இருள் அகற்றும் இறைமறை – தராவீஹ் சிந்தனை – 5.
ஒப்பந்தங்களை நிறைவேற்றுவோம்!!!
ஐந்தாம் நாள்
தராவீஹ் தொழுகையைத் தொழுது முடித்தும், நான்காம் நாள் நோன்பை
நிறைவு செய்தும் அமர்ந்திருக்கின்ற நம் அனைவரின் நோன்பையும், தராவீஹ் தொழுகையையும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அங்கீகரித்து அளவிலா நன்மைகளை
வழங்குவானாக! ஆமீன்!
இன்றைய தராவீஹ் தொழுகையில் பெரும் பகுதி ஓதப்பட்ட அல்மாயிதா என்ற ஐந்தாவது அத்தியாயம்
ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள் பற்றிய முன்னோடி அத்தியாயம் என திருக்குர்ஆன்
விரிவுரையாளர்களால் வர்ணிக்கப்படுகின்ற அளவு அதன் ஆரம்ப, மற்றும் பல வசனங்கள் ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகளை
நிறைவேற்றுவதன் அவசியம் பற்றி விரிவாகப் பேசுகின்றன.
ஒப்பந்தங்கள்,
உடன்படிக்கை என்ற பொருள் தருகிற அரபு வார்த்தைகள் அல்குர்ஆனில் அல் உகூத், அல்
உஹூத், அல் மீஸாக் என்று பயன்படுத்தப்படுகின்றது.
உடன்பட்டு
உறுதியோடு கையெழுத்திடும் ஒப்பந்தங்களை…
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا أَوْفُوا بِالْعُقُودِ
"நம்பிக்கையுடையோரே!
நீங்கள் ஒப்பந்தங்களை முழுமையாக நிறைவேற்றுங்கள்'' என்று அல்மாயிதா அத்தியாயத்தின் முதல் வசனம் குறிப்பிடுகிறது.
ஒப்பந்தங்களை உடன்பட்டபடி உறுதியாக செயல்படுத்தாதவர்கள் இறையச்சம் இல்லாதவர் என்று
الَّذِينَ عَاهَدْتَ مِنْهُمْ ثُمَّ يَنْقُضُونَ عَهْدَهُمْ فِي كُلِّ
مَرَّةٍ وَهُمْ لَا يَتَّقُونَ
"இறை
நம்பிக்கையற்றோர் செய்த ஒப்பந்தங்களை ஒவ்வொரு முறையும் முறித்து
விடுகின்றனர். அவர்கள் அல்லாஹ்விற்கு பயப்படுவதில்லை''
எழில்மறை குர்ஆனின் 8-56
ஆவது வசனம் எடுத்துரைக்கிறது.
وَإِنْ نَكَثُوا أَيْمَانَهُمْ مِنْ بَعْدِ عَهْدِهِمْ وَطَعَنُوا فِي
دِينِكُمْ فَقَاتِلُوا أَئِمَّةَ الْكُفْرِ إِنَّهُمْ لَا أَيْمَانَ لَهُمْ
لَعَلَّهُمْ يَنْتَهُونَ
"சத்தியம் செய்து
உடன்படிக்கை செய்தபின் அவர்கள் செய்த சத்தியத்தை முறித்து உங்களுடைய மார்க்கத்தைப்
பற்றி தவறான குற்றங்களைக் கூறி கொண்டிருந்ததால் இத்தகைய மக்களின் ஒப்பந்தங்கள் உடைந்து விட்டது'' என்று ஒப்பந்தங்களை உடைபடுவதை உயர்மறை குர்ஆனின் 9-12
உரைக்கிறது.
كَيْفَ يَكُونُ لِلْمُشْرِكِينَ عَهْدٌ عِنْدَ اللَّهِ وَعِنْدَ
رَسُولِهِ إِلَّا الَّذِينَ عَاهَدْتُمْ عِنْدَ الْمَسْجِدِ الْحَرَامِ فَمَا
اسْتَقَامُوا لَكُمْ فَاسْتَقِيمُوا لَهُمْ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَّقِينَ
"அல்லாஹ்விடத்திலும்
அவனின் தூதரிடத்திலும் இணை வைத்து வணங்குபவர்களின் உடன்படிக்கைக்கு எவ்வாறு
மதிப்பிருக்க முடியும்?
ஆயினும் சிறப்புற்ற மஸ்ஜிதின் முன் உங்களுடன் உடன்படிக்கை
செய்து கொண்டவர்கள் தங்கள் உடன்படிக்கையின்படி உங்களுடன் உறுதியாக இருக்கும்
வரையில் நீங்களும் அவர்களுடன் உறுதியாக இருங்கள்'' என்று கொள்கை வேறுபாடுடையவர்களோடு செய்த உடன்படிக்கைகளும் உடன்பாட்டில்
உறுதியாய் இருக்கும் வரையில் நிலை பெறுவதை நிறைவாவதை இறைமறையின் 9-7 -வது வசனம் இயம்புகிறது.
அல்லாஹ்விடம் நாம்
செய்து கொண்ட ஒப்பந்தமாக இருப்பினும் சரி அடியார்களிடம் செய்து கொண்ட ஒப்பந்தமாக
இருந்தாலும் சரி மிகச் சரியாக நிறைவேற்ற வேண்டும்.
அல்லாஹ் நம்மிடம் செய்துள்ள ஒப்பந்தம்....
اِنَّ
اللّٰهَ اشْتَرٰى مِنَ الْمُؤْمِنِيْنَ اَنْفُسَهُمْ وَاَمْوَالَهُمْ بِاَنَّ
لَهُمُ الْجَــنَّةَ يُقَاتِلُوْنَ فِىْ سَبِيْلِ اللّٰهِ فَيَقْتُلُوْنَ وَ
يُقْتَلُوْنَ وَعْدًا عَلَيْهِ حَقًّا فِى التَّوْرٰٮةِ وَالْاِنْجِيْلِ
وَالْقُرْاٰنِ وَمَنْ اَوْفٰى بِعَهْدِهٖ مِنَ اللّٰهِ فَاسْتَـبْشِرُوْا
بِبَيْعِكُمُ الَّذِىْ بَايَعْتُمْ بِهٖ
وَذٰ لِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيْمُ
நிச்சயமாக அல்லாஹ்
நம்பிக்கையாளர்களிடமிருந்து அவர்களுடைய உயிர்களையும், அவர்களுடைய பொருட்களையும் - நிச்சயமாக அவர்களுக்கு 'சுவனம்'
இருக்கிறது என்பதற்குப் பகரமாக விலைக்கு வாங்கிக்கொண்டான்; அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள்; அப்போது,
அவர்கள் (எதிரிகளை) வெட்டுகிறார்கள்; (எதிரிகளால்) அவர்களும் வெட்டப்படுகிறார்கள்; (இது) தவ்ராத்திலும்,
இன்ஜீலிலும், குர்ஆனிலும் அவன் தன்
மீது கடமையாக்கிக் கொண்ட வாக்குறுதி; அல்லாஹ்வைவிட
வாக்குறுதியைப் பூரணமாக நிறைவேற்றுபவர் யார்? ஆகவே, நீங்கள் அவனுடன் செய்துகொண்ட உங்களுடைய இவ்வாணிபத்தைப்பற்றி மகிழ்ச்சி
அடையுங்கள்;
இதுவே, மகத்தான வெற்றியாகும். (
அல்குர்ஆன்: 9:
111 )
அல்லாஹ்விடம் நாம் கொடுத்துள்ள ஒப்பந்தம்...
وَ اِذْ
اَخَذَ رَبُّكَ مِنْۢ بَنِىْۤ اٰدَمَ مِنْ ظُهُوْرِهِمْ ذُرِّيَّتَهُمْ
وَاَشْهَدَهُمْ
عَلٰٓى اَنْفُسِهِمْ اَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوْا بَلٰى شَهِدْنَا اَنْ
تَقُوْلُوْا يَوْمَ الْقِيٰمَةِ اِنَّا كُنَّا عَنْ هٰذَا غٰفِلِيْنَ
உம் இறைவன்
ஆதமுடைய மக்களில் அவர்களுடைய முதுகுகளிலிருந்து அவர்களுடைய சந்ததிகளை வெளியாக்கி, அவர்களைத் தங்களுக்கே சாட்சியாக வைத்து: "நான் உங்களுடைய இறைவன் அல்லவா?" என்று கேட்டதற்கு,
அவர்கள், "மெய்தான்; நாங்கள் சாட்சி கூறுகிறோம்" என்று கூறியதை நினைவூட்டுவீராக!
"(ஏனெனில்,
நினைவூட்டப்படாததனால்) நிச்சயமாக இதனை (மறந்து)விட்டுப்
பராமுகமாக இருந்து விட்டோம்" என்று மறுமைநாளில் நீங்கள் (யாருமே)
சொல்லாதிருப்பதற்காக-
اَوْ
تَقُوْلُوْۤا اِنَّمَاۤ اَشْرَكَ اٰبَآؤُنَا مِنْ قَبْلُ وَكُنَّا ذُرِّيَّةً
مِّنْۢ بَعْدِهِمْۚ اَفَتُهْلِكُنَا بِمَا فَعَلَ الْمُبْطِلُوْنَ
அல்லது, 'இணைவைத்தவர்கள் எல்லாம் எங்களுக்கு முன் இருந்த எங்கள் மூதாதையர்களே! நாங்களோ
அவர்களுக்குப் பின் வந்த (அவர்களுடைய) சந்ததிகள் - அந்த வழிகெட்டோரின் செயலுக்காக
எங்களை நீ அழிக்கிறாயா?'
என்று சொல்லாமலிருப்பதற்காக! (இதனை நினைவூட்டுகிறோம் என்று
நபியே! நீர் கூறுவீராக!) ( அல்குர்ஆன்: 7: 172, 173 )
இப்படியும் சில ஒப்பந்ததாரர்கள்....
தபூக்
யுத்தத்திற்கு செல்லாமல் இருந்த கஅப் இப்னு மாலிக் (ரலி) அவர்களின் தவ்பாவை
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஏற்றுக் கொண்டதன் பின்னர் மாநபி ஸல் அவர்களின் சமூகம்
சென்ற கஅப் இப்னு மாலிக் (ரலி) அவர்கள்...
فَلَمَّا
جَلَسْتُ بيْنَ يَدَيْهِ قُلتُ: يا رَسولَ اللَّهِ، إنَّ مِن تَوْبَتي أنْ
أنْخَلِعَ مِن مَالِي صَدَقَةً إلى اللَّهِ وإلَى رَسولِ اللَّهِ، قَالَ رَسولُ
اللَّهِ صلَّى اللهُ عليه وسلَّمَ: أمْسِكْ عَلَيْكَ بَعْضَ مَالِكَ؛ فَهو خَيْرٌ
لَكَ. قُلتُ: فإنِّي أُمْسِكُ سَهْمِي الذي بخَيْبَرَ، فَقُلتُ: يا رَسولَ
اللَّهِ، إنَّ اللَّهَ إنَّما نَجَّانِي بالصِّدْقِ، وإنَّ مِن تَوْبَتي أنْ لا
أُحَدِّثَ إلَّا صِدْقًا ما بَقِيتُ. فَوَاللَّهِ ما أعْلَمُ أحَدًا مِنَ
المُسْلِمِينَ أبْلَاهُ اللَّهُ في صِدْقِ الحَديثِ مُنْذُ ذَكَرْتُ ذلكَ لِرَسولِ
اللَّهِ صلَّى اللهُ عليه وسلَّمَ، أحْسَنَ ممَّا أبْلَانِي؛ ما تَعَمَّدْتُ
مُنْذُ ذَكَرْتُ ذلكَ لِرَسولِ اللَّهِ صلَّى اللهُ عليه وسلَّمَ إلى يَومِي هذا
كَذِبًا، وإنِّي لَأَرْجُو أنْ يَحْفَظَنِي اللَّهُ فِيما بَقِيتُ،
"நான் நபி(ஸல்)
அவர்களின் முன்னால் உட்கார்ந்தபொழுது சொன்னேன்: அல்லாஹ்வின் தூதரே! எனக்கு
மன்னிப்புக் கிடைத்ததன் பொருட்டு நன்றி செலுத்திடவே எனது எல்லாச் சொத்துக்களையும்
அல்லாஹ் - ரஸூலின் பாதையில் தர்மம் செய்கிறேன்,,
அதற்கு நபியவர்கள்
கூறினார்கள்: 'உமது சொத்தில் சிறிது அளவை உமக்காக வைத்துக் கொள்ளும். இதுவே உமக்குச்
சிறந்ததாகும்'
நான் சொன்னேன்: கைபரில் இருந்து எனக்குக் கிடைத்த பங்கை
எனக்காக நான் வைத்துக்கொள்கிறேன்,,
மேலும்
நான்சொன்னேன்: அல்லாஹ்வின் தூதரே! உண்மை பேசியதனால் தான் அல்லாஹ் எனக்கு ஈடேற்றம்
அளித்துள்ளான். எதிர்காலத்தில் என் ஆயுள் முழுவதும் உண்மையே நான் பேசுவேன்
என்பதும் - எனக்கு மன்னிப்பு கிடைத்ததன் பொருட்டு நான் செலுத்தும் நனிறியாக உள்ளது,,
அல்லாஹ்வின் மீது
சத்தியமாக! நபி(ஸல்) அவர்களின் முன்னிலையில், உண்மையே பேசுவேன் என நான்
வாக்குறுதி கொடுத்த நாளில் இருந்து இன்று வரை முஸ்லிம்களில் எவரைக் குறித்தும்
(நான் அறியேன் அதாவது) உண்மை பேசும் விஷயத்தில் அல்லாஹ் என்னைச் சோதனைக்
குள்ளாக்கியதை விடவும் அழகாக அல்லாஹ் அவரைச் சோதனைக்குள்ளாகியதை நான் அறியேன்.
அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நபியவர்களிடம் அவ்வாறு நான் வாக்குறுதி கொடுத்ததில்
இருந்து இன்றைய தினம் வரை எந்தச் சூழ்நிலையிலும் பொய்பேச நான் நாடியதே இல்லை.
எதிர் காலத்திலும் அதிலிருந்து அல்லாஹ் என்னைப் பாதுகாப்பான் என்கிற நம்பிக்கை
எனக்கு உண்டு,,
( நூல்: புகாரி )
இத்தகைய ஒப்பந்ததாரர்களாக நாம் ஆகி விடக்கூடாது...
وَمِنْهُمْ
مَّنْ عَاهَدَ اللّٰهَ لَٮِٕنْ اٰتٰٮنَا مِنْ فَضْلِهٖ لَـنَصَّدَّقَنَّ
وَلَنَكُوْنَنَّ مِنَ الصّٰلِحِيْنَ
அவர்களில் சிலர், "அல்லாஹ் தன் அருளிலிருந்து நமக்கு(ச் செல்வத்தை) அளித்தால், மெய்யாகவே நாம் (தாரளமாகத் தான) தர்மம் செய்வோம்; இன்னும்,
நல்லோர்களாகவும் நிச்சயமாக நாம் ஆகிவிடுவோம்" என்று
அல்லாஹ்விடம் வாக்குறுதி செய்தார்கள்.
فَلَمَّاۤ
اٰتٰٮهُمْ مِّنْ فَضْلِهٖ بَخِلُوْا بِهٖ وَتَوَلَّوْا وَّهُمْ مُّعْرِضُوْنَ
(அவ்வாறே) அவன், அவர்களுக்குத் தன் அருளிலிருந்து வழங்கியபோது, அதில் அவர்கள் உலோபித்தனம் செய்து, அவர்கள்
புறக்கணித்தவர்களாகப் பின்வாங்கி விட்டனர்.
فَاَعْقَبَهُمْ
نِفَاقًا فِىْ قُلُوْبِهِمْ اِلٰى يَوْمِ يَلْقَوْنَهٗ بِمَاۤ اَخْلَفُوا اللّٰهَ
مَا وَعَدُوْهُ وَبِمَا كَانُوْا يَكْذِبُوْنَ
எனவே, அல்லாஹ்வுக்கு அவனுக்கு வாக்களித்ததில் அவர்கள் மாறுசெய்ததாலும், அவர்கள் பொய் சொல்லிக்கொண்டே இருந்ததினாலும், அவன் அவர்களுடைய உள்ளங்களில் தன்னைச் சந்திக்கும் (இறுதி) நாள் வரையில்
நயவஞ்சகத்தைத் தொடரச் செய்துவிட்டான். ( அல்குர்ஆன்: 9: 75 - 77 )
ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதால்....
روى البخاري ومسلم في صحيحيهما من حديث عائشة رضي الله عنها قالت: لما
رجع النبي صلى الله عليه وسلم من الخندق، ووضع السلاح، واغتسل أتاه جبريل عليه
السلام قَالَ: «قَدْ وَضَعْتَ السِّلَاحَ؟ وَاللَّهِ مَا وَضَعْنَاهُ، فَاخْرُجْ
إِلَيْهِمْ»، قَالَ: « فَإِلَى أَيْنَ؟» قَالَ: «هُنَا، وَأَشَارَ إِلَى بَنِي
قُرَيْظَةَ، فَخَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِلَيْهِمْ»
ثم أمر رسول الله صلى الله عليه وسلم مناديًا ينادي في الناس: «لَا
يُصَلِّيَنَّ أَحَدٌ العَصْرَ إِلَّا فِي بَنِي قُرَيْظَةَ»
وخرج رسول الله صلى الله عليه وسلم في موكبه من
المهاجرين والأنصار حتى نزل على بئر من آبار قريظة يُقال لها بئر أنّا، ثم تحرك
الجيش الإسلامي نحو بني قريظة أرسالًا حتى تلاحقوا بالنبي صلى الله عليه
وسلم وهم ثلاثة آلاف والخيل ثلاثون فرسًا، فنازلوا حصون بني قريظة.
فلما نزل رسول الله صلى الله عليه وسلم بحصنهم وكانوا في أعلاه،
نادى بأعلى صوته نفرًا من أشرافها حتى أسمعهم: «يَا إِخْوَةَ الْقِرَدَةِ
وَالْخَنَازِيرَ»، قالوا: يا أبا القاسم ما كنت جهولًا ولا فحاشًا
فحاصرهم رسول الله صلى الله عليه وسلم خمسًا وعشرين ليلة، حتى اشتدت بهم الحال
وأيقنوا أن رسول الله صلى الله عليه وسلم غير منصرف عنهم حتى يناجزهم.
عرض عليهم رئيسهم كعب بن أسد ثلاث خصال، إما أن يسلموا ويدخلوا مع محمد صلى الله
عليه وسلم في دينه، فيأمنوا على دمائهم وأموالهم وأبنائهم ونسائهم، وقد قال لهم:
والله لقد تبين لكم أنه لنبي مرسل، وإنه الذي تجدونه في كتابكم، وإما أن يقتلوا
ذراريهم ونساءهم بأيديهم، ويخرجوا إلى النبي صلى الله عليه وسلم بالسيوف مصلتين
يناجزونه حتى يظفروا بهم، أو يُقتلوا عن آخرهم، وإما أن يهجموا على رسول الله صلى
الله عليه وسلم وأصحابه ويكبسوهم يوم السبت؛ لأنهم قد أمنوا أن يقاتلوهم فيه،
فأبوا أن يجيبوه إلى واحدة من هذه الخصال الثلاث، وحينئذ قال سيدهم كعب بن أسد في
انزعاج وغضب: ما بات رجل منكم منذ ولدته أمه ليلة واحدة من الدهر حازمًا
ولم يبق لقريظة بعد هذه الخصال الثلاث إلا أن ينزلوا على حكم رسول الله صلى الله
عليه وسلم ،ولكنهم أرادوا أن يتصلوا ببعض حلفائهم من المسلمين لعلهم يتعرفون ماذا
سيحل بهم إذا نزلوا على حكمه، فبعثوا إلى رسول الله صلى الله عليه وسلم أن أرسل
إلينا أبا لبابة نستشيره، وكان حليفًا لهم، وكانت أمواله وولده في منطقتهم، فلما
رأوه قام إليه الرجال، وجهش النساء والصبيان يبكون في وجهه، فرق لهم، وقالوا: يا
أبا لبابة، أترى أن ننزل على حكم محمد؟ قال: نعم، وأشار بيده إلى حلقه، يقول: إنه
الذبح، ثم علم من فوره أنه خان الله ورسوله فمضى على وجهه ولم يرجع إلى رسول الله
صلى الله عليه وسلم حتى أتى المسجد النبوي بالمدينة، فربط نفسه بسارية المسجد وحلف
ألا يحله إلا رسول الله صلى الله عليه وسلم بيده، وأنه لا يدخل أرض بني قريظة
أبدًا، فلما بلغ رسول الله صلى الله عليه وسلم خبره،وكان قد استبطأه قال: «أَمَا
لَوْ جَاءَنِي لَاسْتَغْفَرْتُ لَهُ، فَأَمَا إِذْ فَعْلَ مَا فَعْلَ فَمَا أَنَا
بِالَّذِي أُطْلِقُهُ مِنْ مَكَانَهُ حَتَّى يَتُوْبَ اللَّهُ عَلَيْهِ
وأقام أبو لبابة رضي الله عنه مربوطًا بالجذع ست ليال أو أكثر، تأتيه امرأته في
وقت كل صلاة فتحله للصلاة، ثم يعود فيربط بالجذع، حتى نزلت توبته من الله تعالى،
فأنزل الله: ﴿ وَآخَرُونَ اعْتَرَفُوا بِذُنُوبِهِمْ خَلَطُوا عَمَلًا صَالِحًا
وَآخَرَ سَيِّئًا عَسَى اللَّهُ أَنْ يَتُوبَ عَلَيْهِمْ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ
﴾ [التوبة: 102].
وبرغم ما أشار إليه أبو لبابة قررت قريظة النزول على حكم رسولالله صلى
الله عليه وسلم، ولقد كان باستطاعة اليهود أن يتحملوا الحصار الطويل لتوفر المواد
الغذائية والمياه والآبار ومناعة الحصون، ولأن المسلمين كانوا يقاسون البرد القارس
والجوع الشديد وهم في العراء، مع شدة التعب الذي اعتراهم لمواصلة الأعمال الحربية
من قبل بداية معركة الأحزاب، إلا أن حرب قريظة كانت حرب أعصاب، فقد قذف الله في
قلوبهم الرعب، وأخذت معنوياتهم بالانهيار، وبلغ هذا الانهيار إلى نهايته أن تقدم
علي بن أبي طالب والزبير بن العوام رضي الله عنه، وصاح علي: يا كتيبة الإيمان!
والله لأذوقنَّ ما ذاق حمزة أو لأفتحنَّ حصنهم، وحينئذ بادروا إلى النزول على حكم
رسول الله صلى الله عليه وسلم.
وأمر رسول الله صلى الله عليه وسلم باعتقال الرجال، فوضعت القيود في أيديهم تحت
إشراف محمد بن مسلمة الأنصاري، وجعلت النساء والذراري بمعزل عن الرجال في ناحية،
وقامت الأوس إلى رسول الله صلى الله عليه وسلم، فقالوا: يا رسول الله، قد فعلت في
بني قينقاع ما قد علمت وهم حلفاء إخواننا الخزرج، وهؤلاء موالينا فأحسن فيهم،
فقال: «أَلاَ تَرْضَوْنَ أَنْ يَحْكُمَ فِيهِمْ رَجُلٌ مِنْكُمْ؟»، قالوا: بلى،
قال: «فَذَاكَ إِلَىْ سَعْدِ بْنِ مُعَاذٍ»، قالوا: قد رضينا، فأرسل إلى سعد بن
معاذ وكان في المسجد النبوي يُطيب من جرحه الذي أُصيب به في الخندق، وكان قد أصاب
أكحله في معركة الأحزاب، فأُركب حمارًا وجاء إلى رسول الله صلى الله عليه وسلم،
فجعلوا يقولون، وهم كنفيه: يا سعد، أجمل في مواليك فأحسن فيهم، فإن رسولالله صلى
الله عليه وسلم قد حكمك لتحسن فيهم، وهو ساكت لا يرجع إليهم شيئًا، فلما أكثروا
عليه قال: لقد آن لسعد ألا تأخذه في الله لومة لائم، فلما سمعوا ذلك منه رجع بعضهم
إلى المدينة، فنعى إليهم القوم
ولما انتهى سعد إلى النبي صلى الله عليه وسلم قال للصحابة: «قُومُوا إِلَى
سَيِّدِكُمْ - أَوْ خَيركُمْ - فَأَنْزِلُوهُ»، فقال عمر بن الخطاب رضي الله عنه:
السيد هو الله، فقاموا إليه فأنزلوه، ثم قال له رسول الله صلى الله عليه وسلم:
«إنَّ هَؤُلَاءِ نَزَلُوا علَى حُكْمِكَ»، فقال سعد: فإني أحكم فيهم أن تُقتل
مقاتلتهم، وتسبى ذراريهم، وتقسَّم أموالهم، فقال رسول الله صلى الله عليه وسلم:
«لَقَدْ حَكَمْتَ فِيهِمْ بِحُكْمِ اللَّهِ مِنْ فَوْقِ سَبْعِ سَمَاوَاتٍ»، وفي
رواية: أرقعة
ثم أمر رسول الله صلى الله عليه وسلم بالأُسارى، فجمعوا في دار رملة بنت الحارث
امرأة من بني النجار، وقيل دار أسامة بن زيد، قال الحافظ ابن حجر رحمه الله: ويمكن
الجمع بينهما بأنهم جعلوا في بيتين
ثم أمر رسول الله صلى الله عليه وسلم أن تُحفر لهم الخنادق في سوق
المدينة، ثم بعث إليهم، فجيء بهم أرسالًا
وتُضرب أعناقهم في تلك الخنادق ويُلقون فيها، وكانوا أربعمائة رجل على الأرجح[22]،
وفي رواية ابن إسحاق في السيرة أنهم كانوا ستمائة أو سبعمائة رجل
பனூ குரைளா போர் என்று அறியப்படும் இப்போர் ஹிஜ்ரி 5, துல்கஅதா மாதத்தில் நடைபெற்றது.
அகழ்ப்போர் முடிந்து நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்குத் திரும்பினார்கள். அன்று
அவர்கள் தனது மனைவி உம்மு ஸலமாவின் வீட்டில் மதிய வேளையில் குளித்துக் கொண்டிருந்த
போது வானவர் ஜிப்ரீல் (அலை) நபியவர்களை சந்தித்து “என்ன நீங்கள் உங்களது ஆயுதத்தைக் கீழே வைத்து
விட்டீர்களா? நிச்சயமாக வானவர்கள்
தங்களின் ஆயுதங்களை இன்னும் கீழே வைக்கவில்லை. நான் இப்போதுதான் எதிரிகளை
விரட்டிவிட்டு வருகிறேன். நீங்கள் உங்கள் தோழர்களுடன் குரைளாவினர்களை நோக்கிப்
புறப்படுங்கள். உங்களுக்கு முன் நான் சென்று அவர்களுடைய கோட்டைகளை அசைக்கிறேன்.
அவர்களின் உள்ளங்களில் பயத்தை ஏற்படுத்துகிறேன்” என்று கூறிவிட்டு அங்கிருந்து வானவர்களின் ஒரு
கூட்டத்துடன் புறப்பட்டார்.
நபி (ஸல்) அவர்கள் ஒருவரை அனுப்பி மக்களுக்கு மத்தியில் அறிவிக்கக்
கூறினார்கள்: “யார் கட்டளையைக் கேட்டு கீழ்ப்படிந்து நடக்கிறாரோ அவர்
அஸ்ர் தொழுகையை குரைளாவனரிடம் சென்றுதான் தொழ வேண்டும்” (அதாவது உடனடியாக இங்கிருந்து குரைளாவினரை நோக்கி
புறப்பட வேண்டும்) என்று கூறினார்கள். மதீனாவில் அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூமை
பொறுப்பாளராக நியமித்துவிட்டு நபியவர்கள் புறப்பட்டார்கள். போர்க் கொடியை அலீயிடம்
வழங்கி அவரை அவசரமாக முன்கூட்டி அனுப்பி வைத்தார்கள். அலீ (ரழி) படையுடன்
குரைழாவினன் கோட்டையைச் சென்றடைந்தார்கள். அங்கிருந்த யூதர்கள், அலீ (ரழி) காதில் படும்படியாக நபி (ஸல்) அவர்களைக்
கடுமையாக ஏசினர்.
நபி (ஸல்) அவர்கள் முஹாஜிர்கள் மற்றும் அன்சாரிகளின் சில குறிப்பிட்ட
நபர்களுடன் மதீனாவிலிருந்து புறப்பட்டு குரைளாவினன் ஒரு கிணற்றுக்கு அருகில் வந்து
இறங்கினார்கள். அக்கிணற்றுக்கு ‘அன்னா கிணறு’ என்று கூறப்படும்.
மீதமுள்ள முஸ்லிம்கள் உடனடியாக குரைளாவினரை நோக்கிப் புறப்பட்டார்கள். வழியில்
அஸ்ர் தொழுகையின் நேரம் வந்தவுடன்: “அஸ்ர் தொழுகையை நேரம் தவறுவதற்குள் வழியிலேயே தொழுது
விடுவதா அல்லது நேரம் தவறினாலும் குரைளா சென்று தொழுவதா” என அவர்களுக்கு மத்தியில் இரு கருத்துகள் நிலவின.
மதீனாவிலேயே அஸ்ர் தொழுது விட்டு புறப்படலாமென யாரும் தாமதித்துவிடக் கூடாது என்ற
கருத்தில்தான் நபி (ஸல்) அவர்கள் குரைளா சென்று அஸ்ர் தொழ வேண்டுமென கூறினார்கள்.
தொழுகை நேரத்தைத் தவறவிடுவது நபியவர்களின் நோக்கமல்ல என்று கூறிவிட்டு சிலர்
வழியிலேயே அஸ்ர் தொழுகையை நிறைவேற்றினர். இவர்களைத் தவிர மற்றவர்கள் நபியவர்கள்
கூறியபடி குரைளா சென்று அஸ்ர் தொழுகையை நிறைவேற்றினர். அப்போது மக்ப் நேரமாக
இருந்தது. இன்னும் தாமதமாக வந்து சேர்ந்த சிலர் இஷா நேரத்தில் அஸ்ர் தொழுதனர்.
நபி (ஸல்) அவர்கள் இரு கூட்டத்தார்களின் செயல்களைப் பற்றி ஏதும் கடிந்துகொள்ள
வில்லை. இவ்வாறு இஸ்லாமியப் படை ஒன்றன்பின் ஒன்றாக மதீனாவிலிருந்து புறப்பட்டு
நபியவர்கள் தங்கியிருந்த இடத்தை வந்தடைந்தது. இஸ்லாமியப் படையில் மொத்தம்
மூவாயிரம் வீரர்களும், முப்பது குதிரைகளும்
இருந்தன. குரைளாவினன் கோட்டைகளைச் சுற்றி வளைத்து முற்றுகையிட்டனர். முஸ்லிம்களின்
முற்றுகை கடுமையாக இருந்ததைக் கண்ட குரைளாவினன் தலைவன் கஅப் இப்னு அஸது தனது
மக்களிடம் மூன்று கருத்துகளை முன் வைத்தான்.
1)அனைவரும் முஸ்லிமாகி முஹம்மதுடைய மார்க்கத்தில் சேர்வது. அப்படி சேர்ந்தால்
நாம் நமது உயிர், பொருள், பிள்ளைகள், பெண்கள் அனைவரையும் பாதுகாத்துக் கொள்ளலாம். அல்லாஹ்வின்
மீது சத்தியமாக! முஹம்மது அல்லாஹ்வின் புறத்திலிருந்து அனுப்பப்பட்ட தூதர்
என்பதும், அவரைப் பற்றி
தவ்றாத்தில் கூறப்பட்டிருக்கிறது என்பதும் உங்களுக்கு தௌ;ளத் தெளிவாக தெரியும்.
2) நமது பிள்ளைகளையும் பெண்களையும் நாமே நமது கரத்தால்
கொன்றுவிடவேண்டும். பிறகு வாளை உருவி முஹம்மதுடன் போர் புரிவோம் நாம் அவர்களை
வெற்றி கொள்வோம் அல்லது நாம் அனைவரும் மரணமாகும் வரை அவருடன் போர் புரிவோம்.
3) சனிக்கிழமை வருவதை எதிர்பார்ப்போம். அன்று நாம் போர்
புரியமாட்டோம் என்று முஸ்லிம்கள் எண்ணிக் கொண்டிருப்பார்கள். அந்நேரத்தில்
அவர்களைத் திடீரெனத் தாக்குவோம்.
இவ்வாறு மூன்று கருத்துகளை கஅப் முன்வைத்தும் அதில் எந்த ஒன்றையும் யூதர்கள்
ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் கஅப் கடும் கோபமடைந்து, “உங்களில் ஒருவர் கூட வாழ்நாளில் ஒரு நாளும்
உறுதியுடன் வாழந்ததில்லை” என்று கடுகடுத்தார்.
குரைளாவினர் இவ்வாறு தங்களது தலைவர் கஅபுடைய எந்த ஆலோசனையையும் ஏற்றுக்
கொள்ளவில்லை. இறுதியாக நபியவர்கள் கூறும் தீர்ப்பையே ஏற்றுக் கொள்ள வேண்டிய
நிர்ப்பந்தத்திற்கு ஆளாயினர்.
இருப்பினும் சரணடைவதற்கு முன்னால் நபி (ஸல்) அவர்கள் தங்களுக்கு என்ன
தீர்ப்பளிப்பார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள தங்களுக்கு நண்பர்களாக இருந்த சில
முஸ்லிம்களுடன் தொடர்பு கொண்டு அறிய விரும்பினர். ஆகவே, நபியவர்களிடம் தூதனுப்பி அபூலுபாபாவை தங்களிடம்
அனுப்பும்படி கேட்டுக் கொண்டனர். அபூலுபாபா யூதர்களின் நட்புரீதியான
ஒப்பந்தக்காரராக இருந்தார். இவருடைய பொருட்களும், பிள்ளைகளும் யூதர்களின் பகுதியில் இருந்தன. அபூலுபாபா
யூதர்களைச் சந்தித்தவுடன் அவரிடம் பெண்களும், சிறுவர்களும் எழுந்து வந்து அழுதனர். இதைப் பார்த்து அவரது
உள்ளம் இளகிவிட்டது. அவர்கள் “அபூலுபாபாவே! நாங்கள் நபியவர்களின் தீர்ப்பை ஏற்றுக் கொண்டால் நபியவர்கள்
எங்களுக்கு என்ன தீர்ப்பளிப்பார்கள்?” என்றனர். அப்போது அபூலுபாபா “தனது கழுத்தைச் சீவுவது போல் செய்து காட்டி, அந்தத் தீர்ப்பு கொலை!” என்று சூசகமாகக் கூறினார்.
நபி (ஸல்) அவர்களின் இந்த இரகசிய முடிவை வெளிப்படுத்தி தவறு செய்து விட்டோம்
அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மோசடி செய்து விட்டோம் என்று அபூலுபாபா
உணர்ந்தார் வருந்தினார். எனவே, நபியவர்களைச் சந்திக்கச் செல்லாமல் மஸ்ஜிதுந் நபவிக்குச் சென்று தன்னை ஒரு
தூணுடன் கயிற்றால் பிணைத்துக் கொண்டார். நபியவர்கள்தான் தன்னை அவிழ்த்துவிட
வேண்டும், இனி ஒருக்காலும்
குரைளாவினன் பூமிக்கு செல்லவே மாட்டேன் என்று சத்தியம் செய்து கொண்டார்.
நபியவர்கள் அபூலுபாபாவின் வருகையை எதிர்பார்த்திருந்தார்கள். இவன் செய்தி
நபியவர்களுக்கு கிடைத்தவுடன் “அபூலுபாபா என்னிடம் நேரடியாக வந்து விஷயத்தை கூறியிருந்தால் நான் அவருக்காக
அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டிருப்பேன். ஆனால், எப்போது அவர் அவருடைய விருப்பப்படி நடந்து கொண்டாரோ அல்லாஹ்
அவரது பிழை பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் வரை நான் அவரை அவிழ்த்துவிட முடியாது” என்றார்கள்.
அபூலுபாபா தெளிவாகக் கூறிய பின்பும் வேறு வழியின்றி நபி (ஸல்) அவர்களின் தீர்ப்பை
ஏற்றுக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு யூதர்கள் வந்தனர். யூதர்கள் பெருமளவு
உணவுகளையும் தேவையான பொருட்களையும் சேகரித்து வைத்திருந்தனர். கிணறுகளும் பலமிக்க
கோட்டைகளும் அவர்களிடம் இருந்தன. ஆனால், முஸ்லிம்களோ யூதர்களின் கோட்டைக்கு வெளியே திறந்த வெளியில்
கடுங்குளிரால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தனர். உணவுப் பற்றாக்குறையால் கடுமையானப்
பசிக்கு ஆளாகி, துன்பத்தில்
சிக்கித் தவித்துக் கொண்டிருந்தனர். போரில் தொடர்ந்து ஈடுபட்டிருந்ததால் அதிகமான
களைப்புற்றிருந்தனர். ஆக, இந்த சூழ்நிலையில்
முஸ்லிம்களின் மீது முற்றுகையை நீடித்தாலும் அதைத் தாங்கும் சக்தி யூதர்களிடம்
இருந்தும் அவர்கள் அதற்குத் துணியவில்லை. அவர்களுடைய உள்ளத்தில் அல்லாஹ் பயத்தை
ஏற்படுத்தினான். அவர்கள் நிலைகுலைந்தனர். அலீ இப்னு அபூதாலிப், ஜுபைர் இப்னு அவ்வாம் (ரழி) இருவரும் முஸ்லிம்களுக்கு
முன் நின்று வீரமூட்டினர். அலீ (ரழி) முஸ்லிம்களைப் பார்த்து “அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட படைகளே! அல்லாஹ்வின் மீது
சத்தியமாக! ஹம்ஜாவுக்கு ஏற்பட்டதை நானும் அனுபவிப்பேன் அல்லது அவர்களது கோட்டையை
வெற்றி கொள்வேன்” என்று
சபதமிட்டார்கள்.
முஸ்லிம்களின் உணர்வுகளையும் வீரத்தையும் ஆவேசத்தையும் யூதர்கள்
புரிந்துகொண்டனர். இனியும் காலதாமதம் செய்வது உசிதமல்ல என்பதை உணர்ந்தனர். ஆகையால்
நபி (ஸல்) அவர்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதற்கு தீவிரம் காட்டினர். தங்களது
கோட்டைகளிலிருந்து வெளியேறி நபியவர்களுக்கு முன் சரணடைந்தனர். நபியவர்கள் ஆண்களைக்
கைது செய்யுமாறு கட்டளையிட்டார்கள். முஹம்மது இப்னு மஸ்லமாவின் தலைமையின் கீழ்
ஆண்கள் அனைவரும் விலங்கிடப்பட்டனர். பெண்களும் சிறுவர்களும் ஆண்களிலிருந்து
அப்புறப்படுத்தப்பட்டு ஓரமான இடத்தில் அமர்த்தி வைக்கப்பட்டனர்.
அப்போது அவ்ஸ் கூட்டத்தினர் நபியவர்களை சந்தித்து “அல்லாஹ்வின் தூதரே! கைனுகா இன யூதர்கள் விஷயத்தில்
நீங்கள் எப்படி நடந்து கொண்டீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அவர்கள் எங்கள்
சகோதரர்களாகிய கஸ்ரஜ் இனத்தவன் நண்பர்களாவர். இந்த குரைளா இன யூதர்கள்
(அவ்ஸ்களாகிய) எங்களிடம் உடன்படிக்கை செய்து கொண்டவர்கள். நீங்கள் இவர்களிடம் நல்ல
முறையில் நடந்து கொள்ள வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம்” என்றார்கள். அதற்கு நபியவர்கள் “உங்கள் இனத்தைச் சேர்ந்த ஒருவர் இவர்கள் விஷயத்தில்
தீர்ப்பளித்தால் அதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?” எனக் கேட்டார்கள். அதற்கு அவர்கள் “நாங்கள் அதை ஏற்றுக் கொள்கிறோம்” என்றனர். நபியவர்கள் “இவர்கள் குறித்து தீர்ப்பளிக்கும் உரிமையை ஸஅது இப்னு
முஆதிடம் ஒப்படைக்கிறேன்” என்றவுடன் அவ்ஸ்
கூட்டத்தினர் அதை முழுமையாக ஏற்றுக் கொண்டனர்.
நபி (ஸல்) அவர்கள் ஸஅது இப்னு முஆத் (ரழி) அவர்களை அழைத்து வர
ஆளனுப்பினார்கள். ஸஅது இப்னு முஆது (ரழி) அகழ்ப்போல் காலில் அம்பு தைத்துவிட்டதின்
காரணமாக நபியவர்களுடன் வர முடியாமல் மதீனாவில் தங்கிவிட்டார்கள். அவர்கள் ஒரு
கழுதையில் நபியவர்களிடம் அழைத்து வரப்பட்டார்கள். அவர் வந்து கொண்டிருக்கும் போதே
அங்கிருந்தவர்கள் அவரைச் சுற்றி “ஸஅதே! உம்மிடம் ஒப்பந்தம் செய்திருந்த இந்த யூதர்கள் விஷயத்தில் அழகிய
தீர்ப்பைக் கூறுவாயாக! அவர்களுக்கு உதவி புரிவாயாக! நீ அவர்களுக்கு ஏற்ற தீர்ப்பு
வழங்க வேண்டும் என்பதற்காகத்தான் நபியவர்கள் உன்னை தீர்ப்பளிக்கும்படி
அழைத்திருக்கிறார்கள்” என்று கூறினார்கள்.
ஆனால், ஸஅது (ரழி)
அவர்களின் எந்த பேச்சுக்கும் பதிலளிக்கவில்லை. குழுமியிருந்த மக்கள் ஸஅதை மிக
அதிகமாகத் தொந்தரவு செய்தவுடன் ஸஅது (ரழி) “இப்போதுதான் அல்லாஹ்வின் விஷயத்தில் பழிப்பவர்களின் பழிப்பை
பொருட் படுத்தாமல் இருக்க இந்த ஸஅதுக்கு நேரம் வந்துள்ளது” என்றார். ஸஅத் (ரழி) அவர்களின் இந்த துணிவுமிக்க
சொல்லால் குழுமியிருந்த மக்கள் யூதர்களின் விஷயத்தில் ஸஅது (ரழி) அவர்களின் முடிவு
என்னவாக இருக்கும் என்பதைப் புரிந்துகொண்டனர். அதாவது, யூதர்களை கொல்ல வேண்டும் என்ற உறுதியில் ஸஅது (ரழி)
இருக்கிறார் என்பது அவரது பேச்சிலிருந்து தெரிய வந்தது. இதனால் ஸஅது (ரழி) தங்களது
தீர்ப்பை வெளிப்படையாக கூறுவதற்கு முன்பாகவே யூதர்கள் கொல்லப்படப் போகிறார்கள்
என்ற செய்தியை மக்கள் மதீனாவாசிகளுக்குத் தெரிவித்தனர்.
ஸஅது (ரழி), நபி (ஸல்) அவர்கள்
இருக்கும் இடத்தை அடைந்த போது நபியவர்கள் தங்களது தோழர்களிடம் “உங்களது தலைவரை எழுந்து சென்று அழைத்து வாருங்கள்” என்று கூறினார்கள். நபித்தோழர்கள் ஸஅதைக்
கழுதையிலிருந்து இறக்கி அழைத்து வந்தவுடன் “ஸஅதே! இந்த யூதர்கள் உமது தீர்ப்பை ஏற்றுக் கொள்ளத் தயாராக
இருக்கின்றனர்” என்றார்கள். அப்போது
ஸஅது (ரழி) “எனது தீர்ப்பு அவர்கள்
(யூதர்கள்) மீது செல்லுபடி ஆகுமா?” என்று கேட்டார்கள். அதற்கு மற்றவர்கள் “ஆம்! செல்லுபடியாகும்” என்றனர். பிறகு ஸஅது (ரழி) “முஸ்லிம்களின் மீது எனது தீர்ப்பு செல்லுபடியாகுமா?” என்று கேட்டார்கள். மக்கள் “ஆம்!” என்றனர். அப்போது “இங்குள்ள மற்றவர் மீதும் - அதாவது தனது முகத்தால்
நபியவர்களை சுட்டிக்காட்டி - எனது தீர்ப்பு செல்லுபடியாகுமா?” என்று கேட்டார்கள். அப்போது நபியவர்கள் “ஆம்! நானும் உங்களுடைய தீர்ப்பை ஏற்றுக் கொள்வேன்” என்றார்கள். இதற்குப் பின் ஸஅது (ரழி) அந்த யூதர்கள்
விஷயத்தில் தீர்ப்பு கூறினார்கள்:
“ஆண்களைக் கொன்றுவிட வேண்டும். சிறுவர்களையும் பெண்களையும்
கைதிகளாக்க வேண்டும். இவர்களின் சொத்துகளையும் பொருட்களையும் பங்கு வைத்துவிட
வேண்டும். இதுதான் எனது தீர்ப்பு” என ஸஅது (ரழி) கூறினார். இத்தீர்ப்பைக் கேட்ட நபியவர்கள் “ஏழு வானங்களுக்கு மேலிருக்கும் அல்லாஹ்வின் தீர்ப்பை
நீங்கள் இவர்கள் விஷயத்தில் வழங்கி விட்டீர்கள்” என்று கூறினார்கள்.
உண்மையில் ஸஅது (ரழி) கூறிய தீர்ப்பு மிக நீதமானதே! முற்றிலும் நேர்மையானதே!
ஏனெனில், குரைளா இன யூதர்கள்
தங்களது உடன்படிக்கையை முறித்தது மட்டுமல்லாமல் முஸ்லிம்களை அழிக்க வேண்டுமென்பதற்காக
1500 வாட்களையும்,
2000 ஈட்டிகளையும்,
300 கவச ஆடைகளையும்,
500 இரும்புக் கேடயங்களையும், ஒரு தோலினாலான கேடயத்தையும் சேகரித்து
வைத்திருந்தனர். இவற்றை முஸ்லிம்கள் அவர்களுடைய இல்லங்களை வெற்றி கொண்ட பின்
கைப்பற்றினர்.
இத்தீர்ப்புக்குப் பின் நபி (ஸல்) அவர்கள் நஜ்ஜார் கிளையைச் சேர்ந்த பின்துல்
ஹாரிஸ் என்ற பெண்ணின் வீட்டில் யூதர்களை அடைத்து வைக்க கட்டளையிட்டார்கள்.
அதற்குப் பின் அவர்களுக்காக மதீனாவின் கடைத் தெருவில் பெரும் அகழ் தோண்டப்பட்டது.
பின்பு ஒவ்வொருவராக அழைத்து வரப்பட்டு அக்குழியில் வைத்து தலை வெட்டப்பட்டது.
பிறகு அதிலேயே புதைக்கப்பட்டனர். இவ்வாறு ஒவ்வொருவராக அழைத்துச் செல்லப்படும்போது
அடைபட்டிருந்த சிலர் தங்களது தலைவன் கஅபிடம் “தலைவரே! எங்களை அழைத்துச் சென்று இவர்கள் என்ன
செய்கின்றார்கள்!” என்றனர்.
அதற்கு கஅப் “என்ன! உங்களுக்கு
எந்நேரத்திலும் எதுவும் விளங்காதா? அழைப்பவர் வந்து அழைத்துக் கொண்டே இருக்கின்றார். அழைத்துச்
செல்லப்பட்டவர் திரும்பி வருவதில்லை. இப்போது கூட புரியவில்லையா? அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அது கொலைதான் என்பது
உங்களுக்கு விளங்கவில்லையா?” என்றார். அவர்கள் 600லிருந்து 700 பேர் வரை இருந்தனர். அனைவரும் கொல்லப்பட்டு
புதைக்கப்பட்டனர். ( நூல்: புகாரி, முஸ்லிம் )
ஒப்பந்தங்களை மீறாமல் இருக்க காலை மாலை நேரங்களில் ஓதி வர வேண்டிய துஆ...
، عن النبي -صلى
الله عليه وآله وسلم- أنَّه قال: سيد الاستغفار أن تقول: اللهم أنت ربي، لا إله
إلا أنت، خلقتني، وأنا عبدك، وأنا على عهدك ووعدك ما استطعتُ، أعوذ بك من شرِّ ما
صنعتُ، أبوء لك بنعمتك عليَّ، وأبوء لك بذنبي، فاغفر لي، فإنَّه لا يغفر الذنوبَ
إلا أنت، قال: مَن قالها من النَّهار مُوقنًا بها، فمات من يومه قبل أن يُمسي؛ فهو
من أهل الجنَّة، ومَن قالها من الليل وهو مُوقِنٌ بها، فمات قبل أن يُصبح؛ فهو من
أهل الجنَّة[1]. أخرجه الإمام البخاري -رحمه الله- في "صحيحه
.عن شداد بن أوس
அல்லாஹும்ம அன்த
ரப்பி லாஇலாஹ இல்லா அன்த ஹலக்தனி வஅனா அப்திக்க வஅனா ஆலா அஹ்திக்க வவஹ்திக்க
மஸ்ததஹ்து அவுது பிக்க மின் ஷர்ரீ மா சனஹ்த்த அபுவ்லக்க பிநிஹ்மதிக்க அலைய்ய
வஅபுவ்வு பி தம்பி ஃபஹ்பீர்லி பஇன்னஹு லாயஹ்ஃபீருத்துனுவ்ப இல்லா அன்த
"யாஅல்லாஹ்! நீயே
என் இறைவன். உன்னைத் தவிர வேறு உண்மையான கடவுள் இல்லை. நீயே என்னைப் படைத்தாய், நான் உன் அடிமை,
என்னால் முடிந்தவரை உன் உடன்படிக்கையை நான்
கடைப்பிடிக்கிறேன். நான் செய்தவற்றின் தீமையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புத்
தேடுகிறேன். நீ எனக்கு அளித்த அருட்கொடைகளை நான் ஒப்புக்கொள்கிறேன், என் பாவங்களை ஒப்புக்கொள்கிறேன். என்னை மன்னிப்பாயாக, உன்னைத் தவிர வேறு யாருக்கும் மன்னிக்க சக்தி இல்லை." இதனை யார் மாலையில்
ஓதி காலையாவதற்குள் மரணிக்கிறாரோ அவர் சுவர்க்கம் நுழைவார். மேலும் இதனை யார்
காலையில் ஓதி மாலையாவதற்குள் மரணிக்கிறாரோ அவரும் சுவர்க்கம் நுழைவார் என நபி
(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஷத்தாத் இப்னு அவ்ஸ்(ரலி) ( நூல்: புகாரி
)
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் நம் அனைவருக்கும் அல்லாஹ்விடம் நாம் செய்த ஒப்பந்தங்களையும், அடியார்களிடம்
செய்த ஒப்பந்தங்களையும் சரியாக, பேணி நிறைவேற்றிட அருள் புரிவானாக! ஆமீன்! ஆமீன்!
ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!
No comments:
Post a Comment