை நூல் வடிவில்
ஒன்று திரட்ட வேண்டும் என்ற கோரிக்கையை முதன் முதலாக கலீஃபா அபூபக்ர் ரலி
அவர்களிடம் முன் வைத்தவர்கள் உமர் ரலி அவர்களே!.
யாஅல்லாஹ்! அமீருல் முஃமினீன் உமர் ஃபாரூக் (ரலி) அவர்களுக்கு அருள் புரிவாயாக!!!
عَنْ
عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدٍ الْقَارِيِّ أَنَّهُ قَالَ خَرَجْتُ مَعَ عُمَرَ
بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ لَيْلَةً فِي رَمَضَانَ إِلَى الْمَسْجِدِ
فَإِذَا النَّاسُ أَوْزَاعٌ مُتَفَرِّقُونَ يُصَلِّي الرَّجُلُ لِنَفْسِهِ
وَيُصَلِّي الرَّجُلُ فَيُصَلِّي بِصَلَاتِهِ الرَّهْطُ فَقَالَ عُمَرُ إِنِّي
أَرَى لَوْ جَمَعْتُ هَؤُلَاءِ عَلَى قَارِئٍ وَاحِدٍ لَكَانَ أَمْثَلَ ثُمَّ
عَزَمَ فَجَمَعَهُمْ عَلَى أُبَيِّ بْنِ كَعْبٍ ثُمَّ خَرَجْتُ مَعَهُ لَيْلَةً
أُخْرَى وَالنَّاسُ يُصَلُّونَ بِصَلَاةِ قَارِئِهِمْ قَالَ عُمَرُ نِعْمَ
الْبِدْعَةُ هَذِهِ وَالَّتِي يَنَامُونَ عَنْهَا أَفْضَلُ مِنْ الَّتِي
يَقُومُونَ يُرِيدُ آخِرَ اللَّيْلِ وَكَانَ النَّاسُ يَقُومُونَ أَوَّلَهُ
(بخاري) بَاب فَضْلِ مَنْ قَامَ رَمَضَانَ- كِتَاب صَلَاةِ التَّرَاوِيحِ
அப்துர் ரஹ்மான்
இப்னு அப்துல்காரீ ரழி கூறினார்கள் நான் உமர் ரழி அவர்களுடன் ரமழான் இரவில்
மஸ்ஜிதுக்குச் சென்றேன்.அப்போது மக்கள் பல பிரிவுகளாக நின்று தராவீஹ் ஜமாஅத்
நடத்திக் கொண்டிருப்பதைக் கண்டு நான் இவர்களையெல்லாம் ஒரேயொரு ஹாஃபிழுக்குப்
பின்னால் ஒன்று சேர்த்தால் நன்றாக இருக்குமே என்று ஆசைப்பட்டார்கள். அதன்படி மிகச்
சிறந்த காரீயாக விளங்கிய உபய் இப்னு கஃப் ரழி அவர்களுக்குப் பின்னால் மக்களை ஒன்று
திரட்டினார்கள். பின்பு மற்றொரு இரவில் நான் மஸ்ஜிதுக்குச் சென்றேன். உபய் இப்னு
கஃப் ரழி அவர்களுக்குப் பின்னால் தராவீஹ் தொழுகையை மக்கள் தொழுது
கொண்டிருந்தார்கள். அதைக் கண்ட உமர் ரழி அவர்கள் பித்அத்துகளில் இது நல்ல பித்அத்
என்றார்கள்.
குர்ஆனை ஒன்று
திரட்டியதும் கூட நல்ல பித்அத் என்ற பட்டியலில் சேரும்
عَنْ
الزُّهْرِيِّ قَالَ أَخْبَرَنِي ابْنُ السَّبَّاقِ أَنَّ زَيْدَ بْنَ ثَابِتٍ
الْأَنْصَارِيَّ رَضِيَ اللَّهُ عَنْهُ وَكَانَ مِمَّنْ يَكْتُبُ الْوَحْيَ قَالَ
أَرْسَلَ إِلَيَّ أَبُو بَكْرٍ مَقْتَلَ أَهْلِ الْيَمَامَةِ وَعِنْدَهُ عُمَرُ
فَقَالَ أَبُو بَكْرٍ إِنَّ عُمَرَ أَتَانِي فَقَالَ إِنَّ الْقَتْلَ قَدْ
اسْتَحَرَّ يَوْمَ الْيَمَامَةِ بِالنَّاسِ وَإِنِّي أَخْشَى أَنْ يَسْتَحِرَّ
الْقَتْلُ بِالْقُرَّاءِ فِي الْمَوَاطِنِ فَيَذْهَبَ كَثِيرٌ مِنْ الْقُرْآنِ
إِلَّا أَنْ تَجْمَعُوهُ وَإِنِّي لَأَرَى أَنْ تَجْمَعَ الْقُرْآنَ قَالَ أَبُو
بَكْرٍ قُلْتُ لِعُمَرَ كَيْفَ أَفْعَلُ شَيْئًا لَمْ يَفْعَلْهُ رَسُولُ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ عُمَرُ هُوَ وَاللَّهِ خَيْرٌ فَلَمْ
يَزَلْ عُمَرُ يُرَاجِعُنِي فِيهِ حَتَّى شَرَحَ اللَّهُ لِذَلِكَ صَدْرِي
وَرَأَيْتُ الَّذِي رَأَى عُمَرُ قَالَ زَيْدُ بْنُ ثَابِتٍ وَعُمَرُ عِنْدَهُ
جَالِسٌ لَا يَتَكَلَّمُ فَقَالَ أَبُو بَكْرٍ إِنَّكَ رَجُلٌ شَابٌّ عَاقِلٌ
وَلَا نَتَّهِمُكَ كُنْتَ تَكْتُبُ الْوَحْيَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ فَتَتَبَّعْ الْقُرْآنَ فَاجْمَعْهُ فَوَاللَّهِ لَوْ
كَلَّفَنِي نَقْلَ جَبَلٍ مِنْ الْجِبَالِ مَا كَانَ أَثْقَلَ عَلَيَّ مِمَّا
أَمَرَنِي بِهِ مِنْ جَمْعِ الْقُرْآنِ قُلْتُ كَيْفَ تَفْعَلَانِ شَيْئًا لَمْ
يَفْعَلْهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أَبُو بَكْرٍ
هُوَ وَاللَّهِ خَيْرٌ فَلَمْ أَزَلْ أُرَاجِعُهُ حَتَّى شَرَحَ اللَّهُ صَدْرِي
لِلَّذِي شَرَحَ اللَّهُ لَهُ صَدْرَ أَبِي بَكْرٍ وَعُمَرَ فَقُمْتُ
فَتَتَبَّعْتُ الْقُرْآنَ أَجْمَعُهُ مِنْ الرِّقَاعِ وَالْأَكْتَافِ وَالْعُسُبِ
وَصُدُورِ الرِّجَالِ (بخاري
யமாமா போருக்குப்
பின்பு குர்ஆனை மனனம் செய்த அறிஞர்களில் ஏராளமானோர் கொல்லப்பட்டார்கள். இதனால்
குர்ஆனை நம்மை விட்டும் சென்றுவிடுமோ என்ற கவலை ஹழ்ரத் உமர்(ரழி) அவர்களுக்கு
ஏற்பட்டது. இக்கவலையை அப்போது கலீஃபாவாக இருந்த ஹழ்ரத் அபூபக்கர் (ரழி) அவர்களிடம்
தெரிவித்து குர்ஆனை ஒன்று திரட்டும்படி கூறினார்கள். இதைக் கேட்ட ஹழ்ரத் அபூபக்கர்
(ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ﷺ செய்யாத செயலை நாம் எவ்வாறு செய்ய முடியும் என்று
கேட்டார்கள். அதற்கு ஹழ்ரத் உமர்(ரழி) அவர்கள் அல்லாஹ் மீது ஆணையாக குர்ஆனை ஒன்று
திரட்டும் இந்தப் பணி நன்மையாகவே இருக்கும் என்று கூறினார்கள். அதற்கு ஹழ்ரத்
அபூபக்கர் (ரழி) அவர்களும் ஒப்புக் கொண்டார்கள். பிறகு அபூபக்கர்(ரழி) அவர்கள்
ஜைத் இப்னு ஸாபித்(ரழி) அவர்களிடம் குர்ஆனை நீங்கள் ஒரே பிரதியாக ஒன்று
திரட்டுங்கள் என்று கூறினார்கள். அதற்கு அவர்கள் இறைத் தூதர் (ஸல்) செய்யாத ஒரு
செயலை நான் எப்படிச் செய்ய முடியும் என்று கேட்க, உமர்(ரழி) அவர்கள் கூறிய பதிலை அப்படியே இவர்களிடம் அபூபக்கர் (ரழி) கூறினார்கள்
ஜைத் இப்னு ஸாபித்
(ரழி)அவர்கள் கூறுகிறார்கள். எதற்காக அபூபக்கர் (ரழி), உமர்(ரழி) ஆகியோரின் அல்லாஹ் விரிவாக்கினானோஅதற்காக எனது மனதையும் அல்லாஹ்
விரிவாக்கினான். அவர்கள் கூறியது போல் குர்ஆனை ஒன்று திரட்ட நான் முன் வந்தேன்.
மக்களின் கரங்களில் அவர்கள் குர்ஆனை எழுதி வைத்திருந்த ஓலைச்சுவடிகள், பேரீத்த மட்டைகள்,
ஓடுகள் ஆகியவற்றிலிருந்து நான் திருக்குர்ஆனை ஒன்று
திரட்டத் துவங்கினேன். யாரெல்லாம் குர்ஆனை மனனம் செய்திருந்தார்களோ
அவர்களிடமிருந்து ஒன்று திரட்ட ஆரம்பித்தேன். ஜைதுப்னு ஸாபித்(ரழி) அவர்கள் பொதுஅழைப்பாக யார்
குர்ஆனை மனனம் செய்துள்ளீர்களோ குர்ஆனை யார் எழுதி வைத்துள்ளீர்களோ அவர்களெல்லாம்
என்னிடம் வாருங்கள் என அழைத்தார்கள். தேடிச் சென்றும் குர்ஆனை ஒன்று
திரட்டினார்கள். ஒருவர் சொன்னதை மட்டும் வைத்து முடிவு செய்யாமல் பலரிடம் அதை
உறுதிப் படுத்துவார்கள். இவ்வாறு பல கோணங்களிலும் ஆராய்ந்த பின் தான் குர்ஆன்
வசனங்களை தம் தொகுப்பில் பதிவு செய்வார்கள். திருக்குர்ஆனின் எந்த ஒரு வசனமும்
விடுபட்டுப் போகாத அளவுக்கு கடும் முயற்சி செய்தார்கள். இதைப் பற்றி ஜைத் இப்னு
ஸாபித் (ரழி) கூறும்போது ஒரு மலையை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு
மாற்றியமைக்கச் சொல்லியிருந்தாலும் அது எனக்கு இலகுவாக இருக்கலாம் அதை விட குர்ஆனை
ஒன்று திரட்டும் பணி எனக்கு மிக சிரமமாக இருந்தது எனக் கூறினார்கள். இவ்வாறான
கடும் சிரமத்திற்கு மத்தியில் குர்ஆனை அவர்கள் திரட்டினார்கள்.
இதன் பிறகு நூல்
வடிவிலான குர்ஆன் பிரதி அபூபக்கர் (ரழி)அவர்களிடம் பாதுகாப்பாக இருந்தது. அதன்பின்
உமர் (ரழி) அவர்களிடம் பாதுகாப்பாக இருந்தது.அதன்பின் உமர் (ரழி) அவர்களின் மகளும்
மற்றும் நபி (ஸல்) அவர்களின் மனைவியுமான ஹஃப்ஸா(ரழி) அவர்களிடம் குர்ஆன் பிரதி
பாதுகாப்பாக இருந்தது.
ஏன் துஆ செய்ய வேண்டும்?...
தபூக் போரில்
கலந்து கொள்ளாததால் அல்லாஹ் ரப்புல் ஆலமீனின் கட்ளைக் கிணங்க மாநபி ஸல் அவர்களால்
சமூக பகிஷ்காரம் செய்யப்பட்டவர்கள் கஃபு இப்னு மாலிக்(ரலி) அவர்கள். அவர்களை
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர்களின் தவ்பாவை ஏற்றுக் கொண்டு அவர்களை மன்னித்து
ஆயத்துகளை இறக்கினான்.
قال ابن
إسحاق: عن عبد الرحمن بن كعب بن مالك قال: كنت أقود أبي حين ذهب بصره فكنت إذا
خرجت به إلى الجمعة فسمع الأذان بها صلى على أبي إمامة أسعد بن زرارة قال: فمكثت
حينًا على ذلك لا يسمع لأذان الجمعة إلا صلى عليه واستغفر له. قال: فقلت في نفسي,
والله إن هذا بي لعجز، ألا أسأله؟ فقلت: يا أبتِ ما لك إذا سمعت الأذان للجمعة
صليت على أبي إمامة؟ فقال: أي بني، إنه كان أول من جمع بنا بالمدينة، في هرم البيت
من حرة بني بياض في بقيع يقال له: بقيع الخَضِمات قال: قلت: وكم أنتم يومئذ؟ قال:
أربعين رجلاً.
அபூதாவூத் (ரஹ்)
அவர்களின் ரிவாயத்தில்....
ترحَّمَ
لأسعدَ بنِ زرارة. فقلتُ لَهُ: إذا سمعتَ النِّداءَ ترحَّمتَ لأسعدَ بنِ زرارةَ
கஃபு இப்னு மாலிக்
(ரலி) அவர்கள். வயதான காலத்தில் கண் தெரியாத நிலையை அடைந்தார்கள். அவரை அவரது
மகனார் அப்துர் ரஹ்மான் பின் கஅப் (ரஹ்) பள்ளிக்கு அழைத்துச் செல்வார்.
அப்துர் ரஹ்மான்
பின் கஅப் (ரஹ்) அவர்கள் சொல்கிறார்கள்:- எனது தந்தை கஃபு இப்னு மாலிக்(ரலி)
அவர்கள். வெள்ளிக்கிழமை ஜும்ஆ உடைய பாங்கை (அழைப்பைக்) கேட்டால் ஒரு துஆ செய்வார்.
வெள்ளிக்கிழமை மட்டும் இந்த துஆ செய்வார்.
வெள்ளிக்கிழமை
ஜும்ஆ உடைய அழைப்பைக் கேட்டால் அஸ்அத் பின் ஸுராராவுக்கு அல்லாஹ் அருள் செய்வானாக!
அல்லாஹ் அவரை மன்னிப்பானாக! என்று கஃபு இப்னு மாலிக் (ரலி) அவர்கள் துஆச்
செய்வார்கள். மகனாருக்கு ஒன்றும் புரியவில்லை. யாரும் சொல்லாத கேட்காத ஒரு துஆவை
அதுவும் வெள்ளிக்கிழமை தோறும் தமது தந்தை கேட்கிறாரே என்று ஒரு நாள் தமது
தந்தையிடம் "தந்தையே! வெள்ளிக்கிழமை தோறும் ஜும்ஆ பாங்கு சொல்லி முடிந்த உடன் அஸ்அத் பின்
ஸுராராவுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக! என்று துஆச் செய்கிறீர்களே என்ன காரணம்
என்று.
அப்போது, கஃபு இப்னு மாலிக் (ரலி) அவர்கள் பதில் சொன்னார்கள். "அவர்தான் இஸ்லாத்தில்
முதன் முதலில் ஜும்ஆவை ஆரம்பித்து வைத்தவர். அவரது ஜும்ஆ உரை மூலம்தான் நாங்கள்
இஸ்லாத்தை அறிந்து கொண்டோம் . ஊருக்கு வெளியில் இருக்கும் பனுாபயாளா என்ற
கோத்திரத்திற்கு சொந்தமான "நகீஉல் கள்மாத்" என்ற இடத்தில். கருங்கற்கள் நிறைந்த ஒரு நிலத்தில். மதீனாவிலிருந்து சுமார் ஒண்ணரை கி.மீ.
தொலைவில் உள்ள இடத்தில் ஊருக்கு வெளியே அந்த ஜும்ஆவை நடத்தினார்கள். அப்போது
நீங்கள் எத்தனை நபர்கள் இருந்தீர்கள்? என்று கேட்க, நாங்கள் நாற்பது நபர்கள் இருந்தோம்" என்று கூறினார்கள்.( நூல்: அபூதாவுத்
)
நபியின் 50 ஆவது வயதில்,
அதாவது நபியான பின் 10 ஆவது ஆண்டில்
மதீனாவில் இருந்து ஒரு குழு ஹஜ் செய்ய வந்தார்கள். அதில் 6 பேர் இடம் பெற்று இருந்தார்கள். அந்த 6 பேரிடமும் நபி ﷺ அவர்கள் இஸ்லாத்தை எடுத்துச்
சொன்னார்கள். ஆனால்,
அந்த ஆறு பேரும் அப்போது இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.
அல்லாஹ்வின்
அருளால் அந்த ஆறு பேருக்கும் மதீனா வந்தடைந்த பிறகு சிறிய மனமாற்றம் ஏற்பட்டது.
ஏற்கனவே இருந்த கொள்கையிலிருந்து தடுமாற்றம் ஏற்பட்டது.
மதீனா திரும்பிய
அந்த ஆறு பேரும் சில நாட்கள் கழித்து மேலும் சிலருக்கு எத்தி வைத்தார்கள். ஆறு
என்பது இரட்டிப்பாகி 12
பேராக ஆனார்கள். இஸ்லாத்தை ஏற்க வேண்டும் என்ற முடிவுடன்
மக்கா வர முடிவு செய்தார்கள்.
ஆனால், நினைத்த உடனே நபியை பார்க்க வர முடியாது. வந்தால் மக்கா காபிர்கள் விட
மாட்டார்கள். எனவே ஹஜ் நேரத்தில் தான் ஹஜ் செய்வது போல் வந்து நபியை பார்க்க
முடியும். ஹஜ் காலத்தில்
வந்தால் சந்தேகப்பட மாட்டார்கள். ஆகவே, ஹஜ்ஜுடைய காலத்திற்காக காத்திருந்தார்கள்.
ஹஜ்ஜுடைய காலம் வந்ததும்
கஸ்ரஜ் கோத்திரத்தை சார்ந்த அஸ்அத்பின்ஸுராரா அவர்கள் தலைமையில் நுபுவ்வத்தின் 11ஆம் ஆண்டில் அந்த 12
பேரும் நபியைப் பார்க்க மக்காவுக்கு வந்தார்கள். மாநபி ﷺ அவர்களைச் சந்தித்து இஸ்லாத்தை
ஏற்றார்கள். ஒரு உடன்படிக்கையையும் செய்தார்கள்.
அந்த உடன்படிக்கை
தான் அகபா உடன்படிக்கை அந்த உடன்படிக்கை தான் இஸ்லாமிய சாம்ராஜ்யம் எனப்படும்
இஸ்லாமிய அரசு அமைய அடித்தளம் வகுத்தது.
இந்த 12 பேரும் தான் வரலாற்றுச் சிறப்பு மிக்க பைஅத்துல் அகபா - அகபா உடன்படிக்கையின்
நாயகர்கள்.
பத்ருப் போரில்
அபுஜஹ்லை கொன்ற முஆது (ரலி) அவர்கள் உட்பட பல முக்கிய தோழர்கள்தான் இந்த 12 பேரில் இடம் பெற்று இருந்தார்கள். இந்த 12 பேரிடமும் நபி ﷺ அவர்கள் சொன்னார்கள். இங்கு ஜும்ஆ நடத்த முடியவில்லை
என்று.
وأمره بإقامة الجمعة فيها، فالتقى بأسعد بن زرارة فبلّغه مصعب أمر
النبي صلّى الله عليه وسلّم، فجمع أسعد أربعين رجلاً فصلّى بهم عند منطقة البياضة
في المدينة المنورة، فكانت تلك الصلاة أوّل صلاة جمعةٍ في الإسلام.
குழுவின் தலைவர்
அஸ்அத் பின் ஸுராரா (ரலி) அவர்களுக்கு கட்டளை இட்டார்கள். “நீங்கள் போய் உங்கள் ஊரில் ஜும்ஆ நடத்துங்கள்” என்று அவர் மதீனா வந்ததும் மாநபி (ஸல்) அவர்களின் 52 ஆவது வயதில் மதீனாவில் ஜும்ஆவை நடத்தினார்.
நபியாகி 12 ஆண்டுகள் ஆனதில் இருந்து மதீனாவில் ஜும்ஆ நடக்க ஆரம்பித்து விட்டது.
ஆனால், நபி(ஸல்) அவர்கள் இருக்கும் மக்காவில் ஜும்ஆ நடக்கவில்லை. காரணம் நடத்த
முடியவில்லை. நடத்த முடியாது.
முதன் முதலில்
ஜும்ஆ என்ற இந்த தொழுகையை நபியின் கட்டளைப்படி ஆரம்பித்து வைத்தவர் அஸ்அத் பின்
ஸுராரா(ரலி) என்ற இந்த நபித்தோழர் தான்.
மறுமை நாள் வரை
உலகில் எத்தனை ஜும்ஆக்கள் நடந்தாலும் அத்தனை ஜும்ஆவிலிருந்தும் ஒரு பங்கு நன்மை
அவருக்குப் போய் சேர்ந்து கொண்டே இருக்கும்.
நல்ல காரியத்தை
யார் துவக்கி வைத்தாலும் அவருக்கு ஒரு பங்கு கியாம நாள் வரை கிடைக்கும் என்பது
தான் இஸ்லாத்தின் நியதி. நமது மஸ்ஜிதில் நடைபெறும் ஜும்ஆவிலிருந்தும் ஒரு பங்கு
அஸ்அத் பின் ஸுராரா (ரலி) அவர்களுக்கும் கிடைக்கும். அதனால் நமக்கு உள்ள நன்மையில்
எதுவும் குறைந்து விடாது.
ஆகவே, உமர் ரலி அவர்களுக்கும் அக மகிழ்ந்து
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அருள் புரிந்திட துஆச் செய்வோம்!
பொதுவாகவே ஒருவர்
ஒரு செயலின் மூலமாகவோ,
ஒரு பண்பாட்டின் மூலமாகவோ முன்மாதிரியான ஒன்றை செய்து அதன்
மூலம் நெஞ்சை நெகிழச் செய்கிறாரோ, வியப்பில்
ஆழ்த்துகின்றாரோ அவருக்காக அல்லாஹ்விடம் அருள் புரிய துஆச் செய்வது இஸ்லாத்தின்
விரும்பப்படுகிற மரபாகும்.
பெருமானார் ﷺ அவர்கள் பல்வேறு நிகழ்வுகளின் போது இவ்வாறாக துஆச்
செய்ததை நபிமொழி கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
عن عبد الله بن مسعود رضي الله عنه قال: لما كان يوم حُنين آثر
رسول الله صلى الله عليه وسلم ناسًا في القِسْمَة، فأعطى الأَقْرَع بن حَابِس مئة
من الإبل، وأعطى عُيينة بن حِصن مثل ذلك، وأعطى نَاسًا من أشراف العَرب وآثَرَهُم
يومئذ في القِسْمَة. فقال رجل: والله إن هذه قِسْمَة ما عُدل فيها، وما أُريد فيها
وجه الله، فقلت: والله لأُخبرن رسول الله صلى الله عليه وسلم فأتيته فأخبرته بما
قال، فتغير وجهه حتى كان كالصِّرفِ. ثم قال: «فمن يَعْدِل إذا لم يعدل الله
ورسوله؟» ثم قال: «يَرحم الله موسى، قد أُوذي بأكثر من هذا فصبر»
ஹுனைன் போரின்
போது நபிகள் நாயகம் ﷺ
அவர்கள் மக்கள் சிலருக்கு முன்னுரிமை வழங்கி அதிகமாகக் கொடுத்தார்கள். அக்ரஉ பின்
ஹாபிஸ் (ரலி) அவர்களுக்கு நூறு ஒட்டகங்களைக் கொடுத்தார்கள். உயைனா (ரலி)
அவர்களுக்கும் அது போன்றே கொடுத்தார்கள். (போரில் கிடைத்த பொருட்களைப்) பங்கிடும்
போது பிரமுகர்களில் சிலருக்கு முன்னுரிமை வழங்கி அதிகமாகக் கொடுத்தார்கள். அப்போது
ஒரு மனிதர்,
அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இது நீதியுடன் நடந்து கொள்ளாத
ஒரு பங்கீடாகும். இது அல்லாஹ்வின் திருப்தி நாடப்படாத ஒரு பங்கீடாகும் என்று
கூறினார். நான்,
அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் நபிகள் நாயகம் (ﷺ) அவர்களுக்கு (இதைத்) தெரிவிப்பேன் என்று கூறினேன்.
பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று அதைத் தெரிவித்தேன். அதற்கு நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள்,
அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நீதியுடன் நடந்து கொள்ளா
விட்டால் வேறு யார் தான் நீதியுடன் நடந்து கொள்வார்கள்? அல்லாஹ்,
(இறைத்தூதர்) மூஸா அவர்களுக்குக் கருணை புரிவானாக! அவர்கள்
இதை விட அதிகமாக மனவேதனைக்கு ஆளாக்கப்பட்டார்கள். ஆயினும் (அதைச்) சகித்துக்
கொண்டார்கள் என்று கூறினார்கள். அறிவிப்பவர் :
அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) ( நூல் : புகாரி )
حَدَّثَنَا
عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدَةُ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ،
عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ سَمِعَ النَّبِيُّ صلى الله عليه وسلم
رَجُلاً يَقْرَأُ فِي الْمَسْجِدِ فَقَالَ "" رَحِمَهُ اللَّهُ، لَقَدْ
أَذْكَرَنِي كَذَا وَكَذَا آيَةً أَسْقَطْتُهَا فِي سُورَةِ كَذَا وَكَذَا "".
ஆயிஷா (ரலி)
அவர்கள் கூறியதாவது: பள்ளிவாசலில் ஒரு மனிதர் குர்ஆன்
ஓதிக்கொண்டிருப்பதைச் செவியுற்ற நபி ﷺ அவர்கள், “அவருக்கு அல்லாஹ்
அருள் புரிவானாக! இன்ன இன்ன அத்தியாயங்களில் நான் மறந்துவிட்டிருந்த இன்ன இன்ன
வசனங்களை அவர் எனக்கு நினைவுபடுத்திவிட்டார்” என்று சொன்னார்கள். (
நூல் : புகாரி )
ومرّ عليّ
- حين رجع من صفين - بقبر خباب، يشيّع الراحل بكلمات: رحم الله خباباً! أسلم
راغباً، وهاجر طائعاً، وعاش مجاهداً، وابتلي في جسمه أحوالاً، وإن الله لا يضيع
أجر من أحسن عملَا.
ஹல்ரத் அலீ (ரலி)
அவர்கள் ஸிஃப்ஃபீன் போர் முடிந்து வந்து கொண்டிருக்கையில் ஓரிடத்தில் ஒரு
மண்ணறையைப் பார்க்கிறார்கள்.
அது சமீபத்தில்
இறந்து போன ஒருவருடைய மண்ணறை என்பதை உணர்ந்தார்கள். பின்பு அருகில் இருந்த தமது
தோழர்களிடத்தில் இது யாருடைய மண்ணறை என வினவினார்கள்.
தோழர்கள் அது “ஃகப்பாப் இப்னு அல் அரத் (ரலி) அவர்களுடையது என்றார்கள்.
கேட்டதும் தான்
தாமதம் தாரை தாரையாய் கண்ணீர் வடித்தார்கள். தேம்பித் தேம்பி அழுதவர்களாக…
யாஅல்லாஹ்!
ஃகப்பாப் (ரலி) அவர்களுக்கு அருள் புரிவாயாக! பேரார்வத்தோடு முஸ்லிமானார்! உன்
உவப்பையும்,
உன் தூதரின் நெருக்கத்தையும் பெறுவதற்காகவே ஹிஜ்ரத்தும்
செய்தார்! தான் ஏற்றுக் கொண்ட ஏகத்துவ கொள்கைக்காக பல்வேறு இன்னல்களை உடலில்
தாங்கிக் கொண்டார்! அல்லாஹ் ஒரு போதும் அவனுக்காக தூய மனதோடு அமல் செய்பவர்களின்
அமலை வீணாக்குவதில்லை. யாஅல்லாஹ் ஃகப்பாப் (ரலி) அவர்களின் மீது உன் கருணை மழையைப்
பொழிவாயாக!
(நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்},
பக்கம்:234.)
ஒரு சந்திப்பின்
போது கப்பாப் ரலி அவர்களிடம்
“சொல்லுங்கள். அந்தக் காலத்தில் காஃபிர்களால் தாங்கள் பட்ட
துன்பத்திலேயே கடினமான ஒரு நிகழ்வைச் சொல்லுங்கள்”. என்று உமர் ரலி கேட்டார்கள்.
மௌனமாக இருந்த
கப்பாப் (ரலி) அவர்களிடம் உமர் (ரலி) அவர்கள் மீண்டும் மீண்டும் வற்புறுத்தவே
கப்பாப் (ரலி) அவர்கள் தமது மேலங்கியைத் தளர்த்தி முதுகைக் காண்பித்தார்கள். சதை
உருகி உருக்குலைந்து போயிருந்தது முதுகுத்தண்டின் மச்சை கொழுப்பு வெளியாகி நிறம்
மாறி அலங்கோலமாய் காட்சியளித்தது.
கண் கலங்கிய படி “இது எப்படி நிகழ்ந்தது?”
என்று உமர் ரலி அவர்கள் கேட்டார்கள்.
قال
خباب: يا أمير المؤمنين ولم يكن لي أحد يمنعني عن تعذيب المشركين فلقد
رأيتني يوما أخذوني وأوقدوا لي نارا ثم سلقوني فيها، ثم وضع رجل رجله على صدري،
فما اتقيت الأرض أو قال برد الأرض إلا بظهري، ثم كشف خباب عن ظهره فرأى أمير
المؤمنين آثارا مما عذبه المشركون، فهاله ما رآه، فقال: ما رأيت كاليوم ظهر رجل.
கப்பாப் (ரலி)
அவர்கள் சங்கடத்துடன் விவரித்தார்கள். “மக்காவில் அந்தக்
காபிர்கள் கற்களை நெருப்பில் இட்டுச் சுடுவார்கள். தீ கொழுந்து விட்டு எரிந்து, அந்தக் கற்கள் நெருப்புத் துண்டுகளாய் ஆகும்வரைக் காத்திருப்பார்கள். பின்னர்
எனது உடைகளைக் கழற்றி விட்டு, அந்த நெருப்புக்
கங்குகளின்மேல் என்னைப் போட்டு மேலும் கீழுமாய் இழுப்பார்கள். எனது முதுகின் சதைத்
துண்டுகள் அந்தத் தீயினால் வெந்து விழும். எனது முதுகுத்தண்டிலிருந்து வழிந்து
விழும் நீரினால் (மச்சை - கொழுப்பால்) அந்தத் தீ அணையும்” என்று கூறினார்கள் கப்பாப் (ரலி) அவர்கள்.
கப்பாப் (ரலி)
அவர்களின் முதுகைப் பார்த்த பிறகு உமர் (ரலி) அவர்கள் "இந்த நாளில் ஒருவரின்
முதுகில் பார்த்தது போன்ற காட்சியை வெறெந்த மனிதரின் முதுகிலும் நான்
பார்த்ததில்லை" என்று கூறினார்கள்.
யாஅல்லாஹ்! அமீருல் முஃமினீன் உமர் ஃபாரூக் (ரலி)
அவர்களுக்கு அருள் புரிவாயாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!
மாஷா அல்லாஹ்..
ReplyDeleteஇன்னும் முதல் நாள் தராவீஹே முடியவில்லை அதற்குள் முதல் நாள் தராவிஹ் என்று வந்துள்ளது
ReplyDeleteஅருமை அருமை அருமை
ReplyDeleteஅல்லாஹ் தங்களின் ஒவ்வொரு எழுத்திற்கும் நற்கூலி வழங்குவானாக