இருள் அகற்றும் இறைமறை – தராவீஹ் சிந்தனை
– 4.
அநாதைகளை அன்பால் அரவணைப்போம்!!!
அல்ஹம்துலில்லாஹ்!!
4 –வது தராவீஹ் தொழுகையை சிறப்பாக நிறைவு செய்து விட்டு நாம் ஆசையோடு
நேற்றிருக்கும் 3-வது நோன்பை நிறைவு செய்திருக்கின்றோம்.
அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமது நோன்பையும், தராவீஹ் தொழுகையையும் கபூல்
செய்வானாக! எஞ்சியிருக்கிற நாட்களின் நோன்புகளையும், வணக்க,
வழிபாடுகளையும் எவ்வித தடங்கலும் இன்றி பரிபூரணமாக
நிறைவேற்றுகிற நற்பேற்றினை நம் அனைவருக்கும் நல்குவானாக! ஆமீன்!!
இன்றைய நாளின்
தராவீஹ் தொழுகையில் அந்நிஸா அத்தியாயம் துவங்கப்பட்டு, 11/4 ஜுஸ்வு
ஓதப்பட்டிருக்கின்றது. 147 வசனங்கள் ஓதப்பட்டிருக்கின்றது.
இன்றைய தராவீஹ்
தொழுகையில் ஓதப்பட்ட அந்நிஸா அத்தியாயத்தின் 2, 3, 6, 8, 10, 36, 127 ஆகிய வசனங்கள்
அநாதைகள் பராமரிப்பு குறித்து பேசுவதை காண முடிகின்றது.
அனாதை என்பதற்கான
அரபு வார்த்தை யதீம். தந்தை இல்லாத அல்லது தந்தை இறந்துவிட்ட அல்லது பெற்றோர்
இருவரையும் இழந்து பருவ வயதை எட்டாத எந்தவொரு குழந்தையும் (ஆண் அல்லது பெண்)
இஸ்லாமிய நீதித்துறையில் யதீம் என்று வகைப்படுத்தப்படுகிறது. நவீன மற்றும் பொதுவாக
அறியப்பட்ட வரையறையின்படி,
'அனாதை' என்ற சொல் 18 வயதை அடைவதற்குள் பெற்றோரை இழக்கும் குழந்தைகளைக் குறிக்கிறது.
உலகில் உள்ள மொத்த
குழந்தைகளின் எண்ணிக்கையில் 6.5% அனாதைகள் என்று
மதிப்பிடப்பட்டுள்ளது.
உலகில் அனைத்து
மதங்களும் அநாதைகள் குறித்து பேசுகின்றன. ஆனால், அனாதைகளைப் பற்றி
விரிவாகப் பேசிய ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. 'யதீம்'
என்ற வார்த்தை புகழ்பெற்ற குர்ஆனில் 22 க்கும் மேற்பட்ட முறை குறிப்பிடப்பட்டுள்ளது,
இது சமூகத்தின்
மிகவும் ஒதுக்கப்பட்ட பிரிவின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.
இஸ்லாம்
அனாதைகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் மிகுந்த முக்கியத்துவம் அளித்துள்ளது.
இப்போது நம்மைச்
சுற்றி வாழும் இந்த ஆன்மாக்களுக்கு உதவுவதிலும் சேவை செய்வதிலும் நாம் என்ன பங்கு
வகிக்க வேண்டும் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும்.
அனாதைகளைப்
பராமரித்தல் மற்றும் பாதுகாத்தல் என்ற உன்னதச் செயலைப் பற்றி நமது சமூக
மக்களுக்குக் கற்பிப்பது வணக்க வழிபாடுகளுக்கு சமமானது என்பதை நாம் உணர வேண்டும்.
அநாதைகள் குறித்தான புள்ளி
விவரங்கள்…
"உலகின் ஒவ்வொரு
போரிலும் எஞ்சுவது நிராதரவாய் - அநாதைகளாய் நிற்கும் குழந்தைகள்தான்"
என்கிறார் ஒரு சிந்தனையாளர்.
பருவ நிலை மாற்றம், திடீர்
மரணங்கள், விபத்துகள், இயற்கை பேரிடர்கள், இடம் பெயர்வு போன்றவைகளால் அநாதைகள் உருவாக்கப்பட்டாலும்,
போரால் உருவாக்கப்படும் அநாதைகளே உலகில் அதிகம் என்பது நிதர்சன உண்மையாகும்.
அநாதைகள் பற்றிய
பதிவுகள் கி.மு 400-ம் நூற்றாண்டில் ரோமானியப் பேரரசர்கள் காலம் தொடங்கியதிலிருந்து நமக்குக்
கிடைக்கின்றன. ரோமானியப் பேரரசு காலத்திலேயே அனாதை இல்லங்கள்
தொடங்கப்பட்டிருக்கின்றன.
பைபிளுக்குப்
பிறகு அதிகம் அச்சிடப்பட்டு விற்கப்படும் புத்தகம், இரண்டாம் உலகப்போரால் யாருமற்றவளாகி இறந்த சிறுமி "ஆன் ஃப்ராங்கின்"
போர்க்கால நாட்குறிப்புகள்தான்.
இரண்டாம்
உலகப்போர்,
ஆன் ஃப்ராங்க் போன்ற ஐந்து லட்சம் அனாதைச் சிறுவர்களை
விட்டுச்சென்றுள்ளது என அன்றைய பதிவுகள் கூறுகின்றன.
தாலிபன் மற்றும்
ஆஃப்கன் மக்களிடையேயான 30
வருடப் போர், இரண்டு மில்லியன்
குழந்தைகள் மற்றும் பெண்களை அடுத்தவேளை எப்படி உயிர் வாழவைக்கப் போகிறது என்ற
கேள்விக்குறியான சூழலுக்கு உட்படுத்தியது. 6,00,000 பேருக்கு இன்றுவரை தெருக்கள்தான் வீடு.
கொள்கையிருந்தும்
மனிதநேயம் குப்பையில் என்பதற்கு உதாரணமாய் ரஷ்யாவைச் சொல்லலாம். வருடாந்திரமாக
அங்கே 6,50,000
சிறார்கள் எவருமின்றித் தனித்து அனாதைகளாக
விடப்படுகின்றனர். ஆதரவற்ற அவர்களைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை அவர்களின் 16 வயதுவரை அரசு ஏற்கிறது. அதன்பிறகு தங்கள் வாழ்வை அவர்கள்தான் பார்த்துக்கொள்ள
வேண்டும். ஆனால்,
அதன்பிறகு நடப்பதோ வேறு. 10 சதவிகித பிள்ளைகள் என்ன செய்வது என்று தெரியாமல் தற்கொலை செய்துகொள்ளும்
சூழலில் 20
சதவிகிதம் பேர் குற்றங்களில் ஈடுபடுகின்றனர். 40 சதவிகிதம் பேர் வீடற்று அதே சூழலுக்குத் திரும்புகின்றனர்.
இந்த நூற்றாண்டின்
மிகப்பெரும் யுத்தமாகக் கருதப்படும் சிரியப் போரால் இன்றுவரையில் உறவுகளிடமிருந்து
பிரிந்து சிதறுண்ட மனிதர்களின் எண்ணிக்கை இரண்டரை மில்லியன். நடுக்கடலில்
தத்தளித்து ஒரு விடியற்காலையில் துருக்கியின் கடற்கரையோரம் ஒதுங்கிய மூன்று வயது
சிறுவன் அய்லான் குர்தியின் உடல் அதற்குச் சாட்சியம்.
2015 ஆம் ஆண்டு
நிலவரப்படி,
உலகில்
14.4 கோடி அநாதைகள் இருந்தனர். இவர்களுல் ஆசியாக் கண்டத்தில்
மாத்திரம் 8.76
கோடி அநாதைகள் வாழ்கின்றனர். ஆப்பிரிக்காவில் 52 மில்லியன்,
லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியனில் 10 மில்லியன்,
கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவில் 7.3 மில்லியன்"
அதே நேரம் ஒவ்வொரு
14 ஆவது நொடியிலும் புதிதாக ஒரு அநாதைக் குழைந்தை உருவாகுவதாகவும் 2 நிமிடத்திற்கு ஒரு அநாதை வீதம் பராமரிப்பின்றியும் போதிய ஊட்டச் சத்தின்றியும்
இறப்பதாகவும் ஐ.நா சபையின் கீழ் இயங்கும் சிறுவர் பாதுகாப்பு பிரிவான யுனிசெப்
அறிவித்துள்ளது. ஐந்து வயதுக்கும் குறைவான 50 லட்சம் அநாதைக்
குழந்தைகள் இவ்வகையில் இறப்பதாகவும் மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சூடான்,
உக்ரைன், மியான்மர், பாலஸ்தீனம், போன்ற நாடுகளில் 460
மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் வசிக்கின்றனர் அல்லது அங்கிருந்து தப்பிச் செல்கின்றனர். இந்த குழந்தைகள் உடல்
ரீதியான ஆபத்துகளை மட்டுமல்ல, தங்கள் குடும்பங்களை
இழப்பதால் ஏற்படும் உணர்ச்சிகரமான அதிர்ச்சியையும் எதிர்கொள்கின்றனர்"
என்கிறது யுனிசெஃப். ( நன்றி: விகடன், 14/11/2016, நியூஸ் 18,
06/01/2025 )
அநாதைகள் விஷயத்தில் கவனம் வேண்டும்....
وَيَسْأَلُونَكَ عَنِ الْيَتَامَى قُلْ إِصْلَاحٌ لَهُمْ خَيْرٌ وَإِنْ
تُخَالِطُوهُمْ فَإِخْوَانُكُمْ وَاللَّهُ يَعْلَمُ الْمُفْسِدَ مِنَ الْمُصْلِحِ
وَلَوْ شَاءَ اللَّهُ لَأَعْنَتَكُمْ إِنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ
மேலும் …”அநாதைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள், அவர்களுடன் நல்ல முறையில்
நடந்து கொள்வது நலவாகும். என்று நபியே ! கூறிவிடுங்கள் மேலும் அவர்களுடன் நீங்கள்
கலந்து இருந்தால் அவர்கள் உங்கள் சகோதரர்களாவர்…( அல்குர்ஆன்: 2- 220 )
இந்த வசனம் இரண்டு
முக்கியமான விசயங்களை எடுத்துக் காட்டுகிறது. முதலாவது அநாதைகளுடன் எந்த
பாகுபாடின்றி நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும். என்பதாகவும், இரண்டாவது அவர்கள் யாரும் அற்ற அநாதைகள் என்று ஒதுக்கி விடாமல் நமது
சகோதரர்களைப் போல இரண்டரக் கலந்து இருக்க வேண்டும், என்பதையும் மேற்ச் சென்ற குர்ஆன் வசனம் நமக்கு நினைவு படுத்துகிறது.
أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ (1) فَذَلِكَ الَّذِي يَدُعُّ
الْيَتِيمَ
மேலும் ” நபியே ! நீர் கவனித்தீரா ? நியாயத் தீர்ப்பு நாளை
பொய்ப்பிப்பவன் தான் அநாதைகளை விரட்டுவான். ( அல்குர்ஆன்: 107 -01 )
அநாதைகளை
புறக்கணிக்கக் கூடாது,
அப்படி புறக்கணிப்பவன் தான் பொய்யன் என்பதை மேற்ச் சென்ற
குர்ஆன் வசனம் எச்சரிக்கிறது்.
كَلَّا بَلْ لَا تُكْرِمُونَ الْيَتِيمَ
மேலும் ” நீங்கள் அநாதைகளை கண்ணியப் படுத்துவதும் கிடையாது” (89- 17)
அநாதைகளை நாம்
கண்ணியப் படுத்த வேண்டும் என்பதை மேற்ச் சென்ற வசனம் நமக்கு ஆர்வமூட்டுகிறது. எனவே
அநாதைகள் விஷயத்தில் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும்.
அநாதைக் குழந்தைகளை அரவணைத்தால்.....
நபி (ஸல்) அவர்கள்
பிறப்பதற்கு முன்னரே தந்தை அப்துல்லாஹ் மரணித்து விட்டார்கள். நபியவர்கள் பிறந்து
சிறிது காலத்தில் தாய் ஆமினாவும் மரணித்து விட்டார்கள்.
وقالت حليمة: قدمنا مكة نلتمس الرضعاء فما منا امرأة إلا وقد
عرض عليها رسول الله -صلى الله عليه وسلم- حتى تأباه إذا قيل لها أنه يتيم، وذلك
إنا كنا نرجو الخير من أبي الصبي، فكنا نقول «يتيم» وما عسى أن تصنع أمه وجده فكنا
نكره لذلك· وتقول حليمة: فما بقيت امرأة قدمت معي إلا أخذت رضيعا غيري، فلما أجمعنا
الانطلاق قلت لزوجي والله أنني لأكره أن أرجع من بين صواحبي ولم أخذ رضيعا والله
لأذهبن إلى ذلك اليتيم لأخذه فقال لها: لا عليك عسى الله أن يجعل لنا فيه بركة·
فإذا هو -صلى الله عليه وسلم- مغطى بصوف أبيض وتحته حريرة خضراء يغط في نومه تفوح
منه رائحة المسك، فأشفقت أن أوقظه من نومه لحسنه وجماله فوضعت يدي على صدره ففتح
عينيه وتبسم ضاحكا إلىّ فخرج من عينيه نور حتى دخل خلال السماء وأنا أنظر فقبلته
بين عينيه وأخذته ورجعت به إلى رجلي، فما وضعته في حجري حتى أقبل عليه ثدياي بما
شاء من اللبن فشرب حتى شبع وشرب معه أخوه حتى شبع ثم ناما وما كنا ننام قبل ذلك،
وقام زوجي إلى الشاه التي معنا وحلب منها وشرب وشربت معه حتى انتهينا رياً وشبعنا
فبتنا بخير ليلة· وقالت حليمة: قال لي زوجي: اعلمي يا حليمة والله لقد أخذت نسمة
مباركة
அன்றைய காலத்தில்
பிற குழந்தைகளுக்கு வாடகைக்காக பால் ஊட்டுவது வழக்கம். அந்த அடிப்படையில்
நபியவர்களுக்கு அபூ லஹபின் அடிமையான ”ஸூவைபிய்யா என்ற தாயிடம்
நபியவர்கள் பால் குடித்தார்கள். மேலும் ஹலீமா அவர்களிடமும் பால் குடித்தார்கள்.
ஹலீமா அவர்கள் ஆரம்பத்தில் நபியவர்களை பால் ஊட்ட எடுப்பதற்கு பின் வங்கினார்கள்.
ஏன் என்றால் தந்தை இருந்தால் தான் அதற்கான ஊழியம் கிடைக்கும். ஆனால்
நபியவர்களுக்கோ தந்தை இல்லை எனவே பால் கொடுத்தால் ஊழியம் யாரிடம் பெறுவது என்ற
பிரச்சினையால் ஆரம்பத்தில் நபியவர்களுக்கு பால் கொடுப்பதற்கு எவரும் முன்வரவில்லை.
என்றாலும் வேறு குழந்தைகள் கிடைக்காததினால் இறுதியில் நபியவர்களையே ஹலீமா அவர்கள்
தேர்ந்தெடுக்கிறார்கள்.
நபியவர்களின்
சிறப்பால் ஹலீமா அவர்களது ஒட்டகம் தாராளமாக பால் கொடுக்க ஆரம்பித்தது. அவர்கள்
பயணம் செய்யும் கழுதை வேகமாக பயணிக்க ஆரம்பித்தது. ஹலீமா அவர்களது மார்பில்
தாராளமாக பால் சுரக்க ஆரம்பித்தது. அவர்களது குடும்பத்திற்கு அல்லாஹ்வின் அருள்
வளம் வர ஆரம்பித்து. ஹலீமாவே! நீ அதிகமான பரகத்துள்ள குழந்தையை பெற்றுள்ளாய் என்று
ஹலீமாவின் கணவர் கூறினார்.
இது அநாதைக்
குழந்தையின் மூலம் அக்குடும்பத்திற்கு அல்லாஹ்வால் கொடுக்கப் படு்ம் எதிர் பாராத
அருள் வளமாகும்.
அநாதைகளை அன்பால் ஆறுதல் படுத்துங்கள்..
عن بشير
بن عقربة قال : لما قتل أبي عقربة يوم أحد أتيت النبي صلى الله عليه وسلم ، وأنا
أبكي فقال : يا حبيب ! ما يبكيك ؟ أما ترضى أن أكون أنا أباك وعائشة أمك ؟ قلت:
بلى يا رسول الله بأبي أنت وأمي ! فمسح على رأسي فكان أثر يده من رأسي أسود وسائره
أبيض ، وكانت لي رتة فتفل فيها فانحلت ، وقال لي : ما اسمك ؟ قلت : بحير ، قال :
بل أنت بشير .
நான் உமக்கு
தந்தையாகவும்,
ஆயிஷா உங்கள் தாயாகவும் மாறினால் அது உமக்கு மகிழ்ச்சி
தருமா?' முத்து போன்ற வார்த்தைகள் உதிர்த்தார்கள் முத்து நபி صَلَّى اللهُ عَلَيْهِ وَاٰلِهٖ وَسَلَّم அவர்கள்.
எதிரில் அழுது
கொண்டிருந்த நான்கு வயது நிரம்பிய சிறுவரை நோக்கி.
ஏன் அழுகிறாய்? என்று மாநமி ஸல் அவர்கள்
வினவியதற்கு,
"எனது தந்தை அக்ரிபா (ரலி) உஹதும்
போரில் ஷஹீதாகி விட்டார்" என்று அழுது கொண்டே சொன்ன அந்த சிறுவனிடம் மாநபி
ஸல் அவர்கள் உதிர்த்த வார்த்தைகள் தான் "நான் உமக்கு தந்தையாகவும், ஆயிஷா உங்கள் தாயாகவும் மாறினால் அது உமக்கு மகிழ்ச்சி தருமா?'
என் தாயும்
தந்தையும் உங்களுக்கு அர்ப்பணம் ஆகட்டும்! அல்லாஹ்வின் தூதரே! என்றார் மகிழ்ச்சிப்
பெருக்கோடு.
அருகில் அழைத்த
மாநபி ஸல் அவர்கள் வாஞ்சையோடு அவரின் தலையின் முன் பகுதியை வருடி விட்டார்கள்.
அவரிடம் காணப்பட்ட ஒரு வடுவை தமது புனித எச்சிலை உமிழ்ந்து அந்த இடத்தில்
தடவினார்கள்.
உமது பெயரென்ன? என்று அன்புடன் மாநபி ஸல் மீண்டும் கேட்க, எனது பெயர் புஹைர்
என்றார் அந்த சிறுவர். இல்லை இன்று முதல் நீ பஷீர் என்று பெயரிட்டார்கள் மாநபி ஸல்
அவர்கள்.
அவரது வயோதிக
காலத்திலும் கூட மாநபி ஸல் அவர்களின் கரம் பட்ட தலையின் முன் பகுதி முடி
நரைக்காமல் கருப்பாகவே இருந்தது. மேலும், அவரின் வடுவும் மறைந்து
போயிருந்தது.
உண்மையில், பஷீர் இப்னு அக்ரிபா (ரலி) அவர்களின் வாழ்க்கையில் மிக முக்கியமான நாள் அது.
அவர் தனது
வாழ்க்கையின் அற்புதமான தொடக்கத்தைக் கொண்டிருந்தார். அனாதையாக ஒரு அதிர்ச்சிகரமான
வாழ்க்கையை வாழ வேண்டியிருந்த அவருக்கு, தலையைத் தடவி, மிகுந்த கருணை காட்டிய மாநபி ஸல் அவர்களின் அந்த செயல் அதன் பிறகு, அவர் இனி தனிமையாகவோ,
தனிமைப்படுத்தப்பட்டவராகவோ உணரவில்லை; அதற்குப் பதிலாக,
உலகின் மிக அழகான குடும்பத்தைப் பெற்ற, ஒப்பற்ற செல்வத்தை பெற்ற பெருமிதம் அவருக்கு ஏற்பட்டது..
دخل ابن
سيرين في مسجد من المساجد ووجد غلاماً لا يتجاوز عمره عشرة سنوات يقول الإمام رأيت
الغلام واقفاً من شدة خشوعه كأنهُ جذعُ نخلة يقول والله لو وقف على رأسه طيراً ما
تحرك من شدة الخشوع فقال لما انتهى من صلاته ناديتُ هذا الغلام فقلت له ابن من
انتَ!
فقال
ذلك الغلام أنا ولداً يتيم ليس لي أب ولا أم فقال لهُ هذا الرجل أترضا أن أكون لك
أب وأنا أقوم بشئونك وأتولاء شؤون حياتك فقال هذا الغلام أوافق بخمسة شروط قال
وماهي ! أما شرطي الاول : هل ستطعمني اذا جعت ! قال نعم أطعمك حتى تشبع
قال
شرطي الثاني : هل ستسقيني اذا عطشت قال أسقيك حتى ترتوي
قال
شرطي الثالث : هل ستكسيني اذا عريت قال أكسيكَ بأجمل الثياب
قال أما
الرابع : هل ستشفيني اذا مرضت ! قال أما المرض فأنا أقدم لك الدواء والله يتولى
شفائك
قال أما
شرطي الأخير : هل ستحييني اذا مت ! قال أما هذه فلا لان الحياة والممات بيد الله
الذي لا إله غيره فاسمعو ماذا قال هذا الغلام قال ياهذا ما دمت لا تستطيع أن
تشفيني اذا مرضت ولا تُحييني اذا مُت اذاً أتركني لكن لمن
!!!
﴿ الذي خلقني فهو يهدين .. والذي هو يطعمني
ويسقين .. وإذا مرضت فهو يشفين ﴾ قال ذلك الرجل لا إله الا الله توكل على الله
فكفاه الله
இமாம் இப்னு
சீரீன் ரஹ்மஹுமுல்லாஹ் ஒரு மஸ்ஜிதில் நுழைகிறார் .
அங்கு ஒரு பத்து
வயது கூட நிரம்பி இருக்காத ஒரு சிறுவன் தொழுது
கொண்டிருந்தான் எப்படிஎன்றால் மிகவும் பேணுதலுடன் , அல்லாஹ்வின்
அச்சம் மேலோங்கியவனாக பணிவோடு தொழுகையை நிறைவேற்றுவதை கண்ட
இமாம் இப்னு சீரீன் (ரஹ்) அவனை அழைத்து “ ஒ சிறுவனே நீ
யாருடைய மகன் ?” என்று கேட்க “நான் ஒரு அநாதை சிறுவன் எனக்கு தந்தையும் இல்லை தாயும் இல்லை” என்று அந்த சிறுவன் கூறினான் .
இமாம் அவர்களோ
ஆர்வமுடன் “நான் உன்னை தத்தெடுத்து கொள்ளவா ?
உனக்கு ஒரு
தந்தையாக இருந்து உன்னுடைய தேவைகளை நிறைவேற்றுவேன் என்னோடு வர சம்மதமா ? என்றார்கள் .
அந்த பத்து வயது
கூட நிரம்பாத அச்சிறுவனோ “நான் உங்களோடு வர
ஐந்து நிபந்தனைகள் உள்ளது அதற்க்கு சரி என்றால் நான்
உங்களோடு வருகிறேன் “
என்று கூறினான் .
இமாம்
ஆச்சரியமுடன் “
என்ன அந்த ஐந்து நிபந்தனைகள் என்று கேட்க
அச்சிறுவன்
பட்டியலிடுகிறான் “முதல் நிபந்தனை –எனக்கு பசிக்கும்போது உணவளிப்பீர்களா ? “என்று கேட்க இமாம் “உனக்கு போதும் என்று சொல்லுமளவிற்கு உணவளிப்பேன் என்றார் .
மேலும் சிறுவனின்
இரண்டாம் நிபந்தனை “எனக்கு தாகம் எடுத்தால்
தாகம் தனிபீர்களா ?
இமாம் “ உனக்கு போதும் என்று சொல்லும் அளவிற்கு உன் தாகத்தை
தணிப்பேன் “என்றார்கள்
மேலும் சிறுவனின்
மூன்றாவது நிபந்தனை “
எனக்கு ஆடையில்லை என்றால் ஆடை அணிவிபீர்களா ? “
இமாம் : உனக்கு
அழகிய ஆடைகளை அணிவிப்பேன் “
என்றார்கள்
சிறுவனின்
நான்காவது நிபந்தனை “
எனக்கு நோய் ஏற்பட்டால் நிவாரணம்
அளிப்பீர்களா ?
இமாம் : நோய்
ஏற்பட்டால் சிகிச்சை அளிப்பேன் . நிவாரணம் அளிப்பது
அல்லாஹ் ஒருவனே “
சிறுவனின்
ஐந்தாவது நிபந்தனை “
நான் இறந்தால் நீங்கள் எனக்கு உயிர்
கொடுப்பீர்களா ?
இமாம் : பிறப்பும்
இறப்பும் அல்லாஹ்வின் கரத்தில் அல்லவா உள்ளது “ என்றார்கள்
இமாமை மிக ஆழ்ந்து
யோசிக்கவைத்தான் சிறுவன்,
மேலும் அவன் இமாமை பார்த்து “ ஓ மனிதரே !! நீங்கள் எனக்கு நோய்வாய் பட்டால் அதற்க்கு நிவாரணம் அளிக்க
முடியாது !
நான் இறந்தால்
என்னை திரும்பவும் உயிர்பிக்க முடியாது ! எனவே என்னை
விட்டுவிடுங்கள் .!!என்றதும் இமாம் “உன்னை விட்டுவிட்டால் உன்னை
கவனிப்பவர் யார் ?
சிறுவனோ “ என்னை விட்டுவிடுங்கள் எவன் என்னை படைத்தானோ ,
எவன் எனக்கு நேர்வழி கொடுத்தானோ , எவன் எனக்கு உண்ணவும் ,
தாகம் தணிக்கவும் வைக்கிறானோ , யார் நான் நோய்வாய்
பட்டால் நிவாரணம் அளிக்கிறானோ , யார் நான் இறந்தால் உயிர் கொடுபானோ அவனே
எனக்கு வாழ்வளிப்பான் ! அவனே என்னை கவனித்துகொள்வான் !!!
இதைகேட்ட இமாம்
“ لا اله الا الله توكت علي الله كفى بالله وسبحانه
வணக்கத்திற்குரியவன்
அல்லாஹ்வை தவிர வேறு யாரும் இல்லை , அவனையே முழுமையாக
நம்பிக்கை வையுங்கள் அவன் ஒருவனே நமக்கு போதுமானவன் ,மேலும் பரிசுத்தமானவன் .”என்றார்கள்.
أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَى (6) وَوَجَدَكَ ضَالًّا فَهَدَى (7)
وَوَجَدَكَ عَائِلًا فَأَغْنَى
நபியே) அவன் உம்மை
அனாதையாகக் கண்டு அவன் அரவணைக்கவில்லையா?’ ‘உம்மை வழி
அறியாதவராகக் கண்டு வழிகாட்டினான்’. ‘உம்மை வறுமையில்
கண்டு தன்னிறைவு பெற்றவராக்கினான்’. ( அல்குர்ஆன்: 93: 6,7,8 )
அனாதைகளின்
விஷயத்தில் முக்கியமான மூன்று அம்சங்களை பற்றி மேற்கூறப்பட்ட திருக்குர்ஆனின்
வசனம் கோடிட்டு காட்டுகிறது. 1. அனாதைகளின் அரவணைப்பு, 2. அனாதைகளின் அறியாமையை போக்கி அவர்களை அறிவுசார்ந்த சமூகமாக மாற்றிக் காட்டுவது, 3. அவர்களை பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றவர்களாக ஏற்றம் காணச்செய்வது. இவை
அடிப்படையான அம்சங்கள்.
பாதுகாப்பு, கல்வி,
பொருளாதாரம் ஆகியவை தான் ஒரு அனாதையை சமூகத்தில் அந்தஸ்து
உடையவனாக மாற்றிக்காட்டுகிறது. இவைகள் குறித்து இன்று தொழுகையில் ஓதப்பட்ட சூரா
அந் நிஸா அத்தியாயத்தில் பல்வேறு வசனங்களின் ஊடாக அல்லாஹ் ரப்புல் ஆலமீன் விரிவாக
பேசுகின்றான்.
قال رسول الله صلى الله عليه وسلم عوف
بن مالك الأشجعي قال
أنا
وامرأة سفعاء الخدين كهاتين يوم القيامة وأومأ
يزيد
بالوسطى والسبابة
امرأة آمت من زوجها ذات منصب وجمال
حبست
نفسها على يتاماها حتى
بانوا أو ماتوا
அவ்ஃப் இப்னு மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்:
“நானும் கரிந்து போன முகத்துடைய பெண்ணும் மறுமை நாளில் இந்த இரு விரல்களைப் போன்று இருப்போம்”.
யஸீத் இப்னு ஸரீஉ (ரலி) அவர்கள் இந்த நபிமொழியைக் கூறிய போது தம் நடுவிரலையும், சுட்டு விரலையும் இணைத்து சுட்டிக்காட்டினார்கள்.
கரிந்து போன முகத்துடைய பெண் அதாவது, தன் கணவனை இழந்து விட்ட, குடும்பப் பாரம்பர்யமும் நல்ல அழகும் இருந்து, இறந்து விட்ட கணவனின் குழந்தைகளுக்காக அவர்கள் தன்னை விட்டுப் பிரியும் வரை அல்லது இறந்து விடும் வரை திருமணம் செய்து கொள்ளாமலிருக்கும் பெண். (நூல்: அபூதாவூத்)
من حديث
سَهْل بْن سَعْدٍ عَنْ النَّبِيِّ قَالَ: ((أَنَا وَكَافِلُ الْيَتِيمِ فِي
الْجَنَّةِ هَكَذَا))
وأشار بالسبابة والوسطى وفرج بينهما شيئا.
ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி) அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் {ஸல்}
அவர்கள் கூறினார்கள்:“நானும், அநாதையைப் பராமரிப்பவனும், இன்ன பிற தேவை உடையோரைப் பராமரிப்பவனும் சுவனத்தில் இப்படி இருப்போம்” இதைச் சொல்லி விட்டு நபி {ஸல்} அவர்கள் நடுவிரலையும், சுட்டுவிரலையும் காட்டினார்கள். இரு விரல்களுக்கு இடையே சிறிது இடைவெளி விட்டிருந்தார்கள்.
( நூல்: புகாரி )
அநாதைகளை அரவணைப்போம்! ரப்பின் நெருக்கத்தைப் பெறுவோம்!
நபி {ஸல்} அவர்களின் அண்மையைப் பெறுவோம்!!
No comments:
Post a Comment